ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

in 2014 ஜனவரி,பொதுவானவை

MTM. முஜீபுதீன், இலங்கை

அக்டோபர் 2013 தொடர்ச்சி….
இஸ்லாத்தில் பலதாரமணம் செய்ய ஆண்களுக்கு அனுமதி :
அநாதைப் பெண்களைத் திருமணம் செய்து அவர்களிடம் நீங்கள் நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தீர்களானால், உங்களுக்குப் பிடித்தமான பெண்களை மணந்து கொள்ளுங்கள். இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நன்னான்காகவோ. ஆனால், நீங்கள் (இவர்களிடையே) நியாயமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே (மணந்து கொள்ளுங்கள்). அல்லது உங்கள் வலக் கரங்களுக்குச் சொந்தமான (ஓர் அடிமைப் பெண்ணைக் கொண்டு) போதுமாக்கிக் கொள்ளுங்கள். இதுவே நீங்கள் அநியாயம் செய்யாமலிருப்பதற்குச் சுலபமான முறையாகும். நீங்கள் (மணம் செய்து கொண்ட) பெண்களுக்கு அவர்களுடைய மஹர்(திருமணக் கொடை)களை மகிழ்வோடு (கொடையாகக்) கொடுத்து விடுங்கள். அதிலிருந்து ஏதேனும் ஒன்றை மனமொப்பி அவர்கள் உங்களுக்குக் கொடுத்தால் அதைத் தாராளமாக, மகிழ்வுடன் புசியுங்கள். (அல்குர்ஆன் : 4:3-4)

இஸ்லாத்தில் பெண்களை மஹர் கொடுத்தே திருமணம் செய்தல் வேண்டும். அத்துடன் ஒரு பெண் ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு ஆணையே திருமணம் செய்யலாம். பெண்கள் ஒரு நேரத்தில் பல ஆண்களைத் திருமணம் செய்ய முடியாது என்பது ஒரு சாதாரண விசயம் என்பதனால் அதனை அதிகம் விளக்காது தவிர்க்கின்றேன். ஆனால் இஸ்லாம் திருமணத்தின் போது பெண்களுக்குப் பல வகையில் பாதுகாப்புகளை ஏற்படுத்தியிருப்பதைக் காணலாம். அவற்றையும் அவதானிப்போம்.

மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ளல் வேண்டும்.
(முஃமின்களே!) நீங்கள் எவ்வளவு தான் விரும்பினாலும், மனைவியரிடையே நீங்கள் நீதம் செலுத்தச் சாத்தியமாகாது. ஆனால் (ஒரே மனைவியின் பக்கம்) முற்றிலும் சாய்ந்து மற்றவளை அந்தரத்தில் தொங்க விடப்பட்டவள் போன்று ஆக்கிவிடாதீர்கள். நீங்கள் (அல்லாஹ்வுக்குப்) பயந்து சமா தானமாக நடந்து கொள்வீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும், மிகக் கருணையுடையவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் : 4:129)

ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்யும் போது நீதமாக நடத்தல் வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது.

ஒரு ஆண் மகன் தனது மனைவியைத் தெரிவு செய்யும் முறை.
இன்று உலகில் தனது மணமகளைத் தெரிவு செய்யும் போது தமக்குச் சீதனமாக கிடைக்கும் செல்வம், மனைவியின் குடும்ப அந்தஸ்து, பெண்ணின் அழகு போன்றவற்றுக்கே முதலிடம் அளிக்கப்படுகின்றது. அதனால் பெண்கள் தனது கன்னிப் பருவத்தில் தமது அழகை ஆண்களுக்குக் கவர்ச்சி மூலம் வெளிப்படுத்த முற்படுகின்றனர். இதனால் சமுதாயம் கட்டிக்காத்த பெண்களின் ஒழுக்கப் பண்புகள் சீர்கெடுகின்றன. இதனால் ஒழுக்கமுடைய பெண்கள் புறக்கணிக்கப்படுகின்றார்கள். இதனால் ஆண்களும் பெண்களும் ஒழுக்கமற்ற சமுதாயத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். இதனால் மேலைத் தேச நாடுகளில் குடும்ப வாழ்க்கை சீரழிவுக்கு உட்பட்டது போல் கீழைத் தேச மக்களின் இல்லற வாழ்வும் சீர் கெடுவதற்கு அடிப்படையாக அமைகின்றது. ஆனால் இஸ்லாம் மணமகனை அல்லது மணமகளைத் தெரிவு செய்யும்போது ஒழுக்கப் பண்பின் அடிப்படையில் திருமணங்கள் நடைபெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. முஹம்மது(ஸல்) அவர்கள் கூறுவதை அவதானியுங்கள்.

நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மண முடிக்கப்படுகின்றாள்.
1. அவளது செல்வத்திற்காக
2. அவளது குடும்பப் பாரம்ரியத்திற்காக
3. அவளது அழகிற்காக
4. அவளது மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக
ஆகவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்துகொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும். (ஸஹீஹுல் புகாரி : 5090)

ஒரு ஆண் தன் வாழ்க்கைத் துணைவியாக மார்க்க ஒழுக்கமுள்ள பெண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அப்போதே அம்மனிதனின் இல்லற வாழ்க்கை நிம்மதியானதாக அமையும். இல்லாது விடின் கைகள் செயலற்றுப் போனால் வாழ்க்கையோட்டம் பாதிப்புக்குள்ளாவது போல் அவனது வாழ்க்கை மண்ணாகிவிடும்.

திருமணத்திற்கு முன் மணப் பெண்ணை பார்த்துக் கொள்ளுதல் இஸ்லாத்தின் வழிமுறை:
நபிதோழர் முஃகீரா பின் அபா(ரழி) அவர்கள் ஒரு பெண்ணை மணக்க விரும்பி பெண் பேசினார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.
“”அப்பெண்ணை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், அது உங்களிடையே அன்பு நிலைத்திருக்க  உதவும்” என்று கூறினார்கள். (நூல்: திர்மிதி, நஸாயீ)
சில ஆண்கள் பெண்களைப் பார்க்காது திருமணம் செய்து கொள்வர். பின் அப்பெண் எனது மனதுக்கு பிடிக்கவில்லை என மணமக்களைத் துன்பப்படுத்துவர். இது சில திருமணங்கள் தோல்வியில் முடிவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது. இதன் பாதிப்பு கூடிய அளவில் பெண்களுக்கே ஏற்படுகின்றது. இதனைத் தவிர்ப்பதற்குப் பார்த்துத் திருமணம் செய்வது சிறந்ததாகும்.

மணமகளின் இசைவின்றி நடைபெறும் திருமணம் செல்லாது:
இஸ்லாம் மார்க்கத்தின்படி ஒரு தந்தை தனது மகளின் அனுமதியைப் பெற்றே அவளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. ஆகவே இஸ்லாம் பெண்களின் திருமண உரிமையைப் பாதுகாக்கின்றது. அவதானியுங்கள்.

நபி(ஸல்) அவர்கள், “”கன்னி கழிந்த பெண்ணை (விதவையை), அவளது (வெளிப்படையான) உத்தரவு பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். கன்னிப் பெண்ணிடம் (ஏதேனும் ஒரு முறையில்) அனுமதி பெறாமல் மணமுடித்துக் கொடுக்க வேண்டாம்” என்று சொன்னார்கள். மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! எப்படி கன்னியின் அனுமதி(யைத் தெரிந்து கொள்வது)” என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், “”அவள் மெளனம் சாதிப்பதே (அவளது சம்மதம்)” என்று சொன்னார்கள். (ஸஹீஹுல் புகாரி : 5136)

கன்ஸா பின்த் கிதாம் அல் அன்சாரியா(ரழி) அவர்கள் கூறியதாவது: கன்னி கழிந்த பெண்ணான என்னை என் தந்தை(ஒருவருக்கு) மணமுடித்து வைத்தார்கள். எனக்கு இதில் விருப்பமிருக்கவில்லை. ஆகவே, நான் அல்லாஹ் வின் தூதர்(ஸல்) அவர்களிடம் போ(ய் என் விருப்பத்தைச் சொன்) னேன். அத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (ஸஹஹுல் புகாரீ : 5138)

இன்றும் பல நாடுகளில் பெண்களின் அனுமதியின்றி பல திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இஸ்லாம் இவ்வாறான திருமணங்களைத் தடை செய்துள்ளது.

அடிமைப் பெண்ணுக்கும் வாழ்வு கொடுக்கத் தூண்டும் மார்க்கம் இஸ்லாம்.
சாதாரண பெண்களையே பணம் இன்மையினாலும், சாதிக் கொடுமையினாலும் திருமணம் செய்ய மறுக்கும் உலகம் இதுவாகும். ஆனால் அன்று அரேபியாவில் முஸ்லிம்களுக்கு, அடிமைப் பெண்களுக்கும் வாழ்வு கொடுக்க வழிகாட்டியது இஸ்லாம். அவதானியுங்கள்.
“”தம்முடைய அடிமைப் பெண்ணை (அடிமைத்தளையிலிருந்து) விடுதலை செய்து, தாமே அவளை மணந்து கொண்ட ஒருவருக்கு இரட்டை நன்மைகள் உண்டு என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் : 2795)

இஸ்லாத்தின் பார்வையில் மணவிருந்து (வலீமா) மணமகனால் வழங்கப்படும்.
இன்று உலகில் அதிகமான மக்கள் திருமணத்தின் போது மணவிருந்துக்கான செலவை மணமகளின் பெற்றோரிடமே ஒப்படைத்து விடுவர். இதனால் மணமகளின் பெற்றோர் பல துன்பங்களுக்கு முகம் கொடுப்பர். ஆனால் இஸ்லாம் திருமண மண விருந்தினை மணமகன் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியது, அவதானியுங்கள்.

ஆனஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள், “”அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஸைனப்(ரழி) அவர்களை மணந்து கொண்டபோது அளித்த மணவிருந்தை விட “”அதிகமாக” அல்லது “”சிறப்பாக”த் தம் துணைவியரில் வேறெவரை மணந்த போதும் மணவிருந்தளிக்கவில்லை” என்று கூறியதை நான் கேட்டேன். அப்போது ஸாயித் அல்புஸானீ(ரஹ்) அவர்கள், (அனஸ்(ரழி) அவர்களிடம்), “”அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மணவிருந்தாக என்ன அளித்தார்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அனஸ்(ரழி) அவர்கள் “”மக்களுக்கு ரொட்டியையும், (ஓர் ஆட்டு) இறைச்சியையும் உண்ணக் கொடுத்தார்கள். (உண்ண முடியாமல்) மக்கள் அதை விட்டுச் சென்றனர்” என விடையளித்தார்கள். (முஸ்லிம்: 2800)

இன்று அதிகமான திருமணங்களில் மணவிருந்து வைபவங்களில் ஏழைகள் அழைக்கப்படாது புறக்கணிக்கப் படுகின்றனர். இதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்தார்கள். அவதானியுங்கள் :

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வருபவர்கள் (ஏழைகள்) தடுக்கப்பட்டு, மறுப்பவர்கள் (செல்வந்தர்கள்) அழைக்கப்படும் மணவிருந்து (வலீமா) உணவே கெட்ட உணவாகும். விருந்து அழைப்பை ஏற்காதவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டார். (முஸ்லிம் : 2819)

விதவைகளுக்கு வாழ்வளித்த மார்க்கம் இஸ்லாம்:
உலகில் சில சமூகங்களிலிருந்து கன்னி கழிந்த விதவைப் பெண்கள், அச்சமூகங்களிலிருந்து புறக்கணிக்கப்பட்டனர். இதன் அடிப்படையில் இந்தியாவில் சில சமூகங்களில் கணவன் இறந்த பின் கணவனின் சடலத்துடன் மனைவியும் கட்டை ஏற அல்லது சகோதரர்கள் மனைவியாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர். விதவைகள் தாம் விரும்பிய கணவனை மீண்டும் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்ட னர். இவ்வாறு விதவைகள் அவமதித்து துன்புறுத்தப்பட்ட நிலையை இஸ்லாம் மாற்றியமைத்தது. நபி(ஸல்) அவர்கள் தமது 25ம் வயதில் தன்னை விட அதிக வயதுடைய விதவையான கதீஜா(ரழி) அவர்களைத் திருமணம் செய்து சிறப்புமிக்க வாழ்க்கையை மேற்கொண்டார்கள். அல்லாஹ்வின் இறுதி வாழ்க்கை நெறியான அல்குர்ஆன் பின்வருமாறு விதவைகளைப் பற்றி விளக்குவதை அவதானியுங்கள்.

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாள் பொறுத்திருக்க வேண்டும் (இந்த இத்தத் ) தவணை பூர்த்தியானதும், அவர்கள் (தங்கள் நாட்டத்துக்கு ஒப்ப) தங்கள் காரியத்தில் ஒழுங்கான முறையில் (திருமணம்) எதுவும் செய்து கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் : 2:234)

கணவனை இழந்தப் பெண்களைப் போல், தலாக் செய்யப்பட்ட பெண்களும் தமக்குக் கடமையான இத்தாவைப் பூர்த்தி செய்த பின் நல்ல முறையில் தாம் விரும்பியவரைத் திருமணம் செய்து கொள்வதற்கு இஸ்லாம் மார்க்கத்தில் அனுமதி உண்டு. மேலும் அவதானியுங்கள்.

இன்னும், பெண்களை நீங்கள் தலாக் செய்து, அவர்க ளும் தங்களுடைய இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தாங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படித் திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகின்றது. இதன்படி நடப்பது உங்களுக்கு நற்பண்பும், தூய்மையும் ஆகும். (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான் நீங்கள் அறியமாட்டீர்கள்.
(அல்குர்ஆன்: 2:232)

விதவைகளுக்கு உதவி செய்தவர்களின் நன்மைகள் பற்றி நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

கணவனை இழந்த கைம் பெண்ணுக்காகவும் ஏழைகளுக்காகவும் பாடுபடுபவர். “”அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிபவரைப் போன்றவர் ஆவார்.” (புகாரி : 5355)

1435 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் மார்க்கம் ஏழை விதவைப் பெண்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளது. இறுதி இறைத் தூதருக்கு முன் வாழ்ந்த சமுதாயங்களிலுள்ள மதத் தலைவர்களே முன்னைய இறை வாழ்க்கை நெறிகளில் விதவைப் பெண்களைப் பாதிக்கும் செய்திகளை உள் நுழைத்தனர். இந்தப் பிழையான வேதத் தொகுப்புகளிலிருந்து விதவைப் பெண்களை பாதுகாக்க கருணை மிக்க அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் விதவைகளுக்கு வாழ்வளிக்கும் வாழ்க்கை முறையை முன்வைத்தான். இவ்வாறாக அல்லாஹ் வின் இஸ்லாம் மார்க்கம் பெண்களின் நல்வாழ்வுக்கு உரிய பாதுகாப்பை வழங்கியுள்ளது. அறிவுமிக்க மனித சமுதாயமே சத்திய இஸ்லாம் மார்க்கத்தை புறக்கணிக்கலாமா? சிந்தியுங்கள்.

விவகாரத்துச் செய்யப்பட்ட பெண்களைப் பாதுகாக்கும் மார்க்கம் இஸ்லாம்.
இஸ்லாம் மார்க்கத்தில் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக விவாகரத்துக்காக விண்ணப்பிக்க ஆணுக்கும், பெண்ணுக்கும், சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி கணவன் ஆண்மையில்லாது இருப்பின், அல்லது வேறு நியாயமான காரணங்களுக்காக கணவனோடு ஒரு பெண்ணுக்கு விவாகரத்துப் பெற்றுக் கொடுக்கும் உரிமை இஸ்லாத்தில் உண்டு. ஆனால் சில தீய ஆண்கள் பெண்களைத் துன்புறுத்தும் நோக்கில் தமது மனைவியை தான் விரும்பும் நேரத்தில் விவாகரத்துச் செய்து விட்டு, தான் விரும்பும் போது மீண்டும் அதே பெண்ணைத் திருமணம் செய்து கொள்வார்கள். இதுபோன்ற பெண்களை வதைக்கும் கேலிக்குரிய திருமணங்களைத் தவிர்ப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் இஸ்லாத்தில் உண்டு.

இஸ்லாத்தில் கணவன் மனைவிகளுக்கிடையில் பிணக்குகள் ஏற்பட்டு பிரிவினை ஏற்படும் என பயப்படும் சந்தர்ப்பத்தில், நிரந்தர விவாகரத்திற்கு முன் இரு வரும் சேர்ந்து வாழ்வதற்கான பல இணக்கப்பாடுகளுக்கான ஏற்பாடுகள் இஸ்லாத்தில் உண்டு. அவதானிக்கவும் (ஸஹீஹ் முஸ்லிம்: 2918 முதல் 2935 வரையிலான ஹதீஃத்களை). அத்துடன் விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மீண்டும் வேறு ஆண்களைத் திருமணம் செய்து கொள்ள முடியும்.

அவதானிக்குக:
இன்னும், பெண்களை நீங்கள் தலாக் (விவாகரத்து) செய்து, அவர்களும் தம் இத்தா தவணையைப் பூர்த்தி செய்து விட்டால், அவர்கள் தங்கள் விரும்பி ஏற்கும் கணவர்களை முறைப்படி திருமணம் செய்து கொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் யார் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளார்களோ, அவர்களுக்கு இதைக் கொண்டு உபதேசிக்கப்படுகின்றது. இ(தன்படி நடப்ப)து உங்க ளுக்கு நற்பண்பும், தூய்மையுமாகும். (இதன் நலன்களை) அல்லாஹ் அறிவான். நீங்கள் அறியமாட்டீர்கள்.
(அல்குர்ஆன் : 2:232)
பெண்கள், விவகாரத்தின் பின் பழைய கணவனால் துன்புறுத்தப்படாது இருக்க அல்லாஹ் இவ்வாறு கட்டளையிடுகிறான். அத்துடன் தலாக் செய்யப்பட்ட மனைவி தனது முன்னைய கணவனின் பிள்ளைக்கு பால் ஊட்டுவதற்காக அவளுக்கு ஜீவனோபாயம் தலாக் செய்யப்பட்ட கணவனால் வழங்கப்பட வேண்டும் என அல்குர்ஆன் வலியுறுத்துவதை அவதானியுங்கள்.

(தலாக் செய்யப்பட்ட மனைவியர், தம்) குழந்தைகளுக்குப் பூர்த்தியாகப் பாலூட்ட வேண்டுமென்று (தந்தை) விரும்பினால், தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிரப்பமாக இரண்டு ஆண்டுகள் பாலூட்டுதல் வேண்டும். பாலூட்டும் தாய்மார்க ளுக்கு (ஷரீயத்தின்) முறைப்படி உணவும், உடையும் கொடுத்து வருவது குழந்தையுடைய தகப்பன் மீது கடமையாகும். எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் (எதுவும் செய்ய) நிர்ப்பந்திக் கப்படமாட்டாது. தாயை அவளுடைய குழந்தையின் காரண மாகவோ துன்புறுத்தப்படமாட்டாது (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அதைப் பரிபாலிப்பது வாரிசுகள் கடமையாகும். இன்னும் (தாய் தந்தையர்) இருவரும் பரஸ்பரம் இணங்கி, ஆலோசித்து பாலூட்டுவதை நிறுத்த விரும்பினால், அது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது; தவிர ஒரு செவிலித் தாயைக் கொண்டு உங்கள் குழந்தைக்குப் பாலூட்ட விரும்பி னால் அதில் உங்களுக்கு ஒரு குற்றமுமில்லை. ஆனால், (அக்குழந்தையின் தாய்க்கு உங்களிடமிருந்து) சேரவேண்டி யதை முறைப்படி செலுத்திவிட வேண்டும் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதைப் பார்ப்பவனாக இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 2:233)

இறைநெறி நூல்கள் வழிதவறிய குருமார்களினால் சேதப்படுத்தப்பட்டதனால் பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. இந்தச் சந்தர்ப்பத்தில் பலவீனமான மனைவிமார்களை பாதுகாப்பதற்கான நிறைவான சட்டங்களை இறுதி நெறி நூலான அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் அருளினான். இந்த விஞ்ஞான வளர்ச்சி அடைந்த தற்போதைய உலகில் பல சமுதாயங்களில் சீதனம் என்ற பேரிலும், போலியான சடங்கு சம்பிரதாயங்கள் மூலமும் பெண்கள் பல துன்புறுத்தல் களுக்கு உட்படுவதைக் காணலாம். பாலியலுக்கும், ஆண்களின் தப்பான ஆசைகளுக்கும் வழிகாட்டும் போலியான பெண் உரிமை தேவைதானா? பெண்கள் உரிமைக்குப் போராடும் அமைப்புகளே சிந்தியுங்கள். பெண் உரிமைகள் எது என்பதை அல்குர்ஆனைப் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.

தாயின் அழைப்புக்கு முதலிடம் கொடுக்கும் மார்க்கம் இஸ்லாம்.
தம்மை ஈன்ற தாய் தந்தைக்கு நலம் நாடும்படி இஸ்லாம் மார்க்கம் வலியுறுத்துகின்றது. ஒரு மகன் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகப் பொறுத்தமானவர் தாய் ஆகும். பின்வரும் ஹதீஃத்களை அவதானியுங்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, “”அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையுடையவர் யார்?” என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், “”உன் தாய்” என்றார்கள். அவர், “”பிறகு யார்?” என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் “”உன் தாய்” என்றார்கள். அவர் “”பிறகு யார்?” என்றார். “”உன் தாய்” என்றார் கள். அவர் “”பிறகு யார்?” என்றார். அப்போது நபி(ஸல்) அவர் கள், பிறகு “”உன் தந்தை” என்றார்கள். (ஸஹீஹுல் புகாரி : 5971)

தாய்க்கு முதலிடம் கொடுக்கும் இஸ்லாம், பெற் றோர்களைப் பிள்ளைகள் மதித்து வாழவேண்டும் என வலியுறுத்தியுள்ளது. ஆனால் அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் செயல்களைச் செய்ய பெற்றோர் பணித்தால், அதற்குக் கட்டுப்படக் கூடாது எனவும் அல்லாஹ் பணித்துள் ளான். அவதானியுங்கள்.
நாம் மனிதனுக்குத் தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸியத்துச் செய்து போதித்தோம். அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்ட வளாக (கர்ப்பத்தில்) அவனைச் சுமந்தாள். இன்னும் அவனுக் குப் பால்குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன. ஆகவே, “”நீ எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து வாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கின்றது.”

ஆனால் நீ எது பற்றி(ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விரு வரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிப் பட வேண்டாம். ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விரு வருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக்கொள் (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக. பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும். நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன். (அல்குர்ஆன் : 31:14-15)

எந்த மனிதனும் தமது பெற்றோரை ஏசுவது, அவமதிப்பது பெரும் பாவமாகும். அல்லாஹ்வின் தூதர் பின்வருமாறு கூறினார்கள்.

“ஒரு மனிதர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது “”அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதர் தமது தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்” என்று கேட்கப்பட்டது. (அதற்கு) நபி(ஸல்) அவர்கள், “”ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார். (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்) என்றார்கள். (புகாரி: 5973)

பின்வரும் ஹதீஃதையும் அவதானியுங்கள்:
நபி(ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த காலத்தில் இணை வைப்பவராக இருந்த என் தாயார் தம் தந்தையுடன் (என்னைப் பார்க்க) வந்தார். நான், “”என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?” என்று நபி(ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், “”ஆம், நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்” என்று சொன்னார்கள். (புகாரி: 5979)

இவ்வாறு ஒவ்வொரு கோணத்திலும் அவதானிக்கும் போது பெண் குழந்தை, கன்னிப் பெண், மனைவி, தாய் இவ்வாறு பல பாத்திரங்களில் தோன்றும் பெண்களுக்குக் கூடிய பாதுகாப்பை அல்லாஹ்வின் தூய இஸ்லாம் மார்க்கம் வழங்குகின்றது. இதுவே யதார்த்த உண்மையாகும். அறிவு நிறைந்த மனித சமுதாயமே! நீங்கள் வழிபடும் மடமைகள் நிறைந்த பழமையான இறைநெறி நூல்களில் தீய மனிதர்களின் சுய எண்ணங்கள் உட்புகுந்துள்ளன. இதனால் அதன் தூய தன்மை மாசடைந்து விட்டது. ஆகவே அது மனிதக் கைச்சரக்குகள் உள் நுழைந்து வேதமாகியுள்ளன. இதனால் அல்லாஹ் அவ்வேதங்களை ரத்துச் செய்துவிட்டான். அதனைப் பின்பற்றுவோர் நரகையே அடைய முடியும். அதற்குப் பதிலாக அல்லாஹ் இறுதி இறைநெறி நூலாக அல்குர்ஆனை அருளியுள்ளான்.
இந்த இறை நெறிநூல் இன்று வரை அல்லாஹ் வினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆகவே அல்லாஹ்வின் அல்குர் ஆனையும், இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர் களையும் விசுவாசித்து, நேர்வழி பெறுங்கள்.

குடும்பத்தின் பொறுப்பை ஆண்களுக்கு முதன்மைப் படுத்தும் மார்க்கம் இஸ்லாம்:
ஆதி பிதா ஆதம்(அலை) அவர்கள் முதல் இன்று வரையில் ஒரு குடும்பத்தினை பராமரிக்கின்ற தலைமைப் பொறுப்பு குடும்பத் தலைவனைச் சார்ந்ததாக இருந்து வருகின்றது. உலகில் பொதுவாக எல்லாக் குடும்பங்களிலும் பொருளாதாரத்தைத் திரட்டுவதிலும், பாதுகாப்பு வழங்குவதிலும் பிரதான பங்கு ஆண்களைச் சார்ந்ததாக அமைகின்றது. அதே நிலையில் பெண்கள் தமது வீட்டையும், கணவனின் செல்வங்களையும், தமது பிள்ளைகளையும் பராமரித்து வருவர். சில சந்தர்ப்பங்களில் பெண்கள் கெளரவமான தொழில்களைச் செய்து கொள்கின்ற சந்தர்ப்பங்களும் உண்டு. இவ்வாறாக இறைவனால் அனுமதிக்கப்பட்ட தொழில்களைச் செய்வதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்கும் இஸ்லாம் அனுமதி வழங்கியிருக்கிறது. ஒரு குடும்ப வாழ்க்கையில், குடும்பத்தின் தலைவனாக ஆண் கடமைப் பொறுப்பை ஏற்க, பெண் கணவனின் சொத்துக்களையும், பிள்ளைகளையும் பராமரிப்பதில் தலைவியாக பங்கு வகிக்கிறாள். ஒரு குடும்பத்தின் தீர்மானங்களை எடுக்கையில் அறிவுமிக்க குடும்பத் தலைவியான பெண்களின் ஆலோசனைகளைப் பெற்று தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அவ்வாறு தீர்மானம் எடுக்கும்போது அல்லாஹ்வின் சட்டங்களுக்கு அமைவாகவே தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். இஸ்லாமிய வழி முறைக்கு முரணாகத் தீர்மானம் எடுப்பது பாவமாகும்.

(ஆண்கள் பெண் இருபாலரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துக்களிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிருவகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (அல்குர்ஆன் : 4:34)

அத்துடன் ஆணும், பெண்ணும் சம்பாதித்ததில் அவர்களுக்கு பங்கு உண்டு என அல்லாஹ் விளக்கிக் கூறுகிறான். அவதானியுங்கள்.

மேலும் எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரை விட அல்லாஹ் மேன்மையாக்கியிருக்கிறானோ, அதனை (அடைய வேண்டுமென்று) பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்த(வற்றில் உரிய) பங்குண்டு. எனவே அல்லாஹ்விடம் அவன் அருளைக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 4:32)

பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்ததில் பங்கு இருக்கின் றது. அத்துடன் ஆண்கள் குடும்ப வாழ்க்கைக்காக பிரதான மாக செலவு செய்பவராக இருக்கின்றார். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இறைவனின் திருப் பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால், அதுவும் அவருக்கு தர்மமாக மாறும். (புகாரி: 5351)

மேலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த தர்மம் ஆகும். உன் வீட்டாரிடமிருந்தே (உமது தர்மத்தைத்) தொடங்கு. (புகாரி : 5356)

நபி(ஸல்) அவர்கள் பனூ நழீர் குலத்தாரின் பேரீச்சந் தோட்டத்தை விற்றுத் தம் குடும்பத்தாருக்கு, அவர்களுடைய ஓர் ஆண்டுக்கான உணவை சேமித்து வைப்பவர்களாக இருந்தார்கள். (புகாரி:5357)

(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா(ரழி) அவர்கள், நபி(ஸல்) அவர்களிடம் “”அல்லாஹ்வின் தூதரே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என் குழந்தைகளுக்கும் போதுமான(பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்ட தைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் “”உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக் கொள்! என்று சொன்னார்கள். (புகாரி : 5364)

Previous post:

Next post: