எச்சரிக்கை!!!

in 2014 ஜனவரி,ததஜ

இப்னு ஸதக்கத்துல்லாஹ்

7:163. கடல் ஓரத்தில் இருந்த ஊரைப் பற்றி அவர்களிடம் கேட்பீராக! அவர்கள் சனிக்கிழமையில் வரம்பு மீறியதை நினைவூட்டு வீராக! சனிக்கிழமையன் று மீன்கள் நீரின் மேல்மட்டத்தில் அவர்கள் முன்னே வந்தன.சனிக்கிழமை அல்லா த நாட்களில் அவர்களிடம் வருவதில்லை. அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் இவ் வாறு அவர்க ளைச் சோதித்தோம்.7: 164. “அல்லாஹ் அழிக்கப் போகின்ற அல்லது க டுமையாகத் தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?” என் று அவர்களில் ஒரு சாரார் கூறினர். அதற்கவர்கள் “உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் போது) தப்பிப்பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)” எனக் கூறினர்.7: 165. கூறப் பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தவர்களை (மட்டு ம்) காப்பாற்றினோம். குற்றம் புரிந்து வந்ததால் அநீதி இழைத்தவர்களைக் கடுமையாக த் தண்டித்தோம்.7: 166. தடுக்கப்பட்டதை அவர்கள் மீறிய போது “இழிந்த குரங்குக ளாக ஆகி விடுங்கள்!” என்று அவர்களு க்குக் கூறினோம்.7: 167. கியாமத் நாள் வரை அவர்களுக்குக் கொடிய வேதனை அளிப்போரையே அவர்களுக்கு எதிராக நியமிப்பதாக உமது இறைவன் பிரகடனம் செய்ததை நினைவூட்டுவீராக!

உதாரணமாக,, மாநகராட்சி இருக்கிறது, அதிகாரிகள் இருக்கின்றனர். துப்புரவு தொழிலாளர்களும் இருக்கின்றனர்.வரி வசூலிக்கப்படுகிறது. சம்பளமும் கொடுக்கப்படுகிறது. ஆனால். தெருக்களில் கழிவு நீரோடுகிறது. வியாதி பரவுகிறது. இது போல அரசாங்கத்தின் சகல மட்டங்களிலும் நிர்வாகச்சீர்கேடு நிலவுகிறது. முறைப்படி போய் புகார் செய்தாலோ, மகஜர் கொடுத்து சரி செய்யச் சொன்னாலோ யாரும் கண்டு கொள்வதே கிடையாது. அதே சமயம்,,

டிஎன் டிஜே பெயரில் ஒரு எச்சரிக்கை போர்டு வைத்தாலோ, அல்லது, போராட்ட அறிவிப்பு செய்தாலோ, அல்லது போராட்டம் செய்தாலோ நிலைமை சரியாகி விடுகிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்? ஒன்று திரண்டு போராடினால் பலன் கிடைக்கிறதல்லவா!! நமக்கென்று ஒரு வலுவான இயக்கம், வீரியமிக்க போராட்டம் அவசியம் என்பதை இது உணர்த்துகிறதல்லவா?

இப்படித்தான் ஒரு டாக்டரிடம் ஒரு வேலையாக போனேன். அந்த டாக்டர் ஏறுக்குமாறாக பேசிக்கொண்டிருந்தார். அதற்கு நான் “நான் யார் தெரியுமா டிஎன் டிஜே காரனாக்கும் உன்னிடம் எப்படி வாங்க வேண்டும் என்று எனக்கு தெரியும்” என்று சொன்னதும் வழிக்கு வந்து விட்டார். இப்படி அவனவன் டிஎன்டிஜே என்றாலே நடுங்குகிறான். நீ பெருசா பேச வந்துட்டே.—– ஒரு டிஎன்டிஜே சகோதரரின் கூற்று இவை.

இவர்கள் குர்ஆனைப் படிப்பவர்களாக, விளங்கி படிப்பவர்களாக இருந்திருந்தால் இப்படி பிதற்ற மாட்டார்கள். இவர்களுடைய அண்ணன் சொல்வது போல் இவர்கள் “விளங்காதவர்கள்” என்பதைத்தான் இது காட்டுகிறது.

கடல் என்றெருந்தால் மீன் இருக்கத்தான் செய்யும். இரவிலும் இருக்கும் பகலிலும் இருக்கும். காலையிலும் இருக்கும். மாலையிலும் இருக்கும். நடு பகலிலும் இருக்கும். நடு இரவிலும் இருக்கும். எல்லாக் கிழமைகளிலும் இருக்கும் எந்த நாளில் போய் வலை வீசினாலும். எந்த நேரத்தில் போய் வலை வீசினாலும் மீன் கிடைக்கத்தான் செய்யும். இதுதான் இறைவன் ஏற்படுத்திய விதி இயல்பு.

இந்த இயல்புக்கு மாறாக சனிக்கிழமைகளில் கைக்கெட்டும் தூரத்தில் துள்ளி விளையாடும் மீன்கள் மற்ற நாட்களில் வலை வீசினாலும் சிக்கு வதில்லை.

இந்த சப்ஜெக்டையும், போராட்ட சப்ஜெக்டையும் இவர்கள் ஒப்பிட்டு பார்க்கட்டும். உண்மை விளங்கிவிடும். கடற்கரை வாசிகள் செய்த குற்றத்துக்காக சனிக்கிழமை மீன் பிடிப்பதை ஹராமாக்கிய இறைவன் சனிக்கிழமை மட்டும் மீன்கள் அவர்களின் கண்ணெதிரே துள்ளி விளையாடச் செய்து சனிக்கிழமை மீன் பிடித்தால்தான் உண்டு என்ற நிலையை உண்டாக்கி வரம்பு மீறச்செய்தான்.. அதே போல் இவர்களுக்கு போராட்டத்தை ஹராமாக்கிய இறைவன் போராட்டம் நடத்தினால்தான் பிரச்சினை தீரும்.என்றொரு நிலையை உண்டாக்கி வரம்பு மீறச் செய்து விட்டான். இதன் காரணம் என்ன? இவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

1986 லிருந்து இந்த தமிழ் முஸ்லிம் மக்களிடத்தில் குர்ஆன் ஹதீஸ் அறிவை வழங்க ஆரம்பித்தான் இறைவன். இந்த அறிவைப் பெற்ற இந்த மக்களிடத்தில் இறைவன் எதிர்பார்த்தது இதுதான்.

மக்காவில் அடிபட்டு உதைபட்டு மிதிபட்டு பொறுத்துக்கொண்டு சகித்துக் கொண்டு, அபிஷீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்து போனவர்கள் யாரிடமும் கையேந்தாத ஒரு பண்பட்ட வாழ்க்கை வாழ்ந்து அந்த நாட்டு மன்னரே மனம் மாறும்படி செய்தார்களே அவர்களின் அந்த அணுகுமுறையை எதிர்பார்த்தான். இறைவனின் அந்த எதிர்பார்ப்பை இவர்கள் பூர்த்தி செய்யவில்லை.

மக்காவில் அடிபட்டு உதைபட்டு மிதிபட்டு பொறுத்துக்கொண்டு சகித்துக் கொண்டு, மதினாவுக்கு ஹிஜ்ரத் செய்து போனவர்கள் பள்ளிவாசலை விட்டுக்கொடுத்ததன் வாயிலாக மக்காவில் இஸ்லாமிய ஆட்சி மலர அடித்தளம் அமைத்தார்களே அவர்களின் அந்த அணுகுமுறையை எதிர்பார்த்தான் இறைவனின் அந்த எதிர்பார்ப்பையும் இவர்கள் பூர்த்தி செய்யவில்லை.

விளைவு, இறைவன் இவர்களுக்கு போராட்டசனி பிடிக்க வைத்து விட்டான்

அவ்வளவுதான்.

நபி(ஸல்) அவர்கள் 20 வருடங்களில் இறைவனின் எதிர்பார்ப்பை பூர்த்தி விட்டார்கள். ஆனால் இங்கே 30 வருடங்களை நெருங்குகிறோம்.இன்னும் இவர்கள் அந்த பாதையில் பயணத்தை ஆரம்பிக்கவே இல்லை. எனவே,

என்னருமை சகோதரர்களே!! இன்னும் குடிமுழ்கி விடவில்லை. போராட்டசனியை விட்டு விட்டு இறைவனின் எதிபார்ப்பை பூர்த்தி செய்ய முன் வாருங்கள். அல்லது சனிக்கிழமையை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்

அவ்வளவுதான் சொல்ல முடியும்.

Previous post:

Next post: