மனைவியை மகிழ்விப்பது எப்படி?

in 2015 நவம்பர்

ரஹிமுத்தீன், குண்டூர், திருச்சி-620 007. செல் : 9176699684

இன்னும், நீங்கள் அமைதி பெறுவதற்காக உங்களிலிருந்தே உங்கள் மனைவியரை படைத் திருப்பதும் உங்களுக்கிடையே அன்பையும் கருணையையும் உண்டாக்கியிருப்பதும் அவனு டைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. அல்குர்ஆன் : 30:21
அழகிய முகமன் : வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள். மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். உங்கள் இல்லங்களில் நுழையும்போது ஆள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஸலாம் சொல்லுங்கள். உங்கள் இல்லங்களில் பரகத்(வளமை) ஏற்படும் என்று நபி (ஸல்) கூறியுள்ளார்கள். ஸலாம் சொல்வது நபி மொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட, அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி “முஸாபஹா’ செய்யலாம். வெளியில் சந்தித்த நல்ல செய்திகளைத் தெரிவித்து விட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காக தள்ளி வையுங்கள்.

இனிப்பான சொல்லும், பூரிப்பான கனிவும் :
நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந் தெடுத்துப் பேசுங்கள். எதிர்மறையான வார்த்தை களைத் தவிர்த்து கொள்ளுங்கள். உங்களின் வார்த் தைகளுக்கு அவள் பதில் கொடுக்கும் பொழுது செவி தாழ்த்துங்கள். தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்கள். அவள் புரிந்து கொள்ளவில்லையயனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள். மனைவியை செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.

நட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும் :
மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள், நல்ல வி­யங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களின் சந்தோ­ (முதலிரவு மற்றும் சுற்றுலாவின் பொழுது ஏற்பட்ட…) அனுபவங்களை இருவரும் சேர்ந்திருக்கும் பொழுது மீட்டிப் பாருங்களேன்.

விளையாட்டும் கவன ஈர்ப்பும் :
நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவ ளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள். ஒருவருக் கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடு படுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபி மொழி, பொது அறிவு போன்ற கல்விகளைக் கற் பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்க லாம். இஸ்லாம் அனுமதித்த விளையாட்டுப் போட் டிகள் போன்றவைகளைப் பார்ப்பதற்கு அழைத்துச் செல்லுங்கள். இஸ்லாம் அனுமதிக்காத பொழுது போக்கு வி­யங்களை (சினிமா போன்றவற்றை) மறுத்து விடுங்கள். வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி விட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனை விக்குத் துணை புரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயாளியா கவோ களைப்படைந்தோ இருந்தால் கட்டாயமாக நீங்களே உதவுங்கள். வேலைக்காரர்களை உதவச் சொல்லாதீர்கள். கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவனை உற்சாகப்படுத்துங்கள்.

இனியவளின் ஆலோசனை : குடும்ப வி­யங்களில் உங்கள் மனைவியுடன் கூடி ஆலோசனை செய்யுங் கள். ஹுதைபியா உடன் படிக்கையின்பொழுது நபி யவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு நல்ல ஆலோ சனை வழங்கியது அவர்களின் மனைவிதான். அவளி டம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் பொழுது அவளின் உணர் வுக்கு (பிள்ளைகளின் திருமண வி­யங்கள் போன்ற வற்றில்) மதிப்பளியுங்கள். மனைவியின் கருத்துக் களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரி சோதியுங்கள். மனைவியின் கருத்து சிறந்ததாக இருந்தால் உங்கள் கருத்தைப் புறந்தள்ளிவிட்டு அவ ளின் கருத்தையும் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டா தீர்கள். ஆலோசனை தந்து உதவியதற்காக அவர் களைப் பாராட்டுங்கள்.

பிறரை காணச் செல்லும்பொழுது மார்க்கத்தில் மற்றும் பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களை, நோயாளி களைப் பார்க்கச் செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள். பார்க் கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடு பட்டு நேரத்தை வீணாக்குவதைக் கண்டியுங்கள். அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்ற னவா என கவனித்துக் கொள்ளுங்கள். அவளுக்குச் சங்கடம் தரக்கூடிய இடங்களுக்குப் போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.

உங்களின் வெளியூர் பயணத்தின்பொழுது மனைவிக்குத் தேவையான நல்ல அறிவுரைகளைக் கூறி விட்டு அழகான முறையில் விடைபெறுங்கள். உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல் லுங்கள். நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்த பந்த உறவினர்களிடம் அவசியமான உதவிகளைச் செய்து தரும்படி கேட்டுக் கொள்ளலாம். குடும்பச் செல வுக்கு தேவையான பணத்தை கொடுத்துச் செல்லுங் கள். நீங்கள் வெளியூரில் இருக்கும் நாட்களில் டெலி போன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் அடிக்கடி தொடர்பு கொள் ளுங்கள் பிரிவின் பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொரு வரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப் பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத் தும் உணர்வு உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்.

முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய் யுங்கள். திரும்பி வரும்பொழுது வருகையை தெரி யப்படுத்துங்கள். அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருட்களை வாங்கி வாருங்கள். எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்காக அலங்கரித் துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கும் உங்களுக் கும் சங்கடத்தை ஏற்படுத்தும். பிரச்சினைகள் எது வும் வராது என எண்ணினால் மனைவியையும் உங்களுடன் உடன் அழைத்துச் செல்லலாம்.

பொருளாதார உதவி : கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும். மாறாக கஞ்சத் தனம் செய்யக் கூடாது. வீண் விரயமும் செய்யக் கூடாது. அவளுக்கு ஊட்டி விடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள் வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அவசி யத் தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்ப தற்கு முன்னரே கொடுப்பது தான் சிறந்தது.

அழகும், நறுமணமும் : நபிவழியின்படி அதிகபட்ச மாக 40 தினங்களுக்குள் ஒரு முறை அக்குள் முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கி விடுங்கள். சுத்தம் என்பது ஈமானின் ஒரு பகுதி என்று நபிகள்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருங்கள். அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.

தாம்பத்யம் : மனைவிக்குத் தாம்பத்ய சுகம் கொடுப் பது ஒவ்வொரு கணவனின் மீதும் கட்டாயக் கட மையாகும். உங்களுக்கோ அல்லது உங்கள் மனை விக்கோ உடல் நலக்குறைவு இருந்தாலே தவிர மற்ற நாட்களில் இருவரும் மனம் விரும்பி தாம்பத்யம் கொள்ள வேண்டும். பிஸ்மில்லாஹ்(இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கை விட்டு பாதுகாவல் கோரி இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு உடல் உறவை ஆரம்பியுங்கள். அல் லாஹ் படைத்துள்ள (டூ இன் ஒன்) ஒன்றில் இரண்டு காரியத்திற்கு பயன்படும் பெண்ணின் இன உருப் பில் மட்டுமே நீங்கள் சுகம் அனுபவியுங்கள். மலப் பாதையில் உடல் உறவு என்பது நபிகள்(ஸல்) அவர் கள் தடை செய்த காரியமாகும். மாதவிடாய் காலத் தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவதும் தடை செய்யப் பட்ட காரியமாகும்.

உங்கள் மனைவியர் அறையினுள் வந்தவுடன் நேரடியான உடல் உறவுக்குச் செல்லாதீர்கள். அவர் களைக் கிளுகிளுப்பான, காதல் வார்த்தைகள் மூலம் அவளை உடல் உறவுக்குத் தயார்படுத்துங்கள். நீங் கள் மட்டும் உச்சம் தொட்டு சரிந்து விழுந்து உறங் கும் காரியத்தை எப்பொழுதும் செய்யாதீர்கள். இது நாளடைவில் உங்களுக்கிடையேயுள்ள பரஸ்பர தூரத்தை அதிகப்படுத்திவிடும். எனவே இருவரும் இல்லற இன்ப உச்சகட்டத்தை அடைவது அவசிய மான ஒன்றாகும். அவளை திருப்திப்படுத்தும் வரை உங்கள் உறவை தொடருங்கள். (நல்லதொரு இல் லற உறவு குறித்த புத்தகங்கள் அல்லது வலைதளங் களின் மூலம் உறவை நீட்டுவது எவ்வாறு என்பதை நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்)

பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள், எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்து விடாதீர்கள். உறவில் அவளுக்கு கஷ்டமான கோணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். நீங்கள் பருமனான ஆளாக இருந்தால் அவளின் நெஞ்சில் முழுமையாக சாய்ந்து அழுத்தத்தை எற்படுத்தி சுவாசத்திற்குக் கஷ்டம் ஏற்படுத்தாதீர்கள். அது பின் வரும் நாட்களில் உங்களுடனான உடல் உறவை தவிர்க்க தோன்றும், அவளின் நோய் மற்றும் களைப் படைந்த வி­யங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.

உறவுக்குப் பின் அவர்களிடம் இன்பம் அடைந்து விட்டார்களா என்பதை கேட்டு தெரிந் துக் கொள்ளுங்கள். இல்லை என்ற பதில் வருமாயின் இருவரும் மனம் விட்டு வெளிப்படையாக பேசி அடுத்த உறவை பலப்படுத்துங்கள். உங்களுக்குள் ளேயே தீர்த்துக்கொள்ள இயலாவிட்டால் நல்ல தொரு சைக்காலஜிஸ்ட் அல்லது செக்ஸாலஜிட்டி டம் ஆலோசனை பெறத் தயங்காதீர்கள். தவறினால் அது மிக மோசமான விளைவுகளை (பாதை மாறு தலை) ஏற்படுத்தும். உறவுக்குப் பின் திருப்தி என்பது மிக அவசியம். அதன் பின் நகைச்சுவையால் அல்லது சாதாரண பேச்சுக்களால் மனம் விட்டு பேசிய பின் இருவரும் மற்றவர்களின் கைவளைய அணைப்புக் குள் உறங்கச் செல்லுங்கள். படுக்கையறை வி­யங் கள் அவளின் நோய்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சனைகள் போன்றவற்றை பிறரிடம் வெளிப் படுத்தாதீர்கள்.

இறைவனுக்கு கட்டுப்படும் வி­யம் : தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப் பகுதி யில் எழுப்புங்கள். உங்களுக்குத் தெரிந்த திருகுர் ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள். காலை மற்றும் மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ர் (இறை நினைவுகளை) அவளுக்கு நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும் போதியுங்கள். இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள். ஹஜ் மற்றும் உம்ராவிற்கு(பொருளாதார மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் இருவருமாக நிறை வேற்றச் செல்லுங்கள். நீங்கள் ஏற்கனவே நிறைவேற் றியிருப்பின் உங்கள் மனைவிக்கு இறைவன் அனு மதியளித்த(மஹ்ரமான)வர்களுடன் மாத்திரம் அனுப்பி வையுங்கள்.

மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்தல் : அவளின் பெற்றோர்கள் மற் றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங் கள். உங்களின் வீட்டுக்கு வர அவர்களுக்கு அழைப்புக்கொடுங்கள். அப்படி அவர்கள் வரும் பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள். அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசை யாக இருங்கள். பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்கு உட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள். உங்க ளுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர் களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும், தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) கொடுத்தது போல் கொடுத்து அன்பு பாராட்டுங்கள்.

இஸ்லாமிய அறிவுப் பயிற்சி : இஸ்லாமிய அறிவை அவர்கள் பெற்றுக் கொள்ள உங்களால் முடிந்த அனைத்து ஒத்துழைப்பையும் கொடுங்கள். சில குடும்பங்களில் மனைவியர் உங்களை விட அதிக மான இஸ்லாமிய அறிவாளியாக (ஆலிமா) பெற்றி ருந்தால் அவர்களிடமிருந்து அதனை அறிந்து கொள் ளத் தயங்காதீர்கள். நீங்களும் உங்கள் மனைவியரும் இஸ்லாமிய அறிவை முழுமையாக பெற்றிருந்தால் உங்கள் குடும்பத்தில் ஷைத்தானுக்கோ சண்டை சச்சரவுகளுக்கோ இடமில்லை. உங்கள் வீட்டில் ஒரு இஸ்லாமிய நூலகத்தை ஏற்படுத்துங்கள். அதில் பல் வேறு தலைப்புகளிலான புத்தகங்கள், ஆடியோ, வீடியோ, சிடிக்கள் போன்றவற்றை சேகரித்து வைத்து மனைவியருக்கும் இன்னும் அவர்களை சந்திக்க வரும் அவர்களின் தோழியர் மற்றும் உறவினர்களுக்கும் இஸ்லாமிய அறிவை அறியச் செய்யுங்கள்.

அவர்கள் வெளியில் போகும்பொழுது இஸ்லா மிய முறைப்படி ஆள் அடையாளம் தெரிய முகம் தெரியும் நிலையில் பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்ளுங்கள். மஹரம் இல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டியுங் கள். (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தையின் மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் அவர்களின் மஹ்ர மானவர்களைத் தவிர தவறுதான்). இவர்களுடன் தனித்திருப்பது மரணத்திற்கு நிகரானது என்று முஹம்மது(ஸல்) கூறியுள்ளார்கள்.

அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங் குறை களை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்பூர்வ மாக இல்லாமல் வாய் தவறிக் கூட பேசியிருக்கலாம். அவசர வி­யத்திற்காக அருகாமையில் உள்ள இடங்களுக்குப் போவதை தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணுகின்றார்களா என்பதை கவனித்துக் கொள்ளுங்கள்) உள்ளூர் என்றால் பர்தா அணியா மல் அருகருகே உள்ள வீடுகளுக்கு செல்வதும் வெளி யூர் சென்றால் மட்டுமே பர்தா அணிவது என்பதைக் கண்டியுங்கள். தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையயன்றால்) பதில் அளிப்பதை கண்டிக்காதீர் கள். ஆண்களிடம் குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்.

பொறுமையும், சாந்தமும் : மண வாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண வி­யம்தான். வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவை ஒவ் வொரு உருவத்தில் உலா வருகின்றன. அதிகப்படி யான பொறுப்புகளில் உட்படுத்துவதும் பிரச்சனை களை பெரிதாக்குவதும்தான் திருமண பந்தத்தை முறித்து விடுகின்றது. இறைவன் விதித்த வரம்பு களை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையை விட்டுவிடுதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய வி­யங்களை டி.வி.யில் பார்த்தல் போன்றவை.

தவறுகளை திருத்துதல் : முதலில் (முழு மனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள். அதிலும் திருந்தாவிட் டால், உங்களின் கோப உணர்வை வெளிப்படுத்து வதற்காக தாம்பத்தியத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பிப் படுத்துக் கொள்ளுங்கள். ஆனால் படுக்கை யறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டை விட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ உங்களின் மீது மேலதிகமான மனஸ்தாபத்தையே ஏற்படுத்தும். தங்களின் பெண் மையின் மேல் எல்லா பெண்களுக்கும் ஒரு கர்வம் இருக்கும். பெண்மையை அடைய வரும் பொழுது நாம் நம்முடைய தரப்பை உயர்த்திவிடலாம் அல் லது பிரச்சனையில் வெற்றி பெற்றுவிடலாம் என்பது ஒட்டுமொத்த பெண்களின் கணிப்பு. எனவே அதை மாற்றும் விதமாக படுக்கையில் மாத்திரம் அவர் களை புறக்கணியுங்கள். அதிலும் திருந்தா விட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம். (அதற்கு அவள் தகுதியான வளாக இருந்தால் மட்டும்). மனைவியை அடிப்பது நபி வழியில் தவிர்க்கப்பட வேண்டிய வி­யம் என் றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்க வில்லை என்பதையும் கணவர்கள் கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மனைவி எந்தக் காரணமும் இன்றி தாம்பத்தியத் திற்கு மறுத்தல், தொடர்ந்து கணவனின் அனுமதி யின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது கணவனுக்கு எங்கே சென்றிருந் தாள் என்பதை சொல்ல மறுத்தல் இது போன்ற வி­யங்களில் கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியைப் பயன்படுத்தலாம்.
குர்ஆனில் (4வது அத்தியாயம் 34ம் வசனத்தில்) கூறப்பட்டது போல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தா விட்டால் தான் இந்த அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம். காயம் உண்டாகும் படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதி யிலோ அடிக்கக்கூடாது. செருப்பினால் அடிப்பது பொது இடங்களில் திட்டுவது போன்ற மானபங்கப் படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது.

அதிகமான பெண்களிடத்தில் பிடிவாத குணம் பரவலாக இருக்கின்றது. இதனை போக்கிட வேண் டும் என்று கோணலை நிமிர்த்தப் பாடுபடுவீர்களா யின் நீங்கள் அதை ஒடித்து விடுவீர்கள். எனவே அந்த கோணலுடனே அவர்களை பயன்படுத்துவீர்களா யின் அது பலன் தரும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி யுள்ளார்கள். எனவே சில வி­யங்களில் அவர்களை அப்படியே விட்டு அவர்களில் நல்ல குணங்களை ஞாபகத்துக்கு கொண்டு வாருங்கள்.

மன்னிப்பும், கண்டிப்பும் : பெரிய தவறுகளை மட் டும் கணக்கில் எடுங்கள். உங்களின் வி­யத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் வி­யங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர் கள். தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்பு களை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். (உங்களின் கோபம் குறையலாம்) எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம், எனவே மாதவிடாய் போன்றவைகளின் மன உளைச்சல்களினால் தவறு கள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு) சமையல் சரி யில்லை என்ற காரணத்திற்காக மனைவியை கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் வி­யத்திற் காக மனைவியை கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்பிடுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பி டாமல் இருந்து விடுவார்கள் தவிர எந்த விமர்சன மும் செய்ய மாட்டார்கள். தவறுகளை நேரிடை யாக அவளிடம் வெளிப்படுத்துவதற்கு முன் வேறு வழியில் நயமாக சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும். அவ மரியாதை செய்யக்கூடிய வகையில் திட்டுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகளுக்கு முன் னாலோ அல்லது மற்றவர்களுக்கு முன்னால் அவர் களைத் திட்டாதீர்கள். பிரச்சனைகளை பேசித் தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக் கும் வரை பொறுத்திருங்கள். அது உங்களை சரி யான கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற் கும் உங்கள் கோபம் குறைவதற்குமான கால அவ காச மாய் அமையும்.

இத்தனைக்கும் பிறகு உங்கள் மனதில் மனைவி என்பவள் அடிமையல்ல. அவள் உங்களுடைய ஜோடி, இணை, சரிபாதி என்ற எண்ணத்தை பதித்து வைக்கவேண்டும். அத்தோடு விட்டுவிடாமல் இறைவா! நீ எங்கள் மனைவிகள் மூலமும் சந்ததிகள் மூலமும், கண்களுக்கு குளிர்ச்சியை தந்தருள் வாயாக என்று பிரார்த்திப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
குறிப்பு : ஷேக் முஹம்மது அப்துல் ஹலீம் ஹாமத் எழுதிய “How to make your wife happy” என்ற புத்த கத்திலிருந்து கருத்துக்கள் எடுத்தாளப்பட்டு அத் துடன் குர்ஆன் ஹதீஃத்களின் சுருக்கம் இணைத்து எழுதப்பட்டுள்ளது.

உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்கள் ஆவார்கள்; எனவே, உங்கள் விளைநிலங்களுக்கு நீங் கள் விரும்பியவாறு வாருங்கள்; உங்களுக்காக (நற் செயல்கள்) முற்படுத்திவையுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; (மறுமையில்) அவனைச் சந்திக்க வேண் டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்; மேலும், நம்பிக்கை கொண்டவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக! (2:223)
இன்னும், அல்லாஹ் உங்களுக்காக உங்களிலி ருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்; உங்க ளுக்கு உங்கள் மனைவியரிலிருந்து சந்ததிகளையும், பேரன் பேத்திகளையும் ஏற்படுத்தி, உங்களுக்கு நல்ல பொருட்களிலிருந்து ஆகாரமும் அளிக்கிறான்; அப்படியிருந்தும், (தாமே கற்பனை செய்துகொண்ட) பொய்யானதின் மீது நம்பிக்கை கொண்டு அல்லாஹ்வின் அருட்கொடையை இவர்கள் நிராகரிக்கிறார்களா? (16:72)

மேலும் அவர்கள், எங்கள் இறைவா! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்குக் கண்களின் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும், பயபக்தியுடன் நடப்போருக்கு வழிகாட்டி யாக எங்களை ஆக்குவாயாக! என்று பிரார்த்தனை செய்வார்கள். (25:74)

Previous post:

Next post: