நாடு சுடுகாடாகிறது! அது மட்டுமா? நாளை நரகம்!

in 2017 மே,தலையங்கம்

””குரங்கு கையில் கிடைத்த பூமாலை’’ என்ற தொரு பழமொழி; அதுபோல் மனிதக் குரங்கு கள் கையில் மத்திய, மாநில ஆட்சிகள் கிடைத்துள்ளன. இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களுக்கு மனிதத் தன்மையோ, மனிதாபமோ இருப்பதாகத் தெரிய வில்லை. அப்படி ஆட்சியாளர்களுக்கு மனிதப் பண் பாடுகளோ, மனிதாபிமானமோ, மனித நேயமோ இருந்தால் மக்களைப் பற்றிய சிந்தனையில்லாமல், மக்கள் பணத்தை முழுக்க முழுக்க தவறான வழி களில் கோடி கோடியாகச் சுருட்ட முற்படுவார் களா? இன்றைய அரசியல், மூலதனமே இல்லாமல் பல்லாயிரம் கோடிகளை ஈட்டித் தரும் ஒரு கேடு கெட்ட வியாபாரமாகி விட்டது.

இன்று வருமான வரித்துறை ஆட்சியாளர்களின் ஏவலர்களாக இல்லாமல், மனசாட்சியுடன், நடு நிலையுடன் செயல்பட்டுச் சோதனை நடத்தினால் எம்.சி., எம்.எல்.சி., எம்.எல்.ஏ., எம்.பி. மந்திரி, முதன் மந்திரி, பிரதம மந்திரி, அனைத்துத் துறை களின் கீழ்மட்ட அதிகாரிகளிலிருந்து, மேல்மட்ட அதிகாரிகள் வரை ஒருவருமே தவறான வழிகளில் மக்கள் சொத்தை அபகரித்து வருமானத்திற்கு அதிக மாகச் சொத்து சேர்த்தக் குற்றத்திலிருந்து தப்ப முடி யாது. அப்படியே ஓரிருவர் தப்பினால் அது உலக அதிசயங்களில் ஒன்றாகத்தான் இருக்கும். இன்று காற்றுப்புக முடியாத இடங்களில் கூட லஞ்சம் புகுந்திருக்கிறது என்று கூட ச் சொல்லலாம்.

இப்படிப் பல்லாயிரம் கோடி மக்கள் பணத்தைத் தவறாகச் சேர்த்து குவிக்கிறார்களே அதை முறை யாக அவர்களால் அனுபவிக்க முடிகிறதா? எத் தனை வயிறுகளுக்குத்தான் சாப்பிட முடியும். ஒரே நேரத்தில் எத்தனை கார்களில் தான் பயணிக்க முடி யும்? இறைவனின் இறுதித் தூதர் சொன்னார்கள். மனிதன் என்னுடையது என்னுடையது என்று கூறிச் செல்வத்தைக் கணக்கின்றி குவிக்கிறான். ஆனால் அவன் உண்டு கழித்தது, உடுத்திக் கிழித்து, மறுமைக்காக தான தர்மங்கள் தாராளமாகச் செய்து மறுமைக்காக அனுப்பியது மட்டுமே அவனுடை யது. எஞ்சியவை அவனது வாரிசுக்கானவை (அல்லது பினாமிக்கானவை)

இந்த நிலையை மனிதர்கள் நிதர்சனமாக, கண் கூடாகக் கண்டும் படிப்பினை பெறுவதாக இல்லை, என்னே மனிதனின் அறிவீனம்?
மக்கள் சிந்தித்து விளங்க சமீபத்திய ஓர் உதார ணம். முன்னால் தமிழக முதல்வர் பல்லாயிரம் கோடிகளைத் தவறான வழிகளில் சேமித்துக் குவித்து வைத்திருந்தார். அது மட்டுமா? தனது தோழியுடன் தவறான உறவு வைத்திருந்ததால், தனது மிகமிக நெருங்கிய உறவினர்களையும் தனது வீட்டுக்கு வர விடாமல் தடுத்து வைத்திருந்தனர். அவரது மர்ம மரணத்துக்கு இவையே காரணமாக அமைந்தன. அவரது மரணத்திற்கும் அதன் மர்மம் வெளிவராமல் மறைப்பதற்கும், தமிழக அரசியலில் பெரும் பெரும் சூதாட்டங்கள் அரங்கேறுவதற்கும் அவர் சேர்த்து வைத்த பல்லாயிரம் கோடி பணமே காரணமாக இருக்கிறது. தமிழ்நாடு இன்று சுடுகாடாக ஆகிக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியுமா?

இன்றைய அரசியல் சூதாடிகளின் நிலை இப்படி இருகக மத சூதாடிகளின் நிலை அதைவிட பெரும் பாதகங்களை மக்களுக்கு இழைத்து வருகிறது. இன்று உலகில் காணப்படும் அனைத்து அக்கிரம, அராஜக, அட்டூழியங்கள் அனைத்திற்கும் மதகுருமார்களே முழுமுதல் காரணகர்த்தாக்களாக இருக்கிறார்கள். அதிலும் முஸ்லிம் மதகுருமார்களே முதல் இடத்தைப் பிடிக்கிறார்கள். அவர்களுக்கு உண்மையில் இறைவன் மீதும், மறுமையிலும், சுவர்க்கம், நரகத்திலும் உண்மையான நம்பிக்கை இருந்தால் அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

கடந்த ஆயிரம் வருடங்களாக மனித குலத்தினரி டையே நடந்து வரும் பாவங்கள் அனைத்திற்கும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் இம்மவ்லவிகளுக்கே இருக் கிறது. 16:25 குர்ஆன் வசனம் கூறுவது போல், கடந்த 1000 வருடங்களாக ஆதத்தின் சந்ததிகள் அனை வரும் செய்த பாவச் சுமையை தங்களின் பாவச் சுமையோடு, சேர்த்து சுமக்கும் மிகமிக கேடுகெட்ட நிலையில் இம்மவ்லவிகள் இருக்கிறார்கள்.

அதற்குக் காரணம், முதலில் இம்மவ்லவிகள், அவர்கள் நம்பியுள்ள முன்னோர்களின் வழிகாட் டல்படி, மனிதக் கருத்துக்களை மார்க்க மாக்கி அதையே அவர்களும் கடைபிடித்து வருவதோடு அதையே மக்களுக்குப் போதிப்பதன் மூலம் பெருத்த வழிகேட்டில் இருப்பது. அடுத்தது அற்பமான இவ்வுலகில் தங்கள் வயிற்றை ஹரா மான வழியில் நிரப்பவும், அதை கடுமையாகக் கண் டிக்கும் குர்ஆன் போதனைகள் மக்கள் அளவில் போய்ச் சேர்ந்துவிடக் கூடாது என்ற தீய எண்ணத் தில் குர்ஆனை ஆதத்தின் சந்ததிகளிடமிருந்து மறைத்து வருவதாகும்.

எனவே மனிதகுலத்தினரே நீங்கள் இந்த மத குருமார்களை நம்பி, குறிப்பாக மனித குலத்தி னருக்கே இறுதி உபதேசமாக-வாழ்க்கை வழிமுறை யைச் சொல்லும் குர்ஆனை மனித குலத்தினரிட மிருந்து மறைக்கும் மவ்லவிகளை நம்பி மோசம் போகாதீர்கள். இறைவன் தெளிவாக விளக்கியுள்ள குர்ஆன் உங்களுக்கு விளங்காது. அதை இந்த அற்ப அறிவையுடைய இம்மவ்லவிகள்தான் விளக்க வேண்டும் என்று கூறுவதை விட அண்டப்புளுகு, ஆகாச பொய் பிரிதொன்று இருக்க முடியுமா? இம் மவ்லவிகளை விட கேடு கெட்டவர்கள் இவ்வானத் தின் கீழ் இருக்க முடியுமா? சிந்தியுங்கள். இம்மத குருமார்களை, குறிப்பாக மவ்லவிகளைப் புறக் கணித்து நேரடியாக 3:103 இறைக் கட்டளைப்படி குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடப்பதாகும். அதுவே நேர்வழி, நாளை மறுமை யில் உங்களை சுவர்க்கம் கொண்டு சேர்க்கும்.

Previous post:

Next post: