விமர்சனம் : செப்டம்பர் 2017 அந்நஜாத் இதழில் அல்லாஹ்வின் அவகிய திருநாமங் கள் என்ற கட்டுரையில் (25ம் பக்கத்தில்) 30வது வரியில் மார்க்க வல்லுநர்கள் நம்மை எச்சரித்து உள்ளதாக கூறியுள்ளது. இஸ்லாத் தில் மார்க்க வல்லுநர்கள் என்ற பிரிவு உள்ளதை ஏற்றுக் கொள்வது போல் உள்ளதே. இது சரிதானா?
விமர்சனம் : செப்டம்பர் 2017 அந்நஜாத் இதழில் அல்லாஹ்வின் அவகிய திருநாமங் கள் என்ற கட்டுரையில் (25ம் பக்கத்தில்) 30வது வரியில் மார்க்க வல்லுநர்கள் நம்மை எச்சரித்து உள்ளதாக கூறியுள்ளது. இஸ்லாத் தில் மார்க்க வல்லுநர்கள் என்ற பிரிவு உள்ளதை ஏற்றுக் கொள்வது போல் உள்ளதே. இது சரிதானா? இக்பால், அய்யம்பேட்டை
விளக்கம் : தாங்கள் குறிப்பிட்டுள்ள பாரா வின் ஆரம்பம் முதல் படித்துப் பாருங்கள். மொழி ரீதியாக “”இலாஹ” என்பதை அரபி மொழி வல்லுநர்கள் கூறுவதை விட நம் இஸ்லாமிய மொழி வல்லுநர்கள் என்று தான் வந்திருக்க வேண்டும். அதனை இஸ்லாமிய மொழி வல்லுநர்கள் என்று திருத்தி கொள்ளவும். சுட்டிக் காட்டி யமைக்கு நன்றி. அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி வழங்குவானாக.விமர்சனம் : செப்டம்பர் 2017 அந்நஜாத் இதழில் ஷைத்தான் குடியிருக்கும் குகை என்றும் கட்டுரையில் அறிவியலுக்கு தகுந்த வாறு ஹதீஃத்களை சரிகட்டுவது போல் தெரிகிறதே? போன் மூலம் வாசகி.
விளக்கம் : அறிவியலுக்கு தகுந்தவாறு ஹதீஃதுகள் சரிக்கட்டப்படுவதாக (ஷைத் தான் குடியிருக்கும் குகை) கட்டுரையில் ஒரு வாசகி விமர்சித்திருந்தார். ஹதீஃதுகள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களால் சொல்லி முடிக்கப்பட்டு 1400 ஆண்டுகள் ஆகிவிட்டன. புதிதாக ஹதீஃதை எவரும் சரிகட்ட முடியாது. கி.பி. 500 இருந்து 1500 வரை இருண்ட காலமாக இருந்த ஐரோப்பாவில் அறிவொளி ஏற்றியவர்கள் அரபு முஸ்லிம்கள். இந்த அறிவு தீபத்தை குர்ஆன் மற்றும் ஹதீஃதுகளிலிருந்தே பெற் றார்கள். எனினும், இன்றைய முஸ்லிம் சமு தாயம் குர்ஆன், ஹதீஃதுகளை வெறும் வணக்க வழிபாட்டுக்கு மட்டும் தான் என்று மெளலவிகள் மாற்றிவிட்டனர் மார்க்கம் காட்டும் அறிவியல் உண்மைகள் உறங்கிக் கிடக்கின்றன. அல்லாஹ்வின் பேரருளால் மாற்று மத அறிஞர்கள் அவை களை ஆய்வு செய்து அல்குர்ஆன், அல் ஹதீஃத் காட்டும் அறிவியல் உண்மைகளை மக்கள் சமுதாயத்திற்கு எடுத்துக் காட்டி வருகிறார்கள். இந்த நவீன உண்மைக ளையே நாம் கட்டுரையாக எழுதுகிறோம்.
மனிதர்கள் என்ற முறையில் அந்நஜாத் தில் இடம் பெறும் ஆய்வுகளிலும் பிழைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அதை தகுந்த ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டுங்கள். தவறு இருப்பின் திருத்திக் கொள்கிறோம். எந்த சமுதாயம் தம்மை தாமே சீர்திருத்திக் கொள்ளவில்லையோ, அந்த சமுதாயத்தை அல்லாஹ்வும் சீர்திருத்த மாட்டான். (குர்ஆன்: 8:53)
இது அல்லாஹ்வின் எச்சரிக்கையுரை! அனைத்து மனிதர்களுக்கும் பொது வானதே! அறிவியலுக்காக எந்த ஹதீஃது, எப்படி, எங்கே? சரிகட்டப்பட்டுள்ளது என்பதை விரிவாய் எழுதி அனுப்புமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இன்ஷா அல்லாஹ். உரிய முறையில் அதை ஆய்வுக் குட்படுத்த காத்திருக்கிறோம்.