பிறை நாள்காட்டியின் ஆய்வரங்கம்! கருத்தரங்கம்!! நாள்: 03.11.2013 இடம்: J.K. மஹால், துறைமங்கலம், பெரம்பலூர்.

in பிறை


அருளாளன் அன்பாளன் அல்லாஹ்வின் பெயரால்
பிறை நாள்காட்டியின் அத்தியாவசியம் பற்றிய….
ஆய்வரங்கம்! கருத்தரங்கம்!!

நாள்: 29.12.1434 (03.11.2013) ஞாயிறு காலை 10.30 மணி முதல் மாலை 6 மணி வரை (இன்ஷா அல்லாஹ்)

இடம்: J.K.  மஹால், துறைமங்கலம், பெரம்பலூர்.
இன்று நடைமுறையிலிருக்கும் அனைத்து வகை நாட்காட்டிகளிலும் குறைபாடுகள் உள்ளன. இன்று பல நாடுகளில் நடைமுறையிலுள்ள கிறித்தவ நாள்காட்டியில், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை 1 நாளைக் கூட்டியும், 127 வருடங்களுக்கொரு முறை 1 நாளைக் கழித்தும் கணக்கிடும் கட்டாயம் இருக்கிறது. இன்றைய நிலையில் 1 நாளைக் குறைத்துக் கொள்ளும் அத்தியாவசியம் இருந்தும் பல காரணங்களால் அதைக் குறைக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது உலகம்.

இந்தக் குறைபாட்டை உணர்ந்த நமது இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் 18.02.1953-ல் அமைக்கப்பட்ட “”கேலண்டர் ரிஃபோம் கமிட்டிக்கு” calendar reform committee india இது குறித்துக் கடிதம் எழுதியுள்ளார். அனைத்துவகை நாள்காட்டிகளையும் தீர ஆய்வு செய்து துல்லியமான மாறுதலே இல்லாத ஒரு நாள் காட்டியைத் தேர்ந்தெடுத்துத் தரும்படி கேட்டிருந்தார்.

மேலும் கிறித்தவ நாள்காட்டி நமது நாட்டிலும், உலகின் பெரும்பாலான பகுதிகளிலும் நடைமுறையிலிருந்தாலும் அதிலுள்ள குறைபாடுகள் நடைமுறைக்குச் சாத்தியமற்றது என்பதையும் முன்னாள் பிரதமர் நேரு இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

நடைமுறையிலிருக்கும் நாள்காட்டியை மாற்றுவது மிகவும் சிரமம் என்றாலும் கண்டிப்பாக மாற்றியமைக்க வேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். வருத்தப்பட வேண்டிய செய்தி என்னவென்றால், உலகம் படைக்கப்பட்டக் காலத்திலிருந்தே சந்திர நாள்காட்டி ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் மிகத் துல்லியமாக பிறைகளைக் காட்டிக் கொண்டிருந்தும், 1434 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் கலீஃபா உமர்(ரழி) அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தும், ஹிஜ்ரி 400க்கு பின்னர் திருட்டுத்தனமாகப் புகுந்த மதகுருமார்கள், யூதர்களின் சூழ்ச்சிக்குள்ளாகி 3-ம் பிறையை முதல் பிறையாக முஸ்லிம்களிடையே புகுத்திவிட்டார்கள்.

துலுக்கனுக்கு 3-ம் பிறைதான் 1-ம் பிறை என்ற சொல்லாடல் அனைவரும் அறிந்ததே. இன்று முஸ்லிம்களின் நடைமுறையிலிருக்கும் 3-ம் பிறையை முதல் பிறையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட சந்திர நாள்காட்டியும் 1953-ல் கேலண்டர் ரீஃபோம் கமிட்டியினரால் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் 3-ம் பிறை, 1-ம் பிறை என முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்துவதாலும், காலையில் உதித்து மாலையில் மறையும் பிறையை பிறை பிறந்துவிட்டதாக அறிவீனமாகக் கூறி வருவதாலும் முஸ்லிம்களின் கேலண்டர் “”கேலண்டர் ரிஃபோம் கமிட்டியினரால்” நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் “History of the Calendar” என்ற ஆங்கில நூலின் (முதல் பதிப்பு 1955, மறு பதிப்பு 1992) 179-ம் பக்கத்தில்”The Islamic Calendar” என்ற பெயரில் இடம் பெற்றுள்ளது. அதில் மாலையில் மறையும் கண்ணுக்குத் தெரியும் பிறை முஸ்லிம்களால் முதல் பிறையாகக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது தவறு என்றே முஸ்லிம்களின் நாள்காட்டி அந்த கமிட்டியால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இது பிறை நாள்காட்டியிலுள்ள தவறு அல்ல. மூட முல்லாக்களின் மூளையில் உதித்தத் தவறாகும்.

இன்று பிறையைக் கண்ணால் பார்ப்பது இபாதத்-வணக்கம், தொழுகைக்கு ஒளூ எப்படி அவசியமோ- இபாதத்தோ அதேபோல் நோன்புக்குப் பிறையைக் கண்ணால் பார்ப்பதும் அவசியம் இபாதத், நாள் ஃபஜ்ரில் அல்ல, மஃறிபில் ஆரம்பிக்கிறது, லைலத் என்ற அரபி பதம் இரவை மட்டுமே குறிக்கும், நாளைக் குறிக்காது இப்படித் தங்களின் தவறான வழிகேடான கூற்றுகளுக்கு அவர்கள் குர்ஆனையும், ஹதீஃத்களையும் திரித்து வளைத்து எப்படித் தவறான பொருள்கள் எடுக்கிறார்கள் போன்ற அனைத்துக் கருத்துக்களையும் தீர ஆராய்ந்து, குர்ஆனுக்கும், ஹதீஃத்களுக்கும் நெருக்கமான கருத்தை அறியும் ஓர் அரிய வாய்ப்பு. பிறை விவகாரத்தில் எப்படிப்பட்ட கொள்கை உடையோராக இருந்தாலும், தங்கள் கருத்தை எடுத்து வைத்து ஆய்வு செய்து அதன் எதார்த்த நிலையை குர்ஆன், ஹதீஃதில் உரைத்துப் பார்த்துத் தெளிவடைய ஓர் அரிய சந்தர்ப்பம். முஸ்லிம் ஆண்கள் பெண்கள் அனைவரும் பங்கு பெற்றுப் பலன் அடைய அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு : பெண்களுக்கு தனி இட வசதி உண்டு. தீபாவளிக்கு
அடுத்த நாளாக இருப்பதால் உணவு விடுதிகள் இருக்காது.
எனவே இரு வேளை உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜமாஅத் அல் முஸ்லிமீன்
திருச்சி

தொடர்பு : 9443955333, 9345100888, 9710122152, 8825184161

Previous post:

Next post: