இஸ்லாம் கூறும் அழகிய முன்மாதிரி…

in 2017 டிசம்பர்

புனித குர்ஆனில் கூறப்பட்டுள்ள இறை வச னங்கள் பலவற்றை உலகில் நடைபெற்று வரும் அன்றாட நிகழ்வுகளிலிருந்தும் நாம் அறிந்து வருகின்றோம். இந்த நிகழ்வுகள் குர்ஆன் கூறும் வழிகளை வாழ்க்கையில் சாதாரண மனிதர் களாலும் பின்பற்றி வாழ முடியும் என்பதையே நிரூபிக்கிறது.

சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற சம்பவம் ஒன்றை, “”தி ஹிந்து” தமிழ் நாளிதழ் (11.11.2017) வாயிலாக அறிந்தோம். (நன்றி).

அப்துல் முனீம் என்பவரின் மகன் சலாவுதீன் ஜித்மவுத் 22 வயது நிரம்பிய இளைஞர். பீசா கடை ஒன்றில் பணியில் இருந் தார். சம்பவ தினத்தன்று பீசா டெலிவரி வேலையை முடித்துவிட்டு திரும்பி வரும் வழியில், வழிப்பறி செய்யும் கும்பலால் தாக்கப் பட்டு கொலை செய்யப்பட்டார்.

போலீசார் சந்தேகத்தின் பேரில் மூன்று நபர் களை கைது செய்தனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். விசாரணை நடந்து முடிந்த நிலையில் தீர்ப்பு நாளன்று சலாவுதீனின் தந்தை அப்துல் முனீம் நீதிமன்றத்துக்கு வந்திருந்து தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். தீர்ப்பை நீதிபதி வாசித்தார். ரெல்போர்ட் என்பவரை முக்கிய குற்றவாளி என இந்த நீதிமன்றம் அறிவித்து அவருக்கு 31 ஆண்டுகள் சிறை தண்டனை அறிவிக்கிறது என்று கட்டளை யிட்டார்.

அப்போது கொலை செய்யப்பட்டவரின் தந்தை அப்துல் முனீம் தமது இருக்கையி லிருந்து எழுந்து நின்று, “”ரெல்போர்ட்! நான் உன்னை மன்னிக்கிறேன். எனக்கு உன்மீது கோபம் கிடையாது. உன்னைத் தவறாக வழி நடத்தி இந்தக் கொடூரமான குற்றத்தை செய் யத் தூண்டிய அந்த தீய சக்தியின் மீதுதான் எனக்கு கோபம்” என்றார்.

தொடர்ந்து அவரது இருக்கையிலிருந்து எழுந்து நீதிபதியின் அனுமதியோடு ரெல் போர்ட்டை கட்டிப்பிடித்து அவருக்கு ஆறுதல் கூறினார்.

இந்தக் காட்சியை கண்ட நீதிபதி என்ன நினைத்தாரோ தெரியவில்லை. இந்த செய லுக்கு மரியாதை செலுத்துவது போல, தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்று கொண்டார்.

அப்துல் முனீம் சொன்ன ஆறுதல் வார்த் தைகளை சற்றும் எதிர்பாராத தண்டனை விதிக் கப்பட்ட குற்றவாளி ரெல்போர்ட்டின் கண்கள் உணர்ச்சிப் பெருக்கால் கலங்கின. கண்ணீரு டன், “”அந்த நாளில் என்னால் நடந்த இந்த செயல்களுக்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்” என்று சொல்லிவிட்டு தனது தலையை குனிந்து கொண்டார்.

இனிவரும் நாட்களில் ரெல்போர்ட் தீய செயல்கள் செய்யமாட்டார் என்ற நம்பிக்கையை அவரது வார்த்தைகள் நமக்கு எடுத்துக் காட்டு வதாகவே தோன்றுகிறது. இறைவன் அவரை நேரிய வழியில் செலுத்த பிரார்த்திப்போம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள, இறை வசனத்தை இங்கே நினைவு கூறுவோம்.
2:178 “”நம்பிக்கைக் கொண்டோரே! கொலைக்காகப் பழி தீர்ப்பது உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமுடையவனுக்கு சுதந்திரமுடையவன், அடிமைக்கு அடிமை, பெண்ணுக்குப் பெண்; இருப்பினும், அவனது சகோதரனால் அவனுக்கு மன்னிப்புக் கொடுக் கப்படுமானால், வழக்கமான முறையைப் பின் பற்றி (நஷ்ட ஈட்டை) பெருந்தன்மையுடன் அவனுக்காக செலுத்திவிடவேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்த சலுகை யும், கிருபையும் ஆகும். ஆகவே, இதன் பிறகு யார் வரம்பு மீறுகிறாரோ, அவருக்குத் துன் புறுத்தும் வேதனையுண்டு”.

தமக்கு கொடுமை செய்தவர் வெட்கப் படும்படியாக அல்குர்ஆனில் கட்டளைக் கிணங்கி, நன்மையை செய்து விட்ட அப்துல் முனீம் அவர்களை இறைவன் நேர்வழியில் நிலைத்து இருக்கச் செய்து அவரை பொருந்திக் கொள்வானாக.

Previous post:

Next post: