சவுதி அரசுக்கு ஓர் அதிமுக்கிய வேண்டுகோள்!

in 2015 ஆகஸ்ட்,பிறை

அபூ அப்தில்லாஹ்

சவுதி மன்னர் அவர்களே, இளவரசர்களே, மந்திரிப் பிரதானிகளே, அறிவியல் வல்லுநர்களே, அறிஞர்களே அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). உங்கள் அனைவரிடமும் எமது ஒரு கனிவான அதிமுக்கிய வேண்டுகோள்!

எமக்கும், உங்களுக்கும், அல்லாஹ் நாடும் அவனது நல்லடியார்களுக்கும் அவனது நேர்வழியை (6:153) காட்டியருள துஆ செய்தவனாக இந்த வேண்டுகோளை வைக்கிறோம்.

அல்லாஹ்வின் கிருபையால் ரமழான் பெரு நாளை (ஈத்) சரியாக ஷவ்வால் முதல் நாளில் கொண்டாட சவுதி அரசு அறிவித்ததை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். துஆ செய்கிறோம். ஆயினும் ரமழான் முதல் நோன்பைத் தவறவிட்டு இரண்டாம் நாளிலிருந்து ஆரம்பித்தது எமக்கு மன வேதனையைத் தந்தது. அதனால் உங்களுக்குக் கிடைத்தது பூர்த்தியான 30நோன்புகளுக்குப் பதிலாக 29 நோன்புகள் மட்டுமே. இதற்குக் காரணம் ஷஃபான் மாத இறுதியில் இடம் பெற்ற சங்கமம் (Conjunction) சர்வதேச நேரப்படி 16.06.2015 செவ்வாய்க்கிழமை 14:04:95 UT. அதாவது சவுதியைத் தாண்டி மேற்கில் ஆப்பிரிக்காவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் இடம் பெற்றது.

உங்கள் நாட்டைத் தாண்டி சங்கமம் இடம் பெற்றதால் நீங்கள் அடுத்த நாளான 17.06.2015 புதன்கிழமையை ரமழான் முதல் நாளாகக் கொள்ளவில்லை. அதற்கு மாறாக 18.06.2015 வியாழக்கிழமையை ரமழான் முதல் நாளாகக் கொண்டு நோன்பை 2ம் நாளில் ஆரம்பித்தீர்கள். ஆனால் ரமழான் மாத இறுதியில் இடம் பெற்ற சங்கமம் 16.07.2015 வியாழன் சர்வதேச நேரம் 01:24:06 UT படி இடம் பெற்றது. அது உங்கள் சவுதி நாட்டுக்கு மிகவும் கிழக்கே இடம் பெற்றது. அதனால் சங்கமத் திற்கு அடுத்த நாளான 17.07.2015 வெள்ளிக் கிழமையை ஷவ்வால் முதல் நாளாக ஏற்று அறிவித்தீர்கள். இந்தத் தடுமாற்றத்திற்குக் காரணம் நீங்கள் நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற தவறான நம்பிக்கையில் இருப்பதேயாகும்.

புறக்கண்ணுக்குத் தெரியும் பிறையே முதல் பிறை, நாள் மாலை மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மூட நம்பிக்கை கி.மு. 383ல் அதாவது 2015+383 =2398 கிறித்தவ ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது சந்திரக் கணக்குப்படி சுமார் 2467 ஆண்டுகளுக்கு முன்னர் யூதர்கள் நடைமுறைப்படுத்திய அறிவற்ற நம்பிக்கையாகும், நடைமுறையாகும். அந்த மூட நம்பிக்கையை முஸ்லிம் நாடுகள் உட்பட அனைத்து முஸ்லிம் மதகுருமார்களும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். இது வேதனைக்குரிய ஒன்றாகும்.

இதோ அதற்குரிய ஆதாரம் :

HISTORY OF THE CALENDAR :
THE LUNI-SOLAR AND LUNAR CALENDARS :
THE ISLAMIC CALENDAR:
The Mohammedan calendar is purely lunar and has no connection with the solar year. The year consists of 12 lunar months, the beginning of each month being determined by the first observation of the crescent moon in the evening sky. The months have accordingly got 29 or 30 days and the year 354 or 355 days. The new-year day of the Mohammedan calendar thus retrogrades through the seasons and completes the cycle in a period of about 32½ solar years.

The era of the Mohammedan calendar. viz., the Hejira (A.H.), which was probably introduced by the Caliph Umar about 638-639 A.D., started from the evening of 622 A.D., July 15, Thursday*, when the crescent moon of the first month Muharram of the Mohammedan calendar was first visible. This was the new-year day preceding the emigration of Mohammad from Mecca which took place about Sept. 20 (8 Rabi I), 622 A.D.

Calendaric Astronomy :
THE MOON’S MOVEMENT IN THE SKY:
T he scheme of lunar months given in Table No. 4 in a nineteen – year period, which came into vogue in Babylon about 383 B.C. did not, however, completely satisfy the needs of the Babylonian calendar, because for religious purposes, the month was to start on the day the crescent moon was first visible in the western horizon after conjunction with the sun (the new moon), a custom which is still followed in the islamic countries. But the first visibility may not occur on the predicted day for manifold reasons.

மேலும் யூதர்களின் வலைதளங்களில் நீங்கள் போய் பார்த்தால், யூத மத அடிப்படையில் நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது. புறக்கண்ணுக்குத் தெரியும் பிறையே முதல் பிறை என்ற மூட நம்பிக்கையை யூதர்கள் கடந்த சுமார் 2467 சந்திர வருடங்களாக நடைமுறைப் படுத்துகிறார்கள் என்பதை அறிய முடியும்.

அதை அப்படியே கண்மூடி ஏற்று கடந்த 1400 ஆண்டுகளாக முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம் மதகுருமார்களாலும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. முன்னோர்கள் கடைபிடித்தது என்ற நம்பிக்கையை சிறிது ஓரம் கட்டிவிட்டு, அல்குர்ஆனில் காணப்படும் 36:40, 91:1-4, 74:1-4, 7:54, 13:3, 89:1-5, 6:96, 2:187, 97:1-5 வசனங்களை நடுநிலையுடன் படித்து உணர்கிறவர்கள், நாள் ஃபஜ்ரில் ஆரம்பிக்கிறது, மஃறிபில் அல்ல என்ற பேருண்மையை நிச்சயமாக அறிய முடியும்.
இறைவனின் ஆதி இல்லமான கஃபத்துல்லாஹ்வும், இஸ்லாமிய மார்க்கத்தை நிலைநிறுத்தக் கேந்திரமாக விளங்கிய மதீனமா நகரும் அமைந்துள்ள சவுதி இன்று உங்கள் ஆட்சியின் கீழ் இருக்கின்றன. அங்கு இடம் பெறும் மார்க்க முரணான செயல்களுக்கு நாளை நீங்கள் தான் அல்லாஹ்விடம் பொறுப்பு ஏற்க நேரிடும். இதை மனதில் கொண்டு செயல்பட அன்புடன் வேண்டுகிறோம்.

6:96, 7:54, 10:5, 13:2, 14:33, 16:12, 21:33, 29:61, 31:29, 35:13, 36:39,40, 39:05, 41:37, 55:5
இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நடு நிலையுடன் படித்து அறிகிறவர்கள் சூரியனும், சந்திரனும் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் கட்டுப் பாட்டில் சுழல்கின்றன. ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் அவை படைக்கப்பட்டக் காலத்திலிருந்து சுழல்கின்றன. சந்திரன் மனிதக் கண்களின் கட்டுப் பாட்டில் இல்லவே இல்லை. மனிதக் கண் அதன் மீது பட்டால்தான் சந்திரன் சுழல ஆரம்பிக்கும். கண் அதில் படாதவரை அந்த இடத்திலேயே நிற்கும். சந்திரனின் ரிமோட் கன்ட்ரோல் மனிதக் கண்கள் என்பது ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்யும், வடிகட்டின மடைமையுமாகும் என்பதைத் திட்டமாக அறிய முடியும்.

எமது இந்திய நாட்டிலுள்ள முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகள் அரபு பதங்கள் லைலுக்கும், லைலத்துக்கும் வேறுபாடு தெரியாதவர்களாக இருக்கிறார்கள். 2:51, 7:142,19:10, 97:1,2,3 ஆகிய 6 இடங்களில் வரும் லைலத் என்ற பதத்திற்கு நாள் என்று மொழி பெயர்க்காமல், இரவு என்று மொழி பெயர்த்து அவர்கள் வழிகேட்டில் செல்வதோடு அவர்களை நம்பியுள்ள முஸ்லிம்களையும் வழி கெடுக்கிறார்கள். 16:25 இறைவாக்குக் கூறுவது போல் அவர்கள் தங்கள் பாவச் சுமைகளோடு அந்த மக்களின் பாவச் சுமைகளையும் சேர்த்தே சுமக்க இருக்கிறார்கள். இவர்களின் சுமை மிகக் கெட்டதே!

இந்த நிலையில் அரபு மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட சவுதி மன்னரும், மக்களும் எந்த அடிப்படையில் நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற தவறான கொள்கையில் இருக்கிறீர்கள்? இந்தத் தவறான கொள்கை யூதர்களால் சுமார் 2467 சந்திர ஆண்டுகளுக்கு முன்னர் நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் கிடைக்கின்றனவே அல்லாமல், குர்ஆன், ஹதீஃதில் ஆதாரம் அறவே இல்லை என்பதே நிதர்சன உண்மை.

குர்ஆன், ஹதீஃதுகளுக்கு நேர்முரணான நாள் மாலை மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற யூத மதக் கலாச்சாரத்தை முஸ்லிம்கள் பின்பற்றி நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கைப்படி, யூதர்களில் ஆவதோடு, நல்லமல்களிலும் பேரிழப்பைச் சந்திக்கிறார்கள் என்பது வேதனையான செய்தி இல்லையா? ரமழானின் ஆரம்ப நாட்களை ஷஃபான் ஆக்கியும், ரமழானின் கடைசி நாட்களை ஷவ்வால் ஆக்கியும், மாதங்களை முன்பின் ஆக்குவது 9:37 இறைக் கட்டளைப்படி குஃப்ரை-நிராகரிப்பை அதிகப்படுத்தும் பெரும் பாவச் செயல் அல்லாமல் வேறென்ன? கத்ருடைய நாட்களான ஒற்றைப்படை நாட்களை அறியாமையால் இரட்டைப்படை நாட்களில் தேடி 1000 மாதங்களை விட சிறப்புக்குரிய கத்ருடைய நாளை இழப்பது பேரிழப்பு இல்லையா? பெரிய அளவில் இபாதத் செய்து பெரும் நன்மைகளை அடைய வேண்டிய ஒற்றைப்படை நாட்களின் இரவை இழந்து அதை இரட்டைப்படை இரவு களில் தேடுவது பெரும் மடமையோடு பேரிழப்பும் இல்லையா? கத்ருடைய நாட்களின் இரவை இழந்து அவற்றின் பகலை மட்டும் அடைவது பேரிழப்பா? இல்லையா? நடுநிலையோடு சிந்தியுங்கள்!

இது ரமழானில் ஏற்படும் பெரும் இழப்பு. இது போல் துல்ஹஜ் பிறை 9 ஆன அரஃபா தினத்திலும் பேரிழப்பு ஏற்படுகிறது. 1436 துல்கஃதா மாத இறுதியில் இடம் பெறும் சங்கமம் (Conjunction) 13.09.2015 ஞாயிறன்று சர்வதேச நேரப்படி 6:41:07 UT. இந்தியாவுக்கு நேராக இடம் பெறுகிறது. ஆம்! துல்கஃதா மாதம் சங்கமம்(Conjunction) சவுதிக்கு கிழக்கே இடம் பெறுகிறது. எனவே சவுதி அரசு அதற்கடுத்த நாள் 14.09.2015 திங்களை துல்ஹஜ் மாதத்தின் முதல் நாளைக் கொள்ளும் என நம்புகி றோம். அதனால் உலக மக்கள் கூடும் அரஃபா தினம் சரியாக 22.09.2015 செவ்வாய்க்கிழமை இடம் பெறும் என்றும் நம்புகிறோம்.

அதேசமயம் துல்கஃதா மாத இறுதியில் இடம் பெறும் சங்கமம் சவுதிக்கு மேற்கே இடம் பெற்றால், நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற யூத மத நம்பிக் கையில் சவுதி அரசு இருப்பதால் சங்கமத்திற்கு அடுத்த நாளை முதல் பிறையாகக் கொள்ளாமல் அதற்க டுத்த நாளை முதல் பிறையாகக் கொள்ளும் அவலம் அரங்கேறி விடுகிறது. அதனால் பிறை 9-ல் அரஃபாவில் ஒன்று கூட வேண்டிய மக்கள் தவறாக பிறை 10-ல் அரஃபாவில் ஒன்று கூடும் அவலம் ஏற்படு கிறது. அரஃபா மைதானம் சவுதி அரசு கட்டுப்பாட்டில் இருப்பதால், அந்த ஆண்டு ஹஜ் செய்யும் உலக மக்கள் அனைவரின் அந்தப் பாவத்தை 16:25 இறை வாக்குக் கூறுவது போல சவுதி அரசரே சுமக்கும் கட்டாயம் ஏற்படுகிறது? இதைத் தவிர்க்க வேண்டாமா?

இந்தப் பரிதாப நிலைக்குக் காரணம் சவுதி அரசு இன்றைய அறிவியல் யுகத்திலும் நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற யூதர்கள் கி.மு. 383ல் மூடத்தன மாக கற்பனை செய்த அதே அறியாமையை சவுதி அரசு பின்பற்றுவதாகும். நாள் அதிகாலை ஃபஜ்ரில் ஆரம்பிக்கிறது என்று குர்ஆனும் ஆதாரபூர்வமான ஹதீஃத்களும் கூறுவதை ஏற்று சவுதி அரசு தனது நாள் ஆரம்பிக்கிறது மஃறிபில் என்ற தவறான நிலையிலிருந்து நாள் ஆரம்பிக்கிறது அதிகாலை ஃபஜ்ரில் என்ற சரியான நிலைக்கு மாறிவிட்டால், 2ம் பிறையை 1ம் பிறையாகக் கொள்ளும் அவலமும் ஏற்படாது. அரஃபா தினத்தை துல்ஹஜ் பிறை 9-ல் கடை பிடிப்பதற்கு மாறாக பிறை 10-ல் அரஃபா தினமாகக் கொள்ளும் அவலமும் ஏற்படாது. இதை சவுதி மன்னரும், அரசும் கவனத்தில் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? நாள் மாலை மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற யூத மதக் கொள்கையை முஸ்லிம்கள் கண்மூடிப் பின்பற்றுவது தானே? இதில் சந்தேகமுண்டா? ஒரு காலம் சம்பவிக்கும். முஸ்லிம்கள் யூதர்களை ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றுவீர் கள். அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் நுழைந்தால் நீங்களும் அதில் நுழைவீர்கள் என்று நபி(ஸல்) அவர் கள் முன்னறிவிப்புச் செய்ததை இன்றைய முஸ்லிம்கள் அப்படியே கண்மூடிப் பின்பற்றுகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

இந்தப் பரிதாப பெரும் நட்டத்தை எற்படுத்தும் பாவச் செயலை விட்டும் முஸ்லிம்களை, விடுவிக்கும் பெரும் பொறுப்பு மற்ற எல்லோரையும் விட, மக்காவையும், மதீனாவையும் உங்களின் கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் சவுதி அரசுக்குத்தான் அதிகம் உண்டு என்பதை உங்களால் மறுக்க முடியுமா? அல்லாஹ்வுடைய கிருபையைக் கொண்டு யூதர்களின் மூடப்பழக்கமான பிறையைப் புறக்கண்ணால் பார்த்துத்தான் மாதத்தைத் துவங்க வேண்டும் என்ற வழிகேட்டிலிருந்து சவுதி அரசாகிய நீங்கள் விடுபட்டு விட்டீர்கள் என்பது நீங்கள் சங்கமம் (Conjunction) ஆன 16.07.2015 வியாழனுக்கு அடுத்த நாள் ஷவ்வால் முதல் நாள் என்று பெரு நாளை அறிவித்ததிலிருந்து உறுதியாகத் தெரிகிறது. காரணம் அதற்கு முதல் நாள் அதாவது சங்கமம் இடம் பெற்ற 16.07.2015 அன்று பிறையின் வெளிச்சம் 0.0% ஆகும். நிச்சயம் கிழக்கிலோ, மேற்கிலோ பிறையைப் புறக்கண்ணால் பார்த்ததாகச் சொன்னது இல்லை. கணக்கீட்டின் மூலம் பார்த்த செய்தியைத் தான் சவுதி அரசு அறிவித்துள்ளது. பிறையைப் புறக் கண்ணால் பார்த்தே மாதத்தைத் துவங்க வேண்டும் என்ற யூத மத மூட நம்பிக்கையில் இருப்போர் சவுதி அரசு சொல்லும் சாட்சியத்தை ஏற்றுச் செயல்பட வேண்டியதுதானே!. சங்கமம் (Conjunction) அன்று பிறை கிழக்கிலோ, மேற்கிலோ தெரியவே தெரியாது என்ற அறிவியல் அறிவிப்பை ஏன் தூக்கிப் பிடிக்க வேண்டும்? அவர்களுக்கு அவர்களே முரணா? இந்த மவ்லவிகளின் முனாஃபிக் தனம் நயவஞ்சகம் புரியவில்லையா?

சவுதி அரசு கணக்கீட்டின்படி சங்கமத்திற்கு அடுத்த நாளை ஷவ்வாலின் சரியான முதல் நாளாக அறிவித்தது மிகவும் சரியான செயல்; வரவேற்கிறோம். நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற யூத மதக் கொள்கையை இன்று சவுதி அரசு பின்பற்றுவதால், சங்கமம் (Conjunction) சவுதிக்குக் கிழக்கே நடந்ததால் சரியான அடுத்த நாளை ஷவ்வாலின் முதல் நாளாக ஏற்றார்கள். சங்கமம்(Conjunction) சவுதிக்கு மேற்கே இடம் பெற்றால் அடுத்த நாளுக்கு அடுத்த நாளை முதல் நாளாகக் கொள்ளும் அறியாமை இன்றும் சவுதி அரசிடம் காணப்படுகிறது.

கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களை நடுநிலையுடன் படித்து விளங்கினால், முஸ்லிம்களுக்கு நாள் ஃபஜ்ரில் ஆரம்பிக்கிறது என்ற சரியான முடிவுக்கு வந்து விட்டால், சங்கமம் (Conjunction) சவுதிக்கு கிழக்கே இடம் பெற்றாலும், மேற்கே இடம் பெற்றாலும் அடுத்த நாள் மாதத்தின் முதல் நாள் என்ற சரியான உண்மையான முடிவுக்கு சவுதி அரசு வந்துவிடும் என எதிர்பார்க்கிறோம்.
(36:40, 91:1-4, 74:1-4, 7:54, 13:3, 89:1-5, 6:96, 97:1-5)

குறிப்பு : இந்த ஆக்கத்தை அரபு மொழி வல்லுநர்கள் அரபியில் மொழி பெயர்த்து சவுதி மன்னருக்கும், அரசுக்கும், ஆங்கிலம், உருது, ஃபார்சி போன்ற இதர மொழிகளிலும் மொழி பெயர்த்து முஸ்லிம்களிடையே பரப்பினால் பிறை குழப்பம் தீர வழி பிறக்கும். அல்லாஹ்வின் அருள் கிடைக்கும். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: