விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

in 2018 ஜனவரி,விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

“”சிந்தனை செய் மனமே” எனும் கட்டுரையைவிமர்சிக்கும் விளக்கம் தான் இது!

விமர்சனம் : சுயவிளக்கம் மார்க்கமாகாது, மார்க்க வி­யங்களை அளவிடும் அளவு கோலாக குர்ஆனும், நபிவழியும் இருக்கும் போது அவ்வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுக்கும்போது அதன் மூலம் கருத்து அடிபட்டு போகும்.

59:21, 16:17 வசனங்கள் முறையே, “”மேலும் இந்த உதாரணங்களை மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு நாம் விளக்குகின்றோம்”, “”நிச்சயமாக சிந்திக்கும் கூட்டத் தாருக்கு இதில் அத்தாட்சி இருக்கின்றது”. ஆகவே சிந்திப்பதை குர்ஆன் ஊக்கப்படுத் துகிறது. யாருக்கும் மறுப்பில்லை.

அடிப்படை மூலக்கூறு (BASIC FORMULA) :
குர்ஆனில் உள்ள ஒரு வசனத்திற்கு வேறொரு வசனமாகவோ அல்லது நபி (ஸல்) அவர்களின் விளக்கமான ஹதீஃத் களோ தவிர, தாபியீன்களின் விளக்கம், இமாம்களின் விளக்கம், மவ்லவிகளின் விளக்கம், எந்த தனி மனிதன் சுய விளக்க மும் மார்க்கம் ஆகாது; அது நரகத்திற்கு செல்வதற்கு வழி வகுக்கும்.

நபி(ஸல்) அவர்கள்கூறினார்கள் : “”யார் குர்ஆனுக்கு தமது சொந்தக் கருத்தைக் கொண்டோ, தமக்கு அறிவில்லாத ஒன்றைக் கொண்டோ விளக்கம் அளிக்கிறாரோ, அவர் நரகத்தை தமது இருப்பிடமாக்கிக் கொள்ளட்டும்”. (இப்னு அப்பாஸ் (ரழி), திர்மிதி, நஸாயீ)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : “”யார் குர்ஆனுக்கு சொந்த கருத்தைக் கொண்டு விளக்கம் அளிக்கிறாரோ, அவர் கூறியது சரி யானதாக இருந்தாலும், அவர் செய்தது தவறுதான்”. (அபூதாவூது, திர்மிதீ, நஸாயீ)

விளக்கம் : மேலே உள்ள ஹதீஃத்கள் எம்மை அச்சம் கொள்ளச் செய்த தெரிந்த ஹதீஃத் களேயாயினும், சகோதர முஸ்லிம் ஆகிய எம்மை எச்சரிக்கும் நோக்குடன் சகோதரர், அஜ்மல்கான் அவர்கள் இந்த ஹதீஃத்களை எமக்குத் தெரிவித்திருப்பதில் மகிழ்கிறேன். நன்றி! சுய விளக்கம், சொந்த கருத்து என்ப தற்கெல்லாம் தேவைப்பட்ட இடத்தில் விளக்கம் கொடுத்திருக்கிறோம். எமது கட் டுரையில் கூட “”தவறான சிந்தனை தவறான வழிக்கு இட்டுச் செல்லும்! அதை மறந்து விடாதீர்கள்! என்ற எச்சரிக்கையை கொடுத்திருக்கிறோம்.

விமர்சனம் : சகோதரர் அபூஅனீஸ் சிந்தித்த வசனம் 55:29. “”வானங்கள் மற்றும் பூமி யிலுள்ளோர் அவனிடமே கேட்கின்றனர். ஒவ்வொரு நேரமும் அவன் காரியத்தில் இருக்கின்றான்”.

உலகில் இறைவனை வணங்குபவர் களின் வார்த்தைகள் அல்லாஹ்விடம் செல் கிறது. மாறாக கிறிஸ்துவர்கள் ஏசுவே, இந் துக்கள் முருகனே, நெருப்பு வணங்கிகள் பஞ்ச பூதமே, பெளத்தர்கள் புத்த பெரு மானே என்ற பிரார்த்தனையும் அல்லாஹ் விடமே செல்கிறது என்கிறார். இதுதான் அவர் கூறும் 55:29 வசனத்தின் விளக்கம் என்கிறார்.

விளக்கம் : குர்ஆனின் எந்த ஒரு வசனத்துக் கும் நான் விளக்கம் கூற முன்வரவில்லை. அப்படியான ஒரு கருத்தை “”சிந்தனை செய் மனமே” தொடர் தெரிவிக்கவும் இல்லை, சிந்தனை செய்வதால், நமது சிற்றறிவுக்கு தெளிவு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றும், மேலதிகமான விளக்கம் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றுதான் எழுதி இருக்கிறோம்.

அல்லாஹ்வை இறைவனாக ஏற்காத மற்ற மதத்தினர், அல்லாஹ்விடம் கேட்க வில்லையே, நிலைமை இவ்வாறு இருக்க, “”அல்லாஹ்வோ வானங்களிலும், பூமியிலும் உள்ளோர் அவனிடமே கேட்கின்றனர்” என்று 55:29ல் கூறி இருக்கிறானே என்று சிந்தனை செய்ததில் “”அவனிடமே கேட்கின்றனர்” என்றால் கேட்டது அனைத்தும் அவனிடம் சென்றடைந்து இருக்கிறது என் பதைத்தானே குர்ஆன் தெரிவிக்கிறது. இதில் சொந்த கருத்து எங்கே திணிக்கப்பட் டது?

தாங்கள் கூறும் ஒரு சாராரின் பிரார்த் தனை அவனிடம் செல்லவில்லை என்பது இந்த ஆயத்தில் அல்லாஹ் எங்கே கூறி இருக்கிறான் என்று நீங்கள்தான் தெரியப் படுத்த வேண்டும். தங்களால் தெரியப் படுத்த முடியவில்லை என்றால், தாங்கள் தான் குர்ஆனுக்கு சுய விளக்கம், சொந்த கருத்து கொடுத்தவர் ஆகிறீர்கள்.

விமர்சனம் : அவர்கள் எந்த நிலையிலும், கடவுளே, இறைவனே, அல்லாஹ்வே, படைத் தவனே, ஈல், யஹோவா என்றால் தான் அவனை ஒருமையில், பல்வேறு மொழிகளில் பிரார்த்தனை செய்தால், அழைத்தால் மட்டுமே அவனிடம் அவ் வழைப்பு செல்கிறது. பதில் தருவதும் வேதனை செய்வதும் அவனின் உரிமை. நம்மில் யாருக்கும் அவனின் உரிமையில் தலையிட அனுமதி இல்லை.

விளக்கம் : “”இறைவனை, அல்லாஹ்வே, இறைவனே என்று ஒருமையில் அழைத்தால் மட்டுமே அவனிடம் அவ்வழைப்பு செல்கிறது” என்று கூறுகிறீர்கள். அதே நேரத்தில் கடவுள் என்றும், ஈல், யஹோவா என்றும் ஒருமையில் அழைத்தால் மட்டுமே அவனிடம் அவ்வழைப்பு செல்கிறது என்றும் கூறுகிறீர்கள். ஆக, நம் தமிழ் சகோதரர்கள் கடவுள் என்றும், யூதர்களும், கிருஸ்தவர்களும் ஈல், யஹோவா என்று அழைப்பதும் அல்லாஹ்விடம் செல்கிறது என்று கட்டுரையில் சொன்னது போலவே கூறுகிறீர்கள். இப் போது உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?

விமர்சனம் : குர்ஆனில் 39:8ல் எந்த மனிதனின் சொல் அவனை அடைகிறது என்று விளக்குகிறது. “”மேலும், மனிதனை ஏதேனும் ஒரு சங்கடம் தீண்டுமானால், அவன் தன் இறைவனை அவன்பால் தவ்பா செய்து மீண்டவனாக அழைத்துப் பிரார்த் திக்கிறான். பின்னர் அவனுக்கு மகத்தான அருட்கொடையை அவன் கொடுத்தால், இதற்கு முன் அவன் எதற்காக பிரார்த்தனை செய்து கொண்டிருந்தானோ, அதையே அவன் மறந்து விடுகிறான். இன்னும் அல்லாஹ்வுக்கு இணைகளை அவன் ஆக்குகின்றான்”.

விளக்கம் : தாங்கள் கூறும் 39:8 வசனம் எந்த விதத்திலும் தாங்கள் விமர்சிக்கின்ற நாம் சிந் தித்த 55:29 வசனத்துக்கு தொடர்புடையது அல்ல.
55:29 வசனம் “”வானங்களிலும், பூமியி லும் உள்ளோர் அவனிடமே கேட்கின்ற னர். ஒவ்வொரு நாளும் அவன் (அந்தக்) காரியத்திலேயே இருக்கின்றான்” என கூறு கிறது. தாங்கள் கூறும் 39:8 வசனத்தைக் குறிப்பிட்டுள்ள தாங்கள், “”அவன்பால் தவ்பா செய்து மீண்டவனாக” என்று எழுதி இருக்கிறீர்கள். தாங்கள் கூறும் இந்த அர்த் தம் தரக்கூடிய வார்த்தை குர்ஆனில் அரபி மொழியில் இல்லையே! இந்த மொழி பெயர்ப்பை எங்கிருந்து பெற்றீர்கள்? குர் ஆனில் இல்லாததை குர்ஆன் வசனமாக காட்டுகிறீர்கள்! ஏன் இப்படி செய்கிறீர்கள்?

விமர்சனம் : இவ்வசனத்தின் மூலமாக தன் இறைவனை, கடவுளே! இறைவனே! ஈல், படைத்தவனே, oh my god என்று ஒருமையில் அழைக்கும்போது பதில் தருகிறான். பிறகு சங்கடம் நீங்கினால், முருகனே, ஏசுவே புத்த பெருமானே, அக்னியே என்று இணை வைப்பதையும் தெளிவுப்படுத்தி விட்டான்.

விளக்கம் : நீங்களாக ஒன்றை எழுதிவிட்டு, அது குர்ஆனில் இருப்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்துகிறீர்களே! தனக்கு தேவை என்றால் அல்லாஹ்விடம் பிரார்த் திக்கிறான். அவனது தேவையை அல்லாஹ் பூர்த்தி செய்தவுடன், அவன் இறைவனை கண்டுகொள்வதில்லை, அல்லாஹ் தன் தேவையை பூர்த்தி செய்தானே என்பதைக் கூட மறந்து விடுகிறான் என்பதையே அதா வது மனிதனின் நடைமுறை பழக்கத் தையே தாங்கள் காட்டியுள்ள இறைவசனம் குறிப்பிடுகிறது.

இந்த வசனமும் இதற்கு முந்தைய 7 வச னங்களும் பெரும்பாலும் நிராகரிப்பவர் களைப் பற்றியே கூறுகின்றன. இந்த வசனத் தின் இறுதி 2 வாக்கியங்களை விட்டு விட் டீர்கள். அதில் தெளிவாக “”(நபியே!) நீர் கூறும் “உன் நிராகரிப்பைக் கொண்டு சிறிது காலம் சுகம் அனுபவி. நிச்சயமாக நீ நரக வாசிகளில் உள்ளவனே”. ஆக, தாங்கள் கூறும் 39:8 வசனம் எந்த விதத்திலும் தாங் கள் விமர்சிக்கின்ற நாம் சிந்தித்த 55:29 வசனத்துக்கு தொடர்புடையது அல்ல.

விமர்சனம்: அக்டோபர் மாதம் 2017, “”சிந் தனை செய் மனமே” கட்டுரை “”வஹ்தத்துல் உஜூத்” என்ற தவறான அத்வைதக் கொள் கைக்கு அடித்தளமிடுகிறது. படைத்தவன் வேறு, படைக்கப்பட்டவர்கள் வேறு. இது இஸ்லாத்தின் அடிப்படை படைப்புகளா கிய மகான்களும், சிலைகளும், பஞ்ச பூதங் களும், ஒருபோதும் படைத்தவனாக மாற முடியாது.

விளக்கம் : படைத்தவன் வேறு, படைக்கப்பட்டவர்கள் வேறு என்கின்ற அத்வைதக் கொள்கை இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை என்பதை நாமும் அறிந்தே வைத் திருக்கி றோம். எமது கட்டுரையில் அது எங்கே இருக்கிறது என்று தெரிவியுங்கள். இறை வனை வணங்காதவர்களையோ அல்லது அவர்கள் வணங்கும் சிலைகளையோ இறைவனென்று நாம் சொல்லவில்லை.

அத்வைதக் கொள்கைக்கு அடித்தளம் இடுவதாக சொல்கிறீர்களே! 55:29 இறை வசனம் என்ன சொல்கிறது? என்று பாருங் கள். “”வானங்களிலும், பூமியிலும் உள்ளோர் அவனிடமே கேட்கின்றனர்” என்று கூறு கிறது அல்லவா? வானங்களிலும், பூமியிலும் உள்ளோர் யார்? நீங்கள் கூறுவது போல பார்த்தால் அல்லாஹ்வை ஒருமையில் வணங்குபவர்கள் மட்டும்தானா பூமியில் உள்ளார்கள்? அல்லாஹ்வை வணங்காதவர் களும் இருக்கிறார்களே? அல்லாஹ்வை வணங்குபவர்களையும், அல்லாஹ்வை வணங்காதவர்களையும் சேர்த்துத்தானே பூமியில் உள்ளோர் அவனிடமே கேட்கின்றனர் என்று அல்லாஹ் சொல்கிறான்? அதைத் தானே கட்டுரையிலும் எழுதி இருக்கி றோம். இதில் அத்வைதக் கொள்கையின் அடித்தளம் எங்கே இருக்கிறது?

வானங்களிலும், பூமியிலும் உள்ளோர் அவனிடமே கேட்கின்றனர் என்று அல்லாஹ் கூறி யிருப்பதை “”அருட்கொடை” என்கிறான் 55:29க்கு அடுத்த 55:30 வசனத்தில், 55:30ல் இறைவனின் அருட்கொடையில் எதனைப் பொய்யாக்குவீர் கள்? என அல்லாஹ் கேட்கிறான். அல்லாஹ் கூறுவதையே நீங்கள் இல்லை என்கிறீர் களே! இது சரியா?

ஆக இறுதியாக கூறுவது என்னவென் றால், “”வானங்களிலும், பூமியிலும் உள் ளோர் அவனிடமே கேட்கின்றனர்” என்று அல்லாஹ் தெரிவிக்கிறான். உண்மையில் ஒரே இறைவன் அல்லாஹ் என்பதால்தான், அல்லாஹ்வை வணங்காதவர் கேட்பதும் அல்லாஹ்விடமே சென்றடைகிறது என்று குர்ஆன் சொல்லுக்கு இணங்கி நாம் எழுதி யுள்ளோம். உண்மையான இறைவன் அல் லாஹ் ஒருவன் என்பதால் தான் அவனை சென்றடைகிறது என்று நாம் எழுதினோம். இந்த இறை வசனம் என்ன சொல்கிறது என்று சிந்தித்ததில், இறை வசனத்திற்கு முரண்படாமல் எமக்குக் கிடைத்த கருத்து/விளக்கம் இதுவே. இது சரி தான். இதில் எமது சொந்த கருத்தோ, சுய விளக் கமோ எள்ளளவும் இடம் பெறவில்லை.

Previous post:

Next post: