அந்நஜாத்தின் இப்பிடிவாதப் போக்கு நியாயமா?

in 2012 அக்டோபர்,புரோகிதம்,பொதுவானவை

இப்னு ஹத்தாது

அந்நஜாத் 1986 ஏப்ரலில் ஆரம்பித்ததிலிருந்து மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் என பெருமை பேசும் மதகுருமார்களை மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. அவர்களைப் பற்றிய விமர்சனங்களே அந்நஜாத்தில் பெரும்பாலும் இடம் பெற்றுவருகின்றன. கடந்த 27 வருடங்களாக இந்நிலையே நீடித்து வருவதால் அந்நஜாத் வாசகர்களில் சிலர் விரக்தியுற்று, எப்போது பார்த்தாலும் ஒரே புரோகிதர், இடைத்தரகர் என்று முஸ்லிம்கள் பெரிதும் மதித்துப் போற்றும் மவ்லவிகளை மிகக் கடுமையாக விமர்சிப்பதிலேயே குறியாக இருக்கி றீர்களே! மார்க்கத்தில் சொல்வதற்கு வேறு விஷயங்களே இல்லையா? முஸ்லிம்கள் மிகவும் அவசிய மாகத் தெரிந்து கொள்ள வேண்டிய எத்தனையோ விஷயங்கள் குர்ஆனிலும், ஹதீஃத்களிலும் நிறைந்து காணப்படுகின்றனவே. அவற்றை எடுத்து அந்நஜாத்தில் எழுத வேண்டியதுதானே என அங்கலாய்க்கிறார்கள்.

கடந்த 27 வருடங்களாக புரோகிதத்தின் மெகா கெடுதிகள் பற்றி அந்நஜாத்தில் எழுதியும் இன்னும் அவர்கள் புரோகிதர்களைப் புரிந்து கொள்ள வில்லை; அவர்கள் மீது பக்தியும் பாசமும் இன்னும் எஞ்சியிருக்கிறதோ என்ற சந்தேகமே மிகைக்கிறது. மேலும் அந்நஜாத்தைப் படிக்கிறார்களே அல்லாமல் அதில் குறிப்பிடப்படும் குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் உடனுக்குடன் குர்ஆனை எடுத்துப் பார்த்து உறுதி செய்து கொள்வதில்லை என்ற ஐயமும் தோன்றுகிறது. அப்படி குர்ஆனுடன் நேரடித் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டவர்கள் மட்டுமே புரோகித வஞ்சகப் புத்தியைப் புரிந்து வருகிறார்கள். இன்னும் கடுமையாக முஸ்லிம் மதகுருமார்களாகிய மவ்லவிகளை அடையாளம் காட்ட வேண்டும், ஏனென்றால் இன்னும் உலகத் தில் நேர்வழியில் மாற்றத்தை ஏற்படுத்தும் கணிச மான தொகையினர், இப்புரோகிதர்களின் மாய வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபடவில்லை என்றே கூறுகின்றனர். அவர்களோ எண்ணிக்கையில் மிகமிகச் சொற்பமாகவே இருக்கின்றனர்.

அல்குர்ஆனையும், நபி நடைமுறைகளையும் மட்டுமே பற்றிப் பிடித்து நடந்தால் மட்டுமே 1450 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட எழுச்சி மீண்டும் ஏற்பட வழி பிறக்கும் என்றே உறுதியாக நம்பி அதற்காகவே அயராது உழைத்து வருகிறது அந்நஜாத். முஸ்லிம்களை மட்டுமல்ல. அகில உலக மக்களையும் வஞ்சித்து வயிறு வளர்க்கும், அல்குர்ஆனை பெற்றுள்ள இம்மவ்லவிகளை அடையாளம் காட்டுவதை விட வேறு அதிமுக்கியப் பணி இருப்பதாக அந்நஜாத் கருதவில்லை.

காரணம் என்ன?
அதற்குக் காரணம் இறுதி வாழ்வியல் வழிகாட்டி நெறிநூல் அல்குர்ஆனை நடுநிலையோடு ஆய்வு செய்யும்போது, யூதர்களை விட, கிறித்தவர்களை விட, ஹிந்துக்களை விட, ஏன் உலகில் காணப்படும் அனைத்து மதத்தவர்களை விட இஸ்லாத்திற்கும், முஸ்லிம்களுக்கும், ஆதத்தின் சந்ததிகள் அனைவருக்கும் மிகக் கொடியப் பகைவர்களாகவும், கடும் விரோதிகளாகவும் இருப்பவர்கள் முஸ்லிம் மதகுருமார்களான ஆலிம், அல்லாமா எனப் பெருமை பேசும் போலி மார்க்க அறிஞர்களும், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் மிகப் பெரும்பான்மை பெயர் தாங்கி முஸ்லிம்களுமே என்ற பேருண்மையே வெளிப்படுகிறது.

மேலும் முஸ்லிம் சமுதாயம் உலகளாவிய அள வில் சந்தித்து வரும் இடர்கள், பேராபத்துகள், அவமானங்கள், பெரும் நட்டங்கள் இத்யாதி, இத்யாதி அனைத்தும் முஸ்லிம்கள் தங்கள் கைகளால் தேடிக் கொண்டவையே என்று அல்லாஹ்வின் கலாம் அல்குர்ஆன் 2:195, 3:182, 4:62, 8:51, 30:41, 42:30 போன்ற வசனங்கள் கூறுவதை ஏற்று 13:11 இறைக் கட்டளைப்படி முஸ்லிம்கள் தங்களைத் திருத்திக் கொள்ள முன்வருவதே அவர்களுக்கு ஏற்றத்தைத் தரும். மற்றவர்கள் மீது பழிபோடுவதில் பலன் இல்லை. ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த் இவற்றிலும் மறுமைக்கான பலன் ஏற்படாது.

முஸ்லிம்களுக்கு மவ்லவிகளே ரப்பு!
இதற்கு அடிப்படைக் காரணம் முஸ்லிம் மதகுரு மார்கள் முஸ்லிம் அல்லாதாரை மட்டுமல்ல, முஸ்லிம்களையும் வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனை நெருங்கவிடாமல் தடுத்து வைத்திருப்பதேயாகும். கடந்த 1000 வருடங்களாக இந்த இழி நிலை நீடித்து வருவதால்தான் முஸ்லிம்களில் 99¾% அல்குர்ஆன் 12:106 இறைவாக்குக் கூறுவது போல் இணை வைக்கும் பெயர் தாங்கி முஸ்லிம்களாக 2:186 இறைக் கட்டளையை நிராகரித்து இந்த மதகுருமார் களை 9:31 இறைவாக்கு சொல்வது போல் ரப்பாகக் கொண்டு 25:30 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனை நிராகரித்து, ஒதுக்கி, புறக்கணிப்பவர்களாக இருக்கிறார்கள். 3:103 இறைவாக்கு கூறுவது போல் நரகின் விளிம்பில் நின்று கொண்டிருக்கிறார்கள்.

1000 வருடங்களாகத் தொடரும் இந்த அவலம் முடிவுக்கு வரவேண்டுமென்றால், அதாவது மீண்டும் முஸ்லிம்கள் உட்பட ஆதத்தின் சந்ததிகளில் கணிச மானவர்களாவது நலம் பெற்று ஈருலகிலும் ஈடேற்றம் பெற வேண்டுமென்றால் முதலில் முஸ்லிம்கள் இந்த மயக்கு மொழி பேசும் மதகுருமார்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு, 2:186 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து இம்மத குருமார்களை நம்பாமல் அல்லாஹ்வை மட் டுமே முற்றிலும் முழுமையாக நம்பி அல்குர்ஆனைத் தங்களுக்குத் தெரிந்த மொழியிலுள்ளதை நேரடி யாகப் படித்துச் சிந்தித்து விளங்க முற்பட்டால் நிச்ச யம் 29:69-ல் அல்லாஹ் வாக்களித்துள்ளபடி நேர் வழியை வெற்றிக்குரிய பாதைகளை அல்லாஹ் தெளிவாக்கித் தருவான். இது நிச்சயத்திலும் வெகு நிச்சயம்! இதில் சந்தேகமே வேண்டாம்!

மவ்லவிகளின் மூட ஃபத்வா!
அல்குர்ஆனை சுத்தமில்லாமல் தொடக் கூடாது, ஒளூ இல்லாமல் தொடக் கூடாது; முஸ்லிம் அல்லாதாருக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது. மவ்லவி அல்லாத அவாம்கள் குர்ஆனை தமிழிலோ, அரபி அல்லாத பிற மொழிகளிலோ படித்து விளங்க முடியாது என்று இந்த மதகுருமார்கள், சிறு குழந்தைகளுக்குச் சில அறிவற்றத் தாய்மார்கள் பூச்சாண்டி காட்டுவது போல், பூச்சாண்டிக் காட்டுவதைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு நேரடியாக குர்ஆனை படித்து விளங்குகிறவர்கள் மட்டுமே இம் மவ்லவிகளின் கொடூர முகத்தை அறிய முடியும். இம்மதகுருமார்கள் தான் முழு உலகத்திற்கே சாபக்கேடு, இன்று உலகில் காணப்படும் அனைத்துவித நாசங்கள், ஒழுங்கீனங்கள், மனித விரோதச் செயல்கள் அனைத்திற்கும் முழு முதல் காரணமானவர்கள், மனித நேயத்தைப் பாழாக்கும் வி­க் கிருமிகள், ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகள் இம்மதகுருமார்களே ஆகும்! அல்லாஹ் அல்குர்ஆனில் 2:256,257, 4:51,60,76, 5:60, 13:36, 39:17 ஆகிய எட்டு இடங்களின் தாஃகூத் என்று குறிப்பிட்டு எச்சரிப்பதும் இம் மதகுருமார்களைத் தான் என்பதைக் குன்றிலிட்ட தீபமாக விளங்கிக் கொள்ளவும் முடியும்!

நபிமார்களை எதிர்த்தவர்கள் மதகுருமார்களே!
ஆரம்பத்திலிருந்தே நபிமார்களை மிகக் கடுமை யாக எதிர்த்து நின்றவர்கள் இம்மதகுருமார்கள் தான். அனைத்து நபிமார்களும் மிகக் கடுமையாக எச்சரித்து அடையாளம் காட்டியதும் இம்மதகுரு மார்களைத்தான். அல்குர்ஆனும் எண்ணற்ற இடங்களில் மிகமிகக் கடுமையாக எச்சரிப்பதும் இம்மதகுருமார்களைத்தான். இம்மதகுருமார் களின் மாய வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டவர்கள் தான் நேர்வழி நடந்து ஈருலகிலும் வெற்றியடைந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கம் நுழையும் பாக்கியம் பெறுகின்றனர் என்பதை 39:17,18 இறைவாக்குகள் உள்ளங்கை நெல்லிக்கனியாகக் கூறுகின்றன. ஆயினும் அவர்கள் மக்கள் தொகையில் மிகமிகச் சொற்பமானவர்கள் மட்டுமே. பெருங்கொண்ட மக்கள் இம்மத குரு மார்கள் பின்னால் சென்று நாளை நரகை நிரப்பு வார்கள் என்று 32:13, 11:118,119 மேலும் பல இறை வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

இம்மதகுருமார்கள் குர்ஆன் கூறும் நேரடிக் கருத்துக்களை ஏற்கமாட்டார்கள். 2:159 இறை வாக்குக் கூறுவது போல் நேரடியான தெளிவான வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்து அவற்றை மறைத்து நிராகரிப்பார்கள். இம்மதகுருமார்கள் பற்றித்தான் குர்ஆன் பகரா 2:6-20, 6:46, 36:7-10, 45:23 இன்னும் பல இறைவாக்குகள் மிகக் கடுமை யாக எச்சரிக்கின்றன. இந்த இறைவாக்குகள் மற்ற மதங்களின் மதகுருமார்கள் பற்றிக் கூறுகின்றன என்று கூறி தங்களை நம்பியுள்ள அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் முஸ்லிம் மதகுருமார்களும், மற்ற மதங்களின் மதகுருமார்களையே சாணுக்குச் சாண் முழத்திற்கு முழம் அடிபிசகாது பின்பற்றி நடப்பதை மக்களிடமி ருந்து மறைத்து வருகிறார்கள்.

உலகியல் அறிஞர்களின் நிலையும் இதுவே!
மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுருமார்களின் நிலை இதுவென்றால், சுய உழைப்பைக் கொண்டு பொருளீட்டி வாழ்பவர் களான, மருத்துவர்கள், பொறியாளர்கள், பல உலகியல் துறைகளில் படித்துப் பட்டம் பெற்று கை நிறையச் சம்பாதிப்பவர்களும், மார்க்க ஈடுபாடு டையவர்களாக இருந்தாலும், முஸ்லிம் மதகுரு மார்களான ஆலிம்கள் பற்றி நாம் மேலே எழுதி யுள்ள உண்மைகளை ஓரளவு அறிந்திருந்தாலும், அவற்றைப் பகிரங்கமாக வெளிப்படுத்தத் தயா ரில்லை. காரணம் அப்படி உண்மைகளை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொன்னால், பெருங்கொண்ட மக்களிடம் தங்களுக்கு இருக்கும் செல்வாக்குப் போய்விடும், வஹ்ஹாபி, நஜாத்காரன் என்று முத்திரைக் குத்தி ஒதுக்கி விடுவார்கள்; பேசுவதற்கு மேடைகள் கிடைக்காது; இயக்கங்களில், அமைப்பு களில் தங்களுக்கிருக்கும் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை, பதவிகள் பறிபோய்விடும் என்ற அச்சத்தின் காரணமாக உண்மைகளை உரத்துச் சொல்ல முன் வருவதில்லை. பெரும்பான்மை மக்களை அனுசரித்துப் போக வேண்டும் என்ற மனப்பான்மையுடையவர்கள்.

தீன் பணி பேரில் வீண் பணி!
மக்களிடம் பெருமளவில் வசூல் செய்து பெரும் செலவில் பெருங்கூட்டம் சேர்த்து மாநாடு நடத்துகிறவர்களும் சிறு சிறு கூட்டங்கள் நடத்துகிறவர்களும், பேர் புகழைக் குறியாகக் கொண்டு மாநாடு, கூட்டங்கள் நடத்துவதால், சத்தியத்தை நேர் வழியை உள்ளது உள்ளபடி சொன்னால் கூட்டம் சேராது; பேர் புகழ் கிடைக்காது என்ற நோக்கில், பெரும்பான்மை மக்களைக் கவரும் நோக்கிலேயே தீன் பணியின் பேரில் வீண் பணியாற்றுகிறார்கள். நரகை நோக்கி நடைபோடுகிறார்கள்.

இது மனிதனிடம் காணப்படும் இயற்கைக் குணம்தான். இதற்கு நபிமார்களும், ஏன்? இறுதி நபியும் விதிவிலக்காக இருக்கவில்லை. வஹியின் தொடர்புடன் இருந்த நபிமார்களே அல்லாஹ்வால் அடிக்கடி எச்சரிக்கப்பட்டுத் திருத்தப்பட்டார்கள் என்பதை 5:67, 6:52-54,57, 58,68,112,116,150, 159, 161, 7:188, 11:12, 12:108, 16:123, 17:39,54,73-75,86, 22:52, 25:52, 30:30, 33:1,2, 42:52, 43:43-45, 45:18, 48:28, 69:38-52 போன்ற எண்ணற்ற இறைவாக்கு கள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் அல்லாஹ் வஹீ மூலம் அறிவித்தது மட்டுமே நேர்வழி, இறுதித் தூரின் சுயக் கருத்துக்களே மார்க்க மாக்கப்பட வில்லை என்பதையும் இந்த வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன.

இறைவனுடன் வஹியின் தொடர்புடனிருந்த இறுதித் தூதரின் சுய கருத்துக்களே மார்க்கமாக்கப் படவில்லை என்று மேலேயுள்ள வசனங்கள் கூறிக் கொண்டிருக்க, அந்த நபியின் மறைவுக்குப் பிறகுள்ளவர்களின் சுய கருத்துக்களை மார்க்கமாக்கி வயிறு வளர்க்கத் துடிக்கும் இம்மதகுருமார்கள் எப்படிப் பட்ட கொடிய உள்ளம் படைத்தவர்களாக இருப் பார்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்! நபிமார் களின் நிலையே இதுவென்றால், நம்முடைய நிலை எப்படி இருக்கும்? ஷைத்தான் எந்த அளவு நம்மை மயக்கி உள்ளதை உள்ளபடி சொல்லவிடாமல் தடுப்பான் என்பதை மேலேயுள்ள இறைவாக்குகள் அனைத்தையும் மீண்டும் மீண்டும் படித்து உருப் போட்டு மனதில் இருத்திக் கொள்பவர்கள் மட்டுமே சுதாரிக்க முடியும். உள்ளதை உள்ளபடி சொல்லமுடியும்!

முழு உலகின் சாபக்கேடே முஸ்லிம் மதகுருமார்களே!
இன்று இந்த முழு உலகையும் பீடித்திருக்கும் மெகா சாபக்கேடே இந்த முஸ்லிம் மதகுருமார்கள்தான். ஆதத்தின் சந்ததிகளான அகில உலக மக்களுக்கும் ஒரே நேர்வழியை தெளிவாக, நேரடியாக எடுத்துரைக்கும் இறுதி வாழ்வியல் வழிகாட்டி நெறிநூல் அல்குர்ஆனை, முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவர்கள் என்று பாகுபாடு இல்லா மல் நேரடியாகப் படித்துச் சிந்திக்க விடாமல் தடுத்து வைத்திருப்பவர்கள் இம் முஸ்லிம் மதகுருமார்களே! மற்ற மக்களைத்தான் தடுத்து வைத்திருக் கிறார்கள் என்றால் ஆலிம், அல்லாமா, மார்க்கத்தில் கரை கண்டவர்கள் என்று பெருமை பேசும் அவர்களாவது குர்ஆனை நேரடியாகப் படித்துச் சிந்திக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை! 47:24ல் அல்லாஹ் சொல்வது போல் தங்கள் உள்ளத்திற்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு, 1000 வருடத்திற்கு முன்னர் யூதக் கைக்கூலிகள் கற்பனை செய்த மத்ஹபுகள், தரீக்காக்கள், சமாதிச் சடங்குகள் போன்ற இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய பித்அத், ´ர்க், குஃப்ர் மெகா பாவங்க ளையே நேர்வழியாகப் போதித்து பெருங்கொண்ட மக்களை நரகிற்கு இட்டுச் செல்கிறார்கள்.

பெருங்கொண்ட மக்களின் ஆதரவு எப்போது கிடைக்கும்?
2:41,42,75,78,79,109,146,159-162,174,188, 3:78,187,188, 4:44,46, 5:13,41,62,63, 6:20,21, 25,26, 9:9,10,34, 11:18,19, 31:6, 33:21 இந்த இறை வாக்குகள் அனைத்தையும் பொறுமையாக நடு நிலையுடன் பலமுறைப் படித்துச் சிந்தித்து மனதில் இருத்திக் கொள்பவர்கள், அல்லாஹ் மீதும், மறுமை யின் மீதும் உறுதியான நம்பிக்கை இல்லாமல், அழிந்துபடும் அற்பமான இவ்வுலகில், பேர் புகழ், பட்டம், பதவி, மக்கள் செல்வாக்கு, காசு பணம் இத்யாதி, இத்யாதி உலகியல் ஆதாயங்களைக் குறியாகக் கொண்டவர்கள் ஒருபோதும் சத்தியத்தை-நேர்வழியைச் சொல்லமாட்டார்கள்; அசத்தியத்தை-கோணல் வழிகளை-வழிகேடு களையே நேர்வழியாகச் சொல்லி மக்களை ஏமாற்றி நரகில் தள்ளுவார்கள் என்பதைத் திட்டமாக அறிய முடியும். இதில் முஸ்லிம் மதகுருமார்களும், பெரும் பாலான அரசியல் தலைவர்களும், பெரும்பாலான உலகியல் அறிஞர்களும் அடங்குவர். காரணம் உலகியல் ஆதாயங்களை அடைய பெருங்கொண்ட மக்களின் ஆதரவு கண்டிப்பாகத் தேவை. 32:13, 11:118,119 இறைவாக்குகள்படி நரகை நிரப்ப இருக்கும் பெருங்கொண்ட மக்கள் நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். வழிகேடுகளைத் தான் ஷைத்தான் அவர்களுக்கு நேர்வழியாகக் காட்டுவான். அவர்களின் ஆதரவைப் பெறுவதில் குறியாக இருக்கும் இம்மதகுருமார்கள், அரசியல் வாதிகள், உலகியல் அறிஞர்கள், கோணல் வழிகளை – வழிகேடுகளை நேர்வழியாகக் காட்டும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

எனவே உலகியல் ஆதாயம் என்ற பேராசைக் காரணமாக வழிகேடுகளை நேர்வழியாகப் போதிக் கிறார்கள். நேர்வழியை மட்டுமே போதிக்கக் கடமைப்பட்ட நபிமார்களுக்கு மார்க்கப் பணிக்கு மக்களிடம் கூலி கேட்கக் கூடாது என்று கண்டிப் பான தடை விதித்ததோடு, அதை அனைத்து நபிமார்களையும் பகிரங்கமாக அறிவிக்கச் செய்த இரகசியம் புரிகிறதா? கூலி-சம்பளம் கொடிய ஹராமே!

குர்ஆனை நிராகரிப்பவர்களே மதகுருமார்கள்!
இப்படிப்பட்ட எண்ணற்ற இறைக் கட்டளைகளுக்கு முரணாக இம்மதகுருமார்களான மவ்லவிகள் மார்க்கப் பணியை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட காரணத்தால் குன்றிலிட்ட தீபமாக விளங்க வேண்டிய மனித குலத்திற்கே நேர்வழி காட்டும் வாழ்வியல் வழிகாட்டி நெறிநூல் குர்ஆனை கிணற்றிலிட்ட தீபமாக ஆக்கிவிட்டார்கள். அவர்களும் படித்து விளங்குவதாக இல்லை; பிறரும் படித்து விளங்கப் பெருந்தடையாக இருந்து வருகி றார்கள். குர்ஆனைப் பிற மொழிகளில் தரக் கட மைப்பட்ட இவர்கள், அதற்கு நேர்மாறாகப் பிற மொழிகளில் தருவதற்குப் பெருந்தடையாகவே கடந்த 1000 வருடங்களாக இருந்து வந்தனர். இம்மதகுருமார்களின் மிகக் கடுமையான எதிர்ப்புக் கிடையே கடந்த நூற்றாண்டில் தான் குர்ஆனின் பிற மொழி பெயர்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன.

குர்ஆன் மறைக்கப்படாமல் இருந்திருந்தால்!
ஆரம்ப காலத்திலிருந்தே ஆலிம்கள் எனப் பெருமைப் பேசும் இந்த மதகுருமார்கள் “”அகிலங்க ளிலுள்ள அனைத்தையும், மனிதனையும் படைத்த ஏகனான அல்லாஹ் ஆதத்தின் சந்ததிகளான மனித குலத்திற்குக் கருணையுடன் அளித்துள்ள வாழ்வியல் வழிகாட்டித் தொடரில் இறுதியாக இறக்கி அருளிய நெறிநூல் குர்ஆன் விளங்குவதற்கு மிகமிக எளிதானது, தெளிவானது, முரண்பாடற்றது. மனித குலத்திலுள்ள அனைவரும் எந்நாட்டவரும், எந்த இனத் தவரும், எம்மொழியினரும், அவரவர்களின் மொழி யில் படித்தாலோ, படிப்பதைக் காது கொடுத்துக் கேட்டாலோ நிச்சயமாக குர்ஆனின் கருத்துக்களை எவ்வித சந்தேகத்திற்குமிடமின்றி விளங்கிக் கொள்ள முடியும்.

எழுதப் படிக்கத் தெரியாத பாமரனும் (அவாம், ணூயியிஷ்மிrழிமிe) பிறர் படிப்பதைக் காது கொடுத்துக் கேட்ட மாத்திரத்தில் தெளிவாக விளங்கக் கூடிய நிலையில் எளிதாக்கப்பட்டது குர்ஆன் என்று அதன் 62:2 வசனம் கட்டியம் கட்டிக் கூறுகின்றது. அல்லாஹ்வே நேர்வழியையும், ஆதாரங்களையும் தெளிவாக மனிதர்களுக்கென்றே விளக்கி விட்டதாக 2:159-ல் கூறுகிறான். 54:17,22,32,40 நான்கு இறைவாக்குகள் சிந்திப்பதற்கே குர்ஆன் எளிதாக்கப்பட்டிருக்கிறது. சிந்தியுங்கள் என்று கூறுகின்றன. எனவே முஸ்லிம் கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற பாகுபாடோ, படித்தவர்கள், படிக்காதவர்கள் என்ற பாகு பாடோ, அரபி கற்றவர்கள், கல்லாதவர்கள் என்ற பாகுபாடோ அறவே இல்லாத நிலையில் மனித குலத்தினர் அனைவரும் எந்த நிலையிலும் அவர் களுக்குத் தெரிந்த மொழிகளில் குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் படித்துச் சாந்தி மார்க்கமாகிய இஸ்லாத்தை மிகமிக எளிதாக விளங்க முடியும் என்று மக்களை உற்சாகப்படுத்துவதோடு, எல்லா மொழிகளிலும் குர்ஆன் மொழி பெயர்க்கப்படு வதைத் தடுக்காமல், அதை உற்சாகப்படுத்தி வரவேற்பவர்களாக இருந்திருந்தால் இன்று உலகின் நிலையே வேறு விதமாக இருக்கும்.

மார்க்ஸ், அம்பேத்கார், பெரியார் பேச்சுக்கள் எடுபட்டிருக்கா!
காரல்மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்றோர் போலி கம்யூனிச சித்தாந்தத்தைக் கற்பனை செய்திருக்க மாட்டார்கள். மேலும் பல மனித சித்தாந்தங்கள் (இஸங்கள்) கற்பனை செய்யப்பட்டிருக்காது. போலி ஜனநாயக முறை நடைமுறைப்படுத்தப் பட்டிருக்காது. முன்னுண்டான சமுதாயங்களில் திருட்டுத்தனமாக நுழைந்து கொண்டு இன வேற்றுமை, ஜாதி வேற்றுமை, மொழி வேற்றுமை போன்ற பல வேற்றுமைகளால் ஒரே தாய்க்கும், தகப்பனுக்கும் பிறந்த மனித சமுதாயத்தை எண்ணற்ற மதங்கள், ஜாதிகள், கொள்கை கோட்பாடு கள் மூலம் பிளவுபடுத்தி அற்ப உலகியல் ஆதாயங் கள் அடைந்து கொண்டிருக்கும் 5% தேறாத மத குருமார்களின் அட்டூழியங்கள் அராஜகங்கள் அனைத்தையும் இறைவனின் இறுதி நெறிநூல் தெளிவாக அடையாளம் காட்டி இந்த மதகுருமார் களின் முகத்திரையை கிழித்தெறிந்து, அவர்களின் உண்மையான முகத் தோற்றத்தையும், இழிகுணங்களையும் குர்ஆன் தெளிவுபடுத்தி இருப்பதை அறியும் வாய்ப்பு கிடைத்திருக்கும். உண்மையிலேயே எவ்வித சுய நலமோ, உலகியல் ஆதாயமோ இல்லாமல் மனிதகுல நலனில் மட்டும் அக்கறை கொண்ட உண்மையான சிந்தனையாளர்கள், அவர்கள் எதிர்பார்த்த சீர்திருத்தக் கருத்துக்கள் அனைத்தும், அவற்றிற்கும் மேலாகவே அல்குர் ஆனில் நிறைந்திருப்பதை அறிந்திருப்பார்கள்.

டார்வின் தியரியோ, போலி மனிதக் கற்பனைக் கடவுள்களுடன் உண்மையான ஓரிறைவனையும் சேர்த்து மறுக்கும் நாத்திக ஈ.வே.ரா. கொள்கையோ மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருக்க முடியாது. அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவி இருக்கமாட்டார். இந்தச் சண்டாள முஸ்லிம் மதகுருமார்கள் அல்குர்ஆன் முஸ்லிம்களுக்குரிய வேதம்(?), முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குர்ஆனில் எவ்வித உரிமையும் இல்லை. முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது. முஸ்லிம் அல்லாத வர்கள் அரபி மொழியைத் திறம்படக் கற்றிருந்தாலும், அவர்கள் குர்ஆனை தொடவோ அதனை வேறு மொழிகளில் மொழிபெயர்க்கவோ கூடாது -ஹராம். முஸ்லிம்கள் அதற்கு அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் குருட்டுத்தனமான மூட ஃபத்வாக்களைக் கொடுத்து முஸ்லிம் அல்லாத நற்சிந்தனை யாளர்களையும், இஸ்லாமிய மார்க்கத்திலும், குர்ஆனிலும் தப்பெண்ணம் கொள்ள வைத்து விட்டார்கள்.

அதன் விளைவு!
அதன் விளைவு இஸ்லாமிய மார்க்கமும் மற்ற மதங்களைப் போல் ஒரு மதமே, அபினைப் போல் மக்களை மதிமயக்கி மூட நம்பிக்கைகளிலும், பகுத்தறிவு ஏற்காத மூடச் சடங்கு சம்பிரதாயங் களிலும் மூழ்கச் செய்து, அவற்றைத் தூக்கிப் பிடிப்பதே இஸ்லாமிய மதமும் என்று மற்ற மதங்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர். இஸ்லாத் தின் பேரால் இம்மதகுருமார்கள் கற்பனை செய்துள்ள மூட நம்பிக்கைகள் நிறைந்த பிக்ஹு சட்டங்களை இவர்கள் தூக்கிப் பிடிப்பதும் ஒரு காரணமாகும். அதையே இஸ்லாமிய மதமாக மற்ற அறிஞர்கள் கருத இடமேற்பட்டுவிட்டது.

அன்றும் இன்றும்!
1450 ஆண்டுகளுக்கு முன்னர் இப்றாஹீம் (அலை) அவர்களின் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவதாக வாயளவில் கூறிக்கொண்டு, நடை முறையில் தாருந்நத்வா மதகுருமார்களை முற்றிலு மாக நம்பி இறைவனுக்கு இணை வைப்பது முதல் அனைத்து மூட நம்பிக்கைகள் சடங்கு சம்பிரதாயங்களில் மூழ்கி இருந்த இப்றாஹீம்(அலை) அவர் களின் சந்ததிகளான குறைஷ்களைப் போல் இன்றைய முஸ்லிம்கள் இஸ்லாமிய மார்க்கத்தைப் பின்பற்றுவதாக வாயளவில் சொல்லிக்கொண்டு, நடைமுறையில் முஸ்லிம் மதகுருமார்களை முற்றிலுமாக நம்பி இறைவனுக்கு இணை வைத்தல் முதல் அனைத்து ´ஷிர்க், குஃப்ர், பித்அத்களில் மூழ்கி இருக்கிறார்கள்.

அன்று தாருந்நத்வா மதகுருமார்களைத் தெளிவாக அடையாளம் காட்டி, அவர்களின் முகத்திரையைக் கிழித்தெறிந்து, அவர்களின் கோர முகத்தை குறைஷ்களில் அல்லாஹ் நாடியவர்களுக்கு அடை யாளம் காட்டி, கணிசமான எண்ணிக்கையினரை அம்மதகுருமார்களின் வசீகர உடும்புப் பிடியிலி ருந்து விடுவித்த பின்னரே இஸ்லாம் மீண்டும் எழுச்சியுற்றது. எழுச்சியுற்ற இஸ்லாமிய மார்க் கத்தை ´ஷிர்க், குஃப்ர், பித்அத்கள் நிறைந்த மதமாக்கிய இந்த மதகுருமார்கள் வஞ்சமாக, திருட்டுத்தனமாக மீண்டும் புகுந்து முஸ்லிம்களை அன்றைய வழிகெட்ட குறைஷ்களின் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அன்று போல் இன்றும் முஸ்லிம்களை மட்டுமல்ல அகில உலகையும் பாழ்படுத்திக் கொண் டிருக்கும் இம்முஸ்லிம் மதகுருமார்களை அகில உலக மக்களுக்கும் அடையாளம் காட்டி, அவர் களின் வஞ்சக முகத்திரையை கிழித்தெறிந்து, அவர்கள் பசுத்தோல் போர்த்திய புலிகள்தான், மக்களை நரகில் கொண்டு தள்ளும் ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகள்தான், அவர்களை நம்பி அவர் கள் பின்னால் செல்பவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு 33:66-68 இறைவாக்குக் கூறுவது போல் இம்மதகுருமார்களைச் சபித்து ஒப்பாரி வைக்க நேரிடும் எனத் தெளிவாக விளக்கி, மக்களில் கணிசமான அல்லாஹ் நாடும் ஒரு சிலரையாவது இம்மத குருமார்களின் உடும்புப் பிடியிலிருந்து விடுவிப்பது காலத்தின் கட்டாயமாகும். அது கொண்டு மட்டுமே முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, மனித குலத்திற்கே விமோசனம் பிறக்கும். இப் பணியை விட்டு வேறு எப்பணியில் அந்நஜாத் ஈடு பட்டாலும் அது விழுலுக்கு இறைத்த நீரேயாகும். மக்கள் விரும்புவது போல் அந்நஜாத் ஒரு பல்சுவை இதழாகவோ, குர்ஆன், ஹதீஃதின் அடிப்படை யிலான சட்டங்களைச் சொல்லும் இதழாகவோ வெளிவந்தால், நிச்சயம் வாசகர்கள் பெருகுவார்கள். வருமானம் பெருகும். காலப்போக்கில் அவர்கள் நஜாத்தைத் தூக்கிப் பிடிப்பார்கள். இருக்கிற எண்ணற்றப் பிரிவுகள் போதாதென்று புதிய தொரு பிரிவாக “”நஜாத் மத்ஹப்” தோன்றும். இது அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு நேர்முரணாகும். தூய இஸ்லாம் ஒருபோதும் எழுச்சி பெறவே பெறாது.

அன்று போல் இன்று புதிய நபி வரவேண்டியதில்லை!
முஸ்லிம் மதகுருமார்களை மிகக் கடுமையாக விமர்சிப்பதைப் பார்த்து ஒரு காதியானி “”நீங்கள் நபியா?” என்று கேட்டார். இல்லை! குர்ஆன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டதால் புதிய நபி வரவேண்டிய தேவையோ அவசியமோ இல்லை என்று கூறினோம். ஆம்! இறுதி நபிக்கு முன்னால் அருளப் பட்ட நெறிநூல்கள் அனைத்தும் சிதிலமடைந்து கலப்படமாகி வேதாந்தங்கள் நிறைந்த வேதங்களாகி நேர்வழி மறைக்கப்பட்டுக் கோணல் வழிகளே நிறைந்திருந்தன. அதனால் நேர்வழியை அல்லாஹ்விடமிருந்து வஹி மூலம் பெறும் கட்டாயம் இருந்தது. அதனால் இறுதி நபி வந்து இறுதி வாழ்வியல் வழிகாட்டி நெறிநூல் குர்ஆனை பெற்றுத் தரும் கட்டாயம் இருந்தது.

ஆனால் குர்ஆன் உடனுக்குடன் ஏடுகளிலும், மனித உள்ளங்களிலும் பதிந்து பாதுகாக்கப்பட்டு இன்று வரை ஏன்? உலகம் அழியும் வரை அதன் தூய நிலையைப் பாதுகாக்கும் பொறுப்பை அல்லாஹ்வே ஏற்றிருக்கிறான். (பார்க்க 15:9)

எனவே இறைவனிடமிருந்து வஹி மூலம் நேர் வழிச் செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவிக்கப் புதிதாக ஒரு நபி வரவேண்டிய தேவையே இல்லை. அல்குர்ஆனில் உள்ளதை உள்ளபடி ஒளிவு மறை வின்றி, உலகியல் ஆதாயங்களைக் கருதாமல், அல்லாஹ் அல்லாத எந்தச் சக்திக்கும் அஞ்சாமல் தூய நோக்குடன் எடுத்துச் சொன்னால் போதும். ஒவ்வொரு முஸ்லிமும் அதற்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

இதுபோன்ற முயற்சிகள் உலகியல் ஆதாயங் களைக் குறிக்கோளாகக் கொண்டு காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் தான் முஸ்லிம்களிடையே புதிய புதிய பிரிவுகள்-பிளவுகள் புற்றீசல்போல் பல்கிப் பெருகி வருகின்றன. இப்படிப்பட்ட முயற்சிகளில் ஈடுபடுகிறவர் கள் மக்கள் நேர்வழி பெறவேண்டும் என்ற நன் நோக்கில் செயல்படுவதில்லை. பெருத்த வழிகேட்டில் சென்று கொண்டிருக்கும் ஒரு பெருங் கூட்டத்திலிருந்து ஒரு கணிசமான எண்ணிக்கையினரை தங்கள் பின்னால் வரச் செய்ய வேண்டும் என்ற சுயநல நோக்கமே அதற்குப் பிரதான காரண மாகும். இஃலாஸ் இல்லை.

வாய்ப் பேச்சில் மன்னர்கள்!
இன்று சமுதாய சீர்திருத்தம் என்று வாயள வில் கூறிக் கொண்டு செயல்படும் ஒவ்வொரு கூட்டத் தின் செயல்பாட்டைக் கூர்ந்து கவனியுங்கள். கடந்த ஆயிரம் வருடங்களாக தர்கா, தரீக்கா, ´ஷிர்க், குஃப்ர், பித்அத் போன்றவற்றில் மூழ்கி இருக்கும் பரேல்வி கொள்கைக்குப் போட்டியாக தேவ்பந்த், தப்லீஃக் கொள்கை, அதிலிருந்து ஜமாஅத்தே இஸ்லாமி, அதிலிருந்து அஹ்ல ஹதீஃத், முஜாஹித், அதிலிருந்து ஜாக், அதிலிருந்து தமுமுக, அதிலிருந்து ததஜ, அதிலிருந்து இதஜ இத்யாதி இத்யாதி பிரிவுகள் பல்கிப் பெருகி வருகின்றன.

ஒவ்வொரு பிரிவும் தாங்கள் இதுவரை இருந்து இப்போது பிரிந்து வந்த பிரிவைக் கடுமையாகச் சாடுவது, குஃப்ர் ஃபத்வா கொடுப்பது, அதிலிருக் கும் மவ்லவிகளை மிகக் கீழ்த்தரமாக விமர்சிப்பது, பொய்யாக அவதூறுகளைப் பரப்புவது இவை அனைத்தையும் சொந்த அனுபவத்தில் பார்த்து வரத்தானே செய்கிறீர்கள். ஒவ்வொரு பிரிவாரும் அவர்கள் மட்டுமே நேர்வழியில் இருப்பதாகவும், மற்றப் பிரிவுகள் அனைத்தும் வழிகேட்டில் இருப்பதாகவும் கோரஸ் பாடுவதைக் கேட்கத் தானே செய்கிறீர்கள். இதிலிருந்தே அவர்கள் அல்லாஹ் 6:153-ல் சுட்டிக் காட்டும் ஒரே நேர் வழியில் செல்லவில்லை, நபி(ஸல்) அவர்கள் தரையில் நேர்க்கோடு இட்டு அதன் பக்கங்களில் பல கோணல் கோடுகள் போட்டுக் காட்டினார் களே அக்கோணல் வழிகளிலேயே ஒவ்வொரு பிரிவு மதகுருமார்களும் சென்று கொண்டிருக் கிறார்கள். கடந்த 1000 ஆண்டுகளாக முஸ்லிம் களின் பரிதாப நிலை இதுதான்.

“ஜமாஅத் அல்முஸ்லிமீன்” (பாக்கிஸ்தான்)
பாக்கிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் செயல்படும் “”ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்ற அமைப்பும் அல்லாஹ் அவன் இறுதித் தூதர் மூலம் கொடுத்த பெயரில் செயல்பட்டாலும், அதன் அமீரிடம் பைஅத் செய்யாத வரை பிற முஸ்லிம் களை முஸ்லிம்களாக ஏற்பதில்லை. அவர்கள் பின் னால் நின்று தொழுவதில்லை. அவர்கள் மட்டுமே நேர்வழியில் இருப்பதாக மார்தட்டுகிறார்கள். இப்படி இன்று உலகில் காணப்படும் முஸ்லிம் பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவினரும் தாங்களே நேர் வழி நடப்பதாகவும், மற்றப் பிரிவுகள் அனைத்தும் வழிகேட்டில் இருப்பதாகவும், தங்கள் பின்னால் அணி வகுப்பவர்களே வெற்றி பெற முடியும் என்று மார்தட்டுகிறார்களே அல்லாமல் ஏதாவது ஒரு பிரிவினராவது “”யார் நேர்வழியில் இருக்கிறார், யார் வழிகேட்டில் இருக்கிறார் என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். மனிதர்களில் யாரும் அறிய முடியாது என்று கூறும் 2:142,213, 4:68, 5:16, 6:39,87,161, 10:25, 15:41, 16:121, 22:54,67, 24:46, 37:118, 42:52 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளை இம்மதகுருமார்கள் மதித்து நடக்கிறார்களா? அல்லது இவற்றை மிதித்துப் புறக்கணிக்கிறார்களா? இவ் வசனங்கள் அனைத்தையும் படித்துப் பார்த்து நீங்களே முடிவு செய்யுங்கள்.

குறைந்தது எப்படி நடந்தால் நேர்வழி நடந்து வெற்றி பெற முடியும் அதாவது குர்ஆனைப் பற்றிப் பிடித்து, (பார்க்க: 3:103) இறுதி நபியை மட்டுமே பின்பற்ற வேண்டும், குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஃத்கள் அல்லாது ஸலஃபுகளையோ, கலஃபு களையோ ஒருபோதும் பின்பற்றக் கூடாது என்று கூறும் 7:3, 33:36,66-68, 3:51,101, 4:175, 6:126,153, 19:36, 23:73,74, 36:3,4,61, 43:43,61,64, 46:30, 48:2,3, 20, 67:22 எண்ணற்ற குர்ஆன் வசனங்களை இம்மத குருமார்கள் வாயளவில் ஓதிக்கொண்டு செயலளவில் அவற்றை மிதித்துப் புறக்கணிக்கிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா? இந்த வசனங்கள் அனைத்தையும் நீங்களே நேரடியாகப் படித்து விளங்கி முடிவு செய்யுங்கள். இப்படி அனைத்துப் பிரிவு முஸ்லிம் மதகுருமார்களின் இழி நிலையை அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஒரேயொரு மவ்லவியையாவது காட்ட முடியுமா?

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளிலிருந்து, கடமையான மார்க்கப் பணியை ஒருபோதும் கூலி-சம்பளத் திற்குச் செய்யக் கூடாது; மனித குலத்திற்கே சொந்த மான இறுதி வாழ்வியல் வழிகாட்டி நெறிநூல் குர்ஆனை ஆதத்தின் சந்ததிகள் அனைவரும் எவ்வித இன, மொழி, மத பாகுபாடுமின்றி அவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் படித்து விளங்க முற்பட்டால் 29:69 இறைவனின் வாக்குறுதிபடி அவர்கள் நேர் வழியை எளிதாக அடைந்து கொள்ள முடியும் என்று பகிரங்கமாகச் சொல்லும் ஒரேயொரு மவ்லவியையாவது காட்ட முடியுமா? அப்படி இருந்தால் அன்று உமர்(ரழி) அவர்கள் எப்படி தாருந்நத்வா புரோகிதக் கூட்டத்திலிருந்து வெளியேறி வந்தாரோ அதே போல் இன்று அவர் இந்தப் புரோகிதக் கூட்டத்திலிருந்து வெளியேறி வந்து விடுவார். புரோகிதத்தை ஆதரிக்கும் எவராக இருந்தாலும் அவர் ஒருபோதும் நேர்வழிக்கு வரவே முடியாது.

புரோகித முஸ்லிம் மதகுருமார்களின் பிடியிலி ருந்து மனித குலத்தை விடுவிக்காதவரை இவ்வுல கிற்கு விமோசனமோ ஈடேற்றமோ, மறுமையில் வெற்றியோ ஒருபோதும் கிடைக்காது. இது உறுதியிலும் உறுதியான செய்தியாகும். அந்நஜாத் அம்முயற்சியிலேயே முழுமூச்சாக, முழு உத்வேகத்துடன் செயல்படுகிறது. ஆயினும் 11:118,119, 12:106, 25:30, 32:13, 103:2 இறைவாக்குகளில் அல்லாஹ் கூறி இருப்பதற்கு மாற்றமாகப் பெருங் கொண்ட மக்களை நேர்வழிக்குக் கொண்டுவர அந்நஜாத்தால் ஒருபோதும் முடியாது. 51:55 இறைவாக்குக் கூறுவது போல், அல்லாஹ்வையும், மறுமையையும், விசாரணையையும், சுவர்க்கம், நரகத்தையும் உறுதியாக நம்பி இறை உணர்வுடன்(தக்வா) செயல்படும் உண்மை விசுவாசிகளுக்கே அந்நஜாத்தின் குர்ஆன், ஹதீஃத் உபதேசம் பலனளிக்கும். இது அல்லாஹ்வின் உறுதியான வாக்கு. இதற்கு மாறாக அந்நஜாத் எதைச் சாதித்து விட முடியும்.

மதகுருமார்களைப் போல் 2:42,44, 61:2,3 எம்மை மறந்து ஊருக்கு உபதேசம் செய்வதாக இருந்தால், 4:112 இறைவாக்குக் கூறுவது போல் எமது தவறுகளை அப்பாவி நிரபராதிகள் மீது சுமத்தும் இழிவான புரோகிதப் புத்தி எமக்கு இருந்தால் மட்டுமே, அற்பமான இவ்வுலக ஆதாயத்தைக் குறிக்கோளாகக் கொண்டு நரகை நிரப்ப இருக்கும் பெருங்கொண்ட மக்களின் ஆதரவை நாடி, அவர்கள் விரும்பும் கோணல் வழிகளை நேர்வழியாகச் சொல்லும் பரிதாப நிலைக்கு நாமும் ஆளாவோம்.

இந்த ஆக்கத்திலுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நேரம் ஒதுக்கி குர்ஆனை எடுத்து நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் மட்டுமே இம்மவ்லவிகளான மதகுருமார்களின் மிகக் கோரமான முகத்தை அறிய முடியும். வெறுமனே இதில் எழுதப்பட்டுள்ள குர்ஆன் அத்தியாயம், வசனங்களின் எண்களைப் படித்துக் கொண்டுச் செல்வதால் உரிய பலன் கிடைக்காது என்று உறுதியாகச் சொல்லி எச்சரிக்கிறோம்.

Previous post:

Next post: