ஆலிம்களுக்கோர் கடுமையான எச்சரிக்கை!

in 2015 மே,தலையங்கம்

மவ்லவிகளே, ஆலிம்களே, அல்லாமாக்களே இது எமது கடமை என்ற கடமை உணர்வுடன் எச்சரிக்கிறோமா! ஏற்பதும், நிராகரிப்பதும் உங்கள் விருப்பம். ஆனால் நானை மறுமையில் இந்த எச்ச ரிக்கையை உங்கள் வசம் சேர்த்துவிட்டோம் என்பதற்கு நீங்கள் சாட்சி சொன்னால் போதும். கடந்த ஆயிரம் வருடங்களாக அகில உலக மக்களுக்கும் சொந்தமான, அனைத்து மக்களின் இறைவனான அல்லாஹ், ஒட்டுமொத்த மனிதர்களுக்காக, குறிப்பாக அறிவு குறைந்த மக்களுக்காக தெள்ளத் தெளி வாக நேரடியாக விளக்கி அருள்புரிந்து இறக்கிய ருளிய மனித சமுதாயத்திற்கே சொந்தமான வாழ்க்கை விளக்க நெறிநூல் குர்ஆனை முஸ்லிம்களின் வேதாந் தங்கள் நிறைந்த வேதம், அதில் முஸ்லிம் அல்லாத வர்களுக்குக் கடுகளவும் உரிமை இல்லை. அவர்களுக்கு குர்ஆனைக் கொடுக்கக் கூடாது எனத் தீர்ப்பளித்து, அதன் மூலம் முஸ்லிம் அல்லாதவர்களை முஸ்லிம்களுக்குக் கொடும் பகைவர்களாக்கியதுடன், குர்ஆன் மீதும் வெறுப்புற்று அதை இழிவுபடுத்தவும், கேவலப்படுத்தவும் துணை போகிறீர்கள். இது ஆதத்தின் சந்ததிகளுக்கு நீங்கள் இழைத்து வரும் மாபெரும் துரோகமாகும். அவர்களுக்கிருக் கும் உரிமையைக் கொடுக்க மறுப்பது பெரும் துரோகம் தானே. இதை நீங்கள் மறுக்க முடியுமா?

அடுத்து முஸ்லிம்களையும் ஒளூ இல்லாமல் குர் ஆனைத் தொடக்கூடாது; சுத்தமில்லாமல் தொடக் கூடாது என்று அல்லாஹ்வோ அவனது தூதரோ விதிக்காதச் சட்டங்களை, 42:21, 49:16 குர்ஆன் வசனங்களை நிராகரித்து இயற்றி பெருங்கொண்ட முஸ்லிம்களையும் குர்ஆனை நெருங்க விடாமல் ஆக்கிவிட்டீர்கள். அத்தோடு விட்டீர்களா? அல் லாஹ்வே மனிதர்களுக்காக (2:159-162) அதிலும் குறிப்பாகப் பாமரர்களிலும் பாமரர்களுக்காக (62:2) தெள்ளத் தெளிவாக விளக்கி அருளிய குர்ஆனை பாமரர்கள் படித்து விளங்க முடியாது என்று, அல்லாஹ்வோ, அவனது தூதரோ விதிக்காத (42:21, 49:16) சட்டத்தை விதித்து, 99.9% சதவிகித மக்களை குர்ஆனை விட்டும் முழுமையாக ஒதுக்கி விட்டீர்கள்.

அது மட்டுமா? கல்லூரிகளிலும் பெரும் செல வில் அரபு மொழியில் இளங்கலை, முதுகலை, முனைவர் எனப் பெத்தப் பெரும் பட்டங்கள் பெற்றிருந்தாலும் அவர்களாலும் குர்ஆனை விளங்க முடியாது எனக் கூறி உலகியல் துறைகளில் மருத்துவர், பொறிஞர், வழக்குரைஞர் இதுபோல் பல துறைகளில் பட்டங்கள் பல பெற்றிருந்தாலும் அவர்களாலும் குர்ஆனை விளங்க முடியாது என்கிறீர்கள். ஏன் உங்களுக்கே குர்ஆன் விளங்காது. இஜ்திஹாத்-ஆய்வு செய்யும் வாசல் ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே மூடப்பட்டுவிட்டது. அந்தக்கால மேதைகள் ஆய்வு செய்து எழுதி வைத்துள்ளதை அப்படியே கண்மூடி தக்லீது செய்வதே நம் கடமை எனக் கடைந்தெடுத்த பொய்யைக் கூறி முஸ்லிம்களை மாக்களாக்கி வைத்துள்ளீர்கள். அதன் விளைவு என்ன தெரியுமா?

இன்றைய முஸ்லிம்களில் 99.9% அடிப்படை கலிமாவே தெரியாமல், ஈமான், இஸ்லாம் என்றால் என்ன என்ற விபரம் தெரியாமல் பெயர்தாங்கி முஸ்லிம்களாக இருக்கிறார்கள்.அவர்களிடம் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற மார்க்கக் கடமைகள் பூஜ்யம். அதற்கு மாறாக ஹிந்து மதத்தினரிடமிருந்து காப்பி அடித்த பித்அத்தான, குஃப்ரான,ஷிர்க்கான வழிகேடுகளான சடங்குகளையும், ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல் இன்னும் இவைபோல் வழிகேடுகளை செய்ய வைத்து உங்களின் பாக்கெட்டுகளை நிரப்பிக் கொள்கிறீர்களே அல்லாமல், மற்றபடி நீங்கள் ஆசை வார்த்தை காட்டும் எவ்வித உலகியல் ஆதாயங்களையும் அவர்கள் அடைவதில்லை. முஸ்லிம்களுக்கு இம்மையி லும் நட்டம், மறுமையிலும் நரகமே.

இப்போது முஸ்லிம் மதகுருமார்களான உங்க ளைவிட ஹிந்து மதகுருமார்கள் தந்திரமாகச் செயல் பட ஆரம்பித்திருக்கிறார்கள். நீங்கள் முஸ்லிம்களின் பணத்தை தவறான வழிகளில் பிடுங்கி வருகிறீர்கள். ஹிந்து மதகுருமார்கள் பெரும்பெரும் செல்வந்தர்களிடம் பிடுங்கி “”கர்வாப்பஸி” என்ற பெயரில் முஸ்லிம்களை குறிவைத்து லட்சம் லட்சமாகக் கொடுத்து, ஹிந்துக்களாக மாற்றி வருகிறார்கள். அது இப்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

கலிமாவே தெரியாத, ஈமான், இஸ்லாம் அறியாத நிலையில் நீங்கள் முஸ்லிம்களை வைத்திருப்பதால், அவர்களுக்குத் தெரிந்த உலகியல் ஆதாயங்களைக் காணும்போது அவர்கள் அங்கு பாய்வது ஆச்சரிய மல்லவே. அவர்கள் உங்கள் பின்னால் வந்தாலும் உங்களோடு நாளை நரகமே! அவர்கள் பின்னால் சென்றாலும் அவர்களோடு நாளை நரகமே. வேறு பாடு ஒன்றுமே இல்லை. இதை விரும்புகிறீர்களா? அல்லது நீங்களும் அவர்களும் சுவர்க்கம் போக விரும்புகிறீர்களா? அப்படியானால் நாங்கள் ஆலிம்கள் என்ற வீண் பெருமையை விட்டொழியுங்கள். உங்கள் ஆபாக்கள் கற்பனை செய்த ஆலிம்-அவாம் வேறுபாட்டை விட்டொழியுங்கள். அல்லாஹ் அவாம்களிலும் அவாம்களான பாமர மக்கள் விளங்கும் வகையிலே குர்ஆனை விளக்கி இருக்கிறான். ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நேரடியாகப் படித்து அல்லது படிக்கக் கேட்டு நேர்வழியை விளங்கி அதன்படி நடக்க முடியும் என்று பகிரங்க மாக உரத்துச் சொல்ல முன்வாருங்கள். தவறினால் “”அல் அவாம் கல் அன்ஆம்” என்று நீங்கள் சிறப்பித்து(?) சொல்கிறீர்களே அந்த செம்மறி ஆட்டு மந்தை உங்கள் பின்னால் வருவதைத் தவிர்த்து, சில லட்சங்களுக்கு ஆசைப்பட்டு ஹிந்து மதகுருமார்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் துர்பாக்கிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறோம்!

Previous post:

Next post: