மெய்ப்பொருள் காண்போம்; அவ்வழி நடப்போம்

in 1989 அக்டோபர்,பொதுவானவை

                                    H. அப்துஸ்ஸமது, BE.,M.Sc.,(Eng) சென்னை.

இனி மூன்றாவது சாத்தியக்கூறு பற்றி ஆராய்வோம். அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிந்திருந்த மேலே குறிப்பிட்ட ஹதீதுகளின் விஷயங்களை அன்றைய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் அவர்களது அதிகாரத்திற்குக் குந்தகம் விளைவிக்கத் தக்கவனாகக் கருத வாய்ப்பு இருந்திருக்கலாம். எனவே அவர்களால் பகிரங்கப்படுத்துவதால் ஆட்சியாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று பயந்து அபூஹுரைரா(ரழி) அவர்கள் அவைகளை வெளிப்படுத்தாது இருந்திருக்கலாம். அரசியலிலும் சமூக வாழ்க்கையிலும் தோன்றிய நவீன செயல்(பித்அத்)களையும், அடக்குமுறை (சர்வாதிகார) ஆட்சிமுறையையும் எதிர்த்து குரல் எழுப்பிய மக்களை அடக்கி ஒடுக்கினார்கள் உமையாக்கள் என்பது சரித்திர உண்மை. முஸ்லிம் சமுதாயத்திற்கு உமையாக்களால் விழைந்த இடர்பாடுகளும் ஏராளம். இவைகளை எல்லாம் அபூஹுரைரா(ரழி) அவர்கள் நன்கு உணர்ந்திருந்தார்கள். ஆட்சியாளர்களுடையவும், அதிகாரிகளுடையவும் பொறுப்புக்களை விவரிக்கும் ஹதீதுகளும் உமையாக்களின் ஆட்சியின் கொடூரம், குழப்பம் மற்றும் உமையாக்களில் வாலிபர்கள் இழைத்த கொடுமை, அக்கிரமங்கள் பற்றி முன்னறிவிப்பு நல்கிய ஹதீதுகளையும் அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிந்திருந்தார்கள். மேலும் இவ்வதிதுகள் உமையாக்கள் இஸ்லாத்திற்கும் அதைக் காத்த நல்லடியார்களுக்கும் தோற்றுவித்த இழிநிலை குறித்தும் முன்னறிவிப்பு செய்பவனாக இருந்தன. இக்காரணங்களாலேயே அவைகளை அபூஹுரைரா(ரழி) அவர்கள் வெளிவிடவில்லை. இதுவே பொது அறிவுக்கு உகந்ததும், காணப்பெறும் சரித்திரச் சான்றுகளோடு ஒத்தும் உள்ளது. இவ்வறிவிப்பின் குணா குணங்களை ஆய்ந்து அறிந்து, அதன் தரத்தையும் தன்மையையும் உணரும்போதும் இதுவே சாத்தியம் என்பது உறுதியாகிறது.

அருமைச் சகோதர. சகோதரிகளே! இறைமறையையும், நபிமொழிகளையும் நேரடியாகக் கற்று அறியும் ஆர்வம் முஸ்லிம்களிடையே குறைந்துவிட்ட காரணத்தால், ஹதீதுகளைத் திரித்தும், மறைத்தும் உருவாக்கப்பட்ட சூபிஸக் கொள்கைகள் இஸ்லாமியக் கோட்பாடுகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டன. இறைமறை தரும் அறிவையும், நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழி முறையையும் அறியவிடாமல் முஸ்லிம்களைத் தடுப்பவை யாவை? தடைகளில் தலையாயது, இம்மை வாழ்க்கைக்கு-உலக ஆபாசங்களுக்கு அளிக்கப்படும் வரம்பு மீறிய முக்கியத்துவமே! மனிதனால் உருவாக்கப்பட்ட  மதங்களினின்று வேறுபட்டு இஸ்லாம் மார்க்கம் ஒன்று மாத்திரமே இம்மை வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் ஆட்கொண்டு, அவை ஒவ்வொன்றிற்கும் முறையும், தரமும், வரையறையும் வகுத்துத் தந்துள்ளது. தேவைகள், உடல் இச்சைகள், மன உணர்ச்சிகள் ஆகியவை மனிதனின் செயல்களை (அன்றாட வாழ்க்கையை)ப் பாதிப்பவைகளாகும். இவை யாவுமே இறைவனால் மனித இயல்புகளாக அருளப்பட்டவை; மனித வாழ்க்கைக்கு அவசியமானவை; வெறுத்து ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல. ஆயினும் இவை யாவுமோ அல்லது ஏதேனும் ஒன்றோ கட்டுப்பாடின்றி, மனித செயலை ஆதிக்கம் செலுத்தும்படி விட்டுவிடப்பட்டால் மனிதன் ஒழுக்கமற்றவனாகவும், அறிவீனனாகவும் சீர்குலைந்து விடுகின்றான். மனிதன் இவ்வியல்புகளை எல்லாம் அவசியத்திற்கேற்ப ஒரு வரையறைக்குள் முறைப்படுத்தி செயலாற்ற(வாழ) வழிவகை தரும் இறைநெறிதான் இஸ்லாம். இஸ்லாம் விதித்துள்ள வரம்பை மீறியபோது மனிதன் நிலைகுலைந்து இழிநிலையை அடைகிறான்.

(ஆணாயினும், பெண்ணாயினும்) உங்களில் திருமணமாகாதவர்களுக்கு நீங்கள் திருமணம் செய்து விடுங்கள். (24:32)

“நபியே சொல்வீராக! ‘அல்லாஹ் தன் அடியார்களுக்கு அளித்திருக்கும் அலங்காரத்தையும், பரிசுத்தமான ஆகாரத்தையும் (ஆகாதவையென்று) தடுப்பவர் யார்? என்று கேட்டு, “அது இவ்வுலக வாழ்வில் விசுவாசங்கொண்டவர்களுக்கு(ம் ஆகுமானதே எனினும்) மறுமை நாளில் (அவர்களுக்கு மட்டுமே) சொந்தமானது” என்றும் கூறுவீராக! அறியக்கூடிய மக்களுக்கு நம்முடைய வசனங்களை இவ்வாறு விவரிக்கின்றோம்”.

ஆசைகளுக்கும், உடல் இச்சைகளுக்கும் மனவுணர்ச்சிகளுக்கும் அடிமையாகும் மனிதன். மறுமையைப் பற்றிய சிந்ததையின்றி வாழத் தலைப்படுகின்றான். இத்தகையவர்களைப் பற்றி தான் திருமறை கீழ்வருமாறு கூறுகிறது:-

தன்னிச்சையாக தன் தெய்வமாகக் கொண்டவனை (நபியே) நீர் பார்த்தீரா? அவனுக்கு நீவிர் பாதுகாவலராக இருப்பீரா? அல்லது நிச்சயமாக அவர்களில் பெரும்பாலானோர் (உமது உபதேசத்தைக்) கேட்டு அறிந்துணர்கிறார்கள் என்று நினைக்கின்றீர்களா? அவர்கள் மிருகங்களைப் போன்றவர்களே அன்றி வேறல்லர்; அல்ல; அவர்கள் அவைகளை விடவும் இழிவானவர்கள். (25:43,44)

‘செயல்களில் மாபெறும் இழப்பாளர்கள் யார் என்பதை அறிவிக்கவா?” என்று (நபியே) நீர் கேட்பீராக! யாருடைய பிரயத்தனங்கள் இவ்வுலக வாழ்க்கையில் பயணற்றவையாகியும், தாங்கள் மெய்யாகவே தங்களின் செய்கைகளால் நன்மை பெறுவதாக எண்ணிக் கொள்பவர்களே! அவர்கள் தங்கள் இறைவனின் வசனங்களையும் (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரித்தவர்களாக அவர்களுடைய செயல்கள் யாவும் வீணானவையே; மறுமை நாளில் அவர்களுக்காக எடைக்கோலையும் நாட்டமாட்டோம். (18:103-105)

Previous post:

Next post: