இஸ்லாமிய ஆய்வு மற்றும் வெளியீட்டு மையம், ஏர்வாடி
2002 அக்டோபர் மாதம் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஹிஜ்ரி 1423 ரஜப் மாதத்துடைய 29ஆவது நாள். அன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்குப் பின் டெல்லியில் 12 நிமிடமும் லிபியாவில் 22 நிமிடமும் பிறை இருந்தது. எனவே 2002 அக்டோபர் மாதம் 7ம் தேதி ஹிஜ்ரி 1423 ஷஃபான் மாதத்தின் முதல் தேதியாகும். ஷஃபான் மாதத்தின் 14வது நாள் பெளர்ணமி தினத்தில் சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இது கீழ்க்கண்ட நாடுகளில் தெரியும்.
ஹிஜ்ரி 1423 ஷஃபான் மாதத்தின் 29ந் தேதி தற்போதைய ஆங்கில தேதிபடி 2002 நவம்பர் மாதம் 4ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் நியூயார்க்கில் 7:33 நிமிடங்களும் ஹென்டெர்சன் தீவில் 11 நிமிடமும், ஹானலூலுவில் 16 நிமிடமும் பிறை தெரியும். எனவே 2002 நவம்பர் மாதம் 4ஆம் தேதி திங்கட்கிழமை 1423 ஷஃபான் மாதம் முடிவடைகிறது.
ஹிஜ்ரி 1423 ரமழான் மாதத்தின் 1வது நாள் (முதல் தேதி) 2002ம் வருடம் நவம்பர் மாதம் 5ஆம் தேதி செவ்வாய்கிழமை.
ஹிஜ்ரி 1423 ரமழான் மாதத்தின் 29ஆம்நாள் (இருபத்தொன்பதாம் தேதி) 2002 டிசம்பர் 3 செவ்வாய்க்கிழமை. அன்றைய தினம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு பிறை எங்குமே இருக்காது என்பதால் அதற்கு அடுத்த நாள் 2002 டிசம்பர் 4ஆம் தேதி அன்று ரமழான் மாதம் 30 தேதிகளாக பூர்த்தி அடைவதோடு அன்று தான் கடைசி நாள் என்பதற்கு அத்தாட்சியாக அன்றைய தினம் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதை பற்றிய விளக்க படத்தில் அது எங்கெல்லாம் தெரியும் என்ற விபரத்தை அறிந்து கொள்ளலாம். முப்பதாவது நாள் உலகில் டெல்லியில் 3 நிமிடங்களும் கராய்ச்சியில் 6 நிமிடங்களும் மக்காவில் 10 நிமிடங்களும் பிறை சூரிய அஸ்தமனத்திற்கு பின் வானத்தில் இருக்கும்.
2002ம் டிசம்பர் 5ஆம் தேதி வியாழக்கிழமை 1423 ஷவ்வால் 1வது தேதியாகும். இது நான் நோன்பு பெருநாள் தினமாகும். இந்த தினத்தில் நோன்பு வைப்பதை நபி(ஸல்) அவர்களும் தடை செய்துள்ளார்கள்.
2003 ஜனவரி 2ஆம் தேதி வியாழக்கிழமை ஹிஜ்ரி 1423 ஷவ்வால் 29ஆம் தேதியாகும். அன்றைய தினம் ஹானலூலுவில் 10 நிமிடங்களும் நிகோஹிவா மற்றும் மார்கியூஸ் தீவுகளில் 12 நிமிடங்களும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறை இருக்கும். எனவே ஹிஜ்ரி 1423 துல்கஃதா 1வது தேதி ஜனவரி 3ஆம் தேதி வெள்ளிக்கிழமையாகும்.
2003 ஜனவரி 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1423 துல்காஃதா மாதத்தின் 29ஆம் தேதி அன்றைய தினம் எங்குமே சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறை இருக்காது. எனவே 2003 பிப்பரவரி மாதம் 1ஆம் தேதி சனிக்கிழமை அன்று ஹிஜ்ரி 1423 துல்காஃதா மாதம் 30 ஆக பூர்த்தியடைகிறது. அன்றைய தினம் மக்காவிழல் 4 நிமிடம் சூரிய அஸ்தமனத்திற்கு பின் பிறை இருக்கும்.
ஹிஜ்ரி 1423 துல்ஹஜ் மாதத்தின் முதல் நாள் 2003 வருடம் பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும். இதிலிருந்து ஒன்பதாவது நாள் அதாவது 2003 பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி திங்கட்கிழமை அரபா தினமாகும். அதற்கு அடுத்த நாளான 2003 பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி திங்கட்கிழமை அரபா தினமாகும். அதற்கு அடுத்த நாளான 2003 பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1423வது வருடத்தின் துல்ஹஜ் மாதத்தின் பத்தாவது நாளாகும். இந்த நாள் நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைக்க தடை செய்த ஹஜ் பெருநாள் தினமாகும். அல்லாஹ்தான் மிக்க ஞானமுடையவன்.
————————————————————————————————————————————————–
ரமழானில் விடுபட்ட நோன்பை எப்போது நிறைவேற்ற வேண்டுமா?
வேறு நாட்களில் நோற்கலாம் என்று அல்லாஹ் கூறுவதால் விடுபட்ட நோன்புகளைப் பிரித்துப் பிரித்து வைப்பதில் தவறில்லை! என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்.
விடுபட்ட ரமழான் நோன்புகளை நிறைவேற்றாமல் (துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நோன்பு நோற்பது பொருநத்தாது! என்று ஸயீத் பின் முஸய்யப்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
ஒருவர் அடுத்த ரமழான் வரும்வரை விடுபட்ட நோன்பை நோற்காதிருந்தால் இரண்டு நோன்புகளையும் அவர் நோற்பார் அவர் உணவளிக்கத் தேவையில்லை! என்று இப்ராஹீம்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
நோன்பை விட்டவர் (அதற்குப் பரிகாரமாக) ஏழைகளுக்கு உணவளிக்க உணவளிக்க வேண்டும்! என்று இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறியதாகவும் அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுபட்ட நோன்புகளை வேறு நாட்களில் நோற்க வேண்டும் என்றுதான் அல்லாஹ் கூறுகிறான்; உணவளிக்குமாறு கூறவில்லை. புகாரி: பாகம்:2. ஹதீஸ் எண்: 1949. பாடம்: 40.