சூழ்ச்சியாளர்களுக்கெல்லாம் மேலான சூழ்ச்சியாளன்….

in 2017 அக்டோபர்

ஷரஹ் அலி, உடன்குடி

வர்ணாசிரம கொள்கை போன்ற ஒரு பிரித் தாளும் முறையை கொண்டு மக்களை பல பிரிவுகளாகப் பிரித்து அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி வந்த ஃபிர்அவ்ன் தன்னுடைய ஆளு மைக்குட்பட்ட நிலத்தில் பிறக்க போகும் ஆண் குழந்தை மகனால்தான் தனக்கு வேட்டு காத்தி ருக்கிறது என்பதை ஜோதிடர்கள் சொல்லக் கேட்டு, அதைத் தடுப்பதற்கு அவன் மேற் கொண்ட முயற்சிகள் எல்லாம் விழலுக் கிறைத்த நீராகி போன சரித்திரம் இவர்களுக்கு தெரியுமா? சரித்திரம் தெரியாமல் சரித்திரம் படைக்க முடியுமா? சிந்தித்து பார்க்க வேண்டாமா?

நிராகரிப்பவர்கள் உங்களை ஒழித்துக் கட்டு வதற்காக எப்படியயல்லாம் சூழ்ச்சி பண்ணிக் கொண்டிருந்தார்கள்? அவர்களும் சூழ்ச்சி பண்ணுகிறார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி பண்ணினான். சூழ்ச்சி பண்ணுவதில் அல்லாஹ் கை தேர்ந்தவன். எல்லோரையும் மிகைத்தவன் என்பதையயல்லாம் (இவர்களுக்கு) எடுத்துச் சொல்லுங்கள். (அல்குர்ஆன் : 8:30)

அவர்களும் விதவிதமாகத்தான் சூழ்ச்சி பண்ணிப் பார்த்தார்கள் அவர்களுடைய சூழ்ச்சி மலைகளையே பெயர்த்துவிடக் கூடி யவையாக இருந்தாலும் அவர்களுடைய ஒவ் வொரு சூழ்ச்சியையும் முறியடிக்கும் உரிய தண்டனை அல்லாஹ்விடம் இருந்தது. (இருக்கிறது)         (அல்குர்ஆன் : 14:46)

அல்லாஹ் அவர்கள் செய்த சூழ்ச்சியை அடியோடு பெயர்த்தெடுத்து அவர்களின் தலை மீதே விழ வைத்ததையும், அவர்கள் சுதாரிக்கும் முன் நினைத்துக் கூடப் பார்க்காத திசையிலி ருந்து அவர்களுக்கு தண்டனை வந்ததையும் எடுத்துச்  சொல்லுங்கள்.   (அல்குர்ஆன் : 16:26)

இவர்களுக்கு முன்னிருந்தவர்களும் இப்படித்தான் சூழ்ச்சி பண்ணிக் கொண்டி ருந்தார்கள்.         (அல்குர்ஆன் : 13:42)

உங்களை ஒழித்துக் கட்டுவதற்கு என் னென்ன தில்லுமுல்லுகளைக் கையாள வேண் டுமோ அத்தனை தில்லுமுல்லுகளையும் அவர் கள் கையாண்டார்கள். கடைசியில் அவர்கள் விரும்பாத நிலையில்தான் (அவர்கள் பார்த்துக் கொண்டே இருக்கும் போதே தான் அல்லாஹ் வின் சத்திய மார்க்கம் வந்தது, வெற்றி வாகை சூடியது.          (அல்குர்ஆன் : 9:48)

அவன்தான் தன்னுடைய தூதரை வழி காட்டலோடு சத்திய மார்க்கத்தோடு அனுப்பி வைத்தான். இணை வைத்து வணங்குபவர்கள் (அதனை) வெறுத்தாலும் சரி (உலகத்திலுள்ள மற்ற) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்க(மான இஸ்லா)ம் விழுங்கும்படி செய்வான்.             (அல்குர்ஆன்: 9:33)

அல்லாஹ் பூமியை (உருண்டையாக சுருட்டி அதன் கிழக்கு பகுதிகளும், மேற்கு பகுதிகளும் (சந்திக்கும் இடமான சர்வதேச தேதிக்கோடு போடப்பட்டிருக்கும் இடம்) எனக்குத் தெரியுமாறு காட்டினான். எனக்கு காட்டப்பட்ட இடங்கள் வரை (அதாவது சர்வதேசக் கோட்டில் தொடங்கி சர்வதேசக் கோடு வரை) என் சமுதாயத்தினரின் ஆட்சி பரவும் (அகண்ட முஸ்லிம் சாம்ராஜ்யம் ஏற்படும்) என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம், நபிமொழி எண் : 5538

அல்லாஹ் தன்னுடைய திட்டம் என்ன? என்பதை தன் தூதர்(ஸல்) அவர்களின் வாயிலாக முன்னறிவிப்புச் செய்திருக்கிறான். உலகம் முழுவதும் உள்ள தங்களின் கூட் டாளிகளோடு இவர்கள் கைக் கோர்த்துக் கொள்ளட்டும். சூழ்ச்சி பண்ணட்டும், முடிந்தால்,  அதை  தடுத்து  நிறுத்தட்டும்.

அறிந்து கொள்ளுங்கள் சூழ்ச்சி பண்ணு வதில்  அல்லாஹ்  கை  தேர்ந்தவன்.  படியுங்கள்! பணியுங்கள்! பரப்புங்கள்! குர்ஆனை.

Previous post:

Next post: