அந்நஜாத் VS புரோகிதம்

in 2018 ஜனவரி,புரோகிதம்

N. அலி,
கல்லிடைகுறிச்சி

டிசம்பர் மாத அந்நஜாத் இதழில் விமர்சனம் விளக்கம் பகுதியில் இடம்பெற்ற சகோதரர் சைக் அப்துல் காதிர் (சிங்கப்பூர்) அவர்கள் அக்டோபர் மாத இதழில் வெளியான அந்நஜாத் Vவி புரோகிதம் கட்டு ரையை வாசித்ததோடு மட்டுமல்லாமல் விமர்சித்தும், விளக்கம் கேட்டும் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்க மகிழ்ச்சி யான வி­யமாகும். நேர்வழியை அறிந்து கொள்வதற்கு நல்ல வழிமுறையாகும் அந்நஜாத் VS புரோகிதம் கட்டுரையில் 18:102ன் நேரடிக் கருத்தை தெளிவுபடுத்தும் பொருட்டு எழுதப்பட்டதாகும். இப்பொழுது அவரின் (PJ) மொழிப் பெயர்ப்பை இடம் பெறச் செய்து சில விஷயங்களை சகோதரரின் சிந்தனைக்கு கொண்டு வருகிறோம். (சிரிப் பதற்கு அல்ல)

மறுப்போர், என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? மறுப்போருக்கு நரகத்தையே தயார் செய்து வைத்து இருக்கிறோம். (18:102)

“”என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக” என்று அல்லாஹ் சொல்கிறான் அப்படியானால் அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்டு இருக்கும் நாம் அல்லாஹ்வை உற்ற நண்பனாக எடுத்துக் கொண்டிருக்கிறோமா? அல்லது பாதுகாவலனாக எடுத்துக் கொண்டிருக்கிறோமா? அல்லாஹ்வையன்றி மற்றவர்களை உற்ற நண்பர்களாக்குவது நரகத்தை பெற்றுத் தருமளவுக்கு பெரும் பாவமா?

எல்லாம் வல்ல ஏகன் அல்லாஹ் 9:71வது வசனத்தில் முஃமீனான ஆணும், பெண்ணும், ஒருவருக்கொருவர் உற்ற நண்பர்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே இதற்கு என்ன அர்த்தம்? இப்பொழுது புரிகிறதா? பாரதூரம்! இன்னும் அவரின் (PJ) மொழிப் பெயர்ப்பில் இரண்டு வசனங்களைத் தருகிறோம் படித்துப் பாருங்கள்.

அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டார்களா? அல்லாஹ்வே பாதுகாவலன் அவன் இறந்தோரை உயிர்பிப்பான். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். (42:9)

அல்லாஹ்வையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்தி பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பல வீனமானது (இதை அவர்கள்) அறியக் கூடாதா? (29:41)

இந்த இரண்டு வசனங்களிலும் “பாது காவலர்கள்” என்பதற்கு பதிலாக “”உற்ற நண்பர்கள்” என்று வாசித்துப் பார்த்தால் 18:102ல் உள்ள “”உற்ற நண்பர்கள்” என்பது எவ்வளவு நகைப்புக்குரிய வி­யம் என்பது விளங்கும்.

மேலுள்ள இரண்டு வசனங்களிலும் மிக கடுமையான எச்சரிக்கை வாசகம் இல்லை அப்படி இருந்தும் மாற்றி வாசிக்கும் போது பாரதூரம் தெரிகிறதல்லவா? இதற்கு மாறாக 18:102ல் நிச்சயமாக நிராகரிப்போ ருக்கு நரகத்தையே தயார்படுத்தி வைத்திருக்கிறோம் என்று அல்லாஹ் கடுமையாக எச்சரித்திருக்க அப்படி இருந்தும் அதற்கு முன் உள்ள வாசகத்தில் “”உற்ற நண்பர்கள்” என்று மொழிப் பெயர்க்க யாருக்கு துணிச்சல் வரும்? அந்த எச்சரிக்கை யாருக்கு பலன ளிக்கவில்லையோ அவர்களுக்கே துணிச்சல் வரும் தர்ஹாக்களில் முஸ்லிம்கள் மண்டிக்கிடந்த காலக் கட்டத்தில் (பார்க்க : 7:3, 18:102, 42:9, 29:41) இது போன்ற வசனங்களின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கும் அடியானுக்குமிடையில் இறந்துவிட்ட நல்லடியார்களோ, உயிருடன் இருக்கும் ஆலிம்களோ “”அவுலியாவாக” “”பாதுகாவ லர்களா” ஆக முடியாது என்று பிரச்சாரம் செய்தவர்களில் (PJ) அவரும் ஒருவர் இந் நிலையில் 18:102ன் நேரடிப் பொருளுக்கு மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன வந்து விட்டது?

ஆம்! 18:102ன் நேரடிப் பொருளை மிக மிக நன்கு அறிந்த நிலையில் தான் மாற்றுப் பொருள் கொடுத்து மக்களை திசை திருப்பு கிறார் அல்குர்ஆன் மொழிப் பெயர்ப்பு எனும் பெயரில் அவர் பின்னால் செல்பவர்களுக்கு “”அல்வா” கொடுக்கிறார். இதை அடையாளம் காட்டுவதற்கு நாங்கள் “”எப்படியாவது” மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் சிரமப்படவில்லை, 42:9ல் அல்லாஹ் சொல்வது போல் அல்லாஹ்வை பாதுகாவலன் என்று அவனையே பாதுகாவலனாக எடுத்துக் கொண்டு 29:41ல் அல்லாஹ் உதாரணம் சொல்வது போன்று சிலந்திப் பூச்சியின் வீட்டை “”புல்டோசர்கள்” கொண்டு நாங்கள் இடிக்கவில்லை மாறாக “”ப்பூ…” என்று ஊதுகிறோம். அவ்வளவுதான். ஆனால் அதுவோ உங்களுக்கு மலையைப் பெயர்ப்பதைக் காட்டிலும் (எப்படியாவது) கடினமாக தெரிகிறது. அதற்கு காரணம் உங்களிடம் இருக்கும் “”தக்லீத்” தவ்ஹீத் எனும் பெயரில் கண்மூடி பின்பற்றுவதாகும் இதிலிருந்து உங்களைப் போன்றவர்கள் விடுபட அல்லாஹ் அருள்புரிவானாக.

புகழ் அனைத்தும் ஏகன் அல்லாஹ் வுக்கே உரியது.

Previous post:

Next post: