விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2015 அக்டோபர்,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : அந்நஜாத் ஆகஸ்ட்15 இதழ் பக்கம் 10ல் நாளின் ஆரம்பம் ஃபஜ்ரா? மஃரிபா? என்ற தலைப்பில் நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்றும், ஃபஜ்ரில் ஆரம்பித்து அடுத்த ஃபஜ்ரில் முடியும் 24 மணி நேரம்தான் ஒரு நாள் என்ற கருத்தில் எழுதி இருக்கிறீர்கள். அதேபோல் லைலதுல் கத்ர் என்பது கத்ருடைய நாள் இரவு மட்டுமல்ல என்றும் வாதிட்டு உள்ளீர்கள். சரி.

இப்போது சில சந்தேகங்கள் எழுகின்றன. கத்ருடைய நாள் பஜ்ரில் முடிவதால் (குர்ஆன் : 97) கத்ர் ஃபஜ்ரில்தான் ஆரம்பிக்க வேண்டும். நல்லது, அப்படி என்றால் உலகில் ஒரு புள்ளியில் அல்லது ஒரு கோட்டில் கத்ருடைய நாள் ஆரம்பிக்கும் போது (உதாரணமாக டோக்கியோவில் பிறை 21, புதன் காலை 4 மணிக்கு) பூமிப் பந்தின் நேர் எதிர் திசையில் உள்ளவர்களுக்கு (உதாரணமாக அட்லாண்டிக்கில் உத்தேசமாக) மாலை 4 மணியாக அதாவது பிறை 20ன் செவ்வாயின் மாலையாக இருக்கலாம். அதனால் டோக்கியோவில் கத்ர் ஆரம் பமான நிலையில் அட்லாண்டிக்கில் கத்ருடைய நாள் ஆரம்பம் ஆகாது. ஏனெனில் கத்ர் பஜ்ரில் தானே தொடங்கும் இல்லையா? இவர்கள் (டோக்கியோவில்) பகலில் புகும்போது அவர்கள் (அட்லாண்டிக்கில்) இரவில் நுழையலாம், ஆனால் கத்ர் ஆரம்பிக்காது.

எனவே டோக்கியோகாரன் மாலை நேரத்தை (உத்தேசமாக மாலை 4 மணி) கடக்கும்போது தான் அட்லாண்டிக்காரன் பஜ்ரை அதாவது கத்ருடைய நாளை துவக்குகிறான் (அதாவது உத்தேசமாக 12 மணி நேரத்திற்கு பிறகு) அதனால் அட்லாண்டிக் காரன் 24 மணி நேரத்தை பூர்த்தி செய்து கத்ரின் முழு நாளையும் முடிக்கும்போது டோக்கியோ காரன் (24+12) கத்ரை முடித்து 12 மணி நேரமாகி மாலை நேரத்தில் இருப்பான். அதனால் கத்ருடைய நேரம் (24+12) 36 மணி நேரம் இருந்தாக வேண்டும்.

இன்னும் எளிமையாகச் சொன்னால் மலேசியாவில் கத்ருடைய நாள் தொடங்கி 2டி மணி நேரத்திற்கு பிறகுதான் இந்தியாவில் கத்ருடைய நாள் துவங்கும். அதைப்போல 2டி மணி நேரத்திற்கு பிறகுதான் இந்தியாவில் கத்ர் முடிவடையும்.
எனவே மலேசியா 24
இந்தியாவில் தாமதம் 2½ மணி
26½ மணி

ஆக, குறைந்தபட்சம் 26½ மணி நேரம் கத்ர் நாள் உலகில் இருந்தால்தான் இரு நாடுகளிலும் கத்ரு டைய நாள் நிறைவடையும். இப்படியே மற்ற மற்ற புள்ளிகளை அல்லது கோடுகளை கணக்கிட்டால் 46 மணி நேரம் வரை கத்ருடைய நாள் உலகில் இருந்தாக வேண்டும்.

எனவே இவர்கள் 12+ அவர்கள் 12 மொத்தம் 24 தான். ஆனால் இவர்களுக்கு கத்ர் ஆரம்பமாகும் போது அவர்களுக்கு கத்ர் ஆரம்பம் ஆகாது. வெவ்வேறு நேரத்தில் கத்ருடைய நாள் ஆரம்பம் ஆவதால் வெவ்வேறு நேரத்தில்தானே முடிய வேண்டும்? எனவே கத்ருடைய நேரம் 24 மணி தான் என்பது தவறு என்று நான்காம் வகுப்பு மாணவருக்கு சொல்வீர்களா?
இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

இன்னும் நீங்கள் சொல்வதுபோல் எந்த மவ்லவி யும் பூமி தட்டை என்று சொல்லவில்லை. நீங்களாக கற்பனை செய்து கொண்டு மூடர் பட்டம் கொடுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மீரான் சேக்காதி, கோபாலபட்டினம்.

விளக்கம் : உலகம் முழுவதிலுமுள்ள முஸ்லிம்கள் ஒரே நாளில் வெள்ளிக்கிழமைக்குள் ஜுமுஆ தொழுகை முடித்து விடுவது போல், தலைப் பிறையும் உலகம் முழுவதும் ஒரே நாளில் ஆரம்பித்து முடிந்து விடும் என்று தெளிவாக விளக்கி இருக்கிறோம்.

பிறை சர்ச்சை ஆரம்பித்த ஆரம்ப நாட்களி லேயே பீ.ஜை. 2:185 இறைவாக்கில் காணப்படும் “”உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ” என்ற பகுதியைக் காட்டி, மாதத்தை அடைவதில் முதல் நாள் இரண்டாம் நாள் என வேறுபாடு இருக்கத்தான் செய்யும், எனவே ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் மாதத்தைத் துவங்குவது சாத்திய மில்லை என எழுதினார். அப்போதே தெளிவாக நாம் மாதம் ஒரே நேரத்தில் துவங்காது, 24 மணி நேரம் கொண்ட ஒரே நாளில் மாதம் துவங்கி விடும் என எழுதியிருந்தோம். மேலும் விளக்கமாக கழியும் ஒவ்வொரு வினாடியும் பஜ்ர், ளுஹர், அஸர், மஃறிபு, இஷா என ஐங்கால தொழுகைகளும் உல கின் வெவ்வேறு பகுதிகளில் பாங்கோசைகளுடன் அரங்கேறத்தான் செய்கின்றன. மனிதர்கள் கற் பனை செய்த மதங்களில் எந்த மதத்திலும் இந்த அதிசயத்தைப் பார்க்க முடியாது.

நீங்கள் இங்கே பஜ்ர் தொழும் அதே நேரத்தில் உலகின் மற்றப் பகுதிகளில் ளுஹர், அஸர், மஃறிபு, இஷா என எப்படித் தொழலாம் என்று கேட்பவன் உலகின் சுழற்சியை அறியா மகா மூடனாக மட் டுமே இருப்பான். நீங்கள் கிளப்பி இருக்கும் சந்தே கங்கள் இப்படிப்பட்ட அறியாமைக் கேள்விகளே. நீங்கள் பஜ்ஃரில் நாளை ஆரம்பிக்கும் அதே நேரத்தில் உலகின் எல்லாப் பகுதிகளிலும் பஜ்ரில் நாள் ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணுவதே தவறாகும்.

நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மூடக் கொள்கயில் இருப்போர், அவர்களுக்கு நாள் மஃறி பில் ஆரம்பிக்கும் அதே நேரத்தில் உலகம் முழுவதும் நாள் ஆரம்பிக்கிறது என்ற மூடக் கொள்கையில் இருக்கிறார்களா? அப்படி இருந்தால்தான் நாள் பஜ்ரில் ஆரம்பிக்கும்போது, நீங்கள் குறிப்பிடும் ஊர்களில் வெவ்வேறு நேரங்களில் இருப்பதைப் பெரிய ஆதாரமாகக்காட்டி 47:24 இறைவாக்குக் கூறுவது போல் தங்கள் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு, சுய சிந்தனை இல்லாமல் இம் மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்லும் 1000ல் 999 பேரை ஏமாற்றி வஞ்சிக்க முடியும்.

மற்றவர்களை, மற்ற ஊர்களைப் பற்றிக் கவலைப்படுவதை விட்டு, உங்களைப் பற்றி கவலைப்படுங்கள். நீங்கள் சுவர்க்கம் புக விரும்பி னால் உங்கள் அமல்களையே சீர்படுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் பஜ்ர் தொழுத 24 மணி நேரத்தில் மீண்டும் பஜ்ர் தொழுகிறீர்களா? இல்லையா? அப்படியானால் அந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்கப் பஜ்ர் தொழுதுவிட்டார்கள் என்பது தானே பொருள். நீங்கள் பஜ்ர் தொழுது 24 மணி நேரத்தில் இரண்டாவது நாள் பஜ்ரை தொழும் நேரத்திற்குப் பிறகும் உலகில் ஏதாவதொரு பகுதி யில் முதல் நாள் பஜ்ரை தொழாமல் இருப்பார்கள் என்பது தான் உங்கள் நம்பிக்கையா?

அப்படியயாரு மூட நம்பிக்கை இருந்தால் மட்டுமே ஒரு நாள் 24 மணிக்கு மேலும் 48 மணி வரை இருக்க முடியும் என்று அறிவின்றி பிதற்ற முடியும். நீங்கள் பஜ்ரில் நோன்பை ஆரம்பித்து சுமார் 13 மணி நேரத்தில் நோன்பைத் துறந்து விடு வீர்கள். ஆனால் 13 மணியிலிருந்து 24 மணி வரையுள்ள மக்கள் இன்னும் பஜ்ரை அடைந்து நோன்பை ஆரம்பித்திருக்க மாட்டார்கள். ஆயினும் 24 மணி நேரத்தில் நீங்கள் இரண்டாவது நோன்பை ஆரம்பிக்கும் போது உலகம் முழுவதும் முதல் நாளையும், நோன்பையும் ஆரம்பித்திருப்பார்கள். ஆயினும் அவர்கள் முதல் நாளை முடிக்க 24 மணி நேரமும், முதல் நோன்பை முடிக்க 13 மணி நேர மும் எடுக்கும் என்பது உண்மை தான். அதனால் முதல் நாள் முடிய 24+24=48 மணி நேரம் ஆகும் என்பது இந்த மவ்லவிகளின் அறியாமையை வெளிப்படுத்துகிறது. அது உண்மையானால் நாம் பஜ்ர் தொழுது 48 மணி நேரத்திற்குப் பின்னர்தான் நமக்கு அடுத்த பஜ்ர் வர முடியும். எப்படி 24 மணி நேரத்தில் அடுத்த பஜ்ர் வருகிறது? சிந்திக்க வேண்டாமா?

மதரஸாக்களில் ஓதிக் கொடுக்கப்படும் “”தஷ்ரீக்குல் அஃப்லாக்” என்ற புவியியல் பற்றிய அரபு நூலில் பூமி தட்டை, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்றே போதிக்கப்படும். அதை மண்டை யில் ஏற்றிக் கொண்ட இம்மவ்லவிகள் பட்டம் பெற்று வெளி வருகின்றனர். எனவே அதே புத்தி யுடன் செயல்படுகின்றனர். அந்த அடிப்படையில்

1_______12_______24________36_______48

என்று மூடத்தனமாக 48 மணி நேரம் என்கின்றனர்
உண்மையில் பூமி உருண்டை
தேதிக் கோட்டுக்கு மேற்கில் இருப்பவர்கள் புதிய மாதத்தின் முதல் நாளை ஆரம்பித்து சுழல ஆரம்பித் தவுடன், தேதிக் கோட்டுக்குக் கிழக்கில் இருப்பவர் கள் கழியும் மாதத்தில் இறுதி நாளை முடித்துக் கொண்டு புதிய மாதத்தின் முதல் நாளில் நுழைகி றார்கள். இப்படியே உலகம் முழுவதும் உள்ள மக்கள் 24 மணி நேரத்தில் கழியும் நாளை முடித்துக் கொண்டு புதிய மாதத்தில் நுழைந்துவிடுவார்கள். 24 மணி நேரத்திற்கு அதிகமாக 25,26,48 என்று எடுக்க வாய்ப்பே இல்லை. தலைப்பிறை காலை யில் கிழக்கில் உதித்து சுமார் 12 மணி நேரத்திற்குப் பிறகு மேற்கில் மறைவதைக் கண்ணால் பார்த்து பிறை பிறந்துவிட்டது. நாள் ஆரம்பித்துவிட்டது என்று பிதற்றும் இம்மவ்லவிகளுக்கு நான்காம் வகுப்புப் படிக்கும் மாணவிக்கு இருக்கும் அறிவு தானும் இம்மவ்லவிகளுக்கு இல்லை என்பதை மறுக்க முடியுமா?

நாமாகக் கற்பனை செய்து கொண்டு மூடர் பட்டம் நிச்சயமாகக் கொடுக்க மாட்டோம். நாங்கள் தான் ஆலிம்கள்-மவ்லவிகள் மார்க்கம் அறிந்தவர்கள், நீங்கள் அவாம்கள், குர்ஆன் உங்க ளுக்கு விளங்காது. நாங்கள் விளக்கித்தான் விளங்க முடியும் என்று ஆணவம்-பெருமை பேசும் மதகுரு மார்கள் மூடர்கள் என்று எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன. நபி(ஸல்) அவர்கள் இப்படி பெருமை பேசிய தாருந்நத்வா ஆலிம் களை எப்படி மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் கள். அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்து ஜாஹில் கள் என்றும், அபுல் ஹிக்கம் என்று குறைஷ்கள் ஏற்றிப் போற்றிப் பாராட்டித் தங்களின் வழிகாட் டியாகக் கொண்டவனை அபூஜஹீல் என்று பட் டம் சூட்டி வழிகாட்டியிருக்கிறார்கள். குர்ஆன் பல இடங்களில் ஜாஹில்கள் என்று குறிப்பிடுவது சட்ட விரோதமாகத் திருட்டுத்தனமாக அல்லாஹ் வுக்கும் அவனது அடியஸர்களுக்குமிடையில் இடைத்தரகர்களாக புகுந்து கொண்டு மக்களை அல்லாஹ்வுக்கு இணை வைக்கத் தூண்டும் இம்மத குருமார்களையே.

இந்த உண்மைகளை நீங்கள் அன்றாடம் குர் ஆனைப் பொருள் அறிந்துப் படித்து வந்தால் நிச்சயம் அறிய முடியும். அதனால்தான் இம் மவ்லவிகள் பொது மக்களை குர்ஆனை நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அறிய முடியும்.

விமர்சனம் : மற்ற அமைப்புகள் எல்லாம் குர்பானி ஒரு பங்கு 2000/-த்திலிருந்து 3000/-வரை அறிவிக் கும் நிலையில் நீங்கள் ஒரு பங்கு 1400/-க்கு எப்படிக் கொடுக்க முடியும்? குர்பானிக்குத் தகுதி பெறாத இளங்கன்றுகளைக் குர்பானி கொடுப்பதாகச் செய்திகள் பரப்பப்படுகிறது. உண்மை நிலை என்ன? பல தொலைபேசி விமர்சனம்

விளக்கம் : தூய இஸ்லாமிய மார்க்கத்தையே மத மாக்கி அதை கத்தம், ஃபாத்திஹா, கந்தூரி, மெளலூது என்றும், ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், துக்க நாள், சாலை மறியல் என்றும் கூறி வசூல் வேட்டையாடி வியாபாரமாக்கியுள்ள மத குருமார்களுக்கும், இயக்கத்தினருக்கும், குர் பானியை வியாபாரமாக்கச் சொல்லியாக் கொடுக்க வேண்டும். அவர்களின் இந்தத் தவறான வியாபாரத்தை மறைக்க 4:112 இறைவாக்குக் கூறு வது போல் அப்பழியை எம்மீது சுமத்தி, நிச்சயமாக அவதூறுகளையும், பகிரங்கமான பாவத்தையும் சுமந்து கொள்கிறார்கள்.

எப்படி மார்க்கத்தைப் பிழைப்பாக்க வியாபார மாக்கக் கூடாது என்று கடுமையாகக் கண்டித்து வருகிறோமோ, அதேபோல் மார்க்கத்தின் ஒரு பகுதியான குர்பானியையும் வியாபாரமாக்கக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.

கடந்த 25 வருடங்களாக குர்பானி கொடுப்பவர் களிடமிருந்து அதற்குரிய தொகையைப் பெற்று, அவர்களுக்குரிய பங்கைக் கொடுப்பதுடன், ஏழை களுக்குக் கொடுத்துவிடுங்கள் என்று கூறுபவர் களின் பங்கை ஏழைகளுக்குக் கொடுக்கிறோம். அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி இதைச் செய்கி றோமே அல்லாமல் பெரிதாக விளம்பரப்படுத்திப் பேர், புகழ் தேடவேண்டும் என்று முயலவில்லை. எமது பேர் புகழுக்காகக் குர்பானி வகை பணத்தி லிருந்து நாம் சல்லிக் காசும் எடுப்பதுமில்லை, செலவழிப்பதுமில்லை.

பங்கு 1400/- சுவரொட்டி விளம்பரமும் கூட மாடுகளை ஜமாஅத்துக்காக வாங்கி அறுத்து பங்கு தாரர்களுக்குரிய பங்கைக் கொடுத்துவரும் சகோ தரர் தமது சொந்தச் செலவில் செய்து வருவதே யாகும். ஆக ஏழு பங்குகளுக்குரிய 9800/-ம் மாடு கொள்முதல், கொண்டுவரும் செலவு, பராமரிப்புச் செலவு, அறுத்து உரித்துக் கறியாக்கும் செலவு இந்த வகைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறோம்.

வாங்கும் ஒவ்வொரு மாடும் 2 வருடம் என்ற நிலையில், 2 பல் போட்டது எனப் பார்த்தே வாங்கு கிறோம். கிராமங்களில் இயற்கையாக வளர்க்கப் பட்டவை. பிராய்லர் கோழிகள் போல் பண்ணை களில் ஊசி போட்டு வளர்க்கப்படுபவை அல்ல. கறி 42கிலோவுக்குக் குறையாமல் இருக்கும். அதனால் தான் ஒரு பங்குக்கு 6 கிலோ இதுவரைக்கும் கொடுத்துவருகிறோம். அதேசமயம் பங்கு 2200/- என வசூலிப்பவர்கள் பங்குக்கு 5 கிலோ மட்டுமே கொடுக்கிறார்கள்.

இதிலிருந்தே குர்பானியை வியாபாரமாக்கி வரு பவர்கள், எம்மீது அவதூறு கூறி வருகிறவர்கள் யார் என்பதை சிந்திக்கும் யாரும் அறிந்து கொள்ள முடி யும். அவதூறு, ஃபித்னா, பசாது செய்து வருவதா லேயே இந்த விளக்கங்கள் கொடுக்க நேரிட்டது.

விமர்சனம் : துல்ஹஜ் பிறை 9ல் கடைபிடிக்க வேண்டிய அரஃபா தினத்தை சவுதி அரசு பிறை 10ல் செயல்படுத்தியது. அதனால் ஹாஜிகள் அரஃபாவில் தங்கிய 10ம் நாளில்தான் மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று பெரும்பான்மையினர் கூறுகின்றனர்.சரியான நாளான பிறை 9ல் நோன்பு நோற்பதா? ஹாஜிகள் அரஃபாவில் கூடிய 10ம் நாளில் மற்றவர்கள் நோன்பு நோற்பதா? எது குர்ஆன், ஹதீஃத் வழியில் சரியான செயல்?
பல தொலைபேசி விமர்சனம்

விளக்கம் : நபிவழிகாட்டல் இதுதான். துல்ஹஜ் பிறை 9ல் ஹாஜிகள் அரஃபாவில் தங்கவேண்டும். மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்பதே. ஹாஜிகள் என்று அரஃபாவில் தங்குகிறார்களோ அன்றே மற்றவர்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) வழிகாட்டவில்லை. கி.மு.383ல் அதாவது அஞ்ஞான காலத்தில் யூதர்கள் அறியாமை யில் நடைமுறைப்படுத்திய காலையில் உதித்து மாலையில் மறையும் பிறையைப் பார்த்துவிட்டு, பிறை பிறந்துவிட்டது, நாள் ஆரம்பித்து விட்டது, நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மூடக் கொள் கையை சவுதி அரசும், முஸ்லிம் நாடுகளும், முஸ்லிம் களும் மூட முல்லாக்களின் வழிகேட்டு போத னையை வேதவாக்காக ஏற்றுச் செயல்படுவதால் விளையும் வழிகேடாகும். 9:37 இறை எச்சரிக்கைப் படி குஃப்ரை-நிராகரிப்பை அதிகப்படுத்தும் செய லாகும். அந்தத் தவறான கொள்கை அடிப்படையில் சவுதி அரசு பிறை 10 ஈதுடைய நாளை அரஃபா தின மாக அறிவித்து ஹாஜிகள் அனைவரின் நற்செய லைப் பாழாக்கியுள்ளனர். 16:25 இறைவாக்குக் கூறு வது போல் ஹாஜிகளின் அந்தப் பாவச் சுமையை சவுதி அரசு பொறுப்பாளர்களே சுமக்கப் போகிறார்கள்.

சவுதி அரசின் தவறான வழிகாட்டலால், ஈது டைய தினமான துல்ஹஜ் பிறை 10ல் ஹாஜிகள் அரஃபாவில் கூடி இருக்கும் 10ம் நாளில் மற்றவர்கள் நோன்பு நோற்கலாமா? அதுவும் நோன்பு நோற்பது தடுக்கப்பட்ட ஈதுடைய 10ம் நாள் நாளில் பெருந் தவறல்லவா? பிறை ஒன்பதில் அரஃபாவுடைய தினத்தில் அரஃபாவில் இல்லாதவர்கள் நோன்பு நோற்பது சுன்னத்துத்துதான். நோற்றால் நன்மை. நோற்காவிட்டால் பாவம் இல்லை. அதற்கு மாறாக ஈதுடைய 10ம் தினத்தில்-பெருநாள் தினத்தில் நோன்பு நோற்பது ஹராமாகும். பெருங்குற்றமாகும்.

எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்துச் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக அல்லாஹ் வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையில் இடைத் தரகர்களாகப் புகும், அதனால் பெருமை பேசும் இம்மதகுருமார்கள் வழிகேடுகளைத்தான் நேர்வழி யாகப் போதிப்பார்கள் என்பதை 7:146 முதல் பல வசனங்கள் கூறுகின்றன. அதுவே இங்கும் உண்மைப் படுத்தப்படுகிறது. கூகுலில் லூனாஃபாக்ட் (ஸிUஹிபுய்புஞவீ) என்ற வலைதளத்தை பதிவிறக்கம் செய்து பாருங்கள்.

இதை எழுதும் 25.9.2015 12.03ஸ்ரீது நேரத்தில் பிறை வயது 11 நாள் 23 மணி 51 நிமிடம், வெளிச்சம் 88.3% சந்திர உதயம் 3.50ஸ்ரீது கிழக்கு மறைவு 3.02ழிது மேற்கு. தூரம் 364129வது இந்த அளவு மிகமிகத் துல் லியமாக கணக்கிடும் இந்நாளில், இம்மவ்லவிகள் யூத மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றிக் காலையில் உதித்து மாலையில் மறையும் பிறையைப் பார்த்து விட்டு பிறை பிறந்து விட்டது, நாள் ஆரம்பித்து விட்டது என்று பிதற்றுகிறார்களே இவர்கள் ஆலிம் களா? ஜாஹில்களா? நீங்களே முடிவு செய்யுங்கள்.

தலைப்பிறை காலையில் பிறந்தாலும் சூரிய வெளிச்சத்தில் அதைப் பார்க்க முடியவில்லை. சூரியன் மறைந்து சில நிமிடங்களுக்குப் பின் பிறை மறைவதால் அதைப் புறக்கண்ணால் பார்க்க முடிகி றது. ஒவ்வொரு நாளும் பிறை பிறந்து மறைய சுமார் 12 மணி நேரம் எடுக்கும் உதாரணமாக 14.9.2015ல் துல்ஹஜ் முதல் பிறை காலை 6:42ல் கிழக்கில் பிறந்து மாலை 7.01 மேற்கில் மறைந்துள்ளது. ஆக ஒவ் வொரு நாள் பிறையும் பிறந்து மறைய சுமார் 12 மணி நேரம் எடுக்கும்; எப்படி சூரியன் உதித்து மறைய சுமார் 12 மணி நேரம் எடுக்கிறதோ அதுபோல்தான்.

இப்போது சிறிது சுயமாகச் சிந்தியுங்கள். இம்மத குருமார்களின் கூற்றுப்படி அதாவது பிறை மாலை யில் பிறக்கிறது. நாள் ஆரம்பிக்கிறது என்றால், பிறந்த பிறை சுமார் 12 மணி நேரம் இருக்க வேண் டுமே. உடனே எப்படி மறைகிறது? காலையில் உதிக் கும் பிறையை சூரிய வெளிச்சம் காரணமாகப் பார்க்க முடியவில்லை. மாலையில் சூரியன் மறைந்து சில நிமிடங்களுக்குப் பின்னால் பிறை மறைவதால் பார்க்க முடிகிறது என்பதே உண்மை. அதற்கு மாறாக மாலை மஃறிபில் பிறை பிறக்கிறது என்றால் அடுத்த சுமார் 12 நேரத்திற்கு பிறை கண் ணுக்குத் தெரிய வேண்டுமே. பகலில் சூரிய வெளிச் சத்தில் பிறையைப் பார்க்க முடியவில்லை. அதற்கு மாறாக அவர்களின் கூற்றுப்படி மாலையில் பிறக் கும் பிறை இரவு நேரத்தில் ஏன் கண்ணுக்குத் தெரியாமல் மறைய வேண்டும்? இதிலிருந்தே பிறை காலையில் உதித்து மாலையில் மறைகிறது. மாலை யில் தலைப்பிறை பிறக்கவுமில்லை. நாள் ஆரம்பிக்க வும் இல்லை என்பது இரவும் பகலைப் போல் வெளிச்சமாக இருக்கிறதே. இதை அறிய முடியாத இம்மதகுருமார்கள் ஆலிம்களா? ஜாஹில்களா? ஆம்! 1450 ஆண்டுகளுக்கு முன்னர் தாருந்நத்வா அரபு மதரசாவின் ஆலிம்களும், அதன் தலைவன் அபுல்ஹிக்கம்-ஞானத் தந்தை என்று ஏற்றிப் போற் றப்பட்ட அபூஜஹீலும் எப்படிப்பட்ட மூடர் களாக இருந்தார்களோ அவர்களைப் போல்தான் இன்றைய இம்மதகுருமார்களும் கடைந்தெடுத்த மூடர்களாக இருக்கிறார்கள். இம்மதகுருமார்களுக் குரிய ஒரே சாதக நிலை (Pயிற்வி ஸ்ரீலிஷ்ஐமி) நரகை நிரப்ப இருக்கும் (பார்க்க 32:13, 11:118,119, புகாரீ 3348, 4741, முஸ்லிம் 379) 99.9% அதாவது பெருங்கூட் டம் இம்மதகுருமார்கள் பின்னால் அணி வகுப்பதே யாகும். ஆனால் நாளை அவர்களின் நிலை?

Previous post:

Next post: