ஆலிம்கள் யார்?

in 2017 ஜுலை,பிறை

அபூ ஃபாத்திமா

அல்குர்ஆனில் 16 இடங்களில் அல்லாஹ் “”உலில் அல்பாப்” என்று கூறி இருக்கும் உண்மையான ஆலிம்கள் அல்லாஹ் குர்ஆனில் கூறி இருக்கும் கட்டளைக்கு அணுவளவும் மாறாமல் அப்படியே அடிபணிவார்கள். அவர்கள் 36:21, 2:79,174,175, 31:6 இன்னும் இவை போல் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரி லாகி, குர்ஆன் போதனைகளுக்கு முரணாக தங்கள் கைகளால் இஜ்மா, கியாஸ், லாஜிக், பாலிஸி, பிக்ஹ், தஃப்ஸீர் என்ற பெயர்களால் கற்பனைக் கட்டுக் கதை களை எழுதி வைத்துக் கொண்டு, அவை கொண்டு தங்கள் வயிற்றையும், பையையும் ஒருபோதும் நிரப்ப மாட்டார்கள். தங்கள் கைகளால் கடுமையாக உழைத்து வேர்வை சிந்தி அதன் மூலமே தங்கள் உலகத் தேவைகளை ஹலாலான முறையில் மட்டுமே நிறைவேற்றுவார்கள்.

அதனால் அவர்கள் நாங்கள்தான் படித்துப் பட்டம் பெற்ற மவ்லவிகள், ஆலிம்கள் மார்க்கம் கற்ற மேதைகள், எங்களுக்குத்தான் குர்ஆன் விளங்கும். அவாம்களாகி நீங்கள் உங்கள் தாய்மொழியில் குர்ஆனைப் படித்தாலும் உங்களால் விளங்க முடியாது. நாங்கள் கொடுக்கும் விளக்கப்படிதான் நீங்கள் நடக்க வேண்டும் என்று 7:146, 39:72 இன்னும் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி வீண் பெருமை பேச மாட்டார்கள். குர்ஆன், ஹதீஃதை மட்டுமே மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பவர்கள் மீது அப்பட்டமான அவதூறுகளையும், வீண் பழிகளையும், பொய்களையும் வாரி இறைக்க மாட்டார்கள். அவர்கள் செய்யும் தவறுகள் நேரடியாக குர்ஆன் வசனங்களைக் காட்டி எச்சரிக்கப்பட்டால், உடனே அபூபக்கர்(ரழி), உமர் (ரழி) போல் தங்கள் தவறை உணர்ந்து தவ்பா செய்து திருந்துவார்கள். இதுதான் உண்மையான ஆலிம்களின் ஒப்பற்ற நிலையாகும். இப்படிப்பட்ட ஆலிம்களை நாம் மதிக்க வேண்டும், மரியாதை செய்ய வேண்டும்.

ஆனால் இன்று பட்டம் பெற்ற மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்க மேதைகள், குர்ஆனை கரைத்துக் குடித்த அதி மேதாவிகள் எங்களுக்குத் தான் குர்ஆன் விளங்கும். மவ்லவி அல்லாத அவாம்கள் உலகியல் துறைகளில் பெரும் பெரும் பட்டங்கள் பெற்றி ருந்தாலும் அவர்களால் குர்ஆனை விளங்க முடியாது. நாங்கள் கொடுக்கும் சுய, மேல் விளக்கங்கள்படிதான் நடக்க வேண்டும் என்று 7:146, 39:72 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகும் மவ்லவிகளிடம் மேலே எடுத்துச் சொல்லப்பட்ட உயர் குணங்கள் இருக்கின்றனவா? இல்லையே!

அதற்கு மாறாக மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து வகை துர்குணங்களிலும், அதாவது நரகை நிரப்பும் தீச் செயல்கள் அனைத்திலும் முங்கிக் குளிப்பவர்களாக அல்லவா இம்மவ்லவிகள் திகழ்கிறார்கள். அப்படி யானால் இம்மவ்லவிகள் ஆலிம்களா? ஜாஹில்களா? சிந்தியுங்கள்! நபி(ஸல் அவர்களின் வாரிசுகளா? அபூ ஜஹீலின் வாரிசுகளா? சிந்தியுங்கள்!

ஆம்! இந்த மவ்லவிகள் எனப் பெருமை பேசும் இவர்கள் ஆலிம்கள் இல்லை; ஜாஹில்கள் தான், நபி (ஸல்) அவர்களின் வாரிசுகள் இல்லை. அபூ ஜஹீலின் வாரிசுகள்தான் என்பதை நிரூபிக்க ஒரேயொரு ஆதார மாக சந்திர நாள் காட்டியையே எடுத்துக் கொள்வோம்.

சந்திரன் துல்லியக் கணக்கின்படி ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் நூற்றுக்கு நூற்று துல்லியமாக அது படைக்கப்பட்டக் காலத்திலிருந்தே சுழல்கிறது. அதன் சுழற்சி மனிதக் கண்களின் கட்டுப்பாட்டிலோ, மேக மூட்டத்தின் கட்டுப்பாட்டிலோ இல்லவே இல்லை, அல்லாஹ்வின் முழுக் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கிறது என்பதை 2:189, 6:96, 7:54, 9:36,37, 10:5, 13:2, 14:33, 16:12, 17:12, 21:33, 25:61, 29:61, 31:29, 35:13, 36:40, 39:5, 55:5 இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் பொறுமையாக, நிதானமாகச் சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும்.

சந்திர சுழற்சி கண்களின் கட்டுப்பாட்டிலும், மேக மூட்டத்தின் கட்டுப்பாட்டிலும் இருக்கிறது என்று கூறுகிறவர்கள் மவ்லவிகள், ஆலிம்கள் அல்ல வடிகட் டின ஜாஹில்கள், வழிகேடர்கள் என்பதையும் அறிய மடியும். எவர்கள் 2:186 இறைக்கட்டளைப்படி அல்லாஹ்வை மட்டுமே நம்பாமல் இம்மவ்லவிகளை நம்பி அவர்கள்தான் நேர்வழி காட்டுகிறவர்கள் என்று குருட்டுத்தனமாக நம்பி, குர்ஆனைத் தொட்டுக் கூட பார்க்க அஞ்சுகிறவர்கள் மட்டுமே, சந்திரன் மனிதக் கண்களின் கட்டுப்பாட்டிலும் மேகமூட்டக் கட்டுப் பாட்டிலும் இருக்கிறது என்று மூடத்தனமாக நம்பி 3ம் பிறையை முதல் பிறையாகக் கொள்வார்கள்; வழி கெட்டு நரகை அடைவார்கள். (பார்க்க : 33:66-68) ஆக உலகிலுள்ள ஒட்டுமொத்த கொடிய ஹராமான வழிகளில் வயிறு வளர்க்கும் ஆலிம்களும் சந்திர சுழற்சி மனிதக் கண்களின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்கின்றது என்ற வடிகட்டின மூடக் கொள்கையில் மாபெரும்-வழிகேட்டில் குஃப்ரில், இறை நிராகரிப் பில்தான் இருக்கிறார்கள். ஆம்! அபூ ஜஹீலின் நேரடி வாரிசுகள்.

இவர்களில் புதிய ததஜ மத்ஹபைக் கற்பனை செய் துள்ள பொய்யன் பீ.ஜையின் புருடா என்ன தெரியுமா? சங்கமத்திற்கு அடுத்த நாள் முதல் பிறை தான். ஹிந்துக்களும் அந்த நாளையே பிரதமை-முதல் நாள் எனச் சரியாகக் கணக்கிடுகிறார்கள். எனவே அதை முதல் நாள் முதல் பிறை என்பதை மறுத்தால் தனது பக்தகோடிகளில் சிலர் சுதாரித்துக் கொள்ள நேரிடும் எனப் பயந்து சங்கமத்திற்கு அடுத்த நாள் முதல் நாள் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை. ஆனால் நபி (ஸல்) அவர்கள் புறக்கண்ணுக்குத் தெரி யும் 3-ம் பிறையைத்தான் முதல் நாளாகக் கொள்ளக் கட்டளையிட்டுள்ளார்கள் என்று ஜமுக்காளத்தில் வடித்தெடுத்தப் பொய்யைக் கூறி தனது பக்தகோடி களைத் தக்க வைத்து வருகிறார். கேவலம் அற்ப துன்யா-உலக மயக்கம் அவரை இந்தளவு வழிகேட் டில் செல்ல வைக்கிறது. “”என்மீது எவன் பொய்யுரைக் கின்றானோ அவன் தனது இறுதி இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்ளட்டும்” என்ற நபி(ஸல்) அவர்களின் மிகக் கடுமையான எச்சரிக்கை பொய்யன் பீ.ஜையை நேர்வழிக்குக் கொண்டு வராது. அந்தளவு பீ.ஜையின் உள்ளம் இருளடைந்துள்ளது.

இந்த ஒரு பொய்யை மறைக்க எத்தனைப் பொய் களை அவிழ்த்து விடுகிறார் பாருங்கள்! கண்ணுக்குத் தெரியும் 3ம் பிறையைத்தான் முதல் நாளாகக் கொள்ள வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய தாகச் சொல்கிறீர்களே! அந்த ஹதீஃதைக் காட்டுங்கள் என்று கேட்டால், அவர் உண்மையாளராக இருந்தால் குறிப்பிட்ட அவர் கூறும் ஹதீஃதைக் காட்டமுடியும். பொய் சொல்லும் அவரால் அதற்குரிய ஹதீஃதைக் காடட முடியுமா? முடியாதே! உடனே பல்ட்டி அடித்து அன்று நபி(ஸல்) அவர்கள் பிறையைக் கண்ணால்தானே பார்த்தார்கள் என்று யாருக்கும் தெரியாத ஒரு வி­யத்தைச் சொல்வது போல் சொல்லி ஜமாய்க்கிறார்.

அது சரி! அன்று பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மாதத்தை ஆரம்பித்தது உண்மைதான். அதே போல் நோன்பை அதிகாலையில் ஆரம்பிப்பதற்கும் மாலையில் நோன்பைத் துறப்பதற்கும் சூரிய ஓட்டத் தைக் கண்ணால் பார்த்துத்தானே முடிவுசெய்தார்கள். பிறையைப் பார்ப்பதற்கு ருஃயத், அரா, தரா போன்ற பதங்கள் இருப்பது போல் இங்கும் அதே அரபு பதங் கள்தானே இருக்கின்றன. பின் எப்படி இங்கெல்லாம் கண்ணால் பார்ப்பதை விட்டு கடிகாரம் பார்த்துச் செயல்படுகிறீர்கள் என்ற கேள்விக்குப் பொய்யன் பீ.ஜையின் கிறுக்குத்தனமான பதில் என்ன தெரியுமா?

தஜ்ஜாலுடைய காலத்தில் நாட்களைக் கணக்கிடச் சொல்லி நபி(ஸல்) அவர்கள் கூறி இருக்கிறார்கள். அதனடிப்படையில் சூரிய ஓட்டத்தைக் கடிகாரம் பார்த்து முடிவு செய்கிறோம் என்று பிதற்றுகிறார் பொய்யன் பீ.ஜை. அவர் எப்படிப்பட்ட மூடர் என்பது இப்போதும் விளங்கவில்லையா? இது தஜ்ஜாலின் காலமா? அது சரி! சூரியனைப் போல் சந்திரனும் ஒரு வினாடி கூட முன்பின் ஆகாமல் துல்லிய கணக்கீட்டின்படி சுழல்கிறது. அது கண் பார்வைக்கோ, மேக மூட்டத்திற்கோ கட்டுப்பட்டதல்ல என்று மேலே நாம் குறிப்பிட்டுள்ள குர்ஆன் வசனங்கள் பொட்டில் அடிப்பது போல் நேரடியாகக் கூறுகின்றனவே அது பொய்யன் பீ.ஜை.க்கு உறைக்கவில்லையா?

எப்படி நபி(ஸல்) அவர்களது காலத்தில் சூரிய ஓட்டக் கணக்கு இல்லாமல் இருந்து சூரியனைக் கண்ணால் பார்த்து முடிவு செய்ததற்கு மாறாக இன்று சூரிய ஓட்டத்தைக் கணக்கிடும் கடிகாரம் கண்டுபிடிக் கப்பட்டு நடைமுறைக்கு வந்தது போல், அன்று சந்திர சுழற்சி பற்றிய கணக்குத் தெரியாதிருந்ததால் (பார்க்க முஸ்லிம் 1970) பிறையைப் புறக்கண்ணால் பார்த்து முடிவு செய்ததற்கு மாறாக இன்று சந்திர சுழற்சியின் கணக்குத் துல்லியமாகத் தெரிந்த நிலையில் அதன்படி நடப்பது சரியா தவறா? பதில் சொல்வாரா? பொய்யன் பீ.ஜை.

இதற்கு மேலும் எப்படிப்பட்டப் பொய்யன் பீ.ஜை. வடிகட்டின மூடன் என்று பாருங்கள். சாப்பிடுவது என்றால் எப்படி வாயினால் மட்டுமே சாப்பிடுவதோ, அதே போல் பார்ப்பதென்றால் கண்ணால் மட்டுமே பார்ப்பது என்று பிதற்றுகிறார். சந்திரன் கிழக்கில் உதிக்கிறதா? மேற்கில் உதிக்கிறதா என்று 4ம் வகுப்பு மாணவனுக்குத் தெரிந்த உண்மை பொய்யன் பீ.ஜைக்கு தெரியவில்லை என்றால் எப்படிப்பட்ட மூடனும் பொய்யனுமாய் இருக்கிறார் என்பதை வாசகர்களே முடிவு செய்யுங்கள்.

அல்குர்ஆனைத் தொடர்ந்து பொருள் அறிந்து படித்து வருபவர் அதில் எண்ணற்ற இடங்களில் கண்ணால், உள்ளத்தால், தகவலால், ஆய்வால், கணிப்பால், கணக்கீட்டால் பார்ப்பதைக் குறிக்கும் எண்ணற்ற வச னங்கள் இருப்பதை அறிவது, பொய்யன் பீ.ஜையின் கண்ணுக்குத் தெரியவில்லை. 7:146 குர்ஆன் வசனம் கூறுவது போல் அவரின் வீண் பெருமை காரணமாக இந்த வசனங்களை எல்லாம் அவர் விளங்க விடாமல் அல்லாஹ் தடுத்து விட்டான் போலும்.

இப்படி அர்த்தமற்ற உளறல்களைக் கூறி பெருங் கொண்ட முஸ்லிம்களை, அதன்பின் வாழ்நாள் முழுதும் நோன்பு நோற்றும் ஈடு செய்ய முடியாத பெரும் பாவியாக்கும் நிலையில் ரமழான் முதல் இரண்டு நோன்புகளை நோற்கவிடாமல் தடுக்கிறார்கள். ஷவ்வால் 1-ல் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ள நிலையில் அன்று நோன்பு நோற்றுப் பட்டினி கிடப்பதோடு பெரும் பாவியாக வும் ஆக்குகிறார்கள். ஆக இந்த மவ்லவிகளின் அசல் குறிக்கோள் முஸ்லிம்களை வழிகெடுத்து நரகில் கொண்டு சேர்ப்பதுதான்.

ஆக ரமழான் மாதத்தை ஆரம்பத்திலேயே பெரும் குழறுபடிகள் செய்து ஆரம்ப இரண்டு நோன்புகளைப் பாழாக்கி நோன்பு பிடிக்க ஹராமான ­வ்வால் முதல் நாளில் சமுதாயத்தை நோன்பு பிடிக்க வைத்துப் பெரும் பாவிகளாக்கிய சாதனை நரகம் செல்லும் இம் மதகுருமார்களுடையதே (பார்க் : 33:36,66-68) அத் தோடு விட்டார்களா? அடுத்துப் பாருங்கள். ரமழான் ஆரம்பத்தைப் பாழாக்கியது போல் தினசரி நோன்பு ஆரம்பத்தையும் பாழாக்குகிறார்கள். எப்படி என்று பாருங்கள்!

அல்லாஹ் 2:187 இறைவாக்கில் “”… அதிகாலை நேரம் என்ற வெள்ளை நூல் (இரவு என்ற) கறுப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங் கள், பருகுங்கள். பின்னர் இரவு வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள்…” என்று திட்டமாகத் தெளிவாக நேரடியாக அறிவிக்கிறான்.

இதை உறுதி செய்ய நபி(ஸல்) அவர்கள் ஸஹரைப் பிற்படுத்தும் வரையும், இஃப்தாரை முற்படுத்தும் வரையும் எனது சமுதாயம் நலனில் இருக்கும் எனத் தெளிவும் படுத்தி இருக்கிறார்கள். இம்மவ்லவிகளின் நோக்கம் முஸ்லிம்களை வழிகெடுத்து நரகில் தள்ளி அவர்கள் அற்ப உலக அதாயம் அடைய வேண்டும் என்பதே. அதற்காக சஹரை 20 நிமிடங்கள் முற்படுத் தச் சொல்கிறார்கள். இஃப்தாரை 7 அல்லது 8 நிமிடம் பிற்படுத்தச் சொல்லி சமுதாயம் நலனில் இருக்கக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள்.

குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் மாற்றமாக ஏன் இப்படிச் சட்டம் சொல்கிறீர்கள் என்று கேட்டால் அவாம்கள் விபரம் அறியாதவர்கள். சரியான நேரங் களைச் சொன்னால் ஸஹர் வேளை முடிந்தும் சாப் பிடுவார்கள். இஃப்தார் நேரம் வருமுன்னே நோன்பை துறப்பார்கள். பேணுதலுக்காக இப்படிச் சட்டம் சொல்கிறோம் என்பார்கள். என்னே ஆணவம்? அவாம்களைப் பற்றி அல்லாஹ்வுக்கும் அவனது தூத ரும் தெரியாத அதாவது அவாம்களின் நிலை அறியாமல் இப்படிச் சொல்லிவிட்டார்கள். நாங்கள் அந்த அவாம்களின் நிலை அறிந்து இப்படிச் சட்டம் சொல் கிறோம் என்று 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்படு கிறார்கள். நாளை இவர்கள் நரகின் எப்பகுதியில் கிடந்து வெந்து கரியாவார்களோ?
முன் காலத்திலாவது ஃபஜ்ர் ஆரம்பிப்பதும், மஃறிப் ஆரம்பிப்பதும் திட்டமாகத் தெரியாத நிலை. துல்லிய மாக அறியும் வழி இல்லை. அதற்கு மாறாக அல்லாஹ் கொடுத்துள்ள நவீன கருவிகள் மூலம் இத்தனை மணி இத்தனை நிமிடம் இத்தனை வினாடி எனத் துல்லிய மாக ஃபஜ்ரையும், மஃறிபையும் அறியும் நிலையில் ஏன் இந்தத் தடுமாற்றம்? ஆக அவர்களின் அற்ப உலக ஆதாயங்கள் நோக்கமே அவர்களை இப்படி மூளை யில்லாமல் பிதற்ற வைக்கிறது.

ரமழான் அல்லாத காலங்களில் ஃபஜ்ர் பாங்கை வக்த்து வந்து 15 அல்லது 20 நிமிடங்களுக்குப் பின் னால் சொல்கிறவர்கள் ரமழானில் வக்த்து வருவதற்கு முன்னரே சொல்லி வீட்டில் தொழும் பெண்களின் தொழுகையைப் பாழாக்குகிறார்கள் இம்மவ்லவிகள்.

இத்தோடு விட்டார்களா? இன்னும் வழிகேட் டைப் பாருங்கள். அல்லாஹ்வோ, அவனது தூதரோ காட்டித்தராத ஒரு செயல் நற்செயல், மறுமையில் நன்மைகளைப் பெற்றுத்தரும் செயல் என்று நம்பி ஒருவன் ஒரு புதிய செயலைச் செய்வானோ அவன் உள்ளத்தில் ஈமான் இருக்க முடியாது. பெருத்த வழி கேடன், நாளை நரகை அடைவான். இதை நாம் சொல்லவில்லை. ஸலஃபி, ததஜ, இதஜ, ஜாக் மவ்லவி கள் தங்கள் பேச்சை ஆரம்பிக்கும்போது அவர்கள் அரபியில் ஓதுபவற்றில் “”குல்லு பித்அத்தின் ழலாலா…” என்று அவர்கள் ஒதி வருவதே இதை உறுதிப்படுத்துகிறது. இம்மவ்லவிகள் ரமழானில் அரங்கேற்றும் பித் அத்களில் முதன்மையானது தராவீஹ் என்ற பெயரால் இஷாவுக்குப் பின்னர் முன்னிரவில் தொழுது வரும் 20+3=23 அல்லது 8+3 பக்கா பித்அத்களே, அதற்கு தராவீஹ் என பெயரிட்டிருப்பது, முன்னிரவில் தொழுவது, ஒவ்வொரு இரண்டு ரகாஅத்துகளுக் கிடையே ஹிந்துக்கள் பஜனை பாடுவது போல் பஜனை பாடுவது இவை அனைத்தும் பித்அத்கள் தான் என்பதற்கு நபி(ஸல்) அவர்கள் இவற்றைக் காட்டித் தரவில்லை என்பதே போதிய ஆதாரமாகும். கேவலம் 2:174 இறை வாக்குக்கூறுவது போல் அற்ப காசுக்காக இந்த பித்அத் நாடகங்களை இம்மவ்லவிகள் அரங்கேற்றுகிறார்கள்.

ரமழானில் இம்மவ்லவிகளிடம் நரகிற்கு இட்டுச் செல்லும் பித்அத்களுக்கு பஞ்சமே இல்லை. நிய்யத் என்றால் உள்ளத்தால் எண்ணுவது, வாயினால் மொழி வதல்ல. நோன்பு 30 நாட்களும் நோன்பு பிடிக்க, துறக்க பித்அத்தான நிய்யத், பித்அத்தான இஷாவுக்குப் பின் தொழவைக்கப்படும் தராவீஹ் தொழுகையில் பித்அத்தான துஆ என்ற பெயரில் பத்துஆக்கள், பஜனைகள் என நரகிற்கு இட்டுச் செல்லும் பித்அத் களை மூட்டை மூட்டையாக அள்ளிக் கட்டி முஸ்லிம்கள் நாளை நரகை அடையச் செய்வதில் இம்மவ்லவிகள் கைதேர்ந்தவர்கள்.

இந்த வழிகேடுகள் அனைத்தையும் மிஞ்சும் வகை யில் நாள் பஜ்ரிலிருந்து ஆரம்பித்து ஃபஜ்ரில் முடிகிறது என்பதை குர்ஆனும், ஹதீஃத்களும் தெளிவாகக் கூறிக் கொண்டிருக்க நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற யூத நடைமுறையை ஜானுக்கு ஜான் முழத்திற்கு முழம் பின்பற்றி ரமழானின் அனைத்து அமல்களை யும் குறிப்பாக ஆயிரம் மாதங்களை விட சிறப்புக் குரிய லைலத்துல் கத்ரை ஒற்றைப் படை நாள்களில் தேடுவதற்குப் பதிலாக மூடத்தனமாக இரட்டைப் படை நாள்களில் தேட வைக்கிறார்கள்.

லைலத்துல் கத்ர் ஒரு நாள் முழுக்க இருந்தால் மட் டுமே உலக மக்கள் அனைவரும் அடைய முடியும். உதாரணமாக ளுஹருக்குப் பகரமாக வெள்ளியன்று தொழப்படும் ஜுமுஆ தொழுகை 24 மணி நேரம் நீடித்தால் மட்டுமே உலக மக்கள் அனைவரும் ஜுமுஆ தொழ முடியும் என்பதை இந்த மூட முல்லாக் கள் மறுப்பார்களா? அப்படியானால் லைலத்துல் கத்ர் பாக்கியம் 24 மணி நேரம் நீடித்தால் மட்டுமே உலக மக்கள் அனைவரும் அந்தப் பாக்கியத்தைப் பெற முடி யும் என்ற சாதாரண அடிப்படை அறிவும் இல்லாத மூடர்களா இம்மவ்லவிகள். லைலத்துல் கத்ர் இரவாக மட்டுமே இருந்து அது பஜ்ருடன் மட்டும் முடிந்தால் அது வெறும் 24 மணிக்குப் பதிலாக 10¾ மணி நேரம் மட்டுமே இருக்க முடியும். எஞ்சியுள்ள 13¼ மணிப் பகுதியிலுள்ள மக்களுக்கு அப்பாக்கியம் இல்லையா? இந்த சாதாரண நடுத்தர அறிவும் இல்லாத இம்மவ்லவி கள்தான் பெரும் மேதைகள் என மார் தட்டுகிறார்கள். பெருமையடிக்கிறார்கள். பெருமையடிப்பவர்கள் நாளை நரகை அடைவர் என்பதை வசதியாக மறந்து விடுகிறார்கள். (2:34, 4:36, 7:36-40,146, 39:72)

நாள் ஃபஜ்ரில் ஆரம்பித்து ஃபஜ்ரில் முடிகிறது என் பது அல்குர்ஆன் 97:1-5 வசனங்கள், 2:238 வசனம் கூறும் நடுத் தொழுகை அஸர் தொழுகைதான் என்று நபி(ஸல்) அவர்கள் உறுதிப்படுத்தியது, நபி(ஸல்) அவர்களின் மனைவிமார்கள் உட்பட பல நபி தோழர் கள் உறுதி செய்தது இந்த மூட முல்லாக்களுக்கு ஆதாரமாகத் தெரியவில்லை.

மேலும் இவர்களின் பள்ளிகளில் தொங்கவிட்டி ருக்கும தொழுகை நேரங்களின் அட்டவணையில் முதல் தொழுகையாகக் குறிப்பிட்டிருப்பது, ரமழான் இஷாவுக்குப் பின்னர் இவர்கள் சொல்லிக் கொடுக் கும் நோன்பு நிய்யத்து நவைத்து “”ஸவ்மஃகொதின் -நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன்” என்று சொல் லிக் கொடுப்பதும் எதை உண்மைப்படுத்துகிறது. இவர்களின் புரோகித முன்னோர்கள் ஆரம்பத்தில் நாள் ஃபஜ்ரில் ஆரம்பிக்கிறது என்பதில் தெளிவாகத் தான் இருந்துள்ளார்கள். பின்னர் யூதர்களின் வலை யில் சிக்கி நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற வழி கேட்டை ஆரம்பித்திருக்கிறார்கள்.

நாள் பஜ்ரில் ஆரம்பிக்கிறது என்பதற்கு குர்ஆனும், ஹதீஃதகளும் இவ்வளவு தெளிவாக இருந்தாலும் இம் மவ்லவிகள் ஏற்பார்கள் என நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. 7:146, 27:14 இறைவாக்குகள் கூறுவது போல் அவர்களின்பெருமை காரணமாக நேர்வழியை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். வழிகேடுகளைத் தான் நேர்வழி எனப் பிதற்றுவார்கள். ஃபஜ்ர் என்று ஆரம் பிக்கும் அட்டவணையை மஃறிப் என்று மாற்றி எழுத முற்படுவார்கள். நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன் என்று சொல்லிக் கொடுப்பது தவறு, இன்று பிடிக்கிறேன் என்று சொல்லப்படவேண்டும் என பொய்யன் பீ.ஜை. புதுப் பாய்ண்ட் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்.

ஆக கடந்த 1300 வருடங்களாக அரபுத் தமிழில் குஃப்ர், ஷிர்க், பித்அத் கருத்துக்களையே குர்ஆன் சொல்வதாக இந்த மவ்லவிகள் கூறி மக்களை நரகில் தள்ளியது போல், இப்படி அனைத்து மார்க்கக் கடமைகளிலும் ´ர்க், குஃப்ர், பித்அத் இவற்றை நுழைத்து முஸ்லிம்களை வழிகெடுத்து அவர்களை நரகில் தள்ளி இந்த மூட முல்லாக்கள் அழிந்து படும் அற்பமான உலகியல் ஆதாயம் அடைய வேண்டும் என்பதே இம்மவ்லவிகளின் தனியாத ஆசையாகும்.

Previous post:

Next post: