யார் இந்த மதகுருமார்கள்?

in 2017 அக்டோபர்

(தொடர்-3)
அபூ அப்தில்லாஹ்
செப்டம்பர்  தொடர்ச்சி…

மதகுருமார்களின் போட்டி பொறாமையே ஒரே சமுதாயம்  சிதறக்  காரணம்!

இது அல்லாமல், இந்த மதகுருமார்கள் தங்க ளுக்குள் ஏற்படும் போட்டி பொறாமை காரண மாகவும் (2:90, 213, 3:19, 10:90, 42:14, 45:17) உலகியல் ஆசை மனோ இச்சை (4:135, 38:26, 53:3, 7:176, 18:28, 20:16, 25:43, 28:50, 45:23) மற்றும் ஆதிக்கம் காரணமாகவும் 21:92, 23:52 இறை கட்டளைகளை நிராகரித்து ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைப் பல பிரிவுகளாகக் கூறு போடுகிறார்கள். இப்படித்தான் பல மதங்களும் அந்த மதங்களிலும் பல உட்பிரிவுகளும் ஏற் பட்டு அவை சமுதாயத்தைச் சிதறடிக்கின்றன.

பல மதங்கள் காலங்காலமாக நிலைத்திருக் கக் காரணம் அம்மதங்களைப் போதிக்கும் மத குருமார்கள் சத்தியத்தை நேர்வழியைத் திட்ட மாக, தெளிவாக அறிந்தாலும் தங்கள் வயிற்றுப் பிழைப்பை நோக்கமாகக் கொண்டு நேர் வழியை மறுக்கிறார்கள் என்பதை 2:146, 6:20 இறைவாக்குகள்  உண்மைப்படுத்துகின்றன.

மதகுருமார்களின்  வக்கிர  புத்தி!
இறைத்தூதர்கள் இறைச் செய்தி என்ற வஹி மூலம் இறைவனுடன் நேரடித் தொடர்பிலும், இறைவனது கண்காணிப்பிலும் (52:48) மேலும் எந்த மனிதனாலும் செய்து காட்ட முடியாத சில அற்புத நிகழ்வுகளை (முஃஜிசாத்) இறைக் கட்டளைப்படி செய்து காட்டினார்கள். அப் படி இருந்தும் இறைத்தூதர்களின் நேர்வழி  போதனைகளை இந்த மதகுருமார்கள் ஏற்கா மல் நிராகரித்தார்கள் என்றால் அவர்களின் கல் நெஞ்சத்தையும், வக்கிர புத்தியையும் எளிதாக விளங்க முடியும். இதையும் இறைவன் அல்குர்ஆன் 2:74, 5:13 இறைவாக்குகளில் உறுதிப்படுத்துகின்றான்.

மக்களின்  முக்கிய  கவனத்திற்கு!
இப்போது முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, இறைவனுடன் நேரடித் தொடர்புடன் இருந்த இறைத் தூதர்களையே நிராகரித்து, தங்களின் அற்ப உலக ஆதாயங் களைக் குறியாகக் கொண்டு, மனோ இச்சைக்கு அடிமைப்பட்டு (7:176. 18:28, 20:16, 25:43, 28:50, 45:23) பல பிரிவுகளை அதாவது மதங் களைக் கற்பனை செய்தது இந்த மதகுருமார் கள். நிறைவு பெற்ற (5:3)இறுதி வழிகாட்டல் நெறிநூல் அல்குர்ஆன் பதிந்துப் பாதுகாக்கப் பட்டு விட்டதால், இறுதி இறைத் தூதருக்குப் பின்னர் புதிய இறைத்தூதரோ, புதிய நெறி நூலோ இல்லவே இல்லை. எனவே முன்னர் நபிமார்கள் செய்த பிரச்சார பணி இறுதித் தூதரின் சமூகத்தினர் மீது சுமத்தப்பட்டது. (பார்க்க: 3:110, 9:71, 103:1-3) பிரசார பணி ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது சுமத்தப்பட்ட தலையாய பணியே அல்லாமல் மதகுருமார்கள் மீது சுமத்தப்பட்ட பணி அல்ல; அதுவும் கூலிக்காக மாரடிக்கும் மதகுருமார்கள் பிரசார பணியை செய்ய முற்றிலும் தகுதியற்றவர்கள்.

மதகுருமார்கள்  திருந்தமாட்டார்கள்! இன்னொரு உண்மையையும் முஸ்லிம்கள் புரிந்து கொள்ள வேண்டும். வஹீ மூலம் நேர டித் தொடர்புடன் இருந்த இறைத் தூதர்க ளையே கடுமையாக எதிர்த்த இந்த மதகுருமார் கள், அவர்களது வாயிலிருந்து நேரடியாக வெளிவந்த இறை வாக்குகளையே நிராகரித்த இந்த மதகுருமார்கள், இன்று ஏடுகளில் பதி வாகியுள்ள அல்குர்ஆன் இறை வாக்குகளை சாதாரண முஸ்லிம்கள் படித்துக் காட்டு வதையா ஏற்கப் போகிறார்கள்? அப்படி ஏற்ற தாக வரலாறே இல்லை! 2:41,42,44,75,76,78, 79,109,170,171,174,176,213, 3:78,187,188, 4:44,46, 5:41,63, 6:21,25,26, 9:9,10,34, 11:18,19, 31:6 இந்த இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் இந்த மதகுருமார் களின் தில்லு முல்லுகளையும், பித்தலாட்டங் களையும், ஏமாற்றுத் தந்திரங்களையும் அறிய முடியும்.

முஸ்லிம் மதகுருமார்களின் தந்திரம் : இந்த இறைவாக்குகள் அனைத்தும் யூத, கிறித்தவ, குறைஷ் மதகுருமார்களைப் பற்றி யவை. எங்களைக் கட்டுப்படுத்தாது என்று முஸ்லிம் மதகுருமார்கள் முஸ்லிம்களை ஏமாற்ற முற்படுகிறார்கள். ஆனால் இறைவன் எவற்றைக் குற்றமாகக் கண்டித்திருக்கிறானோ அவற்றை யார் செய்தாலும் குற்றந்தான் என் பதை முஸ்லிம் மதகுருமார்கள் ஏற்கமாட்டார் கள். யூதன் திருடினால் அது திருட்டு, நாங்கள் திருடினால் திருட்டு அல்ல. யூதன் ஓரினப் புணர் வில் ஈடுபட்டால் அது குற்றம்; நாங்கள் ஓரினப் புணர்வில் ஈடுபட்டால் அது குற்றம் அல்ல. அவுலியாவின் நற்செயல்(?); யூதன் விபச்சாரம் செய்தால் அது விபச்சாரம்; நாங்கள் விபச்சாரம் செய்தால் அது விபச்சாரம் அல்ல; யூதன் இறை வன் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி னால் அது பெருங்குற்றம்; ஆனால் நாங்கள் இறைவன் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற் றினால் அது குற்றமே இல்லை என்பதுதான் முஸ்லிம்  மதகுருமார்களின்  வாதம்.

உண்மை  நிலை  என்ன? உண்மை என்ன? அல்குர்ஆன் என்ன கூறுகி றது? தவறு, பாவம், குற்றச் செயல், பித்அத், குஃப்ர், ´ர்க் என எந்த இறைத் தூதருக்குப் பின்னர் அந்த சமுதாயத்தில் திருட்டுத்தனமாக, சட்ட விரோதமாக புகுந்து கொண்ட மதகுரு மார்களும், அவர்களைக் கண்மூடி (தக்லீது) பின்பற்றிய மக்களும் செய்து அவை அல்குர் ஆனில் கண்டிக்கப்பட்டிருந்தாலும், முஸ்லிம் மதகுருமார்களும், அவர்களை தக்லீது செய்யும் மக்களும் செய்தாலும் அது குற்றச் செயல்தான், பாவம்  தான்,  தண்டனைக்குரியதுதான்.

இதையும் தெளிவாக இறுதி இறைத்தூதர் மக்களுக்கு  விளக்கி  இருக்கிறார்கள். “”உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழி முறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அள விற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந் துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார் கள். நாங்கள், “”அல்லாஹ்வின் தூதரே! யூதர் களையும், கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப் பிடுகிறீர்கள்?” என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “”வேறெவரை?” என்று பதில் அளித் தார்கள்”. (அபூ சயீத் அல்குத்ரீ(ரழி) புகாரீ 3456)

முஸ்லிம் மதகுருமார்களை பின்பற்ற ஆதார முண்டா? இந்த முஸ்லிம் மதகுருமார்களுக்கு வழிப் படவேண்டும், அவர்களது வழிகாட்டல் படியே நடக்க வேண்டும் என ஒரேயயாரு குர் ஆன் வசனத்தையோ, ஒரேயயாரு ஆதாரபூர்வ மான ஹதீçஃதயோ இந்த மதகுருமார்களால் காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது. அல் லாஹ்வுக்கு வழிபட வேண்டும்; அவனது கட் டளைப்படி நடக்க வேண்டும் என்றும் அதே போல் இறைத்தூதருக்கு வழிப்பட வேண்டும் அவரது வழிகாட்டல்படி நடக்க வேண்டும் என் றும் கூறும் குர்ஆன் வசனங்கள் சுமார் 19, இறை வனுக்கு பயபக்தியுடன் நடந்து கொண்டு என் னைப் பின்பற்றுங்கள் என்று இறைத் தூதர்கள் கூறியது 11 இடங்களிலும் அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. சமுதாய ஒற்றுமையை குறிக் கோளாகக் கொண்டு குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டு அமீருக்கு வழிப்பட வேண்டும் என்று 4:59 ஒரேயயாரு இடத்தில் இடம் பெற்றுள்ளது.

மற்றபடி மதகுருமார்களான இந்த ஆலிம் களின் வழிகாட்டலின்படி நடக்க வேண்டும் என்ற ஆணை அல்குர்ஆனிலோ, ஆதாரபூர்வ மான ஹதீஃதிலோ இல்லவே இல்லை. இன் னும் பகிரங்கமாகச் சொல்வதாக இருந்தால் அல்குர்ஆன் 5:95ல் இஹ்ராமுடைய நிலையில் வேட்டையாடி ஒரு பிராணியைக் கொன்றால் அதற்குப் பரிகாரமாக அதே போன்றதொரு பிராணியை ஈடாக மக்காவில் குர்பானி கொடுக்க வேண்டும். அதற்கு உங்களில் நீத முடைய இருவர் தீர்ப்பளிக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறானே அல் லாமல், இங்கும் மதகுருமார்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனக் கட்டளையிடவில்லை.

தோட்டிக்கும்  அரசாணை! சாதாரணமாக தெருக் கூட்டும் தோட்டி கூட அரசிடமிருந்து முறையான பணி ஆணை யைப் பெறாத நிலையில் அப்பணியில் ஈடுபட முடியாது என்று இருக்கும்போது, பணி ஆணையே இல்லாமல் இந்த மதகுருமார்கள் எந்த முகத்தோடு நாங்கள் தான் மார்க்கம் கற்ற மேதைகள் மக்களுக்கு மார்க்கம் சொல்ல உரிமை பெற்றவர்கள் என மார் தட்டுகிறார் கள்?  பிதற்றுகிறார்கள்?

மதகுருமார்களின்  திருட்டுத்தனம்! இந்த மதகுருமார்கள் சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக, கொல்லைப்புற இடுக்கு வழியாக முஸ்லிம் சமுதாயத்தில் நுழைந்து கொள்ள 16:43, 21:7 என இரண்டு குர்ஆன் வசனங்களில் இடம் பெறும் “”ஃபஸ்அலூ அஹ்லஃத்திக்ரீ” என்ற அரபி பதத்திற்கு “”நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர்களி டம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்” என தங் கள் மனோ இச்சையின்படி பேசி வருகிறார்கள்; எழுதி வருகிறார்கள்.

Previous post:

Next post: