அல்குர்ஆன் கூறும் : பயபக்தியும்! பொறுமையும்!!

in 2015 செப்டம்பர்

M.S. அபூ பக்கர்

மேலும் பொறுமையைக் கொண்டும் தொழுகை யைக் கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமா கவே இருக்கும். (அல்குர்ஆன் : 2:45)

நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (2:155)

அவர்களுக்குத் துன்பம் ஏற்படும்போது, நிச்சய மாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள், நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம் என்று கூறுவார்கள். (2:156)

(புண்ணியம் என்பது)… இன்னும் தாம் வாக்க ளித்தால் தம் வாக்குறுதியை நிறைவேற்றுவோரும்; துன்பத்திலும், கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும் உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள்தான் முத்தகீன்கள் (பயபத்தியாளர்கள்) (2:177)

இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும், மிக்கப் பொறுமையுடையோனுமாகவும் இருக்கிறான். (2:225)

அல்லாஹ் உங்கள் உள்ளங்களிலுள்ளதை நிச்ச யமாக அறிகின்றான் என்பதை நீங்கள் அறிந்து அவ னுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பொறுமையாளனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (2:235)

ஆனால், நாம் நிச்சயமாக அல்லாஹ்வைச் சந்திப்போம் என்று உறுதி கொண்டிருந்தோர், எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் அனுமதி கொண்டு வென்றிருக்கிறார்கள், மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான் என்று கூறினார்கள். (2:249)

மேலும் ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்றபோது, எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக! எனக் கூறி (ப் பிரார்த்தனை செய்த)னர். (2:250)

(இன்னும் அவர்கள்) பொறுமையுடையோரா கவும், உண்மையாளராகவும், அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்படுவோராகவும், தானதர்மங்கள் செய்வோராகவும், (இரவின் கடைசி) ஸஹர் நேரத்தில் (வணங்கி, நாயனிடம்) மன்னிப்புக் கோருவோராக வும் இருப்பர். (3:17)

ஏதாவது ஒரு நன்மை உங்களுக்கு ஏற்பட்டால், அது அவர்களுக்கு வருத்தத்தை கொடுக்கிறது. உங்க ளுக்கு ஏதாவது தீமை ஏற்பட்டால், அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். நீங்கள் பொறுமை யுடனும், பயபக்தியுடனுமிருந்தால் அவர்களு டைய சூழ்ச்சி உங்களுக்கு எந்தத் தீமையும் செய்யாது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை (எல்லாம்) சூழ்ந்து அறிகிறவன். (3:120)

ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறு மையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்தபோதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர் களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான். (3:125)

உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதி யாகப்) போர் புரிபவர்கள் யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைபிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல் நீங்கள் சுவனபதியில் நுழைந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றீர்களா? (3:142)

மேலும் எத்தனையோ நபிமார்கள், அவர்களுடன் ரிப்பிய்யூன்கள் (என்னும் இறையடியார்க ளும்) பெருமளவில் சேர்ந்து (அல்லாஹ்வின் பாதை யில்) போர் செய்தனர், எனினும் அல்லாஹ்வின் பாதையில் அவர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களால் அவர்கள் தைரியம் இழந்து விடவில்லை, பலஹீனம் அடைந்துவிடவில்லை, (எதிரிகளுக்குப்) பணிந்து விடவில்லை, அல்லாஹ்(இத்தகைய) பொறுமை யாளர்களையே நேசிக்கின்றான். (3:146)

(நினைவு கூறுங்கள்! உஹது களத்தில்) உங்கள் பின்னால் இருந்து இறைத்தூதர் உங்களை அழைத் துக் கொண்டிருக்க, நீங்கள் எவரையும் திரும்பி பார்க்காமல் மேட்டின்மேல் ஏறிக்கொள்ள ஓடிக் கொண்டிருந்தீர்கள், ஆகவே (இவ்வாறு இறைத் தூதருக்கு நீங்கள் கொடுத்த துக்கத்தின்) பலனாக இறைவன் துக்கத்தின் மேல் துக்கத்தை உங்களுக்கு கொடுத்தான், (ஏனெனில் உங்களுக்குக் கிடைக்க வேண்டியது) தவறிவிட்டாலோ நீங்கள் (சோர்வும்) கவலையும் அடையாது பொறுமையுடன் இருக்க வேண்டும் (என்பதாகத்தான்) இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கு அறிபவனாக இருக்கின்றான். (3:153)

(முஃமின்களே) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள், உங்களுக்கு முன் இறைநூல் கொடுக்கப் பட்டோரிடமிருந்தும் நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள், ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் தீர்மானத்திற்குரிய செயலாகும். (3:186)

முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள், (இன்னல்களைச் சகித்துக் கொள்ளுங்கள்) ஒருவரை ஒருவர் பலப்படுத்திக் கொள்ளுங்கள், அல்லாஹ் வுக்கு பயபக்தி கொள்ளுங்கள், (இம்மையிலும், மறு மையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள். (3:200)

இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்த வனாகவும் மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான். (4:12)

தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டு விடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ அவருக்குத்தான் இந்தச் சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும், இன்னும் அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான். (4:25)

அல்லாஹ் மிக்க மன்னிப்போனும், மிக்க பொறுமை உடையோனுமாவான். (5:101)

எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்ப தற்காகவே நீ எங்களைப் பழிவாங்குகிறாய்? என்று கூறி எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமை யைப் பொழிவாயாக, முஸ்லிம்களாக எங்க(ள் ஆத் மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக! (7:126)

மூஸா தம் சமூகத்தாரிடம், அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள், இன்னும் பொறுமையாகவும் இருங்கள், நிச்சயமாக பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம், தம் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான். இறுதி வெற்றி பயபக்தியுடையவர்களுகே கிடைக்கும் என்று கூறினார். (7:128)

இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதி யாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று, மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டு பண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரை மட்டமாக்கிவிட்டோம். (7:137)

இன்னும் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூத ருக்கும் கீழ்ப்படியுங்கள். நீங்கள் கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள், (அவ்வாறு கொண்டால்) கோழைகளாகி விடுவீர்கள், உங்கள் பலம் குன்றிவிடும், (துன்பங்களைச் சகித்துக்கொண்டு) நீங்கள் பொறு மையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறு மையாளர்களுடன் இருக்கின்றான். (8:46)

நபியே! நீர் மூஃமின்களைப் போருக்கு ஆர்வ மூட்டுவீராக, உங்களில் பொறுமையுடையவர்கள் இருபது பேர் இருந்தால், இருநூறு பேர்களை வெற்றி கொள்வார்கள். இன்னும் உங்களில் நூறு பேர் இருந்தால் அவர்கள் காஃபிர்களில் ஆயிரம் பேர்களை வெற்றிகொள்வார்கள், ஏனெனில் (மூஃமின்களை எதிர்ப்போர்) நிச்சயமாக அறிவில்லாத மக்களாக இருப்பது தான் (காரணம்) (8:65)

நிச்சயமாக உங்களில் பலவீனம் இருக்கின்றது என்பதை அறிந்து தற்சமயம் அல்லாஹ் (அதனை) உங்களுக்கு இலகுவாக்கி விட்டான். எனவே உங்க ளில் பொறுமை உடைய நூறு பேர் இருந்தால் அவர் கள் இருநூறு பேர் மீது வெற்றிக் கொள்வார்கள், உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் உத்தரவு கொண்டு அவர்களில் இரண்டாயிரம் பேர் மீது வெற்றிக் கொள்வார்கள். அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான். (8:66)

நிச்சயமாக இப்றாஹீம் பொறுமையுடயவராகவும், இரக்கமுள்ளவராகவும் இருந்தார். (9:114)

அதில் அவர்களுடைய பிரார்த்தனையாகிறது அல்லாஹ்வே! நீ மிகப் பரிசுத்தமானவன் என்பதாகும், அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும்போது) அவர்களுடைய முகமன், ஸலாமுன் (சாந்தி உண்டா வதாக!) என்பதாகும். எல்லாப் புகழும் அகிலங்க ளின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும். (11:10)

மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே சமுதாயத் தினராகவே தவிர இருக்கவில்லை, பின்னர், அவர்கள் மாறுபட்டுக் கொண்டனர், உமது இறைவனிட மிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால், அவர்கள் எ(ந்த விஷயத்)தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப் பற்றி அவர்களி டையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும். (11:19)

ஆனால் (துன்பங்களைப்) பொறுமையுடன் சகித்து எவர் நற்கருமங்கள் செய்கின்றார்களோ, அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான நற்கூலியும் உண்டு. (11:11)

நீரும் பொறுமையைக் கைக்கொள்வீராக! நிச்ச யமாக இறுதியில் (நல்ல) முடிவு பயபக்தி உடைய வர்களுக்குத்தான். (கிட்டும்) (11:49)

(நபியே! எந்நிலையிலும்) பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நிச்சயமாக அல்லாஹ் அழகிய செயல்கள் செய்வோரின் கூலியை வீணாக்கி விடமாட்டான். (11:115)

(ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ் வாறே சொல்லவும்) இல்லை! உங்களுடைய மனங் கள் (இவ்வாறே ஒரு தவறான) வி­யத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன, ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்), அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப் போதுமானவன், நிச்சய மாக அவன் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடைய வனாகவும் இருக்கின்றான் என்று கூறினார். (12:83)

(அப்போது அவர்கள்) நிச்சயமாக நீர் தாம் யூஸுஃபோ? என்று கேட்டார்கள், (ஆம்!) நான் தான் யூஸுப்(இதோ!) இவர் என்னுடைய சகோதர ராவார், நிச்சயமாக அல்லாஹ் எங்கள் மீது அருள் புரிந்திருக்கிறான். எவர்(அவனிடம்) பயபக்தியுடன் இருக்கிறார்களோ, இன்னும் பொறுமையையும் மேற்கொண்டிருக்கிறாரோ (அத்தகைய) நன்மை செய்வோரின் கூலியை நிச்சயமாக அல்லாஹ் வீணாக்கிவிடமாட்டான் என்று கூறினார். (12:90)

இன்னும் அவர்கள் எத்தகையோரென்றால் தங்கள் இறைவனின் பொருத்தத்தைத் தேடி, பொறுமையைக் கடைபிடிப்பார்கள், தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள், நாம் அவர்களுக்கு அளித்ததிலிருந்து இரகசியமாகவும், பகிரங்கமாகவும் செலவு செய்வார்கள், நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். இத்தகையோருக்கு மறுமையில் (சுவனபதியயன்னும்) நல்ல வீடு இருக்கிறது. (13:22)

நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்ததற்காக ஸலாமுன் அலைக்கும் உங்களுடைய இறுதி வீடு மிகவும் நல்லதாயிற்று! (என்று கூறுவார்கள்) (13:24)

இன்னும் எவர்கள் சோதனைகளுக்கு உட்படுத் தப்பட்ட பின் ஹிஜ்ரத் செய்து, பின்பு அறப்போர் புரிந்தார்களோ, இன்னும் பொறுமையைக் கையாண்டார்களோ, அவர்களுக்கு(உதவி செய்ய) நிச்சயமாக உம்முடைய இறைவன் இருக்கின்றான், இவற்றுக்குப் பின்னரும் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான். (16:110)

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அள வுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால் நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும். (16:126)

(நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப் பீராக! எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது, அவர்களுக் காக நீர் கவலைப்படவேண்டாம். அவர்கள் செய் யும் சூழ்ச்சிகளைப் பற்றியும் நீர் நெருக்கடியில் ஆகி விட வேண்டாம். (16:127)

(நபியே!) எவர் தம் இறைவனுடைய திருப் பொருத்தத்தை நாடியவர்களாக காலையிலும், மாலையிலும் அவனைப் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடன் நீரும் பொறுமையை மேற்கொண்டிருப்பீராக! (18:28)

(அதற்கவர்) நிச்சயமாக நீர் என்னுடன் பொறு மையாக இருக்க இயலமாட்டீர்! என்று கூறினார். (18:67)

(ஏனெனில்) எதைப்பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்! (என்று கேட்டார்) (18:68)

அவர்கள் எத்தகையோர் என்றால் அல்லாஹ் என்று (அவனது திருநாமம்) கூறப்பட்டால் அவர் களுடைய இதயங்கள் அச்சத்தால் நடுங்கும். அன்றி யும், தங்களுக்கு ஏற்படும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோராகவும், தொழுகையைக் கடைபிடிப் போராகவும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலி ருந்து (நமது பாதையில்)செலவு செய்வோராகவும் இருப்பார்கள். (22:35)

(நபியே!) இன்னும், உமக்கு முன்னர் நாம் அனுப் பிய தூதர்களெல்லாம் நிச்சயமாக உணவு அருந்துப வர்களாகவும், கடைவீதிகளில் நடமாடுபவர்களாக வும் தாம் இருந்தார்கள். மேலும் நாம் உங்களில் சிலரை மற்றும் சிலருக்குச் சோதனையாக்கி இருக்கிறோம். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருப்பீர்களா? உம்முடைய இறைவன்(யாவற்றையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான். (25:20)

பொறுமையுடனிருந்த காரணத்தால், இவர்க ளுக்கு (ச் சுவனபதியில்) உன்னதமான மாளிகை நற் கூலியாக அளிக்கப்படும், வாழ்த்தும், ஸலாமும் கொண்டு அவர்கள் வரவேற்கப்படுவார்கள். (25:75)

இவர்கள் பொறுமையை மேற்கொண்டமைக் காக இருமுறை நற்கூலி அளிக்கப்படுவார்கள், மேலும், இவர்கள் நன்மையைக் கொண்டு தீமை யைத் தடுத்துக் கொள்வார்கள். நாம் அவர்களுக்கு கொடுத்தவற்றிலிருந்து (தான தர்மங்களில்) செல வும் செய்வார்கள். (28:54)

கல்வியறிவு கொடுக்கப்பட்டவர்களோ, உங்க ளுக்கென்ன கேடு! நம்பிக்கை கொண்டு நற்செயல் கள் செய்பவர்களுக்கு அல்லாஹ்வுடைய வெகுமதி (இதைவிட) மேன்மையானது. எனினும், அதைப் பொறுமையாளர்களைத் தவிர (வேறு) எவரும் அடையமாட்டார்கள் என்று கூறினார்கள். (28:80)

தன்னுடைய அத்தாட்சிகளை உங்களுக்குக் காண் பிப்பதற்காக வேண்டி, அல்லாஹ்வுடைய அருட் கொடையைக் கொண்டு நிச்சயமாக கப்பல் கடலில் (மிதந்து) செல்வதை நீர் காணவில்லையா? நிச்சய மாக இதில் பொறுமைமிக்க, நன்றியுள்ள ஒவ்வொ ருவருக்கும் அத்தாட்சிகள் இருக்கின்றன. (31:31)

மேலும் குர்ஆனில் அதிகமான வசனங்களில் இறை அச்சத்தைப் பற்றியும், பொறுமையைப் பற்றியும் வருகின்றன. ஆகவே அவை அனைத்தையும் இடம் பெறச் செய்ய பக்கங்கள் கூடுதலாகிவிடும். ஆகை யால் குறைந்த அளவே வசனங்களை இடம் பெறச் செய்திருக்கிறோம், மீதமுள்ள சில வசனங்களை அந்த வசனங்களின் எண்களை எழுதியிருக்கிறோம். தயவு செய்து பார்க்கவும் : 19:65, 21:85, 23:111, 29:59, 32:24, 33:35, 35:41, 37:101,102, 38:17, 38:44, 39:10, 40:55, 40:77, 41:35, 42:33, 46:35, 47:31, 50:39, 54:27, 70:5, 74:7, 76:12, 90:17, 103:3.

Previous post:

Next post: