தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

in 2018 ஜனவரி

தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அமல் இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள் பக்கம் : 376

திறன் ஆய்வுத்தொடர் :32
M.. அப்துல் ஹமீத்

சென்ற இதழில் ஆய்வு செய்யப்பட்ட அமல்கள் இந்த இதழிலும் தொடர்வதால், ஏற்கனவே கூறப்பட்ட செய்திகள் அடுத்த பாராவில் சுருக்கமாக தரப்பட்டுள்ளது.

மனிதர்கள் ஓரிடத்தில் சேர்ந்து கூட்டமாக உட்கார்ந்து கொண்டு சிலசொற்களை அனைவரும் சேர்ந்தாற்போல் திரும்பத் திரும்ப உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருப்பது (உச்சாடானம் செய்வது) தான் “திக்ர்’ ஆகும் என்பதை “அசி’ (அமல்களின் சிறப்பு) புத்தகத்தின் பற்பல பக்கங்களில் அதன் ஆசிரியர் விளக்கி இருப்பதைக் காண முடிகிறது. இவரது ஆதரவாளர்களின் “திக்ர் -மஜ்லிஸ்களே’ இதற்கு போதிய சான்றாகும்! (“கான்காஹ்’ எனும் திக்ர் சபைகள் என்று பக்கம் 376ல் இவைகளுக்கு பெயரிட் டிருக்கிறார்). அல்லாஹ்வோ அல்லாஹ் வின் தூதரோ, மக்கள் கூட்டமாக சேர்ந்து திக்ர் செய்யுமாறு கற்றுத் தரவில்லை என்றும், திக்ர் எவ்வாறு செய்யவேண்டும் எனக் கூறும் 7:205 குர்ஆன் வசனத்திற்கு இவர்களது செயல்பாடுகள் எதிரானவை என்றும் தெரிவித்து இருந்தோம். இதன் தொடர்ச்சியை இனி காண்போம்.

“அசி’ ஆசிரியர், குர்ஆனுக்கு எதிராக செய்ய வேண்டியதை செய்துவிட்டு, தங்கள் செயல்களுக்கு ஆதாரமாக ஸஹீஹான ஹதீஃதிலிருந்து பல வார்த்தைகளை நீக்கி விட்டு இவரது கருத்தை சேர்த்து விடுவார். ஹதீஃத் நூலின் பெயரையும், அறிவிப்பாளர் பெயரையும் மிக ஜாக்கிரதையாக குறிப்பிடாமல் தவிர்த்து விடுவார். “”ஒரு ஹதீஃதில் அறிவிக்கப்பட்டுள்ளது” என்று பொதுவாக, எழுதி விடுவார். இவரது மாயா ஜாலம் இங்கேதான் வேலை செய்கிறது. உண்மையில் இவர் காண்பிக்கக்கூடிய ஹதீஃத்கள் இவர் கூறும் விசயங்களுக்கு சம்பந்தமே இல்லாதவைகள், ஆனால் சம்பந்தப்படுத்திக் காட்டுவதுதான் இவரின் தனித்தன்மை!

மக்கள் கூட்டமாக சேர்ந்து மார்க்கம் பற்றி பேசிக்கொண்டிருக்கும் ஹதீஃத் ஒன்றை, திக்ரு செய்வதற்கு மட்டுமே சம்பந்தப்படுத்திக் காட்டுகிறார். அதை இப்போது பார்ப்போம்! முதலில் கீழே உள்ள ஸஹீஹான ஹதீஃதை காண்போம்.

நபி(ஸல்) அவர்கள் அறிவித்தனர் :
“”நிச்சயமாக! அல்லாஹ்வுடைய சில வானவர்கள் சுற்றித் திரிந்து அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களைத் தேடுகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களை அவர்கள் கண்டு கொண்டால், ஒருவர் மற்றவரை நோக்கி, “”உங்கள் நாட்டத்தின் பக்கம் வாருங்கள்” என்று கூவி அழைத்து, நினைவு கூறுபவர்களை தங்கள் இறக்கை களால் போர்த்தி சுற்றி வளைத்துக் கொள் கின்றனர். பின்னர் அவர்கள் விண்ணுலகம் சென்றதும்,

இறைவன் : அவர்களை நோக்கி “”எனது அடியார்கள் என்ன கூறுகின்றனர்?” என்று அவன் அவர்களை விட மிக அறிந்த நிலை யில் கேட்கிறான்.
வானவர்கள் : “”அவர்கள் உன்னைத் துதித்து, உன்னைப் பெருமைப்படுத்தி, உன்னைப் புகழ்ந்து, உன்னைக் கண்ணியப்படுத்து கின்றனர்”
இறைவன் : “”அவர்கள் என்னைப் பார்த்து இருக்கின்றனரா?”
வானவர்கள் : இல்லை.
இறைவன் : “”ஒருவேளை அவர்கள் என்னைப் பார்த்து இருந்தால் அவர்களின் நிலை என்னவாக இருக்கும்?”
வானவர்கள் : ஒருவேளை அவர்கள் உன்னைப் பார்த்து இருந்தால் (இதைவிட) மேலாக உனக்கு அடிபணிந்து அதிகம் அதிகமாக உன்னை கண்ணியப்படுத்தி அதிகம் அதிகமாக உன்னை நினைவு கூர்வர்”
இறைவன் : “”அவர்கள் என்ன வேண்டுகின்ற னர்?”
வானவர்கள் : “”அவர்கள் உன்னிடம் சுவர்க் கத்தை வேண்டுகின்றனர்”
இறைவன் : “”அவர்கள் அதனைப் பார்த்து இருக்கின்றனரா?”
வானவர்கள் : “”இல்லை, இறைவா!”
இறைவன் : “”ஒருவேளை அவர்கள் அதனைப் பார்த்து இருந்தால் அவர்களின் நிலை எப்படி இருக்கும்?”
வானவர்கள் : ஒருவேளை அதனை அவர் கள் பார்த்திருந்தால், அதன்மீது (இன்னும்) அதிகமாக பேராவல் கொண்டு உருக்கமாக வேண்டி நிற்பதோடு அதில் அதிகமதிக மாகத் தேட்டம் கொண்டிருப்பர்”
இறைவன் : “”எதை விட்டும் அவர்கள் பாதுகாவல் தேடுகின்றனர்?”
வானவர்கள் : “”நரக நெருப்பை விட்டும் அவர்கள் பாதுகாவல் தேடுகின்றனர்”
இறைவன் : “”அவர்கள் அதனைப் பார்த்து இருக்கின்றனரா?”
வானவர்கள் : “”இல்லை, இறைவா!”
இறைவன் : “”ஒருவேளை அவர்கள் அத னைப் பார்த்து இருந்தால் அவர்களின் நிலை எப்படி இருக்கும்?”
வானவர்கள் : “”ஒருவேளை அதனை அவர்கள் பார்த்திருந்தால், அதிகமாகவே அதனை விட்டு வெருண்டோடுவதுடன், அதிகமதிகமாக அதற்கு பயப்படுவர்”
இறைவன் : நிச்சயமாக நான் அவர்களை மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக ஆக்கியுள்ளேன்”
வானவர்களில் ஒருவர் : “அவர்களிடையே ஒரு பாவியான அடியான் இன்னானும் இருக்கிறான். ஆனால் அவன் அவர்களில் உள்ளவன் அல்ல, ஒரு வேலையின் காரணமாக போய்க் கொண்டிருந்தவன் அங்கு அமர்ந்து விட்டான்”
இறைவன் : “”நிச்சயமாக அவனையும் மன் னித்து விட்டேன். அவர்கள் எத்தகையவர் கள் என்றால், அவர்களை அண்டி இருந்தவ னும் கெட்டு விடமாட்டான்”. அறிவிப்பா ளர் : அபூஹுரைரா(ரழி), நூல் : புஹாரி, முஸ்லிம், திர்மிதீ)

ஆனால், இந்த ஹதீஃதை “அசி’ ஆசிரியர் தமக்கு சாதகமாக, அவரின் புத்தகத்தில் திக்ரின் சிறப்புகள் பகுதியிலேயே பக்கம் 358ன் கடைசி பாராவில் ஆரம்பித்து, 359ன் துவக்கத்தில் எப்படி குறிப்பிடுகிறார் பாருங்கள்!

ஒரு ஹதீஃதில், “”மலக்குகளுடைய ஒரு ஜமாஅத் பல பிரிவுகளாகப் பிரிந்து இவ்வுல கில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். எந்த இடத்திலாவது திக்ரு நடைபெறுவதைக் கேட்கும்போது அவர்கள் தங்கள் தோழர்களாகிய மற்ற மலக்குகளையும், “”வாருங்கள் நீங்கள் தேடுகின்ற அமல் இங்கு நடை பெறுகிறது என்று அழைக்கின்றனர் பிறகு ஒருவர் மற்றொருவருடன் இணைந்து, இவ்வாறாக வானம் வரை அவர்களிடம் கூட்டம் சேர்ந்து விடுகிறது” என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

ஹதீஃதின் வாசகங்களை சுருக்கி, கருத்தை சிதைக்கிறார். முதலாவதாக திக்ர் என்ற வார்த்தையை அப்படியே எழுதி திக்ர் மஸ்ஜிஸ்களில் செய்யப்படும் திக்ராக காண்பிக்கிறார். ஆனால், முழு ஹதீஃதையும் படித்துப் பார்த்தால், இவர் கூறும் “திக்ரை’ப் பற்றி இந்த ஹதீஃத் சொல்லவில்லை என்று சாதாரண வாசகனும் புரிந்து கொள்வார்கள்.

இரண்டாவதாக, மலக்குகள் வானம் வரை சென்று சேர்ந்துவிட்டதாகக் கூறி ஹதீஃதை முடித்துக் கொள்கிறார். விண் ணுலகம் சென்றதையும் அல்லாஹ்வுக்கும் மலக்குகளுக்கும் நடந்த உரையாடல்களையும் மறைத்து விட்டார். அந்த கூட்டத்தினர் சுவர்க்கத்தை யாசிக்கின்றனர். நரக நெருப்பை விட்டும் பாதுகாவல் தேடுகின்றனர் என்பதை எல்லாம் எழுதாமல் இருட்டடிப்பு செய்து விட்டார். அதை எழுதி இருந்தால் என்ன நடந்திருக்கும்? இவர்கள் செய்யும் திக்ரைப் பற்றி இந்த ஹதீஃத் பேசவில்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டு விடுவார்கள் அல்லவா? என்ன வில்லத்தனம்? இதுதான் இவரது மாயாஜாலம்!

dஅல்லாஹ்வின் அழகிய பெயர்களைக் கொண்டு திக்ர் செய்யுமாறு 59.24, 17:110, 7:180 வசனங்களில் அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறான். அந்த 3 இறை வசனங் களை கவனியுங்கள்.

1. 59:24 இறைவசனத்தைப் பாருங்கள். “அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. வானங்களிலும், பூமியிலும் உள்ளவை யாவும் அவனையே தஸ் பீஹ் செய்கின்றன. அவனே மிகைத்த வன், ஞானம்மிக்கவன்”

2. 17:110 வசனத்தைப் பாருங்கள். “”நீங்கள் “”அல்லாஹ்” என்று அழையுங்கள்; அல் லது “”அர்ரஹ்மான்” என்று அழையுங்கள். அவனுக்கு அழகிய பெயர்கள் இருப்ப தில், எப் பெயரைக் கொண்டும் நீங்கள் அவனை அழையுங்கள்”

அல்லாஹ்வின் அழகிய பெயர்களைக் கொண்டு திக்ர் செய்யுமாறு அல்லாஹ் மேற்கண்ட குர்ஆன் வசனங்களில் கட்ட ளையிட்டிருக்கிறான். இந்த இறை வசனம் இவருக்குத் தெரியாமலில்லை. அவரே இந்த வசனத்தை பக்கம் 322ல் கையாள்கிறார்.

 

3. அதே பக்கத்தில் 7:180 குர்ஆன் வச னத்தை அவர் எழுதியிருப்பதை அப் படியே தருகிறோம் பாருங்கள்!

“”அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. ஆகவே, அவற்றைக் கொண்டே நீங்கள் அவனை அழையுங் கள் (7:180). (இது “அசி’யில் உள்ளது)
இப்போது குர்ஆனைத் திறந்து என்ன இருக்கிறது எனப் பார்ப்போம்.

“”அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள். அவனுடைய பெயர்களை புறக்கணிப்போரை விட்டுவிடுங்கள். அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்காகக் கூலி கொடுக்கப்படு வார்கள்”.

இந்த வசனத்தின் முற்பகுதியை மட்டும் எழுதிவிட்டு, தம்மை இடித்துரைக்கும் மேலே கோடிட்டு காட்டப்பட்டுள்ள பிற் பகுதியை விட்டு விட்டது ஏன்? தம்முடைய நிலைப்பாடு வெட்ட வெளிக்கு வந்து விடும் என்பதாலா?

அல்லாஹ்வின் வசனங்களையும், இறைத் தூதர்(ஸல்) அவர்களின் ஹதீஃத்களையும் மறைத்து பித்தலாட்டம் செய்கிறார். ஆனால் 7 வானங்களிலும், இந்த பூமியிலும் உள்ளவர்களிலேயே இவர்தான் அல்லாஹ் வுக்கு அதிகம் அதிகமாக பயப்படுபவராகத் தம்மைக் காட்டிக் கொள்கிறார்.

இவரை நம்பி உலகளவில், படித்தவர் களும் பாமரர்களும் கொண்ட பெரும் கூட்டம் மார்க்கத்தில் இல்லாத அமல்களை யயல்லாம் பக்தி பரவசமாக செய்து கொண் டிருப்பதுதான் கவலை தரும் விசயமாக இருக்கிறது. அனைவரையும் அல்லாஹ் ஒருவன் மட்டுமே நேர்வழியில் செலுத்த முடியும். அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

Previous post:

Next post: