அல்லாஹ்வின் ஒருமை! அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்!

in 2017 நவம்பர்

முஹிப்புல் இஸ்லாம்

அல்லாஹ்வின்  ஒருமை :
ஏகன் அல்லாஹ் அருளிய வாழ்வியல் அறநெறி இஸ்லாம்.
இஸ்லாத்தின் மூலக்கொள்கை அல்லாஹ் வின் ஒருமை, ஏகத்துவம், தவ்ஹீத்.
அல்லாஹ்வின் ஒருமை அல்லாஹ் அருளியது; மனிதர்களின் கண்டுபிடிப்பல்ல.
அல்லாஹ் யார்? எப்படி அவன் ஒருமையான வன்? எவ்வாறு அவனை ஒருமைப்படுத்த வேண்டும்?
இவை  போன்றவைகளை ஏகன் அல்லாஹ் மட்டுமே நன்கறிந்தவன்.

ஒருமை  அல்லாஹ்வின்  தனியுடமை :
படைப்பினங்கள் அனைத்தின் படைப்பாளன் ஏகன் அல்லாஹ், அவன் ஒருவனே ஒருமையானவன். படைப்பினங்கள் பன்மையானவை.

ஏகன் அல்லாஹ், ஒருமையை அவனது தனி யுடையமாக்கிக் கொண்டான்.
பன்மையைப் படைப்பினங்களுக்குப் பகிர்ந்தளித்தான்; பன்மைப் படைப்பினங்களின்  பொதுவுடையமையானது.
ஏக இறையின் ஒருமையைப் படைப்பினங்களின் மீது சாற்றுவதும், படைப்பினங்களின் பன்மையை ஏக இறையின் மீது சாற்றுவதும்,ஏக இறை ஒருமைத் தகர்க்கப்படுகிறது; இது அல்லாஹ்வின் ஒருமை மீது ஜின்களும், மனிதர்களும் நடத்தும் தாக்குதலாகும். ஏகன் அல்லாஹ்வின் மன்னிப்பில்லா மாபாதகம், ஷிர்க் -இறைக்கிணையாக்கும்  கொடூரம்.
ஏக  இறையின்  மன்னிப்பில்லா  மாபாதகம்!

இக்கொடூரத்திற்குப் புனிதக் குர்ஆன் நெடுகிலும் தொடுக்கப்படும் கண்டனக் கனைகள் தொய்வின்றி தொடர்ந்தே வந்து கொண்டிருக்கின்றன.

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை (ஷிர்க்) வைக்கப்படுவதை  மன்னிக்கவே மாட்டான்.
இது தவிர ஏனையவற்றைத் தான், நாடுவோருக்கு அவன் மன்னிப்பான்.
எவன் அல்லாஹ்வுக்கு ஷிர்க்-இணை வைக்கின்றானோ, நிச்சயமாக அவன் வெகு தூரமான  வழிகேட்டில்  சென்றுவிட்டான்.
(அல்குர்ஆன், நிசா 4:116,48)

ஏகன் அல்லாஹ், கடுஞ் சொற்களால் ஷிர்க்கில் ஈடுபடுவோரை நிந்திக்கிறான். ஷிர்க்கில் ஈடுபடுவோருக்கு ஏக இறை மன்னிப்பில்லை என்றால் ஷிர்க் எத்தனை பெரும் கடுங்குற்றம்?
ஷிர்க்கில் ஈடுபடுவோர் அவர்களை அவர்களே  பாவிகளாக்கிக்  கொள்கிறார்கள்.
புனிதக் குர்ஆன், ´ர்க்கின் படுபயங்கர பின் விளைவுகளைப் பற்றி விரித்துரைக்காமல் விட்டுவிடவில்லை.

´ஷிர்க்கை   விட்டோர்க்குச்  சுவனம்:
ஷிர்க்கின் பெருங்கேடுகளை நபி(ஸல்) பல்வேறு கோணங்களில் எடுத்துக் காட்டி எச்சரித்துள்ளார்கள். அதன் வழி, �உம்மா�- சமுதாயத்தவரை  உஷார்  படுத்தியுள்ளார்கள்.
நபித்தோழர் அபூதர்(ரழி) அறியத்தரும்

நீண்டதொரு தகவலுரையில், நான் நபி(ஸல்) அவர்களுடன் (கருங்கற்கள் நிறைந்த) மதீனாவின் �ஹர்ரா� பகுதியில் ஒருநாள் �இஷா� நேரத்தில் நாங்கள் ஒரு பிரயாணம் மேற் கொண்டோம். �உஹது� மலையைப் பார்த்தோம், பிரயாணம் தொடர்ந்தது, ஓரிடத்தில் ………………………………………………
�நான் உங்களிடம் திரும்பி வரும்வரை இந்த இடத்திலேயே இருக்குமாறு� நபி(ஸல்) எங்க ளுக்கு கட்டளையிட்டார்கள். பின், எங்களை விட்டு வெகு தூரம் சென்றுவிட்டார்கள் அப் போது ஒரு குரலைக் கேட்டேன்……………………
நபி(ஸல்) திரும்பி வந்ததும் அக்குரலைப் பற்றி கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அது வான வர்  ஜிப்ரில்(அலை)  அவர்களின்  குரல்  தான்.
�உம்முடைய சமுதாயத்தாரில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் ஷிர்க் இணைக் கற்பிக்காமல் இறந்துவிட்டாரோ அவர் சொர்க்கம் புகுவார் என்று நல்வாழ்த்துரைத்தார் என்று நபி(ஸல்) எடுத்துக்  காட்டினார்கள். (நூல் : சஹீஹுல் புஹாரி, தமிழாக்கம், எண் 2388, 6288, 6493, 6444. சரஹீஹ் முஸ்லிம் எண் 1811, 1812, முஸ்னத் அஹமது)

ஷிர்க், நரகத்தில் வலிந்து தள்ளி விடும் மாபாதகம். அல்லாஹ்வின் ஒருமையை வாழ் வில் பிரதிபலித்த உண்மை முஸ்லிம்கள் சுவனத்தைச் சொத்தமாக்கிக் கொள்கிறார்கள்.

பகுத்தறிதல் :
அல்லாஹ்வின் ஒருமைக்கு நேர் எதிரானதே ´ஷிர்க்; இரண்டையும் பகுத்தறிவது எப்படி?
ஏகன் அல்லாஹ்தான், அல்லாஹ் ஒருவன்- �அஹத்�. அஹதான அல்லாஹ்தான் ஒரே இறைவன்- �இலாஹ்�. ஒரே இறைவனாகிய அல்லாஹ்தான் படைப்பினங்கள் அனைத்தின் படைப்பாளன்; படைப்பினங்கள் அனைத்தின்
அதிபதியும். ஏகன் அல்லாஹ்தான்… இதுவும், இதுபோன்ற அல்லாஹ்வை ஒருமையில் காட்டும் எதுவாயிருப்பினும் அல்லாஹ் ஒருவனே நன்கறிந்தவன்; அதனால் ஒருமை யாளன் அல்லாஹ், புனிதக் குர்ஆனில் அவன் ஒருமையை நிலைநிறுத்தும் நேர்வழியை நமக்கருளினான். ஏன்? அதை, மக்கள் சமுதாயம்  கசடறக்  கற்க  வேண்டும்.

ஒருமையாளன் அல்லாஹ்வை மனிதர்கள் எப்படி ஒருமைப்படுத்த வேண்டும்?
அதை ஏகன் அல்லாஹ், அவனது மேற்பார் வையில் நபி(ஸல்) அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தான். அதனால் அல்லாஹ்வின் ஒரு மையை நபி(ஸல்) அப்படியே, அவர்கள் வாழ்வில் பிரதிபலித்தார்கள்.
வாழ்வு முழுவதிலும் மனிதர்கள் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல் கட்டாயக் கடமை. அதற்க்கோர் பின்பற்றத்தக்க மிக அழகிய முன்மாதிரியாக நபி(ஸல்) திகழ்கிறார் கள்.  காண்க : புனிதக் குர்ஆன் : 3:31, 33.21

வாழ்வியலாகும் கோட்பாடு :
அல்லாஹ்வின் ஒருமை! இறை அருளிய கோட்பாடு! அல்லாஹ்வை ஒருமைப்படுத்து தல்தான் அதன் வாழ்வியல் பிரதிபலிப்பாகும்.

கோட்பாடு வாழ்வியல் ஆகுவதற்காகத் தான். இதை ஏகன் அல்லாஹ் அறியத் தருவதும், உணர்த்துவதும், ஜின், மானுடத்துக்கு ஏக இறை அருளிய பெரும் பேறு! இந்த பெரும் பேறு எங்களுக்கு இயல்பாக கிட்டியுள்ளது. ஆனால், எங்களில் மிகப் பலருக்கு இதைப் பற்றி எதுவும் தெரியாது; தெரிவதற்கு எவர்களும் எவ்வித  முயற்சியும்  மேற்கொள்ளவில்லை.

அசாத்திய  துணிச்சல் :
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் மிகவும் பிற்காலத்தில் ஏகன் அல்லாஹ்வின் பேரருளால் எங்களில் சிலர் அரிதிலும் முயன்று, அல்லாஹ்வின் ஒருமை, அதன் அருமையை அசாத்திய துணிச்சலுடன் எடுத்துக்காட்டி, வந்தனர்; வருகின்றனர். எழுத்தில், பேச்சில், துண்டு பிரசுரங்களில், நூல்களில் அல்லாஹ் வின் ஒருமையை உரக்க உரைத்து வருகின்ற னர். இது வரவேற்கத்தக்க ஒன்றாகும். ஆனால் அதன்  மறுபக்கம்,  வேதனை  அளிக்கிறது.

தங்க மீன்கள் :
அல்லாஹ்வின் ஒருமையை முழக்கத்திற்குரிய தத்துவமாக மாற்றிவிட்டனர். மட்டு மின்றி, �தவ்ஹீத்� இன்று இவர்களுக்குத் தங்க மீன்கள், எழுத்து, பேச்சு கவர்ச்சியில் அப்பாவிகள் அவர்களால் விட்டில்களாகி விடுகிறார்கள். பழம் நழுவி பாலில் விழுந்து, அது நழுவி தானாக வாயில் விழுகிறது. விடுவார்களா? உடும்பாய்ப் பிடித்துக் கொண்டார்கள்.

பெரும்  வணிகம் :
முதலீடின்றி கோடி கோடியாய் பொருளீட் டீத்தரும் இலகுவான பெரும் வணிகம். தவ்ஹீதின் பெயரால் தமிழகத்தில் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. தற்கால நவீன ஊடக தொழில்நுட்பத்தை யுக்தியாக பயன்படுத்தி வெகு சாமர்த்தியமாக தவ்ஹீத்தின் பெயரால் நுழைக்கப்படும் திணிக்கப்படும் மாடர்ன் புரோகிதம்.

கடந்த பல ஆண்டுகளில் மரபு வழி பழைய புரோகிதத்தை இனம் காண்பதும், இனம் காட்டுவதும் எளிது என்ற நிலை தமிழகத்தில் உருவாகி விட்டது. அடிமேல் அடி அடித்து வந்ததால் அம்மியும் கொஞ்சம் கொஞ்சமாய் நகர ஆரம்பித்து விட்டது. ஆனால் மாடர்ன் புரோகிதம் அப்படியல்ல. புரிவது சற்று கடினம்.

அல்லாஹ்வின் ஒருமையை ஓங்கி ஒலித்து வந்தோர், வருவோர் மிகப் பலர் சொந்த வாழ்வில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதில் இன்றளவும் கவனக் குறைவாகவே இருந்து வருகின்றனர். வேதனைக்குரிய ஜீரணிக்க முடியாத கசப்பான உண்மை இது.

இன்னல்களை  எதிர்கொண்டார் :
அல்லாஹ்வின் ஒருமையை ஓங்கியும் ஒலித்தார், அதைக் காட்டிலும் சுய வாழ்வில் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதில் முனைப் புக் காட்டியவர்களில் குறிப்பிடத்தக்கவர் அன்பு சகோதரர் அபூ அப்தில்லாஹ் (ரஹ்) அதனால்தான், இறுதி மூச்சு உள்ளவரை மாடர்ன் புரோகிதத்தின் மீது பன்முக தாக்கு தல் நடத்தினார். விளைவு ஒத்தக் கொள்கை உள்ளவர்களின், வெறுப்பிற்கும், எதிர்ப்பிற்கும், இன்னல்களுக்கும் ஆளானார். எனினும் எதைக் கண்டும் அஞ்சவில்லை, எதற்காகவும் பின் வாங்கவில்லை, ஏகன் அல்லாஹ்விற்காக எல்லா வற்றையும் அசாத்திய துணிவோடு எதிர் கொண்டார்.

மாடர்ன்  புரோகிதம் :
தவ்ஹீத்தின் பெயரால், எந்த நிலையிலும், மாடர்ன் புரோகிதம் உருவாகிவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாயிருந்தார். மாடர்ன் புரோகிதத்தில் மவ்லவிகளுக்கு இணையாக மவ்லவி அல்லாதவர்களும் ஈடுபடு வது கண்டு வேதனையை வெளிப்படுத்தி வந்தார். மாடர்ன் புரோகிதத்துக்கு விதையானவர்களிடம், மற்றவர்கள் அறியாவண்ணம் மாடர்ன் புரோகிதத்தின் மலையளவு கேடுகளை மடக்கி மடக்கி எடுத்துக்காட்டினார். இது திரை மறைவில் நடந்தது. சம்மந்தப்பட்டோர் அன்றி, மற்றவர்கள் அறிய வாய்ப்பில்லை. எப்படியும் இவர்கள் திருந்திடுவர் என்ற  அவரது  எதிர்பார்ப்புக்  கானல் நீரானது.

 

மாடர்ன் புரோகிதத்திற்கு விதையானதோடு துளிர்விடச் செய்து வேரூன்ற காரண மானார்கள், இதை அறியாமல் செய்யவில்லை; தெரிந்தே வேண்டுமென்றே இம்மையின் சுயலாபம், பணம், பகட்டு, பட்டம், பதவிக்காக  செய்து வருகின்றனர்.

பொறுத்தது  போதும் :
இனியும் பொறுத்து பயனில்லை என அபூ அப்தில்லாஹ் பொங்கியெழுந்தார்; எரிமலையாக வெடித்தார். அவர் கண்டன விமர்சனம் எழுத்துக்களில், பேச்சுக்களில் அக்கினி வார்த்தைகளாய் வெடித்தன. அவரை அவரால் கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.  ஏன்?
அவருடன் இருந்தவர்கள் சில பல கருத்துக்களில் முரண்பட்டாலும் சில காலம் அவருடன் மார்க்க சேவையாற்றியவர்கள், மாடர்ன் புரோகிதர்களாய் மாறிவிட்டார்களே! இந்த மாடர்ன் புரோகிதர்கள் புற்றீசலாய் புறப்பட்டு விட்டார்கள்.  இனி தவ்ஹீதின் பெயரால் பிரிவு கள் தோன்றுவதைத் தவிர்க்க, தடுக்க முடியாதே! அவரது ஆதங்கம் இறுதி மூச்சு உள்ளவரை அவரது சுயவாழ்வை போராட்டக் களமாக்கியது. இதற்கு அவரது எழுத்துக்கள், பதிவாகிய, பதிவாகாத அவரது உரைகள், உரையாடல்கள் நேர்காணல்கள் சாட்சி பகரும்.

எதற்கும் அவர் காரணமல்ல :
அபூ அப்தில்லாஹ்விடம் நெருக்கமானவர்களாயிருந்தாலும் சரி, அந்நியமாக இருந்தாலும் சரி, வேறுபட்ட வேறு யாராக இருந்தாலும் சரி, அனைவரும் அறிய வேண்டியதெனில், எந்த நிலையிலும் அபூ அப்தில்லாஹ், தவ்ஹீதின் பெயரால் மாடர்ன் புரோகிதம் உருவாக வித்திடவும் இல்லை, உறுதுணையாகவும் இருக்கவில்லை; மாடர்ன் புரோகிதர்கள் தவ்ஹீதின் பெயரால் தோற்றுவித்துள்ள புதிய பிரிவுகளுக்கும் அபூ அப்தில்லாஹ்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை அனைவரும் அறிவது  அவசியமாகும்.
தஹீதின் பெயரால் மாடர்ன் புரோகிதம் உருவாகவும், தவ்ஹீதின் பெயரால் பிரிவுகள், அமைப்புகள், கழகங்கள், கிளைகள், ஜமாஅத் துகள்……. தோன்றவும் என்றுமே அபூ அப்தில்லாஹ் காரணமாக இருந்ததே இல்லை. மாறாக அவைகளை எதிர்ப்பதில் சமகாலத்தில் சர்வதேச  அளவில்  முக்கிய  இடம்  வகித்தார்.

யாதுஃபூர்  ரஹீம் (2:173)  யா அல்லாஹ்!
உன்(அல்லாஹ்வின்) ஒருமையை நிலைநாட்டும் இலட்சியத்தில், அன்பர் அபூ அப்தில்லாஹ் அறிந்தோ, அறியாமலோ ஏதேனும் தவறிழைத்திருந்தால், அவை அனைத்தையும் மன்னித் தருள்வாயாக! மறுமையின் நற்பேறுகள் அனைத்தையும் நுகரும் பாக்கியத்தை அவருக் கருள்வாயாக! ஆமீன்.
அப்படியே அனைவரும் துஆச் செய்யுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

அல்லாஹ்வின் ஒருமையை எடுத்துக் காட்டும் பணியில் ஈடுபட்டுள்ளோரில் மிகப் பலர், அதை சுய வாழ்வில் பிரதிபலிப்பதில்லை. ��நீங்கள் செய்யாத ஒன்றை பிறருக்கு ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?�� என்று அல்லாஹ் இடித்துரைக்கிறான்.  (குர்ஆன் :…………..)

இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்போம்; சிந்திப்போம்; வாழ்வியலாக்குவோம்.
இஸ்லாம் காட்டும் அல்லாஹ்வின் ஒருமையை,அதன் அருமையை அனைத்துலக மக்களையும், சென்றடைய அயராது உழைப்போம். ஏகன் அல்லாஹ் அருள் செய்வானாக.  ஆமீன்.  வஸ்ஸலாம்.

 

Previous post:

Next post: