அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்…

in 2017 நவம்பர்

தொடர் – 3
தோழர் ஹம்துல்லாஹ்
(அக்டோபர் தொடர்ச்சி…)

இப்ராஹீம்(அலை) அவர்களின் பிரார்த்தனையை முதலில் பாருங்கள். அல்குர்ஆன் வசனம் : 2:129ல்
“”எங்கள் இரட்சகனே! அவர்களிடையே உன்னுடைய 1) அத்தாட்சிகளை எடுத்துக் காண்பித்து, அவர்களுக்கு 2) நெறிநூலையும், 3) ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் 4) தூய்மைப்படுத்தக்கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே அனுப்பி வைப்பாயாக. நிச்சயமாக நீயே வல்லமைமிக் கோன், பெரும் ஞானமுடையோன்”

என இப்ராஹீம் (அலை) அவர்கள் அம்மக்களிடையே அனுப்பப்படும். இறைத்தூதர் செய்ய வேண்டிய பணிகளை அல்லாஹ்விற்கு பட்டிய லிட்டு சமர்ப்பிக்கிறார்கள் இப்றாஹிம்(அலை) அவர்கள் பட்டியலைப் பாரீர். அவ்விறைத் தூதர்
1. அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை எடுத்துக் காண்பிக்க வேண்டும்.
2. அல்லாஹ்வுடைய நெறிநூலை கற்றுக் கொடுக்க வேண்டும்.
3. அல்லாஹ்வுடைய ஞானத்தை கற்பிக்க வேண்டும், இறுதியாக,
4. அவர்களை பரிசுத்தப்படுத்த வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் இப்ராஹீம்(அலை) அவர்களின் பிரார்த்தனையை அப்படியே ஏற்றுக் கொள்கிறான். ஆனால், இப்ராஹீம்(அலை) அவர்கள் கேட்ட பட்டியலில் ஒரு சிறிய மாற்றத்தை செய்து மற்ற மூன்று வசனங்களில் விவரிப்பதை பாருங்கள்: அவ்விறைத்தூதர்.

1. அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை எடுத்துக் காண்பிப்பார். (அதன் மூலம்)
2. அவர்களை பரிசுத்தப்படுத்துவார். (அதன் பின்)
3. அல்லாஹ்வுடைய நெறிநூலை கற்றுக் கொடுப்பார், பின்
4. அல்லாஹ்வுடைய ஞானத்தை கற்பிப்பார்.

இது ஒரு சாதாரண மாற்றமல்ல. முழு மனித இனமும் தங்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் தீர்க்கமான விதியாகும். அல்லாஹ்வின் அபூர்வமான அத்தாட்சிகளில் தலைசிறந்த அத்தாட்சி மனிதனின் படைப்பு என்பதை எவரும் மறக்க முடியாது. ஆரம் பத்தில் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவன், பின் சிறிய மனித்துளியிலிருந்து படைக்கப்பட்டான். ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்கள் சுவனத்தில் எவ்வித உலக அனுபவமில்லாமல் இருந்ததால் நமது பகிரங்க விரோதி ஷைத்தான். அவன் அல்லாஹு விடம் கூறிய சபதத்திற்கு (பார்க்க : அல்குர்ஆன் வசனம் : 7:16,17) ஏற்ப ஆதத்தின் வெகுளித் தனத்தை பயன்படுத்தி இலகுவாக அவரையும் அவருடைய துணைவியையும் ஏமாற்றமும் வழி கெடுக்கவும் முடிந்தது. அதன் விளைவாக அவ்விரு வரும் இப்பூமிக்கு அனுப்பப்பட்டு வாழ ஆரம்பித்த தின் விளைவு நம்முடைய இன்றைய இவ்வுலக வாழ்வு.

காலப்போக்கில் மனித இனம் பெருக பெருக ஷைத்தான் தனது தந்திரங்களை பயன்படுத்தி ஆதத்தின் மக்களை வழிகெடுத்தான். மக்களிடையே பற்பல தப்பான, தவறான, பாவமான, ஏகனின் கட்டளைக்கு மாறான பற்பல கருத்துக்களை, எண்ண ஊசலாட்டங்களை உருவாக்கியதால் அம் மக்கள் ஏகன் அல்லாஹ்வின் ஆணைக்கு கட்டுப்படாமல் மனம் போன போக்கில் வாழ ஆரம்பித்தார்கள். ஏகன் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டிய தூய இஸ்லாமிய வாழ்வை மறந்தோ, அல்லது அதற்கு மாறாகவோ வாழ்ந்தனர். அன்றாட நடைமுறை வாழ்வுக்கு தேவையான பற்பல சட்ட திட்டங்களை அவர்களாகவே உருவாக்கினார்கள். அவர்களை திருத்தி, அல்லாஹ்வின் நேர்வழி காட்ட அவரவர்களுக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் களின் ஆணைகளை மதிக்காமல் அத்தூதர்களுக்கு அளவுக்கதிகமாக சொல்லொனா கஷ்டங்கள் துயரங்கள், இன்னல், இடுக்கண்களை கொடுத்தனர். மேலும் அவரவர்களின் இறைத் தூதர்களை வெட்டி, கொலையும் செய்தார்கள். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட நெறிநூல்கள் கூறிய ஆணைகளை மறுத்தோ, வெறுத்தோ அல்லது தங்களது மனோ இச்சைபடி மாற்றியோ வாழ்ந்தனர். இவ்விதமாக மக்களிடையே ஏகன் அல்லாஹ்வால் ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்களுக்கு அருளப்பட்ட தூய இஸ்லாத்தை களங்கப்படுத்த முயன்றனர். மார்க்கத் தின் பெயரால் ஏகன் அல்லாஹ்விற்கு மாறு செய்து இணை, துணைகளை உருவாக்கி வழிபட்டனர்.

இந்நிலையில் அம்மக்களின் உள்ளங்களில் இருந்த அசிங்கம், களங்கம், கசடுகளை துடைத்து தூய்மை செய்யாமல் அவரவர்களிடம் எந்த போதனை உபதேசம் செய்தாலும் அவர்களின் உள்ளங்களில் ஏறாது என்பதை நன்கறிந்த அல்லாஹ் அவனுடைய அத்தாட்சிகளை காட்டி அவர்களின் உள்ளங்களை பரிசுத்தப்படுத்தியபின்பே நெறிநூல் அறிவையும், ஞானத்தையும் இப்ராஹீம் (அலை) வேண்டிய இறைத்தூதர் செய்வார் என்ற பொருளில் அறிவிக்கிறான். அதன்படிஇப்ராஹீம்(அலை) வேண்டிய இறைத்தூதராக முஹம்மது(ஸல்) அவர் கள் அனுப்பப்பட்டார்கள் என்பதை (ஸல்) அவர் களின் சொல், செயல்களான வாழ்வுநெறி, வழி முறை, உபதேசம் அனைத்தும் அமைந்திருந்தது என்பதை அவர்களின் வரலாற்று நிகழ்ச்சிகளை நமக்கு தெரிவிப்பதை நாம் அறியலாம்.

அன்றைய மக்கத்து அரேபியர்களிடையே கடவுள் மறுப்பு, இணை வைப்பு அவர்களுக்கிடையே விரோத, குரோத போர் குணங்கள், குல, கோத்திர பெருமைகள், பொறாமை, அகங்காரம், ஆணவம், மது, மாது, விபச்சாரம் போன்ற சமூக சீர்கேடுகள் மிகைத்து இருந்தன. அம்மக்களின் இத்தீய குணங்களை துடைத்து பரிசுத்தப்படுத்த நம் அருமை நபி(ஸல்) அவர்களுக்கு தங்களுடைய 23 வருட நபித்துவ காலத்தில் சுமார் 13 வருடங்கள் தேவைப்பட்டது. முதல் 13 வருடங்கள் அல்லாஹ்வைப் பற்றி மட்டும் போதித்தார்கள். வேறு எதனையும் உபதேசிக்கவே இல்லை.

அக்காலக் கட்டத்தில் எவ்வித மத, மார்க்க சார்பான தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற வணக்க வழிபாடல்கள் அம்மக்கள் மீது விதிக்கப்படவில்லை. காரணம் : நல்ல தூய ஏகத்துவ இறை நம்பிக்கையில்லையெனில் , அவர்களின் எந்த வணக்க வழிபாடல்களும் தூயதாக இருக்காது என்பதை முந்திய யூத சமுதாயத்தினர்களின் வரலாற்றை நமக்கு அல்குர்ஆனில் அல்லாஹ் அறிவிப்பதன் மூலம் நாம் அறிய முடிகிறது. யூதர்களுக்கு அனுப் பப்பட்ட மூஸா(அலை) அவர்கள் யூதர்களின் உள்ளங்களை ஏகத்துவ இறை நம்பிக்கைக்கு மேலாக கொடுங்கோல் அரசன் பிர்வ்னின் ஆட்சியிலிருந்து விடுவிப்பதையே முழு முதற் குறிக்கோளாகக் கொண்டு மக்களுக்கு அல்லாஹ்வைப் பற்றி உபதேசித்தார்கள். விளைவு : மூஸா(அலை) அவர் கள் தன் சகோதரர் ஹாரூன்(அலை) அவர்கள் பொறுப்பில் நாற்பது நாட்கள் விட்டுவிட்டு தூர்சீனா மலைக்கு போய் வருவதற்குள் யூதர்கள் அல்லாஹ்வுக்கு இணையாக””காளைக் கன்றை” கட வுளாக்கியதை திருகுர்ஆனில் காண முடிகிறது. பார்க்க : அல்குர்ஆன் : 2:51 & 7:148)

இறுதியாக, கொடுங்கோலன் பிர்அவ்னையும், அவனுடைய படையையும் நைல் நதியில் மூழ் கடித்து நம்பிக்கையாளர்களுக்கு மிகப் பெரும் வெற்றியளித்தான், பூமியின் கிழக்கும், மேற்கும் அவர்களின் கை வசமானது. யூதர்கள் ஊர் ஊராக பிரயாணம் செய்த போது ஓர் ஊரில் மக்கள் சிலைகளை வணங்கு வதைக் கண்டார்கள். உடனே மூஸா(அலை) அவர் களிடம் ஏகன் அல்லாஹ்வை மறந்து இச்சிலை களைப் போன்ற ஒரு கடவுளை தங்களுக்கு கொண்டு வரும்படி வேண்டினார்கள். (பார்க்க அல்குர்ஆன் : 7:138) அவர்களின் உள்ளங் களில் ஏகத்துவம் முழுமையாக ஊன்றபட்டு தூய் மைப்படுத்தப்பட்டிருந்தால் இப்படிப்பட்ட ஆசைகளை அவர்கள் வெளியிட்டிருக்க மாட்டார்கள். இவ்விரு ஆதாரங்களையும் அல்குர்ஆனில் அத்தியாயம் 7-ல் வசனங்கள் 136லிருந்து 153 வரை விளக்கமாக காணலாம். இவையனைத்தும் மூஸா(அலை) அவர்கள் காலத்திலேயே நடந்துள்ளது. விளைவு : மூஸா(அலை), ஹாரூன்(அலை) அவர்களின் மறைவிற்கு ஒரு சில வருடங்களில் யூதர்கள் வழிகெட்டனர். அல்லாஹ்வின் பற்பல சாபத்திற்கு ஆளானார்கள். ஆனால்,

நம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தன் மக்களின் நபித்துவம் கிடைத்த முதல் 13 வருடங்கள் ஏகத்துவத்தை மட்டும் உபதேசித்து அவர்களை தூய்மை படுத்திய பின்பே மற்ற வணக்க வழிபாடல்களைக் கற்று தந்து முழு இஸ்லாத்தை நிலைநிறுத்தினார்கள். விளைவு: இனி இறைத் தூதர்கள் வரமாட்டார்கள். முஹம்மது(ஸல்) அவர்களே இறுதித்தூதர் இவரது மார்க்கமே முழுமையானது, முடிவானது என முடி வான முத்திரை நபியாக அல்லாஹ் அங்கீகரித்துள்ள தையும் திருகுர்ஆனில் காணமுடிகிறது.(பார்க்க : அல்குர்ஆன் : 5:3)

நம் முஹம்மது (ஸல்) அவர்களின் மறைவிற்கு பின்னும் அகில உலகளவில் பரவி வரும் மார்க்க நெறியாக “”இஸ்லாம்” திகழ்கிறது என்றால் அதற்கு தலையாய காரணம்: அல்லாஹ்வின் அத்தாட்சி களை மக்களுக்கு காட்டி அதன் மூலம் அல்லாஹ் மட்டுமே! என அல்லாஹ்வின் வல்லமை, சிறப்பு களைக் கூறி அன்றைய அரபு மக்களை பரிசுத்தப் படுத்தியதின் விளைவு என்றால் மிகையாகாது.

இதன் அடிப்படையில் தான் இன்று நவநாகரீகத்தில் முதிர்ந்த அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், சீனா, ரஷ்யா போன்ற மேலை நாடுகளில் பலர் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். இன்றைய முஸ்லிம்களையோ, எந்த இயக்கங்களோ இதனை சாதித்ததாகவோ உரிமைக் கொண்டாட முடியாது. இம்மேலை நாட்டவர்கள் விரும்பும் அதிநவீன அறிவியல் அறிவு மூலம் இயற்கையை ஆராயும் போது, அதன் விளைவுகளை நிதர்சனமாகக் காணும்போது, அது ஏறத்தாழ 1400 வருடங்களுக்கு முன்பே எழுத படிக்க தெரியாத ஒருவரால் கூறப்பட்டிருப்பதை காண்கிறார்கள். அது எப்படி சாத்தியம்? மீண்டும் ஆய்வு! விளைவு: ஏகன் ஒருவனால் அவருக்கு அருளப்பட்டது என முடிவுக்கு வந்து அந் நூலை தங்களின் வேதவாக்காக ஏற்று அதனை தனது வாழ்வுநெறி மூலம் வாழ்ந்து காட்டிய (ஸல்) அவர்களை தங்களின் வழிகாட்டியாக ஏற்க முஸ் லிம்களாக மாறுகிறார்கள். இதனை அண்மையில் வெளி வந்து முழு உலகையே உண்ணிப்பாக காண வைத்துள்ள யூடியூப் (youtube) “”எவராலும் மறுக்க முடியாத, திருகுர்ஆன், இஸ்லாம் நிரூபிக்கும் 69 அறிவியல் அற்புதங்கள்” என்ற செய்தி நமக்கு தெரிவிக்கிறது.

அல்லாஹுவைப் பற்றி தெளிவாக அறிய, விளங்க, அவனுடைய சிறப்பான பண்புகளை, குணநலன்களை அளவிலா சக்தியை, வல்லமையை வாய்மையை அவனின் படைப்பினங்களில் அது வெளிப்பட்டிருப்பதை கூர்ந்து ஆய்வு பாணியில் நோக்கி, புரிந்து கொள்ள அல்லாஹுவுடைய அழகிய திருநாமங்களை தெரிந்து விளங்கினாலே போதும் என்ற உந்துதலின் ஆக்கமே இந்த “”அல்லாஹ்வின் திருநாமங்கள்” என்ற தொடர்கள் ஆக்கம். (இன்ஷா அல்லாஹ் தொடரும்)

Previous post:

Next post: