விமர்சனம் : அந்நஜாத் மார்க்கப் பணிக்கு கூலிகூடாது என்கிறது அதே நேரத்தில் மார்க்கப் பணிக்கு கூலி வாங்கும் கூட்டம் “”அல்குர்ஆன் 2:273” ஆதாரம் காட்டி, நியாயப்படுத்துகிறார்களே! கூலி கூடுமா? கூலி கூடாதா? வார்னர் நதீர், நாகர்கோவில்

விளக்கம் : பொய்யுரைப்பதில் மன்னர்கள், அண்டப் புளுகர்கள், ஆகாசப் பொய்யர் கள், மக்களை வழிகெடுப்பதில் இந்த மவ்லவிகளை விடக் கேடுகெட்டவர்கள் இந்த உலகில் காணப்படும் ஏனைய அனைத்து மக்களின் மதகுருமார்களிலும் யாரும் இல்லை! காரணம் அவர்களில் யாரிடமும் இறையளித்தப் பாதுகாக்கப்பட்ட வாழ்வியல் வழிகாட்டி நெறிநூல் இல்லவே இல்லை. இந்த மவ்லவிகளிடமே பூரணப்படுத்தப்பட்ட இறைவனால் பாது காக்கப்பட்ட யுக முடிவு வரை நடைமுறை யில் இருக்கும் குர்ஆன் இருக்கிறது. இந்த மவ்லவிகள் கையில் வெண்ணையை வைத் துக் கொண்டு நெய்க்கு அலையும் கேடு கெட்டவர்கள்; கண்ணிருந்தும், குருடர் கள், காதிருந்தும் செவிடர்கள். இவர்களின் மவ்லவி, ஆலிம் என்ற பெருமை இவர்களை நேர்வழியை, சத்தியத்தை ஒருபோதும் ஏற்க விடாது. அல்லாஹ்வாலேயே நேர்வழியை விட்டுத் திருப்பப்படுகிறார்கள். இதை நாம் கூறவில்லை. அல்லாஹ்வே 7:146 இறை வாக்கில் கூறுவதைப் படித்துப் பாருங்கள். இதோ அவ்விறைவாக்கு!

“”உண்மையின்றி பூமியில் பெருமை யடிப்பவர்களை, என் கட்டளைகளை விட் டும் திருப்பி விடுவேன். அவர்கள் அனைத்து ஆதாரங்களைக் கண்டபோதிலும் அவற்றை ஏற்கமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால், அதை ஏற்கமாட்டார்கள். தவறான வழியைக் கண்டாலோ அதையே ஏற் பார்கள். ஏனெனில், நம் அத்தாட்சிகளை அவர்கள் பொய்ப்பித்து, புறக்கணித்தும் வருகின்றனர். (7:146)

இந்த மவ்லவிகள் தங்களை முழுநேரப் பணியாளர்கள் என்று கூறுவது ஜமுக்காளத் தில் வடித்தெடுத்தப் பொய்யாகும். ஐந்து நேரத் தொழுகைகளுக்கும் முன்பின் சுன்னத்துக்களை விடாமல் பேணித் தொழும் தொழுகையாளிகள் செலவிடும் நேரத்தைக் கூட இந்த இமாம்கள் ஒதுக்குவதில்லை. அந்தத் தொழுகையாளிகள் மண்ணையா சாப்பிடுகிறார்கள்? அல்லது 2:273 இறைவாக்கு கூறுவது போல் யாரும் பணம் கொடுக்கிறார்களா? இல்லையே! பூமியில் நடமாடி(த் தம் வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்ற) எதுவும் செய்ய முடியாத அளவுக்கு அல்லாஹ்வின் பாதை யில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்குத் தான் (உங்களுடைய தான தர்மங்கள்) உரியவையாகும். (பிறரிடம் யாசிக்காத) அவர்களுடைய பேணுதலைக் கண்டு, அறியாதவன் அவர்களைச் செல்வந் தர்கள் என்று எண்ணிக் கொள்கிறான். அவர்களுடைய அடையாளங்களால் அவர்களை நீர் அறிந்து கொள்ளலாம். அவர்கள் மனிதர்களிடம் வருந்தி எதையும் கேட்க மாட்டார்கள். (இத்தகையோருக்காக) நல்ல திலிருந்து நீங்கள் எதைச் செலவு செய்தா லும், அதை நிச்சயமாக அல்லாஹ் நன்கறி கின்றான். (அல்குர்ஆன் : 2:273) 2:273 இறைவாக்கு என்ன கூறுகிறது? சுய உணர்வுடன் படித்துப் பாருங்கள். யாரி டமும், எதையும் எதிர்பாராமல் 2:186 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ் வையே முற்றிலும் நம்பி, அவனிடமே கேட் பவர்களாக இருப்பார்கள். எங்கிருந்து வரும்? யார் தருவார்கள்? என்று அறியவும் மாட்டார்கள்; எதிர்பார்க்கவும் மாட்டார்கள்; கேட்கவும் மாட்டார்கள். இந்த நிலை யில் அல்லாஹ் சில செல்வந்தர்களின் உள் ளத்தில் போட்டு அவர்கள் தங்களின் ஜகாத், சதகா பணத்தை கொடுப்பதையே குறிக்கிறது. இதற்குத் திண்ணைத் தோழர்களான அஸ்ஹாபுஸ் ஸுஃப்பாக்களின் வழிகாட் டல் முன்மாதிரியாக இருக்கிறது.

அதற்கு மாறாக மாதா மாதம் இவ்வளவு சம்பளம், போனஸ் எனப் பேசி அப்பணி யைச் செய்யாவிட்டால் சம்பளம் இல்லை என்ற நிலையில், அதுவும் எதிர்பார்த்த நிலையில் மாதா மாதம் சம்பளமாகப் பெறு வதைக் கூலி அல்ல, அன்பளிப்பு எனக் கூறு பவர்கள் எப்படிப்பட்டப் பொய்யர்களாக வும், மூடர்களாகவும் இருப்பார்கள் என் பதை நீங்களே முடிவு செய்யுங்கள். நபி(ஸல்) அவர்கள், மார்க்கப் பணிக்கு இங்குக் கூலி, சம்பளம் இல்லை. அல்லாஹ் விடமே இருக்கிறது என்று கூறும் 6:90, 10:72, 11:29,51, 25:”57, 26:109,127,145,164, 180, 34:47, 38:86, 42:23 ஆகிய 13 குர்ஆன் வசனங்களையும், கூலிக்குக் கடமையான மார்க்கப் பணி செய்கிறவர்கள் நேர்வழியில் இல்லை என்று கூறும் 36:21 வசனத்தையும், கடமையான மார்க்கப் பணியை கூலிக்கு, சம்பளத்திற்குச் செய்யும் இம்மவ்லவிகள் செய்யம் தில்லுமுல்லுகளை, மக்களைத் துணிந்து ஏமாற்றி வழிகேட்டில் இட்டுச் செல்லும் தீச்செயல்களை பட்டியலிடும் 2:41,75,78,79,88,109,146,159,161,162,174, 3:78,187,188, 4:44,46, 5:41,63, 6:21,25,56, 9:9,10,34, 11:18,19, 31:6 இந்த வசனங்களை எல்லாம் நன்கு படித்து உண்மையை விளங்குபவர்களுக்கே!

இந்த மவ்லவிகள் முற்றிலும் முழுவதுமாகப் புறக்கணித்து குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடிப்பவர்களே வெற்றியாளர்கள், நாளை அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கம் நுழைபவர்கள், ஆயினும் அவர் கள் மிகமிகச் சொற்பமானவர்களே என்பது புரியும்.

Previous post:

Next post: