பீ.ஜையின் அன்றைய நிலை! இன்றைய நிலை?
இஸ்லாம் ஆளாத ஒரு நாட்டில் வாழ்ந்தால் நம் மீது என்ன கடமை? என்றால் இரண்டு விதமாக மார்க்கம் சொல்கிறது. அந்த நாட்டில் உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிந்தால் பேசாமல் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான். உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிகிறது? எப்படி வாழ முடிகிறது? நீ பள்ளிவாசல் கட்ட முடிகிறது, நீ தொழ முடிகிறது. நான் ஒரு முஸ்லிம் என்று உன்னால் சொல்லிக் கொள்ள முடிகிறது. இஸ்லாத்தைப் பற்றி பேச முடிகிறது. அப்படியிருக்குமேயானால் பேசாமல் நீ இருந்து கொள். அங்கே எந்தவொரு வம்பும் செய்யக்கூடாது.
அதைத்தானே முஸ்லிம் ஆட்சி செய்யும் போதும் செய்யப் போகிறாய். ஏற்கனவே முஸ்லிம் ஆட்சியாளர் இருந்தார்களே. பெயர் தாங்கி ஆட்சியாளர்கள்; அவர்கள் இருந்தால் என்ன நடக்கும்? இது தான் நடக்கும்? தொழுகையை மட்டும் நிலை நாட்டுவார்கள். அவர்கள் ´ஷிர்க் வைக்காமல் இருப்பார்கள் அவ்வளவு தான். மற்றபடி அவர்களும் இஸ்லாமிய ஆட்சியை நடத்தமாட்டார்களே. அவர்களும் லஞ்சம் வாங்குவார்களே, அவர்களும் அநியாயம் செய்வார்களே, உன் சொத்தை பறித்தாலும், உன் ஹக்கை பறித்தாலும், உன் முதுகெலும்பை முறித்தாலும் அவர்களை எதிர்த்து விடாதே. அவர்களின் கீழேயே இரு என்று ரசூல்(ஸல்) இருக்கச் சொல்லி விட்டார்களல்லவா? எனவே, ஒரு நாட்டில் உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிந்தால் பேசாமல் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டியது தான். அங்கே எந்தவொரு வம்பும் செய்யக்கூடாது.
இதை எதிலிருந்து நாம் விளங்குகிறோம். இது எல்லாருக்கும் தெரிந்த ஒரு சம்பவம். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் இருந்தார்கள். மக்காவில் எப்படி இருந்தார்கள்? தங்களை முஸ்லிம் என்று யாரும் சொல்லிக் கொள்ள முடியாது; அப்படி ஒரு நிலைமை. அல்லாஹ்வை மட்டும் வணங்கும் கஃபத்துல்லாவில் போய் தொழுதாலும் அடிப்பார்கள். அப்படியொரு நிலைமை. தங்களை இஸ்லாத்தில் உள்ள ஒரு ஆள் என்று கூட காட்டிக்கொள்ளக் கூட முடியாத நிலை. பயந்து பயந்து ரகசியமாகவே தொழுகை நடத்தக்கூடிய ஊரில் அவர்கள் வாழ்கிறார்கள். அப்படியிருக்கும்போது முஸ்லிம் என்று யாராவது ஒருவருக்கு தெரிந்து விட்டது என்றால் இழுத்து போட்டு அடிப்பார்கள், வெட்டுவார்கள், கொல்லுவார்கள், சவுக்கால் அடிப்பார்கள், சுடு மணலில் போடுவார்கள். அம்பை எய்து குத்துவார்கள். தூக்கு மேடையில் ஏத்துவார்கள். ஊரை விட்டு ஒதுக்கி வைத்து சமூக பகிஷ்காரம் செய்வார்கள். இப்படியாக காட்டிக் கொள்ள கூட முடியாத நிலைமை. நபித் தோழர்களால் துன்பம் தாளமுடியாமல் ரசூல்(ஸல்) அவர்களிடம் முறையிடுகிறார்கள்; ஸஹாபாக்கள் முறையிட்டவுடனே (பொறுமையா இருங்க பொறுமையா இருங்க) என்று நபி(ஸல்) சொல்கிறார்கள். எவ்வளவுதான் பொறுமையாக இருப்பார்கள். ஒரு அளவுக்குமேல் அவர்களால் தாங்க முடியாமல் போனதும் சஹாபாக்களுக்கு ரசூல்(ஸல்) அனுமதி கொடுக்கிறார்கள். நீங்கள் எல்லோரும் ஹிஜ்ரத் செய்து விடுங்கள் என்று சொல்கிறார்கள். அவர்கள் இருந்து கொண்டு தோழர்களை அனுப்புகிறார்கள்.
கஷ்டத்தை யாருக்கெல்லாம் தாங்க முடியவில்லையோ அவர்களை எல்லாம் அனுப்புகிறார்கள். எங்கே? இஸ்லாமிய நாட்டுக்கா? இஸ்லாமிய நாடு என்று ஏதாவது இருந்ததா? இல்லையே. பக்கத்துல அபிஷினியாதான் இருந்தது. அங்கே போனவர்கள் மன்னரிடம் நாங்கள் எங்கள் கொள்கைப்படி வாழ்வதற்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்கிறார்கள். தாங்கள் தொழுது கொள்ளவும் தாங்கள் மார்க்கப்படி நடந்து கொள்ளவும் அனுமதி கேட்கிறார்கள். நஜ்ஜாஷி´ மன்னர் சரி என்கிறார். அபிஷினியா இஸ்லாமிய நாடு இல்லை. கிறித்தவ மதபீடங்களின் அடிப்படையில் அங்கு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. நஜ்ஜாஷி´ ஒரு கிறித்தவ சமுதாயத்தை சேர்ந்த மன்னர். இவர்கள் அங்கு அடைக்கலம்தான் வாங்கினார்கள். அந்த ஆட்சியிலே எதற்கு மாத்திரம் அனுமதி இருந்தது. தொழுது கொள்ளலாம், நோன்பு வைத்து கொள்ளலாம் கூடிக்கொள்ளலாம். மசூரா செய்து கொள்ளலாம். அவ்வளவுக்குத்தான் அங்கு அனுமதி இருந்தது. அப்படியானால் ரசூல்(ஸல்) அவர்கள் எதை இதில் அனுமதிக்கிறார்கள் என்றால், இஸ்லாம் ஆளாத ஒரு நாட்டில் உன்னால் முஸ்லிமாக வாழ முடியுமென்றால் பேசாமல் போய் வாழ்ந்து கொள். மக்காவைப் போன்ற இடத்தில்தான் நீ வாழக்கூடாது. அபிசீனியா போன்ற இடமாக இருந்தால் பேசாம போய் இருந்து கொள் என்பதுதான் நபி(ஸல்) அவர்களின் அனுமதி, கட்டளை.
மக்காவை போன்ற இடமாக இருந்தால் உங்களுடைய கடமை ஊரை விட்டு வெளியேறி விட வேண்டும். அடைக்கலம் கிடைக்கிற இடத்துக்கு போய்விட வேண்டும்.நாம் வாழ்கிற இந்தியாவாகட்டும் அல்லது வேறு பல நாடுகளாகட்டும், இன்றைய நவீன உலகில் எந்த நாடும் அபிஷினியாதான். இந்த இருபதாம் நூற்றாண்டில் மனித உரிமைகள் அமைக்கப்பட்டிருக்கிற இந்த உலகத்தில் சைனாவை மட்டும் விதிவிலக்காக வைத்திருந்தோம். இன்றைக்கு சைனா உட்பட உலகத்தில் உள்ள எல்லா நாடுகளும் அபிUனியா நிலையில்தான் இருக்கிறது.
இந்தியாவுல நாம இருக்கிறோம். இந்த இடத்துல நாம என்ன செய்கிறோம்? மார்க்கத்தை பேசுகிறோம். சவுதியில் கூட நீங்க நினைச்ச இடத்துல பேச இயலாது. இங்கே பேசுகிறோம். ஒலி பெருக்கியை வைத்து பேசுகிறோம். மக்களுக்கு மார்க்கத்தை சொல்லுகிறோம். பொது மேடை போட்டு சொல்லு கிறோம். பள்ளிவாசலை கட்டுகிறோம்.
இப்படி உலகத்துல எங்கேயும் இல்லாத அளவுக்கு இங்கே நீங்கள் தொழுகிறீர்கள், நோன்பு வைக்கிறீர்கள், ஜகாத்து கொடுக்கிறீர்கள். அவ்வளவு ஏன்? பள்ளிவாசலில் நோன்பு கஞ்சி ஆக்குவதற்கு 18 ரூபாய் அரிசியை 3 ரூபாய்க்கு தருகிறார்கள். அன்று ரசூல்(ஸல்)வை ஹஜ் செய்ய விடமாட்டேன் என்றார்கள். இவர்கள் ஹஜ்ஜுக்கு போக மான்யம் தருகிறார்கள். முஸ்லிம்கள் இருக்கிற தெருவில அவர்கள் ஊர்வலம் வருகிறார்கள். வம்புக்கு வருகிறார்கள். அவர்களை விட மறுக்கிறார்கள். இது என்ன முஸ்லிம் நாடா? எல்லாம் எங்க நாடு என்று அவர்கள் சொல்ல அதற்கு இவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும் என்று சொல்லி அனுமதி மறுக்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்கிறதல்லவா?
எனவே, ஒரு நாட்டில் உன் அளவுக்கு நீ முஸ்லிமாக வாழ முடிந்தால் பேசாமல் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டியது தான். அங்கே எந்தவொரு வம்பும் செய்யக்கூடாது.
மேலதிக விளக்கம் என்று நாம் எதையும் எழுதத் தேவையில்லாத அளவுக்கு அவரே (பீ.ஜை) தெளிவாக, விளக்கமாகப் பேசியிருக்கிறார். இதெல்லாம் அவரையறியாமலேயே அவரது வாயாலேயே அல்லாஹ் வெளியாக்கிய உண்மையாகும். உண்மை யிலேயே அல்லாஹ்வின் அருள் பெற்று ஈருலகிலும் வெற்றி பெற விரும்புபவர்கள் சுதாரித்துக் கொள்ளட்டும்.
(அவ்வூரிலிருந்த நன்மக்களில் ஒரு சாரார் வரம்பு மீறிக் கொண்டிருந்தவர்களுக்கு அறிவுரை சொன்ன போது) அவர்களிலிருந்த மற்றொரு சாரார், “”அல்லாஹ் யாரை அழிக்கவோ அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?” என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நன்மக்கள்); “”எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஓரிருவராவது தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள். (7:164)