ஐயம் : தமக்கு நோய் ஏதுவுமின்றி தமது சொந்த வேலைக்காகச் செல்லக்கூடிய ஒருவர் டாக்டரிடம் சென்று குறிப்பிட்ட சில தினங்கள் தமக்கு நோயிருந் ததாகவும் அந்த தினங்களுக்குப் பின்னர் தாம் வேலையில் சேருவதற்காக நோய குணமாகிவிட்ட தாகவும் சான்றிதழ் பெற்று வேலைக்குச் செல்கிறார் களே! இதுப் பொய்யாகாதா? தாம் வேலை செய்யும் நிறுவனத்தை ஏமாற்றுவதாகாதா?
ஷைக் முஹ்யித்தீன், திருநெல்வேலி.
தெளிவு : நிச்சயமாக இவ்வாறு செய்வது மாபெறும் பாவமாகிய பொய்யாக இருப்பதோடு, தாம் வேலை செய்யும் நிறுவனத்தாருக்குச் செய்யும் மாபெரும் துரோகச் செயலாகும். இவற்றுக்கெல் லாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும். இத்தகையோர் பின்வரும் ஹதீஃதை கவனிப்பார்களாக.
நாங்கள் நபி(ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள் பெரும் பாவங்களில் மிகப் பெரியவை இன்னவை என்று உங்களுக்கு எடுத்துக் கூறட்டுமா? என்று மும்முறை கூறிவிட்டு அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோரை இம்சித்தல், பொய் சாட்சி கூறுதல் ஆகியவையாகும் என்றார்கள். (அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ரா(ரழி), முஸ்லிம்)
ஐயம் : புதுப் பள்ளிவாசலுக்கு திறப்பு விழா நடத்து வதையும், அதில் முஸ்லிம்கள் கலந்துக் கொள்வதை யும் இஸ்லாம் புனிதமாகக் கருதுகிறதா? ஏழு பள்ளி வாசல் திறப்பு விழாக்களுக்குச் சென்றால் ஒரு ஹஜ்ஜு செய்வதற்குச் சமம் என்கிறார்களே இவற் றுக்கெல்லாம் ஹதீஃதில் ஆதாரமுண்டா?
எம்.ஏ.ஹாஜி முகமத், பி.ஏ. நிரவி.
தெளிவு : ஒருவர் அல்லாஹ்வுக்கு ஒரு பள்ளிவாசல் கட்டினால் அவருக்காக சுவர்க்கத்தில் ஒரு வீட்டை அல்லாஹ் கட்டுவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (உஸ்மான்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
இவ்வாறு பள்ளிவாசல் கட்டுவதால் உள்ள பலா பலன்களை எடுத்துக் கூறி நபி(ஸல்) அவர்கள் பள்ளி வாசல் கட்டுவதற்காக ஆர்வமூட்டினார்களே தவிர, அதற்காகத் திறப்பு விழா கொண்டாட வேண்டு மென்றோ, அதற்காக முஸ்லிம்கள் செல்ல வேண்டும் என்றோ நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை.
பெரும்பாலும் இன்று பள்ளி கட்டி, திறப்பு விழா நடத்துவதெல்லாம் அதை நடத்தும் ஊர்வாசி களின் பெருமையை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகிறது. ஓர் ஊரில் பெரியதொரு பள்ளி வாசல் கட்டப்படுகிறதென்றால் அப்பள்ளியை தொழுகையாளியைக் கொண்டு நிரப்புவதில் தான் அந்த ஊருக்கு கைர்-பரக்கத்- சிறப்பு முதலியவை இருக்கிறதே தவிர பள்ளித் திறப்புவிழா என்ற பெயரால் பிற ஊர் சகோதர முஸ்லிம்களுக்கு அழைப்புக் கொடுத்து அவர்களெல்லாம் வந்து பள்ளியை நிரப்புவதன் மூலம் என்ன பயன் இருக்க முடியும்?
பள்ளிவாசல்களின் வகையில் மக்கள் ஒருவருக் கொருவர் பெருமையாகப் பேசிக் கொள்வது யுக முடிவுகால அறிகுறிகளில் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரழி), அபூதாவூத், நஸயீ, தாரமீ)
இன்று மேற்காணும் ஹதீஃதில் கூறப்பட்டிருப் பதுப் போல் அநேக ஊர்களில் நமது பள்ளியில் மினாரா 10 கிலோ மீட்டருக்கு அப்பால் நின்று பார்க்கும்போதே தெரிகிறது. நமது பள்ளியைப் போன்று கவர்ச்சிகரமானப் பள்ளி இந்த பகுதியி லேயே கிடையாது. அந்த ஊர் பள்ளியை விட நமதூர் பள்ளி தான் மிக அலங்காரமாக, பார்வைக்கு எடுப்பாக இருக்கிறது என்றெல்லாம் பேசிக் கொள் வதை சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம். அப் பள்ளியில் தொழுவோரைப் பார்க்கப் போனால் ஒரு ஸஃப்புக்கும் இழுபறியாக இருக்கும்.
7 பள்ளிவாசல்களின் திறப்பு விழாக்களுக்குச் சென்றால் ஒரு ஹஜ்ஜு செய்வதற்கு சமம் என்பது ஏதோ ஒரு புண்ணியவானால் கட்டிவிடப்பட்ட சரடே அன்றி வேறில்லை. நபி(ஸல்) அவர்களின் ஹதீஃத்களில் இவ்வாறு ஏதுவுமில்லை. 7 பள்ளி வாசல் திறப்பு விழா மட்டுமின்றி 700 பள்ளிகளின் திறப்பு விழாவுக்குச் சென்று வந்தாலும் அவை ஒரு ஹஜ்ஜு செய்வதற்கு சமம் என்று கூற முடியாது. காரணம் ஹஜ்ஜு செய்வது என்பது அல்லாஹ் வினால் விதிக்கப்பட்ட கடமைகளில் ஒன்றாகும். பள்ளிவாசலுக்குத் திறப்புவிழாச் செய்வதென்பதும், அதற்காகச் செல்ல வேண்டும் என்பதும் அல்லாஹ் வினாலும் அவனது ரசூலினாலும் ஏவப்பட்டவை அல்ல.
நமது இம்மார்க்கத்தில் இல்லாதோர் அமலை ஒருவர் செய்வாரேயானால் அது மறுக்கப்பட வேண்டியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
ஐயம் : ஒருவர் மற்றொருவரைப் பார்த்து சப்தமாக ஸலாம் கூறும்போது அந்த சப்தம் எமது காதிலும் விழுகிறது. ஆனால் நமக்குக் கூறவில்லை என்று தெளிவாகத் தெரிந்த நிலையில் அந்த ஸலாத்திற்குப் பதில் அளிப்பது அவசியமா?
எஸ்.எம். நாஸர், நாகர்கோவில்.
தெளிவு : மேலும் எவரேனும் உங்களுக்கு ஸலாம் கூறினால் அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள் அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக் கெடுப்பவனாக இருக்கிறான். (4:86)
மேற்காணும் வசனத்தில் உங்களுக்கு ஸலாம் கூறினால் என்ற வாசகம் இடம் பெற்றிருப்பதால் எவருக்கு ஸலாம் சொல்லப்படுகிறதோ அவர் தான் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளார் என்பதை அறிகிறோம். பிறருக்கு ஸலாம் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருப்பவர் மீது பதில் ஸலாம் கூறுவது கடமை இல்லை.
ஐயம் : காலை, மாலை, சுப்ஹு, மஃரிபுத் தொழு கைக்குப் பின் குல்ஹுவல்லாஹு அஹத், குல் அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதுவது மிகவும் நல்லது என்ப தாகக் கேள்விப்பட்டுள்ளேன். இவற்றை ஒருமுறை மட்டும் ஓதுவதா? மும்முறை ஓத வேண்டுமா? ஹதீஃதின் அடிப்படையில் பதில் எழுதவும்
பி.எஸ்.அப்துல்காதிர், கடையநல்லூர்.
தெளிவு : அப்துல்லாஹ் பின் குபைப்(ரழி) கூறுகிறார்கள்.
நாங்கள் ஒருமுறை கடினமான இருளும், மழையுமுள்ள ஓர் இரவில் நபி(ஸல்) அவர்களைத் தேடி வெளிக்கிளம்பினோம். அப்போது (ஓர் இடத் தில்) அவர்களைக் கண்டுபிடித்து விட்டோம். அந் நிலையில் அவர்கள் (என்னை நோக்கி) சொல்வீராக! என்றார்கள். அதற்கு நான் எதைச் சொல்வதென்று கேட்டேன். அப்போது அவர்கள் குல்ஹுவல் லாஹு அஹதுவையும், குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் ஆகியவைகளைக் காலையிலும், மாலையிலும் (சுப்ஹுக்குப் பின்னும், மஃரிபுக்குப் பின்னும்) மும்முறை ஓதுவீராக. இவை உனக்கு எல்லாவற்றுக்கும் போதுமானவையாகும் என்றார்கள். (அப்துல்லாஹ்பின் குபைப்(ரழி), திர்மிதீ, அபூதாவூத், நஸயீ)
மேற்காணும் ஹதீஃதின்படி மேற்காணும் சூராக்களை மும்முறை ஓத வேண்டும் என்பதாக அறிகிறோம்.
ஐயம் : இரவில் படுப்பதற்கு முன் குல்ஹுவல் லாஹு அஹத் சூராவையும் அதற்குப் பின்னுள்ள சூராக்களையும் ஓதி இரு கைகளிலும் ஊதி உடல் முழுவதும் தடவிக் கொள்வது குறித்து ஹதீஃதில் ஆதாரமுண்டா? இஸ்மாயில் மொய்தீன, மதுரை.
தெளிவு : நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு இரவும் படுக்கைக்காக விரிப்பில் அமரும்போது குல்ஹுவல் லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் பலக், குல் அஊது பிரப்பினாஸ் ஆகிய சூராக்களை ஓதி அவற்றை தமது இரு கைகளில் ஊதி, அவற்றால் தமது தலையிலும், முகத்திலும், உடலின் முற்பகுதி யிலும் தடவுவார்கள். இவ்வாறு மும்முறை செய் வார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)
ஐயம் : ஜம் ஜம் நீரை நின்று கொண்டு அருந்துகிறார் களே அப்படித்தான் அருந்த வேண்டுமா? அதற்கு ஆதாரமுண்டா? எஸ்.எம்.நாஸர், நாகர்கோவில்.
தெளிவு : நான் நபி(ஸல்) அவர்களிடம் ஜம்ஜம் தண்ணீரில் ஒரு வாளி கொண்டு வந்தேன். அப் போது அவர்கள் அதை நின்று கொண்டு குடித் தார்கள். (இப்னு அப்பாஸ்(ரழி), புகாரீ, முஸ்லிம்)
ஜம்ஜம் நீரை நின்று கொண்டுதான் குடிக்க வேண்டும் என்பதில்லை. நபி(ஸல்) அவர்களைப் போல் நின்று கொண்டும் குடிக்கலாம் என்பதை அறிகிறோம்.
ஐயம் : சிலர் வெள்ளிப் பாத்திரங்களில் தண்ணீர் முதலியவை குடிப்பது தான் கூடாது. வெள்ளிப் பாத்திரங்களில் சந்தனம் போன்ற பொருட்களை குழப்பிக் கொடுப்பது கூடும் என்கிறார்கள். இவ்வாறு செய்வதற்கு மார்க்கமுண்டா?
நைனா முஹம்மத், இளங்காக்குறிச்சி
தெளிவு : வெள்ளி, தங்க பாத்திரத்தில் நீங்கள் குடிக்க வேண்டாம். இவ்வாறே இவற்றின் தட்டுகளில் சாப்பிட வேண்டாம். இவை அவர்களுக்கு (காஃபிர் களுக்கு) இம்மையிலும் உங்களுக்கு (முஸ்லிம் களுக்கு) மறுமையிலும் உள்ளன என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஹுதைபா (ரழி), புகாரீ, முஸ்லிம்)
இதன் அடிப்படையில் தங்கம், வெள்ளி பாத்திரங்களை எக்காரணத்தை முன்னிட்டும் அறவே உபயோகிக்கக் கூடாது என்பதை அறிகிறோம்.
ஐயம் : பிறரிடம் இருந்து உதவியைப் பெற்றவர்கள் அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிலர் “”ஷிக்கரிய்யா” என்றும், சிலர் “”மிக்க நன்றி” என்றும் இவ்வாறு ஒவ்வொருப் பகுதியுள்ளவர்கள் தமது பழக்கத்திற்கேற்ப ஏதோ ஒன்றைக் கூறுகிறார்கள். இது வகையில் நபிவழி என்ன?
முஹம்மது இப்றாஹிம், சென்னை
தெளிவு : மக்களுக்கு நன்றி செலுத்தாதவர் அல்லாஹ் வுக்கு நன்றி செலுத்தியவர் அல்லர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அபூஹுரைரா (ரழி), திர்மிதீ அஹ்மத்)
இதன்படி பிறருடைய உதவியைப் பெறுவோர் அவருக்காக நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளார் என்பதை அறிகிறோம்.
ஒருவருக்கு உதவி செய்யப்பட்டு அவர் உதவி செய்தவரை நோக்கி “”ஜஜாக்கல்லாஹு” அல்லாஹ் உமக்கு நற்கூலி அளிப்பானாக! என்று கூறுவாரேயா னால் (அவருடைய உதவிக்கு நன்றி செலுத்தி) அவரைப் புகழும் வகையில் மிக அதிகமாகவே நடந்துள்ளார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள். (உஸாமத்துப்னிஜைத்(ரழி), திர்மிதீ)
ஆகவே பிறருக்கு நன்றி செலுத்தும்போது “”ஜஜாக்கல்லாஹு கைரா” என்று கூறுவதுதான் நபி வழி என்பதை அறிகிறோம்.