அல்லாஹ்வின்  அழகிய  திருநாமங்கள்…

in 2017 அக்டோபர்

தொடர் – 2
தோழர் ஹம்துல்லாஹ்

நபிமொழி(ஹதீஃத்) கலாவல்லுனர்கள் சுனன் இப்னு மாஜா, திர்மிதி என்ற இரு ஹதீஃத் நூல் களில் இடம் பெற்றுள்ள அல்லாஹ்வின் அழகிய  திருநாமங்கள் 99 என்ற செய்தி(ஹதீஃத்)கள் பல வீனமானது. (ழயீப்) ஏற்கத்தக்கதல்ல என ஆரம் பக் காலத்திலேயே அடையாளம் காட்டிச் சென் றுள்ளனர் என்று முந்திய தொடரில் குறிப்பிட் டோம். அதற்கு மேலும் ஏற்கத்தக்க உண்மை யான நபி மொழிகளின் வாயிலாக அல்லாஹ்வின் திருநாமங்கள் தொன்னூற்று ஒன்பது என வரை யறுத்து கூற முடியாது. திருகுர்ஆனில் தெளிவாக அல்லாஹ்வால் கூறப்பட்டுள்ள சில முக்கியமான திருநாமங்கள் இவ்விரு ஹதீஃத் நூல்களிலும் இடம் பெறவில்லை என்றும், மேலும் அகில உலக அண்டசராசரங்களையும் படைத்து போ´த்து, பாதுகாத்தருளும் அல்லாஹ்விற்கு கணக்கிட முடி யாத பற்பல பெயர்கள் உண்டு எனவும் பற்பல ஹதீஃத் கலாவல்லுநர்கள் ஆய்வின் அடிப் படையில் கூறியிருப்பதிலிருந்து அறியலாம். அதற்கு  ஓர் அழகிய உதாரணம்.

நம் மார்க்க தந்தை இப்ராஹீம்(அலை) அவர் கள் தனது இரு குமாரர்கள் (இஸ்மாயீல்(அலை) இஸ்ஹாக்(அலை) நோயுற்று உடல் நலம் குன்றிய போது இவ்விருவரின் உடல் நலத்திற்காக எல் லாம் வல்ல அல்லாஹ்விடம். ஆதாரம்:……..

“”அஊது பிகலிமாத்தில்லாஹி தாம்மா, மின் குள்ளி ஷைத்தானி வ ஹாம்மாஹ், வ மின் குள்ளி  ஐனின்  லாம்மா”பொருள் : அல்லாஹ்வின் முழுமையான (பண்பு குணநலன்களை பொருந்திய) பெயர்களைக் கொண்டு, ஒவ்வொரு ஷைத்தானிடமிருந்தும், நச்சு பிராணிகளிடமிருந்தும், தீய கண் பார்வையி லிருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். (அறி விப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ்(ரழி) இ:68ரி), புகாரி. 3371, 3120, அபூதாவூத் 4112, திர்மிதி : 1986, இப்னு மாஜ்ஜா: 3516, முஸ்னது அஹ்மது 2008, 2308)

அல்லாஹ்வின் முழுமையான கண்ணியமிக்க எல்லா பண்பு குணநலன்கள் பொருந்திய பெயர்கள் என்றும், நாமறியாத மற்றும் எல்லா திருநாமங்கள் என்றும் பிரார்த்திக்க மேலும் சில நபிமொழிகள் ஹதீஃத் நூல்களில் இடம் பெற் றுள்ளன என்பதையும் இங்கு அறிய தருகிறோம். இப்ராஹீம்(அலை) அவர்கள் இந்த பிரார்த்தனை யில் அல்லாஹ்வின் எந்த குறிப்பிட்ட பெயரை யும் கூறாமல் அல்லாஹ்வின் முழுமையான கண் ணியமிக்க எல்லா பண்பு குணநலன்கள் பொருந் திய பெயர்கள் எனக் குறிப்பிடுவதிலிருந்து அல் லாஹ்விற்கு பற்பல திருநாமங்கள் மக்களிடையே பழக்கத்திலிருந்துள்ளது. அதனையே அவர் கேட் டுள்ளார்  என்பது  புலனாகிறது.

தமிழில் “”கடவுள் என நாம் அழைப்பது போலவும், யூதர்களும், கிறித்தவர்களும் ஈல், எலோவா, எலி, எலோஹியம் என அழைப்பது போலவும், மனுநீதியை ஏற்பவர்கள் பிரம்மன, பரமாத்மா என அழைப்பது போலவும் உலகி லுள்ள எல்லா மொழிகளிலும் மனிதனின் உள் ளத்தால் உணர முடியாத அவனை (அல்லாஹ்) வெவ்வேறு பெயர்களில் இருக்கலாம். அப்பெயர் களால் மக்கள் அழைக்கலாமல்லவா? அவை யனைத்தும் அல்லாஹ்வின் திருநாமங்கள் எனப் பொருள் கொள்வது தவறாகாது. எனவே அல் லாஹ்விற்கு தொன்னூற்று ஒன்பது திருநாமங்கள் என வரையறுத்துக் கூறக் கூடாது என பற்பல பண்டைய மார்க்க அறிஞர்கள் குறிப்பிடுகிறார் கள். இன்ஷா அல்லாஹ் திருகுர்ஆனில் இடம் பெற்ற, ஆனால் சுனன் இப்னு மாஜா, திர்மிதி என்ற இரு ஹதீஃத் நூல்களில் இடம் பெறாத திருநாமங்களை பற்றி இத்தொடரின் இறுதியில் குறிப்பிடுவோம். இங்கு நாம் “”அல்லாஹ் என்ற முழு முதற் பெயரிலிருந்து ஆரம்பிக்கிறோம்!

“”அல்லாஹ்” என்ற அரபி சொல் அன்றைய மக்கத்து மக்களிடையே மிகவும் பரிச்சயமான சொல். இறுதி இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தந்தையின் பெயர் “”அப்துல்லாஹ்” அன்றைய அரபு மக்கள் எதனையும் ஆரம்பிக்கும் போது “”பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம” (நம்முடைய அல்லாஹ்வின் பெயரால்) என்று ஆரம்பிக்க கூடியவர்களாக இருந்தார்கள். இதனை நாம், (ஜாஹிலியா) அறியாமை காலத்தில் மக்கத்து மக்கள் தாங்கள் வருடா வருடம் நடத்திய கவிதை போட்டிகளில் சிறந்த கவிதையை தேர்வு செய்து பட்டையங்களில் எழுதி கஃபாவில் தொங்க விட்டபோது அதன் ஆரம்பத்தின் வாசகமாக “”பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம” (நம்முடைய அல்லாஹ்வின் பெயரால்) என்று ஆரம்பித்திருப் பதையும், இஸ்லாமிய அழைப்புப் பணியின் ஆரம்ப காலத்தில் நபி(ஸல்) அவர்களையும், அவரை ஏற்றுக் கொண்டவர்களையும் மக்கத்து பொதுமக்களிடமிருந்து ஊரை விட்டு ஒதுக்கிய போது கஃபாவில் தொங்கவிட்ட போது அறிவிப் பிலும், இறுதியாக மக்கத்து குறை´களுக்கும், இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குமிடையில் ஹிஜ்ரி ஏழாவது வருடம் எழுதப்பட்ட “”ஹுதை பிய்யா  உடன்படிக்கையிலும்  காணமுடிகிறது.

முஸ்லிம்களின் சார்பாக இறுதி இறைத் தூதர் (ஸல்) அவர்களுக்கும், மக்கத்து குறை´களின் சார்பாக “”சுஹைலுக்குமிடையில் உருவான “”ஹுதைபிய்யா உடன்படிக்கையின் ஆரம்ப வசனமாகமுஸ்லிம்கள் “”பிஸ்மில்லாஹிர்ரஹ்மா னிர்ரஹீம்” என எழுத அதனை சுஹைல் பின் அமர் மறுத்து குறை´களின் வழக்கப்படி “”பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம என எழுத வற்புறுத்தவும், அதனையும் ரசூல்(ஸல்) அவர்கள் ஏற்று எழுத அனுமதித்ததும் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாகும். அன்றைய அரபு மக்கள் “”அல்லாஹுவை மறுக்க வேயில்லை, எப்போதும் மறக்கவுமில்லை மாறாக அவர்கள் அல்லாஹுவை அவர்கள் ஏற்று நம்பிக்கைக் கொண்டிருந்த கடவுள்களின் தலைவனாகக் கொண்டிருந்தார்கள். ஆனால் அல்லாஹுவுக்கு அல்குர்ஆன் விளக்கும் அனைத்து குணநலன்கள், பண்புகள் இருப்பதாக காஃபிர்கள் நம்பவே  இல்லை.

“”அல்லாஹ் ஒருவனே கடவுள்! வேறு கடவுள் இல்லை என்ற இஸ்லாமிய ஏகத்துவக் கொள் கைக்கு மாறாக, “”அல்லாஹ் கடவுள்களில் ஒரு வன், தலைமையானவன் என்ற கோட்பாட்டில் அன்றைய அரபு மக்கள் வாழ்ந்தனர். இதனை அல்லாஹ் குர்ஆனில் பற்பல வசனங்களில் நமக்கு தெளிவுபடுத்துவதைக் காணமுடிகிறது. அவற்றில் சில : பார்க்க :29:61,63, 31:25, 39:38, 43:9, 87.

இந்த ஏகத்துவ கொள்கையை நிலைநாட் டவே அல்லாஹ் தன்னுடைய இறுதித்தூதர்(ஸல்) அவர்களை அவர்களுக்கிடையில் தோன்றச் செய் தான். ரசூல்(ஸல்) அவர்கள் சுமார் முதல் பதி மூன்று வருடங்கள் கடுமையாக உழைத்தார்கள். பண்பட்ட அரபி மொழியில் பேச, உரையாட பெரும் கவிதைகள் புனைய மேன்பட்ட அரபி களுக்கு “”அல்லாஹ்வைப் பற்றி விளங்க வைக்க பதிமூன்று வருடங்கள் தேவையா? என்ற நியாய மான கேள்வி நம் உள்ளத்தில் எழலாம். ரசூல் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் இறைத்தூதராக வாழ்ந்த இருபத்து மூன்று வருடங்களில் “”அல்லாஹ் யார்? அவனுடைய பண்புகள், குண நலன்கள் யாவை? அவன் ஒரேயயாரு கடவுளாக இருக்க தகுதிகள் என்ன? ஏன் அவனுடைய சட்டத்திட்டங்களுக்கு மட்டும் நாம் கட்டுப்பட தலைவணங்க வேண்டும்? அதனால் நாம் பெறப் போகும் நன்மைகள், விளைவுகள் என்ன? மாறாக வாழ்ந்தால் நாம் பெறப்போகும் தீமைகள், விப ரீதங்கள் யாவை? என்பதை விளக்கவே சுமார் பதிமூன்று வருடங்களை செலவிட்டார்கள். இக் கால கட்டத்தில் இஸ்லாத்தின் மற்றக் கடமை களான தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற  கடமைகள்  இல்லை.

சுவனத்தில் வாழ்ந்த ஆதிமனிதர் ஆதம் (அலை) அவர்களுக்கு ஒரேயயாரு மரத்தின் அருகில் செல்ல வேண்டாம் என ஒரேயயாரு சட்டமிருந்த போல நம் ரசூல்(ஸல்) அவர்களின் முதல் பதின்மூன்று வருடங்கள் “”அல்லாஹ்வைப் பற்றி மட்டும், ஒரேயயாரு செய்தியை, மக்க ளுக்கு உபதேசிக்க அல்லாஹ் தெளிவாக ஆணை யிட்டிருந்தான் போலும், நம் ஆதி பெற்றோர் ஆதம் ஹவ்வாஹ்(அலை) அல்லாஹ்வின் தனிப் பெரும் சக்தி, வல்லமை, பண்பு, குணநலன் களைப் பற்றிய தெளிவின்றி, வெகுளித்தனமாக ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் வீழ்ந்து வழி கெட்டது போல வாழ்ந்த அரபு மக்களிடையே அல்லாஹ்வைப் பற்றிய அறிவைப் போதிப்பதே அவசியமல்லவா? அதனை செய்யவே அல்லாஹ் அறிவுறுத்தினான் போலும், எல்லாம் அறிந்தவன் அவனே!

இப்பெரும் பொறுப்பினை நிறைவேற்றவும், அன்றைய அரபு மக்களுக்கு அல்லாஹ்வைப் பற்றிய இறையச்சத்தை விளங்க வைக்கவும், அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை மக்களுக்கு எடுத்துக் காட்டி அவனுடைய தன்மைகளை தெளிவுபடுத்தி, அம்மக்களிடையே நீண்ட கால மாக ஊடுருவி போயிருந்த கடவுளை உருவகப் படுத்தும் இணை வைப்பு (´ஷிர்க்) கடவுள் மறுப்பு (குஃப்ர்) போன்ற கழிவுகளை அவர்களுடைய உள் ளங்களிலிருந்து வெளியேற்றினார்கள். இதற் கென அல்லாஹ் அவருக்கு அளித்த காலக்கெடு பதின் மூன்று வருடங்கள். அதன் பின்பே மக்க ளுக்கு தேவையான அறிவையும், ஞானத்தையும் அல்லாஹ் அறிவிக்கச் செய்தான். இதுவே நம் மார்க்க தந்தை இப்ராஹீம்(அலை) வேண்டிய பிரார்த்தனை அதனை அல்லாஹ் ஏற்று நிறை வேற்றியது அல்லாஹ்வின் அருட்கொடை யாகும். இதுதான் அல்லாஹ் நாம் இவ்வுலகில் வாழ காட்டியுள்ள, நம் ரசூல்(ஸல்) அவர்கள் செயலாற்றிய அழகிய வழியுறுத்தும் அல்லாஹ் வின் எழுதப்பட்ட விதி எனலாம். இன்றைய முஸ்லிம்கள் இதே போல நமது அழைப்பு பணியை செய்ய வேண்டும் என்பதற்கு அழகிய முன்மாதிரியாக  கொள்ள  வேண்டும்.

இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்டப் பிரார்த்தனை (துஆ)வும், அது அல்லாஹுவால் ஏற்கப்பட்ட விதமும் : “”எங்கள் இரட்சகா! அவர்களிடையே உன்னு டைய அத்தாட்சிகளை எடுத்துக் காண்பித்து, அவர்களுக்கு நெறிநூலையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத்  தூய்மைப்படுத் தக்கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைப்பாயாக; நிச்சயமாக நீயே வல்லமை மிக் கோன், பெரும் ஞானமுடையோன்”        (அல்குர்ஆன் : 2:129)

இதேபோன்று, நாம் உங்களிடையே உங்களிலி ருந்து ஒரு தூதரை, நம் அத்தாட்சிகளை உங்களுக்கு எடுத்துக் காட்டுவதற்காகவும், உங்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவும்; உங்களுக்கு நெறிநூலையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும், இன்னும் உங்களுக் குத் தெரியாமல் இருந்தவற்றை உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும் அனுப்பியுள்ளோம்.      (அல்குர்ஆன் : 2:151)

நிச்சயமாக அல்லாஹ் முஃமின்களுக்கு அருள் புரிந்திருக்கின்றான். அவன் அவர்களுக்கு அவர் களிலிருந்தே ஒரு ரசூல்(தூதரை) அனுப்பி வைத் தான். அவர் அவனுடைய அத்தாட்சிகளை எடுத் துக் காண்பிக்கிறார். இன்னும் அவர்களைப் பரிசுத்தமாக்குகிறார், மேலும் அவர்களுக்கு நெறிநூலையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக் கின்றார். அவர்களோ நிச்சயமாக இதற்கு முன் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருந்தனர்.          அல்குர்ஆன் :3:164 அவன்தான், எழுத்தறிவில்லா மக்களிடம் அவனுடைய அத்தாட்சிகளை எடுத்துக் காண் பித்து, அவர்களைப் பரிசுத்தமாக்கி, அவர்களுக்கு நெறி நூலையும், ஞானத்தையும் கற்பிக்கும்படி யான தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைத்தான். அவர்களோ, அதற்கு முன்னர் பகிரங் கமான வழி கேட்டிலேயே இருந்தனர்.          (அல்குர்ஆன்: 62:2)

அன்பு நண்பர்களே, தோழர்களே, பெரியோர் களே,  தாய்மார்களே! சிறிது கவனத்துடன் மேற்கண்ட இறை வசனங்களை பொறுமையுடன் படித்து சிந்தித் துப் பாருங்கள். இவ்விறை வசனங்களைத் தெளிவாக நீங்கள் விளங்கி, புரிந்து கொண்டால் இவ்வுலகில் நீங்கள் சந்திக்கும் எல்லாவிதமான பிரச்சனைகளுக்கும், தீர்வு காணலாம். அது எப்படி? எனலாம். நாமறிந்த வரையில், நாம் விளங்கியதை தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். நீங்களும் சிந்தியுங்கள், ஆய்வு செய்யுங்கள், ஆராயுங்கள். ஏனெனில், நம் நெறிநூல் அல்குர் ஆன் அல்லாஹுவுடைய அத்தாட்சிகளை ஆய்வு செய்து செயலாற்றவே பணிக்கிறது. இதுவே நம் இருவுலக வாழ்வுக்கும் நல்லது. தங்களுடைய அறிவில் சிறப்பாகப் பட்டத்தை நமக்கும் தெரிவி யுங்கள். அனைவரும் அறிவிப்போம், நலன் பெறுவோமாக!

 இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் தொடரும்…

Previous post:

Next post: