அபூ ஃபாத்திமா
அவன்தான் எழுத்தறிவில்லா மக்களிடம் அவனு டைய வசனங்களைப் படித்துக்காட்டி, அவர்க ளைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு நெறிநூலையும், ஞானத்தையும் கற்பிக்கும்படியான தூதரை அவர் களிலிருந்தே அனுப்பி வைத்தான், அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர். (62:2)
அவர்கள் எழுதப் படிக்கத் தெரியாத நபியாகிய (நம்) தூதரைப் பின்பற்றுகிறார்கள். அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார் கள். அவர், அவர்களை நன்மையைக் கொண்டு ஏவு வார். இன்னும், தீமையை விட்டும் அவர்களை அவர் விலக்குவார், தூய்மையானவற்றை அவர் களுக்கு ஆகுமாக்குவார், கெட்டவற்றை அவர்களுக் குத் தடுத்துவிடுவார், இன்னும், அவர்களை விட்டு அவர்களுடைய சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும் (கடினமான கட்டளை களையும்) இறக்கிவிடுவார். எனவே, எவர்கள் அவரை நம்பி அவரைக் கண்ணியப்படுத்தி அவருக்கு உதவி செய்து அவருடன் அருளப்பட்டி ருக்கும் ஒளியை(நெறிநூல்)யும் பின்பற்றுகிறார் களோ, அவர்கள் தாம் வெற்றியாளர்கள். (7:157)
(நபியே!) நீர் கூறுவீராக! மனிதர்களே! நிச்சய மாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன், வானங்கள், பூமி ஆகியவற் றின் ஆட்சி அவனுக்கே உரியது. அவனைத்தவிர (அடிபணிவதற்குரிய) கடவுள் (வேறு) யாருமில்லை. அவனே உயிர்ப்பிக்கின்றான். அவனே மரணம் அடையும்படியும் செய்கிறான். ஆகவே, அல்லாஹ் வின்மீதும், எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொள்ளுங் கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவனது வார்த்தைகளின் மீதும் நம்பிக்கை கொள்கிறார். அவரையே பின்பற்றுங்கள், நீங்கள் நேர்வழி பெறுவீர்கள். (7:158)
அபூ ஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள் :
“”அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க் காமல் இருந்ததில்லை!” என்று நபி(ஸல்) கூறினார் கள், அப்போது நபிதோழர்கள், “”நீங்களுமா?” என்று கேட்டார்கள் “”ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!” என்று நபி(ஸல்) பதிலளித்தார்கள். (புகாரீ:(ர.அ.) 2262)
மேலே எடுத்து எழுதப்பட்ட மூன்று குர்ஆன் வசனங்களையும் புகாரீ 2262 ஹதீஃதையும் மீண்டும் மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொள்ளுங்கள். முதல் நபி ஆதம்(அலை) முதல் இறுதி நபி முஹம்மது (ஸல்) வரை பல்லாயிரம் நபிமார்கள் மனித குலத் தினரை நேர்வழிப்படுத்த அல்லாஹ்வால் தேர்ந் தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் சில குறிப்பிட்டப் பகுதியினருக்காகவும், சிலர் சில இனத்திற்காகவும், சிலர் சில குடும்பத்தினருக்கா கவும், நபியாக அனுப்பப்பட்டுள்ளனர். ஒரே காலக் கட்டத்தில் ஒன்றுக்குமேல் நபிமார்களும் இருந் திருக்கிறார்கள்.
அவர்களுக்கு இறைவனால் அருளப்பட்ட வாழ்க்கை நெறிநூல் செய்திகள்(மவ்லவிகளின் பாஷையில் வேதங்கள்) தூய இஸ்லாமிய மார்க்கம் முழுமையாக நிறைவு பெறாத நிலையிலும், தற் காலிகமானவையாகவும், அவை இரத்து செய்யப் பட்டு புதிய வாழ்க்கை நெறிச் செய்திகள் அருளப் படக் கூடிய நிலையிலும் இருந்தன. இந்த நிலை யிலும் கூட அல்லாஹ் படித்துப் பட்டம் பெற்ற மேதைகளை நபியாக-இறைத்தூதராக ஒருபோதும் தேர்ந் தெடுக்கவில்லை. அந்தந்தக் காலக்கட்டத்தில் மெத்தப்படித்த மேதைகள் இல்லாத காரணத்தால், அல்லாஹ் படிக்காத பாமரர்களை, ஆடு மேய்த்த வர்களை நபிமார்களாகத் தேர்ந்தெடுத்தான் என்று சொல்ல முடியுமா? ஒருபோதும் சொல்ல முடியாது.
ஷைத்தான் முதல் நபி ஆதம்(அலை) அவர்களிடமே தனது ஷைத்தானிய வேலையை ஆரம்பித்து விட்டான். அவர்களின் மறைவுக்கும் மிகக் குறுகிய காலத்திலேயே ஷைத்தான் அல்லாஹ்விடம் பெற்ற வரத்தின்படி (பார்க்க : 2:30-39, 7:11-25, 15:26-44) மனித குலத்திலிருந்தே ஒரு பிரிவினரைத் தனது நேரடி முகவர்களாகத் (புஆeஐமி) தேர்ந்தெடுத்துக் கொண்டான். அதற்கும் தக்கக் காரணம் உண்டு. குலத்தைக் கெடுக்கும் கோடாலிக் காம்பு என்று சொல்வது வழக்கத்தில் உள்ளது. காரணம் என்ன தெரியுமா? கோடாலி இரும்பினாலானது. அந்தக் கோடாலிக்கு இரும்பினாலான காம்பைப் போட் டால் அது கொண்டு வேகமாகவும், எளிதாகவும் மரங்களை வெட்டிச் சாய்க்க முடியுமா? ஒரு போதும் முடியாது. அதற்கு மாறாக மரத்திலிருந்தே ஒரு கோடாலிக் காம்பைப் போட்டால், மிக எளி தாகவும், வேகமாகவும் மரங்கள் அனைத்தையும் வெட்டிச் சாய்க்க முடியும்.
இதே தந்திரத்தைத்தான் ஷைத்தானும் கடை பிடிக்கிறான். மனிதகுலத்தினரில் பெரும்பா லோரை வெட்டிச் சாய்ப்பதாக இருந்தால் அதா வது பெரும்பாலோரை வழிகெடுத்து நரகில் தள்ளி தனது சபதத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்றால், மனிதகுலத்தினரில் இருந்தே கோடாலி காம்பு போல் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று திட்டமிட்டே இம்மதகுருமார்களைத் தனது ஏஜண்டாகத் தேர்ந்தெடுத்துள்ளான். இம்மதகுரு மார்களும் மனித குலத்தினரைக் கொண்டே நரகை நிரப்பும் ஷைத்தானின் சபதத்தை முழுமையாக நிறைவேற்றத் துணை போய்க் கொண்டு அதற்கா கவே முழு மூச்சாகப் பாடுபட்டு வருகிறார்கள்.
மனிதகுலம் ஆரம்பமான ஆதி பிதா ஆதம் (அலை) அவர்களிலிருந்தே ஷைத்தானின் நேரடி முகவர்களான இடைத்தரகர்களான புரோகிதர் களான இம்மதகுருமார்களே மனித குலத்தினரிடம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். மனிதனைப் படைத்த இறைவன் மனித வெற்றிக்கு என்று கொடுத்த சாந்தி மார்க்கம் இஸ்லாம் என்ற ஒரே நேர் வழியாகும். முஸ்லிம் மதம் உட்பட அனைத்து மதங் களும் ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளான இம்மதகுருமார்களின் கற்பனைகளில் உதித் தவையே. நாளை நரகில் சேர்ப்பவையே!
யார் சுவர்க்கத்தை அடைய சரியான நேர்வழி யைச் சொல்கிறார்கள்? யார் நேர்வழி என்று சொல்லி நரகை அடையும் கோணல் வழிகளைச் சொல்கிறார்கள் என்பதை எளிதாக அறிந்து கொள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வே அல்குர் ஆனில் வழிகாட்டியுள்ளான். யார் 2:186 இறைவாக் குச் சொல்வது போல் மனிதர்களில் யாரையும், எந்த மதகுருவையும் நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்பி, 7:3 இறைவாக்குச் சொல்வது போல் அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆன், மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஃதை (53:2-5) மட்டுமே பற்றிப் பிடித்து 6:153 இறைவாக்குக் கூறும் ஒரே நேர்வழியில் நடங்கள் என்று கூறுபவர்கள் சுவர்க் கத்திற்கு வழிகாட்டுகிறார்கள். யார் குர்ஆன் உங்க ளுக்கு விளங்காது, உங்கள் தாய் மொழியில் குர் ஆனைப் படித்தாலும் உங்களுக்கு அது விளங்காது; நாங்கள் விளக்கும் விளக்கத்தை ஏற்று அதன்படி நடப்பவர்கள் மட்டுமே நேர்வழி நடந்து சுவர்க்கம் அடைய முடியும் என்பவர்களே நரகை நிரப்பி ஷைத்தானிடம் பரிசு பெற விரும்புபவர்கள்; அவர் களே மதகுருமார்கள். இந்த உண்மையை நீங்களே குர்ஆன் 7:21 வசனத்தைப் படித்து அறிய முடியும். இங்கு ஷைத்தான் ஆதம்(அலை) அவர்களிடமும் அவரது மனைவியிடமும் கூறியதை கூர்ந்து கவனியுங்கள்.
அல்லாஹ் 2:35 குர்ஆன் வசனத்தில் நேரடியாகக் கட்டளை இட்டுள்ளதற்கு முரணாகச் சுய விளக்கம் கொடுத்து, (பார்க்க : 7:20)
நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் உபதேசம் செய்பவர்களில் (ஒருவனாக) இருக்கிறேன்” என்று சத்தியமும் செய்தான். (7:21)
இவ்வாறு உபதேசம் செய்து ஷைத்தான் என்ன செய்தான்? அவ்விருவரையும் அல்லாஹ்வுக்கு மாறு செய்ய வைத்தான். ஆயினும் அவ்விருவரும் ஷைத் தானைப் போல் ஆணவம் பேசாமல் தங்கள் தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டார் கள்; அதனால் தப்பினார்கள். (பார்க்க : 7:23)
அன்று ஷைத்தான் கடைபிடித்த அதே தந்திரத் தைத்தான் மதகுருமார்களும், மவ்லவிகளும் கடை பிடிக்கிறார்கள். நாங்கள்தான் உங்களுக்கு நேர்வழி காட்டுகிறோம்; எங்களுக்குத்தான் நேர்வழி தெரி யும் என்று சூன்யப் பேச்சால் மயக்கி ஷைத்தானைப் போல் குர்ஆன் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்து அவற்றின் நேரடிக் கருத்துக்களை இருட் டடிப்புச் செய்து வழிகேடுகளை நேர்வழியாகக் காட்டி அவர்களை நம்பியுள்ள பெருங்கொண்ட மக்களை நரகில் தள்ளி ஷைத்தானின் ஏஜண்டாகச் செயல்படுகிறார்கள். (பார்க்க : 2:159-162)
ஆக ஆதம்(அலை) அவர்களின் காலத்திற்குப் பிறகு ஒவ்வொரு சமுதாயத்திலும் மார்க்கம் கற்ற மேதைகள் என வீண் பெருமை பேசும் மதகுருமார் கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அந்த மத குருமார்களிலிருந்து ஒருவரைக் கூட அல்லாஹ் நபி யாகத் தேர்வு செய்யவில்லை.
அதே சமயம் எழுதப் படிக்கத் தெரியாத, ஆடு மேய்த்தவர்களை-அவாம்களை அல்லாஹ் ஏன் தேர்ந்தெடுத்தான் தெரியுமா? நபிமார்களின் பணி என்ன தெரியுமா? அவர்களது கடமை குர்ஆனில் உள்ளதை அதற்குச் செயல் விளக்கமாக அல்லாஹ் வஹி மூலம் தூதருக்கு அறிவித்ததை (ஹதீஃத்) மட்டுமே மக்கள் மத்தியில் எடுத்து வைக்கக் கடமைப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் இறுதித் தூதருக்கே அல்லாஹ் வஹியாக அறிவித்த குர்ஆன் வசனங்கள், ஹதீஃத் மற்றும் அல்லாஹ்வின் கண் காணிப்பில் (52:48) அல்லாஹ் அனுமதித்தவை அல்லாத மற்ற அவர்களின் சுய கருத்துக்களை மார்க்கமாக்க அனுமதி இல்லாத நிலையில் இம்மத குருமார்களின் சுய கற்பனைகள் மார்க்கம் ஆகுமா? சிந்தியுங்கள்! (பார்க்க : 33:36)
பொதுவாக படித்துப் பட்டம் பெற்ற அறிஞர் களாக இருந்தால் அதிலும் குறிப்பாக மார்க்கம் கற்ற மேதைகளாக இருந்தால், அவர்களிடம் அவர்களை அறியாமலேயே ஆணவம், ஆங்காரம், பெருமை இருக்கத்தான் செய்யும். இதையே இறைவன் 33:72 இறைவாக்கில் மனிதன் (தனக்குத்தானே) அநியா யம் செய்பவனாகவும் அறிவிலியாகவும் இருக்கி றான் என்று அடையாளம் காட்டியுள்ளான். எனவே படித்துப் பட்டங்கள் பெற்ற மேதைகளுக்கு குர்ஆனில், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடி சொல்ல மனம் வராது. அவற்றில் ஷைத்தானைப் போல் தங் கள் சுய கருத்துக்களையும் புகுத்தி தங்களை நம்பி யுள்ள மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளி ஆண வம் பிடித்த ஷைத்தானுக்குத் துணை போகத்தான் செய்வார்கள். அல்லாஹ் முதல் நபி ஆதம்(அலை) அவர்களிலிருந்து இறுதி நபி முஹம்மது(ஸல்) வரை வந்த பல்லாயிரக்கணக்கான நபிமார்களில் ஒருவரைக் கூட இம்மதகுருமார்களிலிருந்து தேர்ந் தெடுக்கவில்லையே ஏன் என்பது இப்போது புரிகி றதா? அதேபோல் இன்றும் நாங்கள் தான் மார்க்கம் கற்ற மேதைகள், பட்டம் பெற்ற ஆலிம்கள், மவ்லவி கள் என்று பெருமை பேசும் மதகுருமார்கள் மார்க் கப் பணிக்கு அணுவளவும் தகுதி இல்லாதவர்களே!
இதை இன்னும் ஓர் உலகியல் நடைமுறை மூலம் விளங்க ஓர் உதாரணம். ஒரு முக்கியமான செய்தி. உடனடியாக மக்களிடம் போய்ச் சேரவேண்டிய கட்டாயம்! அரசு என்ன செய்கிறது? படித்த மேதை களை அதற்காகத் தேர்வு செய்வதில்லை. பாமரர் களிலிருந்து ஒருவனைத் தேர்ந்தெடுத்து அச் செய்தியை அப்படியே மனப்பாடம் செய்ய வைத்து அச்செய்தியை அப்படியே தண்டோராப் போட்டுச் சொல்ல வைக்கிறது. அவனும் அவனுக்குச் சொல் லிக் கொடுத்ததை அப்படியே சொல்வானே அல்லாமல் அதில் கூட குறையச் செய்யமாட்டான். செய்தி உள்ளது உள்ளபடி மக்களிடம் போய்ச் சேர்ந்து விடும். அதற்கு மாறாக ஒரு மெத்தப் படித்த மேதையை அதற்கு ஏற்பாடு செய்தால், அச் செய்திக்கு மேலதிகமாக தன் கற்பனைகளையும் சேர்த்து (சிமுமிrழி ய்ஷ்மிமிஷ்ஐஆ) மக்கள் அசல் செய்தியை விளங்க விடாமல் ஆக்கி விடுவார்.
இதுபோல்தான் மார்க்க மேதைகள், பட்டம் பெற்ற மவ்லவிகள் என பெருமை பேசும் மவ்லவி கள் மார்க்கப் பணியில் அமர்த்தப்பட்டால் 2:159, 161,162 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல் அல்லாஹ் மிகமிகத் தெளிவாக மனிதர்களுக் கென்றே விளக்கியுள்ள குர்ஆன் வசனங்களின் நேரடிக் கருத்தைத் திரித்து வளைத்து அவற்றின் உண்மைக் கருத்தை இருட்டடிப்புச் செய்து விடு வார்கள். அவர்கள் நாளை அடையப் போகும் நரக வேதனைகளை 2:161,162 குர்ஆன் வசனங்கள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறினாலும் அவர்களின் பெருமை காரணமாக 7:146 குர்ஆன் வசனம் கூறுவது போல் அல்லாஹ்வே இந்த மவ்லவி களை குர்ஆனை விளங்குவதை விட்டும் திருப்பிவிடு கிறான். குர்ஆன் வசனங்களை நேரடியாகக் காட்டி னாலும் ஏற்கமாட்டார்கள். நேர்வழியை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே அதாவது தர்கா, தரீக்கா, மத்ஹப்கள், அஹ்ல ஹதீஃத்,, முஜாஹித், ஸலஃபி, ஜாக், ததஜ, இதஜ இன்னும் பல பிரிவுகளையே நேர்வழியாகக் கொள் வார்கள். மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப் பாகக் கொள்வார்கள். எண்ணற்ற குர்ஆன் வசனங் களை நிராகரித்துக் கொண்டு நாங்கள் குர்ஆன், ஹதீஃத் படிதான் நடக்கிறோம் என்று அப்பட்ட மான பொய்யைக் கூறி மக்களை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருப்பார்கள். இப்போது சொல்லுங் கள் இந்த மவ்லவிகள் மார்க்கப் பணி செய்யத் தகுதி உடையவர்களா? ஷைத்தான் மார்க்கப் பணிக்குத் தகுதியானவனா? இல்லையே! அதுபோல் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான மவ்லவிகள் மார்க் கப் பணிக்கு அணுவளவும் தகுதியற்றவர்களே!
ஒரே நேர்வழி (6:153) தூய மார்க்கத்தைப் பல கோணல் வழிகள் மதங்களாக்கி கொடிய ஹரா மான வழிகளில் வயிறு வளர்க்கும் இம்மவ்லவி களின் வழிகெட்ட நிலை பற்றி அல்லாஹ் குர்ஆன் யாசீன் 36:13-21 வரை 9 வசனங்களில் கூறி இருப்ப தைக் கவனமாகப் படித்துப் பாருங்கள். அவற்றில் 20 மற்றும் 21 வசனங்கள் கூறுவதைப் படித்துப் பாருங்கள்.
“”ஒரு மனிதர் அப்பட்டினத்தின் கடைக்கோடி யிலிருந்து விரைந்து வந்து, “”என் சமூகத்தவரே! நீங் கள் இத்தூதர்களைப் பின்பற்றுங்கள்” என்று கூறினார்” (36:20)
“”உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர் களையே நீங்கள் பின்பற்றுங்கள்! இன்னும் இவர் களே நேர்வழி பெற்றவர்கள்” (36:21)
இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் யார் பொறுமையாக நடுநிலையுடன் படித்து விளங்கு கிறார்களோ அவர்கள் நிச்சயம் இந்த மவ்லவிகளின் வழிகெட்ட இழி நிலையை அறிந்து கொள்ள முடி யும்! மேலும் இங்கு எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங்களை குர்ஆனில் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் வானத்தின் கீழ் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட, அதனால் வீண் பெருமை பேசும் இம்மதகுருமார்களை விட ஆகக் கேடுகெட்ட படைப்பு, மிகமிக இழிவான படைப்பு, ஆடுமாடுகளை விட கேடுகெட்டப் படைப்பு வேறு எதுவுமே இல்லை என்பதை அறியமுடியும்.
மார்க்கப் பணி புரிய நபிமார்கள் கூலி கேட்க வில்லை வாங்கவில்லை என்று நேரடியாகக் கூறும் 6:90, 10:72, 11:29,51, 12:104, 25:57, 26:109,127,145, 164,180, 34:47, 38:86, 42:23 ஆக 14 இடங்கள்.
கூலி வாங்காதவர்களே நேர்வழியில் இருக்கி றார்கள். 36:21.
கூலி வாங்குகிறவர்கள் கோணல் வழிகளில் வழிகேட்டில் இருக்கிறார்கள்.
9:9,34, 11:18,19, 31:6 ஆக 5 இடங்கள்.
புரோகிதர்களான மதகுருமார்களான மவ்லவி களின் தில்லு முல்லுகள்:
2:41,42,44,78,79, 3:78,187,188, 4:44,46, 5:41,62, 63, 6:21,25,26, 9:9,10 ஆக 18 இடங்கள்.
நன்கு அறிந்த நிலையிலேயே தில்லுமுல்லுகள் :
2:75,109,146, 6:20 ஆக 4 இடங்கள்.
புரோகிதர்களான மதகுருமார்களின் உள்ளங்கள் கல்லு :
2:74, 5:13, 6:125 ஆக 3 இடங்கள்
புரோகிதர்களான மதகுருமார்கள் நெருப்பையே சாப்பிடுகின்றனர்.
2:174,175,176 ஆக 3 இடங்கள்.
புரோகிதர்களான மதகுருமார்களின் இழி நிலை :
2:79, 3:77, 7:175-179 ஆக 7 இடங்கள்.
மவ்லவிகளின் உள்ளங்கள் உண்மை என்று உறுதி கொண்ட போதிலும் அநியாயமாகவும், பெருமை கொண்டவர்களாகவும் உண்மையை மறுக்கிறார்கள். (பார்க்க : 27:14)
இவை அல்லாமல் அல்குர்ஆனில் இணை வைப் பவர்கள், நிராகரிப்பாளர்கள், நயவஞ்சகர்கள், பொய்யர்கள், வழிகேடர்கள், உள்ளத்தில் ஈமான் இல்லாதவர்கள் இன்னும் இவைபோல் பல கடுஞ் சொற்கள், சுடு சொற்கள் அனைத்தும் புரோகிதர் களான இம்மதகுருமார்களையும் அவர்களின் கண் மூடிப் பக்த கோடிகளையுமே குறிக்கின்றன.
இந்த குர்ஆன் வசனங்கள் அல்லாமல் இம்மத குருமார்களின் இழிநிலை பற்றி எண்ணற்ற ஆதார பூர்வமான ஹதீஃத்களையும் பார்க்க முடியும். அதற்கு மாறாக உலமாக்கள் நபிமார்களின் வாரிசு கள் என்பது முதல் இடைத்தரகர்களான-புரோகிதர் களான-மதகுருமார்களான இந்த உலமாக்களைப் பற்றிய ஹதீஃத்கள் அனைத்தும் போலியானவை. இம்மவ்லவிகளின் ஆபாக்களான மதகுருமார் களால் தங்கள் வயிற்றுப் பிழைப்பை வளமாக்கிக் கொள்ள, அப்பாவி மக்களை ஏமாற்றி வஞ்சிக்கத் திட்டமிட்டு இட்டுக் கட்டப்பட்டவையாகும்.
இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் அல் லாஹ்வுக்கு முற்றிலும் அடிபணிந்து 29:69 இறை வாக்குக் கூறுவது பெரும் ஜிஹாதாக அதாவது பெரும் முயற்சியாகப் படித்து விளங்கினால் தூய ஒரே நேர்வழி மார்க்கத்தைப் பல கோணல் வழி களாக்கிக் கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்ப்பவர்கள், அதற்காகவே வீண் பெருமை பேசு பவர்கள் (7:146) ஒருபோதும் குர்ஆனை விளங்க மாட்டார்கள். அல்லாஹ்வாலேயே குர்ஆனை விட் டும் திருப்பப்படுகிறார்கள். எனவே இந்த மதகுரு மார்கள் மார்க்கப் பணிக்கு அணுவளவும் தகுதி இல்லாதவர்களே. வீண் பெருமை பேசாத அவாம் கள் என்ற பாமரர்களே மார்க்கப் பணி செய்ய முழுக்க முழுக்க தகுதியானவர்கள் என்பது, அல்லாஹ் நபிமார்களை அவாம்களிலிருந்தே தேர்ந் தெடுத்திருப்பது கொண்டு உறுதியாகிறது.
நாளை நரகை நிரப்ப இருக்கும் 99.9% மக்க ளுக்கு குர்ஆன் வசனங்கள் எட்டிக்காயாகக் கசக்கும். இந்த உண்மையையும் குர்ஆன் வசனங்கள் 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45 உறுதிப் படுத்துகின்றன.
இந்த நேர்வழி உண்மைகளை யார் அன்றாடம் குர்ஆனைப் பொருள் அறிந்து படித்து வருகிறார் களோ அவர்களால் மட்டுமே அறிய முடியும். யார் குர்ஆனைத் தொட்டுக் கூட பார்ப்பதில்லையோ அல்லது பொருள் அறியாது தினசரி ஓதி வருகிறார் களோ அவர்கள் அல்லாஹ்வை ரப்பாகக் கொள்ள வில்லை. 9:31 இறைவாக்குச் சொல்வது போல் இம் மவ்லவிகளையே ரப்பாகக் கொண்டு நாளை நரகை நிரப்ப இருக்கிறார்கள். (பார்க்க : 36:66-68)
இதற்கு எமது ஆரம்ப நிலையே போதிய ஆதார மாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் தன் அருளைக் கொண்டு எம்மை ஈடேறச் செய்தான். எமது 18 வயதிலிருந்து தப்லீஃக் ஜமாஅத்தில் ஈடுபட்டு பெரும்பாலும் தினசரி குர்ஆனிலிருந்து ஒரு பாகம் (ஜுஸ்வு) பொருள் அறியாமல் கிளிப் பிள்ளைப் பாடமாக ஓதி வந்தோம். இந்த நிலை எமது 18 வயதி லிருந்து 42 வயது வரை கால் நூற்றாண்டு அதாவது 25 வருடங்களாக நீடித்தது. அக்காலக் கட்டத்தில் நாமும் இந்த மவ்லவிகளை எமது ரப்பாகக் கொண்டு அவர்களது சுய கருத்துக்களை வேதவாக் காகக் கொண்டு செயல்பட்டு வந்தோம். இத்தனைக் கும் ஐங்கால தொழுகைகளை ஜமாஅத்துடன் பேணி தொழுதோம். வருடா வருடம் விடாமல் நோன்பு நோற்றோம். 1981ல் 39வது வயதில் ஷாஃபி மத்ஹபின்படி ஹஜ் கடமையை நிறைவேற்றி னோம். இந்த நிலையிலும் எமக்கு நேர்வழி கிடைக்க வில்லை. அக்காலக் கட்டங்களில் இந்த மவ்லவி களோடு மிக நெருங்கிப் பழகும் நிலை இருந்ததால் அவர்களின் கூடா ஒழுக்கங்கள் எமது பார்வையில் பட்டன. அதனால் தடுமாற்றம் ஏற்பட்டு, குர்ஆன் மவ்லவிகளுக்கு மட்டுமே விளங்கும். அதன் தமிழ் மொழி பெயர்ப்புகளைப் படித்தாலும் அவாம் களுக்கு விளங்காது என்ற இம்மவ்லவிகளின் புருடாவை வேதவாக்காகக் கொண்டு நாமே தஃலீம் ஹல்க்காக்களில் சொல்லிக் கொண்டிருந்த நிலையை விட்டு வெளியேறி 1982ல் அப்போதிருந்த ஒரே தமிழ் மொழி பெயர்ப்பான அப்துல் ஹமீது பார்க்கவியின் குர்ஆன் மொழி பெயர்ப்பிலிருந்து குர்ஆனைப் பொருளறிந்து படிக்க ஆரம்பித்தோம். இது அல்லாஹ் எமக்குச் செய்த மிகப் பெரும் அருட் கொடையாகும். அவனுக்கே அனைத்துப் புகழும், புகழ்ச்சியும்.
அதன் பின்னரே எல்லாம் வல்ல அல்லாஹ் 6:153 இறைவாக்குக் கூறும் ஒரே நேர்வழியைக் காட்டி அருளினான். அத்துடன் ஒரே நேர்வழி மார்க்கத்தை எண்ணற்றப் பிளவுகள் அதாவது மத்ஹபுகள், இயக்கங்கள் அமைப்புகளாக்கி கொடிய ஹராமான வழியில் வயிறு வளர்ப்பதோடு, அதற்காகவே வீண் பெருமை பேசும் (பார்க்க : 7:146) இம்மதகுருமார் கள் ஒருபோதும் மக்களுக்கு நேர்வழியைப் போதிக்க மாட்டார்கள். வழிகேடுகளைத்தான் நேர் வழியாகப் போதித்து மக்களை நரகில் தள்ளி ஷைத் தானுக்குத் துணை போவார்கள் என்பது தாஃகூத் என்ற மனித ஷைத்தான்களான இம்மவ்லவிகளே என்பது திட்டமாகத் தெரியவந்தது. இதேபோல் யார் அன்றாடம் குர்ஆனை தங்களுக்குத் தெரிந்த மொழியல் படித்து வருகிறார்களோ அவர்கள் இம் மதகுருமார்களை விட கேடுகெட்ட ஒரு ஜன்மம் இவ்வானத்தின் கீழ் இல்லவே இல்லை. இம்மவ்லவி கள் மார்க்கப் பணிக்கு, மார்க்கப் பிரச்சாரத்திற்கு அணுவளவும் தகுதி இல்லாதவர்கள்: அவாம்களான பாமரர்களே இப்பணிக்கு முழுமுழு தகுதியானவர் கள் என்பதை அறிய முடியும். இம்மவ்லவிகள் முஸ் லிம் அல்லாதவர்களை மட்டுமல்ல, முஸ்லிம்களை யும் ஏன் குர்ஆனை நெருங்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற இரகசியமும் தெரிய வரும். அல்லாஹ் அருள் புரிவானாக.