ஜனநாயகச் சாபக்கேடு!

in 2015 ஜனவரி,தலையங்கம்

பால்வழி  (Milky Way) மண்டலத்திலுள்ள அனைத்துக் கோள்களையும் படைத்து, அவற்றில் மிகவும் சிறிய பூமியையும் படைத்து, அதில் கோடிக்கணக்கான ஜீவராசிகளையும் ஒரே இறைவன் படைத்துள்ளான். அவற்றில் ஓரறிவு, ஈரறிவு என ஐயறிவு வரை எண் ணற்ற ஜீவராசிகளைப் படைத்துள்ளான். அவற்றில் ஆறறிவுப் படைப்பாக ஜின்னை, மனிதனை மட்டுமே படைத்துள்ளான் இறைவன். பூமியில் படைக்கப் பட்ட அனைத்து ஜீவராசிகளும் இவ்வுலகோடு அழிக்கப்பட்டுப் போகும் ஜின், மனிதர்களைத் தவிர.

மனிதர்களும், மனிதக் கண்களுக்குப் புலப்படாத ஜின்களும் மட்டுமே இவ்வுலகில் சோதனை வாழ்க்கை, பரீட்சை வாழ்க்கைக்காகப் படைக்கப்பட்டுள்ளனர். இதை இறுதி வாழ்க்கை வழிகாட்டி நெறிநூல் அல்குர் ஆனின் 67:2, 51:56 வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. அவர்களிலும் அதிகமானவர்கள் நேர்வழியில்-சத்தியப் பாதையில் இருக்கமாட்டார்கள் என்று 32:13, 11:118, 119 வசனங்களிலும், சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகான மக்கள் (அக்ஃதரன்னாஸ்) அறிய மாட்டார்கள், விளங்க மாட்டார்கள், நம்பிக்கை கொள்ள மாட்டார்கள், நன்றி செலுத்த மாட்டார்கள் என்றும் இறைவன் திட்டமாகக் கூறியுள்ளான்.

ஆயினும் மனிதன் 17:85 இறைவாக்குக் கூறுவது போல் மிகமிக அற்பமான அறிவைப் பெற்றிருப்பதால் பெரும்பாலான மக்கள் செல்வதுதான் நேர்வழி என்ற மாயையில் சிக்குகிறான். இதற்கு இறைவனுடன் நேரடித் தொடர்புடனிருந்த நபிமார்களும் விதிவிலக்கில்லை என்பதை 5:100, 6:116 இறைவாக்குகள் கொண்டும் இன்னும் சில இறைவாக்குகள் கொண்டும் எச்சரித் திருப்பது உறுதிப்படுத்துகிறது. இன்று உலக முழுவ தும் நீக்கமற நிறைந்து காணப்படும் குடி, சூது, விபச் சாரம், நிர்வாண ஆட்டம், பாட்டம், குத்தாட்டம், நடிகர், நடிகைகளைப் பின்பற்றும் இழுக்கம் நிறைந்த நடைமுறைகள் இவை அனைத்தும் பெரும்பான்மை யினர் விரும்பி வரவேற்கிறார்கள், மக்களிடையே அமோக வரவேற்பிருக்கிறது என்ற அடிப்படையிலேயே வழிகேடுகளே நேர்வழியாக மக்களிடையே பரவி வருகின்றன.
அதே வரிசையில்தான் ஜனநாயக ஆட்சி முறையும் மக்களால் விரும்பி வரவேற்கப்படுகிறது. ஆம்! 6:116 இறைவாக்குக் கூறுவது போல் அதிகமான மக்கள் விரும்பி ஏற்கும் கோணல் வழிகளான ஆதாரமற்ற வெறும் யூகங்களும், கற்பனைக் கட்டுக்கதைகளும் தான் மக்களிடையே வரவேற்பைப் பெறுகின்றன. இவ்வாறே இந்த ஜனநாயக ஆட்சி முறையும் வெறும் கற்பனை மட்டும்தான். யூகங்கள் மட்டும் தான். இன்று நடைமுறையிலிருப்பது ஜனநாயகமல்ல; போலி ஜனநாயகம், பணநாயகம், குண்டர்நாயகம் என்பதை நடுநிலையான சுயசிந்தனையுள்ள, போலி பகுத்தறி வாளர்கள் அல்ல, ஐயறிவாளர்கள் அல்ல, செமி பகுத்தறிவாளர்கள், அல்ல, உண்மையான ஆறறிவு படைத்த பகுத்தறிவாளர்கள் எற்கவே செய்வார்கள்.

பெரும்பாலான மக்களின் கருத்துகள் தவறானவை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த மக்கள் தங்களின் சொந்தக் கருத்துக்களையா வெளிப்படுத்து கிறார்கள். வேட்பாளர்கள் வானத்தை வில்லாக வளைத்து விடுவேன், மணலைக் கயிறாகத் திரித்து விடுவேன் என்று அவர்களால் சாதிக்க முடியாத காரியங்களைச் சொல்லி அல்லவா பெருங்கொண்ட மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள். உதாரணமாகப் பதவியேற்ற 100 நாட்களில் வெளிநாடுகளில் ஆட்சியாளர்கள், செல்வந்தர்கள், பண முதலைகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு அரசு கருவூலத்தில் சேர்த்து விடுவோம் என்ற வாய் சவடாலைச் சொல்லலாம். சாதிக்க முடியாததை சாதிப்பதாகச் சொல்லி மக்களை வஞ்சிப்பதுதான் ஜனநாயக ஆட்சியா?

இது மட்டுமா? ஊடகங்களுக்குப் பல்லாயிரம் கோடிகளைக் கையூட்டாகக் கொடுத்துத் தங்களைப் பற்றி ஆகா ஓகோ என வானளாவப் புகழ வைத்து, தங்கள் கட்சிதான் ஆட்சியமைக்கப் போகிறது என்ற பொய்யான கருத்துக் கணிப்புகளைக் கூறி, தோற்கும் கட்சிக்கு வாக்களிக்கக் கூடாது, வெற்றி பெறும் கட்சிக்கே வாக்களிக்க வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையில் இருக்கும் பெருங்கொண்ட மக்களின் வாக்கைத் திருட்டுத்தனமாகப் பெறுவது ஜனநாயகமா?

இப்படிப் பல்லாயிரம் கோடிகளை லஞ்சகமாகக் கொடுத்து அப்பட்டமான தார்ப்பாயில் வடித்தெடுத்த பொய்களை மக்களிடையே மீண்டும் மீண்டும் பரப்பியும், அவை போதாதென்று வாக்களர்களுக்கு 500, 1000, 2000 என்று லஞ்சம் கொடுத்து அவர்களின் பொன்னான வாக்குகளை அபகரிப்பது ஜனநாயகமா? பண நாயகமா? பெருங்கொண்ட மக்கள் தங்களின் அறிவு குறைவின் காரணமாக அரசியல் வியாபாரிகளின் பொய் வாக்குறுதிகளை உண்மை என்று அப்பாவித் தனமாக நம்பி, தங்களின் விலை மதிப்பற்றப் பொன்னான வாக்குகளை கேவலம் அற்பமான 500, 1000, 2000 லஞ்சமாகப் பெற்று விற்பவர்கள் ஜனநாய கத்தைக் காப்பார்களா? இந்த அரசியல் வியாபாரிகள் கட்சிப் பேதமின்றி தங்கள், தங்கள் தகுதிக்கேற்றவாறு, கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பெருங் கொண்ட வியாபாரிகளிடமிருந்து லஞ்சமாகப் பெற்ற கருப்புப் பணத்திற்கு ஏற்றவாறு, ஊடகங்களுக்குப் பல லட்சம் கோடிகளைக் கொடுத்து தங்களை வானளாவப் புகழ்ந்து அப்பட்டமான பொய்களைப் பரப்பச் செய்கிறார்கள்.

ஒவ்வொரு வாக்காளருக்கும் தங்களின் தகுதிக் கேற்றவாறு 500,1000, 2000 எனக் கொடுத்து வாக்கு களை அபகரிக்கிறார்கள். இப்படிப் பல லட்சம் கோடிகளை கையிலிருந்து செலவிட்டுப் பதவியை முறை தவறி அடைந்தவர்கள் அப்பதவிகளைக் கொண்டு மக்கள் சேவையாற்றுவார்களா? அல்லது தேர்தலில் அவர்கள் செலவிட்ட பல லட்சம் கோடி களை ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி, மக்கள் பணத்தை கொள்ளையடிக்க முற்படுவார்களா? போலி ஜனநாயக, பணநாயக, குண்டர் நாயக அடிப்படையில் பதவிக்கு வந்தவர்கள் ஏழை எளிய மக்களின் துயர் போக்கப் பாடுபடுவார்களா? அதற்கு மாறாக தங்களைப் பதவியில் அமர்த்த பல லட்சம் கோடிகளைத் தந்துதவிய கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பல முதலைகள் போன்றோருக்கு குற்றேவல் செய்ய முற்படுவார்களா? சிந்தியுங்கள்.

போலி ஜனநாயக அடிப்படையில் ஆட்சியில் அமர்ந்துள்ளவர்கள், மக்கள் நம்புவது போல் மக்கள் தொண்டர்கள் அல்ல; தேர்தலில் கையூட்டாகக் கொடுத்த, பல லட்சம் கோடிகளை லஞ்சமாகக் கொடுத்தப் பண முதலைகளின் தொண்டர்களே ஆட்சி யாளர்கள். இன்னும் பச்சையாகச் சொன்னால் அவர் களின் பாக்கெட்டில் ஒடுங்கிக் கிடப்பவர்களே ஆட்சியாளர்கள். இப்பண முதலைகள் தங்கள் பாக்கெட்டில் இருப்பதை அவர்களே எடுத்து தங்கள் மனம் போன படி செலவழிப்பது போல், நமது ஆட்சியாளர்களையும் அவர்கள் கையிலெடுத்து அவர்கள் மனம் போனபடி ஆட்டிப் படைக்கிறார்கள். அப்பண முதலைகள் சொல்வதுதான் மக்கள் மன்றத்தில் சட்டமாக நிறைவேறுகிறது. அதன் விளைவு நாட்டு மக்களில் ஏழை எளியவர்கள் மேலும் மேலும் ஏழை எளியவர்களாகிறார்கள். மூன்று வேளை அல்ல ஒரு வேளைக் கஞ்சிக்கே அல்லாடு கிறார்கள். அரசியல் வியாபாரிகளோ, இப்பண முதலை களோ நூறு தலைமுறைக்கு, 200 தலைமுறைக்குச் சொத்துச் சேர்த்துக் குவிக்கிறார்கள். ஜனநாயகத்தின் முதல் அலங்கோலம் இதுதான். ஜனநாயகச் சாபக்கேடு.

சகலவிதமான ஜகஜால வித்தைகளைக் காட்டி, பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து, ஊடகங்களுக்கும், வாக்காளர்களுக்கும் லஞ்சமாக பல்லாயிரம் கோடி களை வாரி இறைத்தாலும் ஒரு கட்சி ஆட்சியிலும் பிரிதொரு கட்சி எதிர் வரிசையிலும் இருக்கும் நிலையே ஏற்படுகிறது. இப்போது ஆட்சியிலிருக்கும் கட்சி மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் எத்திட்டத்தைக் கொண்டு வந்தால், அதில் தங்களுக்குப் பெருந்தொகையை ஒதுக்க முடியும் என்று கணக்கிட்டே திட்டத்தைச் சமர்ப்பிப்பார்கள். எதிர்க்கட்சியினரோ, ஆளும் கட்சியினருக்கு ஒதுங்கும் தொகையை அறிந்து மனம் புழுங்கி, அது எப்படிப்பட்ட நலத்திட்டமாக, மக்களுக்குப் பலன் தரும் திட்டமாக இருந்தாலும், அதைக் கடுமையாக எதிர்த்து அதற்கு முட்டுக்கட்டைப் போட முற்படுவார்கள். அத னால் அந்த நல்லத் திட்டங்கள் கிடப்பில் போடப்படும். அல்லது ஒதுக்குவதில் ஒரு பங்கு எதிர்க் கட்சிக்கும் கிடைத்தால் கூட்டுக் கள்ளன்களால் அத்திட்டம் நடை முறைக்கு வரும். அல்லது,எதிர்க்கட்சியினருக்குரிய பங்கு கிடைக்காமல் மக்கள் நலத்திட்டம் கிடப்பிலேயே கிடக்கும். ஆட்சி மாறி எதிர்க்கட்சியினர் ஆட்சியில் அமர்ந்துவிட்டால் கிடப்பில் போடப்பட்ட மக்கள் நலத்திட்டத்தை தூசி தட்டி எடுத்து, இவர்கள் பேரம் பேசி உரியதைப் பெற்றுக் கொண்டு, முந்திய ஆட்சியில் கொண்டு வந்த போது அதை எதிர்த்தவர்கள் இப்போது கூச்சம் நாச்சம் இன்றி அமுல்படுத்த முற்படுவார்கள். அது மட்டுமா?

போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கத் தேவையான இடங்களில் மேம்பாலம் கட்ட ஆட்சியிலுள்ளோர் பேரம் பேசி பெருந்தொகையை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு, அரசுக் கருவூலத்திலிருந்து தேவையான நிதி ஒதுக்கி பாலம் கட்டும் வேலை மும்முரமாக நடக்கும். இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுவிட்டால், புதிதாக ஆட்சியில் அமர்ந்தவர்கள் ஒப்பந்தக்காரர்களிடம் கோடிக்கணக்கில் பேரம் பேசுவார்கள். பேரம் படிந்தால் முந்தைய ஆட்சியினருக்கு பெருந்தொகை கொடுத்தது போக, புதிய ஆட்சியாருக்கும் ஒரு பெருந்தொகையை கொடுத்து விட்டு, ஒப்பந்தக்காரரும் ஒரு பெருந் தொகை ஒதுக்கிக் கொண்டு, கட்டுமானப் பணிக்கு ஒரு சிறு தொகையே போய்ச் சேரும். இல்லை என்றால் கட்டுமானப் பணி எந்தளவு முடிந்திருந்தாலும் அது தடுத்து நிறுத்தப்படும். வேலை அரைகுறையாக இருப்பதால், பாலம் கட்டுமானப் பணி ஆரம்பிக்க முன்னர் இருந்த போக்குவரத்து நெரிசலை விட மிக அதிகமான நெரிசல் ஏற்பட்டுப் பொதுமக்கள் பெரிதும் துன்பப்படுவார்கள். ஆனால் ஆட்சியாளர்களுக்கு இது விளையாட்டாக இருக்கும். அந்தளவு ஆட்சியாளர் களின் மனம் கல்லாக இறுகி விடும்.

இது ஜனநாயக சாபக்கேட்டின் இரண்டாவது அவல நிலை. அடுத்து ஜனநாயக ஆட்சி முறையில் அரசுப் பணியில் ஈடுபடுத்தப்படும் அதிகாரிகள் ஆக உச்சியிலிருந்து கீழ்த் தட்டு வரை தகுதி அடிப்படை யில் நியமிக்கப்படுவதில்லை. பெருந்தொகை லஞ்ச மாகக் கொடுக்கும் தகுதியற்றவர்களே பெரும்பாலும் நியமிக்கப்படுகிறார்கள், பணம் லஞ்சமாகக் கொடுத்து மருத்துவர், வக்கீல்,IAS,IPS,IFS என்ன அதை விட பெரும் பட்டங்களையும் பெற்றுக் கொள்ளும் கேடுகெட்ட நிலையையே பரவலாக காணப்படு கிறது. இந்த தலையங்கத்தை எழுதிக் கொண்டிருக்கும்போதே ஒரு நீதிபதி லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட செய்தி நாளேடுகளில் காணப்பட் டது. ஆட்சியாளர்களே கோடி கோடியாக லஞ்சம் வாங் கும்போது, அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதைத் தடுக்க முடியுமா? நிர்வாகம் சீராக நடக்குமா?

லட்சம், லட்சமாகக் கொட்டிக் கொடுத்து அரசுப் பதவிகளில் அமர்கிறவர்கள், மக்களுக்கு நற்சேவை செய்ய முற்படுவார்களா? அவர்கள் லஞ்சமாகக் கொடுத்ததைப் பன்மடங்கு பெருக்கி லஞ்சம் பெறுவதில் குறியாக இருப்பார்களா? சொல்லுங்கள்! ஜனநாயக ஆட்சி முறையில் ஆட்சித் தலைவர்களே லஞ்சத்தில் மூழ்கி இருக்கும்போது, அவர்களின் கீழ் சேவையாற்றும் அதிகாரிகள் லஞ்சமில்லா தூய சேவை செய்வார்களா? அதை மக்கள் எதிர்பார்க்க முடியுமா? அரசு எவ்வழி? மக்கள் அவ்வழியே! ஆக அரசு அதிகாரிகளில் லஞ்சம் வாங்காமல் தூய மக்கள் சேவை செய்யும் அதிகாரிகளை இன்று காண்பது குதிரைக் கொம்பே! அப்படி ஒருவர் இருந்தால் அவரை அரசு பாடாய்ப்படுத்தும். வருடா வருடம் இடமாற்றம் செய்து, அவரை மனைவி, மக்களோடு நாடோடி போல் ஊர் சுற்றவைக்கும். இதுதான் இன்றைய ஜனநாயக ஆட்சியினால் ஏற்படும் பெருங்கேடு. ஆக ஆட்சியாளர்களும், அனைத்துத் துறைக ளின் அரசு அதிகாரிகளும் லஞ்சத்தில் முங்கிக் குளிப்பவர்களாக இருப்பார்களே அல்லாமல், மிருக வாழ்க்கை வாழக் கூடியவர்களாக இருப்பார்களே அல்லாமல், மனித வாழ்க்கை வாழும் நல்லவர்களை இலைமறைக் காயாகத்தான் பார்க்க முடிகிறது. இது ஜனநாயக ஆட்சி முறையின் மூன்றாவது சாபக்கேடு.

அடுத்து ஜனநாயக ஆட்சி முறையில், மக்களிடையே செல்வாக்குப் பெற்றால்தான் மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர முடியும் என்ற சுயநல நோக் கோடு, அநீதமான முறையில் அப்பாவி ஏழை மக்களைக் கசக்கிப் பிழிந்து வசூலிக்கும் கோடிக் கணக்கான பணத்தை, அநீதமான முறையில் ஆட்சியில் இருக்கும் மமதையில் ஊடகங்களுக்கு வாரி இறைத்து விளம்பரப்படுத்தி தங்களின் இருப்பை நிலைநாட்டு வார்கள். தங்களுக்கென்று பெருந்தொகை ஒதுக்கிக் கொண்டு, மக்களுக்குக் கொடுக்கும் இலவசங்கள், மக்கள் பணத்திலிருந்து கொடுக்கப்பட்டாலும், தங்கள் சொந்தப் பணத்திலிருந்து கொடுப்பது போல் தங்கள் படத்தைப் போட்டு அமர்க்களப் படுத்துவார்கள். போலியாக தங்களை விளம்பரப் படுத்திக் கொள்வார் கள். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்படும் கட்டிடங்க ளில் தங்கள் பெயரைப் பதிவு செய்து போலி விளம்பரம் தேடுவார்கள். இது போலி ஜனநாயக ஆட்சி முறையின் நாலாவது சாபக்கேடு. இப்படி ஜனநாயக ஆட்சி முறையின் சாபக் கேடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஜனநாயக ஆட்சி நல்லாட்சியாக இருந்தால், நடிகர்கள், நடிகைகள் ஆட்சியாளராக முடியுமா? நடிப்பு என்றாலே உண்மைத் தோற்றத்தை அல்ல, பொய்த் தோற்றத்தை வெளிப்படுத்துவது என்பது தானே? அவர்களால் நல்லது விளையுமா? பெண்ணின் சம்மதத்துடன் இணைவது குற்றமல்ல என்று சுய விளக்கம் கூறி விபச்சாரத்தில் முங்கிக் குளித்தவர்கள் ஆட்சியாளர்களாக முடியுமா? 2000க்கும் 3000க்கும் பேரம் பேசி சோரம் போனவர்கள் ஆட்சியாளர்களாக ஆக முடியுமா? இப்படி இழுக்கங்களை ஒழுக்கங் களாக கருதுவதோடு அவற்றையே நல்லொழுக்கங் களாக மதிப்பவர்கள் அவற்றையே மக்களுக்குப் போதிப்பவர்கள் ஆட்சிக் கட்டிலில் அமர முடியுமா? ஜனநாயக ஆட்சி கேடுகெட்ட ஆட்சியாக இருக்கப் போய்தான் இப்படிப்பட்டக் கேடுகெட்டவர்கள் எல்லாம் ஆட்சிக் கட்டிலில் அமர முடிகிறது.

ஜனநாயக ஆட்சி முறையில் மக்களுக்கு நல்லது, ஒழுக்க சீலம் ஒருபோதும் ஆகாது. இநத உண்மையை தமிழ்நாட்டில் அன்றாடம் இடம்பெறும் அவலங்களே அம்பலப்படுத்துகின்றன. உண்மையில் நல்லாட்சியாக இருந்தால் குடி, குடும்பத்துக்கும், உடம்புக்கும், நாட்டுக்கும் கேடு என்று விளம்பரப்படுத்திக் கொண்டு மது விற்பனையை அரசே நடத்துமா? குடியினால் எத் தனை உயிர்கள் விபத்துக்களாலும், கொடும் நோயினா லும் போகின்றன. அவர்களின் மனைவிமார்கள் விதவைகளாகவும், பிள்ளைகள் அனாதைகளாகவும் ஆகிறார்கள். உழைக்கும் அற்பக் காசையும் குடிக்கு அற்பணித்து விட்டு மனைவி மக்களை பட்டினியில் வாட வைக்கிறார்கள். இந்த ஏழைக் குடிகாரர்களின் குடும்பத்தினரின் வயிற்றில் அடித்துவிட்டு, அதைக் கொண்டு அரசு பல்லாயிரம் கோடி ஈட்டுவது, மக்க ளுக்குச் சேவை செய்யும் அரசா? அல்லது மக்களுக்கும் பெருங்கேடுகளை ஏற்படுத்தும் அரசா? இப்படிப் பட்ட அரசுகள் மானமுள்ள அரசுகளா? மானங் கெட்ட அரசுகளா? சொல்லுங்கள்.

இன்று டாஸ்மாக் திறந்து மக்களுக்குக் கேடு விளைவிக்கும் குடியை மடை திறந்து விட்டிருக்கிறது அரசு. அரசு டாஸ்மாக் நடத்தாவிட்டால் மக்கள் கள்ளச்சாராயம் குடித்து மாண்டு போவார்கள் என்று நியாயப்படுத்துகிறார்கள். இதேபோல் நாளை, நமது வாலிபர்கள் கண்ட கண்ட பெண்களுடன் சேர்ந்து எய்ட்ஸ் நோயை விலைக்கு வாங்குகின்றனர். அதைத் தடுப்பதாகக் கூறி அரசே பாஸ்மாக் என்ற பெயரில் விபச்சார விடுதிகளை ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை. ஆம்! டாஸ்மாக்கில் அரசுக்குப் பல்லா யிரம் கோடி லாபம் கிடைப்பது போல் இந்த பாஸ்மாக் கிலும் பல்லாயிரம் கோடிகளை மிக எளிதாக ஈட்டி விட முடியும்.

இன்று குடியினால் ஏழை எளிய மக்கள் மாய்வதோடு அவர்களின் குடும்பங்களும் சீரழிந்து நடுத் தெருவுக்கு வருகின்றன. நாளை விபச்சாரத்தினாலும் இந்த பரிதாப நிலை இன்னும் அதிகரிக்கும். ஆயினும் ஜனநாயக ஆட்சியின் கணக்கு டாஸ்மாக்கால் பல்லாயிரம் கோடி அரசுக்கு வருவாய். அதை மென்மேலும் பெருக்க வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் களுக்கு உத்திரவிடுவது போல், நாளை பாஸ்மாக் விபச் சார விடுதி பணியாளர்களுக்கு, மென்மேலும் விபச் சார வருமானத்தைப் பெருக்க வேண்டும், அதாவது குடிகாரர்களைப் பெருக்குவது போல், 10 வயது சிறு வர்களையும் குடிகாரர்களாக ஆக்குவது போல், நாளை விபச்சாரகர்களையும் பெருக்கி, 10வயது சிறுவர் களையும் விபச்சாரத்தில் சிக்க வைத்து அரசுக்கு வருவாயைப் பெருக்க வழி வகுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இதுதான் ஜனநாயக ஆட்சியின் சாபக்கேடு. ஆக ஜனநாயக ஆட்சி மூலம் மக்களுக்கு மேலும் கேடுகள் விளையுமே அல்லாமல் ஒருபோதும் நல்லது நடக்க வாய்ப்பே இல்லை. இதை இன்று ஜனநாயக ஆட்சி நடக்கும் நாடுகளில் தினசரி அரங்கேறி வரும் குடி, கூத்து, சூது, கொலை, கொள்ளை, திருட்டு, கற்பழிப்பு, சிறுமியர் பாலியல் வன்கொடுமை, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், அரை, முழு நிர்வாணப் பெண்களின் சின்னத்திரை, வெள்ளித்திரை, மெகா தொடர்கள் இன்னும் பல ஒழுக்கம் என்ற பெயரில் இழுக்கக் காட்சிகள். நைட் கிளப் ஆட்டங்கள், பாட்டங்கள், விபச்சாரங்கள் உறுதிப்படுத்து கின்றன.

இவைதான் ஜனநாயக ஆட்சி என்ற பெயரில் பெரும்பாலோர் விரும்பி ஏற்கும், அவர்களை அழிவில் கொண்டு சேர்க்கும் இழுக்கங்கள். ஜனநாயக ஆட்சி முறையில் பல லட்சம் கோடிகளை ஊடகங்களுக்கும், சின்னக் கட்சிகளுக்கும் வாரி இறைத்துப் பொய்யான பிரமிப்பை, தோற்றத்தை உருவாக்கி நாட்டின் தலை மைப் பொறுப்பை ஏற்றிருப்பவர் யார்? மனித மிருக மாகி ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தை கள் என கொன்று குவிக்க வழிவகுத்தவர். கர்ப்பினிப் பெண்ணின் வயிற்றில் சூழாயுதத்தைச் செலுத்திக் கிழித்து கருவறையில் இருந்த சின்னஞ் சிறு சிசுவை, அதனால் வெளியே எடுத்து நெருப்பி லிட்டுப் பொசுக்கி மகிழ்ந்த மனித மிருகத்தை தூண்டி விட்ட பெருமைக்குரியவர். இப்படிப்பட்டவர் நாட் டுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக்கை வைப்பதை விட அறிவீனம் இருக்க முடியுமா? இவரால் 130 கோடி பன்முகம் கொண்ட இந்திய மக்களைக் காப்பாற்ற முடியுமா?

கேவலம்! தான் மணமுடித்த மனைவியையே வாழ வைக்கும் தகுதி இல்லாதவர், நாட்டை ஆளும் தகுதி பெறுவாரா? தனது வேட்பு மனுக்களில் தான் ஒரு பெண்ணை மணமுடித்ததையே மறைத்துச் சாதனைப் படைத்தவர், இன்று ஆட்சியில் அமர்ந்து எத்தனை அப்பட்டமான உண்மைகளை மறைத்துச் சாதனைப் படைக்கப் போகிறாரோ? எதிர்காலமே பதில் சொல்லும். நிச்சயமாக உறுதியாக நம்புங்கள்! அவரைக் கொண்டோ, அவர் அடிபணிந்து நடக்கும்  R.S.S. இந்துத்துவாவைக் கொண்டோ ஒரு போதும் சிறுபான்மையினருக்கும்,S.C., S.T. தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் ஒரு போதும் நன்மை விளையாது. கடந்த பல்லாயிரம் ஆண்டுகளாக மேல் ஜாதியினரைக் கடவுளின் அவதாரங்களாக நம்பி, அவர்களை சாமி, சாமி என்று அழைத்து அவர்கள் காலால் இட்ட வேலைகளை இவர்கள் தலையால் செய்து வந்ததை, அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்றோர் பார்த்து, அவர்களின் இன இழிவைப் போக்கப்பாடுபட்டார்கள். அதன் காரணமாகக் கணிசமான மக்கள் இன இழிவிலிருந்து விடுபட இன்றும் முயன்று வருகிறார் கள். ஆயினும் அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்றோரின் போதனைகள் இன்று நீர்த்துப் போய்க் கொண்டிருக்கின்றன. இதற்குச் சமீப காலங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்றோரை மதித் துப் போற்றும் தமிழகக் கட்சிகள் மாறி மாறி யூ.றீ.றீ. அரசியல் பிரிவான ப.ஜ.க.வுடன் ஆட்சியில் அமர ஆசைப்பட்டு கூட்டணி அமைத்தது போதிய சான்றாகும். சென்ற பொதுத் தேர்தலிலும் தமிழகச் சில்லறைக் கட்சிகள் வாங்குவதை வாங்கிக் கொண்டு ப.ஜ.க.வுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டது போதிய சான்றாகும்.

அரசியல் வியாபாரிகளான இந்தக் கட்சிகளுக்கு பதவியும், பணமும் தான் அசல் குறிக்கோளே அல்லாமல், கொள்கை என்பது இரண்டாம் பட்சம்தான். இப்போது தமிழகக் கட்சிகளில் இருப்பவர்களை பதவி ஆசை காட்டி, பணம் கொடுத்து ப.ஜ.க.வில் சேர்க்கும் முயற்சி படுவேகமாக நடந்து வருகிறது. முஸ்லிம்களையே அதிகமாகக் கொண்ட காஷ்மீரிலேயே கணிச மான தொகுதிகளை ப.ஜ.க. வென்றெடுத்துள்ளது என்றால் உண்மை நிலை என்ன? ஈட்டி எட்டிய தூரம் மட்டுமே பாயும், பணம் பாதாளம் வரை பாயும் என்றும், பணம் என்றால் பிணமும் வாய் பிளக்கும் என்றும் சும்மாவா சொல்கிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்தும், தனியார் நிறுவனங்களிலிருந்தும், பெரும் பண முதலைகளிட மிருந்தும் பல்லாயிரம் லட்சம் கோடிகளை லஞ்சமாகப் பெற்றுக் கருப்புப் பணமாக வைத்திருக்கும் ப.ஜ.க. வினர் எளிதாக மத்திய ஆட்சியைக் கைப்பற்றியது போல், மாநிலங்களின் ஆட்சிகளையும் அதே சாணக்கியத் தந்திரம் கொண்டு கைப்பற்றுவது கடினம் அல்ல. அதுவும் காவி வகையறாக்கள், எப்படிப்பட்ட இழி செயல்களையும் துணிந்து செய்து, தேவைப்பட்டால் காட்டிக் கொடுத்தும், கூட்டிக்கொடுத்தும் தங்களுக்கு வேண்டியதை அடையும் சூத்திரதாரிகள். எனவே இன்னும் சில ஆண்டுகளில் மத்தியில் மக்களவை, மாநிலங்களவை ஆட்சி முதல் அனைத்து மாநிலங்களின் ஆட்சி என அக்டோபாஸ் போல் கைப்பற்றி இந்தியா முழுக்க ஹிந்துத்துவா ஆட்சி ஆட்டிப் படைக்கச் சகல தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும், அக்கிரமச் செயல்களையும், கொத்துக் கொத்தாகப் படுகொலைகளையும் செய்யவே முற்படுவார்கள்.

அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்றோர் அரும் பாடுபட்டுக் காவிப்பிடியிலிருந்து விடுபடச் செய்த தாழ்த்தப்பட்ட மக்கள் மீண்டும் காவியில் கறையும் நிலையே உருவாக்கிக் கொண்டிருக்கிறது. “”இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து” எனக் கூறி இறைவன் அளித்துள்ள ஒரே மார்க்கமான இஸ்லாத்தை ஒரு பெரும் கூட்டத்தோடு பெரியார் தழுவ முற்பட்டார். முஸ்லிம்களிடையே காணப்படும் மூட நம்பிக்கைகள், மூடச் சடங்குகள், அனாச் சாரங்கள், கபுரு வழிபாடுகள் இவற்றைக் காட்டி ஹிந்து மதமும், இஸ்லாமிய மதமும் ஒன்றுதான் என அவரது தொண்டர்கள் கூறி முஸ்லிமாவதைத் தடுத்து விட்டனர். இஸ்லாத்தைப் பெருங் கூட்டத்துடன் தழுவ முற்பட்ட அம்பேத்கருக்கும் அதே முட்டுக்கட் டையே ஏற்பட்டது. இந்தியாவிலுள்ள பெருங் கொண்ட முஸ்லிம்கள், பல தலைமுறைகளுக்கு முன்னர், இன இழிவைத் தாங்க முடியாமல் முஸ்லிமானவர்களே. அவர்கள் மதம் மாறினார்களே அல்லாமல், மனம் மாறவில்லை. அதனால் அவர்கள் இந்து மதத்தில் கடை பிடித்து வந்த அனைத்து மூட நம்பிக்கைகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள், அனாச்சாரங்கள் அனைத்தையும் முஸ்லிம்கள் ஆன பின்னரும் கடை பிடிக்கிறார்கள்.

முஸ்லிம் மதகுருமார்களும் அற்பமான உலகியல் ஆதாயங்களில் குறியானவர்கள் தானே. எனவே அச் சடங்குகள் அனைத்திற்கு அரபி மொழியில் பெயரிட்டு இஸ்லாமிய மார்க்கத்தில் உள்ளது போல் காட்டி வயிறு வளர்க்க ஆரம்பித்தனர். அவையே இன்று வரை பெரும்பாலும் முஸ்லிம்களிடையே நடைமுறையில் இருந்து வருகின்றன. ஆயினும் அவர்களோடு ஒட்டிக் கொண்டிருந்த இன இழிவு, தீண்டாமை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டது. இதற்காக வாவது அம்பேத்கர், பெரியார், அண்ணா போன்றோர் தாழ்த்தப்பட்ட மக்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை உற்சாகப்படுத்தி நடைமுறைப்படுத்தி இருக்க வேண் டும். தவறவிட்டது துர்ப்பாக்கியமே!

இன்று காவியினர் என்ன கூறி வருகிறார்கள் தெரியுமா? முன்னர் பள்ளு, பறை, சக்கிலி என இழி நிலையில் இருந்தவர்கள், அவர்களின் தாய் மதத்தைத் துறந்து முஸ்லிமானது தவறாம். அவர்கள் மீண்டும் தாய் மதத்திற்குத் திரும்ப வேண்டுமாம். அவர்கள் இன்று முஸ்லிம்கள் என்ற நிலையில் உயர் ஜாதியின ருக்குச் சமமாக இருக்கிறார்கள். இந்துவாக மாற்றி அவர்களை தங்களின் உயர் ஜாதியில் சேர்த்துக் கொள்ள முன் வருவார்களா? ஒருபோதும் முன்வர மாட்டார்கள். அவர்களை மீண்டும் கீழ்ஜாதியில் சேர்த்துத் தங்களுக்கு அடிமைகளாக இருந்து வர வேண்டும் என்பதே அவர்களின் இலட்சியம். இன்றும் ப.ஜ.க.வில் இருக்கும் தாழ்த்தப்பட்டோர் கோவிலின் கருவறைக்குள் நுழைய முடியுமா? உயர் ஜாதியினருக்குச் சரிசமமாக அமர முடியுமா? முடியாதே. ஏன்? இன்று பிரதமராக இருப்பவர் கீழ் ஜாதியைச் சார்ந்த நிலையில், பிரதான கோயில்களில் ஒன்றில் கருவறைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவாரா? அப்படியே வேறு வழியின்றி நுழைய அனுமதித்தாலும், அச்சிலையைக் கங்கை நீர் கொண்டு கழுவிப் புனிதப்படுத்தும் மூட நம்பிக்கையே அரங்கேறும். ஆயினும் பல தலைமுறை யினருக்கு முன்னர் கீழ் ஜாதியாக இருந்து முஸ்லிமானவர்கள் இன்று இந்த மேல் ஜாதியினருக்குச் சரிசமமாக உட்காருவதைப் பார்க்கத் தானே செய்கிறார்கள். அந்த முஸ்லிம்களை மீண்டும் தங்களின் தாய் மதத்திற் குக் கொண்டு வந்து தங்களுக்கு அடிமைகளாக இருந்து பணி புரிய வேண்டும் என்பதே காவியினரின் மாறாத இலட்சியம்.

அவர்கள் தாய்மதம், தாய்மதம் எனப் பீற்றுகிறார்களே அது சுத்தப் பிதற்றலாகும். மனித குலத்தின் தாய் மதம் இஸ்லாமே! அரபு மொழியில் இஸ்லாம் என்றால் சாந்தி மார்க்கம்-அமைதி வழி என்பதாகும். படைப்பு கள் அனைத்தையும் படைத்த இணை, துணை இல்லா ஏகன் ஒரே இறைவனுக்கு மட்டுமே அடிபணிவதாகும். ஆதி மனிதர் ஆதம்(அலை) வாழ்ந்து இஸ்லாத்தை நடைமுறைப் படுத்தியது இந்திய மண்ணில் என்றே வரலாறுகள் கூறுகின்றன. இன்று ராமர் பாலம் என்று பிதற்றுகிறார்களே அது உண்மையில் ஆதம் பாலம் என்றே ஆதியில் வழக்கிலிருந்தது. “”ஒன்றே குலம், ஒரு வனே தேவன்” என்ற தமிழ் முது மொழி இதை உண்மைப்படுத்துகிறது. அது மட்டுமா காவியினர் இன்று தூக்கிப் பிடிக்கிறார்களே அந்த பகவத் கீதையின் 9:11 சுலோகம் என்ன கூறுகிறது என்று பாருங்கள்.

“”பொருள்களுக்கு மகேசுவரனாயுள்ள என்னு டைய உயர்ந்த தன்மையை அறியாதவர்களாய், மூடர் கள் மனித உடலை அடைந்ததாய் என்னை அவமதிக் கிறார்கள். (பகவத் கீதை : 9:11)

காவியினர் தூக்கிப் பிடிக்கும் பகவத்கீதையே அவர்களை “”மூடர்கள்” என்றும், இணை, துணை இல்லா ஓரிறைவனை மனித அவதாரமாக்கியும், சிலைகளையும், படைப்புகளையும் தெய்வமாக்கியும் ஓரிறைவனை அவமதிப்பதாகவே பகவத் கீதை காவியினரை அடையாளம் காட்டுகிறது. மேலும் இந்த இதழில் ஆதிகால வேதங்களும், இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்” என்ற ஆக்கத்தில் இடம் பெற்றுள்ள ரிக்வேதம் : 1:16:46, 10:114:5 உபநி­த் : 40:9, யசூர் வேதம் : 40:9 போன்ற காவியினர் பெரிதும் மதித்துப் போற்றும் அவர்களின் வேதங்களில் சம்மட்டி அடியாக கூறப்பட்டவற்றையும் படித்துத் திருந்துவார்களா? ஒருபோதும் திருந்த மாட்டார்கள். இதை நாம் கூறவில்லை. இறுதி நெறிநூல் அவர்களது பாஷையில் வேதம் 7:146 இறைவாக்கே கூறுகிறது.

எப்படி அல்குர்ஆனின் நேரடி வசனங்களை எடுத் துக் காட்டினாலும் முஸ்லிம் மதகுருமார்கள் அதை நம்பாமல் நேர்வழியை மறுத்துக் கோணல் வழிகளில் செல்கிறார்களோ, அதைப் போலவே இந்து மதகுரு மார்களும் அவர்கள் நம்பி ஏற்றிருக்கும் அவர்களின் வேதங்களிலிருந்தே ஏக இறைவனின் உண்மைச் சொற்களை எடுத்துக் காட்டினாலும் அவற்றை ஏற்கமாட் டார்கள். தூய மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டு, அதனால், நியாய மின்றி மதகுரு எனப் பெருமை பேசும் அனைத்து மதங் களின் மதகுருமார்களின் நிலை இதுதான். அவர்கள் ஒருபோதும் இறைவன் காட்டும் ஒரே நேர்வழியை ஏற்க மாட்டார்கள்.

ஆக தாய் மதம் என்பது கண்ட கண்ட படைப்புகளைத் தெய்வமாக்கி வணங்கும் இந்து மதம் அல்ல. “”இந்து மதம்” என்பதே அரபு நாட்டினர் நமது நாட்டை “”ஹிந்” என்று அழைத்ததன் பேரில் மிகச் சமீப காலத்தில் ஏற்பட்டப் பெயரே அல்லாமல் ஆதியிலிருந்து வழக்கில் இருந்து வரும் ஒரு பூர்வீகப் பெயரே அல்ல. ஆனால், இஸ்லாம் என்ற சாந்தி மார்க்கம்-நேர்வழி மனிதனை இறைவன் படைத்ததிலிருந்து அந்த இறைவனை மட்டுமே வழிபடும், அந்த இறைவனே பெயரிட்ட மார்க்கமாகும். இயற்கை மார்க்கமான இஸ்லாத்திற்குச் சொந்தக் காரர்கள் என்று வாயளவில் கூறிக் கொண்டு, இயற்கை இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆன் கூறும் நேரடிக் கருத்துக்களை 25:30 இறைவாக்குக் கூறுவது போல் புறக்கணித்து ஒதுக்கிவிட்டு, தூய மார்க்கத்தை மதமாக்கி அதையே ஹராமான வழியில் (பார்க்க : 2:174, 36:21) வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள மவ்லவிகள், அதனாலேயே பெருமை பேசும் நிலையில் இருக்கிறார்கள். எனவே அவர்களை அல்லாஹ்வே குர்ஆன் வசனங்களை விட்டும் திருப்பி விடுகிறான். குர்ஆன், வசனங்களை நேரடியாகக் காட்டினாலும் நம்பி ஏற்கமாட்டார்கள். நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழி யாக ஏற்பார்கள் என்று 7:146 இறைவாக்குக் கூறுவது பொய்யாகுமா? அல்லாஹ்வின் அமுத வாக்குப் பொய் யாகுமா? முஸ்லிம்களே சிந்தியுங்கள்! மதகுரு எனப் பெருமை பேசும் எந்த மவ்லவியையும் வழிகாட்டி யாக ஏற்காதீர்கள். அது உங்களை நரகில் சேர்க்கும்!

அவர்களை வழிகாட்டிகளாக ஏற்று நடந்ததின் விளைவு இன்று 99% முஸ்லிம்கள் பெயர் தாங்கி முஸ்லிம்களாக இருக்கிறார்கள். ஈமான் என்னவென்றே தெரியாத (49:14) அடிப்படை கலிமாவையே உச்சரிக்கத் தெரியாத, ஐங்காலத் தொழுகையே இல்லாதவர் கள்தான் இன்று முஸ்லிம்கள் என நடமாடுகின்றனர். வாக்காளர்கள் பட்டியலில் முஸ்லிம்கள் எனக் குறிப் பிடப்பட்டுள்ளவர்களில் 99% நிலை இதுதான். அது மட்டுமல்ல. நிரந்தர மறுமை வழ்க்கையைப் பற்றிய அறிவு அறவே இல்லாதவர்கள். அவர்களின் குறிக் கோளே அற்பமான இவ்வுலக வாழ்க்கை மட்டுமே தான். அப்படிப்பட்ட பெயர்தாங்கி முஸ்லிம்களை காவியினர் பணம், பதவி ஆசை காட்டி தங்கள் வலை யில் எளிதாகச் சிக்க வைத்து விடுவார்கள். இந்த மவ்லவிகள் தங்களின் சுயநலம் கருதி முஸ்லிம்களை குர்ஆனை நெருங்கவிடாமல் தடுத்து வைத்திருப்பதே இதற்கு முக்கியக் காரணம். ஸ்பெயினை 800 ஆண்டு கள் ஆண்ட முஸ்லிம்களில் ஒருவர் கூட அங்கு இப் போது இல்லை என்பது போல, 800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களில் ஒருவர் கூட இந்தியாவில் இப்போது இல்லை என்று உலகம் கூறும் நிலையை ஏற்படுத்தி விடாதீர்கள்.

அந்த அவல நிலை எற்படாமல் தடுப்பதாக இருந் தால் முஸ்லிம்களே நீங்கள் மனிதர்களில் யாரையும் நம்பவேண்டாம், எம்மையும் நம்ப வேண்டாம், மவ்லவிகளில் எவரையும் நம்பவேண்டாம். 2:186 இறைக் கட்டளைப்படி படைத்த அல்லாஹ்வையே முழுக்க முழுக்க நம்புங்கள். 7:3 இறைக்கட்டளைப் படி அல்லாஹ்வால் இறக்கப்பட்டவற்றை மட்டுமே பின்பற்றுங்கள். அல்லாஹ்வால் இறக்கப்பட்டவை அல்குர்ஆனும், 53:2,3,4,5 இறைக் கட்டளைகள்படி இறுதித் தூதரின் சொல், செயல் அங்கீகாரம் மட்டுமே! அதற்குப் பின்னர் எவரது சுயகருத்தும் மார்க்கம் ஆகாது. அது பகிரங்க வழிகேடு என்று 33:36 இறை வாக்கு கூறுவதை உறுதியாக நம்புங்கள். 2:208, 3:102 இறைவாக்குகள் கூறுவது போல் இஸ்லாத்தில் முழு மையாக நுழைந்து, அல்லாஹ்வுக்கு முழுக்க முழுக்க தக்வா-பய பக்தியுடன் நடக்க முன்வாருங்கள். 3:103 இறைக் கட்டளைப்படி ஒரே ஜமாஅத்தாக ஒன்று பட்டு குர்ஆனைப் பற்றிப் பிடியுங்கள். எந்த நிலையிலும் பிரியாதீர்கள்.

2:213 இறைவாக்குக் கூறுவது போல் இந்த மவ்லவி கள் உலக ஆசையின் காரணமாகத் தங்களுக்கிடையே ஏற்படும் பொறாமை, பொச்சரிப்புக் காரணமாகவே உங்களைப் பல பலப் பிரிவுகளாகப் பிரித்து அவர்கள் சுய ஆதாயம் அடைகிறார்கள் என்பதை விளங்கி அவர் களின் மாய, வசீகர, உடும்புப் பிடியிலிருந்தும், 6:112 வசனம் சொல்வது போல் அவர்களின் சூன்ய மயக்கு மொழி பேச்சுகளிலிருந்தும் விடுபடுங்கள். அல்லாஹ்வை முழுக்க முழுக்க நம்பி, அல்குர்ஆன், ஹதீஃ தைப் பற்றிப் பிடித்து அவற்றின் நேரடிப் போதனைகள்படி மட்டுமே நடக்க முன்வாருங்கள். அவை உங்களை இந்தியாவில் மட்டுமல்ல உலகளவிலும் உண்மை முஸ்லிம்களாக வாழ வைத்து, நாளை மறுமையிலும் சுவர்க்கம் புக வைக்கும். இந்த மவ்லவிகளின் பின்னால் அவர்களை நம்பிச் செல்வதும் ஒன்றுதான். காவியினர் பின்னால் அவர்களை நம்பிச் செல்வதும் ஒன்றுதான். இரு சாரரும் உங்களை நாளை நரகில் கொண்டு சேர்ப்பார்கள். அங்கு நீங்கள் ஒருவரை ஒருவர் திட்டி, சபித்து ஒப்பாரி வைக்கும் காட்சியையே 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. இவற்றில் 34:32,33, 40:47,48 இறைவாக்குகள் குறிப் பிடுவது பெருமையடிக்கும் இம்மதகுருமார்களையே!

இந்துத்துவாவை அதாவது மீண்டும் ஜாதி வேற்று மையைத் திணிக்கும் மனுநீதிச் சட்டத்தை நடை முறைக்குக் கொண்டுவர பெரும் முயற்சி எடுக்கின்றனர். அவர்களது மட்டுமல்ல மனுநீதி. இன்று உலகம் முழுவதும் மனுநீதிச் சட்டங்கள்தான் அது மன்னர் ஆட்சியாக இருந்தாலும், சர்வாதிகார ஆட்சியாக இருந்தாலும், ஜனநாயக ஆட்சியாக இருந்தாலும், சோசலிச ஆட்சியாக இருந்தாலும், கம்யூனிச ஆட்சி யாக இருந்தாலும் இன்னும் எவ்வகை ஆட்சியாக இருந்தாலும் அவை அனைத்தும் மனுநீதி ஆட்சிகள் தான்! ஆச்சரியமாக இருக்கிறதா?

மனுநீதி ஆட்சி என்றால் மனிதர்கள் கற்பனை செய்த ஆட்சி முறை என்பதுதான் அதன் பொருள். மேலே நாம் குறிப்பிட்டுள்ள ஆட்சி முறைகள் தனி மனிதனோ, சில மனிதர்கள் கூட்டு சேர்ந்து அமைத்த ஆட்சிகள்தானே இவை அனைத்தம். 17:85 குர்ஆன் வசனம் கூறுவது போல் தன்னைப் பெற்றெடுத்த தாயையும், தந்தையையும் சுயமாகச் சிந்தித்து அறிய முடியாத மிகமிக அற்பமான அறிவு கொடுக்கப்பட் டுள்ளவன்தானே ஆறறிவு பெற்ற மனிதன். அவன் அமைக்கும் சட்டங்கள் அனைத்தும் அற்ப அறிவு கொண்டு கற்பனைச் செய்யப்பட்ட முழுமை பெறாத அரைகுறைச் சட்டங்களாக மட்டுமே இருக்க முடியும். அது மட்டுமல்ல சட்டத்தை கற்பனை செய்யும் தனி மனிதனுக்கோ, மனித கூட்டத்திற்கோ ஏற்றவாறு, அவர்களின் சுயநலத்தின் அடிப்படையிலேயே அமையும். அவர்கள் அமைக்கும் சட்டங்கள் முழு மனித சமு தாயத்திற்கும் ஏற்றவாறு ஒருபோதும் அமையாது.

மனித சமுதாயம் முழுமைக்கும் ஏற்றச் சட்டங் களாக இருந்தால், அவை மனிதனைப் படைத்த இறை வனால் கொடுக்கப்பட்ட சட்ட வரைவாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும். காலத்திற்குக் காலம் மனித வளர்ச்சிக்கேற்றவாறு இறைத் தூதர்களை அனுப்பி வாழ்க்கை நெறி சட்டங்களைக் கொடுத்து வாழ்ந்து காட்டவும் செய்தான் இறைவன். அவை சமயத்திற் கேற்றவாறு தற்காலிகமானவையாக இருந்ததால் அவை பதிந்து பாதுகாக்கப்படவில்லை. அந்த இறைத் தூதர்களுக்குப் பிறகு அச்சமுதாயங்களில் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்டு, இறைவன் கொடுத்த நேர்வழியை எண்ணற்றக் கோணல் வழிகளாக்கி எண்ணற்ற மதங் களைக் கற்பனை செய்தார்கள் மதகுருமார்கள்!

இறைவனால் நேர்வழியாக அருளப்பட்ட நேர்வழி நெறிநூல்களில் தங்களின் கற்பனைகளையும் புகுத்திய தோடு அவற்றை இறையளித்த வேதங்கள் என மக்களை நம்பச் செய்தார்கள். இந்த வரிசையில் உள்ளவைதான் ஹிந்துக்களிடம் காணப்படும் வேதங் கள், யூதர்களிடம் இருக்கும் தோரா, கிறித்தவர்களி டம் இருக்கும் பைபிள் போன்றவை. அது மட்டுமல்ல. ஆட்சியிலிருப்போர் பழைய கரன்சி நோட்டுக்களை செல்லாதவை என்று அறிவிப்பது போல், இறைவனும் மனிதர்களால் வேதங்களாக்கப்பட்ட முன்னைய நெறி நூல்கள் அனைத்தையும், இரத்து செய்துவிட்டு, இறுதியாக இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனை இறுதித் தூதருக்கு அருளி அதை உடனுக்குடன் பதி வும் செய்து, பாதுகாத்து உலகம் அழியும் வரை அது தான் மனி தனுக்குரிய வழிகாட்டி நெறிநூல் என்று பகி ரங்கமாக அறிவித்தும் விட்டான். (பார்க்க:5:3, 3:19,85, 15:9)

முன்னைய சுயநல மதகுருமார்களைப் போல் இறுதி சமுதாயத்திலும் முஸ்லிம் மதகுருமார்களும் திருட்டுத்தனமாக நுழைந்து கொண்டு அல்குர்ஆன் முஸ்லிம்களின் வேதம் என குருட்டுத்தனமாக அறிவித்து முஸ்லிம் அல்லாதவர்கள் அதை நெருங்கவிடாமல் செய்து விட்டனர். முஸ்லிம்களையும் ஒளூ இல்லாமல் குர்ஆனைத் தொடக் கூடாது, அரபி மொழி கற்றவர் களே குர்ஆனை விளங்க முடியும் என்ற அபூ ஜஹீல் வாதத்தை வைத்து, முஸ்லிம்கள் உட்பட ஒட்டு மொத்த மனித சமுதாயத்தையும் குர்ஆனைப் படித்து விளங்க முடியாமல் தடுத்து வருகின்றனர். இம்மவ்லவிகளின் மூட சுயநலக் கொள்கைகளை குர்ஆனைக் கொண்டே தரைமட்டமாக்கி வருகி றோம். ஆயினும் நாளை நரகை நிரப்ப இருப்போர் அவர்கள் பின்னால் தான் பெருங்கூட்டமாகச் செல் வார்கள். நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒருவரை ஒருவர் சபித்துப் பிரலாபிப் பதையே அல்குர்ஆன் படம் பிடித்துக் காட்டுகிறது.

அறிவாளிகளே, அறிவு ஜீவிகளே, மனித குலத் திற்கு உண்மையில் நல்லது செய்து அவர்களை அமைதியாக, சுபீட்சமாக, வளமுடனும், மகிழ்ச்சியுட னும் வாழ வைக்க விரும்பும் நன்மக்கள், இறுதிநெறி நூல் குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்கி குர்ஆன் கூறும் இறையாட்சியை நிலைநாட்ட முன்வாருங்கள். அது இன்று உலகில் காணப்படும் அனைத்து அநியாய அட்டூழியங்களைத் தகர்த்தெறிந்து உலகமே அமைதி யிலும் சுபீட்சத்திலும் திளைக்க அதுவே வழி வகுக்கும். இறைவன் அருள்புரிவானாக!

Previous post:

Next post: