. தொடர் – 6
தோழர் ஹம்துல்லாஹ்
நாம் “”அல்லாஹ்வின் திருநாமங்கள்” என்ற தொடரில் இதுவரை “அல்லாஹ்’ என்ற சொல்லை உபயோகிப்பதற்கு முன் ஏகஇறைவன் “ரப்பு’ என்ற அன்றைய அரேபியர்களிடையே புழக்கத்திலிருந்த சொல்லைக் கூறியே தன்னை அறிமுகப் படுத்தினான்.
அறிமுகப்படுத்துகிறான் என் பதை திருக்குர்ஆன் கூற்றுகள் மூலம் கண்ட றிந்தோம். சுமார் நான்கு இறை அறிவிப்பு (வஹி)களுக்கு பின் ஐந்தாவதாக அருளப்பட்ட “”அல்-பாத்திஹா”
(பொருள் : அறிமுகம், முகவுரை) என்ற ஏழு வசனங்களை தனி சிறப்பு மிக்க அத்தியாயமாக அருள்கிறான். இந்த அத்தியாயம் முந்திய சமுதாயங்களுக்கு அருளப்படாத, ஆனால், நமக்கு மட்டும் அருளப்பட்டதாகும். நம் புழக்கத்திலுள்ள முப்பது(30) அத்தியாயங்களில் எதிலும் சாராமல் திரும்ப, திரும்ப ஓதவேண்டிய ஒரு தனி அத்தியாய மாகவே இருப்பதைக் காணலாம். இது நம் இறைத் தூதர்(ஸல்) அவர்களுக்கு மக்காவிலும், மதீனாவிலும் இரு தடவைகள் அருளப்பட்டது என்ற விபரமும் நபிமொழிகளில் காணமுடிகிறது.
இந்த அத்தியாயத்திற்கு அல்ஹம்து, அல்பாத்திஹா, உம்முல் குர்ஆன், ஸப்உல் மதானி என பற்பல பெயர்களுள்ளன. இந்த ஒரு அத்தியாயத்தின் சிறப்பை மட்டும் அறிகிறவர்கள் அல்லாஹ்வின் இறுதி நெறிநூல் “”அல்குர்ஆன்” கூறும் அனைத்தையும் அறிந்து கொள்ள முடியும். இதுவே அல்குர் ஆனின் தாய். இதன் முதல் வசனமாக
“”பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்” என்ற ஒரே வசனத்தில் ஏக வல்லோன் அல்லாஹ் தன்னுடைய பண்புகளையும், குணநலங்களையும் உள்ளடக்கி கூறுகிறான். இவ் வசனம் அருளப்படும் வரை இவ்விரு நாமங்களும் ஏக இறைவனின் திருநாமங்களில் இரண்டு என்பது அன்றைய அரேபியர் களிடையே வழக்கத்தில் இல்லை என்பதை நாம் அன்றைய பழைய புராதான அரபி இலக்கியங்களை புரட்டும் போது அறிய முடிகிறது. இதன் மூலம் இவ்விரு திருநாமங்கள் அல்லாஹ்வினால் நம் நபி(ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் அறி முகப்படுத்திய மிகவும் பொருள் பொதிந்த திருநாமங்கள் என்பதை அறியலாம். இவ்வசனத்தில் முதல் பெயர் “”அல்லாஹ்” என்பது அன்றைய அரேபியர் களிடையே வழக்கத்திலிருந்தது என்பதை இத்தொடரில் நாம் தெள்ளத் தெளிவாக விளக்கமாக கண்டோம். அதை அடுத்துள்ள “”அர்ரஹ்மான்” “”அர்ரஹீம்” என்ற இரு பெயர்கள் திருகுர்ஆனில் பற்பல இடங் களில் தனித்தும், மற்ற திருநாமங்களுடன் இணைத்தும் வருகின்றன. குறிப்பாக “”அர்ரஹ்மான்” என்ற பெயர் திருகுர்ஆனில் 18 அத்தியாயங்களில் 57 வசனங்களில் இடம் பெற்றுள்ளது.
“”அர்ரஹ்மான்” என்ற பெயரில் பன்மை சொற்களோ, உயர்மட்ட பெயரோ (றீற்ஸ்ரீerயிழிமிஷ்ஸe ஹிலிற்ஐவி) திருகுர்ஆனில் இடம் பெறவே இல்லை. அடுத்துள்ள “”அர்ரஹீம்” என்ற பெயர் திருகுர்ஆனில் 49 அத்தியாயங்களில் 115 வசனங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் பன்மை சொற்கள், உயர்மட்ட பெயர்கள் (றீற்ஸ்ரீerயிழிமிஷ்ஸe ஹிலிற்ஐவி) திருகுர்ஆனில் பற்பல இடங்களில் இடம் பெற்றுள்ளதை நினைவில் கொள்க! இத் திருப்பெயர்களின் தனி சிறப்புகள் என்ன? ஏக இறைவனின் எவ்வளவு உயர்ந்த பண்புகளை, குணநலன்களை தெரிவிக்கின்றன என்பதை விளக்கமாக காண்போம். بِسمِ اللَّـهِ الرَّحمـٰنِ الرَّحيمِ அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால் (தொடக்கம்). இவ்வசனம் வினைச் சொற்களில்லாமல் பெயர் சொற்களை கொண்டு மட்டும் உருவான உயர்வான வசனம். எந்தவொரு வசனம் வினைச் சொற்களில்லாமல் பெயர் சொற்களை கொண்டு மட்டும் உருவாகி றதோ அதற்கு மிகச் சிறந்த, உயர்ந்த அர்த்த முண்டு என்பதை நினைவூட்ட விரும்புகிறோம். வினைச் சொற்களைக் கொண்டு உருவான வசனங்கள் இறந்த காலத் தையோ, நிகழ் காலத்தையோ, எதிர்காலத் தையோ (Pழிவிமி, Preவிeஐமி ழிஐd ய்ற்மிற்reமிeஐவிe) குறிக்கும். ஆனால் பெயர் சொற்களை கொண்டு மட்டும் உருவான வசனங்கள் எக் காலத்தையும் குறிப்பிடாமல் எல்லா காலத் தையும் குறிக்கும் நிரந்தர (சிஸer-யிழிவிமிஷ்ஐஆ வீrற்மிஜு) பொருளைக் குறிக்கும்.
இச்சிறப்பு இன்று மக்களிடையே பிரபலமாகவுள்ள அரபி, தமிழ் மற்றும் இஸ்ரேலும், இந்தியாவும் உயிரூட்ட விரும்பும் ஹீப்ரு, சமஸ்கிருதம் போன்ற பண்பட்ட பழமையான மொழி களில் மட்டுமே காண முடியும். எல்லா காலத்தையும் குறிக்கும் நிரந்தர பொருளைக் குறிக்கும் இந்த வசனத்தைக் கொண்டு மனித இனம் தான் துவக்கும் எத னையும் கூறி ஆரம்பிக்க அல்லாஹ் நமக்கு ஆணையிடுகிறான். இவ்வசனத்தில் அரபி யில் 18 எழுத்துக்களைக் கொண்ட “அல்லாஹ், அர்ரஹ்மான், அர்ரஹீம்” என மூன்று பெயர்கள் உள்ளன. இது இடம் பெற்றுள்ள அத்தியாயம் முந்திய சமுதாயங் களுக்கு அருளப்படவில்லை என்றாலும் இதன் முதல் வசனம் “”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்பது மட்டும் முந்திய சமுதாயங்களுக்கு அருளப்பட்டிருந்தது என்பதை இறைத்தூதர் சுலைமான்(அலை) அவர்களின் சரித்திர நிகழ்வுகளிலிருந்து நாம் திருக்குர்ஆனில் (பார்க்க வசனம் 27:30) காண முடிகிறது.
திருகுர்ஆன் இறக்கப்பட்ட அரபி மொழி யின் தனிப்பெரும் சிறப்பு : பண்பட்ட பழமையான மொழியான அரபியில் குறைந்தபட்சம் மூன்று அல்லது நான்கு எழுத்துக்களை (ஸிeமிமிerவி) மூலமாக கொண்டே எந்த ஒரு சொல் (நிலிrd)லும் அமையும். அதற்கு மேல் இரண்டு அல்லது மூன்று எழுத்துக்களைக் கூட்டி ஆறு எழுத் துக்களுக்கு மேலாக எந்த அரபி சொல்லும் அமையாது என்பது ஏக இறைவன் வகுத் தளித்த அரபி இலக்கண, இலக்கிய சட்டம். இம்மூன்று அல்லது நான்கு எழுத்துக்களைக் கொண்ட மூலச் சொல்லிலிருந்து நூற்றுக் கணக்கான சொற்களை அரபியில் உரு வாக்க முடியும். அதற்கு மேல் எழுத்துக்கள் இருக்கவே இருக்காது. இது அல்லாஹ்வின் அருள்மறை திருகுர்ஆன் இறக்கப்பட்ட அரபியின் தனிப்பெரும் சிறப்பாகும். இச் சிறப்பு உலகில் இன்று பழக்கத்திலுள்ள எம் மொழியிலும் இருப்பதாக நாம் அறிய வில்லை. இதனை விமர்சிக்க விரும்புப வர்கள் அதற்குரிய ஆதாரங்களுடன் விளக் கினால் நாம் ஏற்பதற்கு தாயாராக இருக்கி றோம்.
ஏக இறைவன் வகுத்தளித்த அரபி இலக் கண, இலக்கிய சட்டப்படி “”ரஹ்மான், ரஹீம்” என்ற இரு பெயர்கள் மட்டுமின்றி இன்றும் முஸ்லிம்களின் நடைமுறை வழக்கத்திலுள்ள “”ரஹ்மத்து”, “”அர்ஹம், “”ராஹிமூன்”, “”ராஹிமீன்”, “”மர்ஹபாஹ்”, மர்ஹபன்” போன்ற பல நூறு சொற்கள் “”ற” “”ஹ” “”ம” என்ற மூன்று எழுத்துக்களைக் கொண்ட “”ரஹம்” என்ற மூலச் சொல்லி ருந்து உருவானது. அரபியில் மூலச் சொல் லின் பூர்வீக மூல அர்த்தத்திலிருந்தே அதன் பொருளை தேடி காண வேண்டும். இதுவும் ஏகன் இறைவனிட்ட சத்திய விதியாகும். இதனடிப்படையில் அரபியில் ஒரு வார்த் தைகளின் பொருளை அறிந்தால் தான் குர்ஆனை எக்காலத்திற்கும் ஏற்றதாக காண முடியும். ஆனால் இன்றைய காலத்தில் அப் படிக் காண்பது அரிதாக உள்ளது என்பதை ஆதாரத்துடன் இங்கு விளக்க நாம் கடமைப் பட்டுள்ளோம். இதன் பொருளை அறிவ தற்கு முன் நாம் அவர்கள் செய்யும் பாரதூர மான தவறுகளில் இவ் வசனத்திற்கு அவர் கள் கூறும் சாதாரண தமிழ் அர்த்தத்தைக் காண்போமாக!. மொழிபெயர்ப்பின் நிலை!! “”கல் தோன்றி, மண் தோன்றா காலத்து முன் தோன்றிய மூத்தத் தமிழ்” என்ற பழம் சிறப்புப் பெற்ற தமிழ் மொழியில் சுமார் கி.பி. 1950 வரை குர்ஆன் தமிழில் மொழி பெயர்க்கப்படவே இல்லை என்பதை மற வாதீர்கள். 1950க்குப் பின் தான் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்தது. அதற்கு அன்று நம் முஸ்லிம் மார்க்க அறிஞர் களான மவ்லானா, மவ்லவிகள், தங்கல்கள், முப்திகளிடமிருந்து வந்த எதிர்ப்புகள் சொல்லால் வர்ணிக்க முடியாது.
முதன் முதலில் மொழி பெயர்த்த மவ்லவி: அ.க. அப்துல் ஹமீது பாகவிக்கு “”காபிர்” பத்வா கொடுத்த காலமது(!) அதே மவ்லானா, மவ்லவிகள், தங்கல்கள், முப்திகள், அண்ணன் தம்பிமார்கள்(?) அல்லாஹ்வின் அருளால் நேர்வழி பெற்று இன்று தமிழகத் தில் நிறைய மொழிபெயர்ப்புகள் வந்து பாமர மக்களிடையே மார்க்க பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு இயக்கமும், அமைப்பும், கட்சிகளும் அவரவர்கள் முடிந்தளவு அவர் களது இயக்க, கட்சி, அமைப்பு கருத்துக் களை உட்புகுத்தி அவரவர்களது உல(ரும்) மாக்கள், தலைவர்கள், அண்ணன்கள் திரு குர்ஆனை தமிழில் மொழி பெயர்த்து பரப்புவதை ஒரு லாபகரமான வியாபார மாகவே செய்து வருகின்றன என்பது நிதர் சனமான உண்மை. இதனை நாம் எவருட னும் நேரில் ஆதாரங்களுடன் தனியா கவோ, பொதுவாகவோ விமர்சிக்க தயார் என தாழ்மையுடன் எழுத்துப்பூர்வமாக கூறிக் கொள்கிறோம்.
முக்கிய குறிப்பு : ஒருசிலர் அல்லாஹ்வின் அருள் வேண்டி குறைந்த விலைக்கோ அல்லது இலவசமாக கொடுப்பதை நாம் இங்கு குறிப்பிடவில்லை. நாம் அறிந்தவரை மதுரையை சார்ந்த நம் அருமை முஸ்லிம் சகோதரர் : முனைவர். னி.னி.அப்துல் காதிர் உலவியின் மொழி பெயர்ப்பைத் தவிர மற்ற அனைத்திலும் “”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்ற திருகுர்ஆனின் துவக்க வசனத்திற்குக் கூட தெளிவான, சரியான பொருள் தரவில்லை என்பதை ஊரறிய, உலகறிய, உரத்தக் குரலில் கூற நாம் வெட்கப்படவில்லை. இந்நிலையில் இவர்களின் மொழிபெயர்ப்புகளின் உள்ளே எந்தளவுக்கு தப்பு, தவறுகள், அனார்த்தங்களுமிருக்கும் என்பதை மக்கள் அறிய அவ்வப்போது விமர்சிக்காமல் விட மாட்டோம். குறை சொல்வது நமது கொள்கையல்ல, குணமுமல்ல. “”ஒரு முஸ் லிம் மற்றொரு முஸ்லிமுக்கு கண்ணாடி போன்றவர்” என்ற நபிமொழிக்கொப்ப நாம் செயலாற்ற விரும்புகிறோம். அல் லாஹ் ஏற்று நம்மனைவருக்கும் நேர்வழி காட்டி அருள் புரிவானாக! ஆமீன்!
அனைவரும் “”பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர்ரஹீம்” என்பதற்கு செய்துள்ள தவறான அர்த்தம் : அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனும் ஆகிய அல்லாஹுவின் திருப்பெயரால் சரியான அர்த்தம் : அருளாளன், அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால் இதனை வாசகர்கள் நேரடியாக காண லாம். இதில் என்ன பாரதூரமான தவறு உள்ளது? என சிலர் நினைக்கலாம். திருகுர் ஆனில் இல்லாததை இவர்களது அர்த்தத் தில் புகுத்தியுள்ளதை அறியலாம். இவர் களின் மொழி பெயர்ப்பில் நாம் கோடிட் டுள்ள இரு “”உம்’களும், “”ஆகிய” மற்றும் “அளவற்ற’-“நிகரற்ற’ என்ற சொற்கள் குர் ஆனின் மூலத்தில் எங்குள்ளது? என்பதை இவர்களால் காட்ட முடியுமா? முடியவே முடியாது. இவர்களது மொழிபெயர்ப்பை அரபி அறிந்த ஒரு மொழிபெயர்ப்பாளனி டம் கொடுத்தால் அவன் அதனை அரபியில்: بسم الله و الرحمن و الرحيم என மொழி பெயர்ப்பான். இதில் கோடிட் டுள்ள “”வாவ்” மூல குர்ஆனின் மூலத்தில் இல்லை என்பதை யாவரும் நன்கறிவர். ஆங்கில மொழியில் உலகளவில் யூத, கிறித்தவர் கள் உட்பட பலர் மொழிபெயர்த்துள்ள னர். எவரும் இப்படிப்பட்ட தவறுகளை செய்யவில்லை என்பதை நாம் காணமுடி கிறது. அல்லாஹ்வின் இறுதி நெறிநூல் குர்ஆனில் இப்படிப்பட்ட தவறை செய்ய லாமா என்பதை சிந்தித்து செயல்பட நாம் கேட்டுக் கொள்கிறோம். இவர்களின் துவக்க வசனமே இப்படியயன்றால் இவர் களின் முழு மொழிபெயர்ப்புகளில் எந் தளவு தவறுகள், அனாச்சாரங்கள் இருக்கும் என்பதை வாசகர்களின் மேலான ஆய்வுக்கு விட்டு நாம் அல்லாஹ்வின் திருநாமங்கள் என்ற தொடரை தொடர்வோம். இன்ஷா அல்லாஹ் !