எய்தவன் இருக்க அம்பை நோவது அறிவுடடைமையா? அறிவீனமா?

in 2015 மார்ச்,பொதுவானவை

அபூ அப்தில்லாஹ்

ஆதத்தின் சந்ததிகளை நேர்வழிக்குக் கொண்டு வர அகிலங்கள் அனைத்தையும் படைத்து, மனித குலத்தையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன் காலத்திற்குக் காலம் இறைத்தூதர்களை அனுப்பி வைத்தான். அப்படி இறைவனால் அனுப்பி வைக்கப்பட்ட ஒட்டுமொத்த நபிமார்களும், இறைவன் ஒருவனே, இணை, துணை, தேவை, இடைத்தரகர்கள் இல்லாத தனித்தவன் என்றே மக்களுக்குப் போதித்தனர். இறைத்தூதர்கள் அனைவரும் அந்த ஒரே இறைவனல்லாத அவனது படைப்புகளில் எதற்கும், எவருக்கும் ஒருபோதும் அடிபணியக் கூடாது, அவர்களின் வழிகாட்டல்படி நடக்கக் கூடாது. அச்செயல் ஒரே இறைவனுக்கு இணை (ஷிர்க்) வைக்கும் (9:31) மிகக் கொடிய செயல். அக்கொடிய செயலை இறைவன் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான் (பார்க்க : 4:48,116) என்று தெளிவாக, நேரடியாகவே அந்த அந்தக் காலத்து மக்களுக்குப் போதிக்கவே செய்தார்கள்.

ஆதத்தின் மக்களில் பெருங்கொண்டோரை, இறைவனுக்கு இணைவைக்கச் செய்து நரகில் தள்ளி நரகை நிரப்பச் சபதம் செய்து, அதற்கு இறைவனிடம் வரமும் வாங்கியுள்ள ஷைத்தான் (15:39), தனது சபதத்தை நிறைவேற்ற அல்லும், பகலும் அயராது பாடுபட்டு வருகிறான். மனித குலத்தை நரகில் தள்ள “குலத்தைக் கெடுக்கும் கோடாலிக் காம்பாக” கடவுளின் பெயராலேயே வயிறு வளர்க்கும் மதகுருமார்களைத் தனது காலாட் படையாக, நேரடி முகவர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளான் ஷைத்தான். நாங்கள்தான் கடவுளுக்கு நெருக்கமானவர்கள், நேர்வழிக்காட்டுபவர்கள், மோட்சம் அடையப் பாதை காட்டுபவர்கள் என்று வீண் பெருமை பேசுபவர்களாகிய ஒட்டுமொத்த மதகுருமார்களும் ஒரு போதும் நேர்வழியைக் காட்டமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாக ஏற்று, அதையே மக்களுக்கும் போதிப்பார்கள் என்று முன்னையை அனைத்து நெறிநுல்களையும் (வேதம்) உள்ளடக்கிய இறுதி நெறிநூல் குர்ஆனின் 7:146 வச னத்தில் திட்டமாக, தெளிவாக, நேரடியாக எச்சரித்து மனித குலத்தை விழிப்படையச் செய்கிறான் நேர்வழி காட்டும் அல்லாஹ் (பார்க்க : 6:153)

அல்லாஹ் என்னதான் அதி அற்புதமாக நேர்வழியைத் தெளிவாக நேரடியாக விளக்கினாலும் இம் மதகுருமார்களும், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் (தக்லீது) அவர்களது பக்தர்களும் குர்ஆனின் நேரடிக் கருத்தை ஏற்கமாட்டார்கள். அவற்றை வெறுப்பார்கள். அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மவ்லவிகளான மதகுருமார்களின் கோணல் விளக்கங்களையே வேதவாக்காக-நேர்வழியாக ஏற்று நரகை நிரப்ப முந்துவார்கள். இதையே குர்ஆனின் 7:146, 12:106, 17:41,45-47,89, 22:72, 25:30,60 இறை வாக்குகள் நேரடியாகக் கூறுகின்றன.

இதுவே ஆதம்(அலை) அவர்களது காலத்திலிருந்து இன்று வரை முஸ்லிம் மதகுருமார்கள் உட்பட அனைத்து மதங்களின் மதகுருமார்களின் வழி கெட்ட நிலையாகும். இம்மதகுருமார்கள் காட்டும் கோணல் வழிகளையே நேர்வழியாக நம்பும் முஸ்லிம்கள் உட்பட, ஆதத்தின் சந்ததிகள் அனைவரும் நாளை நரகை நிரப்பத் தயாராகி வருகிறார்கள் என்பதை அவர்களின் வீண் பெருமை அறிய விடாமல் தடுக்கிறது என்பதை 7:146 குர்ஆன் வசனம் நெற்றிப் பொட்டில் ஓங்கி அடிப்பது போல் கூறுகிறது. புகாரீ 3348, 4741, முஸ்லிம் 379 ஹதீஃத் கள் கூறுவது போல் 1000 பேரில் நரகை நிரப்பும் 999 பேராக அவர்கள் இருப்பதால் அவர்கள் ஒரு போதும் நேர்வழியை அறியமாட்டார்கள். அறிந்தா லும் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். (பார்க்க : 7:175-179, 45:23, 47:25) இதுதான் கடவுளைக் காட்டுகிறோம், நேர்வழியைப் போதிக்கிறோம் என்று பெருமை பேசும் ஒட்டுமொத்த மதகுருமார் களின் ஆகக் கேடு கெட்ட நிலை. இவர்களுக்கு நேர்வழி எட்டிக் காயாகக் கசக்கும்.

கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டும் இம்மதகுருமார்கள் ஆதி காலத்திலிருந்தே இருந்து வருகிறார்கள். ஒரு நபி வரும்போது அவரை மிக மிகக் கடுமையாக எதிர்ப்பார்கள்; அந்நபியின் மறைவுக்குப் பிறகு அவரை உயிருக்கு உயிராக நேசிப்பதாக மக்களை ஏமாற்றி அந்நபி போதிக்காததை எல்லாம் அவர் போதித்ததாகப் பொய்யாகக் கூறி மக்களை ஏமாற்றி நேர்வழிக்குப் பதிலாக கோணல் வழிகளை நேர்வழியாகக் காட்டி மனிதக் கற்பனையான மதங்களை நடைமுறைப்படுத்துவார்கள். அம்மத குருமார்களிலும் 2:213 இறைவாக்குக் கூறுவது போல் போட்டி பொறாமை ஏற்பட்டு அம்மதத்திலும் பல பிரிவுகள், மதங்கள் ஏற்படும். இப்படித்தான் இன்று உலகில் கணக்கிலடங்கா எண்ணற்ற மதங்கள் நடைமுறையில் இருக்கின்றன. மதகுருமார்களின் கற்பனையில் உருவானவையே முஸ்லிம் மதம் உட்பட அனைத்து மதங்களாகும். இம்மதங்களுக்கும் இறைவனுக்கும் கடுகளவும் சம்பந்தமே இல்லை. மதங்கள் அனைத்தும் போதையூட்டு பவையே வெறி ஏற்படுத்துபவையே!

இப்போதையும், வெறியும் எப்படி ஏற்படுகின்றன என்று பாருங்கள்! எல்லாம் வல்ல இறைவனாகிய அல்லாஹ் மனித குலத்திற்கு ஒரே நேர்வழியைத்தான் அனைத்து நபிமார்கள் மூலம் ஆரம்பத்திலிருந்தே அனுப்பிக் கொண்டிருந்தான் (2:38). நபிமார்களின் அந்த நேர்வழிப் போதனையை, ஒரே நேர்வழி மார்க்கத்தை மதங்களாக்கி வயிறு வளர்த்துக் கொண்டிருக்கும் மதகுருமார்கள் அந்நேர்வழி போதனையைக் கடுமையாக எதிர்த்தார்கள். அந்நபிமார்களின் மறைவுக்குப் பிறகு ஏதாவது தந்திரத்தைக் கூறி அந்நபிமார்கள் போதித்த நேர்வழிப் போதனையை தாங்களும் ஏற்பதாக வடிகட்டின பொய்யைக் கூறி அந்தந்தக் காலத்து நபிமார்களின் சமுதாயங்களில் திருட்டுத்தனமாகப் புகுந்து கொள்வார்கள். அந்தந்த நபிமார்கள் உண்மையில் போதித்த நேர்வழி போதனையிலிருந்து வெகு சிலவற்றையும், அவர்கள் போதிக்காத கோணல் வழி போதனைகளில் பெரும்பாலானவற்றையும் நேர்வழிப் போதனைகளாகவும், அந்நபிமார்கள் சொன்னவை என்றும் தார்ப்பாயில் வடித்தெடுத்த பொய்களைக் கூறி, அந்த அந்தக் காலத்து அப்பாவி மக்களை நம்பவைத்துக் கள்ளநோட்டுக்களை அச்சடிப்பது போல் எண்ணற்ற மதங்களைக் கற்பனை செய்து மக்களிடையே பரப்பி வந்தனர். ஷைத்தானும் நரகத்தை நிரப்பும் தனது சபதத்தில் குறியாக இருப்பதால் அவனது முழுமையான ஆதரவை இம்மதகுருமார்களுக்குத் தொடர்ந்து கொடுத்து வருகிறான்.

அதனால் உலகில் கணக்கிலடங்கா மதங்கள் நடைமுறையிலிருக்கின்றன. அது மட்டுமல்ல, “”காக் கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பது போல் எம்மதத்தினரும் தம்மதமே நேர்வழி என்ற குருட்டு நம்பிக்கையுடன், அம்மதத்தையே குரங்குப் பிடியாகப் பிடித்துக் கொள்கின்றனர். மதங்கொள்கின்றனர். வெறிபிடித்துப் பல வன்முறைச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இத்துர்ச் செயல்கள் இறுதி நபி வருகை வரை மட்டுமல்ல, இறுதி நபியின் வருகைக் குப் பிறகும் இன்று வரைத் தொடர்கிறது. உலகம் அழியும் வரைத் தொடரும். நாளை நரகை நிரப்ப விருக்கும் பெருங்கூட்டம் (பார்க்க : 11:118,119, 32:13, புகாரீ : 3348, 4741, முஸ்லிம் 379) இம்மதகுருமார்களின் பின்னால் கண்மூடிச் செல்லத்தான் செய்வார்கள். அதனால் தான் முக்காலமும் முற்றிலும் அறிந்த ஏக இறைவனாகிய அல்லாஹ் பெருங் கூட்டம் கண்டு மயங்க வேண்டாம் என்று இறுதி நபியையே மிகக் கடுமையாக எச்சரித்துள்ளான்.
(பார்க்க : 5:100, 6:116, 17:73-75, 40:4, 69:44-47)

மேலும் பெரும்பான்மைக்கு கடுகளவும் மதிப்பே இல்லை என்று 2:100,110,243, 5:59,103, 6:37,111,116, 7:17,102,131,187, 8:34, 9:8,69, 10:36, 11:17, 12:21,38-40,68,103,106, 13:1, 16:18,75,83, 101, 17:89. 21:24, 23:70, 25:44,50, 26:8,67,103,121, 139,174,185,190,223, 27:61,73, 28:13,57,78, 29:63, 30:6,30,42, 31:25, 34:28,33,36,41, 39:29,49, 40:59, 41:4, 43:78, 44:39, 45:26, 49:4,61,82, 52:47,55,60 போன்ற எண்ணற்ற வசனங்கள் கூறுகின்றன.

இந்த அனைத்து குர்ஆன் வசனங்களையும் சிரமம் பாராது, 29:69 இறைவாக்குக் கூறுவது போல் கடும் ஜிஹாதாகக் கருதி, பெரும் முயற்சி எடுத்து படித்து உணர்கிறவர்கள் உலகில் காணப்படும் அனைத்து மதங்களின் மதகுருமார்களின் பின்னால், அவர்களை நேர்வழி காட்டிகளாக நம்பிக் கண்மூடிச் செல்லும் கூட்டங்களே பெரும் கூட்டம். புகாரீ 3348, 4741, முஸ்லிம் : 379 ஹதீஃத்கள் கூறுவது போல் 1000த்தில் 999 பேர் என்பதை எளிதாக விளங்க முடியும். அதே போல் அல்குர்ஆன் : 2:34,87, 4:173, 6:93, 7:36,40,48,75,76,88,133,146, 206, 10:75, 14:21, 16:22,23,29,49, 17:111, 21:19, 23:46, 25:21, 28:39, 29:39, 31:7, 32:15, 34:31,33, 35:43, 37:35, 38:74,75, 39:59,60,72, 40:27,35,47,48,56,60,76, 41:15,38, 45:8,31, 46:10,20,40, 59:23, 63:5, 71:7, 74:23, இந்த வசனங்கள் அனைத்தையும் மீண்டும் பொறுமையாக 29:69 இறைவாக்குக் கட்டளையிடும் கடும் ஜிஹாதாக முயற்சி செய்து மீண்டும் மீண்டும் அவற்றின் கருத்தை உள்வாங்கிப் பாருங்கள்.

நாங்கள்தான் கடவுளுக்கு நெருக்கமானவர்கள், நேர்வழி காட்டுபவர்கள், கடவுளை அடைய வழி காட்டுபவர்கள், மோட்சம் அடைய வழிகாட்டுபவர்கள், எங்களது வழிகாட்டல் இல்லாமல் நீங்கள் நேர்வழி பெறமுடியாது என்று விதவிதமாக 6:112 இறைவாக்குக் கூறுவது போல், ஏமாற்றும் பொருட்டு அலங்கார வார்த்தைகளைக் கூறுபவர்கள், நாங்கள்தான் மதகுருமார்கள், மார்க்க விற்பன்னர்கள் என்று வீண் பெருமை-ஆணவம்-அகங்காரம் பேசும் ஒட்டுமொத்த இந்த மதகுருமார்கள் எந்தளவு வழிகேடர்கள், மக்களைக் கோணல் வழிகளில்-வழிகேடுகளில் நடைபோட வைப்பவர்கள். 7:175-179, 45:23, 47:25 இறைவாக்குகள் கூறுவது போல் நாயிலும் கேடானவர்கள். படைப்புகளிலேயே இம்மத குருமார்களை விடக் கேடுகெட்ட படைப்பு வேறு எப்படைப்பும் இல்லை என்பதை அறியலாம்.

இந்த அனைத்து மதங்களின் மதகுருமார்களிலும் ஆகக் கேடுகெட்டவர்கள் முழுமைப் பெற்றுள்ள (3:19,85, 5:3) பதிந்துப்பாதுகாக்கப்பட்டுள்ள; அது இறக்கப்பட்ட மூல மொழியான அரபு மொழி யையும் உயிரோடு வைத்துள்ள; இறுதி நெறி நூலான குர்ஆனைத் தங்களிடம் வைத்துள்ள முஸ் லிம் மதகுருமார்கள், அதன் போதனைகளை மனித குலத்தினரிடமிருந்து மறைத்துவிட்டு, இறை வனுக்கு இணை வைக்கும் தங்களின் கற்பனைக் கட்டுக் கதைகளை நேர்வழியாகப் போதிப்பதை விட மோசடி, பெருங்குற்றம் வேறு இருக்க முடியுமா? சிந்தியுங்கள். இவர்களைத் தெளிவாக அடை யாளம் காட்டுகிறது பைஹக்கி 1908 ஹதீஃத்; அது வருமாறு.

நபி(ஸல்) அவர்களின் முன் அறிவிப்பு :
ஒருகாலம் வரும். இஸ்லாத்தின் பெயரைத் தவிர வேறொன்றும் எஞ்சி இருக்காது. குர்ஆன் ஏட்டில் இருக்குமே அல்லாமல் வேறொன்றும் எஞ்சி இருக்காது. அவர்களின் பள்ளிகள் முற்றிலும் நேர்மை தவறியவர்களைக் கொண்டே நிரம்பியிருக்கும். அவர்களின் ஆலிம்கள் என்ற மார்க்க அறிஞர்கள் வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டப் படைப்பாக இருப்பார்கள். தீய செயல்கள் அனைத்தும் அவர்களிலிருந்தே (கோழி குஞ்சுகளைப் பொரிப்பது போல்) பொரிச்சி வெளியாகும். (பைஹகி 1908 மிஷ்காத் பாகம் 1, பக்கம் 91)

இந்த மவ்லவிகளின் ஆகக் கேடுகெட்ட நிலையை இதைவிட வெளிப்படையாக யாரும் சொல்ல முடியுமா? அந்தளவு திட்டமாக, தெளிவாக, நேரடியாக இறைவனின் இறுதித் தூதரே விளக்கி விட்ட பின்னர் பிறரது வேறு விளக்கம் தேவையா? இம்மவ்லவிகளை நம்பி இவர்களின் வழிகாட்டல்படி நடப்பவர்கள் நரகத்தில் தங்களின் இருப்பிடங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா? ஓர் உதாரணம்: இம்மவ்லவிகளில் சிலர், சிலர் மீது காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா (தீர்ப்பு) கொடுத்து அவர்கள் பின்னால் நின்று தொழும் தொழுகை நிறைவேறாது என்று தீர்ப்பளித்து அவர்களைக் கண்மூடி நம்பியவர்களை அதன்படி செயல்படவும் செய்து 3:128, 21:92, 23:52, 42:21, 49:16 போன்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து காஃபிராகச் செய்கிறார்கள்.

பைஹகி 1908 ஹதீஃதில் பள்ளி நிர்வாகிகள் மற்றும் இமாம்கள் பற்றி மிகமிகக் கடுமையாக இழிவாக எச்சரித்திருந்தும், அப்பள்ளிகளுக்குச் செல்லக் கூடாது, அந்த இமாம்கள் பின்னால் தொழக் கூடாது என்று நபி(ஸல்) ஃபத்வா அளிக்கவில்லை. 2:213, 16:44,64 இறைவாக்குகள் கூறுவது போல் ஹலால், ஹராமை நேரடியாக விளக்கக் கடமைப் பட்ட நபி(ஸல்) அவர்கள் தன் கடமையிலிருந்தும் தவறிவிட்டார்களா? அவர்கள் தவறவிட்டதை (நவூதுபில்லாஹ்) அக்கறையுடன் எடுத்து இம்மவ்லவிகள் தீர்ப்பளிக்கிறார்களா? 3:128, 42:21, 49:16 இறைக் கட்டளைகளை நிராகரித்து அல்லாஹ் வுக்கே மார்க்கம் கற்றுக்கொடுக்கும் நிலைக்கு உயர்ந்து அல்லாஹ் விதிக்காததை எல்லாம் மார்க்க மாக விதித்து நம்ரூது, ஃபிர்அவ்ன் போன்ற கொடிய காஃபிர், முஷ்ரிக்குகளின் பட்டியலில் இவர்களும் இணைகிறார்கள் என்பதில் சந்தேகமுண்டா? தீர்ப்பளிக்கும் அல்லாஹ்வே தீர்ப்பை மறுமைக்கென்று ஒத்தி வைத்திருக்கும் நிலையில், இக்கேடுகெட்ட மவ்லவிகள் அல்லாஹ்வின் தனி அதிகாரத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) ஒருவருக்கொருவர் காஃபிர் ஃபத்வா கொடுத்து ஒருவர் பின்னால் மற்றவர் தொழக்கூடாது என்று ஃபத்வா கொடுத்து ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் (பார்க்க : 21:92,93, 23:52,53) இம்மவ்லவிகள் நாளை நரகை நிரப்பும் 99.9% பெருங்கூட்டத்தினருடன் இருப்பார்களா? 0.1% சுவர்க்கக் கூட்டத்தினருடன் இருப்பார்களா? சிந்தியுங்கள்! ஆம்! இம் மதகுருமார்களும் அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் 99.9% நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒருவரை ஒருவர் சபிப்பதைத் திட்டுவதை 7:35-41, 33:36,66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 போன்ற குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து அறிபவர்கள் மட்டுமே உணர்வார்கள். அம்மதகுருமார்களிலும் கேடிலும் கேட்டில் விழுந்து கிடப்பவர்கள் குர்ஆன் முஸ்லிம் களின் வேதம், அதை மற்றவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று பிதற்றும் மவ்லவிகளே. அதிலும் 34:31,32,33, 40:47,48 வசனங்கள் அடையாளம் காட்டுவது பெருமையடிக்கும் இம்மதகுருமார் களையே. 39:72 இறைவாக்குப் பெருமையடிப் போருக்குக் கூலி நரகமே என்று திட்டமாக அறிவிக்கிறது.

7:146 சொல்லும் வீண் பெருமையடிக்கும் இம் மூட முல்லாக்களின் குருட்டுப் ஃபத்வாவை ஏற்று, பெரும்பாலான இமாம்களின் பின்னால் நின்று தொழுவதைத் தவிர்ப்பவர்கள் 42:21 சொல்வது போல் அல்லாஹ் விதிக்காததை விதித்து, 49:16 சொல்வது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்கும் மேதைகளாகி, கொடிய ஷிர்க்கில் மூழ்குகிறார்கள் என்பதை அறிவார்களாக. பிறை விஷயத்தில் இம்மூட முல்லாக்களின் வழிகேட்டை நன்றாகப் புரிந்து கொண்ட சகோதரர்களும், இம் மூட முல்லாக்களுக்கு மரியாதை கொடுத்து, சில இமாம்களுக்குப் பின்னால் தொழக் கூடாது, கட மையான மார்க்கப் பணிக்குக் கூலி கொடுக்கலாம். தங்களின் நடைமுறைகளைக் கொண்டு சமுதாயத்தை நேர்வழிப்படுத்த முடியும் போன்ற மூட நம்பிக்கைகளில் இம்மூட முல்லாக்களையே பின் பற்றுவது வேதனையான விஷயமாகும். அவர்கள் 9:31 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து சுயமாக குர்ஆன் வசனங்களைப் படித்துத் திருந்தினால் தப்பினார்கள் (பார்க்க : 33:36,66-68).

இப்போது ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்களிலிருந்து இன்று வரை எத்தனை மதங்கள் கற்பனை செய்யப்பட்டுள்ளனவோ அவை அனைத்தின் மத குருமார்களை விட ஆகக் கேடு கெட்டவர்கள், 16:25 குர்ஆன் வசனம் கூறுவது போல், தங்கள் பாவச் சுமைகளை முழுமையாக சுமப்பது மட்டுமில்லாமல், இவர்கள் வழி கெடுத்த உலக மக்கள் அனைவரின் பாவச் சுமைகளையும் சுமக்கப் போகிறவர்கள் முஸ்லிம் மதகுருமார்களே! இவர்கள் சுமப்பது மிகமிகக் கெட்டது தானே? எப்படி என்று விரிவாகத் தருகிறோம். கவனம் எடுத்துப் படித்து விளங்குங்கள்.

ஆதம்(அலை) அவர்கள் காலத்திலிருந்து ஈசா (அலை) அவர்கள் காலம் வரை எண்ணற்ற நபிமார்கள் இவ்வுலகிற்கு வந்திருந்தாலும், அவர்களுக்கு இறைவன் புறத்திலிருந்து நேர்வழிச் செய்திகள் வந்தி ருந்தாலும், 5:3 இறைவாக்குக் கூறுவது போல் அவை முழுமை பெறவும் இல்லை. பதிந்து பாதுகாக்கப்பட வும் இல்லை. மேலும் அவை ஒரு குறிப்பிட்ட இனம், நாடு, பகுதி எனக் குறிப்பிட்டே வந்தன. அவை அனைத்தும் தற்காலிகமானவையே அல்லாமல் நிரந்தரமானவையல்ல. அதனால்தான் அவை இறக்கப்பட்ட மூல மொழிகளில் எம்மொழியும் இன்று புழக்கத்தில் இல்லை. பேச்சு வழக்கில் இல்லை. அம்மொழிகள் அனைத்தும் செத்த மொழி களாகிவிட்டன (Dead languages) முன்னைய நெறி நூல்களின் (வேதங்களின்) உண்மை நிலையை உலகில் யாராலும் நிலைநாட்ட முடியாது.

அந்நபிமார்களின் மறைவுக்குப் பிறகு, அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த புரோகிதப் பண்டாரங்கள் திருட்டுத்தனமாக அச்சமூகங்களில் புகுந்து, இறைவன் சொல்லாதவற்றையும், அத்தூதர் சொல்லாதவற்றையும் சொன்னதாக அப்பட்டமான பொய்களைக் கூறி முன்னைய இறைச் செய்திகள் அனைத்தையும் (வஹி) மாசு பட வைத்து, கலப்படங்கள் செய்து பல வேதங்களைக் கற்பனை செய்து விட்டனர். உதாரணமாக, தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று பிரகாடனப் படுத்திய (பார்க்க : 5:111) ஈஸா(அலை) அவர்களும், அவர்களது சீடர்களும் வாழ்ந்த காலத்தில் அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்த சவுல், ஈஸா(அலை) அவர்கள் அல்லாஹ் வசம் உயர்த்தப்பட்ட பின் (4:157,158) ஈசா (அலை) தனக்குக் காட்சி தந்ததாக அப்பட்டமான பொய்யைக் கூறி இறைவனுக்கு இணை வைக்கும் முக்கடவுள் கொள்கையை கற்பனை செய்து மக்களிடையே பரப்பினார். அந்த சவுலே பரிசுத்த பவுல் என்ற பெத்தப் பேருடன் மகிமைப்படுத்தப்படுவது டன், அவர் கற்பனை செய்த முக்கடவுள் கொள் கையே கிறித்தவ மதமாகி உலகின் ஆகப் பெரிய மதமாக இருக்கிறது. ஷைத்தானும் தன்னுடைய நேரடி முகவர்களான இம்மதகுரு மார்களுக்குப் பேருதவிகள் செய்ய, கோணல் வழிகளான அவ் வேதங்களையும், அவை போதிக்கும் மதங்க ளையும் குரங்குப் பிடியாக உறுதியாகப் பிடித்துக் கொண் டார்கள். தங்கள் தங்கள் மதங்களைப் பற்றிப் பெருமை பேசுவதோடு அதில் உறுதியாகவும் இருக்கிறார்கள். காரணம் அவர்கள் யாரிடமும் முழுமை பெற்ற பதிந்து பாதுகாக்கப்பட்ட நெறிநூல் (வேதம்) இல்லவே இல்லை. அவர்களின் மதகுரு மார்கள் சொல்வதுதான் அவர்களுக்கு வேதவாக்கு. மதகுருமார்கள் வேதவாக்காகச் சொல்லுபவை சரியா? தவறா? என உரைத்துப் பார்க்க அவர்களிடம் பாதுகாக்கப்பட்ட நெறிநூல்(வேதம்) இல்லவே இல்லை.

இறுதி இறைத்தூதர் வந்து, அத்தூதருக்கு இறுதி நெறிநூல் இறக்கப்படும்போது, அதாவது ஒரே நேர் வழி (6:153) வஹியாக அறிவிக்கப்படும்போது கலப்படமான மாசுபட்ட தங்கள் தங்கள் வேதங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, முன்னைய மத குருமார்களும், அவர்களின் குருட்டுப் பக்தர்களும் இறுதித் தூதரையும் குர்ஆனையும் கச்சையைக் கட்டிக் கொண்டு கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது இறைவன் முஸ்லிம்களுக்காக இறக்கிய ருளிய நேர்வழி கருத்துக்கள் வருமாறு :

உங்கள் பொருள்களிலும், உங்கள் உயிர்களிலும் திட்டமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்க ளுக்கு முன் நெறிநூல் (வேதம்) கொடுக்கப்பட்டோ ரிடமிருந்தும் இணை வைப்போரிடமிருந்தும் நிந்த னைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு (இறைவ னுக்கு) பயபக்தியுடன் நடந்தால் அதுவே உறுதி மிக்கச் செயலாகும். (3:186)

நன்மையும், தீமையும் சமமாகமாட்டா, நீர் (தீமையை) மிக அழகியதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக! அப்பொழுது எவருக்கும் உமக்கு மிடையே பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பரைப்போல் ஆகிவிடுவார். (41:34)

இந்த இறைக்கட்டளைகளுக்கு அடிபணிந்து நபி(ஸல்) அவர்கள் அன்று மக்கா, மதீனாவிலிருந்த மாற்று மதத்தினர், மாற்றுக் கொள்கையுடையோர் அவர்கள் நம்பிக்கை வைத்திருந்த, கலப்படமாகி, மாசு பட்டிருந்த வேதங்களையுடைய மதகுருமார் களின் வழிகேடுகளை நேர்வழியாக நம்பிச் செயல் பட்ட மக்கள் இஸ்லாத்தையும், நபி(ஸல்) அவர்களையும் மிகமிகக் கடுமையாக எதிர்த்த நிலையிலும், கடுமையாக விமர்சித்த நிலையிலும், நபி(ஸல்) அவர்கள் 3:186, 41:34 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து அவர்களுடன் அன்பாகப் பழகினார்கள், அவர்களின் சுக துக்கக் காரியங்களில் கலந்து கொண்டார்கள், வியாபாரத் தொடர்பு வைத்திருந்தார்கள், தேவையற்ற பகைமையைக் காட்டவில்லை. இஸ்லாமிய மார்க்கத்தையும், நபி (ஸல்) அவர்களையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு, அவர்கள் மீது திணிக்கப்பட்ட போர்களில் மட்டுமே தற்காப்புப் போர்கள் புரிந்தாகத்தான் வரலாறுகள் கூறுகின்றன. 2:191, 9:6, 47:4, 60:8,9 போன்ற இறைக் கட்டளை களுக்கு முற்றிலும் அடிபணிந்து நபி(ஸல்) அவர்கள் செயல்பட்டார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்னர் எப்போது இம்மதகுருமார்கள் நயவஞ்சகமாக, திருட்டுத்தனமாக இந்த முஸ்லிம் உம்மத்தில் புகுந்தார்களோ அப்போதே தூய இஸ்லாமிய மார்க்கம் இக்கயவர்களால் மதமாக்கப்பட்டு, மற்ற மதங் களில் நிறைந்து காணப்படும் அனைத்து ஷிர்க்்குகள், பித்அத்கள், மூட நம்பிக்கைகள், அநாச்சாரங்கள் அனைத்தையும் முஸ்லிம்களிடையே நுழைத்துப் பிழைப்புக்கு வழி கண்டார்கள். தூய இஸ்லாத்தையும் மற்ற மதங்களைப் போல் ஒரு மதமே என்ற பொய்த் தோற்றத்தை ஷைத்தானின் துணையுடன் நிலைநாட்டி விட்டார்கள்.
இன்று முஸ்லிம்களிடையே இம்மதகுருமார் களின் ஆதிக்கமே நிறைந்து காணப்படுகிறது. புகாரீ 3348, 4741, முஸ்லிம் 379 ஹதீஃத்கள் கூறுவது போல் நரகை நிரப்ப இருக்கும் ஆயிரத்தில் 999 பேர் அவர்கள் பின்னால் தானே செல்வார்கள். இஸ்லாத் தில் ஆலிம்-அவாம் வேறுபாடு இல்லவே இல்லை. ஒவ்வொரு ஆணும் பெண்ணும் 2:186, 7:3, 18:102-106, 33:36 இன்னும் இவை போன்ற குர்ஆன் வசனங் களுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு இம்மவ்லவிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டு குர்ஆன் வசனங்க ளையும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களையும் நேரடி யாகப் பார்த்து விளங்கி நடப்பவர்கள் மட்டுமே ஆயிரத்தில் ஒரே ஒரு நபராக சுவர்க்கம் புகுவார்.

இந்த மவ்லவிகள் எந்தளவு கேடுகெட்டவர்கள் வழிகேடர்கள் என்று பாருங்கள்.
உலகத்தில் காணப்படும் இஸ்லாம் அல்லாத அனைத்து மதங்களும் ஒரு குறிப்பிட்ட நாடு, இனம், பகுதி, கூட்டம் என்ற அடிப்படையில் அனுப்பப் பட்ட நபிமார்களுக்குப் பின் அந்தந்த சமூகத்தில் திருட்டுத்தனமாகப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு நுழைந்த அந்தந்த மதகுருமார்களின் கற்பனையில் உருவானவை. எனவே அனைத்து மதத்தினரும் “காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்ற அடிப்படையில் தங்கள் தங்கள் மதங்க ளில் பிடிவாதமாக இருப்பதில் ஓரளவாவது அர்த்த முண்டு. தங்களின் மதக் கொள்கையை உரசிப் பார்க்கும் உரை கல்லான பதிந்து பாதுகாக்கப்பட்ட நெறிநூலும் (வேதம்) அவர்களிடம் இல்லை. அவை இறக்கி அருளப்பட்ட மொழிகளும் இல்லை. செத்த மொழிகளாகி விட்டன. அவரவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார்கள் சொல்வது தான் அவர்களிடம் வேதவாக்கு. எனவே தத்தமது மதமே சரியா னது, நேர்வழிகாட்டக் கூடியது. சுவர்க்கம் சேர்ப் பது என்ற குருட்டு நம்பிக்கையில் இருப்பதில் ஓரள வாவது நியாயமுண்டு. ஆயினும் நாளை நரகமே!

இந்த முஸ்லிம் மதகுருமார்களுக்கு ஏற்பட்டுள்ள கேடு என்ன? இறுதி வாழ்க்கை நெறிநூல் ஒரு புள்ளி, ஓர் எழுத்து முதல் மாற்றப்படாத நிலையில் முழுமை பெற்ற நிலையில் (5:3, 15:9) கடந்த 1450 ஆண்டுகளாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குர் ஆன் இறங்கிய அரபு மொழி இன்றும் அழிந்து விடாமல் பல நாடுகளில் பேச்சு வழக்கில் இருக்கிறது. ஐ.நா.சபையில் பேச அங்கீகரிக்கப்பட்ட மொழிகளில் ஒரு மொழியாக இருக்கிறது. யார் வேண்டுமானாலும் அதன் உண்மை நிலையை உரைத்துப் பார்க்கும் உரைகல்லாக குர்ஆன் இருக்கிறது. குர்ஆன் நாடு, இனம், மொழி, பகுதி, கூட்டம் என எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் அகில உலக மக்களுக்கும், ஆதத்தின் மக்கள் அனைவருக்கும், அவர்கள் நாளை சந்திரனிலோ, செவ்வாயிலோ, போய் குடியிருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டும் ஒரே நூலாக, முழுமை பெற்ற நூலாக இருக்கிறது என்று அதே குர்ஆனின் பல நூற்றுக்கணக்கான வசனங்கள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறுகின்றன.

குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் அதில் நாஸ்-மனிதர்கள் என்று 241 இடங்களிலும், இன்சான் என்று 65 இடங்களிலும் இன்ஸ் என்று 18 இடங்களிலும் ஆக 324 இடங்களில் ஒட்டு மொத்த மனிதர்களைக் குறிப்பிட்டிருப்பது இம் மவ்லவிகளின் கண்ணில் படுவதில்லையா? அதிலும் பல இடங்களில் யா அய்யுஹன்னாஸ்-ஓ மனிதர்களே என்று மனிதர்களையே அழைத்து அறிவுரை கூறி இருப்பது இம்மவ்லவிகளின் கண்ணில் படுவதில்லையா? யா அய்யுஹன்னபிய்யு என்று பல இடங்களில் காணலாம். ஆனால் ஒரே ஒரு இடத்தில் கூட யா அய்யுஹல் உலமாவு என்று இல்லவே இல்லை. ஆம்! 7:146,179, 45:23, 47:25, இறை வாக்குகள் கூறுவது போல், அவர்களின் ஆணவம் மற்றும் பெருமை காரணமாக குர்ஆன் வசனங்களை விட்டும் அல்லாஹ்வாலேயே இம்மதகுருமார்கள் திருப்பப்படுகிறார்கள். அவர் கள் வீண் பெருமையை விடாதவரை ஒருபோதும் நேர்வழியடையவே முடியாது என்பதை இவ்வசனங்கள் உறுதி செய்யவில்லையா?

அதன் விளைவு முழுமை பெறாத, பதிந்துப் பாது காக்கப்படாத, குறிப்பிட்ட நாட்டுக்கு, இனத்திற்கு, ஊருக்கு எனத் தற்காலிகமாக, தற்சமயமாகக் கொடுக்கப்பட்ட நெறிநூல்கள் அந்தந்த மதகுரு மார்களால் மாசுபடுத்தப்பட்டு வேதங்களாக்கப் பட்டதை, ஒவ்வொரு மதத்தினரும் தூக்கிப் பிடித்துச் சொந்தம் கொண்டாடுவது போல், இந்த மவ்லவிகளும் அம்மதகுருமார்களையே சுயநலத்துடன் பின் பற்றி குர்ஆனின் நேரடி போதனைகளுக்கு முற்றிலும் முரணாக குர்ஆன் முஸ்லிம்களின் வேதம். மற்ற மதத்தினருக்கு குர்ஆனில் எவ்வித உரிமையும் இல்லை. குர்ஆனை மாற்று மதத்தினருக்குக் கொடுக்கக் கூடாது. அவர்கள் அரபு மொழி படித்து டாக்டரேட் பட்டம் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு குர்ஆன் விளங்காது. ஏன்? அரபு மொழி படித்து மவ்லவியாகாத முஸ்லிம்களுக்கே, குர்ஆனின் மொழி பெயர்ப்புகளைப் படித்து விளங்க முடியாது என்று கூறி ஒட்டுமொத்த, மனித குலத்தினரையும், குறிப்பாக மவ்லவி அல்லாத முஸ்லிம்களையும் குர்ஆனைப் படித்து விளங்குவதைத் தடுத்து வருகின்றனர். இதை விட வழிகேடுண்டா?
அதனால் மற்ற மதத்தினருக்கு இயற்கையாகவே குர்ஆன் மீது ஒரு வெறுப்பும், அதனால் துவேசமும் வளருமா? வளராதா? அவர்கள் குர் ஆனை இழிவுபடுத்த முற்படுவார்களா? இல்லையா? பத்திரிகைச் செய்திகளில் வந்தது போல் எரிக்கத் துணிவார்களா? துணியமாட்டார்களா? டாய்லட் பேப்பராக உபயோகிக்க முற்படுவார்களா? இல்லையா? (நவூதுபில்லாஹ்) இன்னும் பலவிதமாக குர்ஆனை இழிவுபடுத்த முற்படுவார்களா? இல்லையா? இத்தீய விளைவுகளுக்கு முஸ்லிம் மதகுருமார்கள் காரணமா? மற்ற மதங்களின் மதகுருமார்கள் காரணமா? எய்தவன் இருக்க அம்பை நோகுபவன் அறிவாளியா? அறிவு கெட்டவனா? சொல்லுங்கள்.

இந்த அறிவுகெட்ட மவ்லவிகள் 2:159 இறை வாக்குக் கூறுவது போல் குர்ஆன் கருத்துக்களை திரிக்காமல், வளைக்காமல், மறைக்காமல் உள்ளது உள்ளபடி சொன்னால் இப்படிப்பட்ட கேடுகள் விளையுமா? இம்மவ்லவிகள் அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் அனைவரதும் கொடிய சாபத்திற்கு ஆளாகிறார்களா? இல்லையா? இக்கேடுகெட்ட நிலை எதனால் ஏற்படுகிறது. அல்குர்ஆனின் நூற்றுக் கணக்கான வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி, ஒரே தூய மார்க்கத்தைப் பல மதங்களாக்கி வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வதுதானே? அற்ப உலகியல் ஆதாயங்கள் அடைய முற்படுவதால் தானே!

இம்மவ்லவிகள் மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொள்ளாமல், தூய எண்ணத்துடன் மறுமையில் அல்லாஹ்விடம் கூலியை மட்டுமே எதிர்பார்த்து குர்ஆனில் உள்ளதை உள்ளபடிச் சொல்வதாக இருந்தால், அப்படித் திறந்த மனதுடன் சொல்ல முன்வந்தால் என்ன நடக்கும்?

மாற்று மதங்களின் சகோதரர்களே, சகோதரிகளே நீங்கள் உங்கள் கைகளில் வைத்திருக்கும் வேதங்கள் முன்காலத்தில் ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கு, இனத்தினருக்கு, மொழியினருக்கு, ஊரி னருக்கு தற்காலிகமாக கொடுக்கப்பட்டவை. அவை முழுமை பெறவுமில்லை. அவற்றின் மூல மொழிகள் பேச்சு வழக்கில் இல்லாமல் செத்துப் போனதால் நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள உங்கள் மதகுருமார்கள், தங்களின் அற்ப உலக ஆதாயம் கருதி அவற்றில் பல திரிபுகளைச் செய்துள்ளனர். அவற்றில் ஒருசில இறைவன் அருளியதாக இருந்தா லும், பெரும்பாலானவை மதகுருமார்களின் கைச்சரக்காகும். மேலும் நீங்களும், நாங்களும் நம்பிக்கை வைத்துள்ள அந்த ஒரே இறைவன் முன் னைய வேதங்கள் அனைத்தையும், ஆட்சியாளர் கள் முன்னர் நடைமுறையிலிருந்த கரன்சி நோட்டுகளை இரத்து செய்வது போல் இரத்து செய்து விட்டான்.

இறைவன் இறுதியில் இறக்கியருளியுள்ள முழுமை பெற்ற இறுதி வாழ்க்கை நெறிநூல் உலக மக்கள் அனைவருக்கும் சொந்தமானது. அனைத்து மதத்து மக்களுக்கும் சொந்தமானது. அதன் கருத்துக்களை உங்களுக்குத் தெரிந்த மொழிகளில் படித்துத் தெளிவாக விளங்க முடியும். நீங்கள் நேர் வழியை அறிந்து நடப்பதற்கு எந்த மதகுருவின் இடைத்தரகும் தேவை இல்லை. 2:186, 7:3, 9:31, 18:102-106, 33:36, 59:7 குர்ஆன் வசனங்கள் இடைத்தரகைக் கடுமையாகக் கண்டிக்கின்றன. மதகுருமார்களும், அவர்களை இடைத் தரகர்களாகக் கொண்டு, அவர்களின் வழிகாட்டல்படி நடப்பவர்கள் நாளை நரகை நிரப்புபவர்களே என்று குர்ஆனில் உள்ளது உள்ளபடி சொல்லியிருந்தால், மாற்று மதத்தினருக்கு குர்ஆனில் வெறுப்பு ஏற்பட்டிருக்குமா? எரிக்கத் துணிந்திருப்பார்களா? இன்னும் பல வகையில் இழிவுபடுத்தத் துணிவார்களா? சொல்லுங்கள்!

மேலும் எண்ணற்ற நபிமார்கள் வெவ்வேறு சமூகங்களுக்கென்று இருந்தது போல், முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம்களுக்குரிய நபி என்ற மூட நம்பிக்கையில் நமது நபி, எம்பெருமானார், எங்கள் நபி என்று இம்மவ்லவிகள் சுயநலத்துடன் பிதற்று கின்றனர். குர்ஆன் என்ன சொல்கிறது? ஒட்டு மொத்த மனித குலத்தினருக்கும் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்கள் என்று தெளிவாக நேரடியாகக் கூறுகிறது (பார்க்க : 21:107)

இந்த மவ்லவிகள் மனித குலத்திற்கே சொந்த மான நிறைவு பெற்ற சம்பூரணமான பதிந்து பாதுகாக்கப்பட்ட நெறிநூல் குர்ஆனையும் ஏனைய இரத்து செய்யப்பட்ட வேதங்களைப் போல் ஒரு வேதம் என்றும், அது முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்றும் தொடர்ந்து கடந்த ஆயிரம் வருடங்களாக அப்பட்டமான பொய்யை கொய பல்ஸ் தத்துவப்படிக் கூறி மக்களின் உள்ளங்களில் பதிய வைத்து விட்டார்கள். அதேபோல் அகில உலக மக்களுக்கும் இறுதி இறைத்தூதராக அனுப் பப்பட்ட முஹம்மது(ஸல்) அவர்களை முஸ்லிம்க ளுக்குரிய இறைத்தூதராக்கி அதையும் கடந்த ஆயிரம் வருடங்களாக தொடர்ந்து கொயபல்ஸ் தத்துவப்படிக் கூறி மக்களின் உள்ளங்களில் பதிய வைத்து விட்டார்கள். அதன் விளைவு 1450 வருடங் களுக்கு முன் மக்கள் அழிவின் விளிம்பில், நரக நெருப்பின் விளிம்பில் நின்றது போல் இன்றைய ஆதத்தின் சந்ததிகளை அழிவின் விளிம்பில், நரக நெருப்பின் விளிம்பில் இம்மவ்லவிகளே நிற்க வைத்திருக்கிறார்கள்.

குன்றின் மேல் 1000 வாட்ஸ் பவருள்ள வெள்ளை பல்பாக இருக்க வேண்டிய குர்ஆனை, குடத்திலுள்ள 0 வாட்ஸ் பவருள்ள மஞ்சல் விளக்கைப் போல் இம்மவ்லவிகள் காட்டி வருகிறார்கள். உலகத்திற்கே இம்மவ்லவிகள் இழைத்துள்ள அநீதி உங்களுக்குப் புரியவில்லையா? ஆக 16:25 இறை வாக்குக் கூறுவது போல் நாளை மறுமையில் உலக மக்களின் பாவங்களையும் சேர்த்தே இம்மவ்லவிகள் சுமக்க இருக்கிறார்கள்.

அதிலும் 1985, 86, 87 ஜூன் வரை எம்மோடு மிக நெருக்கமாகப் பழகிய திருவாளர் பீ.ஜை. நேரடி குர்ஆன் கருத்துக்களை ஏற்று ஆலிம்-அவாம் வேறுபாடு இல்லை. ஒவ்வொரு ஆணும், பெண்ணும் சுயமாக குர்ஆன், ஹதீஃதை விளங்கி அதன்படி நடக்க வேண்டும், புரோகித வர்க்கம் இல்லை, நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வதில்லை. இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கு இல்லை, கடமையான மார்க்கப் பணிக்கு கூலி-ஹராம் கூடாது. இன்னும் இவை போல் குர்ஆன், ஹதீஃத் நேரடியாகக் கூறுபவற்றை ஏற்று 1986 ஏப்ரல் முதல் 1987 ஜூன் வரை அந்நஜாத்தில் எழுதியவர், 2:146, 6:20, 7:175-179, 45:23, 47:25 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் நன்கு அறிந்த நிலையில் சுயலாபம் கருதி, அதாவது அற்பமான உலகியல் பேர், புகழ், பட்டம், பதவி, பணம் காசு, ஜால்ரா போடும் கூட்டம் என புதியதோர் கோணல் வழியை கற்பனை செய்து இளைஞர், இளம் பெண்களை வழிகெடுத்து நரகில் தள்ளும் பீ.ஜை. மற்ற மவ்லவிகள் அனைவரையும் விட பெரும் வழிகேட்டில் இருக்கிறார்.

எப்படி என்று பாருங்கள்!
சுன்னத் ஜமாஅத்தினர் குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் நான்கும் மார்க்க ஆதாரங்கள் என்ற அடிப்படையில் செயல்படுகின்றனர். எனவே குர்ஆன்,, ஹதீஃதில் இல்லாதவற்றை இமாம்களின் பெயரால் மார்க்கம் ஆக்குகின்றனர். பீ.ஜையோ குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்று மக்களை ஏமாற்றி வருகிறார்.

முதலில் அவர் பேர் புகழுக்காக 7:71, 12:40, 53:23 இறைவாக்குகள் கண்டிப்பதைக் கண்டு கொள்ளாமல் சுயமாகப் பெயரிட்டுப் பிரபல்யபடுத்தி வருகிறாரே “”தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” இதற்கு குர்ஆன், ஹதீஃதில் ஆதாரம் இருக்கிறதா? இல்லையே! குர்ஆன், ஹதீஃத்படி மட்டுமே நடக்கிறோம் என்பதில் பெயரிலேயே பொய்யராகி விட்டாரா? இல்லையா? தவ்ஹீத் ஜமாஅத் என்றால் தமிழில் “”ஏகத்துவக் கூட்டமைப்பு” என்பதாகும். அதாவது அவர் அல்லாஹ்வுடன் கூட்டு வைத்திருக்கிறாராம்.

இணை, துணை, கூட்டு, தரகர், தேவை எதுவுமே இல்லாத ஏகன் இறைவனுடன் கூட்டு என்றால், அது ஷிர்க்கிலும் கொடிய ஷிர்க்கா இல்லையா? “”தவ்ஹீத்வாதி” என்றால் ஏகத்துவத்தை நிலை நாட்டுபவன்-நேர்வழி நடப்பவன் என்பதே பொருளாகும். இப்படி தன்னைத்தானே பீற்றிக் கொள்பவன் 4:49, 16:9, 17:84, 20:123, 53:32 வசனங்கள் இன்னும் நேர்வழியில் நடப்பது அதா வது தவ்ஹீத்வாதி யார் என்பதை அல்லாஹ் மட் டுமே அறிவான் என்று கூறும் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ர், ஷிர்க்்கில் மூழ் குவதா? இல்லையா? (பார்க்க : 16:9, 17:84,20:123)

“”முஸ்லிமீன்” அல்லாஹ் இட்ட பெயர் (22:78) நபிமார்கள் செய்த பணியையே முழுமையாக ஒரு வன் செய்தாலும் தன்னை “”மினல் முஸ்லிமீன்-முஸ்லிம்களில் உள்ளவன் என்று மட்டுமே கூறவேண்டும். நபிமார்கள் அனைவருமே தங்களை முஸ்லிம் களில் உள்ளவர்கள் என்று கூறியதை 2:131,132, 5:111, 7:126, 10:72,84, 12:101 போன்ற இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் பாருங்கள்!

குர்ஆனில் முஃமின் என்று 15 இடங்களிலும், முஃமினன் என்று 7 இடங்களிலும், முஃமினாத் என்று 22 இடங்களிலும், முஃமினத் என்று 6 இடங்களிலும், முஃமினூன் என்று 35 இடங்களிலும், முஃமினீன் என்று 144 இடங்களிலும், முஃமினைனி என்று 1 இடத்திலும் ஆக மொத்தம் 230 இடங்களில் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். மேலும் “”யாஅய்யுஹல்லதீன ஆமனூ”-ஓ ஈமான் கொண்டவர்களே என்று அழைத்து பல இடங்களில் அறிவுரை கூறியுள்ளான். அதேபோல் முஸ்லிமீனும் பல திரிபுகளில் எண்ணற்ற இடங்களில் இடம் பெற் றிருந்தாலும் “”ஓ முஸ்லிம்களே” என்றோ “”ஓ உலமாக்களே” என்றோ ஒரேயொரு இடத்திலும் அழைத்து அறிவுரை கூறியதாக இல்லவே இல்லை. ஓ மனிதர்களே, ஓ ஈமான் கொண்டவர்களே, ஓ நபியே, ஓ ரஸூலே என்று அழைத்து அறிவுரை கூறியுள்ள அல்லாஹ் ஒரே ஒரு இடத்தில் கூட ஓ முஸ்லிம்களே என்றோ ஓ உலமாக்களே என்றோ அழைத்து அறிவுரை கூறாத காரணம் என்ன? சிந்திக்க வேண்டாமா?

ஆம்! உண்மை இதுதான். பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கும், வீண் பெருமை பேசும் உலமாக்களுக்கும் அறிவுரை கூறுவது பலன் தராது. எருமை மாட்டில் மழை பெய்த கதையாகத்தான் இருக்கும். அதனால் தான் பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கும், பெருமை பேசும் ஆலிம்களுக்கும் அல்லாஹ் அறி வுரை கூற வில்லை. இதை நாம் கற்பனையாகக் கூற வில்லை. 51:55 குர்ஆன் வசனம் உபதேசம் முஃமின் களுக்கு மட்டுமே பயனளிக்கும் என்றும் 7:146 குர்ஆன் வசனம் ஆலிம், மவ்லவி, அல்லாமா என வீண் பெருமை பேசும் மதகுருமார்களை அல்லாஹ் குர்ஆன் வசனங்களை விட்டும் திருப்பி விடுவதாகவும், குர்ஆன் வசனங்களை நம்பமாட்டார்கள், நேர் வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள், கோணல் வழிகளையே அதாவது மதங்களையே நேர்வழி யாகக் கொள்வார்கள் என்று கூறுவதையும் மட்டுமே மக்கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம்.

உண்மையான முஃமின்களுக்கு மட்டுமே குர்ஆன் வசனங்கள் எடுத்துக் காட்டப்பட்டால் சுய விளக்கம் கொடுக்காமல், மறுப்பேதும் கூறாமல் அப் படியே ஏற்று அதன்படி நடப்பார்கள். இந்த உண்மையை குர்ஆனின் 23ம் அத்தியாயமும் மற்றும் 2:8, 93,94,223,285, 3:68,110,139, 4:94,103,115,124, 162, 5:11, 8:2,3,4, 16:97, 17:01, 20:75,112, 21:94, 33:36, 40:40, 49:10, 64:13 இன்னும் இவை போல் எண்ணற்ற வசனங்கள் முஃமின்களின் சிறப்புகளை விலாவாரியாகத் தருகின்றன. இவ்வளவு சிறப்புகள் இருந்தும் எந்த ஒரு முஸ்லிமுக்கும் தன்னை முஃமின் என்று சொல்லிக் கொள்ளவோ, பிற ஒரு முஸ்லி மைப் பார்த்து முஃமின் என்று சொல்லவோ மார்க் கம் அனுமதிக்கவில்லை. ஃகனீமத் பொருட்களை நபி(ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு நபி தோழர் இன்னொரு நபி தோழரைக் காட்டி அவர் முஃமின் அவருக்குக் கொடுங்கள் என்று நபி(ஸல்) அவர்களிடம் பரிந்துரை செய்த போது முஃமின் என்று சொல்லாதே முஸ்லிம் என்று சொல் என்று நபி(ஸல்) அவர்கள் மீண்டும் மீண்டும் எச்ச ரித்தும் நபி தோழர் முஃமின் என்று சொல்ல நபி (ஸல்) அவர்கள் முஃமின் என்று சொல்லாதே முஸ் லிம் என்று சொல் என்று மீண்டும் எச்சரித்ததாக ஹதீஃத் கூறுகிறது. (புகாரீ : 1478)

இப்போது நாம் சிந்திக்க வேண்டும். குர்ஆனில் எண்ணற்ற இடங்களில் முஃமினீன் என்ற பதம் இருந்தும், தன்னையோ, பிறரையோ முஃமின் என்று சொல்லவே அனுமதி இல்லாதபோது 4:49, 53:32 இன்னும் பல இறைவாக்குகளுக்கு முரணாக அவற்றை நிராகரித்து தம்மைத் தாமே தவ்ஹீத்வாதி-ஏகத்துவவாதி, தவ்ஹீத் ஜமாஅத்-ஏகத்துவக் கூட்ட மைப்பு என்று பீற்றிக் கொள்ள மார்க்கம் அனுமதிக்குமா? இறைவனுடன் கூட்டு வைப்பது ஷிர்க்கிலும் ஆகக் கொடிய ஷிர்க் இல்லையா? சிந்தியுங்கள்.

அதுவும் ததஜவினர் உலகளாவிய தூய மார்க்கத்தைத் தமிழ்நாட்டுக்குள் முடக்க மார்க்கம் அனுமதிக்குமா? அதுபோல்தானே உலகளாவிய பிறைகளை தமிழ்நாட்டுக்குள் முடக்கி அற்ப உலகியல் ஆதாயம் அடைய முற்படுகிறார்கள் ததஜவினர். குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என வாயள வில் சொல்லி மக்களை ஏமாற்றும் பீ.ஜை. உண்மை யில் காஃபிர்களின் வழிமுறைகளையே பின்பற்று கிறார். இந்த உண்மையை ததஜவில் இருந்து அதன் உண்மை நிலையை அறிந்து, அதை விட்டும் தெளபா செய்து வெளிவந்த ஈரோட்டுச் சகோதரர் ஒருவர் பிட்டுப்பிட்டு வைத்திருக்கிறார். அது பிரிதொரு ஆக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

குர்ஆனின் எண்ணற்ற வசனங்களை நிராகரித்து (2:39படி காஃபிராகி) அவர் வழிகெடுவதோடு, மத்ஹபுகளை விட்டு தெளபா செய்து வெளிவந்த இளைஞர்கள், இளம் பெண்களை அதைவிட பெரும் வழிகேட்டில் இட்டுச் செல்கிறார். 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்படுகிறார். 2:98 வசனத்தில் சொல்ல வேண்டிய “”மலக்கைனி”-இரு மலக்குகள்” என்ற பதத்தை அல்லாஹ் 2:102ல் தவறாகச் சொல்லி இருக்கிறான் என்றும், 3:7 இறை வாக்கில் பல பொருள்கள் தரும் “”முத்தஷாபிஹாத்” வசனங்களை ஒரே பொருள் தரும் முஹ்க்கமாத் வசனங்களாக்கும் வல்லமை அல்லாஹ்வைப் போல் அறிஞர்களுக்கும் இருக்கிறது என்றும் கூறி, 42:21 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கும் மேல் அல்லாஹ்வாகிறார். (நவூதுபில்லாஹ்) ஆம்! “”அனரப்புக்குமுல் அஃலா-ரப்புகளுக்கெல்லாம் பெரிய ரப்பு” என்று பிதற்றிய ஃபிர்அவ்னைப் பின் பற்றிய நவீன ஃபிர்அவ்னாகத் திகழ்கிறார். அது மட்டுமா? “”நான் அபூ ஜஹீலை விடக் கொடியவன்” “”எனது ஒரு முகத்தைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள், எனது அடுத்த முகம் உங்களுக்குத் தெரியாது” என்று பலர் முன்னிலையில் தனது உண்மை நிலையை அவரே பகிரங்கப்படுத்தியும் உள்ளார்.

நவீன ஃபிர்அவ்னை நாம் தொடர்ந்து அந்நஜாத்தில் கடுமையாக விமர்சிப்பதைப் பலரால் ஜீரணிக்க முடியவில்லை. காரணம் பீ.ஜை.பற்றிய கனிவான பார்வை அவர்களுக்கு இருக்கிறது. பீ.ஜையே சொல்வது போல் அவர்களுக்கு அவரின் ஒரு முகம் தான் தெரிகிறது. அவரின் மறு முகத்தை அறியும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அவரின் மறு முகத்தையும் அவருடன் நெருங்கிப் பழகி, பிரயாணம் செய்து, கொடுக்கல் வாங்கல் செய்து, ஓரிடத்தில் தங்கி, படுத்துறங்கி நேரில் அனுபவப் பட்டு நாம் அறிந்திருக்கிறோம். எமது 18வது வயதிலிருந்து இன்று 75ம் வயது வரை கடந்த 58 ஆண்டுகளாக தர்கா, தரீக்கா, மத்ஹபு, மஸ்லக், அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஸலஃபி, காதியானி என அனைத்துத் தரப்பு மவ்லவிகளுடனும் பழகி இருக்கிறோம். பீ.ஜை.யைப் போன்ற ஒரு கேடுகெட்ட சூன்யப் பேச்சாளரை நாம் கண்டதில்லை. மற்றவர்கள் மீது துணிந்து பழி சுமத்தும், அவதூறு கூறும், பெரும் பொய்யரை, பரம அயோக்கியரை, அவதூறு மன்னனை நாம் கண்டதில்லை. இவை அனைத்திற்கும் நம்மிடம் அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருக்கின்றன. அதனால் தான் பொய்யன் பீ.ஜை. யாரை எல்லாமோ வா, வந்து நிரூபி என்று சவால் விடுபவர், எமது அழைப்பை ஏற்காமல் பிடரியில் பின்னங்கால் அடிபட விரண்டு ஓடுகிறார்.

நாம் பீ.ஜை.யை இவ்வளவு கடுமையாக விமர்சிப்பதற்கும், குர்ஆன் ஆதாரமே காரணம். குர் ஆனில் ஃபிர்அவ்னைப் பற்றி அல்லாஹ் 74 இடங் களில் விமர்சித்துக் கூறியுள்ளான். இத்தனைக்கும் குர்ஆன் இறங்கும்போது ஃபிர்அவ்ன் கடலில் மூழ்கடிக்கப்பட்டு சில ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டன. 49:12 இறைவாக்கில் பிறர் குறைகளைத் துருவித் துருவி ஆய்வதையும், பிறர் பற்றிப் புறம் பேசுவதையும் தடுத்துள்ள அல்லாஹ், இறந்தவர்களைப் பற்றி நல்லவற்றையே கூறுங்கள், கெட்டவற்றைக் கூறாதீர்கள் என்று அல்லாஹ் தனது தூதர் மூலம் எச்சரித்த நிலையில், என்றோ இறந்து போன ஃபிர் அவ்னைப் பற்றி அதுவும் 74 இடங்களில் விமர்சித்திருப்பதின் நோக்கம் என்ன? நோக்கம் அவனை இழிவுபடுத்த வேண்டும் என்பதல்ல; அவனைத் தப்பித் தவறியும், மறந்தும் யாரும் பின்பற்றக் கூடாது என்று மக்களை எச்சரிப்பதற்கே அவனை அல்லாஹ் கடுமையாக 74 இடங்களில் விமர்சித்துள்ளான். அது மட்டுமா? பிர்அவ்னை அதிசயிக்க விதத்தில் கடலில் மூழ்கச் செய்து, அவனது சடலத்தை இன்றும் பாதுகாத்து மக்களுக்குப் படிப்பினை ஆக்கியுள்ளான்.

பீ.ஜை.யும் அவரது கண்மூடிப் பக்தர்களும் படிப்பினை பெறாதது தான் வேதனையான விஷயம். சங்கரன்பந்தலில் கிணற்றுத் தவளையாகப் புரோகித மதரஸாவில் ரூ.750/-சம்பளத்திற்கு புரோகிதக் கல்வியைக் கற்பித்தவரை, ரூ.1000/- சம்பளத்திற்கு அந்நஜாத் ஆசிரியராக நாங்கள் ஆக்கினோம். அவரது பிரபல்யமே அந்நஜாத்தை வைத்துத்தான். அந்நஜாத்தில் 1986 ஏப்ரலிலிருந்து இன்று 2015 வரை இடம் பெறும் குர்ஆன், ஹதீஃத் கொள்கையை எவ்விதச் சுய, மேல் விளக்கம் இல்லாமல் ஏற்று, அதை 1986 ஏப்ரலில் இருந்து 1987 ஜூன் வரை அந்நஜாத் ஆசிரியர் என்ற நிலையில் அவரே அதில் எழுதியவர்தான்.

அன்று புரோகிதத்திற்கும், புரோகிதர்களுக்கும் சாவு மணி அடிக்க எமக்குத் துணையாக இருந்தவர் (பார்க்க அந்நஜாத் ஜன.-பிப். 1987 பக்கம் 101) 1987 ஜூனிற்குப் பின்னர் புரோகிதத்தைத் தூக்கிப் பிடிக்கவும், மதகுருமார்களைக் கண்மூடி ஆதரிக்கவும் முற்பட்டுவிட்டார். புரோகிதத்தை நிலைநாட்டப் பெரும்பாடுபடுகிறார். அப்படியே அந்தர் பல்ட்டி அடித்து விட்டார். வேதனையான விஷயம் குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்று மத்ஹபு தக்லீதை விட்டு வெளியேறி வந்த இளைஞர்களை, இளம் பெண்களை ததஜ என்ற இதுவரை கடந்த 1000 வருடங்களாக இருக்கும் தக்லீதை விட மிகக் கொடிய தக்லீது நாற்றக் குட்டையில் மூழ்கடித்து விட்டார். ஷிர்க்லும் கொடிய ஷிர்க்கை நிலை நாட்டுகிறார். சங்கரன் பந்தலில் புரோகித மதரஸாவில் கிணற்றுத் தவளையாக இருந்த பீ.ஜை.யை அந்நஜாத் மூலம் உலகிற்குப் பிரபல்யப்படுத்தியதால், இன்று அவர் அரங்கேற்றும் ஷிர்க், குஃப்ர், பித்அத் அனைத்திற்கும் நாமே மூலகாரணம் என்று எம்மைக் குற்றப்படுத்துவோரும் உண்டு.

இந்த நிலையில் குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்ற நேர்வழிக்கு வந்துள்ள இளைஞர்களை, இளம் பெண்களை, அந்த ததஜ தக்லீது நாற்றக் குட்டையிலிருந்து-ஷிர்க்கிலிருந்து விடு விக்க அயராது உழைப்பது காலத்தின் கட்டாயமா? இல்லையா? 51:55 இறைவாக்குக் கூறுவது போல் அவர்களில் உள்ளத்தில் ஈமான் உள்ளவர்கள் நாம் எடுத்தெழுதும் குர்ஆன் வசனஙகளுக்குச் செவிமடுப்பார்கள். அவர்களுக்கு அது நிச்சயம் பலன் தரும். ஆயினும் ஆயிரத்தில் 999பேர் நரகத்திற்குரியவர்கள் என்று புகாரீ 3348, 4741 முஸ்லிம் 379 ஹதீஃத்கள் கூறுவதை எம்மால் மாற்ற முடியாது. அவர்களுக்கு குர்ஆன் வசனங்கள் 17:41,45/-47,89, 22:72, 39:45 கூறுவது போல் வெறுப்பையே அதிகப்படுத்தும். எட்டிக்காயாகக் கசக்கும்.

2:186, 7:3, 9:31, 18:102-106, 33:36,66-68, 59:7 இன்னும் அல்லாஹ்வுக்கு மட்டுமே அடிபணியுங்கள், அவனது தூதருக்கு மட்டுமே வழிப்படுங்கள் என்று கூறும் எண்ணற்ற வசனங்களை நிராகரித்து (2:39படி குஃப்ரிலாகி) தர்கா, தரீக்கா, மத்ஹபு, மஸ்லக், அஹ்ல ஹதீஃத் முஜாஹித், ஸலஃபி, ஜாக், ததஜ, இதஜ, காதியானி இன்னும் எத்தனைப் பிரிவுகளில் மவ்லவிகள் இருக்கிறார்களோ அவர்களைப் பின்பற்றுகிறார்களோ அவர்கள் ஆயிரத்தில் 999 பேர் பட்டியலில் மட்டுமே இடம் பெறுவார்கள். குர்ஆன் 11:118,119, 12:106, 25:30, 32:13 இன்னும் அக்ஃதர்ஹும்-அதிகமானோர் நரகத்திற்குரியவர்கள் என்றே உறுதிப்படுத்துகின்றன. மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட எப்பிரிவு மவ்லவிகளைப் பின்பற்றினாலும், 9:31 இறைவாக்குப்படி அவர்களை “ரப்பாக’ ஆக்கி அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை வைக் கிறார்கள். அவர்களின் இறுதி முடிவு நரகமே! எச்சரிக்கை!!

ஆலிம்கள், அல்லாமாக்கள், மவ்லானாக்கள், ஷேகுகள், ஹஜ்ரத்கள், மவ்லவிகள், தாயிகள் எனப் பெருமையடிக்கும் ஒட்டுமொத்தப் புரோகிதர்களும் மனித குலத்திற்கே இழைத்து வரும் மாபெரும் கொடுமை, அநீதி, அகில உலக மக்களுக் கும் சொந்தமான இறைவனால் இறக்கியருளப் பட்ட இறுதி முழுமை பெற்ற வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமே சொந்தம் என்று தார்ப்பாயில் வடித்தெடுத்த பொய்யைக் கூறுவதா கும். அடுத்த அண்டப் புளுகு, ஆகாசப் பொய், மனித வர்க்கத்திற்கே அல்லாஹ்வால் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்ட குர்ஆன் புரோகித மதர ஸாக்களில் தெண்டச் சோறு சாப்பிட்டுக் காலம் கழித்த மவ்லவிகளுக்கு மட்டுமே விளங்கும் என்பதாகும். அரபு மொழியில் டாக்டரேட் பட்டம் பெற்ற மேதையாக இருந்தாலும் மற்றவர்களுக்கு குர்ஆன் விளங்காது என்ற பீற்றலாகும். அது மட்டுமா? அரபு மொழி தெரியாத முஸ்லிம்களும் தங்களுக்குத் தெரிந்த மொழியில் குர்ஆனின் மொழி பெயர்ப்பைப் படித்து விளங்க முடியாது என்ற ஆகாசப் பொய்யாகும். இம்மதகுருமார்களின் இப் படிப்பட்ட அண்டப் புளுகு ஆகாசப்பொய் காரண மாக மக்கள் நலனில் அதி அக்கறை காட்டிய அறிவு ஜீவிகள் அனைவருக்கும் சொந்தமான குர்ஆனை நேரடியாகப் படித்து நேர்வழியை விளங்க முடியாமல் போய் விட்டது. இதைவிட அநீதி உண்டா?

மேலும் இம்மூட முல்லாக்கள் அல்லாஹ்வின் பெயரால் அரங்கேற்றி வரும் மூட நம்பிக்கைகள், முடச் சடங்கு சம்பிரதாயங்கள், மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கும் நிலை இவற்றைக் கண்கூடாகக் கண்டவர்கள், மக்களை ஏமாற்றி வஞ்சிக்கும் மற்ற மதங்களின் வரிசையில் உள்ளதுதான் முஸ்லிம் மதமும் என்று முடிவுக்கு வந்து, இஸ்லாமிய மார்க்கத்தையும், அதைப் போதிக்கும் குர்ஆனையும் விமர்சிக்கிறார்கள். அவர்களில் பலர் கடவுள் மறுப்புக் கொள்கை-நாத்திகத்தைப் போதித்தும் வருகிறார்கள். தூய இஸ்லாமிய மார்க்கம், முன்னைய மதகுருமார்களைப் போல், இம் மூட முல்லாக்களாலும் மாசுபடுத்தப்பட்டு மதமாக்கப்பட்டுள்ளதால் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மறுப்போர் உண்டா? வடிகட்டிய மூடர்கள் இவர்கள்தானே!

இம் முஸ்லிம் மதகுருமார்கள், தங்களின் அற்ப மான இவ்வுலக வாழ்க்கையை லட்சியமாகக் கொள்ளாமல், 2:186 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வை முழுமையாக நம்பி, மறுமையில் உறுதியான நம்பிக்கை கொண்டு, முழுமை பெற்ற இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் மனித குலத்திற்கே சொந்தமானது. மனிதர்களில் எவரும் அதை எந்த நிலையிலும் தங்களுக்குத் தெரிந்த மொழி பெயர்ப்புகளைப் படித்து எளிதாக விளங்கலாம். அந்தளவு விளக்கமாக ஏக இறைவனாகிய அல்லாஹ்வே தெளிவாக, எளிதாக விளக்கியுள்ளான். மனிதரில் எவரது மேல்விளக்கமும் அவசியமில்லை, அப்படிச் செயல்படுத்த வேண்டிய முஹ்க்கமாத் வசனங்களுக்கு ஒருவன் மேல்விளக்கம் கொடுக்க முற்பட்டால் அவன் அல்லாஹ்வுக்குமேல் அல் லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்படுகிறான் என்று உள்ளது உள்ளபடி கடந்த ஆயிரம் வருடங்களாக சொல்லி வந்திருப்பார்களேயானால் இன்று இவ்வுலகம் அழிவின் விளிம்பில் நிற்குமா? நரக விளிம்பில் நிற்குமா? சிந்தியுங்கள். நாத்திகம் இந்தளவு வளர்ந்திருக்குமா? சிந்தியுங்கள்.

மற்றவர்கள் குர்ஆனை இழிவுபடுத்தவும், நபி (ஸல்) அவர்களை விமர்சிக்கவும் முற்பட்டிருப்பார்களா? சிந்தியுங்கள். இன்று இழுக்கங்கள் அனைத் தும் ஒழுக்கங்களாகவும், ஒழுக்கங்கள் அனைத்தும் இழுக்கங்களாகவும் கருதப்பட யார் காரணம்? ஒழுக்கக் கேடர்கள், மனித மிருகங்கள் மக்கள் தலைவர்கள் ஆக யார் காரணம்? சொல்லுங்கள்! உல கமே லஞ்ச லாவண்யத்திலும், ஊழல்களிலும் மூழ் கித் திழைக்க யார் காரணம்? உலக மக்கள் அனை வருக்கும் உரிய வாழ்க்கை நெறிநூலான குர்ஆனை மக்களிடமிருந்து மறைத்தது தானே! குன்றிலிட்ட 1000 வாட்ஸ் வெள்ளை விளக்காக (யற்யிணு) இருக்க வேண்டிய அல்குர்ஆனை குடத்திலிட்ட 0 வாட்ஸ் இருட்டு விளக்கு போல் மறைத்து மோசம் செய்வதும் இம்மவ்லவிகள் தானே!

முஸ்லிம் சகோதர, சகோதரிகளே நீங்கள் “”எய்தவன் இருக்க அம்பை நோகலாமா?” இது அறிவீனம் இல்லையா? சொல்லுங்கள். உண்மையில் நீங்கள் சுய சிந்தனையாளர்களாக, அறிவுடையவர்களாக இருந்தால், உலக மக்களுக்கே சொந்தமான குர்ஆனை அவர்களிடமிருந்து மறைக்கும், அம்பை எய்யும் இம்மவ்லவிகள் மேல்தான் உங்களது முழு கோபமும் ஏற்பட வேண்டும். அதைவிட்டு குர்ஆனை இழிவுபடுத்தும், நபி(ஸல்) அவர்களை விமர்சிக்கும் மாற்றார்கள் மீது உங்களுக்குக் கோபம் வந்தால், அதாவது அம்பின் மேல் கோபம் வந்தால் உங்களை விட அறிவீனர்கள் இல்லை என்பதுதானே அதன் பொருளாகும். முஸ்லிம்களே நீங்கள் அறிவிலிகளா? அறிஞர்களா? என்பதைப் பொறுத் திருந்து பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: