மனித குலத்தினரே, குறிப்பாக முஸ்லிம்களே, இறைவனின் கட்டளைக்கு அஞ்சமாட்டீர்களா?

in 2015 டிசம்பர்,தலையங்கம்

அல்குர்ஆனின் அறிவுரை :
இன்னும், நாம் அவர்கள் மீது மழையைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம். ஆகவே குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக! (7:84)
(மேலும் பார்க்க : 6:6, 7:133, 29:14)

இன்னும் பூகம்பம்(22:01, 33:11, 99:1) புயல் (10:22, 14:18, 17:69, 41:16) நில நடுக்கம், சுனாமி, பெரும் நெருப்பு, எரிமலை இன்னும் பல பேரிடர் களால் சமீப காலத்தில் மனித குலத்தினர் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனரே ஏன்? ஆம்! இவ் வுலகையும், ஏனைய சிறிய, பெரிய, மாபெரிய கோள்களையும், பூமி கோளத்தில் எண்ணற்ற வித விதமான ஜீவராசிகளையும், மனிதனையும் படைத்து, உணவளித்து, பரிபாலித்து வரும் இணை, துணை, மனைவி, மக்கள், தேவை, இடைத்தரகு, பரிந்துரை, பிறப்பு, இறப்பு என பலகீனங்கள் எது வுமே இல்லாத ஏகன் இறைவனுக்கு-கடவுளுக்கு-அல்லாஹ்வுக்கு மாறு செய்யும், புறக்கணிக்கும், நன்றி கொல்லும், இணை வைக்கும் மாபாவிகளாக இன்றைய மனித குலம் ஆகிவிட்டது.

படைத்தவனை மறந்து, நிராகரித்து, துரோகம் செய்து படைப்புகளைக் குட்டி, குட்டி, துணைத் தெய்வங்களை வழிபடுகின்றனர், 2:186 இறைக் கட் டளைக்கு முற்றிலும் அடிபணிந்து ஏகன் இறை வனை மட்டுமே நம்பாமல், அவனை மட்டுமே வணங்காமல், படைப்பினங்களை நம்பி, வணங்கி வழிபடும் இழி நிலைக்கு மனித குலத்தினர் வந்து விட்டனர்.

என்று மனிதக் குலத்தின் ஆதித் தந்தைப் படைக் கப்பட்டாரோ, அவருக்கு எதிராக அவருக்கு முன் னரே படைக்கப்பட்ட இப்லீஸ் என்ற ஷைத்தான் அன்றே இறைவனுக்கு ஏதாவதொரு வகையில் இணை வைக்கும் (´ர்க்) எனும் கொடிய செயலை, நரகை நிரப்பும் செயலைத் தந்திரமாக மனித குலத்தி னரிடையே புகுத்தி விட்டான். இந்த உண்மையை குர்ஆன் 7:11 முதல் 25 வரையும் 15:26 முதல் 44 வரை நீங்களே படித்து உறுதி செய்து கொள்ளலாம்.

படைக்கப்பட்டு விபரம் தெரிந்த காலத்திலி ருந்தே இப்லீஸாகிய ஷைத்தானின் அடாவடித் தனத்தையும், அட்டூழியங்களையும், வரம்பு மீறலை யும், இறைவனின் கட்டளைக்கே மாறு செய்ததை யும் நேரடியாக, கண்கூடாகக் கண்ட ஆதம்(அலை) அவர்களையே மயக்கி இறைவனுக்கு மாறு செய்ய வைத்த ஷைத்தானுக்கு அவனுடைய சபதப்படி ஆதத்தின் சந்ததியினரான மனித குலத்தினரை ஏமாற்றி, வஞ்சித்து நரகில் தள்ளுவது ஷைத்தா னுக்கு இயலாத காரியமா? எப்படி வழிகெடுத்து நரகில் தள்ளுகிறான் என்று பாருங்கள். குற்றங்களில் மாபெரும் கொடுங்குற்றம் இறைவனுக்குப் படைப் பினங்களைக் கொண்டு இணை வைக்கும் கொடிய செயலாகும். இதே நிலையில் இறந்துவிட்டால் இறைவன் மன்னிக்கவே மாட்டான். (4:48,116)

இறைவனுக்குக் கடும் கோபத்தை உண்டாக்கக் கூடிய அவனுக்கு இணை(´ஷிர்க்) வைக்கக் கூடிய மிகக் கொடுமையான, அநியாயமான செயலையே ஒட்டுமொத்த மனித குலத்தினரும் செய்து வருகின்றனர்.

மரம், மட்டை, நீரில் வாழ்வது, நிலத்தில் வாழ் வது, ஓரறிவு, ஈரறிவு, மூன்று அறிவு, நான்கு அறிவு, ஐயறிவு, ஆறறிவு என அனைத்துப் படைப்பினங் களையும் தெய்வங்களாக்கி வழிபாடுகள் செய்கின் றனர். இவை அல்லாது கற்சிலைகளையும், தெய்வங் களாக்கி வழிபாடு செய்கின்றனர். பெருங்கூட்டம். இறைத்தூதர்களையே அவதாரங்களாக்கி, கற்பனைச் சிலைகள் வடித்து வழிபாடுகள் செய்கின்றனர்.
சென்று போன ஆன்மீக, அரசியல் தலைவர் களுக்கும் சிலை வடித்து மாலை மரியாதையிட்டு வழிபாடுகள் செய்து இறைவனுக்கு இணை வைக் கின்றனர்.

ஆத்திகர்கள்தான் இப்படி என்றால் கடவுளை மறுக்கும் நாத்திகர்களும், சென்று போன அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள தலைவர்களுக்கு சிலைகள் வடித்து மாலை மரியாதை செய்து இறை வனுக்கு இணை வைக்கின்றனர். ஆக ஆத்திகர்கள், நாத்திகர்கள் எனப் பேதமில்லாத முஸ்லிம் அல்லாத ஆதத்தின் சந்ததிகள் அனைவரும் ஒட்டுமொத்த மாக இறைவன் மன்னிக்காத மாபெரும் குற்றமான இறைவனுக்கு இணை வைக்கும் கொடுஞ் செயலை செய்து இறைவனின் கோபத்திற்கு ஆளாகி வருகி றார்கள். இப்போது தங்களை முஸ்லிம்கள் என்றும் அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும், இறை வனால் இறக்கியருளப்பட்ட இறை நூல்கள் அனைத்தையும், அவற்றில் இறுதியாக முன்னைய நெறிநூல்கள் அனைத்தினதும் சாராம்சங்கள் அனைத்தையும் கொண்ட இறுதி இறைநூல் குர் ஆனையும் இறுதி இறைத் தூதரையும் ஈமான்-நம்பிக்கை கொண்டவர்கள் என்று பிதற்றும் முஸ் லிம்களிலும் பெரும் பகுதியினர் இறைவனுக்கு இணை(´ர்க்) வைக்கும் நிலையிலேயே உள்ளனர். இந்த உண்மையை 12:106 இறைவாக்கு முஸ்லிம்க ளாகிய உங்களில் மிகப் பெரும்பான்மையினர் இணை வைக்காது நம்பிக்கை கொள்ளவில்லை என்று இடித்துக் கூறுகிறது. அது மட்டுமா முஸ்லிம் கள் குர்ஆன் காட்டும் நேர்வழியில் செல்லவில்லை. குர்ஆனைப் புறக்கணித்து, நிராகரித்து, ஒதுக்கிவிட்டு அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார்களை நம்பி, அவர்கள் பின்னால் செல்வதால் 9:31 இறை வாக்குக் கூறுவது போல் இறைவனுக்கு இணை (´ர்க்) வைக்கின்றனர். அதையும் விரிவாகவே பார்ப்போம்.

முஸ்லிம்களில் பெருங்கொண்ட கூட்டம் ஊரெல்லாம் தர்காக்களைக் கட்டிவைத்துக் கொண்டு, கொடிக்கம்பங்களை நட்டி வைத்துக் கொண்டு அவுலியாக்கள் என்ற பெயரால் செத்தவர் களைத் தங்களுக்கும், இறைவனுக்கும் இடையில் புகுத்தி 9:31 இறைவாக்குக் கூறுவது போல் தங்கள் ரப்பாகக் கொண்டு இறைவனுக்கு இணை(´ர்க்) வைக்கின்றனர். இன்னொரு பெருங்கூட்டம் பீர்-முரீது என்று தரீக்காக்களின் பெயரால் மனிதர் களைத் தங்களுக்கும், இறைவனுக்கும் இடையில் புகுத்தி அவர்களின் வழிகாட்டல்படி நடந்து இறை வனுக்கு இணை(´ர்க்) வைக்கின்றனர். இன் னொரு பெருங்கூட்டம் மத்ஹபுகளின் பெயரால் இமாம்களை, பெரியார்கள், நாதாக்களை இறை வனுக்கும், தங்களுக்கும் இடையில் புகுத்தி இறை வனுக்கு இணை(´ர்க்) வைக்கின்றனர். இன் னொரு கூட்டம் இயக்கங்களின் பெயரால் தங்க ளுக்கும், இறைவனுக்கும் இடையில் மவ்லவிகள், இயக்கத் தலைவர்களைப் புகுத்தி இறைவனுக்கு இணை(´ஷிர்க்) வைக்கின்றனர்.

ஆக முஸ்லிம்களில் 99.9% இறைவனுக்கும், தங்களுக்கும் இடையில் மனிதர்களில் யாரையும் இடைத்தரகராகப் புகுத்தாமல் 2:186, 7:3, 33:36, 53:2 -5, 59:7 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து மனிதர்களில் எவரையும் தங்களுக்கும், இறைவனுக்கும் இடையில் புகுத்தாமல், தலை மைக்கு ஆசைப்பட்டு எண்ணற்றப் பிரிவுகளாகப் பிரியாமல் 41:33 கட்டளைப்படி முஸ்லிம்களில் உள்ளவன் என்று கூறிக்கொண்டு 3:103 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து பிரியாமல் ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தாக செயல்படும் முஸ்லிம்கள் 0.01% தேர்வார்களா? சந்தேகமே!

ஆக 32:13, 11:118,119 மேலும் குர்ஆனின் பெரும்பாலான இடங்களில் அதிகமானோர் என்று சொல்வது போலும் புகாரீ 3348,4741 முஸ்லிம் 379 ஹதீஃத்கள் கூறுவது போலும் 99.9% நரகத்திற்குரிய வர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலையில் அல்லாஹ்வின் கடும் கோபம். அதனால் பேரிடர்கள் ஏற்படாமல் இருக்குமா? சுனாமி, புயல், பேய்க்காற்று, பேய் மழை, நிலநடுக் கம், பூகம்பம் எனப் பேரிடர்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. மனிதர்களே ஒருவருக் கொருவர் சண்டையிட்டு இரத்த ஆறை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். காக்கா, குருவிகளைச் சுட்டு வீழ்த்துவது போல் சுட்டு வீழ்த்துகின்றனர். முஸ்லிம் நாடுகளில்தான் இப்படிப்பட்ட மிருக அராஜகச் செயல்கள் மிகைத்துக் காணப்படுகின்றன. இவர்கள் குர்ஆனின் போதனைப்படி நடக்கவில்லை. மூளை வரண்ட முல்லாக்களின் மூட ஃபத்வாக்களான தற் கொலைப்படை போன்ற குர்ஆனுக்கும், ஹதீஃதுக் கும் முற்றிலும் முரணான கூமுட்டை ஃபத்வாக் களையே பின்பற்றுகின்றனர். விளைவு இனவெறி யால் தூண்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் யூத கிறித்தவ வளைகளில் மிக எளிதாகச் சிக்குகின்றனர். அமெரிக்காவின் நிதி உதவியைக் கொண்டு இஸ்லா மிய போதனைக்கு முரணாக இஸ்லாமிய ஆட்சியை நிலைநாட்டப் போவதாக பகல் கனவு கண்டு கொண்டு தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுகின்ற னர். இஸ்லாத்தை நிலை நாட்டச் செய்யப்படும் “”ஜிஹாத்” என வீண் பிரமை கொள்கின்றனர். பின்லேடனின் அல்கொய்தா,, தாலிபான், ஐஎஸ்ஐ, இன்னும் இவைபோல் பல அமைப்புகள் வழிகெட் டுச் செல்கின்றன,

தூய இஸ்லாமிய மார்க்கம், அல்லாஹ்வின் பரம விரோதிகள், தூய இஸ்லாமிய மார்க்கத்தை அழித் தொழிக்க சபதம் ஏற்று படை எடுத்தச் சந்தர்ப்பங் களில், அவர்களை எதிர்க்க வேண்டிய கட்டாயத் தில், யுத்த களத்தில் சந்தித்த அந்தச் சந்தர்ப்பங்களில் கூட, நபி(ஸல்) அவர்கள் குழந்தைகளைக் கொல்லத் தடை விதித்தார்கள். எதிரிகளை உற்சாகப்படுத்திப் போரிட வைத்தப் பெண்களைக் கொல்லத் தடை விதித்தார்கள். புறமுதுகு காட்டி ஓடும் கொடும் பகைவர்களைக் கூட கொல்லத் தடை விதித்தார் கள். பயிர் பச்சைகளை அழிக்கவும், நீர் ஆதாரங்க ளைத் தடுக்கவும் தடை விதித்தார்கள் என்று வர லாறு தெளிவாகக் கூறுகிறது.

இந்த நிலையில் எந்தப் பாவமும் அறியாத பள்ளிக் கூடங்களில் படிக்கும் பச்சிளம் பாலகர் களை சுட்டுக் கொல்ல இஸ்லாமிய மார்க்கம் அனு மதிக்குமா? இஸ்லாமிய மார்க்கத்தை நேரடியாக எதிர்த்துப் போராடாத அப்பாவிகளைச் சுட்டுப் பொசுக்க அனுமதிக்குமா? அப்பாவிப் பெண்களைச் சுட்டுப் பொசுக்க இஸ்லாம் அனுமதிக்குமா? இப் படிப்பட்டக் காட்டுமிராண்டிச் செயல்களைச் செய்ய இஸ்லாமிய மார்க்கம் அனுமதிக்குமா? மனித நேயத்துக்கு விரோதமான, உலகில் அமைதிக் குப் பங்கம் விளைவிக்கும் எந்தத் தீச் செயலையும் இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவில்லை, அனுமதிக்காது.

இஸ்லாம் என்றாலே சாந்தி மார்க்கம், சமாதான வழி. இந்து, பொளத்தம், யூதம், கிறித்தவம், சீக்கியம், முஸ்லிம் என உலகில் காணப்படும் அனைத்து மதங் களையும் பின்பற்றும் மனிதர்களுக்காகவும் மனித குலம் அனைவருக்குமான ஒரே ஏகன் இறைவன் மனித குலத்திற்கென்றே இறக்கியருளிய ஒரே நேர் வழி (பார்க்க : 6:153). அந்தத் தூய மார்க்கம் மனிதர் களிடையே விகர்ப்பங்ளையும், போட்டி பொறா மையையும், ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்ப் பதையும் அனுமதிக்குமா? சிந்தியுங்கள்!

அப்படியானால் 49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான்-இறை நம்பிக்கை நுழை யாத முஸ்லிம் வாலிபர்களை விலைக்கு வாங்கி, மூளை வரண்ட முல்லாக்களின் கூமுட்டை ஃபத் வாக்களை ஆதாரமாகக் காட்டி அவர்களை ஈவிரக்க மற்ற மிருகச் செயல்களைச் செய்ய வைத்து, அந்தப் பழியை இஸ்லாமிய மார்க்கத்தில் போட்டு, இஸ்லா மிய தீவிரவாதம், முஸ்லிம் தீவிரவாதி என ஊடகங் களில் செய்தி பரப்ப அரும்பாடுபட்டு வருகின்றனர் யூத, கிறித்தவ, ஹிந்துத்துவா இன வெறியர்கள். இந்த மதங்களைப் பின்பற்றும் நடுநிலைவாதிகள் இப்படிப்பட்டக் கொடிய செயல்களைத் தூண்டி விட்டு செய்ய வைத்துப் பின்னர் அப்பழியை முஸ் லிம்கள் மீது தூக்கிப் போட ஒருபோதும் துணிய மாட்டார்கள்.

இப்படிப்பட்ட மத, இன வெறிப் பிடித்த யூதர் கள், கிறித்தவர், இந்துத்துவாவினரின் வெறிச் செயல் களுக்கு நாளை மறுமையில் அவர்கள் குற்றவாளி கள் ஆவதோடு, அவர்களின் அப்பெரும் பாவங் களையும் முஸ்லிம் மதகுருமார்களே சுமக்கப் போகி றார்கள் (பார்க்க : 16:25) காரணம் பதிந்து பாதுகாக் கப்பட்ட, மனித குலத்திற்கே சொந்தமான இறுதி இறை நூல் குர்ஆன் முஸ்லிம் மதகுருமார்களிடம் தான் இருக்கிறது. வைக்கோல்போரைக் காக்கும் நாய்கள் போல், முஸ்லிம் மதகுருமார்களிடம் இருக் கும் குர்ஆனை அவர்களும் முறையாகப் போதிக்க வும் தயாரில்லை. மற்றவர்கள் குர்ஆனைப் படித்து விளங்க விடுவதுமில்லை.

அவர்களின் முதல் அண்டப் புளுகு குர்ஆன் முஸ்லிம்களின் வேதம்(?) அடுத்த அண்டப்புளுகு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குர்ஆனை கொடுக் கக்கூடாது. மூன்றாவது அண்டப் புளுகு முஸ்லிம் களும் குர்ஆனை விளங்க முடியாது. மூளை வரண்ட முல்லாக்கள் மட்டுமே குர்ஆனை விளங்க முடியும்.

ஆக ஒட்டுமொத்த மனித குலத்தினரையும் குர்ஆனை விட்டும் தூரப்படுத்திவிட்டார்கள். அதனால் குர்ஆனிலுள்ள நற்போதனைகளைப் படித்து அறியும் நற்பாக்கியமே இல்லாமல் போய் விட்டது மனித குலத்தினருக்கு. இந்தப் பாவத்தை யும் சேர்த்து அவர்களின் பாவத்தோடு சேர்த்தே மூளை வரண்ட முல்லாக்கள் தானே நாளை சுமக்கப் போகிறார்கள். (16:25)

ஆக இந்த முல்லாக்களில் துர்போதனையால் இரண்டு கால் மனிதர்கள் நான்கு கால் மிருகங்கள் போல் இன்று வாழ்கிறார்கள். அல்லாஹ்வின் கட் டளைக்கு முரணான அத்துனை அநியாயங்கள் அட் டூழியங்கள் உலகில் நிறைந்து காணப்படுகின்றன. அதனால் இறைவனின் கோபப் பார்வை கடுமை யாக உலகில் இறங்குகிறது. அதனால்தான் இன்று உலகில் காணப்படும் பேரிடர்கள் அனைத்தும் கடுமையாக மனித குலத்தைத் துரத்துகின்றன.

இறைவனின் கோபம், பாசமாக, அன்பாக மாற வேண்டுமா? மனித குலத்தைப் பிடித்திருக்கும் பேரிடர்கள் தீரவேண்டுமா? அதற்குள்ள ஒரே வழி வேறு வழியே இல்லை; மனித குலம் இறையாட் சியை நிலைநாட்ட முன்வரவேண்டும். இன்று மக்கள் நடைமுறைப்படுத்துவது மனுநீதி ஆட்சி களையே. மனுநீதி என்றால் மனிதன் கற்பனை செய்த சட்டம். இன்று உலகில் காணப்படும் அனைத்து நாடுகளின் ஆட்சி முறைகளும் மனுநீதி ஆட்சி முறைகளே. முஸ்லிம் நாடுகளிலும் அரேபியா உட்பட மனுநீதி ஆட்சி முறைகளே. உலகின் எந்த நாட்டிலும் இறையாட்சி அதாவது இறைவன் காட்டும் ஆட்சி முறை இல்லவே இல்லை. முஸ்லிம் நாடுகள் தங்கள் அறிவு சரிகாணும் குர்ஆனின் சட் டங்களை ஏற்கிறார்கள், அறிவு மறுக்கும் குர்ஆன் சட்டங்களை நிராகரிக்கிறார்கள். ஊசி முனை அறிவு கூட இல்லாத அற்ப அறிவை யுடைய மனிதன் (பார்க்க : 17:85) உலகளவு என்ன, பேரண்டம் அளவு அறிவுடைய இறைவனிடம் போட்டி போட முற்பட்டால் அவன் உருப்படு வானா? இப்பேரிடர்களை விட்டும் தன்னை அவனால் காப்பாற்றத்தான் முடியுமா?

குர்ஆன் முஸ்லிம்களின் வேதம் அல்லவே அல்ல. மனித குலத்தினருக்கே இறுதியாக அருளப்பட்ட, சம்பூரணப்படுத்தப்பட்ட, பதிந்து பாதுகாக்கப் பட்ட, உலகம் அழியும் வரை நடைமுறைப்படுத்த வேண்டிய இறைவன் அளித்த வாழ்க்கை நெறிநூல். அது இந்துக்களிடம் இருக்கும் நான்கு வேதங்கள், யூதர்களிடம் இருக்கும் தோரா, கிறித்தவர்களிடம் இருக்கும் பைபிள், இன்னும் உலகில் காணப்படும் அனைத்து மதங்களிடம் காணப்படும் வேதங்கள் வரிசையில், அனைத்து வேதங்களில் காணப்படும் நேர்வழிச் செய்திகளை உள்ளடக்கிய இறுதி இறை நூல்.

முன்னைய இறைநூல்கள் அனைத்தும் மனிதக் கரம் பட்டு, மாசு பட்டு, கறை படிந்த வேதங்களாகி விட்டன. குர்ஆன் மட்டுமே மனிதக்கரம் படாமல், மாசு படாமல், கறை படியாமல் அதன் தூய வடிவில் இருக்கிறது. இறைவன் அதைப் பாதுகாத்து வருகி றான். மனித குலத்தினர் அதன் வழிகாட்டல்படி நடக்க முன்வந்தால் மட்டுமே இன்று மனிதக் குலத் தினரைப் பிடித்து ஆட்டிப் படைக்கும் அனைத்துப் பீடைகள், நிம்மதியற்ற நிலை, கடுந் துன்பங்கள், பேரிடர்கள், மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், இன்னும் இவைபோல் அனைத்துத் துன்பங்களும் நீங்கி மனித குலம் அமைதி வாழ்க்கை, சந்தோ­ வாழ்க்கை, வளமான வாழ்க்கை, வாழ வழி பிறக்கும். தவறினால் மனிதனுக்கு அத்தியாவசியத் தேவை யான காற்றே புயலாக மாறி அவனுக்கு ஆபத்தை விளைவிக்கும். அடுத்து அத்தியாவசியமான தண் ணீரே வெள்ளமாகப் பெருகி ஆபத்தை விளைவிக் கும். இப்படி மனிதனுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும். பொருள்களே அவனுக்கு பேராபத் தாக மாறி பெருந் தீங்கு விளைவிக்கும் பரிதாப நிலை ஏற்படவே செய்யும். ஓ மனித குலத்தினரே இறைவனை அஞ்சி, ஆதரவு வைத்து அவனுக்கு அடி பணிந்து நடக்க முன் வாருங்கள்.

Previous post:

Next post: