ஷிர்க் ஒழிப்பு சாத்தியமா? ஷிர்க் – இணை வைப்பு என்றால் என்ன?

in 2016 பிப்ரவரி

அபூ அப்தில்லாஹ்

குர்ஆன் கூறுகிறது : நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கவே மாட்டான்; இதைத் தவிர, (மற்ற) எதையும் தான் நாடியவர்களுக்கு மன்னிப் பான்; யார் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறாரோ, அவர் நிச்சயமாக மிகப்பெரும் பாவத்தையே கற்பனை செய்துவிட்டார். (4:48)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிக்கப்படுவதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத(பாவத்)தைத் தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான். (4:116)

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் குருமார்களையும், தம் துறவிகளையும், மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக ஆக்கிக் கொண்டனர்; ஆனால், அவர்களோ ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக் கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; (அடிபணிவற்குரியவன்) அவனன்றி வேறு கடவுள் இல்லை; அவர்கள் இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் பரிசுத்தமானவன். (9:31)

மேலும், அல்லாஹ்வையன்றி, தங்களுக்கு எவ்வித தீமையையும் செய்யாதவர்களை இன்னும், தங்களுக்கு எந்த நன்மையையும் செய்யாதவர்களை அவர்கள் வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், “”இவர்கள் எங்களுக்கு அல்லாஹ்விடம் பரிந்துரை செய்பவர்கள்” என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர் “”வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக்கொண்டு அவை) பற்றி நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசுத்தமானவன்; அவர்கள் இணை வைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்” என்று கூறும். (10:18)

மேலும், அவர்கள் இணைவைப்பவர்களாக இருக்கிற நிலையிலல்லாமல் அவர்களில் பெரும்பாலோர் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதில்லை. (12:106)

என்னுடைய இறைவா! நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டார்கள் என்று (நம்) தூதர் கூறுவார். (25:30)

அறிந்து கொள்வீராக! கலப்பற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள்; அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார் கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களுக்கு அடிபணியவில்லை (என்கின்றனர்); அவர்கள் எதில் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்களோ அதைப் பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித் துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். (39:3)

இந்த ஏழு வசனங்களையும் மீண்டும் மீண்டும் நேரடியாகப் படித்து அவற்றின் சாரமும் சத்தும் உள்ளத்தில் நிறைந்திருந்திருக்கச் செய்யுங்கள். உங்கள் உள்ளத்தில் நிறைந்திருக்கும் மனிதக் கருத்துக்களை சிறிது நேரத்திற்கேனும் ஒதுக்கி வையுங்கள். அப்போதுதான் இந்த குர்ஆன் வசனங்களின் நேரடி யான, சரியான, நேர்வழியான கருத்தை உள்வாங்க முடியும். அப்படி உள்வாங்கினால் மட்டுமே இறைவனுக்கு இணை வைக்கும் செயல் மாபெரும் குற்றச் செயல். அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்கவே மாட்டான். நிரந்தர நரகம். நரகிலிருந்து விடுதலையே இல்லை என்பதை விளங்க முடியும். 12:106 குர்ஆன் வசனத்தைப் படித்து விளங்குபவர்கள் பெருங்கூட்டம் அதாவது மிகமிக அதிகமானவர்கள் இணை வைக்காது ஈமான் கொள்ளவில்லை; நரகத்திற்குரியவர்கள் என்பதை அறிய முடியும்.

அடுத்து எவையயல்லாம் ஏகனான, தன்னந் தனியனான, எத்தேவையுமில்லாத இறைவனுக்கு இணை வைக்கும் செயல்கள் என்பதை விளங்குவது அவசியமாக இருக்கிறது.

9:31, 10:18, 39:3 வசனங்களைப் படித்து உணர்கிறவர்கள் அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில், இறைவனின் படைப்புகளான உயிரற்றவை, உயிருள்ளவை, பகுத்தறிவற்றவை, பகுத்தறிவு மனிதர்கள் என எவற்றை, யாரை அல்லாஹ்வுக்கும் தங்களுக்குமிடையில் புகுத்தினாலும் அது  ஷிர்க்தான்-இணை வைப்புத்தான் நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை விளங்க முடியும்!

அந்த அடிப்படையில் மரம், மட்டை, பட்சிகள், மிருகங்கள், சிலைகள் வழிபாடுகள் அனைத்தும்  ஷிஷிர்க்்-இணை வைப்புத்தான். இங்கு இன்னொரு விஷயத்தையும் நாம் தெளிவாக விளங்க வேண்டும். ஆத்திகர்களில் எவருமே அவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் இறைவனை ஒருவனாக ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள். அந்த ஒரே இறைவனை அவர்களின் தாய் மொழியில் அல்லாஹ், கடவுள், தெய்வம், காட்(றூலிd) யாகோவா என அழைக்கின்றனர். அந்த ஒரே இறைவனிடம் பரிந்துரை செய்பவை, செய்பவர்கள், நெருங்கச் செய்பவர்கள் என்ற தவறான-ஷிர்க்கான எண்ணத்தில் துணை தெய்வங்களை அழைக்கிறார்கள். இந்த உண்மையை 10:18, 39:3 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. மற்றபடி இந்தத் துணைக் கடவுள்களை அசல் கடவுளாக எண்ணுவதில்லை. ஆனால் இதுவும் ஷிர்க்-இணை வைப்புத்தான் என்றே 10:18, 39:3 இறைவாக்குகள் எச்சரிக்கின்றன.

அந்த அடிப்படையில்,

சிலை வழிபாடு  ஷிர்க்தான் – இணை வைப்புதான்

கபுரு வழிபாடு ஷிஷிர்க்்தான் – இணை வைப்புதான்

பீர் வழிபாடு ஷிர்க்தான் – இணை வைப்புதான்

இமாம் வழிபாடு ஷிர்க்தான்-இணை வைப்புதான்

மவ்லவி வழிபாடு ஷிர்க்தான்-இணை வைப்புதான்

பீர், இமாம், மவ்லவி போன்றோரை நாங்கள் வழிபடவா செய்கிறோம். குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் அவர்கள் காட்டும் வழியிலல்லவா நாங்கள் செயல்படுகிறோம் என்று தங்களின் இணை வைப்பை நியாயப்படுத்துவார்கள்.

உண்மையில் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள பீர், இமாம், மவ்லவி சொல்வது குர்ஆனில், ஆதார பூரவமான ஹதீஃதில் இருக்கிறதா என்று நேரடியாகப் பார்த்து, அது குர்ஆன், ஹதீஃதில் இருந்தால் மட்டுமே எடுத்து நடப்பவர்களாக இருந்தால் அவர்கள் நேர்வழியில் இருக்கிறார்கள் என்பது உண்மையே! ஆனால் இவர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் உள்ள குர்ஆனையும் பார்க்காமல், ஹதீஃதையும் பார்க்காமல் இப்படிப்பட்டவர்களைக் குருட்டுத்தனமாக நம்பி, அவர்களின் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான கருத்துக்களையும் வேதவாக்காகக் கொண்டு எடுத்து நடப்பது ஷிர்க்்-இணை வைப்புதான். உலகில் காணப்படும் அனைத்து மதங்களிலுமுள்ளவர்கள் தங்கள் மதகுருமார்களைக் குருட்டுத்தனமாக நம்பித்தானே செயல்படுகிறார்கள். இந்த எதார்த்த நிலையைத்தானே 9:31 இறைவாக்கு அவர்களை ரப்பாகக் கொண்டு அவர்களை வழிபடுவதாகக் கூறி எச்சரிக்கிறது. அதேபோல் முஸ்லிம்களும் குர்ஆன், ஹதீஃதைப் பார்க்காமல் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மதகுருமார் களான மவ்லவிகள் சொல்வதை அப்படியே நம்பிப் பின்பற்றுவதும் ஷிர்க்்-இணை வைப்புதானே!

மற்ற மதத்தினர் அனைவரும் தங்கள், தங்கள் மதகுருமார்களைக் குருட்டுத்தனமாக நம்பி, அவர் கள் கூறுவதை வேதவாக்காகக் கொண்டு செயல்படு வதுபோல், முஸ்லிம்களும் அவரவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மவ்லவிகள் சொல்லுவது குர்ஆன், ஹதீஃதில் இருக்கிறதா என்று நேரடியாகப் பார்க்காமல் அப்படியே குருட்டுத்தனமாக நம்பி எடுத்து நடப்பது மட்டும் எப்படி நேர்வழியாக இருக்க முடியும்? மற்ற மதங்களிலுள்ளவர்களும் இறைவனுக்கு இணை-ஷிர்க் வைப்பது போல், 12:106 இறைவாக்கு கூறுவது போல் முஸ்லிம்களிலும் மிகப் பெரும் பான்மையினரும் இறைவனுக்கு இணை-ஷிர்க்் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா?

ஆம்! தூய ஒரே நேர்வழி மார்க்கத்தை, ஹராமான வழியில் தங்கள் வயிற்றை நிரப்பப் பல கோணல் வழிகள் மதமாக்கி, அவற்றையே மக்களுக்குப் போதிக்கும் மத்ஹபு, தரீக்கா மவ்லவிகள், அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஸலஃபி மவ்லவிகள், ஜாக், ததஜ, இதஜ இதர இயக்கப் பிரிவுகளின் மவ்லவிகள் அனைவரும், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றுகிற பெரும் கொண்ட முஸ்லிம்களும் இறைவனுக்கு இணை-ஷிர்க்் வைக்கின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மையாகும். இந்த உண்மையை இங்கு ஏற்காவிட்டாலும் நாளை மறுமையில் கண்டு கொள்ளத்தான் போகிறார்கள். (பார்க்க:12:106)

அப்படியானால் நேர்வழி நடப்பவர்கள் யார்? மனிதர்களில் மவ்லவி, ஆலிம், அல்லாமா, பேரறிஞர் கற்றறிந்த மேதை, அவாம் என்ற பாமர மனிதர் என யாரையும் கண்மூடிப் பின்பற்றாமல் 2:186 இறைவாக்குக் கூறுவது போல் மனிதர்களில் யாரையும் நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே முற்றிலும் நம்பி, 7:3 இறைக் கட்டளைக்கு அடிபணிந்து மனிதர்களில் எவரையும் பின்பற்றாமல், அல்லாஹ்வால் இறக்கப்பட்ட குர்ஆனையும், சுன்னாவையும் (பார்க்க : 53:2-4) மட்டுமே பின்பற்றுகிறவர்களே நேர்வழி நடப்பவர்கள். எப்படிப்பட்ட பேரறிஞராக இருந் தாலும், குர்ஆன், ஹதீஃதுக்கு அவரது சுய கருத்து, மேல் விளக்கம் பெருத்த வழிகேடு என்பதை 2:159, 33:36 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.

இதுவரை நீங்கள் பார்த்தது அல்லாஹ்வுக்கு அடியார்களுக்கும் இடையில் தரகர்களாகப் புகுந்து ஹராமான வழியில் வயிறு வளர்க்கும் மவ்லவிகளான மதகுருமார்களை நம்பி அவர்களின் சுய கருத்துக்களை, சுய விளக்கங்களை மார்க்கமாக எடுத்து நடப்பதன் மூலம் ஷிர்க்-இணை வைக்கும் கொடிய செயல்களைச் செய்யும் முஸ்லிம்கள் பற்றியே. ஆனால் இங்கு எல்லாம் பணிவு நிலையே காணப்படுகிறது.

இப்போது இங்கு நாம் பார்க்கப் போவது, அவர்களிலும் மிகக் கொடிய  ஷிர்க்கில் மூழ்கி இருக்கும், 42:21, 49:16 இறைவாக்குகள் கூறும் அல்லாஹ் விதிக்காததை விதித்து அல்லாஹ்வுக்கு இணையாளர் ஆகும் அல்லாஹ்வுக்கே மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கும் ததஜவினரைப் பற்றியாகும். இதர மவ்லவிகள் அனைவரும் அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையில் இடைத்தரகராகப் புகுவதற்கு மாறாக ததஜ மவ்லவிகள் அல்லாஹ்வுக்கும் மேல் அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) அல்லாஹ் விதிக் காததை விதித்து அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்பட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் ஆதாரபூர்வமான ஹதீஃத்களை மறுக்கும் நிலையிலும், நேரடியான குர்ஆன் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்து நிராகரிக்கும் நிலைக்கும் ததஜவினர் ஆளாகி வருகிறார்கள். இவையே மேலே கண்ட ஷிர்க்குகளை விட மிகமிகக் கொடிய ஷிஷிர்க்்காகும், இங்கு பணிவுக்கு மாறாக ததஜவினரின் ஆணவமே வெளிப்படுகிறது.

“”தவ்ஹீத்வாதி” நேர்வழி நடப்பவர்கள் எனத் தம்பட்டம் அடிப்பது 4:49, 53:32 இறைவாக்கு களை நிராகரிப்பதாகும். தவ்ஹீத் ஜமாஅத்-ஏகத்துவக் கூட்டமைப்பு அதாவது அல்லாஹ்வுடன் கூட்டு என்று கூறித் திரிவது அல்லாஹுஸ்ஸமது-அல்லாஹ் தேவையற்றவன் என்ற குர்ஆன் வசனத்தை நிராகரிப்பதாகும்.

42:21ல் அல்லாஹ் கூறுவது போல், தீர்ப்பளிப்பதை நாளை மறுமைக்கென்று ஒத்தி வைத்திராவிட்டால் இவர்களுக்கு இவ்வுலகிலேயே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும் என்று கடுமையாக அல்லாஹ் எச்சரித்துள்ளான். ததஜவினர் அல்லாஹ் விதிக்காததை விதித்து அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி, 49:16 வசனம் கூறுவது அல்லாஹ்வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுக்க முற்பட்டு ஷிர்க்கிலும் மிகக் கொடிய ஷிர்க்கில் மூழ்கியுள்ளனர். அதாவது மிகமிகக் கொடிய இணை வைப்பில் மூழ்கி இருக்கிறார்கள் என்பதை சுயவிளக்கம் எதுவும் இல்லாமல் குர்ஆன் வசனங்கள் மட்டுமே கொண்டு மறுக்கட்டுமே பார்க்கலாம். அவர்களால் ஒரேயயாரு குர்ஆன் வசனத்தையும் தரவே முடியாது.

ஆம்!

சிலை வழிபாடு – ஷிர்க்கை விட கொடிய ஷிர்க் ததஜ வழிபாடு

கபுரு வழிபாடு – ஷிர்க்கை விடகொடிய ஷிர்க் ததஜ     ,,

தரீக்கா வழிபாடு -ஷிர்க்கை விடகொடிய ஷிர்க் ததஜ     ,,

மத்ஹபு வழிபாடு-ஷிர்க்கை விடகொடிய ஷிர்க் ததஜ       ,,

இமாம் வழிபாடு – ஷிர்க்கை விடகொடிய  ஷிர்க் ததஜ     ,,

ஸாலிஹீன் வழிபாடு – ஷிர்க்கை விடகொடிய ஷிர்க் ததஜ   ,,

மஸ்லக் வழிபாடு -ஷிர்க்கை விடகொடிய ஷிர்க் ததஜ     ,,

ஸலஃபி வழிபாடு – ஷிர்க்கை விடகொடிய ஷிர்க் ததஜ     ,,

நபிதோழர் வழிபாடு – ஷிர்க்கை விடகொடிய ஷிர்க் ததஜ   ,,

கலீஃபாக்கள் வழிபாடு -ஷிர்க்கை விடகொடிய ஷிர்க் ததஜ  ,,

காரணம் இவை அனைத்தும் 2:159,186, 7:3, 18:102-106, 33:36, 59:7 இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நிராகரித்து அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையில் அல்லாஹ்வின் அடியார்களைப் புகுத்தி 10:18, 39:3 இறைவாக்குகள் கூறுவது போல் ஷிர்க் செய்கின்றனர். ஆனால் ததஜவினரோ இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நிராகரித்து தங்களை அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையில் புகுத்தவில்லை, மாறாக 42:21, 49:16 இறைவாக்குகள் கூறுவது போல் அல்லாஹ்வுக்கும் மேலாக அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) அல்லாஹ் வுக்கே மார்க்கம் கற்றுக் கொடுப்பது போல் அல்லாஹ் சட்டமாகச் சொல்லாததை எல்லாம் சட்ட மாகச் சொல்லி ஷிர்க்கிலும் மிகக் கொடிய ஷிர்க்கில் மூழ்கியுள்ளனர். இப்போது புரிகிறதா “”தவ்ஹீத்வாதி” என்று பிதற்றுவதும், தவ்ஹீத் ஜமாஅத் ஏகத்துவக் கூட்டு என்று பிதற்றுவதும் ஷிர்க்குகளிலேயே மிகமிகக் கொடிய ஷிர்க் என்பது.

1968ல் நாம் தர்கா-கபுரு வழிபாடு ஷிர்க் என்று சொன்னபோது காயல்பட்டினத்தில் மிகப் பெரிய மார்க்க அறிஞராக மதிக்கப்பட்ட சூஃபி, அது ஷிர்க் அல்ல உனக்குத்தான் கிறுக்கு என்று சொன்னார். அது போல் ததஜவினரும் எமக்குக் கிறுக்கு என அவதூறு பரப்பலாம். நாம் காட்டுவது குர்ஆன் வசனங்களை மட்டுமே; யாருக்குக் கிறுக்கு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். குர்ஆனை நிராகரிப்போர் யார்?

இந்த குர்ஆன் வசனங்கள் எல்லாம் 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45 குர்ஆன் வசனங்கள் கூறு வது போல் ததஜவினருக்கு எட்டிக் காயாகக் கசக்கும் என்பதை சுய சிந்தனையாளர்கள் அறிவார்கள். இந்த குர்ஆன் வசனங்களுக்கு பீ.ஜை. கொடுக்கும் சுய விளக்கத்தை ஏற்று கண்மூடி அவர் பின்னால் செல்வார்கள். காரணம் 15:39 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆன் வசனங்களை 25:30 இறைவாக்குக் கூறுவது போல் புறக்கணித்து ஒதுக்கித் தள்ளுபவர்களுக்கு வழிகேடுகளைத்தான் ஷைத்தான் அழகாகக் காட்டுவான்.

அதற்கு மாறாக 51:55 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தின் ஈமான்-நம்பிக்கையுடையவர்களாகவும், 29:69 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனில் நேரடியாகப் பெரும் ஜிஹாதாகப் பாடுபடு கிறவர்களுக்கு மட்டுமே குர்ஆனின் நேரடிப் போதனைத் தெளிவாக விளங்கும். ததஜவினருக்கு பீ.ஜை. சொல்வது மட்டுமே வேதவாக்கு. அவர்கள் குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்க ஒருபோதும் முன் வரமாட்டார்கள்.

ஆனால் பீ.ஜையோ 3ம் வகுப்பு மணாவன் அறிந்துள்ள சூரியனும், சந்திரனும் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகின்றன என்ற அடிப்படை உண் மையை அறியாது, சூரியன் கிழக்கில் உதித்து மேற்கில் மறைகிறது. அதற்கு மாறாகச் சந்திரன் மேற்கில் உதித்து கிழக்கில் மறைகிறது என்று பிதற்றுகிறார். சாப்பிடுவது என்றால் வாயால் மட்டுமே சாப்பிட முடியும். பார்ப்பது என்றால், கண்ணால், உள்ளத் தால், தகவலால், கணிப்பால், கணக்கீட்டால் பார்ப் பது என்பதற்கு குர்ஆனிலேயே நூற்றுக்கணக்கான வசனங்கள் காணப்படுகின்றன.

இந்த வசனங்கள் அனைத்தையும் நிராகரித்து விட்டு எப்படி வாயால் மட்டுமே சாப்பிடுகிறோமோ அதே போல் கண்ணால் மட்டுமே பார்க்க முடியும் என்று பிதற்றுகிறார்.

கணக்கீடு நூற்றுக்கு நூறு சரி! என்று முதல் பிறை வானில் இருக்கும் என்று கணக்கீடு சொல்கிறதோ அன்று வானில் முதல் பிறை இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் நபி(ஸல்) கண்ணுக்குத் தெரியும் 3-ம் பிறையைத்தான் முதல் பிறையாகக் கணக்கிடச் சொல்லியிருக்கிறார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் மீது தார்ப்பாயில் வடித்தெடுத்த படு பொய்யைக் கூறி தம் பக்தர்களை ஏமாற்றி வருகிறார். எவன் என்மீது வேண்டுமென்றே பொய் கூறுகி றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகில் தேடிக் கொள்ளட்டும் என்ற நபியின் மிகமிக ஆதாரபூர்வமான செய்தி பீ.ஜைக்கு உணர்வை ஏற்படுத்தத வில்லை. அந்தளவு அவரது உள்ளம் கல்லாக இறுகி விட்டது.

அதனால் பீ.ஜைக்கு 49:13 இறைவாக்குக் கூறும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டுக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் பிரித்திருப்பதைப் பின்பற்றி முஹாஜிர், அன்சாரி, குறைஷ், பனூ நளீர் போன்ற அடையாளம் தெரிய கூறப்படும் பெயர்களுக்கும், 3:103,105, 6:153,159, 12:108, 30:32, 42:13,14 இறைவாக்குகள் கூறும் கொள்கை அடிப்படையில் இவர்களாகக் கற்பனை செய்துள்ள ததஜ போன்ற பிரிவுப் பெயர்களுக்கும் வேறுபாடு தெரியாத மூடராகவும் இருக்கிறார்.

1986ல் இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கு இல்லை. ஒவ்வொருவரும் தங்கள் மார்க்கக் காரியங்களைச் சுயமாக அறிந்து செயல்படவேண்டும். நாங்கள் புரோகிதர்களை சப்ளை செய்வதில்லை என்று தெளிவாகப் பேசியவர், எழுதியவர் இன்று அந்த நேரான போதனைக்கு முரணாக நடக்கிறார் என் றால் அவர் 7:175-179. 45:23, 47:25 இறைவாக்குகள் கூறுவது போல் நேர்வழி இதுதான் என்று தெளிவாக திட்டமாக அறிந்து கொண்ட பின்னர்தான் 1987க்குப் பிறகு வழிகேட்டில் சென்று இன்று வழிகேட்டின் உச்சத்தில், ஷிர்க்கின் உச்சத்தில் இருக்கிறார் என்பதை யாரால் மறுக்க முடியும்.

பீ.ஜையும் அவரது பக்தகோடிகளும் ஷிர்க்கிலும் ஆகக் கொடிய ஷிர்க்கில் மூழ்கி இருந்து கொண்டு, “ஷிர்க் ஒழிப்பு” மாநாடு நடத்துவதுதான் வேடிக்கையிலும் பெருத்த வேடிக்கை. அன்றாடம் போதையில் மிதப்பவர்கள் மது ஒழிப்புப் போராட்டம் நடத்துவது போல், பல சாராய ஆலைகளுக்குச் சொந்தக் காரர்கள் மது ஒழிப்புப் போராட்டம் நடத்துவது போல், பீ.ஜை. மிகக் கொடிய ஷிர்க்கில் மூழ்கி இருந்து கொண்டு ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்து வதாகும். யார் மன நோயாளி?

ஷிர்க்கைப் பற்றி முறையாக பீ.ஜை அறிந்திருந் தால் அவர் ஒருபோதும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு நடத்த முற்பட்டிருக்க மாட்டார். அல்லாஹ் என்று மனிதனைப் படைத்தானோ அப்போதிலிருந்தே மனித குலத்தினர் இறை நிராகரிப்பை ஆரம்பித்து விட்டனர். நபி நூஹ்(அலை) காலத்திற்கு முன் பிருந்தே இறைவனுக்கு இணை-ஷிர்க்் செய்யும் கொடிய செயலை ஆரம்பித்துவிட்டனர். அன்றிலிருந்து தோன்றிய நபிமார்கள் அனைவரும் ஷிர்க்கை எதிர்த்துப் பெரும் போராட்டம் நடத்தினார்கள். இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களும் ஷிர்க்கை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் நடத்தினார்கள். அல்லாஹ் நாடிய வெகுசிலரே ஷிர்க்்கை விட்டு விடுபட்டு நேரடியாக அல்லாஹ் வின் அறிவிப்புகளைப் பற்றிப் பிடிக்க முற்பட்டார்கள். மனித வர்க்கம் தோன்றியதிலிருந்து, அவர்களை நரகில் சேர்க்க 15:39 இறைவாக்குக் கூறுவது போல் ஷைத்தானும் பெரிதும் பாடுபட்டு வருகிறான். பெருங்கூட்டம் அவன் மாய வலையில் சிக்கி நரகம் நோக்கி நடைபோடுகின்றனர். ஆக! உலகம் அழியும் வரை ஷிர்க்கை ஒழிக்க யாராலும் முடி யாது. நபிமார்கள் அனைவரும் ஷிர்க்கை எதிர்த்துப் போராடினார்களே அல்லாமல் அவர்களால் ஷிர்க்கை ஒழிக்க முடியவில்லை. நபிமார்களால் முடியாத அவ்வேளையை பீ.ஜை. செய்ய முற்பட்டிருக்கிறார். அதுவும் ஷிர்க்கில் மூழ்கி இருந்து கொண்டு, இது பெரிதும் வேடிக்கையா இல்லையா?

சிந்தியுங்கள். ஜனவரி 31க்குப் பிறகு தமிழ்நாட்டில் மட்டுமாவது இருக்கும் சிலைகள், கபுருகள் அனைத்தும் தரைமட்டமாக்கப்பட்டு குறைந்த அளவு சிலை, சமாதி வழிபாடு ஷிர்க்காவது ஒழியுமா? பார்ப்போம்.

அவர் உண்மையிலே நேர்வழியில் இருப்பதாக அவர் உள்ளம் நம்பினால், இப்பிரசுரத்தை அவரது மாநாட்டில் கொடுக்க அனுமதிப்பாரா? 1993ல் நாம் திருச்சியில் நடத்திய மாநாட்டில் எம்மைப் பற்றி படு அவதூராக, பெரும் பொய்களைக் கொண்டதாக பிரசுரம் வெளியிட்டார்கள். நாம் எமது மாநாட்டுப் பந்தலிலேயே அப்பிரசுரத்தைக் கொடுக்க அனுமதித்தோம். அங்கு பந்தலில் இருந்தவர்களைக் கொண்டே அப்பிரசுரத்தை அங்கிருந்தவர்கள் அனைவரிடமும் கொண்டு கொடுக்கச் செய்தோம். காரணம் எமது உள்ளத்தில் குற்றமில்லை. அவை அனைத்தும் அப்பட்டமான பொய் என்பது சுய சிந்தனையாளர்களுக்குத் தெரியும். எமது இலக்கு 51:55 கூறும் ஈமானுடன் 29:69 கூறும் குர்ஆனில் ஜிஹாத் செய்பவர்களே! அதனால் நாம் எமது மாநாட்டுப் பந்தலிலேயே எம்மைப் பற்றி அவதூறுகள் கூறிய பிரசுரத்தையே கொடுக்க அனுமதித்தோம்.

அதேபோல் பீ.ஜை. உண்மையாளராக இருந்தால், அவரது உள்ளம் குற்றமற்றதாக இருந்தால் இப்பிரசுரத்தை அவரது மாநாட்டு பந்தலிலே கொடுக்க அனுமதிக்க வேண்டும். அவர் ஒப்புக்கொள்வாரா? ஒருபோதும் அவர் ஒப்புக்கொள்ள மாட்டார். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும். மடியில் கனம் இருப்பதால் வழியில் பயம் இருக்கத்தானே செய்யும். காரணம் 25:30 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனைப் புறக்கணித்து அவர் பேச்சை வேதவாக்காகக் கொண்டு அவர் பின்னால் கண்மூடி வரும் பெருங் கூட்டத்தையே சேர்க்க முற்படுகிறார்.

அல்லது குறைந்தபட்சம் அவர் மக்களுக்குப் போதிக்கும் ததஜ நேர்வழியா? அல்லது கோணல் வழியா? கொடும் ஷிர்க்்கா? என்பதைப் பகிரங்க மேடையில் கலந்துரையாட முன்வருவாரா? அவரோடு நாம் பேசி பிரபல்யமாகப் பார்க்கிறோம் என்ற வாய்ச் சவடால் வேண்டாம். அவரது குருட்டுப் பக்தர்கள் இதை நம்பலாம். சுய சிந்தனையாளர்கள் அவரின் வடிகட்டிய பொய்யை அறிவார்கள். பீ.ஜை. பிரபல்யமானதே அந்நஜாத்தைக் கொண்டுதான். அவர் கடந்த 30 வருடங்களாகப் பல அவதாரங்கள், இயக்கங்கள் கண்டாலும், மக்கள் அவரை நஜாத்காரன் என்றும் அவரது பக்தர்களை நஜாத் கூட்டம் என்றும், அவரது பள்ளிகளை நஜாத் பள்ளிகள் என் றுமே அழைத்து வருகிறார்கள். மகன் தாயைப் பெற்றெடுத்தான் என்று கூறினால் அது எப்படிப்பட்ட பொய்யோ அது போன்றதொரு பொய்யையே பீ.ஜை. தொடர்ந்து கூறி வருகிறார்.

இப்படிப்பட்ட படுபொய்களையும், அவதூறுகளையும் அவரும், அவரது பக்தர்களும் கூறித் திரியாமல் பகிரங்க மேடையைச் சந்தித்து அவர் மக்களுக்குக் காட்டுவதுதான் ஒரே நேர்வழி என்பதை குர்ஆன், ஹதீஃத் மூலம் நிலைநாட்டட்டும். அதற்கு அவர் தவறினால் இந்த 21ம் நூற்றாண்டில் முஸ்லிம்களை பெரிதும் வழிகெடுத்து நரகில் தள்ளு பவர்களில் அண்டப் புளுகன் பீ.ஜைதான் முன்னிலை வகிக்கிறார் என்பதை பொது மக்களுக்குத் தொடர்ந்து அடையாளம் காட்டவே செய்வோம். இன்ஷா அல்லாஹ்.

Previous post:

Next post: