அழைப்பாளர்களின் அழகிய அடையாளம்…

in 2018 பிப்ரவரி

N. அலி, கல்லிடைகுறிச்சி

பெருமை பேசுதல் :
இன்றைக்கு தமிழகம் முழுவதும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் வெகுவேகமாக செய்யப்படுகின்றன. தவ்ஹீத் எழுச்சி, தவ்ஹீத் எழுச்சி என முழங்கப்படுகின்றன. ஒவ் வொரு இயக்க அமைப்பு, பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்ட பிரிவு, இயக்க அமைப்பு பெயர்கள் மிக பெரிதான விளம்பர பேனர்கள் கண்ணை கூசச் செய்யும் வெளிச்சத்தில் பளிச்சிடுகின்றன. வஹீ அல்லாதது வழி கேடே என்றும் வஹீயே இஸ்லாத்தின் மூலம் ஆதாரம் என்றும் பிரசார மேடைகளில் முழங்கப்படுகின்றன. பிரசார கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் சுவ ரொட்டிகளில் “”தூய இஸ்லாமிய மார்க்கத்தை அறிந்து கொள்ள” தங்களை அன்புடன் அழைக்கிறது. “”தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்” என்றும், “”ஜம் இய்யத்து இஹ்லில் குர்ஆன் அல்ஹதீஸ்” என்று தங்களை அடையாளப்படுத்தி ஆனந்தமடைகிறார்கள். இன்னும் பிரசார மேடைகளிலும் பிரிவு-இயக்க அமைப்பு பெயர்களின் பெருமைகளைப் பேசி ஆர்ப்பரிக்கிறார்கள்.

அடையாளப்படுத்துதல் :
தங்களை தவ்ஹீத்வாதி என்றும் TNTJ, JAQH, SNPI, PFI, TMMK, MMMK இன்னும் என்னென்ன பெயர்களில் தங்களை அடையாளப்படுத்த முடியுமோ அந்த வழிகளிலெல்லாம் அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் மேற்கண்ட வஹீயின் (41:33) அடிப்படையில் தங்களை அடையா ளப்படுத்திக் கொள்ள வெட்கப்படுகிறார்கள், வேதனைப்படுகிறார்கள். 1400 வரு டங்களுக்கு முன்னர் இறங்கிய இந்த வச னம் (41:33) இன்றைக்கு இவர்களுக்காகவே இறக்கப்பட்டு, இவர்களைப் பார்த்தே கேள்வி கேட்பது போன்று கணகச்சிதமாக இருக்கிறது. இன்றைக்கு ஒரு முஸ்லிமிடத்தில் போய் மேற்கண்ட வசனத்தை சுட்டி காட்டி தமிழகத்தில் அழைப்பு பணி அல்லாஹ் வர்ணிக்கும் அழகிய முறையில் இருக்கிறதா? என்று கேட்டால் கண்ணை மூடி திறப்பதற்குள் மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் “”இல்லை” என்று பதில் சொல்லிவிடுவார் அந்த அளவிற்கு வழிகேடுகள் மிக தெளிவாகத் தெரிகின்றன.

பெரும்பான்மையினரின் வழி :
“”பெரும்பாலோர்” விழிப்புணர்வு அடையமாட்டார்கள். இதை குர்ஆனின் 26ம் அத்தியாயத்தில் மூஸா நபியில் தொடங்கி இப்ராஹீம், நூஹ், ஹூத், ஸாலிஹ், லூத், ஷிஐப் என ஏழு நபிமார் களின் சமுதாயத்தின் அழிவுகளை குறிப்பிட்டு அவர்களில் பெரும்பாலானோர் ஏற்க மறுத்துவிட்டனர் என்று அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க : 26:67, 68,102,104, 121,122,139,140,158,159)
அனைவரும் நம்பிக்கை கொள்ளமுடியுமா?

அல்லாஹ் தன்னுடைய தூதரைப் பார்த்து “”பூமியில் உள்ள அனைவரும் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்று நிர்பந்திப்பீரா? அறிவிலிகளில் ஒருவராக நீர் ஆகிவிடாதீர்” என்று கடிந்து கொள்வதை குர்ஆனில் பார்க்க முடியும் மறைந்து விட்ட அன்புச் சகோதரர் அபூ அப்தில்லாஹ் அவர்கள், “”அல்லாஹ் நாடும் ஒரு சிலராவது நேர் வழி பெறுவார்கள் என்றே எழுதுவார், பேசுவார். இது அவருடைய குர்ஆனிய சிந்தனையின் உறுதியைக் காட்டுகிறது.” அழைப்பாளர்களுக்குரிய பண்பில் இதுவும் ஒன்றாகும். அதாவது அழைப்பு பணியினால் ஏற்படும் ஏற்றமும், மாற்றமும், ஏகன் அல்லாஹ்வின் நாட்டத்திற்கு உட்பட்டதாகும். இதை மறந்து பெரும் பலனை எதிர்பார்த்தால் “”ஏமாற்றம்” நமக்குச் சொந்தமாகும்.

41:33 கற்று தரும் பாடம் :
அழைப்பாளர்களுக்கு “”நான்,” “நம்மால்” என்ற ஆணவம் இருக்கக் கூடாது என் பதற்காகத்தான் அல்லாஹ் “”நான் முஸ்லிம்” என்று சொல்வதற்கு அனுமதிக்காமல் “”நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்று சொல்லித் தருகிறான் அல்லாஹ். பெருமை, ஆணவம், அல்லாஹ்வுக்குரிய ஆடையாகும். இது மனிதனுக்கு அழகைத் தராது அதனால்தான் “”நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவன்” என்ற கூட்டமைப்பு மனப்பான்மையையும், பன்மையையும், பண்பையும் கற்றுக் கொடுத்து இதுதான் மனிதனுக்கு அழகு என்று அழகிய வார்த்தை கூறுபவர் யார்? என்று கேட்கிறான்.

ஆலிம் என்று அடயாளப்படுத்தலாமா?
இங்கு இன்னொரு பாடமும் நாம் பெற்றுக்கொள்ள முடிகிறது. அதாவது மார்க்கத்தை எவ்வளவு தான் கற்றிருந்தாலும் சமுதாயத்தில் தங்களை “”ஆலிம்” என்று தனியாக அடையாளப்படுத்திக் கொள்ள அணுவின் முனையளவும் அனுமதி இல்லை என்பதை நெத்தியடியாகக் கூறுகிறது. அல்லாஹ் கூறும் இந்த அழகிய முறைக்கு மாறாக யார் தங்களை ஆலிம், மவ்லவி என்று அடையாளப்படுத்திக் கொண்டா லும் அது அல்லாஹ் வெறுக்கும் அழகற்ற செயல்பாடாகும்.

அழகிய அழைப்பாளர்கள் :
இஸ்லாம் எனும் முழுமையான வாழ்க்கைத் திட்டத்தை “”ஆலிம்” எனும் காகித பட்டங்களில் சுருக்க நினைக்காமல் தங்களுடைய வாழ்க்கைத் திட்டமாக யார் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களே உண்மையான ஆலிம்கள், அவர்களே அழகிய அழைப்பாளர்கள். இதற்கு மாறாக முழுமையான வாழ்க்கை நெறி திட்டத்தை வெறும் காகித பட்டங்களில் வைத்து சுய தம்பட்டம் அடிப்பவர்கள் தங்களின் குறை களை இவ்வுலக வாழ்க்கை திட்டத்தில் “”முழுமையான வாழ்க்கை திட்டம்” இஸ்லாம் இல்லாத மூடர்கள் ஜாஹில்கள் என்பதையே 41:33 வசனம் தெளிவாக அடையாளம் காட்டுகிறது. அதை உணர்ந்து செயல் பட அல்லாஹ் அருள் புரிவானாக.

Previous post:

Next post: