ஐயமும்! தெளிவும்!!

in 2017 மார்ச்,ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : ஷைத்தானை கழுதைகள் பார்க்க முடியும் என ஹதீஃதில் இருப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறுகிறார். அப்படி இருந்தால் தயவு செய்து அந்த ஹதீஃதை தெரிவிக்கவும். முகமது அன்சாரீ, திருச்செந்தூர்.

தெளிவு : இரவில் நாய் குலைப்பதையும் கழுதை கத்துவதையும் செவியேற்றால், அல்லாஹ்விடம் ஷைத்தானை விட்டுப் பாதுகாவல் தேடுங்கள். ஏனெனில், நிச்சயமாக அவை நீங்கள் பார்க்காததை (ஷைத்தானை)ப் பார்க்கின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஜாபீர்(ரழி), நூல் : அபூதாவூது.

ஐயம் : மனிதர்களில் அமல்கள் பதிவு செய்யப்படா மலும் சில வர்க்கத்தினர் இருக்கின்றனரா? ஷேக் அலி, சென்னகரம்பட்டி.

தெளிவு : வர்க்கத்தினர் என தங்கள் வினாவில் குறிப் பிட்டிருப்பதன் பொருள் எமக்குத் தெரியவில்லை. இருப்பினும் அமல்கள் பதிவு செய்யப்படாத மனிதர்கள் இருக்கின்றனரா என்பது தாங்களின் வினா என எடுத்துக் கொண்டு பதிலளிக்கின்றோம்.
ஆம் சிலருடைய அமல்கள் பதியப்படுவதில்லை என்பதைத் தெரிவிக்கும் ஹதீஃத் ஒன்றை கீழே எழுதியுள்ளோம்.
மூவரை விட்டு எழுதுகோல் உயர்த்தப்பட்டி ருக்கிறது.
1. தூங்குபவர் விழித்தெழும் வரையில்
2. குழந்தை வாலிபப் பருவத்தை அடையும் வரையில்
3. பைத்தியம் பிடித்தோர், தெளியும் வரையில் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர். அறிவிப்பவர் : அலீ(ரழி), நூல் : அபூதாவூது, திர்மிதி.
ஐயம் : எனது இரண்டு சக்கர வாகனத்தில் (னிலிமிலிr யஷ்வe) என்னையும் சேர்த்து 2 நபர்களோ, 3 நபர்களோ பயணம் செய்யலாமா? இதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? ஆனால் 3 பேர் பயணம் செய் தால் இங்கே போலீஸ்காரர்கள் பிடித்துச் செல்கின் றார்களே! P.லு.யூ. தாமரைசெல்வன், நாகபட்டினம்.
தெளிவு : இருசக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து பயணம் செல்லக்கூடாது என்பது மோட்டார் வாகன விதிமுறைகளிலுள்ள அரசின் சட்டமாகும். இந்த சட்டத்தை மீறுபவர்கள் காவல் துறையின ரால் வழக்குப் பதியப்படுவார்கள். இதற்குரிய தண்டனையை நீதிமன்றமே வழங்கும்.

ஆனால் யஷ்வe-ல் 3 பேர் அமர்ந்து செல்லவோ இரு நபர்கள் அமர்ந்து செல்லவோ இஸ்லாம் அனு மதிக்கிறது. இச்சலுகை இஸ்லாமிய ஆட்சி நடை பெறாத நாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தால் அதற்கு அந்நாட்டின் சட்டவிதிகளுக்கேற்ப தண்டனை வழங்கப்படலாம். யஷ்வe-ல் இருவரோ மூவரோ பயணம் செய்வதற்கு ஆதாரமாக கீழே உள்ள ஹதீஃத்களைத் தருகின்றோம்.

உஃபைர் என்னும் கோவேறு கழுதையின் மீது நபி(ஸல்) அவர்களுக்குப் பின் நானும் அமர்ந்து சென்றேன். அறிவிப்பவர் : முஆத்(ரழி), நூல்: அபூதாவூத்.
நபி(ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்தபொழுது, அப்துல் முத்தலிபுடைய ஆண் மக்கள் பலர் சென்று நபி(ஸல்) அவர்களை வரவேற்றனர். அப்போது நபி(ஸல்) அவர்கள், அவர்களில் ஒருவரைத் தமக்கு முன்னும் மற்றவரைத் தமக்குப் பின்னும் அமர வைத்துக் கொண்டார். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி), நூல் : புகாரி, நஸாயி.

ஐயம் : காஃபிர்கள் இறக்கும் தருவாயிலேயே வேதனை செய்யப்படுவார்களா? சல்மான்,  குவைத்.
தெளிவு : ரூஹை கைப்பற்றப்படும் நிலையிலேயே அவர்கள் வேதனை செய்யப்படுவார்கள் என்பதை 8:50வது வசனம் தெரிவிக்கின்றது.
மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப் பற்றும்போது, நீங்கள் பார்ப்பீர்களேயானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகு களிலும், அடித்துக் கூறுவார்கள். எரிக்கும் நரக வேத னையைச் சுவையுங்கள் என்று. அல்குர்ஆன் : 8:50

ஐயம் : உங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி ஃபிர்அவ்ன் நியமித்த சூன்யக்காரர்கள் மோசஸ் செய்த சூனியத்தைப் பார்த்துத்தானே மனம் மாறி னார்கள்? அவர்கள் அல்லாஹ்வை இறைவன் என்று மனமாற ஏற்றுக் கொண்டார்களா? இல்லையா? பதில் தருவீர்கள் என்று நினைக்கிறேன். பெனடிக்ட் அலெக்ஸ், தூத்துக்குடி.

தெளிவு : உங்கள் குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். குர்ஆன் எங்களுக்கு (முஸ்லிம்களுக்கு) மட்டும் சொந்தம் அல்ல. (குர்ஆனாகிய) இது உலக மக்கள் யாவருக்கும் நல்லு பதேசமேயன்றி வேறில்லை என்று அல்லாஹ் அறிவித்துள்ளான். எனவே அனைத்து மக்களும் நேர்வழி பெற வேண்டும் என்ற நன்நோக்கோடு மட்டுமே குர்ஆன் ஆகிய இந்த நெறிநூலை இறைவன் அருள் புரிந்திருக்கிறான் என உறுதியாக நம்பிக்கைக் கொள்ளுங்கள்.
குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி என்று தாங்கள் தெரிவித்திருக்கும் வார்த்தைப் பிரயோகத்திலிருந்து குர்ஆனை தாங்கள் படித்துள்ளீர்கள் என்பதை அறிய முடிகிறது. ஆனால் கிருத்துவ நம்பிக்கை தங்களிடம் மேலோங்கியிருப்பதால், குர்ஆனைப் படித்தும், அது கூறும் உண்மைகளை அறியாமல் இருக்கிறீர்கள். ஒருக்கால் வேண்டா வெறுப்புடன் படித்திருந்தால், நடுநிலையோடு மீண்டும் கவன மாகப் படிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின் றோம். இதனால் உள்ளது உள்ளபடி உண்மைகளை அறிய முடியும்.

உங்கள் ஐயத்திற்கான தெளிவையும், குர்ஆனி லிருந்தே பெற முடியும். இருப்பினும், இப்போது தங்களின் ஐயத்திற்கான தெளிவைத் தருகிறோம். அதுவும் எமது சுய சிந்தனையிலிருந்தோ, அறிவாற் றலிலிருந்தோ இதனைத் தரவில்லை. குர்ஆனின் 7வது அத்தியாயத்தின் 113வது வசனத்திலிருந்து 126வது வசனம் வரை உங்கள் முன் வைக்கின்றோம். மோசஸ் செய்தது சூன்யம் அல்ல. இறைவன் புறத் திலிருந்து வந்தது என்பதை முழுமையாக நம்பிக்கை கொண்டுதான் அந்த சூன்யக்காரர்கள் முஸ்லிம் களாயினர் என்பதை அறிவீர்கள். இதன் மூலமாக வேண்டா வெறுப்புடன் கிருத்துவ தாக்கத்துடன் தாங்கள் குர்ஆனை அணுகிய தவறையும் உணர்ந்து விடுவீர்கள்.

ஐயம் : தப்லீஃக் ஜமாஅத்தில் இருந்த நீங்கள் நஜாத் என்ற பிரிவை ஏற்படுத்தினீர்கள். பிரிவு இருக்கக் கூடாது என்று சொல்லும் நீங்கள் இந்த பிரிவை ஏன் ஏற்படுத்தினீர்கள்? தப்லீக்கில் இருந்தே நீங்கள் நேர்வழிபடுத்தி இருக்கலாமே!  முகைதீன், ஜின்னாநகர், 3வது தெரு, புளியங்குடி.

தெளிவு : பலமுறை பதிலளிக்கப்பட்ட வினா இது; இருப்பினும் சுருக்கமாகக் கூறுகின்றோம். தப்லீஃக் ஜமாஅத்தினர் அவர்களின் நெறி நூலாக குர்ஆனை எடுத்துக் கொள்ளாமல், கப்ஸாக்களும் கட்டுக் கதைகளும் நிறைந்த குர்ஆன், ஹதீஃதுக்கு முரண் பட்டவற்றை அதிகமாகக் கொண்ட அமல்களின் சிறப்புகள் புத்தகத்தையும் பலகீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஃத்களையும் கொண்ட முன்தக புல் ஹதீஃத் நூலையும் எடுத்துக் கொண்டிருக்கும் தவறான முரட்டுப் பிடிவாதக் கொள்கையை இரண்டு முறை டெல்லியிலுல்ள தப்லீஃக் மர்கஸில் போய் நேரடியாக தெளிவாக விளக்கி முறையிட் டும் அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் அதில் தான் பரக்கத் இருக்கிறது என்று நினைப்பதை அவர்களின் செயல்பாடுகளிலிருந்து அறிந்தவுடன் நாம் அதிலிருந்து வெறியேறினோம். எந்தப் பிரிவை யும் நாம் ஏற்படுத்தவில்லை. நெறிநூலான குர்ஆன் கூறும் குர்ஆன், ஹதீஃத் கொள்கைகள் மட்டுமே இஸ்லாம் என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல் லவே ஏப்ரல் 1986ல் நஜாத் எனும் பெயரில் மாத இதழ் ஆரம்பிக்கப்பட்டது. பிரிவுகளை சரி கண்ட வர்கள் பத்திரிக்கையின் பெயரையே குர்ஆன், ஹதீஃத் கூறுபவர்களுக்கு நஜாத்காரர்கள் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள். மகிழ்ந்து வருகிறார் கள் என்பதே நடைமுறை உண்மை.

இஸ்லாத்திற்கெதிரான கொள்கைகளைக் கூறிக் கொண்டிருக்கும் தப்லீஃக்கில் இருந்து கொண்டே நேர்வழிப்படுத்துவது எப்படி என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும். இஸ்லாத்தில் இருந்து கொண்டுதான் நேர்வழிப்படுத்தலை செய்ய வேண்டும். இதுவே இறைக் கட்டளை (பார்க்க 5:3, 3:19,85) எவ்வித பிரிவு அமைப்புகளிலிருந்து கொண் டும் செய்யக்கூடாது என்பதை மறந்துவிடாதீர்கள்.

ஐயம் : பள்ளியில் அடி வாங்கினாலும் அங்குதான் தொழவேண்டும் என்று சொல்லும் நீங்கள், நீங்கள் எல்லோரும் சேர்ந்து தானே முதலில் பள்ளியிலி ருந்து வெளியேறினீர்கள். இதற்கு யார் பொறுப்பு? நீங்கள்தானே. இப்ராஹீம், புளியங்குடி.

தெளிவு : நாங்களாக பள்ளியிலிருந்து வெளியேறி னால் அதற்கு பொறுப்பு நாங்கள் ஆவோம். வெளியேற்றப்பட்ட போது கூட மீண்டும் மீண்டும் வெளியேற்றப்பட்ட பள்ளிக்கே சென்று தொழுது வந்தோம். தொழுது வருகின்றோம்.

இந்த பிரச்சனைகளுக்குப் பயந்து ஒதுங்கிய வர்கள் தனிப் பள்ளிக் கட்டிக் கொண்டனர். இன் னும் பயந்தவர்கள் தமது பயந்தாளித்தனம் வெளியே தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக குறிப்பிட்ட இமாம்களின் பின்னால் தொழக் கூடாது என்று தான்தோன்றித்தனமான ஃபத்வாக் களை வாரி இறைத்து, பெண்களைப் போல் வீட்டி லேயே தொழுது கொள்ளும் அடைகாக்கும் கோழி கள் போல் ஆகிவிட்டனர்.

பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்பும் அதே பள்ளிகளுக்கே சென்று தொழுதுவரும் நாங்களா இதற்கு பொறுப்பாளி? அல்லது மத்ஹபு பள்ளிகளை விட்டுவிட்டு தனிப் பள்ளி கட்டிக் கொண்டவர்கள் இதற்கு பொறுப்பாளிகளா? அல்லது இமாம்களின் பின்னால் தொழக் கூடாது எனக் கூறி ஒதுங்கிக் கொண்டவர்கள் பொறுப் பாளிகளா? என தாங்களே சிந்தித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.

ஐயம் : நம் இந்தியக் கலாச்சார உடைகள் இஸ்லா மிய சட்டதிட்டத்திற்கு உட்பட்டு வருமா? அதா வது குறிப்பாக சுடிதார் என்ற உடையில் ஆணின் உடையான Pழிஐமிக்கு இணையான அம்சம் அமைந் திருக்கிறது. அதை நம் சமுதாய மக்கள் அணிவது நபி (ஸல்) அவர்களுடைய கோட்பாட்டைத் தகர்ப்பது போன்றதா? என் கேள்விக்கு தக்க ஆதாரத்துடன் பதில் தேவை. ஃபஹீமா ஃபமிதா, புது தெரு, இளங்கடை, நாகர்கோவில்.

தெளிவு : அல்குர்ஆன் 24:31 முஃமினான பெண்கள் தங்கள் முந்தானைகளால் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். பிற ஆண்களுக்கு தங்களது அழகு அலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது.

33:59 நபியே! நீர் உம் மனைவிகளுக்கும், உம் பெண் மக்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக.
மேற்கண்ட இறை வசனங்களின்படி சுடிதார் மட்டும் அணிவது தவறு. சுடிதார் அணிந்து துப்பட் டாவால் மார்பை மறைத்துக் கொள்ள வேண்டும். தலை முந்தானையையும், தாழ்த்திக் கொள்ள வேண்டும். சுடிதார், Pழிஐமின் வடிவமைப்பில் இல்லாத சேலையும், ஜாக்கெட்டும் கொண்டு புர்கா அணியாமல், தலையையும், மார்பையும் சேலை முந்தானையால் மறைத்துக் கொள்ளும்போது வயிறு பகுதி பிறரின் பார்வையில் படுகிறது அல்லவா? எனவே சேலையும், பிளவுசும் அணியும் சகோதரிகள் கண்டிப்பாக முகம் தெரிய புர்காவும் அணிந்து கொள்ள வேண்டும்.

ஐயம் : நம்மை பாதுகாக்கும் ஒரு ஆடையே ஹிஜாப் ஆகும். மக்களின் கண்களைக் கவரும் விதமாக, வண்ண ஆடைகளாக இப்போதெல்லாம் ஹிஜாப் மாறி வருவது ஏன்? எம் ஆமீனா மனிகாடூ நத்திங் ஃபர்ம், கீழவனேரி, வள்ளியூர்.

விளக்கம் : எந்த வண்ணத்தைத் தாங்கள் இங்கே குறிப்பிடுகிறீர்கள் என்பது தெளிவாக இல்லை. கறுப்பும் ஒரு கலர்தான். வெள்ளையும் ஒரு கலர் தான். குர்ஆனும், ஹதீஃத்களும் ஹிஜாபின் கலரைப் பற்றிப் பேசவே இல்லை. மக்களின் கண்களைக் குறிப்பிட்ட கலர் கவர்கிறது என்று ஒருவர் உணர் வாரேயானால், அந்தக் குறிப்பிட்ட கலரை அவர் தவிர்த்துக் கொள்வது சிறந்தது அல்லவா? இந்த ஆலோ சனை சரியானதா? நிச்சயமாக இல்லை. நினைவு கூறுங்கள். அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் ஹிஜாபில் வண்ணங்களைத் தடை செய்யவில்லை. ஆகையால், வண்ண ஹிஜா புகளைத் தடை செய்வதற்கு நமக்கும் அதிகாரம் இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை தங்களின் கவனத் திற்கு கொண்டு வருகிறோம்.

ஐயம் : அல்லாஹுதஆலா எல்லா படைப்பினங் களின் இடையே மனிதன் என்ற படைப்பையும் படைத்துள்ளான். நாம் அவனுக்காக பல அமல் களையும் நன்மைகளையும் பூர்த்தி செய்து வருகிறோம். ஆதலால், நாம் அல்லாஹு தஆலா இப்படி இருப்பான் அப்படி இருப்பான் என்று கற்பனை செய்து பார்க்கலாமா? .அலிமா பீவி, 14 ரீப் அபார்ட்மெண்ட், வெள்ளாடிச்சீவினை.

விளக்கம் : கற்பனை செய்து பார்ப்பதற்கான அவசி யம் என்ன? இறைவனுக்கு இவ்வுலகில் உருவம் தேவை என்பது அவசியம் என்றால், அல்லாஹ்வே தனக்கு உருவ அமைப்பை அறிமுகப்படுத்தியிருப் பானே? அது அவசியமில்லை என்பதால் தான், உருவ அமைப்பு அறிமுகப்படுத்தவில்லை. தேவை யற்ற எண்ணங்கள் மனதிற்கு வந்துவிட்டாலும், அதை செயலில் கொண்டு வராமல் நம்மைப் பாது காத்து வருகின்ற அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

கல்வியறிவில்லாத சாதாரண மக்கள் இறை வனை வணங்கும்போது இறைவனுக்கு உருவம் இருந்தால்தான் அவனை மனக்கண் முன் கொண்டு வந்து நினைவில் நிறுத்தி அவனை நினைத்து வணங்க முடியும் என்று உருவ வழிபாட்டினர் அவ்வப் போது கூறி வருகிறார்கள். அதாவது கல்வியறிவுள்ள வர்கள் மிகச் சுலபமாக இறைவனை நினைவில் கொண்டு வந்து விடுவார்கள் என்பது இதன் மாற்றுப் பொருள். இறை வழிபாட்டிலும் மேல் வர்க்கத்தினர் தமக்கென்று ஓரிடத்தை ஒதுக்கிக் கொண்டதைப் பார்த்தீர்களா? உண்மையில் அவர் கள் கூறும் கல்வியறிவற்ற அந்த சாதாரண மக்கள் மலிந்து கிடக்கும் ஒரு சமுதாயம் இஸ்லாமிய சமுதா யம்தான் என்று புள்ளி விவர ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அப்படிப்பட்ட சாதாரண மக்களைக் கொண்டு உருவ வழிபாடற்ற வணக்கத்தை அறிமுகப்படுத்தி, அவ்வணக்கத்தை செவ்வனே அரங்கேற்றி தலை நிமிர்ந்து வெற்றி வாகை சூடி பவனி வந்து கொண்டி ருக்கும் ஒரே மார்க்கம் உலகிலேயே இஸ்லாம் மட்டும்தான் என்று மாற்றாரும் புகழ்ந்துரைக்கும் போது, தங்களுக்குள் இப்படி ஒரு எண்ணத்தை ஏன் அனுமதித்துள்ளீர்கள்?

இப்படி இருப்பான், அப்படி இருப்பான் என்ற கற்பனை விளைவுதான் இறைவனை வெண்ணெய் திருடுபவனாக, காதலனாக, காமுகனாக, தேவை யுடையோனாக இன்னும் என்னவெல்லாமாய் இறைவனை அறிமுகப்படுத்தியுள்ளனர் உருவ வழி பாட்டினர். இப்படி இருப்பான், அப்படி இருப் பான் என்று இறைவனை நீங்கள் எப்படிக் கற்பனை செய்தாலும், அவற்றிற்கெல்லாம் அவன் அப்பாற் பட்டவன் என்பதை அல்லாஹ் கூறுவதைப் பாருங் கள். மேலும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்குர்ஆன் : 112:4)

அல்லாஹ்வுடன் பேசிய மூசா(அலை) அவர்க ளாலும் நபி(ஸல்) அவர்களாலுமே அல்லாஹ்வைப் பார்த்து வழிபட முடியுமா?
பார்வைகள் அவனை அடைய முடியாது. ஆனால் அவனோ யாவற்றையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவன், தெளிவான ஞானமுடைய வன். (அல்குர்ஆன் : 6:103)

Previous post:

Next post: