10 அறிஞர்கள்+11 மூடர்கள்=21 மூடர்கள்=ஜனநாயகம்!

in 2017 பிப்ரவரி,தலையங்கம்

என்றோ ஓர் அறிஞன் “”10 அறிஞர்களுடன் 11 மூடர்கள் இணையும்போது 21 பேரும் மூடர் களாகி விடுகிறார்கள்.இதுவே ஜனநாயகத் தத்துவம்” என்று ஜனநாயகத்திற்கு விளக்கம் கொடுத்துள்ளார். அதேபோல் இன்னொரு அறிஞர் “”அயோக்கியர் களின் இறுதிப் புகழிடம் அரசியல்” என்று முன் மொழிந்துள்ளார். இந்த இரண்டு அறிஞர்களின் கூற் றுகள் இன்று 100% நிறைவேறிக் கொண்டிருக் கின்றன என்பதை பாராளுமன்ற, சட்டசபை நிகழ்வுகள் நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

நாட்டிலுள்ள தாதாக்கள், சாராய வியாபாரி கள், விபச்சார விடுதிகள் நடத்துபவர்கள், போதைப் பொருள் கடத்துகிறவர்கள், ரவுடிகள், மொல்ல மாறிகள், கிரிமினல்கள், கொலைகாரர்கள், கொள் ளைக்காரர்கள், பிறர் சொத்தை அபகரிப்பவர்கள், மக்கள் சொத்தை சிறிதும் கூச்சநாச்சமின்றி விழுங் குகிறவர்கள்தான் இன்று பெரும்பாலும் முதல்வர் களாக, மந்திரிகளாக, மேயர்களாக, எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி., எம்.சி.களாக தேர்ந்தெடுக் கப்பட்டு, இல்லை விலை கொடுத்து இப்பதவிகளை வாங்கிக் கொண்டு வலம் வந்து ஜமாய்க்கிறார்கள். தவறான வழிகளில் வட்டியும், முதலுமாக பல்லாயி ரம் கோடிகளை அதுவும் மக்கள் சொத்தைச் சுருட்டு கிறார்கள்.
“”உலகின் அழிவுக்குச் சமீபமாக தகுதியற்றவர் களே அதிகாரத்திற்கு வருவார்கள்” என்ற இறுதி இறைத்தூதரின் முன் அறிவிப்பிற்கு ஏற்ப இன்று முற்றிலும் தகுதி அற்றவர்களே ஆட்சி பீடங்களில் அமர்ந்துள்ளனர். பானையில் இருப்பதுதானே அகப்பையில் வரும். அவர்களின் அறிவுக்கு ஏற்ற வாறே அவர்கள் ஏற்படுத்தும் சட்டங்கள் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியுமா?

மக்களிடையே ஒழுக்கக் கேட்டையும், அநீதி அராஜகங்களையும், ஆட்டம் பாட்டம் கொண் டாட்டம் என இரண்டு கால் மிருக வாழ்க்கையான குடி, கூத்தியா, விபச்சாரம், மிருக சல்லாபம் என மனிதப் புனிதனாக உயர வேண்டிய மனிதனை மனித மிருகமாக்கும் அறிவற்ற சட்டங்களே அமுல் படுத்தப்படுகின்றன.
குடிக்கு அனுமதி, விபச்சாரத்திற்கு அனுமதி, அப்பன் பெயர் தெரியா அப்பாவி குழந்தைகளைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கும் வகையில் திருமணமின்றி ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்வதற்கு சட்டத்தில் அனுமதி, ஏன்? இனப் பெருக்கத்தையே கொச்சைப்படுத்தும் வகையில் ஆணும், ஆணும் இணைந்து வாழ்வதற்கு அனுமதி பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழ அனுமதி இப்படி மனிதனாக வாழ விரும்புகிறவர்கள் எழு தவே கூசும் மிருகங்களுக் குரியவற்றை நடை முறைப்படுத்தும் நீதிமன்றங்கள், நீதிபதிகள், அரசுகள், அரசு அதிகாரிகள். தீர்ப்புகள் வழங்கப் படுதில்லை; கோடிக்கணக்கில் விலைபேசி வாங்கப் படுகின்றன. அண்டப் புளுகன் ஆகாசப் பொய்யர் கள் என்று மோடியையும் அவரது மந்திரிகளையும் தான் கூறமுடியும்.

ஏன்? ஐயறிவு மிருகங்களை விட கேடு கெட்ட நிலை. ஆம்! மிருகங்களில் ஆணும் ஆணும், பெண் ணும், பெண்ணும் இணையும் கேடுகெட்ட நிலை யைப் பார்க்க முடியுமா? முடியாதே! மிருகங்க ளுக்கு ஆகும் ஆகாது, கூடும் கூடாது என்ற விதி முறைகள் எதுவுமே இல்லை. ஒழுக்க விதிகள் என எதுவுமே மிருகங்களுக்கு இல்லை. இந்த நிலையில் அந்த மிருகங்களே ஈடுபடத் துணியாத மிகவும் கேடுகெட்ட ஓரினப் புணர்வில் ஈடுபடும் ஒழுக்க விதிகளுக்குக் கட்டுப்பட்ட ஆறறிவு மனிதனைப் பற்றி என்ன சொல்ல? அதைச் சட்டமாக்கத் துணி யும் நீதிமன்றங்களின், நீதிபதிகளின் இழிநிலை பற்றி என்ன சொல்ல?

ஆட்சியாளர்களிலிருந்து, அரசு அதிகாரிகளிலி ருந்து, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டக் கடமைப் பட்ட காவல்துறையிலிருந்து, நீதிபதிகளிலிருந்து, நீதித் துறையிலிருந்து அனைத்துத் துறையினரும் மக்கள் பணத்தைக் கோடிகோடியாக கொள்ளை அடிப்ப தில் ஒருவரோடு ஒருவர் போட்டி போட் டுக் கொண்டு படு உற்சாகமாகச் செயல்படுகிறார்கள்.

முறை தவறி மக்கள் பணத்தை கோடி கோடியா கக் கொள்ளையடிப்பது ஒரு பக்கம் இருக்க, இன் னொரு பக்கம் கொடுமையான வரிகள் மூலம் மக்க ளைக் கசக்கிப் பிழிந்து, பெரும்பான்மை மக்களை வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளி அரசு கருவூலத் தில் குவியும் பணத்தையும் இவர்களின் ஆடம்பர, அநாவசிய விழாக்களிலும், இவர்களின் பேர் புகழுக் காகவும், இவர்கள் செய்யும் அட்டூழியங்கள் காரண மாக தங்களின் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஏற்படுத்தப்படும் பல அடுக்குப் பாதுகாப்பு வளையங்கள் இப்படி இவர்களுக்கா கவே இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களுக்காக அரசு கருவூலத்திலுள்ள மக்கள் பணம் வாரி இறைக் கப்படுகிறது. சூதாட்டங்களில் அதி அதி பயங்கரச் சூதாட்டமாக இன்றைய அரசியல் ஆகிவிட்டது.

இது போதாதென்று மனித சமுதாயத்திற்கு எந்த வகையிலும் உதவாத அதே சமயம் மாநிலங்களுக்கு மாநிலம், நாட்டிற்கு நாடு போட்டி பொறாமையு டன் வீண் பெருமைக்காக பல்லாயிரம் கோடி மக்கள் பணம் வீணடிக்கப்படுவதற்கு ஆட்சியாளர் கள் காரணமாக இருக்கிறார்கள். ஏழைகள், நடுத்தர மக்களுக்கு பல மணி நேரம் மின்தடை; இவர்களின் வீண் ஆடம்பர விழாக்களுக்கு பல ஆயிரம் யூனிட் மின் திருட்டு. மேலும் உலகளாவிய அளவில் தீவிர வாதமும், மத, இன, பிரதேச, மொழிச் சண்டை களை உரமிட்டு நீர் பாய்ச்சி அவற்றை வளர்ப்பதி லும் இந்த ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் தான் முன்னணியில் இருக்கிறார்கள்.
ஆட்சியாளர்கள் பிரச்சினைகளை அணுகும் முறைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் “”நனைத்துச் சுமப்பது” என்று சொல்வார்களே அது போன்ற நிலைதான். விவகாரங்களை முளையிலேயே கிள்ளி எறியாமல் இருந்து விட்டு காலம் கடந்து அது பெரும் அசுர மரமான பின்னர் பெரும் முயற்சி எடுத்து, அரசு பணத்தை அனாவசியமாகச் செல விட்டு கோடரியால் வெட்டிச் சாய்ப்பது போல் தான் அரசு நடவடிக்கைகள் இருந்து வருகின்றன.

இக்காலக் கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பொறுமை இழந்து ஆர்ப்பாட்டம், பந்த், சாலை மறியல், பேருந்து, சரக்குந்து ஓடாமை, அதனால் மக்களுக்கும் பெரும் பாதிப்பு, அரசு பொது சொத் துக்களுக்குத் தீ வைப்பு, உடைத்து நாசமாக்குவது என பல்லாயிரம் கோடி நட்டமான பின்னரே அரசு இயந்திரம் நடவடிக்கையில் இறங்கும். இப்படி எழுத்தில் வடிக்க முடியாத எண்ணற்ற துன்பங்க ளுக்கு இப்போதைய அரசுகளே காரணமாக இருக்கின்றன.
5%பல்லாயிரம் கோடிகளுக்கு அதிபதிகள் மேலும் பல்லாயிர கோடிகளைச் சுருட்டவும், 95% மக்கள் மேலும் மேலும் பரம ஏழைகளாகித் துன்பப் படும் வகையில்தான் இந்த அரசுகள் சட்டங்கள் இயற்றுகின்றன.

புழக்கத்தில் இருந்த 500/-, 1000/- ரூபாய் நோட் டுக்களைச் செல்லாதவை ஆக்கி விட்டு ஏழைகளுக் குச் சாதகமான புதிய 200/- ரூபாய் நோட்டை வெளி யிடுவதற்கு முரணாகக் கோடிக்கணக்கில் பணம் புர ளும் செல்வந்தர்களுக்குச் சாதமாக 2000/- ரூபாய் நோட்டுகள் வெளியிட்டதும், மத்திய மாநில அரசு கள் புத்தம் புதிதாக இயற்றும் சட்டங்களும் எமது இந் தக் கூற்றை உண்மைப்படுத்தப் போதுமானவை யாகும்.

ஆக, ஜனநாயக ஆட்சி முறை அயோக்கியர்கள் ஆட்சியில் அமர்ந்து மக்கள் பணத்தைப் பல வழிகளில் கொள்ளை அடித்து அவர்கள் உண்டு கொழுக்கவும், ஊதாரித்தனமாகச் செலவு செய்ய வும் வழிவகை செய்கிறதே அல்லாமல் மக்களுக்கு உரிய பலனைத் தருவதாக இல்லை. ஜனநாயக ஆட்சி மட்டுமல்ல, சர்வாதிகார ஆட்சி, கம்யூனிச ஆட்சி, சோசலிச ஆட்சி என மனிதர்கள் அமைக்கும் எப்படிப்பட்ட ஆட்சியாக இருந்தாலும், மதங்களை வைத்து மக்களை மயக்கி இந்த ஆட்சியாளர்களைப் போலவே மக்கள் பணத்தை உண்டு கொழுத்து உல் லாச ஆபாச வாழ்க்கை வாழும் புரோகிதர்கள் கூறும் மதங்களின் வாழ்க்கை முறையாக இருந்தா லும், மனிதனின் உண்மையான ஈடேற்றத்திற்கு அவை ஒருபோதும் வழிவகுக்கா.

இவ்வுலகிலும் பெருந்தோல்வி, நாளை மறுமை யிலும் நரக வாழ்க்கையே பரிசாகக் கிடைக்கும். மனித வாழ்க்கைக்கு மனிதனே சட்டம் அமைப்பது திருடனே திருட்டுக்குத் தீர்ப்பு அளிப்பதாகும். பரீட்சை எழுதும் மாணவனே அதைத் திருத்தி புள்ளிகள் போடுவது போலாகும்.

தன்னைப் போல் அற்ப அறிவுள்ள ஒரு மனிதன் தயாரித்த ஒரு நவீன கருவியை இயக்க அதைத் தயாரித்த மனிதனின் வழிகாட்டலை எதிர்பார்க்கும் இந்த அற்ப அறிவுள்ள மனிதன், முழுமையான அறிவுள்ள சர்வ வல்லமை மிக்க தன்னந் தனிய னான, இணை துணை இல்லாத இறைவன் படைத்த மனிதக் கருவியை, படைத்த அந்த இறைவனின் வழிகாட்டலைப் புறக்கணித்து, இந்த அற்ப அறி வுள்ள மனிதனே சுயமாக வழிகாட்டல் அமைத்து அதன்படி நடந்தால் அது உருப்படுமா? அந்த அலங் கோலமே நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறது. நிம்மதியற்ற, அமைதியற்ற, துன்பங்கள் நிறைந்த வாழ்க்கையை மனித சமுதாயம் அனுபவித்து வருகிறது.

இந்த பரிதாப துன்ப நிலை மாறவேண்டுமா? அற்ப அறிவுள்ள மனிதர்கள் போட்ட வாழ்க்கைத் திட்டத்தைக் குப்பையில் போட்டுவிட்டு, அகிலங் களையும், அவற்றிலுள்ளவற்றையும் மனிதனையும் படைத்து, உணவளித்து வரும் நிறைவான அறிவை யுடைய சர்வ வல்லமை மிக்க ஒரே இறைவனின் வழிகாட்டலை எடுத்து நடக்க மனிதன் முன் வர வேண்டும். இறைவன் ஆரம்பத்திலிருந்து அளித்து வந்த ஹிந்து வேதங்கள், யூத தோரா, கிறித்வ பைபிள், இன்னும் இவை போல அனைத்து வேதங் களும் மனிதக் கரம் பட்டு கலப்படமாகி அவற்றின் தூய நிலையை இழந்து விட்டன. இறைவனும் முன்னைய அனைத்துக் கலப்படமான வேதங்களை யும், அரசுகள் புழக்கத்தில் உள்ள (ளீற்rreஐஉதீ) ரூபாய் நோட்டுகளைச் செல்லாதவைகள் ஆக்கி வெற்று பேப்பர்களாக ஆக்குவது போல், செல்லாதவை யாக்கிவிட்டான். செல்லாத நோட்டுகள் அரசால் நிராகரிக்கப்படுவது போல் முன்னைய வேதங்களும் செல்லாத நிலையில் இறைவனால் நிரகாரிக்கப் படும். இறைவனால் முழு மனித குலத்திற்கும் இறுதி யாகக் கொடுக்கப்பட்டு, அந்த இறைவனாலேயே ஒரு புள்ளியும் மாற்றப்படாமல், பாதுகாக்கப்படுவ தோடு, அது இறங்கிய அரபி மொழியும் பேச்சு வழக் கில் இருக்கிறது. முன்னைய வேதங்கள் இறங்கிய அனைத்து மொழிகளும் நடைமுறையில் இல்லாமல் செத்த மொழிகளாகிவிட்டன. இது ஒன்றே அவை செல்லத்தக்கவையல்ல என்பதை உறுதிப் படுத்துகி றது. எனவே மனிதர்கள் அனைவரும் இறைவன் கொடுத்த இறுதி நெறிநூலான அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்தது (3:102,103) அதன்படி நடக்க முன் வந்தால் மட்டுமே உலகம் ஈடேறும். மனிதன் வெற்றி பெறுவான். அல்குர்ஆன் படி தாமும் நடந்து, மற்றவர்களையும் நடத்திச் செல்லக் கட மைப்பட்ட முஸ்லிம்கள் அதன்படி நடக்காததால் மிகக் கடுமையான தண்டனைக்கு ஆளாக இருக்கி றார்கள்.

Previous post:

Next post: