18.08.1438-ல் இடம் பெற்ற கருத்தரங்கு தந்த பாடம்!

in 2017 ஜுன்,தலையங்கம்

அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லலிக்கனிகள் போல் பல பிரிவுகளாகச் சிதறிக் கிடக்கும் முஸ்லிம் சமுதாயத்தை அல்குர்ஆனின் வழிகாட்டல்படி 3:103 இறைக்கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து குர்ஆனைப் பற்றிப் பிடித்து நடக்க முற்படுவோம். அதற்கு எப்படிப்பட்ட மிக எளிய நடைமுறை கடைப் பிடிக்கப்பட வேண்டும் என்பதை விளக்கி அதன்படி நடக்க ஒரு கருத்தரங்கிற்கு 18.08.1438 (14.05.2017) ஞாயிறு அன்று பெரம்பலூர், துறைமங்களம், மூ.லு.மஹாலில் ஏற்பாடு செய்து கடந்த நான்கு மாதங்களாக அந்நஜாத்தில் தொடர்ந்து அறிவிப்பு செய்து வந்தோம். பெருங் கூட்டத்தை நாம் எதிர்பார்க்கவில்லை. காரணம் குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடந்து சுவர்க்கம் செல்லும் கூட்டம் மிகமிக சொற் பமே என்பதை 32:13, 11:118,119 இறைவாக்குகள் இன்னும் அதிகமானவர்கள் நரகத்திற்குரிய செயல் களைச் செய்பவர்களே அக்ஃதர்ஹும், அக்ஃதரன்னாஸ் என்று காணப்படும் அதிகமான வசனங்கள், புகாரீ 3348, 4741 முஸ்லிம் 379 ஹதீஃத்கள் கூறும் ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 பேர் நரகத்திற்குரியவர்கள், ஒரேயயாரு நபரே சுவர்க்கம் செல் வார் என்ற செய்திகள் எமக்குக் கூட்ட மயக்கத் தைத் தரவில்லை. இன்னும் 6:116, 5:100, குர்ஆன் வசனங்கள் இறுதித் தூதரையே கூட்டத்தைக் கண்டு மயங்காதே அவர்கள் உம்மை அல்லாஹ்வின் நேர் வழியை விட்டும் திருப்பி விடுவார்கள், வெறும் யூகத்தையே பின்பற்றுவார்கள், கற்பனைகளில் மிதப்பார்கள், அவர்களின் சொகுசு வாழ்க்கை உம்மை மயக்கி விடவேண்டாம் என்று எச்சரித் திருக்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்? இம் மவ்லவிகள் எம்மாத்திரம்?

நமக்கு மிகுந்த மனவேதனையைத் தருவது என்னவென்றால் குர்ஆன், ஹதீஃதை மட்டுமே எடுத்துச் சொன்ன இக்கூட்டத்திற்கு வரவிடாமல் மக்களைத் தடுத்த இம்மவ்லவிகள் பற்றித்தான். இத்தனைக்கும் குர்ஆன், ஹதீஃத் அல்லாத எமது சுய கருத்துக்கள் எதையும் சொன்னால் நீங்கள் எவ்விதத் தயக்கமும் காட்டாமல் எமது கழுத்திலுள்ள துண்டை முறுக்கிக் கேட்க உங்களுக்குப் பூரண அதிகாரம் தருகிறோம் என்றும் அறிவித்திருந்தோம். நாம் இந்த மவ்லவிகளைப் போல் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான கருத்துக்களையே சொல்லி வருகிறோம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருந்தால், அது குறித்து மடக்கிக் கேட்க அவர்களின் பக்தகோடிகளுடன் துணிந்து வந்திருப்பார்கள். அதற்கு மாறாக எமது கூட்டங்களில் குர்ஆன், ஹதீஃத்கள் மட்டுமே எடுத்துச் சொல்லப் படுகின்றன என்பதை தங்கள் பெற்ற பிள்ளைகளை அறிவது போல் அறிவார்கள்.(2:146, 6:20) சத்தி யத்தை-நேர்வழியை நன்கு அறிந்து கொண்டே மறுப்பதுதான் மவ்லவிகளின் வாடிக்கை.
குர்ஆனின் நேரடிப் போதனைகள் இம்மவ்லவி களுக்கு எட்டிக் காயாகக் கசக்கும்.இதை குர்ஆனின் 17:41,45-47,89, 22:72, 39:45 வசனங்களே உறுதிப் படுத்துகின்றன. காரணம் குர்ஆன் வசனங்களை ஏற்று அதன்படி நடந்தால் அவர்களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும். அவர்களால் அதைச் சகிக்க முடியுமா? கூலிக்கு மாரடிப்பவர்கள் ஒருபோதும் நேர்வழிக்கு வரமுடியாது என்று 36:21 இறைவாக்கு உறுதிப்படுத்தவில்லையா?

அப்படியானால் அவர்களின் பக்தகோடிகள் குர்ஆன், ஹதீஃதை அறியவிடாமல் தடுப்பது அவர் களின் கட்டாயக் கடமையாகி விடுகிறது. அப்போது தான் அவர்களின் ஹராமான வயிற்றுப் பிழைப்பைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். நபி(ஸல்) அவர்களின் நபித்துவ காலத்தில் அன்றைய மதகுருமார்களான தாருந்நத்வா உலமாக்களான காஃபிர் கள் குர்ஆன் வசனங்கள் இறங்கி நபி(ஸல்) அவர் களின் வாயிலிருந்து வெளிப்படும் போது எப்படி நடந்து கொண்டார்கள்? இதோ குர்ஆனின் 41:26 குர்ஆன் வசனம் அந்த மதகுருமார்களை அடையாளம் காட்டுகிறது படித்துப் பாருங்கள்!

நீங்கள் இந்த குர்ஆனை செவியேற்காதீர்கள். அதில் கூச்சலிடுங்கள். நீங்கள் மிகைத்து விடுவீர்கள் என்று நிராகரிப்பாளர்கள் கூறினர். (41:26)

அன்று தாருந்நத்வா உலமாக்கள் செய்த அதே வேலையைத் தான் இன்றைய உலமாக்கள் செய்கி றார்கள். 14.05.2017 கூட்டத்திற்கு வந்து அன்றைய தாருந்நத்வா உலமாக்களின் பித்தலாட்டங்களை குர்ஆன் வசனங்கள் மூலம் நபிதோழர்கள் அறிந்தது போல் இன்றைய உலமாக்களின் பித்தலாட்டங் களை அறிய முடிந்தது. அதற்கு மாறாக 39:17,18 குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி இம் மவ்லவிகளை, 9:31 இறைக்கட்டளைக் கூறுவது போல் தங்களின் ரப்பாக அதாவது அல்லாஹ்வாகக் கொண்டவர்கள் கூட்டத்திற்கு வரவில்லை. அவர்கள் தொடர்ந்து இந்த மவ்லவிகளின் பக்த கோடிகளாகவே இருப்பார்கள். அவர்கள் தான் இந்த மவ்லவிகளை நம்பி குர்ஆன் உங்களுக்கு விளங்காது என்ற அவர்களின் சுயநலப் பொய்க் கூற்றை ஏற்று குர்ஆனைத் தொட்டுக் கூடப் பார்ப்பதில்லையே.

அதன் நாளைய முடிவு இந்த மவ்லவிகளும் அவர்களது பக்தகோடிகளும் நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒருவரை ஒருவர் சபித்து ஒப் பாரி வைப்பதை 33:66,67,68 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. படித்துப் பாருங்கள்.

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப் படும் அந்நாளில், ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! இத்தூதருக் கும் நாங்கள் கட்டுப்பட்டிருக்க வேண்டுமே! என்று கூறுவார்கள். 33:66

எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள் என்றும் அவர்கள் கூறுவார்கள். 33:67

எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக! அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக! (என்பர்). 33:68
(மேலும் பார்க்க : 7:35-41, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45)

இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தும் நாங்கள் தான் கடவுளுக்கு நெருக்கமானவர்கள், கடவுளைக் காட்டுகிறவர்கள், சுவர்க்கத்துக்கு வழிகாட்டுகிறவர் கள், நரகிலிருந்து உங்களைக் காப்பவர்கள் என்று பொய்யாக வீண் பெருமை பேசும் அனைத்து மதங்களின் மதகுருமார்களையும் அவர்களின் பக்த கோடிகளையும் அதாவது அனைத்து மதவாதிகளை யும், இம்மவ்லவிகளையுமே குறிப்பிட்டுக் கூறு கின்றன. குறிப்பாக 33:66,67,68 குர்ஆன் வசனங்கள் இந்த அனைத்துப் பிரிவுகளின் மவ்லவிகளையே குறிப்பிடுகின்றன. ஆயினும் இந்த மவ்லவிகள் தங்கள் பக்தகோடிகளை என்ன கூறி ஏமாற்றி வருகிறார்கள் தெரியுமா? இந்த வசனங்கள் அனைத்தும் மற்ற மதங்களின் மதகுருமார்களையே குறிக்கின் றன எங்களை அல்ல என்று கூறி ஏமாற்றி நரகை நோக்கி நடைபோட வைக்கிறார்கள். மதரஸாவில் ஓதும் மாணவர்களுக்கு இவ்வாறுதான் போதிக் கிறார்கள். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் இடம் பெற்ற ஒரு சம்பவம். எமது மாமி மகன் மச்சான் தான். இன்று பிரபல மவ்லவி. அன்று சென்னையிலுள்ள தேவ்பந்த் அகீதாவை போதிக்கும் மதரஸாவில் ஓதிக் கொண்டிருந்த சமயம். இந்த 33:66-68 குர்ஆன் வசனங்களைப் படித்துக் காட்டி உண்மை நிலையை விளக்கினோம். அப்போது அவன் உதிர்த்த வார்த்தை என்ன தெரியுமா? போங்க மச்சான் நீங்கள் காஃபிர்களுக்குரிய வசனங்களை முஸ்லிம்களுக்குரிய வசனங்கள் என்று தப்பாகக் கூறுகிறீர்கள் என்றானே பார்க்கலாம்.

இது எதை உணர்த்துகிறது? மதரஸாக்களில் இப்படி குர்ஆன் வசனங்களுக்கு முற்றிலும் முரணான கருத்துக்களே போதிக்கப்படுகின்றன என்பதை அம்பலப்படுத்தவில்லையா? அந்த 33:36 வசனங்களை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள்.

“”நாங்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டிருக்க வேண்டுமே. இத்தூதருக்கும் வழிப்பட்டிருக்க வேண்டுமே என்று முஸ்லிம் அல்லாத காஃபிர்கள் கூற முடியுமா? அடுத்து 33:67 வசனத்தைப் படித்துப் பாருங்கள்!

“”எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப்பட்டோம் அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்” என்று கூறுவார்கள்.

தலைவர்களுக்கும் (சாதாத்தனா) பெரியவர் களுக்கும் (குபராஅனா) என்று முஸ்லிம்கள் கூறுவது நடை முறையில் இருக்கிறதா? காஃபிர்கள் கூறுவது நடை முறையில் இருக்கிறதா? சொல்லுங்கள்! காஃபிர்கள் எங்கள் மூதாதையர்கள் (ஆபாஅனா) என்றே கூறுவார்கள் (பார்க்க : 2:170, 5:104, 7:28, 10:78, 21:53, 31:21, 43:22,23,24)

இத்தனை இறைவாக்குகள் மட்டுமல்ல இன் னும் பல இறைவாக்குகளில் காஃபிர்கள் முன்னோர் கள், மூதாதையர்கள் என்று நேரடியாகக் கூறி இருக்க சாதத்தனா, குப்ராஅனா தலைவர்கள், பெரியவர்கள் என்று கூறி இருப்பது காஃபிர் களையே குறிக்கிறது என்று இம்மவ்லவிகள் கூறி வருவது, மதரஸாக்களில் போதிப்பது பகிரங்க வழி கேடா இல்லையா? அப்படியானால் இந்த மவ்லவிகள் ஒன்றில் வடிகட்டின முட்டாள்களாக இருக்க வேண்டும்; இல்லை என்றால் 2:146, 6:20 இறைவாக்குகள் கூறுவது போல் உண்மையை நன்கு அறிந்த நிலையில் தங்களின் கொடிய ஹராமான வயிற்றுப் பிழைப்பைத் தக்க வைக்கும் தந்திரமாக இருக்க வேண்டும். நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஆக மார்க்கத்தைத் தங்களின் வயிற்றுப் பிழைப் பாகக் கொண்ட இம்மவ்லவிகள், கூலிக்கு மாரடிக் கும் இம்மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழியை குர்ஆன், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடி போதிக்க ஒருபோதும் முன்வரமாட்டார்கள். வழிகேடு களைத்தான் நேர்வழியாகப் போதிப்பார்கள் என்று 7:146 இன்னும் பல குர்ஆன் வசனங்கள் கூறுவதை அன்றாடம் குர்ஆனைப் படித்து அறிகிறவர்கள் நிச்சயம் அறிவார்கள். அதனால்தான் இம்மவ்லவி கள் மக்களை குர்ஆனை நெருங்கவிடாமல், படித்து, விளங்க விடாமல் தடுத்து வருகிறார்கள். குர்ஆன், ஹதீஃதை மட்டுமே மார்க்கமாக எடுத்துச் சொல்லும் அந்நஜாத்தைப் படிக்க விடாமல் தடுக்கிறார்கள். கூட்டங்களுக்கு தங்களின் பக்தகோடிகளை வரவிடாமல் தடுத்து வருகிறார்கள். மண்டப உரிமையாளரை மிரட்டி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்!

அன்புள்ள பெரியார்களே, தாய்மார்களே, சகோதரர்களே, சகோதரிகளே! மவ்லவிகள் பின் னால் செல்லும் நீங்கள் நாளை நரகைத்தான் அடை வீர்கள். நரகில் உங்கள் இடத்தை இப்போதே முன் பதிவு செய்து கொள்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்கள் தர்கா மவ்லவி, தரீக்கா மவ்லவி, மத்ஹபு மவ்லவி, ஜாக் மவ்லவி, ததஜ மவ்லவி, இதஜ மவ்லவி, முஜாஹித் மவ்லவி, அஹ்ல ஹதீஃத் மவ்லவி, ஸலஃபி மவ்லவி, இன்னும் எத்தனை வழிகெட்டப் பிரிவுகள் உண்டோ அத் தனைப் பிரிவுகளின் மவ்லவிகள் என ஒட்டுமொத்த மவ்லவி கூட்டமும் தாஃகூத் என்று 2:256,257, 4:51, 60,76, 5:60, 16:36, 39:17 எட்டு குர்ஆன் வசனங்கள் குறிப்பிடுவது வீண் பெருமை பேசும் இந்த அனைத்துத் தரப்பு மவ்லவிகளையே. இவர்களே பெருங்கொண்ட முஸ்லிம்களை வழிகெடுத்து நர கில் தள்ளும் மனித ஷைத்தான்களான தாஃகூத்களாகும். ஜின் இன ஷைத்தானின் நேரடி ஏஜண்டு களாகும். இந்த மத குருமார்களின் குணாதிசயங்கள் பற்றி அல்குர்ஆன் அல்பகரா 2:8 முதல் 20 வரை யுள்ள வசனங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன. நீங்கள் நேரடியாகப் படித்துப் பாருங்கள். இந்த வசனங்கள் காஃபிர்கள், முனாஃபிர்கள் பற்றிய வசனங்கள் என்று இம் மவ்லவிகள் கூறி தங்கள் பக்த கோடிகளை ஏமாற்றுவார்கள். ஆனால் அவர்களும் அந்தப் பட்டியலில்தான் இருக்கிறார்கள் என்பதை 7:146 இறைவாக்குக் கூறுவது போல் உணரமாட்டார்கள்.

மக்களே 2:186 இறைவாக்குக் கூறுவது போல் மனிதர்களில் எவரையும் நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்புங்கள். 7:3, 53:2,3,4,5 இறைவாக்கு கள்படி குர்ஆன், ஹதீஃத் மட்டுமே நேர்வழி என் பதை அறியுங்கள். 18:102-106 இறைவாக்குகள் கூறும் இம்மவ்லவிகளையோ, வேறு தலைவர் களையோ தங்கள் வழிகாட்டிகளாக ஏற்பவர் காஃபிர்கள், அவர்களின் நற்செயல்கள் அனைத்தும் அழிந்து விடும். நாளை நரகமே கூலி, அதில் நிரந்தர மாகத் தங்கி விடுவார்கள் என்பதை விளங்குங்கள். நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் 5:3, 3:19, 85, 33:36 இறைவாக்குகள் கூறுவது போல் கலீஃபாக் கள், நபிதோழர்கள், தாபியீன்கள், தபஅதாபியீன் கள்(ஸலஃபி) பெயரால் புதிதாகக் கூறப்படும் மார்க்கக் காரியங்கள் அனைத்தும் பித்அத்கள், வழிகேடுகள், நரகில் சேர்க்கும் என்பதைத் திட்டமாக அறிந்து கொள் ளுங்கள். நாளை அவை நரகில் சேர்க்கும் என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளுங்கள்.

எனவே எம்மையும் நம்பாமல், அந்நஜாத்தையும் நம்பாமல் இம்மவ்லவிகளையும் நம்பாமல், இயக்கத் தலைவர்களையும் நம்பாமல், மனிதர் களில் எவரையும் நம்பாமல், அல்லாஹ்வை மட்டுமே முழுக்க முழுக்க நம்பி 3:103 இறைக் கட்டளைப்படி பிரியாமல் ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழி காட்டல்படி நடக்க முன்வாருங்கள். அதுவே நேர்வழி, நாளை அதுவே நரகை விட்டுப் பாதுகாத்துச் சுவர்க்கத்தில் கொண்டு சேர்க்கும். அல்லாஹ் அருள்புரிவான்.

முஸ்லிம்களே படிப்பினைப் பெறுங்கள்!
26.05.2017 வெள்ளிக்கிழமை ரமழான் ஆரம்ப மாகிவிட்டது. கி.மு.383ல் யூதர்கள் கற்பனை செய்த கண்ணுக்குத் தெரியும் 3ம் பிறையே முதல் பிறை என்ற மூட நம்பிக்கையில் ஒட்டுமொத்த மவ்லவி களும் ஒரு சாரார் சனிக்கிழமையும் ரமழான் நோன்பை ஆரம்பித்துள்ளனர். யூதக் கைக்கூலி களான (பார்க்க புகாரீ 3456, 7319, 7329 முஸ்லிம் 5184) இம்மவ்லவிகளைப் பின்பற்றி அவர்களை உங்கள் ரப்பாகக் கொண்டு (பார்க்க 9:31) சனி, ஞாயிறுகளில் நோன்பை ஆரம்பித்தவர்கள் நரகில் தங்கள் இடத்தை முன் பதிவு செய்கிறார்கள் என்பதை அறியவும். ஹிஜ்ரி 1438ம் ஆண்டு ரமழான் மாதம் 26.05.2017 வெள்ளியன்று ஆரம்பித்து 24.06.17 சனியுடன் முடிகிறது. இந்த மவ்லவிகளை நம்பி வாழ்நாள் முழுதும் நோன்பு நோற்றாலும் ஈடு செய்ய முடியாது. ஆரம்ப நோன்புகளை இழந்தது போல், நோன்பு நோற்க ஹராமான ஷவ்வால் 1ல் நோன்பு நோற்று மேலும் பெரும் பாவியாகாதீர் கள். வழிகெடுக்கும் இந்த மவ்லவிகளை நம்பி மோசம் போகாதீர்கள். மனிதர்களில் எவரையும் நம்பாமல் அல்லாஹ்வை மட்டும் நம்பி குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடக்க முன்வாருங்கள். அல்லாஹ் அருள்புரிவானாக!

Previous post:

Next post: