ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு!

in 2014 செப்டம்பர்,தலையங்கம்,பொதுவானவை

இன்று உலகளாவிய அளவில் சுமார் 150 கோடி முஸ்லிம்கள் இருக்கிறார்கள். சுமார் 50 நாடுகளில் முஸ்லிம்களே ஆட்சியில் அமர்ந்துள்ளனர். ஆயினும் எந்த நாட்டிலும் முஸ்லிம்கள் அமைதியான, நிம்மதியான, சந்தோசமான வாழ்க்கை வாழ்வ தாகத் தெரியவில்லை. முஸ்லிம்கள் பெரும் பான்மையினராக வாழும் நாடுகளிலும் சரி, சிறு பான்மையினராக வாழும் நாடுகளிலும் சரி முஸ்லிம்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். ஆனால் அல்லாஹ் 3:138,139 இறைவாக்குகளில் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்.

இது மனிதர்களுக்கு விளக்கமாகவும், நேர்வழி காட்டியாகவும், பயபக்தியுடையோருக்கு நற் போதனையாகவும் இருக்கிறது. எனவே, நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள். கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நீங்கள் தான் மிக்க மேலானவர்கள். (3:138,139) மேலும் 24:55 இறைவாக்கில் அல்லாஹ் கூறுவதை அதிகக் கவனத்துடன் மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள்.

உங்களில் எவர் நம்பிக்கை கொண்டு நற்செயல் கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காகப் பொருந்திக்கொண்ட அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்காக நிச்சயமாக நிலைப்படுத்துவதாக வும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றிவிடுவதாகவும் அல்லாஹ் வாக்களிக்கிறான். “”அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணை வைக்காது அவர்கள் எனக்கே அடிபணிவார்கள். (24:55)

நம்பிக்கையாளர்களைக் காப்பாற்றுவது (அல்லாஹ்வாகிய) நம்மீது கடமை (10:103).
நம்பிக்கையாளர்களுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் கடமை (30:47)
நம்பிக்கையாளர்களை நிச்சயம் அல்லாஹ் பாதுகாக்கிறான் (22:38)
இந்தச் சமூகத்திற்கு என்ன நேர்ந்தது? எந்த ஒரு செய்தியையும் புரிந்து கொள்ளத் தயாரில்லையே!
(4:78)
நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதி மாறமாட்டான் (3:9,194, 13:31, 39:20)

இவ்வளவு தெள்ளத் தெளிவாக நேரடியாக, நெத்தியடியாக அல்லாஹ் உறுதி அளித்து வாக்களித்திருந்தும், அல்லாஹ் நிச்சயமாக வாக்கு மாற மாட்டான் என்று வாக்களித்திருந்தும் இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் இந்த பரிதாப நிலை ஏன்? ஆம்! அல்லாஹ் யாருக்கு இந்த வாக்குறுதிகள் உண்டு என்று அறிவித்துள்ளது போல் உண்மையான முஃமின்களாக இன்றைய முஸ்லிம்கள் இல்லவே இல்லை என்பதுதான் எதார்த்த நிலை.

49:14 இறைவாக்குக் கூறுவது போல் பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ளத்தில் ஈமான் நுழையாத பெயர்தாங்கி முஸ்லிம்களாக இருக்கிறார்கள். 12:106 இறைவாக்குக் கூறுவது போல் பெரும் பான்மையான முஸ்லிம்கள் இணை வைக்காத நிலையில் நம்பிக்கைக் கொள்ளவில்லை. பெரும் பான்மையான முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்கள் என்பது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறதா? மவ்லவிகளை நம்பி அவர்கள் சொல்வதை அப்படியே நம்பிப் பின்பற்றுகிறவர்கள் அனைவரும் இறைவனுக்கு இணை வைப்பவர்களே! இந்த உண்மையை 2:186, 7:3, 9:31, 18:102-106, 33:36,66-68, 50:16, 56:85 குர்ஆன் வசனங்களை நீங்களே நேரடியாகப் படித்து விளங்குங்கள்.

நாளை மறுமையில் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் முறையிடுவதை 25:30 இறைவாக்கு நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் எடுத்துரைக்கிறது. அது வருமாறு:

“”என் இரட்சகனே! நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனைப் புறக்கணிக்கப்பட்டதாக்கி விட்டார்கள்” எனத் தூதர் கூறுவார். (25:30)

முஸ்லிம் சமுதாயம் இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனை எந்தளவு புறக்கணித்துவிட்டு, தங்களை வழிகேட்டில் இட்டுச் செல்லும் இந்த மவ்லவிகளை நம்பி அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்வதாக இருந்தால் நபி(ஸல்) அவர்கள் இப்படி யயாரு கடும் குற்றச்சாட்டை இந்த முஸ்லிம் சமுதாயத்தின்மீது வைப்பார்கள் என்பதை சற்று நிதானமாகச் சிந்தியுங்கள். ஏன் இந்த முஸ்லிம் சமுதாயம் இன்று வீழ்ச்சியின் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது என்பதை உங்களாலும் எளிதாக விளங்க முடியும்.

இந்த உலகில் மட்டுமல்ல. நாளை மறுமையிலும் நிரந்தரமாக நரகத்தில் எறியப்பட்டு, அங்கும் பெருமை பேசும் மவ்லவிகளும் அவர்களைக் கண் மூடிப் பின்பற்றிய முஸ்லிம்களும் ஒருவரை ஒருவர் சபித்து ஒப்பாரி வைப்பதைக் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து உணர்பவர்களே நரகை விட்டுத் தப்ப முடியும். அந்த வசனங்கள் வருமாறு : 7:35-41, 33:66-68, 34:31-33, 37:22-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45.

இவற்றில் சில வசனங்களில் பெருமையடிப்பவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டிருப்பவர்கள், நாங்கள் தான் மதரஸாக்களில் படித்துப் பட்டம் பெற்றவர்கள், ஆலிம்கள், அல்லாமாக்கள், நீங்கள் எல்லாம் அவாம்கள்; நீங்கள் மொழி பெயர்ப்புகளைப் பார்த்து மார்க்கத்தை விளங்க முடியாது என்று பெருமை பேசும் இம்மதகுருமார்களே. இப்படி பெருமை பேசும் இம்மவ்லவிகள் எந்தளவு வழிகேடர்கள் என்பதை பெருமை பேசுபவர்கள் பற்றிக் கூறும் இறைவாக்குகள் உணர்த்துகின்றன.

2:34, 4:36, 7:36-40,146,206, 11:10, 16:22,23,49, 17:37, 21:19, 25:63, 28:83, 31:7,18, 32:15, 35:10, 39:49,72, 40:35,47,48,56,60, 45:37, 49:13, 57:23, 59:23, 74:1-3, 34:31-33.

இந்த இறைவாக்குகளை அல்லாஹ் 29:69ல் கூறியிருப்பது போல் பெரும் முயற்சியாக நேரம் ஒதுக்கி குர்ஆனை எடுத்து ஒவ்வொரு இறைவாக்கைப் படித்து உணர்கிறவர்கள், குறிப்பாக 7:146 இறைவாக்கை மீண்டும் மீண்டும் படித்து உள்வாங்கிக் கொள்கிறவர்கள் பெருமை பேசும் இம்மவ்லவிகள் எத்தரத்தவர்கள், எந்த அளவு வழிகேடர்கள், அல்லாஹ்வாலேயே குர்ஆன் வசனங்களை விட்டும் திருப்பப்படுகிறவர்கள், குர்ஆனின் வசனங்களை நேரடியாகக் காட்டினாலும் நம்பாமல் சுய விளக்கம் கொடுப்பவர்கள், நேர்வழியை மறுத்துக் கோணல் வழிகளையே நேர்வழியாக ஏற்று தாமும் வழிகெட்டு, தங்களை நம்பியுள்ள அப்பாவிகளையும் வழிகெடுத்து நரகில் தள்ளுவார்கள் என்பதை அறிய முடியும்.

இக்கொடிய மாபாதக இழிநிலை மாறி மீண்டும் இச்சமுதாயம் 3:139 இறைவாக்குக் கூறுவது போல் உன்னத சமுதாயமாக உயர வேண்டுமா? 24:55 இறைவாக்குக் கூறுவது போல் முஸ்லிம்களிடம் இஸ்லாமிய ஆட்சியை அல்லாஹ் தரவேண்டுமா? அதற்குரிய ஒரே வழி வேறு வழியே இல்லை. அந்த வழி எந்த வழி? முஸ்லிம்களில் முழுச்சமுதாயமும் அல்ல; அல்லாஹ் நாடும் கணிசமானவர்கள் 2:208 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றாமல் முழுமையாக இஸ்லா மில் நுழைந்து விடவேண்டும். 3:102 இறைவாக்குக் கூறுவது போல் எந்தளவு அல்லாஹ்வுக்கு பயபக்தி யுடன் நடக்க வேண்டுமோ அந்தளவு பயபக்தியுடன் நடந்து முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்ற நிலையிலல்லாமல் ஷிஆ, சுன்னத் ஜமாஅத், ஜாக், ததஜ, இதஜ, அஹ்ல ஹதீஸ், அஹ்ல குர்ஆன், அஹ்மதி போன்ற நிலையில் மரணிக்கக் கூடாது.

3:103 இறைவாக்குக் கூறுது போல், அல்லாஹ் இறக்கியருளிய அவனது கயிறான குர்ஆனை ஒன்று பட்ட ஒரே ஜமாஅத்தாகப் பற்றிப் பிடிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஒருபோதும் பிரியக் கூடாது. 22:78 இறைவாக்கு கூறுவது போல் அல்லாஹ் இந்த குர்ஆனிலும், இதற்கு முன்னுண்டான நெறிநூல்களிலும் பெயரிட்டுள்ளதாகக் கூறும் “”முஸ்லிமீன்” என்ற பெயரிலும், நபிமார்கள் செய்த மார்க்கப் பணியை ஒன்றுவிடாமல் செய்கிறவர்களும் தங்களை “”மினல் முஸ்லிமீன்” -முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று மட்டுமே சொல்ல வேண்டும் என்பதை 41:33 இறைவாக்குக் கட்டியம் கூறுகிறதை ஏற்று நடக்க வேண்டும்.

நபிமார்கள் அனைவரும் தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று மட்டுமே கூறியிருக்கிறார்கள் என்று பல இறைவாக்குகள் கூறுவதைப் படித்து உணர வேண்டும். இறுதியாக நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தி நமக்காக விட்டுச் சென்ற ஜமாஅத்தில் முஸ்லிமீனில் மட்டுமே இணைந்து ஒரே ஜமாஅத்தாக ஒரே தலைமையில் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும்.

அல்லாஹ் பெயரிட்டு, நபி(ஸல்) அதையே உறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்திய ஜமாஅத்துல் முஸ்லிமீனை அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என நாக்கூசாமல் கூறும் இந்த மவ்லவிகள் பைஹகி 1908 ஹதீஃத் கூறுவது போல் இந்த வானத்தின் கீழிருக்கும் ஆகக் கேடுகெட்ட ஜன்மங்கள், அவர்களிடம் தான் இப்படிப்பட்ட வழிகேடுகள் கோழி குஞ்சு பொரிப்பது போல் பொரித்து வெளிவரும். அவர்கள் பெரும் வழிகேடர்கள். சமுதாயம் ஒன்று படுவதைத் தடுக்கும் தாஃகூத்களான மனித ஷைத் தான்கள் என்பதை விளங்கி அவர்களின் சூன்ய வசீகர ஷைத்தானிய உடும்புப் பிடியிலிருந்து விடுபட வேண்டும்.

அவர்கள் வழிகேடர்கள்தான் என்பதை நீங்கள் எளிதாக விளங்க அவர்களிடமே அத்தாட்சி இருக்கிறது. அவர்கள் 1988ல் கற்பனை செய்த ஜாக்கும், 2005ல் கற்பனை செய்த ததஜவும் நேர்வழி ஜமாஅத்கள், அவற்றை அப்படியே அரபு மொழியில் விளம் பரப்படுத்த வேண்டும். அதற்கு மாறாக அல்லாஹ் பெயரிட்ட “முஸ்லிமீனையும்’ , நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய “”ஜமாஅத்தில் முஸ்லிமீனையும்” தமிழில் பெயர்க்க வேண்டும், அது அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என சிறிதும் இறையச்சமின்றி தங்களின் அற்ப உலகியல் ஆதாயங்களுக்காக முஸ்லிமீன் என்ற நிலையில் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்று இந்தச் சமுதாயம் ஒன்றுபடுவதைத் தடுக்கும் இம்மவ்லவிகள் பைஹகி 1908 ஹதீஃத் கூறுவது போல் இந்த வானத்தின் கீழிருக்கும் ஆடு, மாடுகளை விடக் கேடுகெட்ட படைப்புத்தானே. தாஃகூத்களான மனித ஷைத்தான்கள்தானே.

ஆயினும் 32:13, 18:118,119 இன்னும் பல இறை வாக்குகள் கூறுவது போல் பெருங்கொண்டக் கூட்டம் அவர்கள் பின்னால் அணி வகுத்து அவர்க ளுக்கு பெருங்கொண்ட உலகியல் ஆதாயங்களை பெற்றுத்தரத்தான் செய்வார்கள். இதுதான் அவர் களது அசல் குறிக்கோள். ஆயினும் நாளை நரகை நிரப்புபவர்கள் அவர்களே என்பதையே மேலே கண்ட இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. “”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே” இதை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்வார்களா?

Previous post:

Next post: