முஸ்லிம்களுக்கு விமோசனம் உண்டா?

in 2015 நவம்பர்,தலையங்கம்

1450 வருடங்களுக்கு முன்னர் இப்றாஹீம் (அலை) அவர்களின் நேரடி வாரிசுகளான குறைஷ்கள் எப்படி நரக விளிம்பில் நின்று கொண்டிருந்த னரோ (பார்க்க 3:103) அதேபோல் இன்றைய முஸ்லிம்கள் நரக விளிம்பில் நின்று கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல அற்பமான இவ்வுலகிலும் நாயி லும் கேடான ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக் கின்றனர். அதற்குக் காவியினரோ, யூதர்களோ, கிறித்தவர்களோ, பெளத்தர்களோ, இவை போல் ஏனைய மதத்தினரோ காரணம் அல்லவே அல்ல. முஸ்லிம்களே முழுக்க முழுக்கக் காரணகர்த்தாக்க ளாக இருக்கிறார்கள். இதை நாம் கூறவில்லை. முஸ் லிம்கள் அனுபவித்து வரும் அனைத்துத் துன்பங்களும் அவர்கள் தங்கள் கைகளால் தேடிக் கொள்ப வையே என்று 2:95,195, 3:182, 4:62, 8:51, 28:47, 30:36,41, 42:30,48, 59:2, 62:7 இறைவாக்குகளே கூறுகின்றன.

அல்லாஹ் கூறும் உறுதி மொழிகளைப் பாருங்கள்!
“”…முஃமின்களை அதாவது நம்பிக்கை கொண்ட வர்களைக் காப்பாற்றுவது நமது கடமையாகும்”
(10:103)
“”…விசுவாசிகளை நிச்சயம் அல்லாஹ் பாது காக்கிறான்….” (22:38)
விசுவாசிகளுக்கு உதவி செய்வது அல்லாஹ்வின் கடமை (30:47)
அல்லாஹ்வை விட வாக்குறுதியைக் காப்பாற்று பவன் யார்? (9:111)
மேலும் அல்லாஹ் தன் வாக்குறுதியில் ஒரு போதும் மீறமாட்டான் என்று 3:9,194, 13:31, 39:20 என பல இடங்களில் உறுதி அளித் துள்ளான்.

இப்போது சிந்தியுங்கள்! இவ்வளவு தெளிவாக, நேரடியாக அல்லாஹ் வாக்களித்திருந்தும், இன்று முஸ்லிம்கள் வீழ்ச்சியின் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கக் காரணம் என்ன? இன்று உலகில் காணப்படும் அனைத்துச் சமூகங்களை விட ஆகக் கேடு கெட்ட நிலையில் முஸ்லிம் சமுதாயம் இழிவுபடுத் தப்படக் காரணம் என்ன? ஆழ்ந்து சிந்திக்க வேண்டாமா?

ஆம்! இன்றைய முஸ்லிம்களில் 99.9% அல்லாஹ் மேலே கண்ட வசனங்களில் கூறும் முஃமின்களாக-நம்பிக்கையாளர்களாக இல்லை. 49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான்-நம்பிக்கை நுழையாத பெயர் தாங்கி முஸ்லிம்களாக இருக்கின்றனர். இன்றைய முஸ்லிம்கள் 2:186

இறைவாக்குக் கட்டுப்பட்டு அல்லாஹ்வை மட்டும் நம்பவில்லை. அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையில் சட்ட விரோதமாக, திருட்டுத்தனமாக இடைத் தரகர்களாகப் புகுந்துள்ள மதகுருமார்கள் மீதே அபார நம்பிக்கை வைத்துள்ளனர்.

7:3 இறைக் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை மட்டும் பின்பற்றவில்லை. குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரணான இம்மவ்லவிகளின் சுய கருத்துக்களையே வேதவாக்காகக் கொண்டு செயல் படுகின்றனர். அதனால் எண்ணற்றப் பிரிவுகளாகப் பிரிந்து அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டையிலிருந்து சிதறும் நெல்லிக்காய்கள் போல் சிதறிக் கிடக்கிறார்கள். உலகில் 130 கோடி முஸ்லிம் கள் இருந்தும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படும் சருகுகளைப் போல் இருக்கிறார்கள். அல்லாஹ் 8:46 இறைவாக்கில் கூறுவது போல் முரண்பட்டுப் பலம் குன்றி, கோழைகளாக ஆகிவிட்டார்கள்.

இந்த நிலை நீடித்தால் அல்லாஹ் இந்த முஸ்லிம் சமுதாயத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, வேறு சமுதாயத்தை அவர்களின் இடத்தில் கொண்டு வந்து விடுவான். (பார்க்க. 4:133, 9:39, 11:57, 47:38) மேல் நாடுகளில் வசிப்பவர்கள் இம்மதகுருமார்களைப் புறக்கணித்து ஒதுக்கி விட்டு நேரடியாக குர்ஆனை அவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் படித்து அதன் மூலம் நேர்வழியை (6:153) அறிந்து கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைகிறார்கள்.

முஸ்லிம்கள் தங்களின் இந்த வழிகெட்ட நிலையை மாற்றாத வரை அல்லாஹ் அவர்களின் நிலையை மாற்றப்போவதில்லை. (பார்க்க:8:53,13:11)

முஸ்லிம்களே உஷார்! நீங்கள் உங்களின் பழைய நிலையைத் தக்கவைக்க விரும்பினால், உங்க ளுக்கு விமோசனம் வேண்டும் என்றால், நீங்கள் இதுகாலம் வரை ஆபத்பாந்தவனாக நம்பி இருக்கும் இந்த மதகுருமார்களை-மவ்லவிகளை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கி விட்டு, நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடித்து அவற்றின் வழிகாட்டல் படி நடக்க முன்வாருங்கள். அதுவே உங்களுக்கு விமோசனம் தரும்.

குர்ஆன், ஹதீஃதைப் புறக்கணித்துவிட்டு பிரி வினைவாதிகளான மதகுருமார்கள், இயக்க, அரசியல் தலைவர்கள் என யாரை நம்பி அவர்கள் பின்னால் செல்பவர்கள் நாளை மறுமையில் அடையப் போகும் கொடும் தண்டனைகளை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 குர்ஆன் வசனங்களைப் படித்து அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ் பாதுகாப்பானாக!

Previous post:

Next post: