முஸ்லிம்கள்…

in 2017 ஜுன்

இப்னு தைக்கத்துல்லாஹ்

இவர்களுடைய உடலமைப்பு உங்களை ஆச்சரியப்படுத்தும், இவர்கள் பேச ஆரம்பித்தால், (சோறு, தண்ணி வேண்டாம், மனைவி மக்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு) இவர்களுடைய பேச்சைக் கேட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். (அந்த அளவுக்கு கலை, இலக்கியம், கலாச்சாரம், வரலாறு, அறிவியல், வீரம், சோகம், காமெடி, சினிமா, டிராமா, மார்க்கம், லோக்கல் பாலிடிக்ஸ், இண்டர்நேஷனல் பாலிடிக்ஸ் என்று விசாலமாக, புள்ளி விவரங்களோடு நீங்கள் அப்படியே லயித்துப் போகும் அளவுக்கு ஆளை மயக்கும் பேச்சுப் பேசுவார்கள். இப்படி வாய் கிழியப் பேசும், அவர்களிடம் உள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டி திருத்திக் கொள்ளுமாறு நீங்கள் புத்தி சொன்னால், காதிலேயே விழாதது போல்) சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகளைப் போல் (சுரணையில்லாமல்) இருப்பார்கள். (அரசியல்வாதிகள், அதிகாரிகள், காவல்துறையினர், சினிமாக்காரர் கள், மீடியாக்காரர்கள் எல்லோரும் முஸ்லிம்களுக் கெதிராக திரண்டு விட்டார்கள் என்று எங்கிருந்து) எந்தச் சப்தம் வந்தா லும் அதைத் தங்களுக்கு எதிராகப் பேசுவதாகவே எண்ணிக் கொள்வார்கள். (பீதியைக் கிளப்புவார்கள், பதற்றத்தை உண்டாக்குவார்கள்) இவர்கள்தான் (உங்களுடைய பிரதான) எதிரிகள். எனவே, இவர்கள் வி­யத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அல்லாஹ் இவர்களை அழிக்கத்தான் போகிறான். இவர்கள் எங்கே ஓடப் போகிறார்கள்? (அல்லாஹ்விடமிருந்து தப்பியோட முடியுமா?) 63:4

(சத்திய அழைப்பு மக்கள் காதில் விழுந்து, அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையில் சென்று விடாமல் தடுப் பதற்காகவும், தங்களின் ஆளை மயக்கும் பேச்சைக் கொண்டு அவர்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக வும், மொத்தத்தில் சத்தியப் பிரச்சாரம்) பலவீனப்பட வேண்டும் என்பதற்காகவும், (இனவாதம் பேசி) நிரா கரிப்புக்கு உதவி செய்(து நிராகரிப்பாளர்கள் பலம் பெறு)வதற்காகவும், நம்பிக்கையாளர்களிடையே பிளவு உண்டாக்குவதற்காகவும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்த வனு(களு)க்குப் புகலிடமாக இருப்பதற்காகவும் (நய வஞ்சகர்கள்) ஒரு பள்ளிவாசலை கட்டியிருக்கிறார் கள். (கேட்டால், தூதரின் வழியில் தொழுவதற்காக என்று) நாங்கள் நன்மையைத் தவிர வேறெதையும் நாடவில்லை என்று அவர்கள் சத்தியம் செய்வார்கள். ஆனால், திட்டவட்டமாக அவர்கள் பொய்யர்கள் தான் என்று அல்லாஹ் சாட்சி அளிக்கிறான். 9:107

அவர்கள் எழுப்பிய அவர்களுடைய கட்டடம் அவர்களுடைய இதயங்களில் ஒரு வடுவாக இருந்து கொண்டே இருக்கும்; அவர்களின் உள்ளங்கள் துண்டு துண்டாக ஆகும் வரை (அதாவது, மரணிக்கும் வரை) அல்லாஹ் நன்கறிந்தவன்; ஞானமிக்கவன். 9:110

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்ற கொள்கையை ஏற்றுக் கொண்டவர்கள். அதன்படி நடப்பவர்கள், அதன்பால் மக்களை அழைப்பவர்கள் தங்களை “”முஸ்லிம்களில் உள்ளவர்கள்” என்று மட்டும் தான் காட்டிக் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும்(ஸல்) சொன்ன போதனைகளை எடுத்துக் காட்டி அழைத் தால் இந்த தவ்ஹீது மவ்லவிகள் வழக்கம் போல், பனூ நளீர், பனூ குரைளா, அப்துல் காதர், அப்துர் ரஹ்மான் போன்றவற்றை எடுத்துக் காட்டி, அடையாளம் காட்டுவதற்காக இறைவனே செய்த செட்அப் இது என்று பேசுகின்றனர். உண்மைதான் இவர்களே விரும்பினாலும் கூட “”நாங்கள் முஸ்லிம்களில் உள்ளவர்கள்” என்று சொல்லமுடியாது. இதுவும் இறைவனின் செட்அப் தான். ஏனென்றால் இவர்கள்தான் நபி(ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற பாதையில் இல்லையே. அது “”பீஜே ஜமாஅத்” என்று அவர்களே வெளிப்படையாக சொல்லி விட்டார்களே! பிறகு இவர்கள் எப்படி தங்களை “”முஸ்லிம் களில் உள்ளவர்கள்” என்று சொல்லிக் கொள்வார் கள்? பெரியாரை “”ரப்” ஆக்கி கொண்டவர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
கோணல் புத்திகாரர்களை யாரும் நீக்காமல், அவர்களே தங்களை புதிய பெயரில் அடையாளப் படுத்திக் கொண்டு “”முஸ்லிம்களின்” ஜமாஅத்திலிருந்து பிரிந்து சென்று விட வேண்டும் என்பது இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் செட் அப். அதை யாரால் மாற்ற முடியும். தஜ்ஜாலின் நெற்றியில் “”காஃபிர்” என்று எழுதப்பட்டிருப்பது முஸ்லிம்கள் அவனை அடையாளம் கண்டுகொள்வதற்கான இறை வனின் செட்அப். அதைப் போல் வழிகேடர்களை அடையாளம் கண்டுகொள்வதற்காக அவர்களே தங்களை புதிய பெயர்களில் அடையாளப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பது இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் செட்அப். அதை யாரால் மாற்ற முடியும். அதன்படி முதல் கேள்விக்கு முஸ்லிம் என்று பதில் சொல்வார்கள். இரண்டாவது கேள்விக்கு அந்த ஜமாஅத், இந்த ஜமாஅத் என்று பதில் சொல்வார்கள். மூன்றாவது கேள்விக்கு அந்த பிரிவு, இந்த பிரிவு என்று பதில் சொல்வார்கள். நான்காவது கேள்விக்கு அந்த கட்சி, இந்த கட்சி என்று பதில் சொல்வார்கள். ஐந்தா வது கேள்விக்கு அந்த பிரிவு, இந்த பிரிவு என்று இப் படி போய்க் கொண்டே இருப்பார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் விட்டுச் சென்ற பாதையில் இருப் பவர்களுக்கான அடையாளம் அவர்களிடம் எத் தனை கேள்விகள் கேட்டாலும், அத்தனை கேள்விகளுக்கும் முதலும் கடைசியுமாக நாங்கள் “”முஸ்லிம்களில் “”உள்ளவர்கள்” என்று சொல்வார்கள். 3:64

அதே சமயம்,நம்(ப வேண்டிய விதத்தில் நம்)பாதவர்கள் நாமும் “”முஸ்லிம்களில்” இருந்திருக்க வேண்டுமே என்று வருந்தும் நேரம் விரைவில் வரும் : 15:2

Previous post:

Next post: