அந்நஜாத் டிசம்பர் – 2016

in 2016 டிசம்பர்

 டிசம்பர் 2016
ஸஃபர்-ரபீவுல் அவ்வல் 1438

வேதங்கள் செல்லுமா?

அரசு சார்பாக பிரதமர் நரபலி நரேந்திர மோடி 08.11.2016 இரவு 500/-, 1000/- ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததிலிருந்து நடுத்தர, ஏழை மக்கள், அன்றாடம் காய்ச்சிகள் படும் நரக வேதனைகளை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அந்தளவு நெருப்பில் கிடந்து துடிக்கும் புழுக்களைப் போல் துடியாகத் துடிக்கிறார்கள். நாளை மறுமையில் அடைய வேண்டிய நரக வேதனையை இங்கேயே மாதிரிக்கு அனுபவிக்கிறார்கள். ஆயினும் மோடியின் மோடி மஸ்தான் வேலை யில் ஒரு மகத்தான படிப்பினை இருக்கிறது. 8.11.16 பகல் வரை செல்லுபடியான 500/-, 1000/- ரூபாய் நோட்டுகள் அன்று இரவு அரசு அறிவித்தவுடன் செல்லாத நோட்டுகள் ஆகிவிட்டன. இத்தனைக் கும் அந்த நோட்டுகள் அனைத்தும் அரசால் அச்சடிக் கப்பட்டு வெளியாகும்போது எப்படி எவ்வித கிறுக் களோ, மனிதக் கைகளால் எழுதப்பட்டோ மாசு படாமல் சுத்தமாகவே இருக்கின்றன.

புதிதாக வெளியிடப்பட்ட 2000/- நோட்டில் காணப்படும் அத்தனை எழுத்துக்களும், கவர்னர் கையயழுத்தும் இருக்கவே செய்கின்றன. விபரம் தெரியாத ஒரு பாமரன் இரண்டு நோட்டுகளும் ஒன்றுதான். ஒன்று 1000/- ரூபாய் நோட்டு மற்றொன்று 2000/- ரூபாய் நோட்டு என்றே சொல்வான். ஆயினும் அரசு அறிவிப்புக் காரணமாக மட்டுமே அவை செல்லாக் காசாக ஆகிவிட்டன. இதை விபரம் அறிந்தவர்கள் ஒருபோதும் மறுக்க மாட்டார்கள். இப்போது முக்கிய வி­யத்துக்கே வருவோம்.

எப்படி அரசுகள் புழக்கத்திலிருக்கும் நோட்டுக்களைச் செல்லாதவை ஆக்கி புதிய புதிய நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுகின்றனவோ அதேபோல், இந்த மனித ஆட்சிகளுக்கெல்லாம் மாபெரும் ஆட்சியாளன், சர்வ வல்லமை மிக்க இணை துணை தேவை இல்லாத தன்னந்தனியனான இறைவனால் மனிதப் படைப்பின் ஆரம்பத்திலிருந்தே மனிதனின் வாழ்க்கை சிறப்பாக, செம்மையாக நடக்க தன் புறத்திலிருந்தே இறைவழிகாட்டலை அனுப்பிக் கொண்டிருந்தான். இதைப் பற்றி இறுதி வழிகாட்டி நெறிநூல் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.

(இறைவனாகிய) நாம் சொன்னோம். “நீங்கள் அனைவரும் இங்கிலிருந்து இறங்கி விடுங்கள். என்னிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக நேர்வழி வரும்போது யார் என்னுடைய (அவ்)வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எத்தகைய பயமும் இல்லை. அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள் (2:38).

அன்றி யார் (இதை ஏற்க) மறுத்து நம் வசனங்களை பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அ(ந் நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர். (2:39)
இந்த இரண்டு குர்ஆன் வசனங்களையும் யார் மீண்டும் மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொள்கிறார்களோ அவர்கள் நிச்சயம் அல்லாஹ்வால் இறக்கப்பட்டவை மட்டுமே நேர்வழி. நேர்வழி என்ற பெயரில் மனிதர்கள் புகுத்தும் சுய கருத்துக்கள், மேல் விளக்கங்கள் அனைத்தும் அல்லாஹ் வால் இறக்கப்பட்டவற்றைப் பொய்ப்பிக்கும் தீய செயல்கள். அவர்கள் நரகையடைவது உறுதி. இது இறைவனின் மிகக் கடுமையான எச்சரிக்கை என்பதை உறுதியாக அறிவார்கள்.

இப்படி இறைவனாகிய அல்லாஹ் மனிதன் படைக்கப்பட்டு இவ்வுலகிற்கு அனுப்பப்பட்டக் காலத்திலிருந்து தொடர்ந்து இறைத் தூதர்கள் மூலம் தனது ஒரே நேர்வழியை இறைச் செய்திகள் மூலம் அனுப்பிக் கொண்டிருந்தான். ஆனால் எப்படிப் பிறந்த குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டும் தேவைப்பட்டுப் பின்னர் படிப்படியாகத் தேவைகள் அதிகரித்து 21-ம் வயதில் அனைத்துத் தேவைகளும் பூர்த்தியாகி அதன் பின்னர் 100 வயது வாழ்ந் தாலும் புதிய தேவை எதுவும் தேவைப்படுவதில் லையோ அதே போல், ஆதி மனிதனின் ஆன்மீகத் தேவைகள் சுருக்கமாக இருந்து பின்னர் படிப்படியாக அதிகப்பட்டுப் பின்னர் ஒரு காலத்தில் அத்தேவைகள் நிறைவு பெற்றுப் பூர்த்தியடைந்தன.

இதையே இறுதி வாழ்க்கை நெறிநூல் அல்குர்ஆனின் 5:3, 3:19,85 வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. ஆரம்பத்தில் வாழ்க்கை நேர்வழிகாட்டலான இறைச் செய்திகள் முழுமைப் பெற்று நிறைவு பெறாத காரணத்தால், அவை தற்காலிகமானவை யாகவும், அந்தந்தச் சமயத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டவையாகவும் இருந்த காரணத்தால் அவை உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை.

இது ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான, தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான மதகுருமார்களுக்குப் பெரும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் நிறை வடைந்துப் பூர்த்தியாகிவிட்டதால் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு, அதன் ஒரு புள்ளியைக் கூட முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளால் மாற்ற முடியாத நிலையில், அந்த குர்ஆனுக்கு முற்றிலும் முரணான வழிகேடுகளை நேர்வழியாக போதிக்கும் (பார்க்க : 7:146) நிலையில் கடவுளால் ஒருபோதும் மன்னிக்கப்படாத மிகக் கொடியக் குற்றமான இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயலை (பார்க்க : 4:48,116) கபுரு-சமாதி வழிபாடு, ஷைகு வழிபாடு, மத்ஹபு வழிபாடு, இயக்க வழிபாடு, மதகுரு என்ற போர்வையில் மவ்லவி வழிபாடு (பார்க்க : 9:31) என முஸ்லிம்களில் 99.9% மிகப் பெரும்பான்மையினரை நரகை நோக்கி நடைபோட வைக்கும் நிலையில், முன்னைய இறைத் தூதர்களுக்கு அருளப்பட்ட இறைச் செய்திகள் உடனுக்குடன் பதிந்துப் பாதுகாக்கப்படாத நிலையில் முன்சென்ற மதங்களின் மதகுருமார்கள் தங்களை முற்றிலும் நம்பியுள்ள அப்பாவி மக்களை எந்தளவு ஏமாற்றி அவர்கள் கடவுளுக்கு இணை வைக்கும் மிகக் கொடிய செயலில் மூழ்கடித்திருப்பார்கள் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

மோட்சத்திற்கு வழிகாட்டுகிறோம் என்று கூறும் இந்த மதகுருமார்களின் வரலாற்றை முறையாக ஆய்வு செய்யும்போது அவர்கள் ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகள், தாஃகூத் என்ற மனித ஷைத்தான்கள் மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளி ஷைத்தானின் சபதத்தை நிறைவேற்றுவதே அவர் களின் குறிக்கோள் என்பதை எளிதாக விளங்க முடியும். (பார்க்க: 7:11-25,15:29-44)

ஒவ்வொரு இறைத்தூதர்களின் காலத்திலும் அவர்களை மிகக் கடுமையாக எதிர்ப்பது, மக்கள் அவர்களின் நேர்வழிப் பேச்சைக் கேட்க விடாமல் தடுப்பது, சில இறைத்தூதர்களை கொலையும் செய்துள்ளனர். அந்த இறைத்தூதர்களின் மறைவுக் குப் பிறகு அவர்களை வானளாவப் புகழ்ந்து அவர்களைக் கடவுளின் நிலைக்கு உயர்த்துவது; அவர்களை இணை, துணை தெய்வங்களாக்குவது; அவை மூலம் இணை, துணை தெய்வங்கள், மற்றும் கடவுளின் பேராலேயே மக்களை ஏமாற்றி மிகக் கொடியத் தடுக்கப்பட்ட வழிகளில் உலக ஆதாயங்களைத் தேடுவது, தடுக்கப்பட்ட வழிகளில் தங்கள் வயிறுகளை நிரப்புவது இதுதான் மதகுருமார்களின் கொடிய செயல்கள் என்பதையும் அறிய முடியும். ஹிந்துக்கள் வணங்கி வழிபடும் தசாவதாரங்கள் முன்னர் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களே என்று நம்பப் போதிய ஆதாரங்கள் இருக்கின்றன.

ஆக இறைத்தூதர்கள் “நாங்கள் இறைவனின் அடிமையும் தூதராகவும் இருக்கிறோம். நீங்கள் அவனுக்கு இணை வைத்து எதையும், எவரையும் ஒருபோதும் வணங்கி வழிபடக் கூடாது என்று போதித்தார்களோ அந்த இறைத் தூதர்களையே இந்தச் சண்டாள மதகுருமார்கள் வணக்கத்திற்குரிய தெய்வங்கள் ஆக்கிவிட்டார்கள். இந்த உண்மையை இன்று உலகில் காணப்படும் அனைத்து மதங்களின் வேதங்களாக்கப்பட்ட முன்னைய, இரத்து செய்யப்பட்ட, செல்லாது ஆக்கப்பட்ட அனைத்து வேதங்களிலிருந்தும், அகிலங்களையும், அவற்றிலுள்ளவற்றையும் மனித குலத்தினரையும் படைத்தவன் தன்னந்தனியனான இணை, துணை, தேவை, மனைவி மக்கள், எதுவுமே இல்லாத ஒரே இறைவன்தான் என்று கூறுவதை நம் மால் காட்ட முடியும்.

அந்த உண்மைக் கூற்றுக்கு மாறாகத்தான் இந்த வழிகெட்ட மதகுருமார்கள் அவர்களை நம்பியுள்ள பெருங்கொண்ட மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளி ஷைத்தானுக்குத் துணை போகிறார்கள். முன்னர் கடவுளால் இறைத் தூதர்கள் மூலம் இறக்கப்பட்ட இறைச் செய்திகள் அவை செல்லாதவை ஆக்கப்பட்டப் பின்னரும், அவற்றில் மனிதக் கருத்துக்களைப் புகுத்தி வேதங்களாக்கி அவை கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றனர் இம்மதகுருமார்கள். மதங்களும் இம்மதகுருமார் களால் கற்பனை செய்யப்பட்டவையே.

இவர்கள் தூக்கிப் பிடிக்கும் வேதங்களும் இறைவனால் செல்லாதவையாக்கப்பட்டவையே! எவ்வித கிறுக்கலோ, மேலதிக எழுத்துக்களோ இல்லாத தூய்மையான 500/-, 1000/- ரூபாய் நோட்டுக்கள் அரசு அறிவித்தவுடன் செல்லாதவையாகி மக்கள் படும்பாட்டைப் பார்க்கத்தானே செய்கி றோம். இந்த நிலையில் என்றோ இறைவன் செல்லா ததாக்கியுள்ள, மனிதக் கரம்பட்டு அதன் புனிதத் தன்மை மாசுபட்ட நிலையில் அவை மறுமையில் செல்லுமா? இறைவன் ஏற்பானா?
வேதங்களின் வழிகாட்டல்படிதான் நடக்கிறோம் என்ற நம்பிக்கையில் செயல்படும் அனைத்து மதங்களின் மக்க ளும் நாளை மறுமையில் 500/-, 1000/- ரூபாய் நோட் டுகள் செல்லாத நிலையில் மக்கள் என்ன பாடுபடுகிறார்களோ அதையே 1000 மடங்கல்ல, கோடி மடங்கல்ல அதைவிட அதிக வேதனையை நரக வேதனையை அனுபவிக்க இருக்கிறார்கள். இவர்களின் இவ்வறியாமையை ஓர் உதாரணம் மூலம் விளங்க முற்படுவோம். தகவல் தொடர்பு இல்லாத ஒரு தீவில் ஒரு மனிதன் 10 லட்சம் கோடி 500/-, 1000/- ரூபாய் நோட்டுகளுடன் இருக்கிறான்.

தான் இந்தியா வந்து அந்தப் பத்து லட்சம் கோடி பணத்தை கொண்டு சொகுசு பங்களா, சொகுசு கார் மற்றும் ஆடம்பர வாழ்க்கை வசதிகள் அனைத்து சொகுசு வசதிகளையும் அமைத்து சொகுசு வாழ்க்கை வாழலாம் என கற்பனையில் மிதந்து கொண்டிருக்கிறான். இந்த நிலையில் இந்திய நாட்டில் 500/-, 1000/- ரூபாய் நோட்டுகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டு விட்டது. தகவல் தொடர்பு இல்லாத காரணத்தால் அவனுக்கு இச்செய்தி கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த 500/-, 1000/- ரூபாய் செல்லாத நோட்டுகளை மாற்றிக்கொள்ள அரசு அறிவித்த காலக் கெடுவும் முடிந்து விட்டது. அதன் பின்னரே அம் மனிதன் அந்த 10 லட்சம் கோடி செல்லாத 500/-, 1000/- ரூபாய் நோட்டுகளுடன் இந்தியா வந்து சேருகிறான்.

இங்கு வந்த பின்னர்தான் தன்னிடமுள்ள 10 லட்சம் கோடி பணமும் வெற்று பேப்பர். எவ்வித பயனுமில்லை என்பதை அறிந்து வறுமையிலும், பசி, பட்டினியிலும் புழுவாகத் துடிக்கிறான். அவனது வேதனையைத் தீர்ப்பவர் யார்? இப்படிப்பட்ட ஒரு நிலையைத்தான் நாளை மறுமையில் அனைத்து மதங்களின் மதகுருமார்களும் அவர் களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் பெருங்கொண்ட மக்களும் அனுபவிக்க இருக்கிறார்கள் என எச்சரிக்கிறோம்.

தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள். 08.11.2016 வரை செலவாணியிலிருந்த 500/-, 1000/- ரூபாய் நோட்டுகள் அன்று இரவு முதல் மத்திய அரசால் செல்லாதவை ஆக்கப்பட்டது போல் முதல் மனிதர் ஆதத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான இறைத் தூதர்கள் மூலம் இறைவனால் இறக்கப்பட்ட வாழ்க்கை நெறி நூல்கள் அனைத்தும், 1450 வருடங் களுக்கு முன்னர் இறுதித் தூதருக்கு இறுதியாக முழுமை பெற்ற, நிறைவு செய்யப்பட்ட மனித குலத்திற்கே சொந்தமான வாழ்க்கை வழிகாட்டி, நெறிநூல் அல்குர்ஆன் இறக்கியருளப்பட்டவுடன் அனைத்து முன்னைய வேதங்களும் செல்லாதவை யாகிவிட்டன.

முன்னைய இறைத்தூதர்களுக்கு இறக்கியருளப்பட்ட முன்னைய நெறிநூல்கள் இம் மதகுருமார்களால் வேதமாக்கப்பட்டு அவற்றைத் தூக்கிப் பிடிப்பவர்கள் அனைவரும் செல்லாத 500/-, 1000/- ரூபாய் நோட்டுகள் செல்லத்தான் செய்யும் என்று மதியீனமாக வாதிடுபவன் போன்றவர்களே. ஹிந்துக்களிடமிருக்கும் நான்கு வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், யூதர்களிடமிருக்கும் தோரா, கிறித்தவர்களிடமிருக்கும் பைபிள் இன்னும் அனைத்து மதங்களின் மதகுருமார்களிடமிருக்கும் வேதங்கள், முஸ்லிம்களிடமிருக்கும் நான்கு மத்ஹபுகள், தரீக்காக்கள் அடிப்படையிலான குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் சட்டங்கள், நவீன ததஜ மத்ஹப் கூறும் குர்ஆன், ஹதீஃத், லாஜிக் பாலிசி இவை அனைத்தும் செல்லாதவையே. குர்ஆன், ஹதீஃதுக்கு எவ்வித சுயவிளக்கம், மேல் விளக் கம் இல்லாமல் உள்ளது உள்ளபடி எடுத்து நடப்பது மட்டுமே ஒரே நேர்வழி. (பார்க்க : 33:36) இறைநெறி நூல்கள் வரிசையில் இறக்கியருளப் பட்ட குர்ஆன் மனித குலத்தினர் அனைவருக்கும் சொந்தமான மனித குலமே அதன் வழிகாட்டல்படி தான் நடக்கவேண்டும்.

பொய்யர்களான நிராகரிப் பாளர்களான, மதகுருமார்களான மவ்லவிகள் குர்ஆன் முஸ்லிம்களின் வேதம்; அதை முஸ்லிமல்லாத வர்களுக்குக் கொடுக்கக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருவது ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்யாகும். அதேபோல் அரபு மொழி கற்ற மவ்லவிகளால் மட்டுமே குர்ஆனை விளங்க முடியும். பாமரர்களால் அவர்களது மொழியில் குர்ஆனைப் படித்து விளங்க முடியாது என்று கடந்த 1200 வருடங்களாக இம்மவ்லவிகள் ஓயாது கூறி வருவதும் ஜமுக்காலத்தில் வடித்தெடுத்தப் பொய் யாகும். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால், இம்மவ்லவிகள் மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டுள்ளனர். அதனால் பெருமை பேசும் இம்மவ்லவிகளை விட பாமர மக்களே மிகச் சரியாக குர்ஆனை விளங்குபவர்கள் என்பதை 62:2, 29:69, 39:72, 7:146, 27:14 குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.

குர்ஆனைப் பொருள் அறிந்து படித்து வருகிறவர்கள் இம்மதகுருமார்களான மவ்லவிகள் மஹா பொய்யர்கள், குர்ஆன் வசனங்களைப் பொய்யாக் குகிறவர்கள், நிராகரிப்பவர்கள், நன்றி கெட்டவர்கள், மக்களை வழிகெடுப்பவர்கள், வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டப் படைப்பு, நாலுகால் மிருகங்களை விடக் கேடு கெட்டப் படைப்பு. இன்னும் இவை போன்ற கடுஞ் சொற்களால் அல்லாஹ் அடையாளம் காட்டியுள் ளதை மக்கள் அறிந்து, தங்களைப் புறக்கணித்து விடு வார்கள் என்ற பயத்தில் குர்ஆனை முஸ்லிம்களிட மிருந்தும், முஸ்லிம் அல்லாதவர்களிடமிருந்து மறைக்கப் பெரும் முயற்சி எடுக்கிறார்கள். ஆனால் உண்மை இதுதான். இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் மனித குலத்தினர் அனைவருக்கும் எவ்வித மத, இன, நாடு, மொழி வித்தியாசம் இல்லாமல் சொந்தமாகும்.

மனிதர்களில் யார் வேண்டுமானாலும் எந்த நிலையிலும் தங்கள் மொழியிலுள்ள குர்ஆனை எடுத்துப் படித்து விளங்க முயற்சிக்கலாம். அப்படி முயன்றால் 29:69 இறைவாக்குப்படி அவர்களுக்கு நேர்வழியை எளிதாக்கித் தருவதாக இறைவன் வாக்களிக்கிறான். மக்களை முழுக்க முழுக்க ஏமாற்றிக் கொடிய ஹராமான-தடுக்கப்பட்ட வழிகளில் வயிறு வளர்க் கும் இம்மவ்லவிகள் மக்களை குர்ஆனை நெருங்க விடாமல் ஏன் தடுக்கிறார்கள் என்று இப்போது புரி கிறதா?

ஆம்! அன்றாடம் குர்ஆனை தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் படித்து விளங்குகிறவர்கள் இம்மவ்லவிகளுக்கு நாய், கழுதை, பன்றி போன்ற நான்கு கால் பிராணிகளுக்குக் கொடுக்கும் மதிப்புக் கூட கொடுக்க மாட்டார்கள். (பார்க்க : 7:146,175-179) இதுவரை செலவாணியிலிருந்த 500/-, 1000/- ரூபாய் நோட்டுகள் அரசால் செல்லாதவை ஆக்கப்பட்டது போல், முன்காலத்தில் நடைமுறையிலிருந்த இறைநெறி நூல்கள் (வேதங்கள்) இறைவனால் செல்லாதவை ஆக்கப்பட்டுவிட்டன என்பதைத் தெரிந்து இறுதி இறைநெறிநூல் குர்ஆனைப் பற்றிப் பிடியுங்கள். ஓ! மனித குலத்தினரே நீங்கள் உங்களை ஏமாற்றி நரகில் தள்ளும் இந்த மதகுருமார்களை ஒருபோதும் நம்பாதீர்கள். அவர்கள் தூக்கிப் பிடிக்கும் செல்லாக்காசான வேதங்களை நம்பி வழிகெட்டுப் போகாதீர்கள்.

எந்த மதத்தின் மதகுருமார்களும் உண்மையாளர்கள் அல்ல. எப்படியும் உங்களை இறைவனுக்கு இணை வைக்கச் செய்து உங்களை நரகில் தள்ளவே முற்படுவார்கள். நீங்கள் நம்பிக்கை வைத்துள்ள இறைவனால் இரத்துசெய்யப்பட்ட வேதங்களையும், அவ்வேதங்களைத் தங்களின் அற்ப உலக ஆதாயத்துக்காகப் போதிக்கும் மதகுரு மார்களையும் புறக்கணித்து விட்டு, நேரடியாக இறைவனை மட்டுமே நம்பி, அவன் இறுதியாக இறக்கியருளிய இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆனைப் பற்றிப் பிடித்து (3:103) அதன் வழிகாட்டல்படி நடக்க முன்வாருங்கள். அதுவே மறுமையில் உங்களுக்கு வெற்றியைத் தரும். முயற்சி செய்யுங்கள்.
குர்ஆனின் நற்போதனைகள் :
விரோதிகளின் சொல்லடிகளுக்கு அல்லாஹ்வின் பதிலடிகள்….
ஏ. முஹம்மது அலி
மறு பதிப்பு 1990 ஜனவரி
01. அவருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்களா? இல்லை, அவர் உண்மையைக் கொண்டே அவர்களிடம் வந்துள்ளார். (23:70)
02. அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டுகிறாரா? அல்லது இவருக்குப் பைத்தியமா (என்றும் கேட்கின்றனர்) அவ்வாறல்ல. (34:8)
03. உங்களது நண்பர் அவருக்கு எத்தகையப் பைத்தியமுமில்லை. (34:46)
04. உங்கள் நண்பர் பைத்தியக்காரர் அல்லர். (81:22)
05. உம்முடைய ரப்பின் அருட்கொடையால் நீர் பைத்தியக்காரர் அல்லர். (68:2)
06. (நபியே!) நீர் மக்களுக்கு நல்லுபதேசத்தால் நினைவுறுத்திக் கொண்டிருப்பீராக! உம் முடைய ரப்பின் அருளால், நீர் குறிகாரரும் அல்லர். பைத்தியக்காரரும் அல்லர். (52:29)
07. இ(குர்ஆனை)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்துக் கொண்டார் என்று அவர்கள் கூறுகிறார்களா? அப்படியானால் நீங்களும் இதைப் போன்ற பத்து அத்தியாயங் களைக் கற்பனை செய்து கொண்டு வாருங்கள். நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்…! (11:13)
08. இது ஒரு குறிகாரரின் சொல்லுமன்று! (எனினும்) நீங்கள் சொற்பமாகவே (இதனை நினைத்து) நல்லறிவு பெறுகிறீர்கள். (69:42)
09. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறு கிறார்களா? நபியே! நீர் கூறும்; நீங்கள் உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியத்தைக் கொண்டு வாருங்கள். (10:38)
10. இவர் இதை இட்டுக்காட்டிக் (கற்பனை செய்து) கொண்டார் என்று (உம்மைப் பற்றிக்) கூறுகிறார்களா? அவ்வாறல்ல. எவர்களுக்கு உமக்கு முன் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்ததில்லையோ, அந்த சமூகத்தவருக்கு, அவர்கள் நேர்வழியில் செல்லும் பொருட்டு நீர் அச்சமூட்டி எச்சரிக்கைச் செய்வதற்காக உம்முடைய ரப்பிடமிருந்து வந்துள்ள உண்மை (குர்ஆனாகும்).
11. நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால், நாம் அவரை வலக்கரப் பிடியாகப் பிடித்துக்கொண்டு அவருடைய நாடி நரம்புகளைத் தரித்து விடுவோம். (69:44-46)
12. இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று. (அல்லாஹ்வே அதனை அருளினான்) (10:37)
13. இதில் எந்தச் செய்தியும் இட்டுக்கட்டப்பட்டதல்ல. (12:111)
14. இதனை அவர் இட்டுக்கட்டிக் கொண்டார் என்று அவர்கள் கூறுகின்றார்களா? நீர் கூறுவீராக! நான் இதை இட்டுக்கட்டிக் கொண்டிருந்தால், (அல்லாஹ் அதற்காக தண்டிப்பானே! அப்போது) அல்லாஹ்விடமிருந்து வரும் எதையும் (தடுக்க) நீங்கள் சக்தி பெறமாட்டீர்கள். இதைப் பற்றி நீங்கள் என்னென்னக் கூறுகின்றீர்களோ, அதை அவன் நன்கறிவான். எனக்கும், உங்களுக்குமிடையே (அது பற்றி) அவனே போதுமான சாட்சியாக இருக்கின்றான் என்று நபியே நீர் கூறுவீராக. (46:8)
15. அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டிக் கூறுகிறார் என்று சொல்லு கிறார்களா? அல்லாஹ் நாடினால் அவன் உம் இதயத்தின் மீது முத்திரையிட்டிருப்பான். அன்றியும் அல்லாஹ் பொய்யை அழித்து, தன் வசனங்களைக் கொண்டு உண்மையை உறுதிப்படுத்துகிறான்.(42:24):
முஸ்லிம்களாக மட்டுமே ஒன்றிணைவோம்…

S. முஹம்மது ஸலீம், ஈரோடு.
தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான பள்ளிகள் தங்களிடம் இருப்பதாக சுன்னத் ஜமாஅத்தினர் கூறுகின்றனர். இதை போன்றே 650க்கும் அதிகமான பள்ளிகள், மர்கஸுகள் தங்களது கட்டுப்பாட்டில் இருப்பதாக தவ்ஹீத் ஜமாஅத்தினர் கூறுகின்றனர். இவர்கள் பெருமிதத்தோடு கூறும் எந்தப் பள்ளிகளிலும், ஜுமுஆ தொழுகைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வருவதைப் போன்று ஐவேளை தொழுகைகளுக்கு வருவதில்லை.

ஏனென்றால் தமிழக அளவில் ஐவேளைத் தொழுகைகளை ஓரளவு பேணுதலாக தொழக் கூடியவர்கள் பத்து சதவீதத்திற்கும் குறைவானவர்களே. இந்த பத்து சதவீதத் தினரும் ஏதாவது ஒரு மத்ஹபில் இருப்பார் அல்லது தரீக்கா, தர்ஹா, கழகம், மன்றம், இயக்கம் என்று இப்படி யாக ஏதாவது ஒரு ஜமாஅத்தில் இருந்து அதை நியாயப் படுத்திக் கொண்டிருப்பதோடு தாங்கள் கடைபிடித்துக் கொண்டிருக்கும் வழிமுறை மட்டும்தான் சரியானது என்று முழங்கி வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தமிழக அளவில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் உள்ள சொற்பமான சகோதர சகோதரிகள் குர்ஆனை நேரடியாகப் படித்துணர்ந்ததின் விளைவாக இத்தகைய வழி கேட்டின் உண்மை நிலைகளை அறிந்து கொண்டு, குறிப்பாக இறை மறுப்பின் ஒரு வகையான எல்லாவிதமான பிரிவினைகளிலிருந்தும் விடுபட்டு நான் “முஸ்லிம்களில் ஒருவன்” என்கின்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறார்கள்.

ஆனாலும் இத்தகைய சகோதர்களுக்கிடையே சரியான திட்டமிடுதலும், ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருப்பதனால் தங்களது அழைப்பு பணிகளை ஒரு குறு கிய வட்டத்திற்குள் அமைத்துக் கொண்டு அதனடிப் படையில் செயல்பட்டு வருகிறார்கள். இந்த குறைபாட்டை நீக்கி இத்தகைய சகோதரர்கள் அனைவரும் ஒரே ஜமாஅத்தாக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்கின்ற நோக்கத்தில் கடந்த 06.11.16 ஞாயிறு அன்று ஈரோட்டில் இது தொடர்பாக ஈரோடு, திருப்பூர், திருச்சி, மேட்டுப்பாளையம் போன்ற ஊர்களைச் சேர்ந்த சகோதரர்கள் கலந்து கொண்ட ஆலோச னைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்றிணைவதற்கான ஒருசில விஷயங்களைப் பற்றிக் கருத்துப் பரிமாற்றம் செய்யப்பட்டது. மேலும் இது தொடர்பாக மற்ற சகோதர, சகோதரிகள் தங்களது ஆலோசனைகளைப் பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

இங்கு இண்டு வி­யங்களை மேலதிகமாகக் குறிப்பிட விரும்புகிறோம். முதலாவதாக, முஸ்லிம்கள் அனைவரும் ஒரே ஜமாஅத்தாகத்தான் செயல்பட வேண்டும். பல்வேறு பெயர்களில் பிரிந்து செயல்படக்கூடாது அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய “ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்கின்ற ஒரே ஒரு பெயரில் மட்டுமே முஸ்லிம்கள் ஒன் றிணைய வேண்டும் என்று நாம் கூறும்போது வீஹிவீமூவை சார்ந்த சகோதரர்கள் ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்பது அபூ அப்தில்லாஹ் உருவாக்கிய ஜமாஅத் என்று அறியா மையின் காரணமாக கூறி வருகிறார்கள். இதற்கு முன்னரும் இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான்… குர்ஆன் : 22:78 அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து அனைத்து இறைத்தூதர்களும் தங்களை முஸ்லிம்கள் என்றே அறிமுகம் செய்து கொண்டதோடு முஸ்லிமாகத்தான் வாழ்ந்து மரணிக்க வேண்டும் என்று மக்களுக்கு உபதேசம் செய்ததை குர்ஆனில் பல இடங்களில் பார்க்க முடியும்.

“என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம் மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர். குர்ஆன்: 2:132 மேலும் பார்க்க 3:67, 3:52, 5:111, 7:126, 10:72, 12:101, 27:42, 51:36 அனைத்து நபிமார்களும் தங்களை முஸ்லிமீன் என்று கூறியதைப் போன்றே நபி(ஸல்) அவர்கள் தன்னை முஸ்லிம்களில் உள்ளவர் என்று கூறியதோடு ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்ற ஒரே ஒரு பெயரில் தான் முஸ்லிம்கள் செயல்பட வேண்டும் (பார்க்க புகாரீ : 3606) என்று நம்பிக்கை கொண்ட மக்களுக்கு அறிவுரை கூறியிருக்கும்போது ஜமாஅத்துல் முஸ்லிமீன் என்பது எப்படி அபூ அப்தில்லாஹ் உருவாக்கிய ஜமாஅத்தாக இருக்க முடியும்? நடுநிலையாகச் சிந்திக்க வேண்டாமா?

இரண்டாவதாக, ஒற்றுமையைக் குறித்து இஸ்லாம் வலியுறுத்தி சொல்லவே இல்லை. உண்மையை சொல்லும்போது பிரிவுகள் ஏற்படத்தான் செய்யும். ஆகையால் ஒற்றுமையைப் பற்றி பெரிய அளவில் பேசிக் கொண்டி ருப்பது பயன் தராது என்று மெளலவிகள் கூறி வருகிறார்கள். குர்ஆன் பல இடங்களில் ஒற்றுமையைக் குறித்து வலியுறுத்திப் பேசுவதைப் பாருங்கள். இன்னும் நீங்கள் ஒன்று சேர்ந்து ஜமாஅத்தாக அல்லாஹ்வின் கயிற்றை (குர்ஆனை) பலமாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்து விடாதீர்கள். குர்ஆன்: 3:103 நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்கமாக்கினான். (நபியே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்!

அதில் பிரிந்து விடாதீர்கள் என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப் போருக்கு பெரும் சுமையாக உள்ளது. குர்ஆன்: 42:13 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் உங்களுக்கு மூன்று வி­யங்களை விரும்பு கின்றான். உங்களுக்கு மூன்று வி­யங்களை வெறுக்கின் றான். 1,2 அல்லாஹ் ஒருவனையே வணங்குவதையும், அவனுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையும் விரும்பு கின்றான். 3. நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் கயிற் றைப் பற்றிப் பிடிப்பதையும் பிரிந்து விடாமலிருப்பதை யும் விரும்புகின்றான். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரழி), நூல் : முஸ்லிம் : 3533 அ

ல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் ஒற்றுமையைக் குறித்து வலியுறித்திக் கூறியிருந்தும் இந்தச் செய்திகளையயல்லாம் மக்களிடம் சொல்லாமல் மறைத் துத் தங்களது சுயநலத்திற்காக முஸ்லிம்களைப் பல பிரிவி னர்களாக பிரித்து சகோதரத்துவத்தை நாசப்படுத்தி ஒருவருக்கொருவரை எதிரிகளைப் போன்று ஆக்கி உலக ஆதாயம் அடைந்து கொண்டிருக்கும் தலைவர்களின் பேச்சை அப்படியே நம்பி ஒற்றுமையைச் சீர்குலைக்கும் விதமாக நடப்பவர்கள் நாளை மறுமையில் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகும் என்பதை உணர்ந்து தங்களை திருத்திக் கொள்வார்களாக. குர்ஆன், ஹதீஃத் மட்டும்தான் மார்க்கம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்களிடையே ஒற்றுமை ஏற்பட்டு அதன் மூலமாக உண்மையான இஸ்லாமிய எழுச்சி ஏற்பட நாம் அனைவரும் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடுவோமாக.

நரபலி மோடியின் மோடி மஸ்தான் வேலை!
– அபூ அப்தில்லாஹ்
நரபலி மோடி 08.11.2016 இரவு நடைமுறையி லுள்ள 500/-, 1000/- ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததன் மூலம் தனது மோடி மஸ்தான் வேலையைக் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளார். தான் இந்தியாவின் நடுத்தர, ஏழை எளிய மக்களின் பிரதமர் அல்ல, கார்ப்பரேட் நிறுவனங்கள், பெரும் பெரும் பண முதலைகளின் பணியாள் என்பதையே நிரூபித்துள்ளார்.

தன்னைவிட வயதில் குறைந்த ஒரு பெண்மணி, ஒரு பெரும் பண முதலையின் மனைவி, அவளது காலில் விழாத குறையாக முஸ்லிம்கள் இறைவனுக்குத் தொழுகையில் ருகூஉ செய்வது போல் வணங்கி வழிபடும் மோடி அப்பண முதலாளிகளின் வேலையாள் என்பதை உறுதிப்படுத்துகிறது. இதுவரை நாட்டில் புழக்கத்தில் இல்லாத 2000/- ரூபாய் நோட்டுக்கு இப்போது என்ன தேவை வந்து விட்டது? நடுத்தர, ஏழை மக்களுக்கு இந்த 2000/- ரூபாய் தேவையா? 2000/- ரூபாய் நோட்டு யாருக்கு தேவை? கருப்புப் பண முதலைகளுக்குத்தான் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.

பின்வாசல் வழியாக எளிதாக வாங்கிப் பதுக்குவதற்கும். 10 கண்டெய்னர்களில் கொண்டு போவதை 5 கண்டெய்னர்களில் விரும்பிய இடங்களுக்கு கொண்டுபோய் பதுக்கவும் இந்த 2000/- ரூபாய் நோட்டு மிகவும் உதவுகிறது. நரபலி நரேந்திர மோடியே இதற்குப் பெரிதும் உதவியாக இருப்பதாக வாட்சப், டெலிகிராம் வழி செய்திகள் பரவுகின்றன. மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அடித்தக் கொள்ளைகளும் வாங்கிய கோடிக்கணக்கான லஞ்சமும் அம்பலத்திற்கு வருகின்றன. ஆக கருப்புப் பணம் ஒழிப்புத் திட்டமாக நரபலி மோடி யின் அறிவிப்பு கருப்புப் பணம் பெருகுவதற்கும், ஊழல்கள் மேலும் மலிவதற்குமே உதவுவதாக இருக்கிறது.
புதிய 2000/- ரூபாய் நோட்டு பெரும், பெரும் பண முதலைகளுக்கும், கருப்புப் பண பெருச்சாலி களுக்கும் பெரிதும் உதவுகிறதே அன்றி நடுத்தர, ஏழை எளிய மக்களுக்கு உதவுவது ஒருபக்கம் இருக்கட்டும், அவர்களின் அன்றாட அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்ற 2000/- ரூபாய் நோட்டு உதவுவதாக இல்லை. ஏழைகளின் நலன் கருதி முதலில் 1000/- ரூபாயை மட்டும் செல்லாததாக ஆக்கி 500/- ரூபாய் புழக்கத்தில் நீடிக்கச் செய்து ஏழைகளின் வயிற்றில் பால் வார்த்திருக்கலாம். அல்லது புதிய 2000/- ரூபாய் நோட்டுக்குப் பதிலாக புதிய 200/- ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தி ஏழைகள் வாழ வழிவகை செய்திருக்கலாம். அதை விட்டு பெரும் பெரும் பணம் முதலைகளுக்குச் சாதகமாக 2000/- ரூபாய் புதிய நோட்டை அறிமுகப்படுத்திய நோக்கம் என்ன? மில்லியனர்களையும், பில்லியனர்களையும் டிரில்லியனர்களையும் மேலும் மேலும் டிரில்லியனர்களாக ஆக்க நரபலி நரேந்திர மோடி துணை போகிறார் என்பதுதானே அதன் பொருள். இந்த 2000/- ரூபாய் புதிய நோட்டு நடுத்தர, ஏழை எளிய மக்களை என்ன பாடுபடுத்துகிறது பாருங்கள்.

8.11.2016 அன்று இரவு மோடி 500/-, 1000/- ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்த பின்னர் 9.11.2016 காலை 500/- ரூபாய் நோட்டை தங்களின் அத்தியாவசிய தேவைகளான பால், அரிசி, பருப்பு, காய்கறி இவற்றை வாங்க கடைக்குச் சென்றால் அந்த 500/- ரூபாய் நோட்டைக் கொண்டு எப்பொருளையும் வாங்க முடியவில்லை. கொலைப் பட்டினியோடு, குழந்தைகள் பசியால் கதற கதற அழும் அவலக் காட்சியைப் பார்த்து சகிக்க முடியாமல் வேறு வழியின்றி அங்கு இங்கு புரட்டி நான்கு 500/- ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு வங்கி வாசலில் காலையிலிருந்து மாலை வரை வரிசையில் காத்திருந்து சிலர் புதிய 2000/- ரூபாய் நோட்டைப் பெற்றனர். பலருக்கு அந்த வாய்ப்பும் இல்லாமல் தங்களின் அவல நிலையை எண்ணி கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

2000/- ரூபாய் புதிய நோட்டைப் பெற்றவர் களுக்காவது நிம்மதி ஏற்பட்டதா? இல்லையே! அந்த 2000/- ரூபாய் நோட்டை எடுத்துக் கொண்டு கடைவீதிக்குச் சென்று தங்களின் அத்தியாவசியப் பொருட்களை வாங்க முற்பட்டால், மீதிக்காசு எங்களிடம் இல்லை. அதனால் 2000/- ரூபாய் நோட்டு வேண்டாம். 100/- ரூபாய் நோட்டுகள் கொடுங்கள் என்று கூறி பொருட்களைத் தரக் கடைக்காரர்கள் மறுத்து வருகிறார்கள். புதிய 2000/- ரூபாய் நோட்டு கையில் இருந்தும், அத்தியவசியப் பொருட்களை வாங்கி சமைத்து தங்களின் கொலைப் பட்டினியைப் போக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏழை, எளிய மக்களும் அவர்களின் பச்சிளம் குழந்தைகளும் கொலைப் பட்டினியால் வாடித் துடித்துக் கொண்டிருப்பது நரபலி நரேந்திர மோடியின் உள்ளத்தைத் தொடவில்லையா? எப்படித் தொடும்? மணமுடித்த மனைவிக்குரிய உரிமைகளைக் கொடுத்து பாசத்தை வளர்த்து அவள் பெற்றெடுக்கும் குழந்தைகளைக் கொஞ்சிக் குலாவி பாசத்துடன் வளர்த்திருந்தால் அல்லவா நரபலி மோடிக்கு குடும்பப் பாசம், குழந்தைப் பாசம் தெரியப் போகிறது. மணமுடித்த மனைவியையே அம்போ என்று வாழாவெட்டியாக விட்டு மனம் மகிழும் மோடிக்கு ஏழை எளியவர்கள் கையில் 2000/- ரூபாய் புதிய நோட்டை வைத்துக் கொண்டு படும் பாடு, பரிதாப நிலை தெரியவா போகிறது.

இரண்டு கால் மிருகத்திற்கு மக்கள் நிலை புரியவா போகிறது. மிருகங்களுக்குக் கூட ஜோடிப் பாசம், குட்டிப்பாசம் இருக்கவே செய்கிறது. மிருகங்களை விட கேடுகெட்ட நிலையில் நரபலி மோடி இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு மிருகத்தை பெரும்பான்மை மக்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி இருக்கிறார்கள். ஆரியர்களின் குள்ளநரித் தந்திரம் பேர் போனது. ராமாயாணம் எழுதியது யார்? பகவத்கீதை எழுதியது யார்? ஈராக், ஈரான் போன்ற பகுதிகளிலிருந்து வந்தேறிகளாக வந்த ஆரியர்கள் மண்ணின் மைந்தர்களான பெருங்கொண்ட மக்களை தாழ்த்தப்பட்டவர்களாக, இன இழிவுக்குள்ளாக்கப்பட்ட வர்களாக ஆக்கத் துணை போன அன்றைய மன்னர்கள் யார்? பாபரி மஸ்ஜித் இடிபடும்போது அம்மாநில முதல்வர் யார்? பள்ளிவாசலை இடித்துத் தரை மட்டமாக்கியவர்கள் யார்? ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் உட்பிரிவுகளில் அங்கம் வகிக்கும் பெரும் பான்மையினர் யார்? பா.ஜ.க.வின் பெரும்பான்மை உறுப்பினர்கள் யார்? தமிழகத்தில் பா.ஜ.க.வின் தலைமை தாங்கும் முக்கியஸ்தர்கள் யார்? நாட்டுப் பிரதமர் மோடி யார்? இவர்கள் அனைவரும் உயர் ஜாதியினர் என தம்பட்டம் அடிக்கும் ஆரியர்களா? பிராமணர்களா? இல்லையே1 பின் யார்?

ஆம்! அவர்கள் அனைவரும் இன இழிவுக்கு ஆளாக்கப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்தவர்களே! “அவர்கள் கைகளைக் கொண்டே அவர்கள் கண்களைக் குத்தி குருடாக்குவது”, குலத்தைக் கெடுக்கும் கோடரிக் காம்பு என்று சொல்வார்களே அதே பாணியில் இன இழிவுக்கு உட்பட்ட மக்களைக் கொண்டே இன இழிவை மேலும் வலுப் படுத்துவது என்ற சித்தாந்தத்தை அன்றும் இன்றும் கையில் எடுத்துள்ளனர் ஆரியர்கள். அன்றைய மன்னர்களைப் பொய்யாகப் புகழ்ந்து அவர்களை வசீகரப்படுத்தி, பெருங்கொண்ட மண்ணின் மைந்தர்களை இந்த ஆரிய வந்தேறிகள் இன இழிவுக்கு உட்படுத்தி, ஆரியர்கள் காலால் இடும் பணிகளை மண்ணின் மைந்தர்கள் தலையால் செய்து முடிக்கும் வகையில் அவர்களை அடிமை களாக்கிக் கொண்டனர். இந்த இழி நிலை பல்லாயி ரம் ஆண்டுகள் நீடித்து வருகிறது.
சமீப காலத்தில் அம்பேத்கர், பெரியார் இன்னும் சில சுயசிந்தனையாளர்கள் தோன்றி இந்த இன இழிவு நிலையைத் தாங்க முடியாமல் அதை எதிர்த்துக் கடுமையாக பிரசாரம் செய்ததின் பலனாக அந்த மக்களிடையே ஓரளவு சிந்தனை ஏற்பட்டது. அவர் களில் சில படித்துப் பல பதவிகள் அடைந்தும், நீதிபதிகளாகியும் இன இழிவு அவர்களை விட்டும் நீங்கவில்லை. இன இழிவு அவர்களை ஒட்டிக் கொண்டே இருக்கிறது. ஈ.வே.ரா. இந்த இழி நிலையை அறிந்த பின்னர் “இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து” எனப் பிரசாரம் செய்தார்.

ஆயினும் அவரது தொண்டர்கள், முஸ்லிம்களிடையே மட்டும் என்ன வாழுது. அவர்களும் மூட நம்பிக்கைகளிலும், சமாதி வழிபாடுகளிலும், இன்னும் பல அநாச்சாரங்களி லும் மூழ்கித்தான் இருக்கிறார்கள் என்று கூறி பெரியார் இஸ்லாத்தைத் தழுவுவதைத் தடுத்துவிட்டார்கள். அம்பேத்கர் இஸ்லாத்தைத் தழுவுவதை ஆரியர்கள் தடுத்து விட்டார்கள். அவர் புத்த மதத்தைத் தழுவினார். ஆக இந்திய மண்ணின் மைந்திர்களிடம் ஆரியர்களால் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட இன இழிவு நீங்குவதற்கு வழியே பிறக்காத நிலை நீடிக்கிறது.

அதற்கு மாறாக அவர்களைப் பீடித்துள்ள இன இழிவு மேலும் வலுப்பட மோடி மூலம் ஆரியர்கள் திட்டமிட்டுச் சதி செய்து வருகிறார்கள். அன்றைய மன்னர்களைக் கைக்குள்ளே போட்டுக் கொண்டு சாதித்ததை, இன்று மவ்லவிகளும் முஸ்லிம் அரசியல் தலைவர்களும் பாதை அமைத்துக் கொடுத்து ஆட்சியிலேயே அமர்ந்து கொண்டு சாதித்து வருகிறார்கள். அதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் மனிதத் தன்மையே இல்லாத இன இழிவுள்ள மோடி. குஜராத்தில் முதல்வராக இருந்தபோது ஒரு கர்ப்பிணி பெண்ணின் வயிற்றைக் கீறி அங்குள்ள குழந்தையை எடுத்து வெட்டித் துண்டமாக்கி அப்பெண்ணின் கண் முன்னே நெருப்பிலிட்டு பொசுக்குவதற்கும், பல்லாயிரம் ஆண் பெண்களை கொன்று குவிப்பதற்கும் திட்டமிட்டு சதிச் செய்து நிறைவேற்றியவர் தான் நரபலி மோடி. அந்தளவு மனிதத் தன்மையே இல்லாதவர். ஒரு நாய் காரில் அடிபட்டுச் செத்தால் அதற்காக வருந்த முடியுமா? என்று கேட்டவர் மோடி. மோடியைப் பிரதமர் ஆக்கினால் சிறிதும் ஈவிரக்கமின்றி ஏழை எளியவர்களை வதைத்து, கொன்று, பசி, பட்டினியால் வாட வைத்து, அவர்களை அச்சுறுத்தி ஆரியர்களை சாமி, சாமி என அழைத்து அவர்களை வணங்கி வழிபட வைக்கலாம் என்று திட்டமிட்டே ஆர்.எஸ்.எஸ். நரபலி மோடியை பிர தமராக்கியது; அவர்கள் காலால் இட்ட வேலையை மோடி தலையாமல் நிறைவேற்றி வருகிறார்.

மேல் ஜாதியினர் என பெருமைப்படும் ஆரியர்களின் அசல் நோக்கம் மீண்டும் மண்ணின் மைந்தர்களைத் தங்கள் காலடியில் கிடக்கச் செய்ய வேண்டும். அடுத்து ஜாதிப் பிரிவுகளை ஒழிக்க முற்படும் இஸ்லாத்தை அழிக்க வேண்டும். முஸ்லிம்களை வெட்டிச் சாய்க்க வேண்டும். அதற்கு குஜராத் ஃபார்முலாவை இந்தியா முழுவதும் அமுல்படுத்த வேண்டும். அந்தத் திட்டத்துடன் தான் நரபலி மோடி யூனிபோர்ம் சிவில் கோடை கையில் எடுத்துள்ளார். முத்தலாக், பலதார மணம் இவற்றை விமர் சிக்க முற்பட்டுள்ளார். 1950களில் நிர்ணயம் செய்யப்பட்ட அரசியல் சாசனப்படி மோடியால் ஒன்றும் செய்ய முடியாது.

ஆயினும் முஸ்லிம்களைத் தூண்டிவிட்டு, அவர்களை முஸ்லிம் என்ற இன உணர்வு கொள்ள வைத்து, கோதாவில் இறக்கி மோதவிட்டு அதன் மூலம் ஹிந்துத்துவாவை வளர்க்க வேண்டும் என்பது மோடிக்கு மேலிடம் இட்டுள்ள கட்டளை. அதைக் கணக்கச்சிதமாகச் செய்ய களத்தில் இறங்கி விட்டார் மோடி. முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளுக்கும் இயக்க, அரசியல் தலைவர்களுக்கும் தங்களை இவ்வுலகில் வளர்த்துக் கொள்வதும், அதன் மூலம் உலகியல் ஆதாயங்களை அடைவதும் தானே நோக்கம். அதற்கு இது நல்லதொரு வாய்ப்பு என மகிழ்ந்து அவர்களும் களத்தில் இறங்குகிறார்கள். 49:14 இறைவாக்குக் கூறுவது போல் ஈமான் உள்ளத் தில் நுழையாத பெயர்தாங்கி முஸ்லிம்களும் இன உணர்வால் தூண்டப்பட்டு இவர்களின் பின்னால் ஒன்று திரள்வார்கள்.

அணி வகுப்பார்கள். பெரும்பான்மை முஸ்லிம்கள் களத்தில் குதிப்பது ஈமானுடைய உணர்வின் காரணமாக அல்ல. இன உணர்வின் காரணமாகவே என்று நாம் சொல்வது உங்களுக்கு ஆச்சரியமாகவே இருக்கி றதா? ஈமானுடைய முஸ்லிம்கள் ஐங்காலத் தொழுகைகளை அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து நிலைநாட்டாமல் இருப்பார்களா? இருக்க முடியவே முடியாது. ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல் என தீவிரமாக ஈடுபடுகிறவர்களில் எத்தனை பேர் ஐங்காலத் தொழுகைகளை அதனதன் நேரத் தில் ஜமாஅத்துடன் தொழுது அல்லாஹ் “அகீமுஸ்ஸ லாத்” தொழுகையை நிலைநிறுத்துங்கள் என்று கட்டளையிடுவதற்கு அடிபணிகிறார்கள்? அக்கூட்டத்தில் தொழுகையற்றவர்களாக அதிகம் பேரைப் பார்க்கலாம். பேணுதலற்ற தொழுகையாளி களைப் பார்க்கலாம். தொழுது வருகிறவர்களையும் பார்க்கலாம். ஆனால் அல்லாஹ் கூறுவது போல் தொழுகையை நிலைநாட்டும் ஒருவரைக் கூட பார்க்க முடியாது.

காரணம் தொழுகையை நிலை நாட்டுபவர்கள் ஒருபோதும் 2:186 இறைவாக்கை நிராகரித்து மனிதர்களிடம் கையேந்தமாட்டார் கள். அதற்காக மார்க்கம் தடை செய்யும் ஆர்ப்பாட் டம், போராட்டம், பந்த், சாலை மறியல் போன்ற அல்லாஹ்வையும் மறுமையையும் மறுக்கும் கம்யூனிஸ நடைமுறைகளைப் பின்பற்றமாட்டார் கள். ஆம்! குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான இச் செயல்களில் மாற்றாரைப் பின்பற்றி ஐங்காலத் தொழுகைகளைப் பேணி நிலைநாட்டுபவர்கள் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள்.

ஆக இம்மதகுருமார்களான மவ்லவிகள், இயக்கத் தலைவர்கள் ஆகியோரின் இம்முயற்சிகள் முஸ் லிம் சமுதாயத்திற்குப் பெருங்கேட்டையே விளைவிக்கும். உயிருக்கும், பொருள்களுக்கும் பெரும் சேதத்தையே விளைவிக்கும். ஆயினும் இம்மத குருமார்களான மவ்லவிகளும், இயக்க, கழக, அமைப்புத் தலைவர்களுக்கும் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்ட முயற்சிகள் இவ்வுலகில் அவர்களுக்குப் பெரும் ஆதாயங்களைத் தருகின்றன. (23:52-56) வசூல் ராஜாக்களாக வலம் வரலாம். இன உணர்வுக்கு அடிமைப்பட்ட பெருங்கொண்ட மக்கள் மூலம் பெருத்த வசூல் கிடைக்கவே செய்யும். இதைக் கடந்த 30 ஆண்டுகளாகப் பார்க்கத்தானே செய்கிறீர்கள். அதற்கு மாறாக முஸ்லிம் சமுதாயம் மேலும் மேலும் அதலபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதையும் பார்க்கத்தானே செய்கிறீர்கள். காவிகளின் ஆதிக்கம் மேலும் மேலும் வலுவடைவதையும் பார்க்கிறீர்கள்.

மதகுருமார்களான மவ்லவிகளே உங்களை நாம் மிகக் கடுமையாக எச்சரிக்கிறோம். கேவலம் ஒரு ஜான் வயிற்றைக் கொடிய ஹராமான வழியில் குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போதனைகளை நிராகரித்து, நிரப்புவதற்காக 99.9% மக்களை குர்ஆனை படித்து விளங்குவதை விட்டும் தொடர்ந்து தடுத்து வருகிறீர்கள். அதனால் அவர்கள் கலிமா, ஈமான், தொழுகை பற்றி எதுவும் அறியாத அறிவிலிகளாக இருக்கிறார்கள். பெரும்பாலோர் கபுரு-சமாதி வழி பாடுகளில் மூழ்கி இருக்கிறார்கள்.
மேலும் பல மூட நம்பிக்கைகளிலும் மாற்றுமதக் கலாச்சாரங்களிலும் மூழ்கி இருக்கிறார்கள். அவை முற்றி சமயபுரம், சபரிமலை, திருப்பதி, வேளாங்கன்னி, இன்னும் இவைபோல் பிற மத வழிபாட்டுத் தளங்களுக்கும் செல்லும் நிலைக்கு முஸ் லிம்களில் சிலர் ஆளாகி வருகின்றனர். இங்கு நாம் படுக்க வைத்து வழிபாடுகள் செய்கிறோம். அவர்கள் நிற்க வைத்து வழிபாடுகள் செய்கிறார்கள். இரண்டும் ஒன்றுதான் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். மவ்லவிகளே நீங்கள் 36:21, 2:41,79,174, 3:77, 187, 5:44,106, 9:9, 16:95 இந்த அனைத்து குர்ஆன் வசனங்களையும் நிராகரித்து மார்க்கத்தை அற்பக் காசுக்கு விற்றுக் கொண்டிருப்பதால் இந்த அவல நிலை. அந்த அற்பக் காசுக்காகவே நாங்கள்தான் ஆலிம்கள், எங்களுக்குத்தான் குர்ஆன் விளங்கும்.

அவாம்களுக்கு குர்ஆன் விளங்காது என்று ஆணவ மும்,பெருமையும் கொள்கிறீர்கள். அல்லாஹ், தான் படைத்த மனிதனுக்கு குர்ஆனில் மார்க்கத்தைத் தெள்ளத் தெளிவாக, நேரடியாக, எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாமல், குன்றிலிட்ட தீபமாக, உள்ளங்கை நெல்லிக்கனியாக மனிதர்களுக்காவே விளக்கியுள்ளதாக எண்ணற்ற வசனங்களில் மீண்டும், மீண்டும் கூறியுள்ளான். இந்த நிலையில் அல்லாஹ் விளக்கியுள்ள குர்ஆன் உங்களுக்கு விளங்காது. நாங்கள்தான் விளக்க வேண்டும் என்று ஓயாது கூறி வருவது உங்களின் வீண் பெருமையையும், ஆணவத்தையும் வெளிப்படுத்தவில்லையா? அதுவும் 42:21, 49:16 குர்ஆன் வசனங்களை நிராகரித்து நீங்கள் ஃபிர்அவ்னைப் போல் அல்லாஹ்வுக்கும் மேல் அல்லாஹ்வாக உங்களை நினைத்து பெருமைப்படுவதாக ஆகாதா? (நவூதுபில்லாஹ்)

உங்களின் இந்த வீண் பெருமை உங்களையும் உங்களை நம்பி உங்கள் பின்னால் வரும் பெருங் கொண்ட முஸ்லிம்களையும் எங்கே கொண்டு சேர்க்கும் என்பதை 2:159-162, 7:35-41,146, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 இந்த குர்ஆன் வசனங்களை நீங்களே அரபு மொழியிலேயே மீண்டும் மீண்டும் படித்துப் படிப்பினை பெறுங்கள். அப்படி படிப்பினை பெற்றால் 3:199 இறைவாக்குக் கூறுவது போல் மார்க்கத்தை அற்ப விலைக்கு விற்கத் துணியாமல், உண்மையான ஈமானுடையவர்களாக, முஃமின்களாக மாறி விடுவீர்கள். குர்ஆனை மக்களிடமிருந்து மறைக்கும் அவசியமும் இல்லாமல் போய்விடும்.

முஸ்லிம்கள் குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்கி 2:208 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடி பணிந்து ஷைத்தானின் அடிச்சுவற்றைப் பின்பற்றா மல் முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்துவிடுவார் கள். 3:102 இறைக்கட்டளைப்படி அல்லாஹ்வுக்கு முழுமையான பயபக்தியுடன் நடந்து முஸ்லிமாக மரணிக்கத் தங்களைத் தயார்படுத்திக் கொள்வார்கள். 3:103 இறைக் கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தாக ஒரே தலைமையில் செயல்படுவார்கள். ஒருபோதும் பிரிய மாட்டார்கள். இதற்கு மாறாக இந்த அனைத்துக் கேடுகளும் முஸ்லிம் சமுதாயத்தில் மண்டிக் கிடக்க ஒரே காரணம் முஸ்லிம்களை குர்ஆனை நெருங்கவிடாமல் மவ்லவிகளாகிய நீங்கள் தடுத்து வைத்திருப்பது தான்.

நீங்கள் கடந்த 1200 வருடங்களாக வீம்பாக வற்புறுத்தி வரும் இத்தீச்செயலை நீங்கள் விளங்கித் திருந்தினால் போச்சு. இல்லை இதே பிடிவாதத்தில் நீங்கள் இருந்தால் மறுமை வாழ்க்கை பறிபோவது போல் இவ்வுலக வாழ்க்கையும் பறிபோய்விடும். ஆம்! கவனமாகக் காது கொடுத்துக் கேளுங்கள். காவி மதகுருமார்கள் உங்களை விட சாமர்த்திய சாலிகள். ஸ்பெயினை முஸ்லிம்கள் சுமார் 800 ஆண்டுகள் ஆண்டார்கள். இன்று அங்கு முஸ்லிம்களே இல்லாத நிலையை வெற்றிகரமாக உருவாக்கி விட்டார்கள். அதே ஃபார்முலாவைக் கையிலெடுத்து இந்தியாவை 800 ஆண்டுகள் ஆண்ட முஸ்லிம்களைத் துடைத்தெறிய காவிகள் திட்டம் தீட்டி வருகிறார்கள். அதற்கென்றே நரபலி மோடியை இந்தியாவின் பிரதமர் ஆக்கியுள்ளனர். அவர் இந்தப் பணியைத் தீவிரமாகத் துவக்கிவிட்டார்.
உங்களின் பழைய மதத்திற்குத் திரும்புங்கள் (றூகர்வாப்பசி) என்று முழக்கமிட ஆரம்பித்துவிட்டார். மோடியின் மோடி மஸ்தான் வேலையை மிக எளிதாக நிறை வேற்றிக் கொள்ள மவ்லவிகளாகிய நீங்கள் பாதை அமைத்துக் கொடுத்து வருகிறீர்கள். முஸ்லிம்களில் 99.9% நீங்கள் 49:14 இறைவாக் குக் கூறுவது போல் ஈமான் உள்ளத்தில் நுழையாத பெயர்தாங்கி முஸ்லிம்களாக ஆக்கி வைத்துள்ளீர்கள். அவர்களில் பெரும்பாலோர் கபுரு-சமாதி வழிபாடுகளில் தீவிரமாக உள்ளனர். சிலர் பிற மத ஆல யங்களுக்கும் சென்று வழிபாடுகள் செய்து வருகின்றனர். நீங்கள் அவர்களை குர்ஆனை நெருங்க விடாமல் தடுத்து வருவதே அதற்கு முக்கியக் காரணம். முஸ்லிம்களின் இந்த இழிநிலையை உங்களை விட காவி மதகுருமார்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.

நீங்களோ முஸ்லிம்களின் பணத்தை கொடிய ஹராமான வழியில் சாப்பிட்டு வருகிறீர்கள். காவி மதகுருமார்களோ அந்த முஸ்லிம்களுக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்கத் திட்டம் தீட்டி வருகிறார்கள். அதற்கு வேண்டிய பணத்தைத் தவறான வழிகளில் சேர்த்து குவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பெரும் பெரும் பண முதலைகள் கடனாகப் பெற்ற சுமார் 200 லட்சம் கோடிகளைத் தள்ளுபடி செய்த அரசு விவசாயிகள், மாணவர்கள் பெற்ற 5000/-, 10,000/- கடன்களை வசூலிக்க அதி தீவிரம் காட்டி வருவதின் இரகசியம் புரிகிறதா? காவியினரின் இத்திட்டத்திற்கு பண முதலைகள் கோடி கோடியாக அள்ளிக் கொட்டி வருகிறார்கள். ஆளுக்கு ஐந்து லட்சம் என்றால் ஈமான் உள்ளத் தில் நுழையாத முஸ்லிம்கள் அதில் மயங்கமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? உள்ளத்தில் ஈமான் இருந்து மறுமையைப் பற்றிய உறுதியான நம்பிக்கை உடையவர்கள் ஐங்கால தொழுகைகளைப் பேணி நிலை நிறுத்தாமல் இருப்பார்களா?

அப்படியானால் ஐங்காலத் தொழுகைகளை நிலைநிறுத்தாதவர் களின் நிலை என்ன? சமுதாயத்தில் எத்தனை சதவிகிதம் தேர்வார்கள்? அன்றைய ஸ்பெயினையும், இன்றைய இந்தியாவையும் ஒப்பிட்டுப் பாருங்கள். படிப்பினை பெறுங்கள். தவறினால், உங்கள் பின் னால் கண்மூடி (தக்லீத்) வரும் பெருங்கூட்ட முஸ்லிம்கள் லட்சங்களில் மயங்கி காவி மதகுருமார்கள் பின்னால் செல்ல ஆரம்பித்துவிடுவார்கள். உங்களின் ஹராமான வயிற்றுப் பிழைப்புக்கும் பெரும் ஆபத்து வந்து விடும். எச்சரிக்கை! நாசம் வருமுன் சுதாரியுங்கள். குர்ஆனை மக்களிடமிருந்து மறைக்க முற்படாதீர்கள். நரபலி மோடியின் மோடி மஸ்தான் சதித் திட்டத்தில் சிக்கி சமுதாயத்திற்கு பேரிழப்பை ஏற்படுத்தாதீர்கள். எச்சரிக்கை!

“ஜமாஅத் அல்முஸ்லிமீன்” அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத்தா?
மறுபதிப்பு செப்டம்பர் 2012
கொயபல்ஸ் தத்துவம்! கொயபல்ஸ் தத்துவப்படி “ஜமாஅத் அல்முஸ்லிமீன்’ அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் என ஓயாது பொய்ப் பிரசாரம் செய்து பொதுமக்களையும், ஏன்? மவ்லவிகள், உலகியல் அறிஞர்கள், அவாம்கள் என அனைவரையும் நம்ப வைத்துள்ளார் நவீன ததஜ இமாம்(?) தன் கைத்தடிகளையும், பக்தர்களையும் கொண்டு. தனது பொய்க் கூற்றை உலகம் முழுவதும் பரப்பி வருகிறார். உண்மை என்ன என்பதை குர்ஆன், ஹதீஃத் வெளிச்சத்தில் ஆராய்வோம்! 22:78

இறைவாக்கில் உம்மத்தே முஹம்மதியா வுக்கு “முஸ்லிமீன்’ எனப் பெயரிட்டுள்ளதாக அல்லாஹ் நேரடியாகக் கூறுகிறான். அதிலும் உறுதியாக இதிலும் (குர்ஆனிலும்) இதற்கு முன்னரும் (முன்னைய நெறிநூல்களிலும்) இவ்வாறு “முஸ்லிமீன்” எனப் பெயரிட்டுள்ளதாக நேரடியாக அறிவித்துள்ளான்.

மேலும் முன்னர் நபிமார்கள் செய்த தஃவா-அழைப்புப் பணியைச் செய்யக் கடமைப்பட்ட நாம், நம்மை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்று சொல்லும்படியே 41:33-ல் கூறுகிறான். அவர்கள்தான் சொல்லால் அழகானவர்கள் என்று பெருமையும்படுத்துகிறான். நபிமார்களும் முஸ்லிம்களே! இது அல்லாமல் நபிமார்கள் அனைவரும், நல்லடி யார்களும் தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்கள் என்றே கூறி இருப்பதை பல குர்ஆன் வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. (பார்க்க : 2:133,136, 3:52, 64,84, 5:111, 6:163, 7:126, 10:72, 27:42,81, 29:46, 72:14, 28:53, 39:12, 43:69, 46:15)

ஜாஹிலிய்யா மரணம்!
மேலும் இன்று சிலர் இவரது துர்போதனையால் ஜமாஅத்தைப் புறக்கணித்துத் தனியாகச் செயல்பட்டுக் கொண்டுச் சொல்லித்திரிவது போல், “நான் முஸ்லிம்”-முஸ்லிமன் என்று ஒருமையில் எவரும் சொன்னதாக குர்ஆனில் ஆதாரமே இல்லை, இவர்களும் அய்யாமுல் ஜாஹிலிய்யா மரணத்தையே தழுவ நேரிடும். 3:67-ல் இப்றாஹீம்(அலை) முஸ்லிமாக இருந்தார் என்றும் 12:101ல் யூசுஃப்(அலை) அவர்கள் “முஸ்லிமாக என்னை நீ கைப்பற்றுவா யாக” என்றும் ஒருமையில் சொல்லி இருப்பதைத் தவிர வேறு ஆதாரம் குர்ஆனில் இல்லை. 2:128ல் இப்றாஹீம்(அலை) இஸ்மாயீல்(அலை) அவர்கள் இருவரும் “”எங்கள் இரட்சகனே எங்கள் இருவரையும் முஸ்லிம்களாய் (முஸ்லி மத்தன்) ஆக்குவாயாக.

எங்கள் சந்ததியினரிடமிருந்து முஸ்லிம் சமுதா யத்தை (உம்மத்தன் முஸ்லிமத்தன்) உருவாக்கு வாயாக”, என்று இறைவனிடம் துஆ செய்ததாகக் காணப்படுகிறது. 33:35, 66:5 இரண்டு இடங்களில் முஸ்லிமாத்-முஸ்லிம் பெண்கள் என்று பன்மையி லேயே வருகிறது. ஆக உயிர் வாழக்கூடிய ஒருவர் தன்னை முஸ்லிம்-முஸ்லிமன் என்று தனிமைப் படுத்திக்கொள்ள குர்ஆனில் ஆதாரமே இல்லை. சமூக அமைப்பில்லாமல் இஸ்லாமில்லை; தலைமைத்துவமில்லாமல் சமூக அமைப்பில்லை; கட்டுப்பாடில்லாமல் தலைமைத்துவமில்லை என்பதை இவர்கள் சிந்தித்துணர வேண்டும்.

பல இடங்களில் முஸ்லிமீன், முஸ்லிமூன்! சுமார் 40 இடங்களில் முஸ்லிம்கள் என்று பன்மையில் மட்டுமே குர்ஆனில் காணப்படுகிறது. 3:103-ல் “”நீங்கள் ஜமாஅத்தாக அல்குர்ஆனைப் பற்றிப் பிடியுங்கள்; பிரிந்து விடாதீர்கள்” என்று அல்லாஹ் கட்டளையிடுவதே முஸ்லிம்கள் பல பிரிவுகளாகப் பிரியாமல் ஒரே ஒன்றுபட்ட ஜமாஅத்தாக இருக்கவேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. மேலும் 3:105, 6:153,159, 30:32, 42:13-15 போன்ற இறைவாக்குகளும் உம்மத்தில் பிளவு ஏற்படுத்தக் கூடாது. மக்களின் மனோ இச்சைகளைப் பின் பற்றக்கூடாது என்று நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறுகின்றன.

உலகியல் ஆதாயங்களை எதிர்பார்த்துச் செயல்படுகிறவர்கள் மக்களின் மனோ இச்சைப்படியே செயல்படுவார்கள் என்பதில் சந்தேகம் உண்டா? அல்ஜமாஅத்! அடுத்து ஹதீஃத்களில் ஜமாஅத்தை விட்டு வெளியேறுகிறவன் அய்யாமுல் ஜாஹிலிய்யா மரணத்தைப் போல் மரணமடைவான் என்றும், ஜமாஅத்தை விட்டுப் பிரிகிறவன் அடையும் தண்ட னைப் பற்றி வரும் அனைத்திலும் அல்ஜமாஅத், அல்ஜமாஅத் என்றே வருகிறது. நீங்கள் கூறுவது போல் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்” என்றில்லை.

எனவே பல பிரிவு ஜமாஅத்களில் இருப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது என்ற பொய்யான வாதத்தை வைக்கிறார்கள். ஹுதைஃபத்துல் யமான்(ரழி) அறிவிக்கும் “ஜமாஅத்அல் முஸ்லிமீன்” ஹதீஃத் தெளிவாக ஜமாஅத்தின் பெயரை அறிவிக்கிறது. இந்த நிலையில் மற்ற இடங்களில் எல்லாம் அல்ஜமாஅத், அல்ஜமாஅத் என்று மட்டுமே காணப்படுவதே முஸ்லிம்களுக்கு ஜமாஅத் அல்முஸ்லிமீன் அல்லாத வேறு ஜமாஅத்தே ஒருபோதும் இல்லை என்பதையே உறுதிப்படுத்துகின்றது.

எப்படி என்று பாருங்கள்: பெயர் கூறி அழைப்பது ஏன்? ஒருவருக்கு ஒரு பையன் மட்டுமே மகனாக இருக்கிறான். அவனுக்கு அவனது தந்தை ஒரு பெய ரைச் சூட்டியே இருப்பார். ஆயினும் மற்றவர்கள் அவரது மகனைக் குறித்துப் பேசும்போது உங்கள் மகன் என்று குறிப்பிடுவார்களே அல்லாமல் பெரும் பாலும் அவனது பெயரைக் குறிப்பிடமாட்டார் கள். ஒரே மகனாக இருப்பதால் பெயரைக் குறிப்பிடும் அவசியம் ஏற்படவில்லை.

அதற்கு மாறாக உங்கள் மகன் ……… என்று பெயரைக் குறிப்பிட்டுச் சொல்லும்போது அவருக்கு வேறு மகன்களும் இருக் கிறார்கள் என்றே எண்ணத் தோன்றும். அதேபோல் ஒரு மாப்பிள்ளையின் திருமணத்தின் போது, பொதுவாக மாப்பிள்ளை,மாப்பிள்ளை என்று பேச்சு அடிபடுமே அல்லாமல், மாப்பிள்ளைக்கென்று ஒரு பெயர் இருந்தும் அந்தப் பெயரை யாரும் சொல்லமாட்டார்கள்.

ஆனால் திருமணப் பதிவில் கண்டிப்பாக மாப்பிள்ளையின் பெயர் இடம்பெறும். அதற்கு மாறாக ஒன்றுக்கு மேல் மாப்பிள்ளைகள் ஒரு திருமண மேடைக்கு வரும்போது பொதுவான பேச்சிலும் அவர்களின் பெயர்கள் அடிபடும். பதிவுகளிலும் இடம்பெறும். இதை மறுப்பவர் உண்டா? இரண்டாவது ஜமாஅத் இல்லை! இதேபோல் முஸ்லிம்களுக்கு 3:103 இறைக் கட்டளைப்படி ஒரே ஜமாஅத் மட்டும்தான்.

ஒன்றுக்கு மேற்பட்டப் பிரிவு ஜமாஅத்துகள் இல்லவே இல்லை. அதனால் ஜமாஅத்தின் பெயர் பதிவில் “ஜமாஅத்அல்முஸ்லிமீன்” என்று இருப்பதோடு, அந்த ஒரு ஜமாஅத் மட்டுமே மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட ஜமாஅத்தாக இருப்பதாலும், வேறு ஜமாஅத்துகளுக்கு இடமே இல்லாததாலும், ஹதீஃத்கள் அனைத்திலும் அல்ஜமாஅத், அல்ஜமா அத் என்று மட்டுமே காணப்படுகிறது. வழிகெட்டப் பிரிவினர் ஜாக்ஹ், ததஜ என அடிக்கடி திக்ர் செய்து வழிபாடு செய்வது போல் “ஜமாஅத் அல் முஸ்லிமீன்”ஐ அடிக்கடி திக்ர் செய்து வழிபாடு செய்ய வேண்டிய அவசியமுமில்லை என்றும் இதிலிருந்து தெரிகிறது.

இதுவே முஸ்லிம்களுக்கு இரண்டாவது ஜமாஅத்திற்கு இடமே நிச்சயமாக இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது. இரண்டாவது ஜமாஅத்திற்கு ஓர் அமீர் ஏற்பட்டால் அவரைக் கொன்று விடுங்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை, இரண்டாவது ஜமாஅத்திற்கு மார்க்கத் தில் இடமே இல்லை என்பதையே இது உறுதிப்படுத்துகிறது.

மொழி பெயர்க்க வேண்டுமா? அடுத்து முஸ்லிமீனையும், ஜமாஅத்துல் முஸ்லிமீனையும் தமிழில் மொழி பெயர்க்க வேண்டும். தமிழில் முஸ்லிமீனை-கட்டுப்பட்டு நடப்பவர்கள் என்றும், ஜமாஅத் அல் முஸ்லிமீனை-கட்டுப்பட்டு நடப்பவர்களின் கூட்டமைப்பு என்றும் மொழி பெயர்க்க வேண்டும் என்று கூறி தங்கள் கண்மூடி பக்தர்களை மதி மயக்கி ஏமாற்றி நரகில் தள்ளுகிறார்கள் தவ்ஹீத் ஜமாஅத் எனப் பீற்றுவோர். சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் இவர்களது பெற்றோர்கள் சூட்டிய கமாலுத்தீன், ஜைனுல் ஆபிதீன், ஃபக்கீர் முஹம்மது போன்ற அரபி பெயர்களை அப்படியே அரபியில் அறிமுகப்படுத் துகிறார்களா? அல்லது தங்கள் பெயர்களைத் தமி ழில் மொழிபெயர்த்து அறிமுகப்படுத்துகிறார்களா?

60 வருடங்களுக்கு முன்னர் தங்கள் பெற்றோர் தங்களுக்கு இட்டப் பெயர்களையே அரபியில் அப்படியே உச்சரிப்பதுடன், அப்படியே மக்களுக்கு அறிமுகப் படுத்துகிறவர்கள், அல்லாஹ் குர்ஆனில் மட்டுமல்ல, இதற்கு முன்னுண்டான நெறி நூல்களிலும் இந்த உம்மத்திற்கு “முஸ்லிமீன்” என இடுகுறிப் பெயர் சூட்டி இருப்பதாக 22:78 இறை வாக்கில் நேரடியாகக் கூறி இருப்பதோடு, நபி (ஸல்) அவர்களும் இந்த சமுதாயத்திற்கு “ஜமாஅத் அல்முஸ்லிமீன்” என இடுகுறிப் பெயர் சூட்டி அறி முகப்படுத்தி இருக்கும் நிலையில், 33:36 இறைக் கட்டளைக்கு முரணாக முஸ்லிமீன் பெயரையும், ஜமாஅத் அல்முஸ்லிமீன் பெயரையும் தமிழில் மொழி பெயர்த்துச் சொல்ல வேண்டும் என்பவர்கள் எந்த அளவு வக்கிரப் புத்தியும், நெஞ்சழுத்தமும், ஈமானற்ற நிலையிலும் இருப்பார்கள் என எண்ணிப் பாருங்கள்.
49:13ல் காணப்படும் கிளைகள், கோத்திரங்கள், மற்றும் முஹாஜிர், அன்சார் போன்ற பெயர்களையும், வியாபாரம், தொழில், விவசாயம் போன்றவற் றில் அமைக்கப்படும் சங்கங்களையும் ஆதாரமாகக் காட்டித் தங்கள் பிரிவுப் பெயர்களை நியாயப்படுத்த முற்படுகின்றனர். இவை எதிலும் நேர்வழி நடப்போர், கோணல் வழிகளில் நடப்போர் என்றோ சுவர்க்கவாதி, நரகவாதி என்றோ பிரித்து பெருமை பேசுவதில்லை. தீனில்- மார்க்கத்தில்-சமுதாயத்தில் பிரிவினை ஏற்படுத்துவதுமில்லை என்பதை அறியாத மூடர்களா இம்மவ்லவிகள்? அவர்கள் பகிரங்க வழிகேட்டில் இருக்கிறார்கள்.

நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு இப்படித் தவறாக வழிகாட்டுகிறவர்களுக்கு இரட்டிப்பு வேதனை கொடுக்கும்படியும், மகத்தான சாபத்தைக் கொண்டு சபிக்கும்படியும் இறைவனிடம் முறையிடுவதை 33:36, 66-68 இறைவாக்குகள் அம்பலப்படுத்துவதை இந்த மதகுருமார்களான மவ்லவிகள் ஒருபோதும் உணர மாட்டார்கள். அவர்கள் பின்னால் செல்லும் பக்தர்களில் அல்லாஹ் நாடுவோர் மட்டுமே இப்புரோகிதர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு வெற்றி பெற முடியும்.

நாயிலும் கேடான நிலை! இன்னும் கேளுங்கள் இந்த தவ்ஹீத்(?) மவ்லவிகளின் நாயிலும் கேடான இழி நிலையை. 1987-ல் இவர்களது கற்பனையில் உதித்து இவர்களாக ஜாக்ஹ் எனப் பெயர் சூட்டி திக்ர் செய்வதோடு அதை அரசில் பதிவு செய்தது ஊரறிந்த இரகசியம். இந்த ஜாக்ஹ் ஜமாஅத்தை றீ.லு.ஜமாஅத் என்று கூறுவதில்லை. அல்லாஹ் குர்ஆன், ஹதீஃத்படி கொடுத்த நேர்வழி ஜமாஅத் எனப் பொய்யாகச் செய்தி பரப்புகின்றனர். அவர்களிலிருந்து 1998-ல் பிரிந்து தமுமுகவில் 2005 வரை இருந்து பின்னர் அதிலிருந்தும் பிரிந்து ததஜ என்ற பிளவு ஜமா அத்தை பீ.ஜை. கற்பனை செய்து ததஜ என பெயர் சூட்டி அதை அரசில் பதிவு செய்து திக்ர் செய்வது ஊரறிந்த இரகசியம். அதை பீ.ஜை. ஜமாஅத் என்று கூறுவதில்லை.

குர்ஆன், ஹதீஃத்படி தூய நிலையில்(?) செயல்படும் நேர்வழி ஜமாஅத் எனப் பொய்யாக ஓயாமல் வாய்ப்பந்தல் போடுகின்றனர். அல்லாஹ்வை திக்ர் செய்வதை விட இந்த ததஜவை அதிகமாக திக்ர் செய்கின்றனர். இந்த நிலையில் என்று மனிதன் தோன்றினானோ அன்றிலிருந்தே பிளவுகளற்ற (21:92, 23:52) இந்த உம்மத்துக்கு அல்லாஹ் “முஸ்லிமீன்” எனப் பெயரிட்டும் (22:78) அல்லாஹ்வின் இறுதித் தூதரும், தான் நடைமுறைப்படுத்திய ஜமாஅத்திற்கு “ஜமாஅத் அல்முஸ்லிமீன்” எனப் பெயரிட்டும் (புகாரி(ஆ) மனாகிப் 4/803, ஃபிதன் 9/206, முஸ்லிம்(ஆ) இமாரா 3/4553, 4554, திர்மிதி (அ) ஃபிதன் 57, இப்னுமாஜா(அ) ஃபிதன் 2/3979, தயாலிசி(அ) 1/443) இந்த உம்மத்திற்கென்றே பிரத்தியேகமாக விட்டுச் சென்றிருக்க, அந்த “ஜமாஅத்அல்முஸ்லிமீன்” அபூஅப்தில்லாஹ்வின் ஜமாஅத் என நாக்கூசாமல், நாக்கில் நரம்பின்றி தங்கள் கண்மூடி பக்தர்கள் மூலம் அவதூறு பரப்பி வருகிறார்களே, இவர்கள் எப்படிப்பட்ட கொடிய பாவிகளாகவும் ஈமானற்றவர்களாகவும் இருப்பார் கள் என்பதை குர்ஆன், ஹதீஃதை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் விளங்க முடியும்.

இத்தனைக்கும் அவர்கள் ஜாக்ஹ் மற்றும் ததஜவை மட்டுமில்லாமல், தஜவை எப்படி எல்லாம், எந்த வகைகளிலெல்லாம் பதிவு செய்ய முடியுமோ அந்த வகைகளிலெல்லாம் பதிவு செய்து உரிமை கொண்டாடுவது போல் நாம் “ஜமாஅத் அல்முஸ்லிமீனை”ஐ பதிவு செய்து உரிமை கொண் டாடவில்லை. அவர் ஆயுட்கால அமீர் என பெருமை பேசுவது போல் நாம் பெருமை பேசவில்லை. “ஜமா அத் அல்முஸ்லிமீன்” என்று அ ல்லாஹ் பெயரிட்டு நபி(ஸல்)அவர்கள் நடை முறைப்படுத்திய ஜமாஅத்தில் முஸ்லிம்கள் அனை வரும் ஒன்றுபடுங்கள்.

தகுதியான ஓர் அமீரை தேர்வு செய்து கொள்ளுங்கள், நாம் அந்த அமீர் பதவிக்குப் போட்டியிடவில்லை என்று ஆரம்பத் திலிருந்தே தெளிவாக அறிவித்து வருகிறோம். கபுரு வணங்கி மவ்லவிகள் நேர்வழி நடக்க முற்படும் முஸ்லிம்களை “வஹ்ஹாபி'” “நஜாத் காரன்” என்று தங்கள் பக்தர்களை மூளைச் சலவைச் செய்வதை விட மெகா கொடிய பாவம், இயக்க வணங்கி மவ்லவிகள் அல்லாஹ் பெயரிட்டு, நபி (ஸல்) நடைமுறைப்படுத்திய “ஜமாஅத் அல் முஸ்லிமீன்”ஐ அபூ அப்தில்லாஹ் ஜமாஅத் என்று கூறுவதாகும்; தங்களது பக்தர்களை மூளைச் சலவை செய்வதாகும்.

இந்த நிலையில் “ஜமாஅத்அல்முஸ்லிமீன்” என்ற அல்லாஹ்வும், அவனது தூதரும் முஸ்லிம்களுக்கென்றே கொடுத்த ஜமாஅத்தை அபூ அப்தில்லாஹ்வின் ஜமாஅத் எனத் தங்கள் கண் மூடி பக்தர்களைச் செய்தி பரப்பச் செய்யும் இவர்கள் எந்த அளவு அற்பமான உலக ஆதாயங்களைக் குறிக் கோளாகக் கொண்ட வக்கிர புத்தியுள்ள அற்பர்களாகவும், 47:24-30 இறைவாக்குகள் கூறுவது போல் ஈமானை இழந்து மறுமையை நட்டப்படுத்திக் கொள்ளும் பெரும் பாவிகளாகவும் இருப்பார்கள் என்பதை மக்களே முடிவு செய்யுங்கள்.

வழிகேடன் பொய்யன் பீ.ஜையின் இன்னொரு நரித்தந்திரம் என்ன தெரியுமா? ஜமாஅத்துல் முஸ்லி மீனும் ஒரு பிரிவுப் பெயர்தான்; அதனால் சமுதாய ஒற்றுமை வெறும் கண்துடைப்பு. அது சாத்தியமே இல்லை என்று கூறி தன் கண்மூடிப் பக்தர்களை ஏமாற்றி நரகில் தள்ளப் பெரும்பாடுபட்டு வருகிறார். ஆம்! நபி(ஸல்) அவர்களின் அமுத வாக்கு அவர் கண்ணில் படுவதில்லை. அவரின் ஆலிம் என்ற ஆணவம் அவரது கண்களை மறைக்கின்றது. அந்த அமுவாக்கு வருமாறு. எனது உம்மத்து 73 பிரிவுகளாப் பிரியும்; அவற்றில் 72 பிரிவுகள் கோணல் வழிகளில் சென்று நரகை அடையும். ஒரேயயாரு பிரிவு மட்டுமே நேர்வழி நடந்து சுவர்க்கம் அடையும் என்பதாகும்.

நபி(ஸல்) அவர்களே நேர்வழி நடந்து சுவர்க்கம் செல்லும் ஜமாஅத்தும் ஒரு பிரிவுதான் என்று சொல்லிவிட்ட பிறகு 33:36 இறைவாக்கை நிராகரித்து வேறு அபிப்பிராயம் யாரால் கூற முடி யும். ஆனால் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண் டியது நாளை நரகை அடையும் 72 பிரிவினரும் எனது உம்மத்துத்தான் என்பதை நபி(ஸல்) உறுதி செய்துள்ளார்கள். நாளை நரகை அடையும் 72 பிரிவினர்களும் எனது உம்மத்து இல்லை, காஃபிர்கள். முஷ்ரிக்குகள் அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்தவில்லை. அந்தத் தீர்ப்பளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. தனக்கு இல்லவே இல்லை என்று 3:128, 6:159 குர்ஆன் வச னங்கள் கூறுவதை அப்படியே ஏற்றுத்தான் நாளை நரகை நிரப்ப இருக்கும் 72 பிரிவினரையும் எனது உம்மத்து என்று கூறி உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

மேலும் 21:92, 23:52 இறைவாக்குகளில் இந்த உம்மத் பிரிவினையே இல்லாத ஒரே உம்மத்துத் தான் என்று உறுதிபடச் சொல்லியுள்ள அல்லாஹ் அடுத்துவரும் 21:93, 23:53 இறைவாக்குகளில் என்ன சொல்கிறான் என்று பாருங்கள். (பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்கக்) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்வார்கள். 21:93 ஆனால், அ(ச்சமுதாயத்த)வர்களோ தம் (மார்க்கக்) காரியத்தைத் தமக்கிடையே பல பிரிவுகளாகப் பிரித்து விட்டனர். ஒவ்வொரு பிரிவினரும் தம்மிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்ச்சியடைபவர் களாக இருக்கின்றனர். (23:53)

எனவே அவர்களை ஒரு காலம் வரை தம் அறியாமையிலேயே ஆழ்ந்திருக்க(நபியே) நீர் விட்டு விடும். (23:54) செல்வத்தாலும், பிள்ளைகளாலும் எதை நம் அவர்களுக்குக் கொடுத்து உதவினோமோ அது பற்றி அவர்கள் எண்ணிக் கொண்டார்களா? 23:55 அவர்களுக்கு நன்மைகளில் நாம் விரைந்து வழங்குகிறோம் என்று (அவர்கள் எண்ணிக் கொண்டார்களா?) அவ்வாறல்ல! அவர்கள் (இதை உணர்வதில்லை. (23:56) இந்த இறைவாக்குகள் 21:92,93, 23:52-56 ஏழை யும் மீண்டும் மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொள்பவர்கள் நிச்சயமாக அல்லாஹ் ஒன்றுபட்ட ஒரே சமுதாயமாகவே இருக்கக் கட்டளையிடுகிறான்.

ஆனால் நரகை நிரப்ப இருக்கும் பெருங்கொண்ட மக்கள் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி அழிந்துபடும் உலகியல் ஆதாயங்களை அடைய முற்படத்தான் செய்வார்கள். தங்களுக்குக் கிடைக்கும் அற்பமான உலகியல் ஆதாயங்களைக் கொண்டு பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் நேர்வழியில் இருப்பதால்தான் அல்லாஹ் பெருங் கூட்டத்தையும், பெரும் பணத்தையும் தங்களுக்கு அளித்திருப்பதாகப் பகல் கனவு காண்பார்கள் என்பதை எல்லாம் இவ்வசனங்கள் படம் பிடித்து காட்டுவதை அறிய முடியும். இப்பிரிவினைவாதிகள் 21:92 குர்ஆன் வசனத்தை நிராகரித்து அல்லாஹ்வை அடிபணிந்து வணங்குவதற்கு மாறாக ஷைத்தானுக்கும் மனித இன ஷைத்தானான தாஃகூத் என்ற மவ்லவிகளுக்கும் அடிபணிகிறார்கள். 23:52 இறைவாக்கை நிராகரித்து அல்லாஹ்வுக்கு தக்வா-பயபக்தியுடன் நடப்பதற்கு மாறாக ஷைத்தானுக்கும் மனித ஷைத் தானாகிய தாஃகூத் என்ற மவ்லவிகளுக்கும் விசு வாசமாக நடக்கிறார்கள்.

ஆக இந்த 72 பிரிவினரும் நாளை நரகை நிரப்புவது உறுதியிலும் உறுதி. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. அதே சமயம் 21:92, 23:52 இறைவாக்குகளை மதித்து ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைக் கட்டிக் காக்கும், 6:153 இறைவாக்குக்கூறும் ஒரே நேர்வழி நடந்து சுவர்க்கம் செல்லும் ஒரே பிரிவுக் கூட்டம் எப்படி நடக்க வேண்டும் என்பதுதான் நாம் சிந்தித்து விளங்க வேண்டிய முக்கிய விசயம். நாளை நர கையடையும் 72 பிரிவினரையும் நபி(ஸல்) அவர்கள் எனது உம்மத்து என்று அழுத்தம் திருத்தமாகக் கூறி இருப்பதால் நாமும் நபி(ஸல்) அவர்களையே பின் பற்றி அந்த 72 பிரிவினரையும் இவ்வுலகில் முஸ்லிமாக ஏற்று அந்த அடிப்படையில் நடக்க வேண்டும். இவ்வுலகில் முஸ்லிம்களுக்குரிய அனைத்து உரிமைகளையும் அவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

அவர்களுக்கு காஃபிர், முஷ்ரிக் ஃபத்வா ஒருபோதும் கொடுக்கக் கூடாது. அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது என்று ஃபத்வா கொடுக்கக் கூடாது. தனிப் போட்டிப் பள்ளிக் கட்டிச் சமுதாயத்தைப் பிளவுபடுத்தக் கூடாது. நாளை நரகை அடையும் ஒவ்வொரு பிரிவும் ஒருவருக்கொருவர் குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுப்பார்கள். ஏன்? குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்றி நேர்வழி நடக்கும் முஸ்லிம்களுக்கும் குஃப்ர், ஷிர்க் ஃபத்வா கொடுப்பார்கள். அதனாலும் ஆத்திரப்பட்டு நேர்வழி நடக்கும் பிரிவினர் அவர்களுக்கு குஃப்ர், ஷிர்க் ஃபத்வா ஒருபோதும் கொடுக்கக்கூடாது.

நேர்வழி நடக்கும் அந்த ஒரேயயாரு பிரிவு ஒருபோதும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தத் துணியமாட்டார்கள். பூர்வீகப் பள்ளிகளில் இமாமாக இருப்பவர்கள் தர்காக்களுக்குச் சென்று அங்குள்ள கபுருகளுக்கு சுஜூது செய்பவர்களாக இருந்தாலும், அதை நேர் வழி நடக்கும் அந்த ஒரே பிரிவினர் தங்கள் கண்களால் கண்டாலும் குர்ஆன், ஹதீஃத் மட்டும் கொண்டு எச்சரிப்பது மட்டுமே நம் கடமை.

அவர்களைத் திருத்துவது நமது பொறுப்பு அல்ல என்று தெளிவாக விளங்கியும், அவர் தொழுகை அவருக்கு, நமது தொழுகை நமக்கு, அவர் தொழுகை அவர் முகத்தில் தூக்கி எறியப்பட்டாலும், நாம் சரியாகத் தொழுதிருந்தால் நம் தொழுகைக்கு எவ்விதப் பாதிப்புமில்லை என்பதைத் தெளிவாக விளங்கி அவரது பின்னால் நின்று தொழுது சமு தாய, மஹல்லா ஒற்றுமையைப் பாதுகாப்பார்கள்.

அப்படிப்பட்ட இமாம்களைப் பின்பற்றித் தொழக் கூடாது, அந்தத் தொழுகை கூடாது என்று குருட்டு ஃபத்வா கொடுத்துத் தனிப் பள்ளிக் கட்டி சமுதாயத்தை மஹல்லாவைப் பிளவுபடுத்தத் துணியவே மாட்டார்கள். அப்படி குருட்டு ஃபத்வா கொடுத்து சமுதாயத்தைப் பிளவுபடுத்துகிறவர்கள் அற்பமான உலகியல் ஆதாயங்களைக் குறிக்கோளாகக் கொண்டு சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் பெரும் வழிகேடர்கள், நாளை நரகை நிரப்பும் 72 பிரிவினர்களில் அடங்குவர் என்பதைத் தெளிவாக அறிந்து அவர்களின் மயக்கு மொழியிலிருந்து விடுபட்டு சமுதாய ஒற்றுமை காப்பவர்களே நேர்வழி நடப்பவர்கள். அல்லாஹ் பெயரிட்டு (22:78. 41:33) நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டிய ஜமாஅத் துல்முஸ்லிமீனில் போய் இணைந்து பிரியாமல் ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தாக (3:103) செயல்பட விரும்பும் சகோதரர்கள், சகோதரிகள் தங்கள் விருப்பத்தையும், தங்களின் ஆலோசனைகளையும் உடன் அறியத் தருமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

சர்வதேச திகதிக்கோடு ஏக இறைவன் இட்ட அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும்
அமீர், நிந்தாவூர்,இலங்கை
மே மாத தொடர்ச்சி…..
* பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களில் இருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்றுதான் விளங்கி வைத்திருக்கின்றனர். உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளுக்கோசை தேனீக்கள் தமது உணவாக உட்கொள்ளுகின்றன. அவ்வாறு உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து அதன் வயிற்றில் இருந்து வெளிப்படுகின்ற ஒரு கழிவுப் பொருள் தான் தேன். இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றார்கள். ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட குர்ஆன் தேனீக்கள் தேனை உணவாகச் சாப்பிடுகின்றன எனக் கூறுகின்றது.

“நீ சாப்பிடு” என்ற கட்டளையிலிருந்து இதனை நாம் விளங்கலாம். சாப்பிட்ட பிறகு அதன் வயிற்றில் இருந்து தேன் வெளிப்படுகிறது என்றும் கூறுகிறது. (நபியே) உம்முடைய இறைவன் தேனீக்களுக்கு மலைகளிலும், மரங்களிலும் (மனிதர்கள்) கட்டுகின் றவற்றிலும் கூடுகளை அமைத்துக்கொள் என்று அறிவித்தான். பின்னர் நீ அனைத்து வகையான கனி(களின் மலர்)களிலிருந்தும் சாப்பிடு! உன் இறைவன் (காட்டிய) வழிகளில் எளிதாக(ப் பறந்து) செல்(என்றும் அறிவித்தான்) அதன் வயிற்றிலிருந்து பல வண்ணப் பானம் ஒன்று வெளிப்படுகிறது,

அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்தித்துணரும் மக்களுக்கு நிச்சயமாக இதில் சான்று உள்ளது. 16:63, 69, புகாரி: 5684, 5716, 5680, 5681, 5683, 5702, முஸ்லிம்: 4454, இப்னு மாஜா, தஃப்ஸீர் இப்னு கஸீர்:5, பக்.69:75. உதாரணத்திற்காக மேற்குறிப்பிடப்பட்ட சில விசயங்கள் வளர்ந்து வரும் அறிவியலுக்கு சான்றாகத் திகழும் மனித கண்டுபிடிப்புகளாகும். ஆக ஆரம்பமும் முடிவுமல்லாத அல்லாஹ் ஜல்லஜலாலுஹு அண்டசராசரங்கள் அனைத்திலும் அவனது ஆளு மையை நிறுவியுள்ளான். அவ்வப்போது மனிதன் அவற்றைக் கண்டு கொள்கின்றான்.

அவற்றின் தொடரில் நிச்சயமாக அல்லாஹ்விடம் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும். வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்த நாளிலேயே அவனது பதிவேட்டில் (இவ்வாறே இருந்தது) அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இதுவே சீரான மார்க்கமாகும். (9:36) என்று குர்ஆன் பேசுகின்றது. மேற்கூறி பன்னிரண்டு மாதங்களின் நாட்களும், வாரங்களும் பிரபஞ்ச இறை நியதிகளுக்கு ஏற்ப சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களின் துணை கொண்டு கணக்கிடப்படல் வேண்டும். அவனே சூரியனை ஒளி வீசக்கூடியதாகவும், சந்திரனை ஒளியாகவும் ஆக்கி உள்ளான். நீங்கள் (பல) ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (அதற்கான மாதங்களின்) கணக்கையும் அறிந்து கொள்வதற்காக அதற்குப் பல படித்தரங்களை அவன் ஏற் படுத்தி உள்ளான். இவற்றை அல்லாஹ் தகுந்த காரணத்துடன்தான் படைத்தான். (10:5)

சூரியன் மூலம் நாட்களும், சந்திரன் மூலம் மாதங்களும், ஆண்டுகளும் அறியப்படுகின்றன. சிடேரியல் மாதம் என்பது நுஜூமிய்யா எனும் மார்க்கம் தடை செய்த நட்சத்திரக் கணிப்பின் அடிப்படையில் கி.பி. 1582 அளவில் பதிமூன்றாவது கிறிஸ்தவ போப் “கிரகரீ” என்பவரால் வரையறுக்கப்பட்டு இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான கிறிஸ்தவர்களின் கி.மு.- கி.பி. என்ற ஈசவி ஆண்டு கணக்கின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட சூரிய காலண்டர் கணக்கீட்டு முறையானது மூன்றில் ஒன்றாகிய சந்திரன் முற்று முழுதாக விடுபட்டு வருகிறது. காரணம் சூரிய கணக்கிற்கு சந்திரன் தேவையற்றதாக ஆகிவிடு கின்றது. அதற்குச் சுய ஒளி இல்லை என்பதனாலாகும்.

அதன் காரணமாக சூரியன், பூமி ஆகிய இரு கிரகங்கள் மாத்திரமே கணக்கிடுவதற்கு உபயோகப்படுவதனால் துல்லியம் இழந்து நான்கு வருடங் களுக்கு ஒரு முறை ஒரு நாள் கூடுவதும் நூற்றி இரு பத்தி ஏழு வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாள் குறைக்க வேண்டியும் ஏற்படுகிறது. (சூரியனுடனான) இரவையும், பகலையும் அல்லாஹ்வே (துல்லிய) அளவாகக் கணக்கிடுகின்றான். அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் (73:20) என்றே அல்லாஹ்வும் சொல்கின்றான். சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்று கோள்களின் துணை கொண்டு கணக்கிடப்படும் சந்திரக் காலண்டர் கணக்கீடானது பல நூறு ஆயிரம் ஆண்டு களானாலும் கூடுதல், குறைவு ஏற்படுவதில்லை என்றே இன்றைய அறிவியல் உலகம் சான்று கூறுகின்றது. (2:189, 10:5)

எமது தலைப்புடனான நாட்களும், வாரங்களும் மாறுவதற்கான சர்வதேச தேதிக் கோட்டுப் பகுதியில் தினமும் சூரியன் 90டிகிரி கோணத்தில் உச்சியில் வரும்போது குறிப்பிட்ட ஒரு நாளை அளவிட்டு கணக்கிட்டு வருகின்றோம். நாளின் ஆரம்பப் பகுதியாகவும், முடியும் பகுதி யாகவும் கணக்கிடுவதற்கு ஏதுவாக அந்த இடத்தை மக்கள் பெரும்பான்மையாக வசிக்காத கடல் பகுதியாக அமைத்து இறைவன் நமக்கு இலகுவாக்கி உள்ளான். அவ்வாறே உலகத் தேதிக் கோட்டுப் பகுதியில் சூரியன் அதன் உச்சியில் (அதாவது அங்குள்ளவர்களின் தலைக்கு மேல்) நன்பகல் நேரம் 90 டிகிரியில் வரும்போது நமது கிப்லாவான மக்காவில் உள்ள கஅபாவின் பகுதிகள் உள்ளூர் நேரப்படி 3.00 மணி அதிகாலை நேர அளவில் அதாவது தகஜ்ஜத் நேரத்தில் இருந்து ஃபஜ்ர் நேரத்தை நெருங்கி இருக்கும் அளவுக்கு பொருத்தமாக

இறைவன் அமைத் துள்ளான். எனவே பரிசுத்த குர்ஆனின் போதனைகளின் படியும் நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் படியும் முழு உலக மக்களும் நமது கிப்லாவாகிய கஅபாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து குறிப்பிட்ட நாளின் ஆரம்பத்தைத் தினமும் ஃபஜ்ரில் இருந்து ஆரம்பித்து குர்ஆன் கூறுவது போல் நாம் மற்ற மனிதர்களின் சாட்சியாளர்களாக இருப்பதாகவும் நபி(ஸல்) அவர்கள் நமக்கு சாட்சியாளராக திகழ வேண்டும் (2:143) என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

மக்கள் பெரும்பான்மையாக வசிக்காத மேற்கத்திய நாடுகளின் முடியும் பகுதிகளான அமெரிக்கன் சமோவா தீவுகளையும் கிழக்கத்தைய நாடுகளின் ஆரம்பப் பகுதிகளான நியூசிலாந்து ஆஸ்திரேலியா பகுதியை அண்டிய ஃபிஜி தீவுகளையும் பிரிக்கும்படியான பசிபிக் பெருங்கடலில் இயற்கையாகவே இறைவனால் போடப்பட்டுள்ள சர்வதேச தேதிக் கோட்டை அண்மைக் காலத்து மனிதன் தான் ஆய்வு செய்து கண்டுபிடித்தான் என்பது உண்மைதான், என்றாலும் அதற்கும் பலநூறு நூற்றாண்டுகளுக்கு முன்னர் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட மன்னர் துல்கர்னைன் இஸ்க்கந்தர் அவ்வழியே சென்றதாக குர்ஆன் கூறுகிறது
அத்துடன் அங்கு தேதியும், வாரமும் முஸ்லிம்களின் ஜுமுஆ தொழுகையும் மாறுவது அல்லாஹ் இந்த மனித சமூகத்திற்கு அளித்துள்ள மாபெரும் அத்தாட்சியாகும். இங்கு மன்னர் துல்கர்னைன் பற்றி குர்ஆன் பேசும்போது, எனவே அவர்(பூமியில்) ஒரு வழியைப் பின்பற்றிச் சென்றார். (18:85) என்று இறைவன் தெரிவிக்கின்றான். இங்கு “வழி” என்பதைக் குறிக்க “சபப்” எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.

* இது (குறிப்பிட்ட) நிலையத்தைக் குறிக்கும் என இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும்,
* கிழக்கிற்கும், மேற்கிற்கும் இடையிலான (சர்வதேச தேதிக் கோட்டு) பாதையையும் நிலையத்தையும் குறிக்கும் என்று முஜாகித்(ரஹ்) அவர்களும்,
* பூமியிலுள்ள வசிப்பிடங்களையும் (சர்வதேச திகதிக் கோட்டின்) அடையாளச் சின்னங்களையும் தேடிச் சென்றார் என்று கத்தாதா(ரஹ்) அவர்களும், ஸ (சர்வதேச தேதிக் கோட்டின்) அடையாளம் என்று மத்தர்(ரஹ்) அவர்களும்,
* முன்பு இருந்த (சர்வதேச தேதிக் கோட் டின்) சின்னங்கள் மற்றும் சுவடுகள் என்று சயித்பின் ஜுபைர்(ரஹ்) அவர்களும் பொருள் கூறி உள்ளார்கள். தஃப்ஸீர் இப்னு கஸீர் தமிழ் மொழி பெயர்ப்பு பாகம் : 5, பக்கம் : 510.

ஆக 1400 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த நபி தோழர் இப்னு அப்பாஸ்(ரழி) உட்பட ஏனைய அறிஞர்களும் தடய விபரமில்லாமல் இவ்வாறு தெளிவாக சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. நிச்சய மாக நாம் (துல்கர்னைன் மன்னராகிய) அவருக்குப் பூமியில் (முழுவதும் ஆட்சி, அதிகாரம் செய்ய) இடம் அளித்திருந்தோம். மேலும் அவருக்கு ஒவ் வொரு பொருட்களையும்(அதற்கான இடங்களையும்) அடைவதற்கான வழியை நாம் வழங்கி இருந்தோம். (18:84)
அவர் சூரியன் மறையும் இடத்தை அடைந்த போது அது சேற்று நீரில் மறைந்து கொண்டிருப்பதைக் கண்டார் (18:86) இறுதியில் அவர் சூரியன் உதிக்கும் இடத்தை அடைந்தபோது ஒரு சமூகத்தார் மீது அது உதிப்பதைக் கண்டார் (18:90) அவர் சூரியன் உதயமாகும் இடங்களையும், அஸ்தமிக்கும் இடங்களையும் சென்றடைந்ததால் “துல்கர்னைன்” (இரு முனைகள் உடையவர், எனும் பெயர் பெற்றார். தப்ஸீர் தபரி, தஃப்ஸீர் இப்னு கஸீர்:5, பக்கம்: 507

உலக முஸ்லீம்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தித் தந்த கிப்லாவிற்கு முன்னர் சூரியன் உதிக்கும் முதல் பகுதியாகவும் கிப்லாவிற்குப் பின் சூரியன் மறையும் இறுதிப் பகுதியாகவும், அவ்விரு பகுதிகளும் சந்திக்கும் இடமாகவும் இந்த சர்வதேச தேதிக் கோட்டுப் பகுதிதான் உள்ளது. அந்த இடத்தைக் குறிப்பிட்டு இறைநெறிநூலான குர்ஆன், இரண்டு கிழக்குக ளின், இரண்டு மேற்குகளின் இறைவன் அல்லாஹ் தான் (55:17) என்று கூறுகின்றது.

மேற்குறிப்பிட்ட இந்த இறை வசனம் எவ்வாறு அந்த இடத்திற்கு பொருந்தும்? என்ற கேள்வி எழுவது இயற்கையே. பூமியின் நிலவியல் கோட்பாட்டின் அடிப்படையில் கிழக்கு மேற்கு என்ற பெயர்களில் ஒரே ஒரு திசை இருப்பதாகத்தான் நாம் படித்துள்ளோம். இருப்பினும் இரு கிழக்குகளுக்கும், இரு மேற்கு களுக்கும் இறைவன் அல்லாஹ்தான்(ரப்பு) என்று குர்ஆன் கூறுகிறது. பூமியில் ஏதேனும் ஒரு இடத்தில் இரண்டு கிழக்குத் திசைகளும் இரண்டு மேற்கு திசைகளும் சங்கமித்தால்தான் மேற்படி இறை வசனத்திற்கு நேரடிப் பொருள் இருப்பதாக அமையும். இதற்கான விடை சர்வதேச தேதிக் கோட்டுப் பகுதியில் மாத்திரம்தான் உள்ளது.

அதாவது அந்த சர்வதேசக் கோட்டுப் பகுதியின் அருகாமையில் வாழும் மக்களில் ஒரு சாரார் ஒரு கிழமையிலும் மற்றொரு சாரார் மற்றொரு கிழமையிலும் இருப்பர். அதாவது ஒரு சாராருக்கு வியாழக்கிழமைக்குரிய சூரியன் கிழக்கில் உதிப்பதையும், மற்றொரு சாராருக்கு வெள்ளிக்கிழமைக்குரிய சூரியன் அதே கிழக்குத் திசையில் உதிப்பதையும் காணலாம். அங்குதான் வெள்ளிக்கிழமைக்குரிய ஜுமுஆ தொழுகையும், வியாழக்கிழமைக்குரிய ளுஹர் தொழுகையும் அருகருகே நடைபெறுகின்றன.

அந்த இரு நாட்டவரும் ஒரே சூரியனுக்குக் கீழ் அருகருகே வசித்தாலும் இரண்டு வெவ்வேறு நாட் களுக்குரிய சூரியனின் உதயத்தையும், மறைவையும் அடைந்தவர்களாவர். இதனையே ரப்புல் மஷ்ரிக் கைனி வரப்புல் மஃரிபைன் (55:17) என்று அல்லாஹ் கிலாகித்துக் கூறுகின்றான். உலக முஸ்லிம்கள் தொழுகைக்காக மக்காவி லுள்ள கஅபாவின் பக்கம் (கிப்லாவிற்காக) முகம் திருப்புங்கள். (2:149,143,144,145, 10:87) என்ற அல்லாஹ்வின் ஆணைக்கு ஏற்ப மக்காவுக்கு கிழக்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தங்களின் தொழுகைக்காக கிப்லாவின் திசையான மேற்கு நோக்கித் தொழுகிறார்கள்.

அதுபோல மக்காவுக்கு மேற்கில் அமைந்துள்ள நாடுகளிலுள்ள முஸ்லிம்கள் தொழுகைக்காக தங்களது கிப்லாவின் திசையாக கிழக்குத் திசையை நோக்கித் தொழுகிறார்கள். கிப்லாவை மையப்படுத்தி இவ்வாறு முழு உலக முஸ்லிம்களும் அணி அணியாக வரிசையாக நிற்பதைக் கவனத்தில் கொண்டால் அவ்வாறு மேற்கு நோக்கித் தொழுபவர்களின் முதுகுப் பகுதி யும், கிழக்கு நோக்கித் தொழுபவர்களின் முதுகுப் பகுதியும் சங்கமிக்கும் மிகப் பொருத்தமான இடமாக இந்த உலகத் தேதிக் கோட்டுப் பகுதியே அமைந்துள்ளது. உலகின் வேறு எப்பாகத்திலும் இவ்வாறு பொருத்தமான இடம் அமையப் பெறவில்லை.

இவ்விடம் ஏக இறைவனால் தேர்வு செய்யப்பட்ட இடமேயாகும். சர்வதேச தேதிக் கோட்டிற்காக, அளவற்ற அருளாளனாகிய அல்லாஹ்வின் அழகிய திருநாமங்களில் ஒன்று ஹாதி வழிகாட்டுபவன் 22:54, 25:31 மற்றும் ஒன்று நஸீர், உதவுபவன் 2:107, 120, 4:75, 123,173, 8:40, 9:116 22:78, 29:22, 33:17, 42:31, 25:31 எனும் சிறப்புத் திருநாமத்திற்கு அமைவாக பெரு வெடிப்புக் கொள்கையை ஏக இறைவன் ஏற்படுத்தினான். அவனது வழிகாட்டல் அகத்தூண்டல் உதவி கொண்டு மனிதன் அதனைக் கண்டுபிடித்தான். வானங்களுக்கும், பூமிக்கும் இடையே ஈர்ப்பு சக்தியை இறைவன் ஏற்படுத்தினான். மனிதன் அதனை கண்டு பிடித்தான்.

விண்வெளிப் பயணம் சாத்தியமானது என்று இறைவன் சொன்னான். அதனை மனிதன் கண்டுபிடித்தான். பூமியில் இருப்பது போலவே வானத்திலும் ஏராளமான பாதைகள் இருப்பதாக இறைவன் சொன்னான். மனிதன் அதனை கண்டுபிடித்தான். விண்வெளிப் பயணத் தில் இதயம் சுருங்கும் என்று இறைவன் சொன் னான். அதனை மனிதன் கண்டுபிடித்தான். ஓசோன் மண்டலம் உண்டு என்று இறைவன் சொன்னான், மனிதன் அதனைக் கண்டுபிடித்தான். கண்ணால் காணமுடியாத காந்தவிசை தூண்கள் விண்ணில் உள்ளதாக இறைவன் சொன்னான். அதனை மனிதன் கண்டுபிடித்தான். நீரையும், ஒளி, ஒலி அலை களையும் திருப்பித்தரும் வானம் என்று இறைவன் சொன்னான்; அதனை மனிதன் கண்டுபிடித்தான்.

பூமி உருண்டை வடிவானது என்று இறைவன் சொன்னான் அதனை மனிதன் கண்டு பிடித்தான். பூமிக்கு உதாரணம் தொட்டில் போன்றது என்று இறைவன் சொன்னான். மனிதன் அதனைக் கண்டு பிடித்தான். இரும்பு விண்ணில் இருந்தே வந்தது என்று இறைவன் சொன்னான். அதனை மனிதன் கண்டுபிடித்தான். பறவைகள் பூமியில் மோதாதற்கு தகுந்த காரணத்தை இறைவன் சொன்னான்; அந்தக் காரணத்தை மனிதன் கண்டுபிடித்தான். மனிதர்க ளின் எடைக்கேற்ப பூமியின் எடை குறையும் என்று இறைவன் சொன்னான். அதனை மனிதன் கண்டு பிடித்தான்.

நவீன வாகனங்கள் பற்றி இறைவன் சொன்னான். அவற்றை மனிதன் கண்டுபிடித்தான். மலைகளின் உயரம் அளவுக்கு மனிதன் மண்ணுக் குள் போக முடியாது என்று அல்லாஹ் சொல்லி விட்டான். இன்று வரை மனிதனால் செல்ல முடிய வில்லை. மலைகளை முளைகளாக நிறுவி உள்ளதாக இறைவன் சொன்னான். மனிதன் அதனைக் கண்டு பிடித்தான். பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதன் இயற்கையாக வாழமுடியாது என்று இறைவன் சொன்னான். அது உண்மைதான் என்பதனை மனிதன் கண்டு பிடித்தான். பூமியின் நிலப்பரப்பு சிறிது சிறிதாக குறைந்து வருவதாக இறைவன் சொன்னான். மனிதன் அதனைக் கண்டுபிடித்தான்.

இரண்டு கடல்களுக்கிடையே கண்ணுக்குத் தெரி யாத தடுப்பு இருப்பதாக இறைவன் சொன்னான். அதனை மனிதன் கண்டுபிடித்தான். படிப்பினைக்காக ஃபிர்அவ்னின் சடலத்தை பாது காத்தாக இறைவன் சொன்னான். மனிதன் அதனைக் கண்டுபிடித்தான். படிப்பினைக்காக கப்பலை ஜூதி மாலையில் நிலைகொள்ளச் செய்த தாக இறைவன் சொன்னான். மனிதன் அதனைக் கண்டுபிடித்தான். விந்தின் பிறப்பிடம் எதுவென்று இறைவன் சொன்னான். மனிதன் அதனைக் கண்டு பிடித்தான். ஆணுடைய உயிர் அணுவும், பெண்ணுடைய சினை முட்டையும் இரண்டறக் கலந்தே குழந்தை “கலப்பு விந்தில்” உருவாகிறது என்று இறைவன் சொன்னான். மனிதன் அதனைக் கண்டுபிடித் தான். கருவில் வளரும் குழந்தை நான்கு மாதங்கள் கழித்தே முழு மனித உருவம் பெறும் என்று இறை வன் சொன்னான்.

மனிதன் அதனைக் கண்டுபிடித்தான். ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து மனிதனைப் படைத்ததாக இறைவன் சொன்னான். இன்று மனிதன் அதனைக் கண்டு பிடித்தான். மனித உடலில் வேதனையை உணரும் பகுதி தோல் என்று இறைவன் சொன்னான். அதனை மனிதன் கண்டுபிடித்தான். விரல்களின் ரேகைகளே மனிதனின் முக்கிய தடயம் என்று இறைவன் சொன்னான். அதனை மனிதன் கண்டுபிடித்தான். பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என் பதை இறைவன் சொன்னான். அதனை மனிதன் கண்டுபிடித்தான். வானங்களையும், பூமியையும் படைத்த நாளி லிருந்தே ஒரு வருடத்திற்கு பன்னிரண்டு மாதங்கள் என்று இறைவன் எழுதிவிட்டான். அதுவே மிகப் பொருத்தமானது என்பதாக மனிதன் தேர்ந்தெடுத்தான்.

அந்த பன்னிரண்டு மாதங்களின் நாட்களைக் கணக்கிடுவதற்குப் பொருத்தமான இடத்தில் இறைவன் கீறப்படாத சர்வதேச தேதிக் கோடாக அவனது அடையாளச் சின்னங்களை பூமியில் வைத்தான். அவ்வழியே அவனது ஒரு அடியார் சென்ற தாகவும் அறிவித்தான். ஓரிறைப் பரப்புரை செய்து கொண்டிருந்த போது நபி(ஸல்) அவர்களிடம் வந்த மக்கா இறை மறுப்பாளர்களான குறைஷியர்கள் யூதர்கள் கேட்கச் சொன்ன சில கேள்விகளில் கிழக்கு மேற்காக இந்த பூமி முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அந்த மனிதர் தொடர்பான தகவல் என்ன? என்று கேட்டபோது அவ்விசயத்தை இறை வன் வஹியாக அறிவித்தது மாத்திரம் அல்ல அவ் விசயத்தை நபி(ஸல்) அவர்களுக்கு இறைவன் ஒரு சந்தர்ப்பத்தில் எடுத்துக் காண்பித்தான். அவ்விசயத் தில் நின்றவாறு கிழக்கு முழுவதையும், மேற்கு முழு வதையும் நபியவர்கள் பார்த்தார்கள்.

சர்வதேச தேதிக் கோடாகிய அப்பிரதேசத்தில் நின்றால் மாத்திரமே கிழக்கு முழுவதையும், மேற்கு முழுவதையும் பார்க்க முடியும். (சுருக்கம்) முஸ்னத் அஹ்மத், தஃப்ஸீர் இப்னு கஸீர் : 5, பக்கம்:370-543. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்; (ஒருமுறை) அல்லாஹ் பூமி முழுவதையும் எனக்குக் காட்டினான். அப்போது பூமியின் கிழக்குப் பகுதிகளையும், மேற்குப் பகுதிகளையும் நான் பார்த்தேன். என் அருகே காட்டப்பட்ட பகுதிகள் வரை என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும் (சுருக்கம்) என்று சொன்னார்கள். முஸ்னத் அஹ்மத் தஃப்ஸீர் இப்னு கஸீர்:3, பக்கம்:472. நபி(ஸல்) அவர் கள் குறிப்பிட்டது போன்றே சர்வதேச தேதிக் கோட்டிற்கு அருகாமையில் உள்ள கிரிபாட்டி தீவுகள் சிலவற்றில் இப்போது முஸ்லிம்கள் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதே. ஆக சர்வதேச தேதிக்கோடு குறித்து யஃஜூஜ், மஃஜூஜ் காலத்தில் நடந்த சம்பவத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்னர் இறைவன் அறிவித்தான்.

மிகப் பொருத்தமான அவ்விடத்தையே சர்வதேச தேதிக் கோடாக மனிதன் ஆய்வு செய்து கண்டு பிடித்தான். இப்போது நடைமுறையில் உள்ள சர்வதேச தேதிக் கோட்டிற்கு இறைநூலாகிய பரிசுத்த குர்ஆன் மூலமும், நபிமொழியின் மூலமும் இவ்வளவு ஆணித்தரமான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்ற முஸ்லிம்கள் சர்வதேச தேதிக்கோடு ஏக இறைவன் இட்ட அடையாளச் சின்னங்களில் ஒன்று என்று உரிமை கோருவதும் அவ்விசயத்தை மற்றவர்களுக்கு சான்றுகளுடன் எடுத்துச் செல்வதும் மிக மிகப் பொருத்தமானதும் காலத்தின் அவசியமானதும் ஆகும்.

இவ்வளவு ஆணித்தரமான ஆதாரங்கள் கிடைக்கப் பெற்ற முஸ்லிம்கள் சர்வதேச தேதிக் கோடு ஏக இறைவன் இட்ட அடையாளச் சின்னங்களில் ஒன்று என்று உரிமை கோருவதும் அவ்விசயத்தை மற்றவர்களுக்கு ஆதாரத்துடன் எடுத்துச் சொல்வது மிகமிகப் பொருத்தமானதே. இறை நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களை அவமதிக்காதீர்கள் (5:2) எவர் அல்லாஹ்வின் (அடையாளச்) சின்னங்களை மேன்மைப்படுத்துகிறாரோ நிச்சயமாக அது(அவரது) உள்ளச்சத்தால் (ஏற்பட்டது) ஆகும்.

உலக குடும்பவியலில் புரட்சி தந்த முஸ்லிம் திருமணம் – தலாக்
டாக்டர் ஏ.பீ.முகமது அலி, பி.எச்.டி.ஐ.பீ.எஸ்.(ஓ)
அரேபிய துணைக் கண்டத்தில் முழுமை பெற்ற இஸ்லாம் தோன்றுவதற்கு முன்பு இருண்ட காலம் என்பது அனைவரும் அறிந்ததே. அது குடும்பவிய லில் நிறையவே பாதிப்பை உண்டாக்கியிருந்தது. அரேபியர்கள் பலதார மணங்களில் ஈடுபட்டிருந்தனர். பெண்களை ஒரு அடிமைப் பொருளாகவே பாவித்தனர். அவர்களுக்கென உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தது. ஆண்களை அண்டி வாழும் அடிமை களாகக் கருதினர். சொத்து, சுகத்தில் பங்கு கேட்கும் உரிமை இல்லை. பெண் குழந்தை பிறப்பதே பாவம் என்று உயிருடன் பாவி நெஞ்சம் பதைபதைக்க, பிஞ்சுக் குழந்தை கதறக் கதறப் புதைக்கும் அவலம் அங்கே நடந்தது என்பதினை மக்கா சென்றவர்கள் அந்த அடையாளத்தினைக் கண்டிருப்பீர்கள்.

அந்த நிலையினை தலைகீழாக மாற்றியமைத்த பெருமை புனித குர்ஆனில் நபி(ஸல்) அவர்களுக்கு அன்னிசா அத்தியாயம் நான்கினை வஹியாக எல்லாம் வல்ல அல்லாஹ் இறக்கியது மூலம் பெற்றுத் தந்தது.ஆண்களுக்கு நிகரானவர் பெண் என்ற பெருமை சேர்த்தது அல்குர்ஆன். திருமண ஒப்பந்தம் ஒரு சடங்கல்ல, மாறாக அது ஒரு சட்டம் என்றது ஷரிஅத் சட்டம்; திருமணம் ஒரு சிவில் காண்ட்ராக்ட் ஆகும். திருமணத்தினைப் பெற்றோர் ஒவ்வொரு தரப்பிலும் இரண்டு சாட்சிகள், வலியாக அமைந்துள்ள பெரிய மனிதர் மற்றும் இமாம், ஜமாஅத்து தலைவர் ஆகியோரோடு மண மக்கள் கையயாப்பம் மகர் தொகை ஆகியவை கண்டிப்பாக அமைந்துள்ளது தான் நிக்காஹ் பதிவேடு. இது போன்ற அமைப்பு வேறு மதத்திலோ மார்க்கத்திலோ இருக்கின்றதா என்றால் இல்லையென்றே சொல்லலாம்.

வரதட்சணைக் கொடுமை அறுத்தெறிந்து மணமகளை மணமகன் மகர் கொடுத்து மணம் முடித்து அந்தப் பெண்ணின் தன்மானத்தினை உயர்த்தியவன் எல்லாம் வல்ல அல்லாஹ். திருமண ஒப்பந்தம் ஆணையும், பெண்ணையும் கால்,மனம் போன தறிகெட்ட போக்கில் வாழ விடாது, சமுதாயத்தில் கற்புடன் மாசு படாத தங்கம் போல வாழ்க்கையினை அமைத்துக் கொள்ள வழி வகுத்தது ஷரிஅத் சட்டம். இஸ்லாமிய திருமணம் 1935-ல் தெளிவாக கூறப்பட்டு இஸ்லாமிய திருமணம் புனிதமானது. ஆணுக் கும், பெண்ணுக்கும் உடல் உறவிற்கு முன்பு செய்யப்படும் சிவில் கண்டராக்ட் என்று சொல்லுகின்றது.

ஆகவே திருமண ஒப்பந்தம் ஆணும், பெண்ணும் மனமொத்த உடலுறவில் ஈடுபடவும், குழந்தைகள் பெற்றுக் கொள்ளவும், சமுதாயத்தில் கண்ணியத் துடன் திறம்பட வாழவும் வகை செய்தது அல்குர் ஆன். ஒவ்வொரு சுய சிந்தனை கொண்ட ஆணும், பெண்ணும் திருமண ஒப்பந்தம் இஸ்லாமிய மார்க் கத்தில் கட்டாயம். ஆனால் புத்தி சுவாதீனமில்லாத வர்களுக்கு அது பொருந்தாது. இஸ்லாத்தில் அபிலாசைகளை அடக்கிக் கொண்டு திருமணமாகா மல் சாமியாராக இருந்த காலம் கடத்தி அதன் மூலம் அபிலாசைகளுக்கு அடிமையாகி தவறான கற்பொழுக்கமில்லாத வாழ்விற்கு இஸ்லாத்தில் வழி யில்லை. காரணம் ஒரு ஆணையோ அல்லது ஒரு பெண்ணையோ ஷைத்தான் ஒரு விதத்தில் வழிக் கேட்டுக்கு ஆளாக்கி விடுவானவல்லவா?

அது சரி இதற்கு என்ன இப்போது வந்தது என்று நீங்கள் கேட்கலாம். அதுதான் உச்சநீதிமன்றத்தில் முத்தலாக்கு முறை பற்றி அறிக்கை சமர்ப்பிக்க நீதி மன்றம் மத்திய அரசை ஆணை பிறப்பித்துள்ளதால் அது விவாதப் பொருளாகி விட்டது. சிலர் புரிந்து கொள்ளாமல் அதனையே சிவில் சட்டம் வேண்டுமா அல்லது வேண்டாமா என்ற வி­மமான விவாதத்தினையும் சேர்த்துக் கொண்டனர். முத்தலாக் கின் ஆரம்பமே சில இளைஞர்கள் தொலைபேசி மூலமும், மின் அஞ்சல் மூலமும், கைபேசி தகவல் மூலமும், தபால் மூலமும் தலாக்கை அனுப்பி விடுகிறார்கள்.

ஆடு மாடுகளுக்குத் தண்ணீர் தெளித்து அனுப்புவது போல; சில இமாம்கள் அதனை செல் லும் என்றும் தீர்ப்பு வழங்கி விடுகிறார்கள். சிலர் மாப்பிள்ளை பக்கம் வெயிட் அதிகமானால் அந்தப் பக்கம் சாய்ந்து ஒருதலைபட்சமாக தீர்ப்பு வழங்கி, பெண்களையும், குழந்தைகளையும் அனாதையாக்கி விடுகிறார்கள் என்பதனை மறக்கவோ, மறைக்கவோ முடியாதல்லவா? இன்று எந்தக் குடும்ப வழக்காடு மன்றங்களுக்கும் செல்லுங்கள். அங்கே நியாயத்திற்காக போரா டும் 50சதவீத பெண்கள் முக்காடு போட்ட முஸ்லிம் பெண்களாக இருக்கின்றார்கள். அந்தக் குறைகள் போக்கி எடுக்க வேண்டிய கடமை முஸ்லிம் சமுதாயத்தினைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் உண்டல்லவா?

இஸ்லாத்தில் எந்த இடத்திலும் ஒரே நேரத்தில் மூச்சுப் பிடித்துக் கொண்டு மூன்று தலாக் சொல் லும் முறை இடம் பெறவில்லை. அப்படி சாட்சிகளுடன் சொல்லப்படும் முத்தலாக்கே ஒரு தலாக் என்று தான் கருதப்படும். விவாகரத்துப் பெரும் ஒரு பெண் 3 மாதவிலக்கு காலம் வரை காத்திருக்க வேண்டும். ஒரு பெண் இரண்டு முறை தலாக் சொல்லப்பட்டு வேறு திருமணம் செய்யவில்லையயன்றால் அவள் தன் கணவருடன் சேர்ந்து வாழ வழியுண்டு. முதல் தடவை சாட்சிகள் சகிதம் தலாக் சொன்ன பின்பு பெரியோர், பெற்றோர் சமரசத்திற்குப் பின்பு தீர்வு காணவில்லையயன்றால் இரண்டாம் தலாக் சாட்சிகள் முன்னிலையில் தலாக் சொல்லலாம்.

அதன் பிறகும் சமரச தீர்வு காணவில்லையயன்றால் மூன்றா வது தலாக் சொல்லலாம். அது சரி மூன்றாவது தலாக் செய்த பின்பு கணவனும், மனைவியும் சேர்ந்து வாழ வழிவகை உள்ளதா? என்று கேட்டால் இருக்கின்றது. அது எவ் வாறென்றால் மணவிலக்கு பெற்ற பெண் வேறு ஒரு வருடன் திருமணம் ஒப்பந்தம் செய்து, அவருடன் தாம்பத்திய உறவு கொண்டு, அதன் பின்பு மூன்று முறை நான் மேலே சொன்ன முறைப்படி மாத விலக்கு முடியும் வரைக் காத்திருந்து அவரை தலாக் செய்து விட்டு முன்னாள் கணவனுடன் வாழ்க்கை நடத்தலாம்.

இது ஒரு கடுமையான சட்டமாக உங்களுக்குத் தெரியலாம். ஆனால் இறைவனால் வழங்கப்பட்ட ஷரிஅத் சட்டம் இப்படி கடுமை யாக்கியதிற்குக் காரணமே அவசர கோலத்தில் அள்ளி முடிந்து முத்தலாக்கு சொல்லி குழந்தைகள் போல அம்மா அப்பா விளையாட்டு, விளையாட்டுக்குக் கூட செய்யக் கூடாது என்பதிற்குத்தானே ஒழிய மணமக்களை வஞ்சிக்க அல்ல என்பதினை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தில் தலாக் சொல்லப்பட்ட பெண்கள் அபலையாக உள்ளனர் என்று மாற்று மதத்தினர் நினைக்கின்றனர். ஆனால் ஷரிஅத் சட்டத்தில் தலாக் சொல்லப்பட்டப் பெண்ணை அவள் மானக்கேடானவள் என்று அறியாதவரை அவளை வீட்டை விட்டு வெளியேற்ற வேண்டாம் என்றும் கூறுகின்றது. அல்குர்ஆன் (65:1)

தலாக்-விவாகப் பிரிவினையில், நபியே! விசுவாசிகளை நோக்கி நீர் கூறும் (உங்கள் மனைவியாகிய) பெண்களைத் தலாக் (விவாகப் பிரிவினை விரும்பினால்) கூற விரும்பினால் அவர்களுடைய இத்தாவின்(கரு அறியக் காத்திருக்கும் காலத்தின்) ஆரம்பத்தில் கூறி இத்தாவை கணக்கிட்டு வாருங்கள். (இவ்விசயத் தில்) உங்கள் இறைவன் அல்லாஹ்விற்கு நீங்கள் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். (நீங்கள் தலாக் கூறிய) பெண்கள் யாதொரு மானக்கேடான செயலினை செய்தாலன்றி, அவர்களை அவர்கள் இருக்கும் (உங்கள்) வீட்டிலிருந்து (இத்தாவுடைய காலம் முடிவு பெறுவதற்கு முன்னர்) வெளியேற்றி விட வேண்டாம். இவைதாம் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகள். எவர்கள் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறுகின்றார்களோ, அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனர்.
(இதிலுள்ள நன்மையை நீங்கள் சேர்ந்து வாழ, உங்களிடையே சமாதானத்திற்குரிய) யாதொரு வழியை அல்லாஹ் ஏற்படுத்தி விடவும் கூடும் என்பதினை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்குர்ஆன் இவ்வாறு கூறும்போது, இதற்கு நேர்மாறான நேரில் அறிந்த ஒரு செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக் கின்றேன். சென்னையில் வசித்த ஒரு இளம் வயது இளைஞர் சமீபத்தில் அகால மரணம் அடைந்து விட்டார்.

நானும் அந்த ஜனாஸா தொழுகைக்கும், அடக்கம் செய்வதற்கும் சென்றேன். இறந்தவருக்கு ஒரு ஒன்பது மாத கர்ப்பிணி மனைவி இருந்தாள். அந்த இளைஞர் மையத்து அடக்கம் செய்து விட்டு திரும்பிய பின்பு அந்தி மயங்கிய வேளையில் அந்த இளைஞனின் தாயார் அந்த கர்ப்பிணி மனைவி யினை வீட்டை விட்டு இரவே ஊருக்குச் செல் என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக முயன்றாள். நல்ல வேலையாக இறந்த பையனுக்கு உறவினர் தலையிட்டு அந்தப் பெண்ணுக்கு கொஞ்சம் பணம் வாங்கி ஊருக்கு இரவே அனுப்பி வைத்தார் என அறிந்து என்னைப் போல பலர் பதைத்தனர்.

இந்த சம்பவம் எதனைக் காட்டுகின் றது தோழர்களே, ஷரிஅத் சட்டத்திற்கு புறம்பானதாக தெரியவில்லையா உங்களுக்கு? பெண்களுக்கு பெண்களாலேயே கொடுமைகள் இன்னும் சமுதா யத்தில் நடந்து கொண்டுதான் உள்ளதாக நீங்கள் கருதவில்லையா? ஆண்களுக்கு உள்ள உரிமை போல பெண்க ளுக்கும் விவாகரத்து கொடுக்கும் உரிமை உள்ளது. அதனை குலா என்று அழைக்கின்றார்கள்.

ஒரு பெண் குலா கொடுக்க வெண்டுமென்றால் சாட்சிகள் முன்னிலையில் காஜியிடம் முறையிட வேண்டும். முஸ்லிம் விவாகரத்து சட்டம் 1939படி ஒரு பெண் தன் கணவன் கொடுமைப்படுத்துகிறான் என்றோ, மானத்தை காக்கும் உடை வயிற்றை நிரப்பும் உணவு போன்ற அத்தியாவசிய பொருள்களை செய்யவில்லையயன்றாலோ, ஆண்மையற்றவன் என்று நினைத்தாலோ குலா கொடுக்கலாம் என்று சொல்கிறது. ஒருவன் காஜியினையே ஏமாற்றி குலா பெற்று விவாகரத்து பெற்று மறுமணம் செய்திருக்கின்றான் என்ற வழக்கு 28.10.2016 அன்று சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்றுள்ளது என்பதினை உங்களுடன் பகிர்ந்து கொள்வது தவறில்லை என நினைக்கின்றேன்.

28.08.1987 அன்று செய்யாறினைச் சார்ந்த முகமது யூசுப் என்ற இளைஞருக்கும் பாடியினைச் சார்ந்த பசரியா என்ற பெண்ணிற்கும் பாடி ஜுமுஆ மஸ்ஜிதில் மணம் முடிக்கப் பெற்றது. யூசுப் மாட்டுக்கறி வியாபாரம் செய்து வந்தார். அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. யூசுப் பின் வியாபாரம் நஷ்டமாக நடந்தது. மனைவி பசரியா தன் தந்தையிடம் சென்று ரூ. ஒரு லட்சம் வாங்கி வந்து வியாபாரத்தினைப் பெருக்கச் சொன்னார். அதன் பின்னரும் வியாபாரம் நஷ்டத்தில் நடந்தது. யூசுப் தன் மனைவியிடம் நீ உன் தகப் பனார் வீட்டில் சில காலம் இரு. நான் செய்யார் சென்று வியாபாரத்திற்காக பணம் புரட்டி வருகிறேன் என்று புருடா விட்டு சென்று விட்டார். பசரியாவும் கண்டதே கணவன், அவன் சொன்னதே வேதவாக்கு என்று கருதி தன் இரண்டு பெண் குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ஆனால் போன மச்சான் வருவான் பூமணத் தோடு என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த பசரியாவிற்கு அடிவயிற்றில் புளியைக் கரைத்தது. ஏனென்றால் யூசுப் வரவில்லை. விசாரித்தபோது தான் தெரிந்தது யூசுப் வேறு பெண்ணுடன் புது மாப்பிள்ளையாகி குடும்பம் நடத்துவது. கத்தினாள், கதறினாள் என்ன செய்ய பாவி பெண் நெஞ்சம். வழக்கு மன்றத்தினை நாடினாள்.

அப்போது தான் தெரிந்தது யூசுப், பசரியா குலா கொடுத்தது போல ஒரு போலிக் கடிதத்தினை சென்னை தலைமை ஹாஜியிடம் கொடுத்து விவாகரத்து பெற்று மறுமணம் செய்திருக்கின்றார் என்று. இப்போது சொல்லுங்கள் இது யார் குற்றம் என்று? தலைமை ஹாஜி, பெண் மற்றும் அவளுடைய பெற்றோர், சாட்சிகளை அழைத்துவரச் சொல்லி விசாரித்து விட்டுத்தானே குலா கொடுத்திருக்க வேண்டும். இது போன்ற மனிதர்கள் செய்கின்ற தவறுகளால் இன்று ஷரிஅத் சட்டமே சரியில்லை என்று மாற்று மதத்தினரால் பேசக்கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது அல்லவா? நேற்று கூட (29.10.2016) இரவு நடந்த தொலைக்காட்சி பேட்டியில் நேற்றுவரை முஸ்லிமாக இருந்து இந்து நடிகரை மணந்த இட்லி நடிகை ஒருவர் ­ரிஅத் சட்டத்தில் உள்ள தலாக் முறை சரியல்ல என்றும், சிவில் சட்டம் வேண்டும் என்று கூறும் அளவிற்கு யார் பொறுப்பு? இது போன்ற சிலர் செய்யும் தவறுகளால் தலாக் பிரச்சனை பூதாகரமாக பார்க்கப்படுகிறது என்றால் சரியா சகோதரர்களே!

இஸ்லாத்தில் தலாக் செய்யும் முறை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. ஆரம்பம் : கணவன் மனைவி முன்பு ஒருமுறை தலாக் சாட்சிகள் முன்னிலையில் சொல்லுவது. ரசூல்(ஸல்) அவர்கள் ஒருவருடைய மனைவியை கால இடைவெளி விட்டு விவாகரத்து செய்யுங்கள் என்று கூறினார்கள். அது தெளிவாக அல்குர்ஆன் 65:1 அத்தியாயத்தில் கூறுவதனை மேலே கண்டோம்.

2. சமரசம் : கணவனும், மனைவியும் இரு வீட்டார் முன்னிலையில் சமரசம் செய்ய முயலுவது. இரு தரப்பினருக்கும் சமரசம் ஏற்படவில்லையென்றால் பொதுவான நீதிமான்களைக் கொண்டு சமரச முயற்சியில் ஈடுபடுவது (அல்குர்ஆன் அந்நிசா சூரா 4:35) கூறப்பட்டுள்ளது. இஸ்லாத்தினை ஏற்றுக் கொண்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளை புனருவதிற்கு முன்னால் அவளை தலாக் செய்ய நேரிட்டால் அவளுக்கு பொருளுதவி செய்து விவாகரத்து செய்யுங்கள் என்று அஹ்ஜாப் அத்தியாயம் 33:49 அல்குர்ஆன் கூறுகின்றது.

3. நிறைவு : சமரச முயற்சிக்குப் பின் மூன்று முறை தலாக் சொன்னால் தலாக் நிறைவேறும். அதன் பின்பு கணவன் மனைவியைத் தொட அனுமதியில்லை. (சூரா தலாக் 65:2) தலாக் கூறப்பட்ட பெண் இத்தா முடிந்து மறுமணம் செய்து கொள்வதினை சூரா 2:232 பகரா கூறுகின்றது. குழந்தைகள் பராமரிப்பது சம்பந்தமாக ரசூல் (ஸல்) அவர்கள் ஒரு வழக்கினை தீர்மானம் செய்த தகவலினை அபு ஹுரைரா(ரழி) அவர்கள் ஒரு தடவை ரசூல்(ஸல்) அவர்களிடம் ஒரு பெண் வந்து என் கணவர் எனக்கு விவாகரத்திற்கு பின்பு பொருளுதவியும் அபு அன்பா கிணற்றிலிருந்தும் தண்ணீர் கொடுக்கின்றார். இப்போது எனது குழந்தையினை அவருடைய பராமரிப்பிற்கு கேட்கின்றார். எனக்கு என் பிள்ளையை விட்டுப் பிரிய மனமில்லை என்று நீதி கேட்கின்றார்.

அப்போது ரசூல்(ஸல்) அவர்கள் அந்தக் குழந்தையை அழைத்து பெற்றோர் முன்னிலையில் நீ யாருடன் செல்ல விரும்புகிறாய் என்று கேட்டபோது அந்தக் குழந்தை தாயின் கையினைப் பிடித்ததாம். உடனே குழந்தையினை தாயுடன் அனுப்பி வைத்ததாகக் கூறுகிறார். இப்போது சொல்லுங்கள் இஸ்லாத்தில் எங்கே முத்தலாக் இருக்கின்றது. அதாவது ஒரே நேரத்தில் மூச்சைப் பிடித்துக் கொண்டு தலாக் சொல்லுவதற்கு சட்டம் உள்ளதா? இதனைத் தெரியாமல் சிலர் செய்யும் தவறினால் பல பெண்கள் நீதிமன்ற வாசலை மிதிக்கும் கதை கந்தலாக நிற்கின்றது. சில சமுதாய இயக்கங்கள் சில இளசுகள் வழி தவறி காதல் வலையில் விழும்போது அவர்கள் பெற் றோர்களிடம் விவரம் கேட்காது தங்கள் இயக்கங்கள் புகழ் வர திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.

அதன் பின்பு அந்த இளம் தம்பதியினர் எப்படி இருக்கின்றார்கள் என்று திரும்பிக் கூட பார்க்காததால் ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்று ஓடிய பல முஸ்லிம் பெண்கள் அபலையாக இருக்கும் உண்மை சம்பவங்கள் நடந்து கொண்டு இருக்கின்றன. சில தனிப்பட்டவர் திருமணம் நடத்தி வைத்து விட்டு பெரிய விவகாரமான கதை 28.10.2016 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வந்துள்ளது. ஒரு முஸ்லிம் திருமணம் செய்ய வேண்டுமென்றால் இஸ்லாமிய மார்க்கத்தைக் கடைப்பிடிக்கின்றார்களா என்று பார்க்க வேண்டும்.

ஆனால் அதனை பார்க்காமல் ஒரு முஸ்லிம் வழக்கறிஞர் அமீர் பாட்சா ஈடுபட்டது உங்களிடம் பகிர்ந்து கொள்ள லாம் என நினைக்கின்றேன். சென்னையில் மனித வள மேலாளர் முகமது பஹ்மியிடம் ஒரு ஹிந்து பயிற்சி பெண்மணி சேர்ந்துள்ளார். அவர் சென்னைக்கு வெளியே வேலை வழங்கப்பட்டது. அந்தப் பெண் மேலாளர் பஹ்மிய் யினை அணுகி தனக்கு சென்னைக்கு மாற்றுதல் வாங்கித் தரும்படி கேட்டுள்ளார். அதற்காக சில தாள்களில் அந்த பெண் இன்ஜினியரிடம் கையொப்பம் வாங்கியுள்ளார். சில நாட்களில் மாறுதல் வரும் என்று எதிர்பார்த்து உள்ளார் அந்த பெண்மணி. மாறுதல் வரவில்லை. ஆகவே வேலையினை 2015 மார்ச் மாதம் விட்டு விட்டார். ஆனால் என்னே ஆச்சரியம் 2016 மே மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் வாக்காளர் பட்டியலில் அந்தப் பெண்ணின் பெயரினை தன் மனைவி பகுதியில் சேர்ந்துள்ளார் பஹ்மி. வழக்கு நீதிமன்றம் சென்றது.

அப்போது வழக்கறிஞர் அமீர் பாட்சா அந்த பஹ்மிக்கும், அந்த ஹிந்துப் பெண் மணிக்கும் சுயமரியாதை திருமண முறைப்படி 1955படி திருமணம் செய்து ரிஜிஸ்தார்அலுவலகத்தில் பதியப்பட்டுள்ளது. பார் கவுனிசிலும் வக்கீல் அமீர் பாட்சா இதுபோன்ற பல திருமணம் செய்வதாக சொன்னதால், உயர்நீதி மன்றம் அந்தத் திருமணம் செல்லாது என்று அறிவித்துள்ளது.

ஆகவே இதுபோன்ற சட்டச் சிக்கலுக்கு சமுயாத இயக்கங்களும் வருங்காலத்தில் சிக்கிக் கொள்ளாமல், அபலை பெண்களுக்கு நல்ல வழிக் காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அத்துடன் எப்படி முத்தலாக்கு என்றும், சிவில் சட்டம் என்றும் சொன்னவுடன் ஒற்றுமையுடன் கொதித் தெழுந்தோமோ அதேபோன்று திருமணமான பெண்கள் புகுந்த வீட்டை விட்டு அனாதைப் பெண்களாக, குழந்தைகளுடன் வரும்போது அரவணைத்து சீரான வாழ்விற்கும், வழிகாட்ட அனைத்து சமுதாயமும், சமுதாய புரவலர்களும், தலைவர்களும் அவர்கள் மானத்தோடு வாழ்க்கை அமைத்துக் கொள்ள வழி வகுக்க வேண்டும் என்றால் சரிதானே சகோதரர், சகோதரிகளே.

சூரிய குடும்பத்தின் கோள்கள் எட்டா, ஒன்பதா அல்லது பனிரெண்டா?
எஸ்.ஹலரத் அலி, திருச்சி-7.
நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது? விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக் கள் மாறிப் போனாலும், சூரிய மண்டலம் உருவான கருதுகோள் 250 ஆண்டுகளாக மாறவே இல்லை. 1755ஆம் ஆண்டில் ஜெர்மன் விஞ்ஞானி இம்மானுவெல் கென்ட் (1724-1804) முதன்முதலில் தனது நெபுளர் கோட்பாடைக் கூறினார். அதன்படி பேரளவு வாயு மேகம் கொண்ட ஆதி நட்சத்திர மண்டல நெபிளர், சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உருவாக அடிப்படை மூலாதாரப் பொருளானது. இம்மானுவெல் கென்ட் விளக்கிய நெபுளர் கோட்பாட்டில் இருப்பது இதுதான். பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன. திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி வாயுக் கோள்களாகவும் திடக் கோள்களாகவும் உருவாயின.

இதைத்தான் அல்குர்ஆன் அழகாகக் கூறுகிறது : பிறகு வானம் புகையாக (வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு இருந்த போது (அதைப்) படைக்க நாடினான். ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும் நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்புடனாயினும் வாருங்கள் என்று கூறினான். (அதற்கு) அவை இரண்டும் நாங் கள் விருப்புடனே வருகின்றோம் என்று கூறின. (அல்குர்ஆன் : 41:11)

இந்தப் பிரபஞ்சம் பற்றியும் அதனது தோற்றம் பற்றியும் நமது கருத்துக்கள், ஆதிகாலத்திலிருந்தே பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளது. சூரியக் குடும்பம் என்பது சூரியனையும், அதனைச் சுற்றி வரும், கோள்கள், துணைக் கோள்கள் சிறுகோள்கள் குறுங்கோள்கள். வான்கற்கள், வால் வெள்ளிகள் என்பனவற்றைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.

எமது சூரியக் குடும்பம், பால்வீதி எனப்படும். நட்சத்திரப் பேரடையில் இருக்கும் பில்லியன் கணக்கான நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாகும். சூரியக் குடும்பத்தில் மிக முக்கிய அம்சமாக இருப்பது, மையத்தில் இருக்கும் சூரியனும், அதனைச் சுற்றிவரும் 8 (கிரகங்கள் கோள்களுமாகும். சூரியக் குடும்பத்தைப் பொறுத்தவரை, சூரியனே மிக முக்கியமான அமைப்பாகும். சூரிய குடும்பத்தில் இருக்கும் மொத்தத் திணிவில் 99% ஆன திணிவை சூரியனே கொண்டுள்ளது. மற்றைய கோள்கள், குறுங்கோள்கள் ஏனைய பொருட்கள் எல்லாம் எஞ்சிய 1% திணிவிலேயே அடங்கிவிடும்.

சூரியனே சூரியக் குடும்பத்தைக் கட்டுக்கோப் புக்குள் வைத்திருக்கும் குடும்பத் தலைவன். தனது ஈர்ப்பு விசையால், கோள்கள் மற்றும் அனைத்தை யும் ஒரு தொகுதி போல பேணுகிறது. சூரியனும், அதனைச் சுற்றிய சூரியத் தொகுதியும் கிட்டத்தட்ட 46 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றிய தாக அறிவியலாளர்கள் கணக்கிட்டுள்ளனர். சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் கோள்களாக புதன், வெள்ளி, பூமி மற்றும் செவ்வாய் ஆகியன பாறைகளாலான கோள்களாகும். செவ்வாய்க்கு அடுத்ததாயிருக்கும் வியாழன் மற்றும் சனி, வாயு கோள்கள் என்று அழைக்கப்படுகிறது. இவை, ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் போன்ற வாயுக்களால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய கோள்களாகும்.

அதற்கும் அடுத்ததாக இருக்கும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் பனிக் கோள்கள் என்றழைக்கப் படுகின்றன. இவை நீர், அமோனியா மற்றும் மீத்தேன் போன்ற சேர்மானங்களால் ஆக்கப்பட்டவை. 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நிகோலஸ் கோப்பர் நிகஸ் தனது சூரிய மையக் கோட்பாட்டை வெளியிட்ட பின்னரே கொஞ்சம் கொஞ் சமாக சூரியனை மையமாகக் கொண்ட கருத்து வலுப்பெறத் தொடங்கியது. பின்னர் 17-ம் நூற்றாண்டில் வானியலாளர்கள், தொலைக்காட்டி களைப் பயன்படுத்தி சூரியனே மையத்தில் இருப்பதாகவும், பூமி தொடக்கம் மற்றைய கோள்கள் அனைத்தும் சூரியனைச் சுற்றி வருவதையும் கண்டறிந்தனர். யுரேனஸ் கோள் 1781 ஆண்டிலும் நெப்டியூன் 1846 ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்ட கோள்களாகும்.

புளுட்டோ, 1930களிலேயே கண்டறியப்பட்டது. இது சூரியனைச் சுற்றிவரும் 9ஆவது கோளாக பிரகடனப்படுத்தப்பட்டது. ஆனால் புளுட்டோ, புதனை விட சிறியது. அது மட்டுமல்லாது, வேறு சில கோள்களின் துணைக் கோள்களை விடவும் சிறியது ப்ளுட்டோ சற்று விசித்திரமானது. அது பூமி, செவ்வாய், வெள்ளி அல்லது புதன் போல பாறைகளால் ஆன கோள் அல்ல. சீரிஸ் (ளீereவி) என்ற வான்பொருள், செவ்வாய்க்கும், வியாழனுக்கும் இடையில் சூரியனைச் சுற்றி வருவதை வானியலாளர்கள் 1801இல் கண்டறிந்தனர். இதனையும் ஒரு கோளாக அவர்கள் வகைப் படுத்தினர்.

ஆனால் பின்னர், அந்தப் பகுதியில் சீரிஸ் போன்ற நிறைய வான்பொருட்களை வானியலா ளர்கள் கண்டறிந்ததன் பலனாக, பின்னர் அவற்றை எல்லாம் சேர்ந்து சிறுகோள்கள் (புவிமிerலிஷ்dவி) என்று அழைத்தனர். 1990களின் ஆரம்பத்தில் வானியலாளர்கள், புளுட்டோ போன்ற பல வான்பொருட்கள் சூரியனை, கைப்பர் பட்டை பகுதியில் சுற்றி வருவதைக் கண்டனர். கைப்பர் பட்டையும், அந்தப் பகுதியில் சுற்றிவரும் ஆயிரக்கணக்கான கைப்பர் பட்டைப் பொருட்களினதும் கண்டுபிடிப்பு ப்ளுட்டோவை கோள் என அழைப்பதைத் தவிர்த்து, அது ஒரு மிகப்பெரிய லுயநு என அழைக்கலாம் என ஆய்வாளர்கள் கருதினர். அதன் பின்னர், 2005இல் வானியலாளர்கள், 10ஆவது கோளைக் கண்டறிந்துவிட்டதாக செய்தி வெளியிட்டனர்.

இதுவும் ஒரு லுயநு தான். ஆனால் ப்ளுட்டோவை விடப் பெரியது. இப்போது எரிஸ் என அழைக்கப்படுகிறது. இது பெரிய சிக்கலை உருவாக்கியது. அதாவது, இப்படி நாம் கண்டறி யாத பல வான்பொருட்கள் இருந்தால், உண்மையிலேயே கோள் என்றால் என்ன? இது ஒரு சிக்கலான கேள்வியாகப் போகவே, இதற்கு எளிதாக பதில ளிக்க முடியவில்லை. சர்வதேச வானியல் கழகம் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுக் காண முனைந்தது. புதிதாக கண்டறிந்த பொருட்களை ஒரு வகைப்படுத்த வேண்டும் என்று அவர்கள் கருதினர். அதேபோல 2006இல், முதன்முதலில் “குறுங்கோள்” என்ற பதத்தைப் பயன்படுத்தி வை அழைத்தது. எரிஸ் (சிrஷ்வி), சிரிஸ் (ளீereவி) ப்ளுட்டோ (Pயிற்மிலி) மற்றும் அண்மை யில் கண்டுபிடிக்கப்பட்ட கவுமியா மக்கே மக்கே என்பன ஆல் ஏற்றுக்கொள் ளப்பட்ட குறுங்கோள்கள் ஆகும்.
ஒரு கோள் என்பது பின்வரும் மூன்று நிபந்தனை களைப் பூர்த்தி செய்யவேண்டும் என்று ணூபுU கருதுகின்றது. 1. ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரவேண்டும். 2. போதுமானளவு திணிவைக் கொண்டிருப்பதன் மூலம் கோளமான வடிவத்தைப் பெற்றிருக்க வேண்டும். 3. தனது சுற்றுப்பாதையை வேறு எந்த வான்கற் களோ இல்லை வேறு பெரிய பொருட்களோ இல்லாது சுற்றி வரவேண்டும்.

இந்த மூன்றாவது விதிக்கு உடன்படாத புளுட்டோவை குறுங்கோள் பட்டிய லில் சேர்த்து சூரிய குடும்பத்து கோள்கள் எட்டு மட் டுமே என்று 2006ல் அறிவித்தனர். தற்போது ஒன்பதாவது கோள் என்று கூறிக்கொள்ளத்தக்க ஒரு கோள் சூரியக் குடும்பத்திலேயே இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதற்கான ஆதாரங் களும் மிக ஆணித்தரமாக இருக்கின்றன. கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தின் விண்ணியல் ஆய்வாளர்கள் மைக்கல் பிரவுன் (னிஷ்உஜுழிeயி சி யrலிழஐ) மற்றும் கொன்ஸ்டன்டின் பட்டிஜின் (லுலிஐவிமிழிஐமிஷ்ஐ யழிமிதீஆஷ்ஐ) இருவருமே இந்த புதிய ஒன்பதாவது கோள் இருப்பதற்கான ஆதாரத்தைக் கண்டறிந்துள்ளனர். நெப்டியூனிற்கும் அப்பால் சூரியனைச் சுற்றி வரும் ஆறுக்கும் மேற்பட்ட விண்பொருட்களை ஆய்வு செய்ததில், அவற்றின் பயணப் பாதையில் ஒரு முரண்பாடு தெரிவதை விஞ்ஞானிகள் கவனித்தனர்.

இந்த ஆறு விண்கற்கள், விண்பொருட்களும் சூரியனை ஒரு குறித்த பக்கத்தில் இருந்தே சுற்றுகிறது. மேலும் இவை குறிப்பாக ஒரே கோணத் தில் சூரியனைச் சுற்றிவருகின்றன. ஆகவே இந்த சற்று முரணான சுற்றுப்பாதைக்கு வேறு ஒரு காரணம் இருக்கலாம் என்று இவர்கள் கருதுகின்ற னர். அந்தக் காரணம் ஒன்பதாவது கோள். ஒன்பதாவது கோள், தனது ஈர்ப்பு விசையினால் இந்த சிறிய விண்பொருட்களின் பாதையை தனது ஆதிக்கத்தில் வைத்துள்ளது என்பது ஆய்வாளர் களின் கருத்து. நீண்ட கால கண்காணிப்பு மற்றும் கணிணி மாதிரி அமைப்புகள் நிச்சயம் ஒரு கோள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. இவர்களது கணக்குப்படி இந்தப் புதிய ஒன்பதா வது கோள், சுமாராக, நெப்டியூன் கோளின் அளவு அல்லது பூமியின் திணிவைப் போல பத்து மடங்கு திணிவைக் கொண்டிருக்க வேண்டும். மேலும் இது சூரியனில் இருந்து 32 பில்லியன் கி.மீ. தொலைவில் சுற்றிவரவேண்டும். அதுவும் அதனது நீள்வட்டப் பாதையில் சூரியனுக்கு அருகில் இருக்கும் போதுதான், அது சூரியனுக்கு தொலைவில் செல்லும்போது சூரியனில் இருந்து 160 பில்லியன் கி.மீ. தொலைவில் இருக்கும். மேலும் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர 10000, 20,000 வரு டங்கள் வரை எடுக்கும் என்று கணக்கிட்டுள்ளனர்.

இதுவரை நவீன அறிவியல், சூரிய குடும்பத்தை சுற்றி வரும் கோள்கள் புளுட்டோவை தவிர்த்தும், புதிய கோளை சேர்த்தும் ஒன்பது கோள் என்று அறிவித்துள்ளனர். இது குறித்து இயற்கை மார்க்க மான இஸ்லாம் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம். அல்குர்ஆனில் அல்லாஹ், யூசுஃப் நபி அவர்கள் வரலாற்றில் வரும் பல செய்திகளை இறுதி உம்மத்தாகிய நமக்கு சொல்லிக் காட்டுகிறான். அதில் யூசுஃப்(அலை) அவர்களுக்கு கனவுகளின் பலனை அறியும் ஆற்றலை அல்லாஹ் கொடுத்திருப் பதாகக் கூறுகிறான். இவ்வாறு நாம் யூசுஃப்புக்கு பூமியிலே வசதியளித் தோம், இன்னும் கனவுகளுக்குப் பலன் கூறுவதையும் கற்றுக்கொடுத்தோம். அல்குர்ஆன் : 12:21.

யூசுஃப்(அலை) அவர்கள் தங்கள் குடும்ப வரலாற்றுச் சம்பவங்களைச் சொல்லிச் செல்லும் அதே வேளையில் ஒரு அறிவியல் உண்மையையும் கூறுகிறார்கள். அவர்கள் மூலமாக அல்லாஹ், அறிவிக்கச் செய்கின்றான். என்ன அது? யூசுஃப் தன் தந்தையாரிடம், என் அருமைத் தந்தையே பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன் என்று கூறியபோது. அல்குர்ஆன்: 12:4. இன்னும், அவர் தாய் தந்தையரை அறியாசனத்தின் மீது உயர்த்தி அமர்த்தினார். அவர்கள் எல்லோரும் அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாக) சிரம் பணிந்து வீழ்ந்தனர். அப்போது அவர்(தந்தையை நோக்கி) என் தந்தையே இதுதான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும். அதனை என் இறைவன் உண்மையாக்கினான். அல்குர்ஆன்:12:100.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள். இறைத்தூதர்கள் காணும் கனவு இறைச் செய்தி (வஹீ) ஆகும். ஆதாரம் : தப்ஸீர் தப்ரீ. யூசுஃப்(அலை) அவர்கள் கண்ட கனவின் விளக்கம் குறித்து இப்னு அப்பாஸ்(ரழி) மற்றும், ளஹ்ஹாக், கத்தாதா, சுஃப்யான், அஸ்ஸவ்ரீ ஆகிய விரிவுரையாளர்கள் கூறுவது, பதினொன்று நட்சத் திரங்கள் என்பது அவருடைய சகோதரர்களை குறிக் கும்; யூசுஃப்(அலை) அவர்களையும் சேர்த்தால், மொத்தம் பன்னிரெண்டு சகோதரர்கள், சூரியனும் சந்திரனும் அவருடைய பெற்றோரைக் குறிக்கும். தப்ஸீர், இப்னு , கஸீர் : 4. பக். 723. இந்த உவமையின் மூலம் சூரிய குடும்பத்திற்கு மொத்தம் பன்னிரெண்டு கிரகங்கள் (கோள்கள்0 உள்ளன என்ற உண்மையை அல்லாஹ் கூறுகிறான். இதில் இன்னுமொரு ஆச்சரியம் இந்த சூரத்துல் யூசுஃப் அத்தியாயமே குர்ஆனில் 12வது அத்தியாய மாக உள்ளது. அல்லாஹ் அறிந்தவன். வானங்களையும், பூமியையும் அல்லாஹ் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான். நிச்சயமாக இதில் விசுவாசிகளுக்கு அத்தாட்சி இருக்கிறது.
அல்குர்ஆன் : 29:44.

அல்லாஹ் உவமையாகவோ, உதாரணமாகவோ எதைக் கூறினாலும், அதில் உண்மையைத் தவிர வேறு கூறுவதில்லை. இது சம்பந்தமாக பைபிள் பழைய ஏற்பாட்டிலும் குறிப்புகள் காணப் படுகிறது. மேலும் அவர் தாம் கண்ட வேறொரு கனவையும் தம் சகோதரர்களுக்கு விவரித்தார். நான் மீண்டும் ஒரு கனவு கண்டேன். அதில் கதிரவனும் நிலவும் பதினொரு விண்மீன்களும் என்னை வணங் கக்கண்டேன். ஆதியாகமம் . 37:9 பதினோரு நட்சத்திரங்கள் (கவாகிப்) என்று இங்கு குறிப்பிடுவது அசல் நட்சத்திரங்களைக் குறிக் காது கோள்களையே குறிப்பிடும். நட்சத்திரங்களை அல்லாஹ் நஜ்ம் என்று குர்ஆனில் பதிமூன்று இடங்களில் குறிப்பிடுவது கவனிக்கத்தக்கது.

இன்றைய அறிவியல், சூரியக் குடும்பக் கோள்கள் எட்டு என்று இப்போது அறிவித்தாலும் இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள் ளது. மேலும் நமது சூரியனுக்கு ஒன்பதுக்கு மேற்பட்ட கோள்கள் இருக்கலாம் என்னும் புதிய கருத்து 2016 ஜூன் 13 ராயல் வானியல் குழுவினர் மாத இதழில் வெளியாகியுள்ளது. நமது சூரியன் தனது அச்சிலிருந்து 6 டிகிரி சற்று சாய்ந்த நிலையிலேயே சுற்றி வருகிறது. இதன் காரணம் என்னவென்று இது நாள் வரை வானியல் ஆய்வாளர்களால் விளக்கப்படாமல் இருந்தது. இது பற்றிய ஆய்வு முடிவுகள் இந்த வாரம் (20, அக்டோபர் 2016) வெளியிடப்பட்டது.

அதாவது புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோள் ஒன்பதானது தனது அதிக நிறையின் காரணமாக சூரியனையும் அதன் ஒட்டு மொத்த கோள்களையும் சாய்த்து இழுப்பதாக கம்ப்யூட்டர் கணக்கீடின் மூலம் கண்டறிந்தனர். இந்த பிரபஞ்சத்தைப் படைத்த அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே சூரியனைச் சுற்றிவரும் கோள்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியும். அல்குர்ஆனின் விளக்கப்படி உலகம் படைத்த நாளி லிருந்து மாதங்கள் 12 இருப்பது போலவே 12 கோள்கள் இருப்பதை அறிவியல் உலகம் வருங்காலங்களில் நிரூபிக்கும் இன்ஷா அல்லாஹ். நிச்சயமாக அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு நல்ல படிப்பினை இருக்கிறது. இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை. மாறாக இதற்கு முன் உள்ள(நெறிநூல்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விசயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும் ரஹ்மத்தாகவும் இருக்கிறது. அல்குர்ஆன்:12:111
ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்
முஜீபுதீன், இலங்கை
நவ. 2016 தொடர்ச்சி……
நபி(ஸல்) அவர்கள் அறையயான்றில் இருந்தார்கள். நாங்கள் கீழே இருந்தோம். அப்போது அவர்கள் எங்களை எட்டிப்பார்த்து, “என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?” அப்போது நபி(ஸல்) அவர்கள் “பத்து அடையாளங்கள் நிகழாதவரை யுக முடிவு நாள் வராது.
1.கிழக்கில் ஒரு நிலநடுக்கம்,
2.மேற்கில் ஒரு நிலநடுக்கம்,
3. அரபு தீபகற்பத்தில் ஒரு நில நடுக்கம்,
4. புகை (பார்க்கவும் : 44:10),
5.தஜ்ஜால்,
6.பூமிக்குள்ளிருந்து வெளிப்படும் (அதிசயம்) பிராணி (அவதானிக்குக : குர்ஆன் : 27:82),
7. யஃஜூஜ், மஃஜூஜ்,
8. சூரியன் மேற்கிலிருந்து உதிப்பது,
9. (ஏமன் நாட்டிலுள்ள) “அதன’ பகுதியின் கடைக்கோடியிலி ருந்து ஒரு நெருப்புக் கிளம்பி மக்களை வாகனங்களில் ஏறிப் பயணம் புறப்படச் செய்வது. (முஸ்லிம் : 5559) இது போன்ற பல சம்பவங்கள் யுக முடிவுக்கு முன் நடைபெறுவதாக ஹதீஃத்கள் கூறுகின்றன. அது மட்டுமன்றி மறுமை, சுவர்க்கம், நரகம், யுக முடிவுக்கு முந்தைய அடையாளங்களுக்கு முஸ்லிம் 5370 ஹதீஃத் முதல் 5662 வரையுள்ள ஹதீஃத்களை அவதானியுங்கள். அல்லாஹ்வையும், மறுமையையும், நம்பாதவர்களின் தன்மைகளைப் பற்றி அல்குர்ஆனிலும், நபி(ஸல்) அவர்களின் ஹதீஃத்களிலும் பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை அவதானியுங்கள். எவர்கள் மறுமையின் மீது ஈமான் கொள்ளவில்லையோ அவர்களுக்கே கெட்ட தன்மை இருக்கிறத. அல்லாஹ்வுக்கோ மிக உயர்ந்த தன்மை இருக்கிறது. மேலும் அவன் மிகைத்தவன் ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்: 16:60) மறுமை மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அல்லாஹ்வுக்கு உவமையாகப் பல இணைகளை ஏற்படுத்துகின்றனர்.

அதனை அல்குர்ஆன் பல இடங்களில் மறுத்து எச்சரிக்கின்றது. மேலும் அவதானியுங்கள். நிச்சயமாக, மறுமையின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் பெண்களுக்குப் (அல்லாஹ் வுக்கு இணையாகப்) பெயரிடுவது போல் மலக்குகளுக்குப் பெயரிடுகின்றனர். எனினும் அவர்களுக்கு இதைப் பற்றி எத்தகைய அறிவும் இல்லை; அவர்கள் வீணான எண்ணங்களைத் தவிர வேறெதையும் பின்பற்றவில்லை. நிச்சயமாக வீன் எண்ணம் (எதுவும்) சத்தியம் நிலைப்பதைத் தடுக்க முடியாது. (அல்குர்ஆன்: 53:28)

மேலும் அல்லாஹ் மறுமையைப் பொய்ப்பிப்பவன் யார் எனக் குறிப்பிடுவதை அவதானியுங்கள். (நபியே!) நியாயத் தீர்ப்பை பொய்ப்பிக்கின் றானே அவனை நீர் பார்த்தீரா? பின்னர் அவன் தான் அநாதைகளை விரட்டுகிறான். மேலும், ஏழைகளுக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுபவனில்லை. (அல்குர்ஆன் : 7:1-3) மேலும் அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் கூறுவதை அவதானியுங்கள் : ஹாஃமீம், அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோனிடத்திலிருந்து இறக்கியருளப்பட்டது.
அரபு மொழியில் அமைந்த இந்த குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக் குத் தெளிவாக்கப்பட்டுள்ளன. நன்மாராயம் கூறுவதாகவும், அச்சமூட்டி எச்சரிக்கை செய்வ தாகவும் (அது இருக்கிறது) ஆனால் அவர்களில் பெரும்பாலோர் புறக்கணிக்கின்றனர். அவர்கள் செவியேற்பதுமில்லை. மேலும், அவர்கள் “”நீர் எதன் பக்கம் எங்களை அழைக்கின்றீரோ அதனை விட்டும் எங்கள் இருதயங்கள் மூடப்பட்டுள்ளன. எங்கள் காதுகளில் மந்தம் இருக்கின்றது. எங்களுக் கிடையிலும் உங்களுக்கிடையிலும் திரை இருக் கிறது. ஆகவே, நீர் (உம் வேலையைச்) செய்து கொண்டிரும். நிச்சயமாக நாங்கள் (எங்கள் வேலையைச்) செய்து கொண்டிருப்பவர்கள்” என்று கூறினர். “”நான் உங்களைப் போன்ற மனிதன் தான்.

ஆனால் எனக்கு வஹீ அறிவிக்கப்படுகின்றது. நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒருவனே தான், ஆகவே அவனையே நோக்கி நீங்கள் உறுதியாக நிற்பீர்களாக; இன்னும் அவனிடம் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள். அன்றியும் (அவனுக்கு) இணை வைப்போருக்குக் கேடு தான்” என்று (நபியே!) நீர் கூறும். அவர்கள் தாம் ஜகாத்தைக் கொடுக்காதவர் கள், மறுமையை நிராகரிப்பவர்களும் அவர் களே! (அல்குர்ஆன் : 41:1-7) மேலும் மறுமையை மறுப்பவர்களின் தன்மைகளை அவதானியுங்கள் : குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ் வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிக்) கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத் தன் பொருள் தன்னை (உலகில் நிச்சயமாக) என்றும் நிலைத் திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமா வில் எறியப்படுவான். ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அது எரிந்து கொண்டி ருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும்.
அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும், நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப் படும். நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப் பட்டவர்களாக) (அல்குர்ஆன்: 104:1-9) மரணத்தின் பின் எழுப்பப்படும் மறுமையை மறந்தவர்களே அளவு நிறுவையில் மோசம் செய்வர் என வலியுறுத்தும் இறை வசனத்தை அவதானிக்கவும். அளவு (எடையில்) மோசம் செய்பவர்களுக்குக் கேடுதான். இவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும்போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர். ஆனால், அவர்கள் அளந்தோ, நிறுத்தோ கொடுக்கும்போது குறை(த்து நஷ்ட முண்டா)க்குகிறார்கள். நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத் தில் கொள்ளவில்லையா? மகத்தான ஒரு நாளுக்காக, அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்… (அல்குர்ஆன்: 83:1 முதல் 36ம் வசனம் வரை அவதானியுங்கள்) அல்லாஹ் ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி இறைத் தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வரை எல்லா இறைத்தூதர்களுக்கும் அல்லாஹ்வை மட்டுமே வணங்கி வழிபட வேண்டும் எனவும், அவ்வாறு வணங்குவதற்காக அல்லாஹ் மறுமையில் ஒரு முடிவில்லாத வாழ்க்கையை அமைத்து வைத்திருப்பதாக வாக்களித்துள்ளான். ஆகவே அல்லாஹ்வையும் மறுமையையும் நம்புவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு இறுதி நாளை விசுவாசிக்கக் கூடிய மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை அல்குர்ஆனில் மிகத் தெளிவாக விபரித்துள்ளான். ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு எந்த நிலைகளிலும் இணை வைப்பது பெரும் பாவமாகும். அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்திக்க வேண்டும். அவனுக்கு மட்டுமே நேர்ச்சை செய்தல் வேண்டும். அவன் இறுதி தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் ஏவிய கட்டளைகளை ஏற்று, அவன் தவிர்த்து வாழும்படி ஏவிய கட்டளைகளை தவிர்த்து வாழ வேண்டும். அல்குர்ஆனை அவதானித்து, நம்பிக்கை கொண்டு, ஷைத்தானின் வழிகளைப் புறக்கணித்து வாழ்வதன் மூலமே மறுமையில் வெற்றி அடைய முடியும்.

அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பி ஈமான் கொண்ட ஒருவன், அல்லாஹ்வுக்கு இணை வைக்கமாட்டான். தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ்ஜு தான தர்மங்களை அல்லாஹ்வின் தூதர் காட்டித்தந்த நடைமுறைக்கமைய, அல்லாஹ்வுக்காகவே வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவான். மனிதனிடம் பாராட்டுப் பெறுவதற்காகவோ, பெருமைக்காகவோ வணக்கங்களில் ஈடுபடமாட்டான். ஏழைகளுக்கு உதவாமல் இருக்கமாட்டான். அடிமைகளை விடுதலை செய்ய ஆர்வமுட்டாது இருக்கமாட்டான். ஒருவர் மரணத்திற்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்க மாட்டான். அநாதைகளை விரட்ட மாட்டான், மற்ற மனிதர்களை சாதியில் குறைந்தவர்களாக கருதி பெயர் சூட்டமாட்டான். அளவை நிறுவையில் மோசம் செய்ய மாட்டான், விபசாரம், களவு, சூது, சூனியம், அவதூறு, கொலை, மான்கேடான செயற்பாடுகள், மடமையான நம்பிக்கைகள், சடங்கு சம்பிர தாயங்களில் கலந்து கொள்ள மாட்டான்.

அல்லாஹ் தன்னுடன் கதைத்ததாக, அல்லாஹ் வைக் கண்டதாக மடமையான செய்திகளை அல்குர்ஆனினதும், நபி(ஸல்) அவர்களின் ஹதீஃத்களினதும் உண்மை ஆதாரமின்றிக் கூறமாட்டான். அல்லாஹ்வின் தூதர் பெயரில் இட்டுக்கட்டி, முன்னைய இறைநெறி நூல்களை ஷைத்தானிய மதங்களாக முன்னைய சமுதாயங்கள் மாற்றியது போல், நூதன வணக்க வழிபாடுகளை இஸ்லாம் மார்க்கத்திற்கு உட்பட்டதாக ஆக்க மாட்டான். அறிவு மிக்க மனித சமுதாயமே மறுமை வாழ்க்கை என்பது நிச்சயமானதாகும்.

அதில் எந்தச் சந்தேகத்தினையும் ஏற்படுத்தாதீர்கள். அல்குர்ஆனில் மறுமை பற்றி எல்லா இடங்களிலும் அல்லாஹ் சத்தியம் செய்து குறிப்பிடுகின் றான். அல்குர்ஆனை இறை அச்சத்துடன் படித்து விளங்க முயற்சியுங்கள். அப்போது முடிவில்லாத மறுமை வாழ்க்கையின் விளைநிலம் இம்மை வாழ்க்கையில், அல்லாஹ்வின் அல்குர்ஆனின் நேர்வழியைப் பெற்று, இறுதி இறைத் தூதரின் சொல், செயல், நடைமுறை அங்கீகாரத்தின்படி வாழ்வதாகும் என்பதை அறிந்து கொள்ளலாம். அல்குர்ஆனின் எல்லா அத்தியாயங் களையும் அவதானியுங்கள்.

அல்லாஹ் இறுதி இறைத் தூதர் மூலமாக மறுமையை விளக்குவதை அவதானிக்க முடியும். பிரதானமாக ஸூரத்துல் முஜாதலா அத்தியாயம் (58) முதல் ஒவ்வொரு அத்தியாயங்களையும் அவதானியுங்கள். மறுமையின் நோக்கங்களை அல்லாஹ் விளக்குவதை மிகத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும். இதைப் பார்ப்பதன் மூலம் இம்மை மறுமை வாழ்க்கை வெற்றி பெற அல்லாஹ்வின் அருள் கிடைக்கப் பிரார்த்தியுங்கள். நன்மை தீமை அனைத்தும் அல்லாஹ்வின் விதியின்படி நடப்பதாக நம்பிக்கை கொள்ளுதல்: அல்லாஹ் மீது விசுவாசம் கொண்ட ஒவ்வொரு மனிதனும் நன்மை தீமை அனைத்தும் அல்லாஹ்வின் விதியின்படியே நடைபெறுகின் றது என நம்பிக்கை கொள்வது கடமையாகும். “அல்கதிர்” என்ற சொல் விதி எனச் சொல்லப்படுகின்றன.

இது அல்குத்ரத் (ஆற்றல்) என்னும் மூலச் சொல்லில் இருந்து பிறந்தது ஆகும். விதி இறைவனின் ஆற்றலைக் குறிக்கும் எனலாம். மனிதனைப் படைப்பதற்கு முன்பே அல்லாஹ் விதியைப் பாதுகாக்கப்பட்ட ஏட்டில் பதிவு செய்துவிட்டான். வானத்திலும், பூமியிலும் அனைத்துச் செயல்பாடுகளும் அல்லாஹ்வின் திட்டப்படியே நடைபெறுகின்றன. அல்லாஹ் எல்லாவற்றையும் படைப்பதற்கு முன் எழுதுகோலைப் படைத்து சகலவற்றையும் திட்டமிட்டு பதிவுசெய்து விட்டான். விதியை நம்மால் அறிந்து கொள்ள முடியாது. எமக்குக் கொடுக்கப்பட்ட அறிவு மிகக் குறைவாகும். மறைவானவற்றை அறியும் சக்தி நமக் கில்லை.

ஆகவே நாம் நன்மையின் பால் அறிந்து செயல்பட வேண்டும். தீமையைத் தவிர்த்து வாழ வேண்டும். மனிதன் படைப்புகளை ஆராய்வதன் மூலம் மறைவானவற்றை சோதிடம் மூலம் அறிய முயற்சிக்கிறான். இச்செயற்பாடுகள் மடமைகளாகும். ஆராய்தல் வேண்டும். இவ்வாறு ஆய்வு செய்வதனால் மனிதன் புவியியல், மருத்துவம், கைத்தொழில், விஞ்ஞானம், தொழில்நுட்பம், போக்குவரத்து, இன்னும் பல துறைகளில் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து புதுமைகளைப் படைக்க முடிகிறது.

அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுவதை அவதானியுங்கள்.
மேலும், நிச்சயமாக இப்பூமியிலுள்ள மரங் கள் யாவும் எழுது கோல்களாகவும், கடல் (நீர் முழுதும்) அதனுடன் கூட மற்றும் ஏழு கடல்கள் அதிகமாக்கப்பட்டு(மையாக) இருந்த போதிலும், அல்லாஹ்வின் வார்த்தைகள் முடிவுறர். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன் ஞானம் மிக்கோன். (அல்குர்ஆன் : 31:27) மேலுள்ள வசனத்தில் அல்லாஹ்வின் ஆற்றலையும், அவனது திட்டமிடல் வல்லமைகளை யும் வெளிப்படுத்துகிறான். அல்லாஹ்வின் விதி யின்படியே சகல கருமங்களும் நடைபெறுகின்றன.

கீழ்வரும் வசனத்தை அவதானியுங்கள். அவனிடமே மறைவானவற்றின் திறவு கோல்கள் இருக்கின்றன. அவற்றை அவனன்றி எவரும் அறியார், மேலும் கரையிலும் கடலி லும் உள்ளவற்றையயல்லாம் அவன் அறிவான். அவன் அறியாமல் ஓர் இலையும் உதிர்வதில்லை. பூமியின் (ஆழத்தில் அடர்ந்த) இருள்களில் கிடக்கும் சிறு வித்தும், பசுமையானதும், உலர்ந்ததும் (எந்தப் பொருளும்) தெளிவான (அவனுடைய) பதிவேட்டில் இல்லாமலில்லை.

ஐயமும்! தெளிவும்!!
ஐயம் : திருமண வயது அடைந்த பெண்ணை திருமணம்செய்து கொடுக்கும்போது பெண்ணின் சம்மதம் பெற்று திருமணம் செய்து கொடுக்க வேண்டுமா? அல்லது பெண்ணின் தந்தை தன் சொந்த விருப்பத்திற்கு திருமணம் செய்து கொடுக் கலாமா? குர்ஆன், ஹதீஃத் வழியில் விளக்கம் தருக. யூ. ஹபீப் முஹம்மது, துபாய்
தெளிவு : இஸ்லாமிய மார்க்கத்தில் திருமணம் என் பது ஒரு ஆணுக்கும், பெண்ணுக்குமிடையில் ஏற் படும் வாழ்க்கை ஒப்பந்தமாகும். மாற்று மதங்களில் கல்யாணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவது இஸ்லாத்தில் இல்லை. திருமணம் புரியவுள்ள ஆணும், பெண்ணும் ஓர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கணவன், மனைவியாகிறார்கள்.

எனவே ஒப்பந்தத்தின் அடிப்படையில் இருவரும் தங்களது பரிபூரண சம்மதத்தைத் தெரிவிக்க வேண்டியது இஸ்லாமிய திருமணத்தில் மிக மிக அவசியமாக வலியுறுத்தப்பட்ட விஷயமாகும். முன்பே மணமுடிக்கப்பட்டு கணவனை இழந்து விட்ட விதவையும், அல்லது முந்திய கணவனால் விவாக முறிவு (தலாக்) கொடுக்கப்பட்ட பெண்ணும் தனக்கான இத்தா காலம் முடிந்ததும் மறு மணம் முடிக்க விரும்பினால் அப்பெண்ணின் முழு சம்மதத்தையும் பெற்றே மணமுடித்து வைக்க வேண்டும். இப்பெண்களை அயிம்மா என்றோ தய்யிபா என்றோ அழைப்பர். கன்னிப் பெண்ணாக இருப்பாளேயானால் அவள் தனது சம்மதத்தை மெளனம் மூலம் தெரிவிக்கலாம். அவளுக்கு விருப்பமில்லையயனில் கட்டாயம் சொல் மூலம் தெரிவிக்க வேண்டும். அவள் எந்த பதிலும் தராமல் மெளனம் சாதித்தால் அது சம்மதம் என்ற பொருளைத் தரும். இப்பெண்ணை “பாகிரா’ என்று அழைப்பர். “அயிம்மா’ பெண்களுக்கு அவர்களது சம்மத மின்றி திருமணம் செய்து வைக்காதீர்கள். கன்னிப் பெண்களிடம் திருமண வி­யமா அனுமதி பெற வேண்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! ஒரு கன்னிப் பெண் (நாணத்தால் தன் எண்ணத்தை) தெளிவாகச் சொல்ல வெட்கப்படு வாளே என்று சிலர் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவளது மெளனம் சம்மதமாகும் என்றார்கள். அறிவிப்பாளர்கள் : ஆயிஷா இப்னு அப்பாஸ் அபூஹுரைரா (ரழி) அன்கும்) ஆதாரங்கள் : புகாரி, முஸ்லிம் அபூதாவூத், நஸயீ, தாரமீ திர்மிதி, இப்னு மாஜ்ஜா, தராகுத்னீ, இப்னு ஜாரூத், பைஹகீ, இப்னு ஹிப்பான், இப்னு அபூஷைபா, முஸ்னத் அஹ்மத். இந் நபிமொழி மூலம் திருமண பந்தத்தில் முந் திய அனுபவம் பெற்ற பெண்கள் தங்களது அடுத்த திருமணத்திற்கு தெளிவாக சம்மதம் தெரிவிக்க வேண்டுமென்பதை அறியலாம். முந்திய அனுபவ மில்லா கன்னிப் பெண்கள் தங்களது சம்மதத்தை மெளனம் மூலம் தெரிவிக்கலாம். சம்மதமில்லை யயனில் நிச்சயமாக வாய்விட்டு சொல்லியே ஆக வேண்டுமென்பதை உணரலாம்.

ஒரு திருமணத்தில் ஒரு ஆண் ஒரு பெண் கொண்ட சாட்சியை உமர்(ரழி) அவர்கள் ஏற்க வில்லை என்பதை அபூதாவூத், அஹ்மதில் வரும் ஒரு அஃதர் தெளிவு படுத்துகிறது. இந்த சம்மதத்தை குறைந்தது இரு ஆண்கள் அல்லது ஒரு ஆண், இரு பெண்கள் சாட்சியாகப் பெற வேண்டும். இவ்விதமாக மணப்பெண்ணின் சம்மதம் பெறாமல் நடத்தி வைக்கப்படும் திருமணம் இஸ்லாத்தில் செல்லத் தக்கதல்ல. அது முறிக்கப்படும். கன்சா(ரழி) என்ற அன்சாரி ஸஹாபியம்மா அறிவிக்கிறார்கள் : எனது தந்தை கிதாம்(ரழி) அவர்கள் (எனது முழு சம்மதமின்றி) எனக்கு பிடிககாத இடத்தில மண முடித்துக் கொடுத்தார். நான் நபி(ஸல்) அவர்களி டம் வந்து இதனைக் கூறியபோது அந்த திரு மணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். இதே நிகழ்ச்சியை இப்னு அப்பாஸ்(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

இதனை முஅத்தாமாலிகி, புகாரி, அபூதாவூத் அந்நஸயீ, தாரமி, இப்னு மாஜ்ஜா, இப்னு ஜாரூத், பைஹகீ, அஹ்மத் போன்ற நூல்களில் காணலாம். இவ்விதம் தனது தந்தையின் வற்புறுத்தலில் நடத்தப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் மூலம் ரத்து செய்யப்படவே கன்சா(ரழி) அவர்கள் அபூலுபாபா(ரழி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள் என்ற விபரம் அப்துர்ரஹ்மான் பின் யஜீத்(ரழி) அறிவிக்க இப்னு மாஜ்ஜா என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஒரு கன்னிப்பெண் சம்மதமின்றி அவளது தந்தையால் நடத்தி வைக்கப்பட்ட திரு மணத்தை நபி(ஸல்) அவ்கள் ரத்து செய்ததாக ஒரு நபிமொழி அபூதாவூதில் : 2091 இப்னு அப்பாஸ் (ரழி) கூற பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே எந்த முஸ்லிம் பெண்ணையும் அவளது முழு சம்மதமின்றி எவருக்கும் திருமணம் செய்து வைக்க இஸ்லாத்தில் அனுமதியில்லை. அப்பெண் ணைப் பெற்றெடுத்த தந்தைக்கும் அனுமதியில்லை என்பதை தெளிவாக உணர்ந்து பெற்றோர்கள் நடந்து கொள்வது அவசியமாகும்.

ஐயம் : ஒரு ஆண் மகன் திருமணம் செய்ய பெண் தேடும்போது மனைவியாக அமையும் பெண்ணிற்கு நபி(ஸல்) அவர்கள் கூறிய தகுதிகள் என்ன? ஆதாரங்களுடன் விளக்குக. பக்கீர் முஹம்மது, சித்தையன்கோட்டை.

தெளிவு : நபி(ஸல்) அவர்கள் திருமணம் புரிய நாடும் மணமகன், மணமகளுக்குக் கூறிய அடிப்படை தகுதி களைக் காண்போம். ஒரு பெண்ணுடைய செல்வத் துக்காக, அழகுக்காக, அவளது குலத்திற்காக, அவளது நல்லொழுக்கத்திற்காக என நான்கு வி­யங் களின் அடிப்படையில் மணமுடிக்கின்றனர். நீ நல்லொழுக்கமுள்ளவளை மணம் புரிவதன் மூலம் வெற்றியடைந்து கொள். என நபி(ஸல்) அவர் கள் அறிவுரைப் பகன்றார்கள். அறிவிப்பு : அபூஹுரைரா (ரழி), ஆதாரங்கள் : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, தாரமி, இப்னு மாஜ்ஜா, பைஹகீ, அஹ்மத். இந்த நபிமொழியை மேலும் விளக்கும் விதமாக நபி(ஸல்) அவர்கள் கூறிய நபிமொழியையும் பாருங்கள். பெண்களை அவர்களின் அழகுக்காக மண முடிக்காதீர்கள்; அவர்களின் அழகு அவர்களை அழித்து விடலாம். அவர்களின் செல்வத்திற்காக மணமுடிக்காதீர்கள். அவர்களின் செல்வம் அவர் களைத் தவறச் செய்திடலாம். நல்லொழுக்கத்திற் காக அவர்களை மணமுடியுங்கள். நல்லொழுக்க முள்ள அழகற்ற கருநிறத்து அடிமைப்பெண் (தீய ஒழுக்கமுள்ள அழகிய பெண்ணை விட) மேலான வள் என நபி(ஸல்) அவர்கள் விளக்கினார்கள். அறிவிப்பு: இப்னு அம்ர்(ரழி), ஆதாரம் : இப்னு ஹிப்பான், அஹ்மத்.

இந் நபிமொழிகள் திருமணம் செய்யவுள்ள மணமகளுக்குள்ள அடிப்படை தகுதிகள் என்பதை அறியலாம். இனி மணமகனுக்குரிய தகுதிகளைக் காண்போம். எவருக்கு திருமண வயது வந்துவிட்டதோ அவர் திருமணம் செய்து கொள்ளட்டும். அது அவரது கண் களையும், வெட்கத்தளங்களையும் பாதுகாக்கும் அரணாக அமைகிறது. எவருக்கு திருமணம் செய்ய வசதிப்படவில்லையோ அவர் நோன்பு வைத்துக் கொள்ளட்டும். அறிவிப்பு : இப்னு மஸ்ஊத்(ரழி), ஆதாரங்கள் : புகாரி, முஸ்லிம், நஸயீ, தாரமி, திர்மிதி, இப்னு ஜாரூத், பைஹகீ, அஹ்மத். இந்த நபிமொழி குறிப்பாக ஆண்களுக்குக் கூறப்பட்டதாகும். இஸ்லாத்தில் மணப் பெண்ணுக்கு நாம் மேலே குறிப்பிட்ட தகுதிகள் இருந்தால் போதுமானது.

அதிலும் நல்லொழுக்கமட்டுமிருந்தால் செல்வம், அழகு இல்லையயனினும் திருமணம் நடைபெற்று விடும். திருமண செலவுக்கும், வீட்டு செலவுக்கும் மணப்பெண் செல்வம் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால், மணமகன் பெண்ணுக்கான மஹர், திருமணச் செலவு, வலீமா விருந்துச் செலவு என பல செலவுகள் செய்ய வேண் டியவனாகிறான். அது மட்டுமின்றி திருமணம் முடிந்த நேரம் முதல் தனது மனைவிக்கான உணவு, உடை, இருப்பிடத்திற்கான செலவுகளையும் செய்யவேண்டிய கட்டாயத்தில் தள்ளப்படுகின் றான். எனவேதான் மணமுடிக்கும் மணப்பெண்ணுக்கு தனது உடல் ரீதியான சுகத்தையும், பொருளாதார ரீதியான சுமையையும் சுமக்கத் தகுதியுடை யவன் தனது திருமண வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ளவும், அதற்கான வசதியில்லாத போது நோன்பு வைத்துத் தனது இச்சையை அடக் கவும் நபி (ஸல்) அவர்கள் அறிவுரைப் பகர்ந்தார்கள்.

எனவேதான் ஒரு வேளை செல்வ செழிப்புள்ள மணமகள் ஒருவருக்கு மனைவியாக அமைந்தாலும் அவளது சொத்து பங்கில் அவளது உரிமையன்றி கணவன் கைவைக்க அனுமதியில்லை என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. ஆகவே மணமுடிக்க நாடும் ஒரு முஸ்லிம் ஆண்மகன் தான் மணக்கும் பெண்ணை உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதுகாக்கும் தகுதியைப் பெற்றிருப்பது அடிப்படை தகுதியாகும்.

ஐயம் : அல்லாஹ் குர்ஆனில் 7:200 வசனத்தில் ஷைத் தனின் ஊசலாட்டம் ஏற்படும்போது இறைவனிடம் பாதுகாப்பு தேடுவீராக என்று கூறுகின்றான். பாதுகாப்பு எப்படி தேடுவது? எந்த முறையில் என்பதை தெளிவாக குர்ஆன், ஹதீஃத்களின் வழியில் தெளிவுத் தாருங்கள். அபூஜிப்ரி மரைக்காயர், அபூதாபி.

தெளிவு : ஷைத்தான் நமது பகிரங்க பரம விரோதி, நம்மை நிச்சயமாக வழிகெடுப்பேன் என அல்லாஹ் விடம் பகிரங்கமாக சவால் விட்டு வந்துள்ள விரோதி. அவனின் ஊசலாட்டங்கள் பல வழிகளில் நம்மைத் தாக்கலாம். எனவே எல்லா தாக்கங்களி லிருந்தும் பாதுகாப்புப் பெற நபி(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டி தந்த வழி. அஊதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். சபிக்கப்பட்ட ஷைத்தானின் எல்லா தீமைகளி லிருந்தும் அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்பதாகும். அறிவிப்பு : இப்னு மஸ்ஊத், அபீ பக்காஸ்(ரழி) ஆதாரங்கள் : புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜ்ஜா, தாரமி, அஹ்மத். நமது வாழ்வை குர்ஆன், ஹதீஃத்களின் வழியில் அமைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் கூறிய வழியில் நாம் ஷைத்தானின் எல்லா ஊசலாட்டங்களிலிருந்து பாதுகாப்புத் தேடுவோமாக.

ஐயம் : நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்று ஐம்பது வேளை தொழுகையைக் கடமையாகக் கொண்டு வந்தபோது வழியில் மூஸா(அலை) அவர்கள் நமது இயலாமையை எடுத்துக் கூறி தொழுகையை குறைத்து வரக்கூறியதாக நபிமொழியுள்ளதே; நம் முடைய இயலாமையை எப்படி அவர்கள் அறிந்து வைத்திருந்தார்கள். இது மறைவான வி­யமல் லவா? னி.றீ. பாதுஷா, வால்பாரை.

தெளிவு : மனிதனைத் தனது பிரதிநிதியாக அல்லாஹ் படைப்பதற்கு முன் வானவர்களிடம் இதைப் பற்றி கூறுகின்றான். வானவர்கள் நம்மைப் படைக்க வேண்டாம். இவர்கள் பூமியில் குழப்பத்தை விளை விப்பார்கள். இரத்தம் சிந்துவார்கள். உன்னை வணங்க நாங்களிருக்கிறோம், மனிதர்களைப் படைக்காதே எனக் கூறினார்கள். இது எப்படி சாத்தியமாகும். அல்லாஹ் கற்றுத் தராத எந்த ஒன்றையும் பேச, செய்ய தெரியாத வானவர்கள் எப்படி இந்தப் பதிலைத் தந்தார்கள். சிறிது யோசித்துப் பாருங்கள். விளக்கம் தெரிந்து விடும். அதாவது இவ்விதம் பேசக் கற்றுக் கொடுத்ததும், அல்லாஹுவாகும்; இதனை திருகுர்ஆனில் 2:32 வசனத்தில் காணலாம். இதே நிலையில்தான் அல்லாஹ் மூஸா(அலை) அவர்களுக்கு கற்று தந்து பேச வைத்துள்ளான். அது அவனால் முடிகின்ற காரியமே என ஏற்பதே ஒரு முஸ்லிமின் நிலையாகும்.

ஐயம் : இறைவன் மரணிக்காதவர்களின் உயிர்களை தூக்கத்தில் கைப்பற்றுகிறான் என 39:42ல் கூறப்பட்டுள்ளதே, உறங்கும்போது மனிதன் உயிருடன் தானே இருக்கிறான். அப்படியிருக்க 39:42ல் கருத்து என்ன? இங்கு இறைவன் குறிப்பிடுவது மரணத்தையா? ஆத்மாவையா? என்.எஸ்.இராஜேந்திரன், தர்மபுரி.

தெளிவு : தாங்கள் குறிப்பிட்டுள்ள 39:42 வசனத்தை முழுமையாக பாருங்கள். தெளிவாகிவிடும். அல்லாஹ் நஃப்ஸ்-ஆன்மாக்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் தூக்கத்திலும் கைப்பற்றி பின்பு எதன் மீது மரணத்தை விதித்து விட்டானோ அதை(த் தன்னிடத் தில்) நிறுத்திக் கொள்கிறான். மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை(வாழ) அனுப்பி விடு கின்றான். சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் உள்ளன. பெரும்பாலான தமிழ் குர்ஆன் மொழி பெயர்ப்புகளில் 39:42ல் நஃப்ஸ் என்றிருப்பதை ரூஹ் என நினைத்து உயிர்களை எனத் தவறாக மொழி பெயர்த்துள்ளனர்.
இது பெரும் தவறாகும். இஸ்லாத்தில் மட்டுமின்றி எல்லா மதங்களிலும் தூக்கம் ஒரு சிறிய இறப்பு சாவு என்ற நம்பிக்கையுள் ளதைக் காணலாம். அதாவது அசந்து உறங்குபவனுக்கு உலகில் நிகழ்பவை எதுவும் தெரியாது. ஆனால் உயிர்மூச்சு மட்டும் ஓடிக் கொண்டிருக்கும், நல்லது கெட்டது தெரியாது, அதாவது இறந்த ஒரு ஜடத்தைப் போன்ற நிலையிலிருக்கின்றான்.

எனவே தான் இதனை சின்ன மெளத்து (மரணம்) எனக் கூறுவர். அல்லாஹ் நாடுவானேயானால் இந்த சின்ன மெளத்தை முடிவான மெளத்தாகவும், மரணமாகவும் மாற்ற முடியும். தூங்கச் சென்றவர் எழவேயில்லை. மரணித்து விட்டார் என சொல்லக் கேட்டி ருக்கிறோம். மனிதன் தினசரி தனது கடைசிப் பயணமான மரணத்தை நினைக்க வேண்டுமென்ற நிலையில் அல்லாஹ் தினசரி தூக்கம் என்ற சிறிய மெளத்தை நல்கியுள்ளான் என்பதை மறத்தலாகாது. எனவேதான் தூங்கச் செல்வதற்கு முன் ஓதும்படி யாக நபி(ஸல்) அவர்கள் கற்று தந்த பிரார்த்தனையில், யா அல்லாஹ்! உனது நினைவில் நான் உறங்கச் செல்கிறேன். உன் நினைவில் என்னை எழுப்புவாயாக, ஒரு வேளை இந்த உறக்கத்தில் எனது உயிரைப் பறித்துக் கொண்டால் அதற்கு அருள்பாலிப்பாயாக,

எனது உயிரை திருப்பி தந்து வாழவிட்டால் நல்லோருடன் வாழச் செய்வாயாக, என கற்று தந்தார்கள். (ஆதாரங்கள், புகாரி, முஸ்லிம், அஹ்மத்) எனவே தூக்கம் என்பது முழு மரணமில்லை, ஆனால் மரணித்தவரின் மனோநிலையை காட்டும் நிகழ்ச்சியாகும். எனவேதான் ஒரு குறிப்பிட்ட தவணை வரை வாழ வைத்து பின் மரணிக்கச் செய் வேன் என அல்லாஹ் 39:42ல் குறிப்பிடுகின்றான்.

ஐயம் : தொழுகை முடிந்ததும் அஸ்தஃபிருல்லாஹ் என 3 தடவைகள் கூறுகிறார்களே, நாம் ஏதாவது தவறு செய்துவிட்டால் அதை நினைத்து அஸ்தஃ பிருல்லாஹ் கூறுகிறோமே அது போன்றதா? தொழுகை முடிந்தபின் இப்படி கூறுவது அவசியமா? அல்லது தொழுகையில் நம்மை அறியாமல் செய்யும் தவறுகளுக்காக சொல்லப்படுவதா? விளக்கம் தரவும். உடன்குடி நாஸர், துபை.

தெளிவு : பர்ழான தொழுகை முடிந்து சலாம் கொடுத்தவுடனே நபி(ஸல்) அவர்கள் அஸ்தஃபிருல்லாஹ் என மூன்று தடவைகள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். (ஆதாரங்கள் முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, அஹ்மத்) என்ற நபிமொழிப்படி நாம் கூறுவது அழகிய சுன்னத்(நபி வழி) ஆகும். இதற்கான எந்தக் காரணங்களைக் கூறினாலும் நபி (ஸல்) அவர்கள் செய்தார்கள். அவர்களை நமது நேர்வழிகாட்டியாக ஏற்றுள்ள நாமும் கூற வேண்டும் என்ற உண்மைக் காரணமே மேல்நோக்கியிருக்க வேண்டும். எனவே நபிவழியென செய்வீர்களாக.

ஐயம் : முஹம்மது(ஸல்) அவர்கள் உங்கள் ஆண்களில் எவருக்கும் தந்தை அல்லர் (33:40) எனக் கூறப் பட்டுள்ளதே, முஹம்மது(ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறந்து இறந்ததாக கூறப்படுகிறதே, விளக்கம் தருக. ஹாஜி முஹம்மது, நிரவி.

தெளிவு : உண்மைதான் நபி(ஸல்) அவர்களுக்கு முதல் மனைவி கதீஜா(ரழி) மூலமாக இரு ஆண் மக்களும், மரியம் கிப்தியா(ரழி) மூலமாக கடைசி யாக ஒரு ஆண் மகனும் பிறந்து இறந்தது உண்மையே. இவர்கள் அனைவரும் சிறு வயதிலேயே சிறுவர்களாக இறந்து விட்டார்கள். ஆண்மை பெற்ற பெரியவர்களாக வளரவேயில்லை. பின் எப்படி நபி(ஸல்) அவர்கள் ஆண்களில் எவருக்கும் தந்தையாக முடியும்? மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள திருகுர்ஆன் வசனத்திலேயே விளக்கமிருப்பதைப் பாருங்கள். மிர்ரிஜாலிக்கும் உங்கள் ஆண்களில் எவருக்கும் அவர் தந்தையல்ல என்றேயுள்ளது. எவரோ பெற்றெடுத்து வளர்த்த ஆண்மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தந்தையாக ஆகமுடியாது என்ற பொரு ளில் கூறப்பட்டுள்ளது. இதற்கொரு சரித்திரப் பின்னணியுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் நபித்துவம் பெற்றது முதல் அவர்களிடம் ஜைது பின் தாபித்(ரழி) என்ற அடிமை யிருந்தார். அவருக்கு நபி(ஸல்) அவர்கள் உரிமை யிட்டபோதும் அவர் நபி(ஸல்) அவர்களை விட்டு பிரியாமலிருந்தார். எனவே அவரை எல்லோரும் ஜைது பின் முஹம்மது முஹம்மதுடைய மகன் ஜைது என அழைக்கலாயினர். அதாவது முஹம்மது (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகன் என்று பொருள் பட கூறலாயினர். இதனை மறுக்கும் விதமாகவும், இஸ்லாத்தில் குழந்தைகளைத் தத்து எடுத்துச் சொந்த குழந்தைகளாக உரிமை கொண்டாடுவதை மறுத்தும் இந்த இறைவசனம் இறக்கப்பட்டதாகும். இப்போது இந்த இறைவசனத்தை முழுமையாகப் படித்துப் பாருங்கள். நபி(ஸல்) அவர்களுக்கு ஆண் வாரிசு கிடையாது. அவரது மரணத்திற்குப் பின் எவரும் வாரிசு உரிமையை எந்த விதத்திலும் கொண்டாட முடியாது என்பதை உணரலாம்.

 

Previous post:

Next post: