அந்நஜாத் ஏப்ரல் – 2016

in 2016 ஏப்ரல்

ஏப்ரல் 2016

 ஜ. ஆகிர் – ரஜபு 1437

தேர்தலில் முஸ்லிம்களின் கடமை என்ன?

K.M.H. அபூ அப்தில்லாஹ்

எதிர்வரும் மே 16 அன்று தமிழகத்திற்கும், பாண்டிச்சேரிக்கும் சட்டசபைகளின் தேர்தல் நடை பெற இருக்கிறது. அதற்குரிய கெடுபிடிகள், பேரங்கள், பெட்டி மாற்றங்கள் சூடுபிடித்து வருகின்றன. இந்த நிலையில் முஸ்லிம்களின் கடமை என்ன? குர்ஆன் என்ன கூறுகிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்து செயல்படக் கடமைப்பட்டி ருக்கிறார்கள்.

மனிதகுலத்திற்கென்று மனிதனைப் படைத்துப் பரிபாலிக்கும் இறைவன் கொடுத்தது இறையாட்சி தான். அதாவது ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் (முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல) இறுதியாக இறக்கியருளிய முழுமைப் பெற்ற வாழ்க்கை நெறிநூல் குர்ஆனில் ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டிருக்கிறானோ அதன்படி நடப்பதுதான் இறையாட்சியாகும். அந்த ஆட்சியை அல்லாஹ் கொடுப்பதாக இருந்தால், மக்கள் எப்படி நடக்க வேண்டும் என்பதை குர்ஆன் 24:55 இறைவாக்குத் தெளிவாகப் பறைசாற்றுகிறது. அது வருமாறு:

உங்களில் எவர் நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன் னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும், அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட அவர்களுடைய மார்க்கத்தை அவர்களுக்காக நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றிவிடுவதாகவும் அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். “”அவர்கள் என்னோடு (எதையும் எவரையும்) இணை வைக்காது, அவர்கள் எனக்கே அடிபணிவார்கள். இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள்தான் பாவிகள். (24:55)

இந்த 24:55 குர்ஆன் வசனத்தை மீண்டும் மீண்டும் படித்து அதன் சத்தையும், சாரத்தையும் மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். இதில் கூறப்படும் உயரிய குணங்கள் இன்று முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படுகின்றனவா?

2:186, 7:3, 18:102-106, 33:36 இறைக்கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து மனிதர்களில் மவ்லவிகள், தலைவர்கள் என எவரையும் நம்பாமல், அல்லாஹ்வை மட்டுமே நம்பி, குர்ஆனை நேரடியாகப் படித்து இறுதி இறைத்தூதரின் நடைமுறைகளை விளங்கிச் செயல்படுகிறவர்கள் அதாவது நற்செயல்கள் புரிகிறவர்கள் எத்தனை பேர்?

49:14 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான்-இறை நம்பிக்கை நுழைந்தவர்கள் எத்தனை பேர்? உள்ளத்தில் ஈமான் நுழையாத பெயர் தாங்கி முஸ்லிம்கள் எத்தனை பேர்? உள்ளத்தில் ஈமான் நுழைந்தவர்கள் ஐங்காலத் தொழுகைகளைத் தொழாமல் இருக்க முடியுமா? அவர்களிலும் ஐங்காலத் தொழுகைகளை அதனதன் நேரத்தில் பேணித் தொழுபவர்கள் எத்தனை பேர்? அதாவது தொழுகையை நிலைநாட்டுபவர்கள் எத்தனை பேர்? நற்செயல்களிலேயே மிகமிக உயர்ந்த செயல்களான ஈமான், தொழுகை இவற்றிலேயே கோட்டை விடுபவர்கள் வேறு எந்த நற்செயல்களைச் செய்யப் போகிறார்கள். தொழுகையை நிலை நாட்டாதவன் இணை வைப்போரில் ஆகிவிடு கிறான். (30:31)

ஆக 24:55 இறைவாக்குக் கூறும் நற்செயல்கள் இன்றைய முஸ்லிம்களில் 99.9% முஸ்லிம்களிடம் இல்லை என்பதை மறுப்பவர் யார்? இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ் இன்றைய முஸ்லிம் மக்களுக்குக் கொடுப்பானா? குதிரைக் கொம்புதான்! இன்று ஒரு சிலர் இறையாட்சியை ஏற்படுத்தப் போகிறோம். கிலாஃபத்தை நிலைநாட்டப் போகிறோம் என்று கிளம்பி இருக்கிறார்கள். முதலில் ஒன்றை அவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது கிலாஃபத்தை இவர்கள் ஜிஹாத் செய்து அடைய முடியவே முடியாது. 24:55ல் அல்லாஹ் கூறுகிறபடி நற்செயல்கள் செய்யும் ஒரு கணிசமான மக்கள் சேர்ந்தால் அல்லாஹ் கொடுப்பதே கிலாஃபத்-இறையாட்சி. கிலாஃபத்திற்காகப் போராடும் சகோதரர்களிடம் மனிதர்களை நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்பி (2:186) அவனுக்கு மட்டுமே அடிபணியும் உயர் நற்செயல் இருக்கிறதா? ஐங்காலத் தொழுகைகளை விடாமல் ஜமாஅத்துடன் பேணித் தொழும் உயர் நற்செயல் இருக்கிறதா? அனைத்துக் காரியங்களிலும் குர்ஆன், ஹதீஃதுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் உயர் குணம் இருக்கிறதா? இவற்றில் தங்களைப் பக்குவப்படுத்தாமல், கிலாஃபத், கிலாஃபத் எனக் கூப்பாடு போடுவது வெற்றுக் கூச்சலே. சுயநலக் கூச்சலே என்பதை மக்கள் புரிய வேண்டும்.

முஸ்லிம்களில் அல்லாஹ் நாடும் ஒரு கணிசமான தொகையினர் 22:78, 41:33, 3:102 இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து தங்களை முஸ்லிம் களில் உள்ளவர்கள் (மினல் முஸ்லிமீன்) என்ற நிலையில் 3:103 இறைக்கட்டளைக்கு அடி பணிந்து பிரியாமல் ஒரே ஜமாஅத்தாக ஒரே தலைமையில் குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் நேரடி வழிகாட்டல்படி நடக்கும் ஒரு சமுதாயம் உருவாகாதவரை முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் இல்லை. இவ்வுலகிலும் வேதனைகளும், சோதனைகளும் அவர்களைக் கடுமையாக வாட்டத்தான் செய்யும். இந்த வேதனைக்குரிய, பரிதாப நிலையை விளங்கி ஒவ்வொரு முஸ்லிமும் மவ்லவிகளையோ, தலைவர்களையோ நம்பாமல், அல் லாஹ்வை மட்டுமே நம்பி குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடக்க முன்வர வேண்டும். அந்த அற்புத நிலை உருவாகும்வரை முஸ்லிம்கள் இத்தேர்தலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

இந்த ஜனநாயக ஆட்சி முறை குர்ஆனுக்கு முரணானது. முஸ்லிம்கள் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும். வாக்களிப்பது ஹராம் என்பது ஒரு பிரிவினரின் வாதம். இன்று நடைமுறையிலிருக்கும் ஜனநாயக ஆட்சி முறை 2:145, 6:116 இறைவாக்குகள் இன்னும் பெரும்பான்மையினர் வழிகேட்டில் தான் இருப்பார்கள் என்ற எண்ணற்ற வசனங்களின்படி தவறான, குர்ஆனுக்கு முரண்பட்ட நடைமுறைதான். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் மன்னராட்சியை விட, சர்வாதிகார ஆட்சியை விட, மக்களுக்குக் குறிப்பாக ஏழைகளுக்குப் பெருந் தீங்கிழைக்கும் ஓர் ஆட்சி முறைதான் ஜனநாயக ஆட்சி முறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம்கள் ஒரு நிர்பந்த நிலையில் வாழ்ந்து கொண்டிருக் கிறோம். எந்த ஒரு ஆன்மாவையும் அதன் சக்திக்கு மீறி நாம் சோதிப்பதில்லை என்று எண்ணற்ற வசனங்களில் அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க : 2:233,286, 6:152, 7:42, 23:62) மேலும் உள்ளத்தில் ஈமானின் உறுதியுடன் நிர்பந்த நிலையில் வாயினால் அதற்கு மாற்றமாக ஒருவர் கூறினால் அவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார் எனறு அல்லாஹ் கூறுகிறான். (5:3, 16:106)

இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பவர்கள் முஸ் லிம்களை இந்த நாட்டிலிருந்து துடைத்தெறியக் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறவர்கள். அவர்களை ஆட்சியில் அமர்த்த ரோடு போட்டுக் கொடுத்தவர்கள் 3:186, 13:22, 23:96, 41:34 இறைவாக்குகளை நிராகரித்து, ஹுதைபியா உடன்படிக்கை முன் மாதிரியையும் கண்டு கொள்ளாமல், பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் செயல்பட்ட முஸ்லிம் மத வியாபாரிகளும், அரசியல் வியாபாரிகளுமே என்பதை நினைவில் வையுங்கள். அவர்களே முஸ்லிம் விரோதிகளுக்குத் துணை போய்க் கொண்டு அந்தப் பழியை 4:112 இறைவாக்குக் கூறுவது போல் எம்மைப் போன்றவர்கள் மீது போடும் அசகாயசூரர்கள். எனவே அப்படிப்பட்டவர்களின் கருத்துக்கள் ஏற்புடையதல்ல.

எனவே தேர்தலைப் புறக்கணிப்பது, வாக்களிப்பது ஹராம் என்று கூறி வாக்களிக்காமல் இருப்பது முஸ்லிம்களுக்கு மேலும் ஆபத்தையே ஏற்படுத்தும். முஸ்லிம்களை நாட்டை விட்டே விரட்டத் திட்டமிட்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு இது நல்ல வாய்ப்பையே கொடுக்கும். முஸ்லிம்கள் தான் தேர்தலைப் புறக்கணிக்கிறார்களே, வாக்காளர் பட்டியலில் ஏன் அவர்களின் பெயர்கள் இருக்க வேண்டும் என்று கூறி முஸ்லிம்களின் பெயர்களை நீக்க முற்படுவார்கள். இது பலவிதமான இடையூறுகளை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தும். முஸ்லிம்களின் உரிமைகள் பறிக்கப்பட அது வழிவகுக்கும். எனவே முஸ்லிம்கள் தேர்தலைப் புறக்கணிக்கவோ, வாக்களிக்காமல் இருக்கவோ ஒருபோதும் முற்படக் கூடாது. அது பெரும் நஷ்டத் தையே ஏற்படுத்தும்.

எனவே நிர்பந்த நிலையில் முஸ்லிம்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அதே சமயம் யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வேட்பாளர்களிடமிருந்து லஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஒருபோதும் வாக்களிக்கக் கூடாது. அவர்கள் ஒரு வாக்குக்கு ரூபாய் 5000/- லஞ்சமாகக் கொடுத்தாலும் 5மு365=1865; 5000@1865=2.68. ஆக ஒரு நாளைக்கு ஒரு நேர டீக்குக் கூட உதவாது. இந்த அற்பக் காசுக்காக நமது பொன்னான வாக்குகளைத் தாரை வார்க்கலாமா? சிந்தியுங்கள்! இன்று பெரும்பாலும் தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வருகிறவர்கள் மக்கள் பணத்தைக் கொள்ளை அடித்து அதில் ஒரு சிறு பகுதியை மக்களுக்கு லஞ்சமாகக் கொடுக்கும் அயோக்கியர்களும், அராஜகப் பேர்வழிகளும்தான். எனவே அப்படிப்பட்டவர்களுக்கு ஒருபோதும் நமது வாக்கை அளிக்கக் கூடாது.

வெற்றி பெறுகிறவர்களுக்குத்தான் நாமும் வாக்கிக்கவேண்டும் என்ற தவறான எண்ணத்தில் இப்படிப் பட்டவர்களுக்கு வாக்களித்துப் பதவியில் அமர்த்தினால் அவர்கள் செய்யும் அட்டூழியங்கள், அராஜகங்கள் அனைத்திலும் நமக்கும் பங்கு உண்டு என்பதை நினைவில் வையுங்கள். எனவே வெற்றி பெறுகிறவர் களுக்குத்தான் நமது வாக்கை அளிக்க வேண்டும் என்ற எண்ணமே கேடான எண்ணமாகும்.

வேட்பாளர்களில் நல்லவர்கள் இருந்தால், அவர்கள் வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தா லும் அவர்களுக்கு நமது வாக்கை அளித்து நமது கடமையை நிறைவேற்றலாம். அப்படியும் யாரும் வேட்பாளர்களில் இல்லை என்றால் நமது வாக்கை நோட்டாவில் பதிவு செய்து விட்டு மன திருப்தியோடு வீடு திரும்பலாம். நமது வாக்கைப் போடாமல் விட்டால், அதிலும் தில்லுமுல்லுகள் செய்து நமது வாக்குத் தகுதியற்றவருக்குப் போய்ச் சேர்ந்து அதன் மூலமும் நமது பாவச் சுமை அதிகரிக்க வாய்ப்புண்டு. எனவே ஒருபோதும் மறந்தும் வாக்களிக்காமல் இருந்து விடாதீர்கள்.

இப்போது முஸ்லிம் வேட்பாளர்களைப் பற்றிப் பார்ப்போம். அவர்களும் அரசியல் வியாபாரிகள் தான். அவர்களும் அவர்களின் சுயநலம் காரணமாக, அற்பமான உலகியல் ஆதாயங்களை அடைய அரசியலில் ஈடுபட்டுள்ளார்களே அல்லாமல், மக்கள் நலன்களுக்காக மக்களுக்கு உண்மையில் சேவை செய்யும் உயர் நோக்கோடு அவர்களில் யாரும் இன்றைய அரசியல் களத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையிலேயே அவர்களுக்கு மக்கள் நலனில் அக்கறை இருந்தால், இப்படி 20 கட்சிகளுக்கு மேல் இருக்கும் வாய்ப்பு இருக்குமா? பெரும்பான்மையினராயுள்ள இந்து மக்களில் கூட இந்தளவு பிளவுபட்டக் கட்சியில் இருக்குமா என்பது சந்தேகமே! பிரியாமல் ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டிருங்கள் என்ற 3:103 இறைவாக்குக்கு முற்றிலும் அடிபணிந்து கட்டுப்பட்டவர்களாக இருந்தால், அற்பமான பட்டம் பதவி, காசு பணம், பேர், புகழ் இவற் றிற்கு ஆசைப்பட்டு இத்தனைக் கட்சிகளாக உருவாகி இருக்க முடியுமா?

இதிலும் பொய்யன் பீ.ஜையே முதல் குற்றவாளி. 1986களில் இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கில்லை என்பதை ஒப்புக்கொண்டு வாக்களித்து, அந்நஜாத்தில் எழுதியும் விட்டு, 7:175-179, 45:23, 47:25 குர்ஆன் வசனங்கள் சொல்வது போல் நேர்வழியை-சத்தியத்தை நன்கு அறிந்த பின், மனோ இச்சைக்கும் உலகியல் ஆதாயங்களுக்கும் ஆசைப்பட்டு ஆக்கு, ஜாக்கு, தமுமுக, ததஜ என கிளைக்குக் கிளை தாவும் குரங்கு போல், பல பிரிவினைகளுக்கு வழிவகுத்ததால் இன்று 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் அரசியல் கட்சிகள் தோன்றக் காரணமாயிற்று. இந்தப் பிரிவுகளின் அனைத்துப் பாவச் சுமைகளையும் 16:25 குர்ஆன் வசனம் கூறுவது போல் நாளை அவரே சுமக்க இருக்கிறார்.

அவரது வார்ப்பில் வளர்ந்தவர்கள்தான் இந்த 20 கட்சிப் பிரிவினரும். உலகியல் ஆசைகள், தலைவர் பதவி இவை அவர்களை 3:103 இறைக் கட்டளைப் படி ஒரே தலைமையில் ஒன்றுபட ஒருபோதும் இடம் தராது. இதிலிருந்தே இவர்கள் மக்கள் நலன் கருதி இன்றைய அரசியலில் ஈடுபடவில்லை. தங்க ளின் சுயநலன்களுக்கும், சுய ஆதாயங்களுக்கும் மட்டுமே அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உறுதியாகவில்லையா? நாம் கூறுவது பொய், அவர்கள் மக் கள் நலனுக்காகவே அரசியலில் ஈடுபட்டுள்ளார்கள் என்றால் இந்தத் தேர்தல் வி­யத்திலாவது ஒரே தலைமையில் ஒன்றுபட்டுக் காட்டட்டுமே பார்க்கலாம். அப்படி ஒரே தலைமையில் ஒன்றுபட்டுவிட் டால், இன்றைய இக்கட்டான நிலையிலும் அது முஸ்லிம் சமுதாயத்திற்குப் பெருத்த லாபத்தைப் பெற்றுத் தரும். கணிசமான எண்ணிக்கையினர் எம்.எல்.ஏ.வாகி சட்ட சபையிலும் நுழைந்து பொதுமக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் குரல் கொடுக்கும் வாய்ப்புப் பெரிதும் கிடைக்கும்! முஸ்லிம்களை நாயிலும் கேடாகப் பழிக்கும் மற்றவர் களும் முஸ்லிம்களை மதித்துப் போற்ற முன் வந்து விடுவார்கள் என்பதில் சந்தேகமுண்டா?

எனவே முஸ்லிம் பெருமாக்களே இந்த முஸ்லிம் கட்சிகள் ஒன்றுபடாமல் பிரிந்த நிலையிலேயே உங்களிடம் வந்தால் அவர்களைச் சல்லிக் காசுக்கும் நீங்கள் மதிக்காதீர்கள். அவர்களை உங்கள் வாசல்படி ஏறவிடாதீர்கள். இத்தேர்தலில் மட்டுமாவாது நீங்கள் அனைவரும் ஒன்றினைந்து ஒரே ஜமாஅத்தாக வாருங்கள். அப்படியானால் தான் உங்களை மதித்து வரவேற்போம். இல்லை என்றால் எங்கள் வாக்குகளை நோட்டாவில் பதிவு செய்தாலும் உங்களுக்குத் தரமாட்டோம் என முகத்தில் அடித்தால் போல் துணிந்து கூறிவிடுங்கள். அப்போதாவது அவர்களுக்குப் புத்தி வருகிறதா? என்று பார்ப் போம்! அவர்கள் உங்கள் நலனுக்காக உங்களிடம் வரவில்லை. அவர்களின் அற்ப உலகியல் ஆதாயங் களைக் குறிக்கோளாகக் கொண்டு உங்களை நாடி வருகிறார்கள். எனவே அவர்களை நம்பி மோசம் போகாதீர்கள். இப்படிப் பிளவுபட்டக் கட்சிகளால் உங்களுக்கோ, சமுதாயத்திற்கோ அணுவளவும் பலன் ஏற்படப்போவதில்லை. மேலும் மேலும் கேட்டைத்தான் சந்திப்பீர்கள். எச்சரிக்கை! அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆங்கில மருத்துவத்தின் அவலம் பாரீர்!

நவீன மருத்துவம் பற்றி பத்மபூஷன் டாக்டர் பி.எம்.யஹக்டே

நவீன மருத்துவத்தின் பக்க விளைவுகளையும், தீமைகளையும் வேறு துறையைச் சார்ந்த யாராவது எடுத்துச் சொன்னால் நாம் என்ன செய்வோம்?

1. ஒரு காதால் வாங்கி இன்னொரு காது வழியே விட்டுவிடுவோம்.

2. விஷயம் தெரியாமல் ஏதோ கூறுகிறார் என்று அலட்சியப்படுத்தி விடுவோம்.

3. பாவம், எந்த அரைகுறை மருத்துவரிடம் மாட்டிக்கொண்டு அவதிப்பட்டாரோ என்று பரிதாபம் தெரிவிப்போம். ஆனால், அப்படி வி­யங்களைப் “”புட்டுப் புட்டு வைத்தவர்” சாதாரண மனிதரல்ல. முன்னால் மணிபால் பல்கலைக்கழகத் துணை வேந்தர். இங்கிலாந்தின் மிடில்ப்ஸக்ஸ் மருத்துவமனையில் இதய நோய்ப் பிரிவுப் பேராசிரியர். முதலமைச்சர்கள் உட்பட பல வி.ஐ.பி.க்களுக்கு மருத்துவ ஆலோசகர், பீகார் மாநில சுகாதார மருத்துவக் குழுவின் தலைவர். “”ஜர்னல் ஆஃப் சயன்ஸ் அன்ட் ஹீலிங்” இதழில் முதன்மை ஆசிரியர். மருத்துவ சேவைக்காக இந்த ஆண்டு “”பத்மபூஷன்” விருது பெற்றவர் டாக்டர் பி.எம்.யஹக்டே.

கசப்பு மருந்தைச் சர்க்கரையில் தோய்த்துக் கொடுப்பது போல அவர் இதய பைபாஸ் சர்ஜரியையும், பிற தேவையற்ற அறுவைச் சிகிச்சை களையும் பற்றிச் சிரிக்கச் சிரிக்க உரையாற்றினார். நம் உடலிலேயே சில மாற்றங்கள் இயற்கையாக உண்டாகி, சில கோளாறுகளைத் தானாகவே சரிசெய்து கொள்கிறது என்றார்.

மருத்துவர்கள் ஸ்ட்ரைக் செய்த காலத்தில், இறப்பு விகிதம் மிகக் குறைவாகவே இருந்ததையும், அவர்கள் முழுமூச்சோடு பணியில் ஈடுபட்டபோது இறப்புகள் விகிதம் ஜிவ்வென்று அதிகரித்ததாகவும் புள்ளி விவரங்களுடன் அவர் குறிப்பிட்டபோது சிரிப்பலை எழுந்தது.

ஹோமியோபதி மருந்துகளின் தன்மையை சிலாகித்துப் பேசினார். சில சித்த மருத்துவ முறைகளும் நீண்ட நாள் நோய்களிலிருந்து விடுதலை பெற்றுத் தந்திருப்பதைச் சுட்டிக் காட்டினார். பிரணாயாமம், தியானம் முதலியவை எவ்வாறு மனிதர்களின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவுகின்றன என்று விளக்கினார். மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிர்ப்பந்தம் காரணமாக மருத்துவர்கள் சில மருந்துகளை பிரிஸ்கிரிப்­னில் எழுதி விடுவதும், அதன் தீவிர விளைவுகள் மக்களைப் பாதிப் பதையும் எடுத்துச் சொன்னார் டாக்டர் யஹக்டே.

அவரை அறிமுகம் செய்து வைத்துப் பேசியவர், சர்க்கரை நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் சி.வி.கிருஷ்ணசாமி) பிழைக்க வாய்ப்பு இல்லாத நோயாளிகளை எப்படி மெ´ன்களில் பிணைத்து, வாட்டி வதைத்த பின், எங்களால் முடிந்தவரை பார்த்து விட்டோம்! என்று “”பில்”லோடு ஆசாமியை ஒப்படைப்பதை நாடகம் போல விவரித்தார் டாக்டர் யஹக்டே. பீஹார் முதல்வர் நிதீஷ்குமாரின் மனைவிக்கு இப்படிப்பட்ட கதி நேர்ந்ததையும் “”யஹக்டே சொன்னதைக் கேட்காமல் போனது தவறு” என்று அவர் வருந்தியதையும் குறிப்பிட்டார் டாக்டர் யஹக்டே.

னத்தில் உள்ள வெறுப்புகளை அகற்றினாலே பாதி நோய் பறந்துவிடும் என்றார். பாஸிட்டிவ் நினைப்புகள் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என வலியுறுத்தினார். சொற் பொழிவை வி.எச்.எஸ். மையமும், டேக் மையமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.   

ன்றி : இந்தக் கட்டுரை நண்பர் ACU Healer மோகன்ராஜ் அவர்கள் ஷேர் செய்தது. Balasubramanian Sangam Marunthagam  அவர்கள் பக்கத்தில் இருந்து. (தினமணி ஞாயிறு கொண்டாட்டம்: 21.02.2010) (டாக்டர் பி.எம்.யஹக்டே பற்றி மேலும் அறிய…. http://bmhegde.com/)

மறைவான இணைவைப்பு (ரியா)

அபூ ஹஸினா

நம்முடைய வாழ்வில் பல்வேறு வணக்க வழிபாடுகளும், தீமைகள் நம்மை தீண்டா மலும் இருக்க பல்வேறு எச்சரிக்கை உணர்வுடன் இருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் இணைவைப்பில் சிக்கியவன் நரகம் செல்வான் என்பது உறுதி. மறைவான இணை வைப்பு (ரியா) என்பது படைப்புகளின் திருப்தியைப் பெறுவதற்குப் படைத்தவனின் மார்க்க வழிபாடுகளைச் செய்வது.

உதாரணமாக இவரிடம் யாராவது மார்க்கம் சம்பந்தமாக கேள்விக் கேட்டால் கேள்வி கேட்டவர் கேள்வியை முடிப்பதற்கு முன்பே பதிலை சட்டென (உடனடியாக) தருவார். அதுவும் அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிலாகவும் அமையும் என்று மக்களில் பலர் பேசிக்கொள்வது உண்டு. இதுவும் ரியாவாகவே அமையும். (காரணம் மனிதர்களை திருப்திப் படுத்தினார்கள்)

இன்னொரு உதாரணம் தன்னுடைய அறிவு ஆற்றலை எழுத்து, பேச்சு, விவாதம் மூலமாக தான் சிறந்த அறிஞன் என்று மக்களால் புகழப்பட வேண்டும் என்று செய்திருந்தால் மக்களிடம் சம்பந்தப்பட்ட அறிஞர் பாராட்டுகளைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அல்லாஹ் விடம் அவருடைய மதிப்பு(?) என்னவாகும்?

எந்த அமலும் இறைவனின் பொருத்தத்திற்காகவே மட்டுமே செயல்படுத்தவும், இறைத் தூதர்(ஸல்) காட்டிய வழியில் என்ற இரு நியதி களின் அடிப்படையில் செயல்படுத்தினால் ரியா என்ற கொடூர இணைவைப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

ஷிர்க், மத்ஹப், இயக்கம் போன்ற அநீதங்களிலிருந்து தப்பித்த அடியான் ரியாவில் மாட்டி விடக்கூடாது என்பதுதான் இந்த ஆக்கத்தின் நோக்கம். ஷைத்தான் நம்மை வீழ்த்த (3:103-110) ஜமாஅத் அல்முஸ்லிமீனிலுள்ளவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். நாம் அல்லாஹ்விற்காகவே உள்ளங்களால் சகோதர்க ளாகி விட்டோம். இறைத்தூதர் கட்டளை இட்ட ஜமாஅத் என்ற காரணத்தாலும், அல்லாஹ் (3:103-110) சொன்ன ஜமாஅத் என்பதாலும் எந்த மனிதருடைய திருப்தியையும் பெறுவதற்காக அல்ல என்பதை உணர்ந்து ஜமாஅத் பணிகளில் தங்களுடைய பொறுப்புகளை செய்ய முஸ்லிமான ஆண்களும், பெண்களும் முன்வாருங்கள். நாம் கருத்து வேறுபட்டுக் கொண்டே இருந்தால் அல்லாஹ்வின் கூற்றுப்படி நாம் கோழைகளாகி விடுவோம். கருத்து வேறுபாடு வந்தால் அமீருக்கு கட்டுப்படுதல் என்ற முடிவில் ஒற்றுமைப்பட வேண்டும். (அந்நஜாத்தை கண்மூடித்தனமாக ஏற்காமல் இருக்கவும்).

ஒரு முஸ்லிமின் பண்பு பிறர் செய்யும் தவறு களைப் பொறுத்து அலட்சியம் செய்து அவர் களை மன்னித்து விடுவதுதான் நமக்கு குர்ஆன் இடும் கட்டளை. பிறருடைய குறைகளை துருவி துருவி ஆராய வேண்டாம். அவ்வாறு செய்தால் நாம் வழிகெட்டு விடுவோம்.

ரியா சம்பந்தப்பட்ட குர்ஆன், ஹதீஃத்கள் கீழே இடம் பெற்றுள்ளன:

ஷைத்தான் உங்களுக்கு எதிரியாவான். அவனை எதிரியாகவே கருதுங்கள்! நரகவாசிகளாக ஆவதற்காகவே அவன் தனது கூட்டத் தாரை அழைக்கின்றான்.
அல்குர்ஆன் : 35:6

நீ என்னை வழிகெடுத்ததால் அவர்களுக்காக உனது நேரான பாதையில் அமர்ந்து கொள் வேன். பின்னர் முன்னும், பின்னும், வலமும், இடமும் அவர்களிடம் வருவேன். அவர்களில் அதிகமானோரை நன்றி செலுத்துவோராக நீ காணமாட்டாய் என ஷைத்தான் கூறினான். அல்குர்ஆன் : 7:16,17

நல்லவற்றில் நீங்கள் எதை செலவிட்டாலும் அது உங்களுக்குத்தான். அல்லாஹ்வின் திருப்தியை பெறவே செலவிடுகிறீர்கள். நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்பட மாட்டீர்கள். அல்குர்ஆன்: 2:272

உங்களில் அழகிய செயலுக்குரியவர் யார் என்பதைச் சோதிப்பதற்காக மரணத்தையும், வாழ்வையும் அவன் படைத்தான். அவன் மிகைத்தோன், மன்னிப்போன். அல்குர்ஆன் : 67:2

அவனின் நேசத்திற்காக ஏழைக்கும், அனாதைக்கும், கைதிக்கும் உணவளிப்பார்கள். அல்லாஹ்வின் திருப்திக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து நன்றியையோ, பிரதிபலனையோ நாங்கள் எதிர்பார்க் கவில்லை (எனக் கூறுவார்கள்). அல்குர்ஆன்: 76:8,9

நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும்போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். அல் லாஹ்வை குறைவாகவே நினைவு கூர்கின்றனர். அல்குர்ஆன்: 4:142

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செல்விடுபவனைப் போல், உங்கள் தர்மங்களை சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கிவிடாதீர்கள். அல்குர்ஆன்: 2:264

நபி(ஸல்) கூறினார்கள். அல்லாஹ்விற்காக என்ற நோக்கத்துடன் மட்டும் பெறவேண்டிய அறிவை இவ்வுலகில் அதனால் பயன் கிடைக்கட்டும் என்ற நோக்கத்தில் ஒருவர், கற்போரானால், அவர் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தின் வாடையைக் கூட நுகர மாட்டார் (இன்றைய ஆலிம்கள் என்று கூறுவோர் திரும்ப திரும்ப இதைப் படிக்கட்டும்) (நூல்:அபூதாவூத், இப்னு மாஜா)

நபி(ஸல்) கூறினார்கள். அறிஞர்களுடன் போட்டி போடவேண்டும் என்பதற்காக அறிவைப் பெறாதீர்கள். இதேபோல் சாதாரண பாமரனுடன் விவாதம் செய்வதற்காகவும், கூட்டங்களைக் கவருவதற்காகவும், கவர்ச்சியாக்குவதற்காகவும் அறிவைப் பெறாதீர்கள். எவரொருவர் இதனைச் செய்கிறாரோ அவர் நெருப்பிற்காக காத்திருக்கட்டும். நூல் : சுனன் இப்னு மாஜா

நபி(ஸல்) கூறினார்கள். பலவீனமான, எளிமையான அதன் உறுப்பினர்களினால் இந்த சமுதாயத்திற்கு (அல்லாஹ்விடமிருந்து) உதவி கிடைக்கின்றது. அவர்களின் பிரார்த்தனைகள், அவர்களது தொழுகைகள் மற்றும் அவர்களது உள்ளத்தூய்மையே இதற்குக் காரணம். நூல்: அத் தர்கீப் வத் தர்ஹீப், சுனன் அத் திர்மிதீ.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் தண்டனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று (நபியே!) நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை உள்ளது. அல்குர்ஆன் : 3:188

அபூ மூஸா(ரழி) அறிவிக்கின்றார்கள். ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து ஒரு மனிதன் (பிறர் தன்னைக் குறை சொல்வதை தவிர்ப்பதற்காக) தனது கண்ணியத்தைத் தற்காத்துக் கொள்வதற்காகப் போராடுகிறார். இன்னொருவர் தனது துணிச்சலை (அதற்காக பாராட்டப்பட வேண்டுமென்பதற்காக) நிரூபிப்பதற்காகப் போராடுகிறார். மூன்றாமவர் (தனது அந்தஸ்தைப் பிறர் அறிய வேண்டுமென்பதற்காகப்) போராடுகிறார். இந்த மூவரில் அல்லாஹ்வின் பாதையில் போராடுபவர் யார்? என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். எவர் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கி வைக்க போராடுகிறாரோ அவர்தான் அல் லாஹ்வின் பாதையில் போராடுபவர் ஆவார். நூல்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத்

அபூ மூஸா அல்அஷ்அரி(ரழி) அறிவிக்கிறார்கள்.

ஒரு நாள் எங்கள் மத்தியில் இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். அப் போது, அவர்கள் மறைவான இணைவைப்பு குறித்து அச்சம் கொள்ளுங்கள். ஏனெனில் அது எறும்பு ஊர்ந்து செல்வதை விட கண்ணுக்குப் புலப்படாத வகையில் அமைந்துள்ளது என்று கூறினார்கள். அப்போது ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! எறும்பு ஊர்வதை விட மறைவாக இருக்கும் அதனை நாங்கள் எப்படி தவிர்த்துக் கொள்ள முடியும்? என்றார். அதற்கு நபி அவர்கள் அல்லாஹ்வே நாங்கள் அறியாது செய்யும் இணைவைப்பிலிருந்தும் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறோம் என்று துஆ செய்யச் சொன்னார்கள். நூல் : அஹ்மத்.

குர்ஆன் பார்வையில்….

சாபத்திற்குரியவர்கள்!

எஸ்.சைபுதீன், மதுரை செல்: 9110030280

இறைவனின் சாபத்திற்குரிய காரியங்களைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருப்பது முஸ்லிம்கள் அனைவர் மீதும் கட்டாயமாகும். சாபத்திற்குரிய காரியங்கள் எவை? என்பதை விளக்குகிறது இத்தொகுப்பு.

* சாபத்தைக் குறித்த குர்ஆன் வசனங்கள்

* சபிப்பதைத் தடை செய்யும் நபி மொழிகள்

* யாரைச் சபிக்கலாம்? யாரைச் சபிக்கக்கூடாது?

சாபத்திற்குரியவர்கள்

1. இணை வைத்தல் மற்றும் அதனைச் சார்ந்த செயல்களைச் செய்பவர்கள்.

2. விதியைப் பொய்ப்பிக்கக் கூடியவர்கள்

3. புனித பூமிகளான மக்கா, மதீனா போன்ற இடங்களில் கலகம் செய்பவனுக்கும், அனாச் சாரங்கள் செய்பவனுக்கும் அடைக்கலம் தருபவர்கள்.

4. மக்கள் நடமாடும் பாதை போன்ற பொது இடங்களை அசுத்தப்படுத்துபவர்கள்.

5. மார்க்கக் கடமைகளைத் தட்டிக் கழிக்கத் தந்தி ரங்களைக் கையாள்பவர்கள்.

6. பிராணிகளின் அங்கங்களைச் சிதைப்பவர்கள்.

7. ஆண்களைப் போல் நடக்கும் பெண்கள், பெண் களைப் போல் நடக்கும் ஆண்கள்.

8. இறைவனின் இயல்பான படைப்பில் மாற்றம் செய்பவர்கள்.

9. பிறர் செல்வத்தை அபகரிப்பவர்கள்.

10. உலகப் பேராசை

11. நபி தோழர்களை விமர்சிப்பவர்கள்.

12. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்பவர்கள்.

13. கணவனின் கடமைகளை நிறைவேற்றத் தவறும் மனைவி.

14. மண்ணறைகளுக்குச் செல்லும் பெண்கள், ஒப்பாரி வைத்து அழும் பெண்கள்.

15. மது அருந்துபவர்களும், அதை ஆதரிப்பவர்க ளும், அதற்குத் துணை நிற்பவர்களும்.

சாபத்தைக் குறித்த குர்ஆன் வசனங்கள் :

* நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் நெறிநூலில் மனிதர்களுக்காக விளக்கிய பின்னரும், யார் மறைக்கின்றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும் அவர்களைச் சபிப்பதற்கு உரிமை உடையவர்களும் சபிக்கிறார்கள்.

* எவர்கள் பாவமன்னிப்புத் தேடி (தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவுபடுத்திக் கொண்டார்களோ, அவர்களைத் தவிர; மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும், கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்.

* யார் நெறிநூல் (உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.

* அவர்கள் அ(ச்சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள். அவர்களுடைய வேதனை இலே சாக்கப்படமாட்டாது. மேலும், (மன்னிப்புக் கோர) அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது. அல்குர்ஆன் : 2:159-162

* இஸ்ராயீலின் சந்ததிகளிலிருந்து காஃபிராகி விட்டவர்கள் தாவூது, மர்யமின் குமாரர் ஈஸா ஆகிய இவர்களின் நாவால் சபிக்கப்பட்டுள்ள னர். ஏனென்றால் அவர்கள் (இறைவனின் கட்ட ளைக்கு)மாறு செய்து கொண்டும், வரம்பு மீறி நடந்து கொண்டும் இருந்தார்கள்.

* இன்னும் தாம் செய்து கொண்டிருந்த தீய காரியங்களை விட்டு ஒருவரையயாருவர் தடுப்போராகவும் அவர்கள் இருக்கவில்லை. அவர்கள் செய்து கொண்டிருந்தவையயல்லாம் நிச்சயமாக மிகவும் தீயவையாகும். அல்குர்ஆன்:5:78,79

* அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனையைச் சொல்பவனை விடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள் என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள். இத் தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அல்குர்ஆன் :11:18

* எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறு தியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகி றார்களோ இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார் களோ பூமியில் ஃபஸாது(வி­மம்) செய்கிறார் களோ அத்தகையோருக்குச் சாபந்தான். அவர் களுக்கு மிகக் கெட்ட வீடும் இருக்கிறது. அல்குர்ஆன் : 13:25

* எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு காட்சிகள் இல்லாமலிருந்தால் அவர்கள், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி

* ஐந்தாவது முறை, (இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும் என்றும் (அவன் கூற வேண்டும்). அல்குர்ஆன்: 24:6,7

* எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதைப் பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு. அல்குர்ஆன்:24:23

* மேலும், (மக்களை நரக) நெருப்பிற்கு அழைத்துச் செல்லும் தலைவர்களாகவே நாம் அவர் களை ஆக்கியிருந்தோம். இன்னும், கியாம நாளன்று அவர்கள் உதவி செய்யப்பட மாட்டார்கள்.

* இன்னும், இவ்வுலகில் அவர்களைச் சாபம் தொடருமாறு நாம் செய்தோம். கியாம நாளில் அவர்கள் இகழப்பட்டவர்களாகவே இருப்பார்கள். அல்குர்ஆன் : 28:41,42

* எவர்கள் அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நோவினை செய்கிறார்களோ, அவர் களை நிச்சயமாக அல்லாஹ் இம்மையிலும், மறுமையிலும் சபிக்கின்றான். மேலும் அவர் களுக்கு இழிவுதரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றான். அல்குர்ஆன்:33:57

* முனாஃபிக்குகளும், தங்கள் இதயங்களில் நோய் உள்ளவர்களும், மதீனாவில் பொய்ப்பிரச்சாரம் செய்து கொண்டிருப்பவர்களும் (தம் தீயச் செயல்களிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால், அவர்களுக்கு எதிராக (நடவடிக்கைகள் எடுப்பதை) உம்மிடம் நிச்சயமாகச் சாட்டுவோம். பிறகு அவர்கள் வெகு சொற்ப(கால) மேயன்றி அங்கு உமது அண்டை அயலார்களாக (வசித்திருக்க) மாட்டார்கள்.

* அ(த்தகைய தீ)வர்கள் சபிக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் எங்கே காணப்பட்டாலும் பிடிக்கப்படுவார்கள்; இன்னும் கொன்றொழிக் கப்படுவார்கள். அல்குர்ஆன்: 33:60,61

* (போருக்கு வராது) நீங்கள் பின்வாங்குவீர்க ளாயின், நீங்கள் பூமியில் குழப்பம் உண்டாக்கி உங்கள் சுற்றத்தாரை (அவர்களுடன் கலந்து உறவாடு வதிலிருந்தும்) துண்டித்து விடவும் முனைவீர்களோ?

* இத்தகையோரைத் தாம் அல்லாஹ் சபித்து இவர் களைச் செவிடாக்கி இவர்கள் பார்வைகளையும் குருடாக்கி விட்டான். அல்குர்ஆன்: 47:22,23

சபிப்பதைத் தடை செய்யும் நபிமொழிகள்:

பொதுவாகவே, யாரையும் சபிப்பது கூடாது. அதிலும் குறிப்பாக ஒரு முஸ்லிம் பிறரை வாழ்த் துபவனாகத்தான் இருக்க வேண்டுமே தவிர சபிப்பவனாக ஒருபோதும் இருக்கக் கூடாது.

அல்லாஹ்வின் சாபம் உம்மீது உண்டாகுக! என்றோ அல்லாஹ்வுடைய கோபம் உம்மீது உண்டாகுக! என்றோ, நீர் நரகத்திற்குச் செல்க! என்றோ நீங்கள் ஒருவர் மற்றவரை ஏசாதீர்கள். என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜூன்துப்(ரழி), நூற்கள்: அபூதாவூத், திர்மிதி : 2070.

அல்லாஹ்வின் தூதரே! இணை வைப்பவர் களுக்குக் கேடு விளைவிக்குமாறு அல்லாஹ் விடம் இறைஞ்சி அவர்களைச் சபியுங்கள்! என்று கூறப்பட்டதற்கு நிச்சயமாக நான் அருளாகவே அனுப்பப்பட்டுள்ளேன்; சபிப்பவ னாக அனுப்பப்படவில்லை என்று கூறினார்கள். அறிவிப்பாளர்:அபூஹுரைரா(ரழி), நூல்: முஸ்லிம் : 2071.

ஏசிக்கொள்ளும் இருவரின் ஏச்சின் பாவம் முதலில் ஏசத் துவங்கினாரே அவர் மீது ஏற் படும். ஆனால் அநியாயத்திற்குள்ளானவர் அளவு மீறாதிருக்கும் வரையில் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி) நூற்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி : 2073.

மனிதர்களை மட்டுமல்ல மிருகங்களையும் பிராணிகளையும் கூட சபிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஒரு பிரயாணத்தில் இருந்தபோது அன்ஸார்களில் ஒரு பெண்ணின் ஒட்டகம் ஒன்றின் மீது அமர்ந்திருந்தார். அந்த ஒட்டகம் முரண்டு பிடித்தபோது அப்பெண் அ(ந்த ஒட்டகத்)தைச் சபித் தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அதன் மீதுள்ளவற்றை அகற்றி விட்டு அதை விட்டுவிடுங்கள்; அது சாபத்திற்குள்ளானதாகும் என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரழி) நூல்: முஸ்லிம்: 5058.

அப்படியானால் முரண்டு பிடிக்கின்ற மாடு போன்றவைகள் சபிக்கப்பட்டவைகளா? என்றால், அந்த அர்த்தம் இல்லை. மாறாக, அந்த பெண்ணுக்குத்தான் அது தண்டனை. அவளுடைய கூட்டத்தாரோடு அவள் தாமதமாகப் போய் சேர்ந்தாள். இது அந்த பெண்ணுக்குத் தான் தண்டனை; ஏனெனில் பிராணிகளைச் சபிக்கக் கூடாது என்று ஏற்கனவே தடை செய்யப்பட்டதைத் தெரிந்திருந்தும் அந்தப் பெண் மணி சபித்தாள். விட்டுவிடு என்று சொன்னதிலிருந்து அவள் விட்டுவிட வேண்டும். மற்ற வர்கள் வந்து அதை ஓட்டிக்கொண்டு சென்று விடலாம் என்று பொருளல்ல. மாறாக, பிறகு வந்து ஓட்டிக்கொள்ள வேண்டும் என்று பொருளாகும்.

யாரைச் சபிக்கலாம்? யாரைச் சபிக்கக் கூடாது?

1. ஒரு முஸ்லிமை குறிப்பிட்டுச் சபிப்பது, இது ஹராமாகும். எந்த ஒரு முஸ்லிமையும் சபிப்பது கூடவே கூடாது.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தின் மீது சத்தியம் செய்கிறவர். தாம் சொன்னதைப் போன்றே ஆகிவிடுகிறார். தனக்கு உடைமையில்லாத ஒன் றில் நேர்ச்சை செய்வதும், அந்த நேர்ச்சையை நிறைவேற்றுவதும் எந்த மனிதனுக்கும் தகாது. எதன் மூலம் தம்மைத் தாமே தற்கொலை செய்து கொள்ளும் ஒருவர் அதன் மூலம் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். ஓர் இறை நம்பிக்கையாளரை ஒருவர் சபிப்பது அவரைக் கொலை செய்வது போன்றதாகும். இறை நம்பிக்கையாளர் ஒருவரை இறை மறுப்பாளர் என்று அவதூறு சொல்வதும் அவரைக் கொலை செய்வது போன்றதேயாகும்.

இதை அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிமொழி அளித்தவர்களில் ஒருவரான ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : புகாரி : 6047

2. குறிப்பிட்டக் குணங்களை அடிப்படையாகக் கொண்டு சபிப்பது உதாரணமாக : அநியாயக்காரர்கள், பொய்யர்கள், பாவிகள், மார்க்கத்தில் புதிய விஷயங்களைத் தோற்றுவிப்பவர்கள் இவர்களை சபிப்பது அறிஞர்களின் ஏகோபித்த முடிவின்படி கூடும் என்று ஹைஸமீ(ரஹ்) இப்னு ஹஜர்(ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்.

அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) இறுதி நெறிநூல் அவர்களிடம் வந்தது. இ(ந்த குர்ஆன் வருவ)தற்கு முன் காஃபிர்களை வெற்றி கொள்வதற்காக(இந்த குர்ஆன் மூலமே அல்லாஹ்விடம்) வேண்டிக் கொண்டிருந்தார்கள். (இவ்வாறு முன்பே) அவர்கள் அறிந்து வைத்திருந்த(நெறிநூல்)து அவர்களிடம் வந்தபோது, அதை நிராகரிக்கின்றார்கள். இப்படி நிராகரிப்போர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது) அல்குர்ஆன் : 2:89.

(நபியே!) இது பற்றிய முழு விபரமும் உமக்கு வந்து சேர்ந்த பின்னரும் எவரேனும் ஒருவர் உம்மிடம் இதைக் குறித்து தர்க்கம் செய்தால், வாருங்கள்! எங்கள் புதல்வர்களையும், உங்கள் புதல்வர்களையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும், எங்களையும், உங்க ளையும் அழைத்து (ஒன்று திரட்டி வைத்துக் கொண்டு) பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று நாம் பிரார்த் திப்போம்! என நீர் கூறும். அல்குர்ஆன் : 3:61

அல்லாஹ்வின் மீது பொய்யான கற்பனைச் சொல்பவனைவிடப் பெரும் அநியாயக்காரன் யார்? அத்தகையோர் (மறுமையில்) தங்கள் இறைவன் முன் நிறுத்தப்படுவார்கள். இவர்கள் தாம் தங்கள் இறைவன் மீது பொய் கூறியவர்கள் என்று சாட்சி கூறுவோர் சொல்வார்கள், இத்தகைய அநியாயக்காரர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். அல்குர்ஆன் : 11:18.

எவர்கள் அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை உறுதிப்படுத்திய பின்னர் முறித்து விடுகிறார்களோ இன்னும், அல்லாஹ் சேர்த்து வைக்க வேண்டுமென ஏவியதைப் பிரித்து விடுகிறார்களோ பூமியில் ஃபஸாது (வி­மம்) செய்கிறார்களோ, அத்தகையோருக்குச் சாபந்தான், அவர்களுக்கு மிகக் கெட்ட வீடும் இருக்கிறது. அல்குர்ஆன்:13:25

3. இறை மறுப்பாளர்களில் குறிப்பிட்டு சபிப்பது இதைக் குறித்த மூன்று வகையான கருத்துக்கள் உள்ளன.

அ. இறை நிராகரிப்பாகவே வாழ்ந்தார். ஆனால், இறப்பு எப்படி இருந்தது? என்று தெரியாது என்றால், அவர் காஃபிராக மரணித்திருந்தால் அவர் மீது சாபம் உண்டாகட்டும்! என்று வரையறுத்துக் கூறவேண்டும். அதாவது அவரது மரணம் இறை மறுப்பிலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். இஸ்லாத்தையும் முஸ்லிம் களையும் இழித்தும், பழித்தும் கவிதை இயற்றிக் கொண்டிருந்த ஒரு கிறிஸ்தவனைக் குறித்துக் கூறுகையில், அவன் காஃபிராக மரணித் திருந்தால் அவன் மீது சாபம் உண்டாகட்டும்! என்று கூறியதோடு அவன் இயற்றிய கவிதைகளையும் இப்னு கஸீர்(ரஹ்) அவர்கள் தங்களது வரலாற்று நூலான அல்பிதாயா வந்நிஹாயாவில் பதிவு செய்துள்ளார்.

இ. இறை மறுப்பாளர்களில் குறிப்பிட்ட நபரைச் சபிப்பது அதாவது அவர் வாழ்கின்ற காலத்திலேயே அவரை சபிப்பது, இது கூடுமா? கூடாது என்பதே பெரும்பாலானவர்களின் கருத்து.

அபூ ஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்.

இறைத் தூதர்(ஸல்) அவர்கள் (தொழுகை யில்) எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் ருகூவுக்குப் பிறகு குனூத் (எனும் சிறப்பு துஆ) ஓதுவார்கள். சில வேளை சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ். அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று சொன்ன பின்பு இறைவா! வலீத் இப்னு வலீத் ஸலமா இப்னு ஹிஷாம் மற்றும் அய்யாஷ் இப்னு அபீ ரபீஆ ஆகியோரைக் காப்பாற்றுவாயாக! இறைவா! முளர் குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! (இறைத்தூதர்) யூசுப் (அலை) அவர்களின் சமுதாயத்தாருக்கு அளித்த பஞ்சம் நிறைந்த ஆண்டுகளைப் போல் அவர்களுக்கு அளிப்பாயாக! என்று பிரார்த்திப்பார்கள். அதைச் சப்தமாகச் சொல்வார்கள். தம் ஃபஜ்ரு தொழுகைகள் சிலவற்றில், இறைவா! இன்னார், இன்னாரை உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக என்று சில அரபுக் குலங்களைக் குறிப்பிட்டுப் பிரார்த்திப்பார்கள். அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப் பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உமக்கு எந்த உரிமையும் இல்லை எனும் (திருக்குர்ஆன் 3:128வது) வசனத்தை அருளும் வரை இப்படிப் பிரார்த்தித்து வந்தார்கள். புகாரி:804,1006,3386,4560

இந்த நபிவழியை வைத்து உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இறைமறுப்பாளர்கள் எவரையும் குறிப்பிட்டுச் சபிப்பது தடை செய்யப்பட்டுள்ளது என்று ஹதீஃத் சட்டக் கலை வல்லுநர்கள் கூறுகின்றனர்.

4. தவறு செய்துவிட்ட குற்றமிழைத்துவிட்ட முஸ்லிமைச் சபிக்கலாமா?

உமர் இப்னு அல்கத்தாப்(ரழி) அறிவிக்கிறார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார்(கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் இறைத் தூதர்(ஸல்) அவர்களைச் சிரிக்க வைப்பார். மது அருந்தியதற்காக அவரை நபி(ஸல்) அவர்கள் அடித்துள்ளார்கள். (போதையிலிருந்த) அவர் ஒரு நாள் (நபி(ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார். அவரை அடிக்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவர் அடிக்கப்பட்டார். அப்போது (அங்கிருந்த) மக்களில் ஒரு வர் இறைவா! இவர் மீது உன் சாபம் ஏற்படட்டும். இவர் (குடித்ததற்காக) எத்தனை முறை கொண்டுவரப்பட்டுள்ளார் என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள், இவரை சபிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் மீதாணையாக! இவர் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறார் என்றே நான் அறிந்துள்ளேன் என்று கூறினார்கள். நூல்: புகாரி: 6780 அபூ ஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள்: போதையிலிருந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டார். அப்போது அவர்கள் அவரை அடிக்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, எங்களில் சிலர் அவரைக் கையால் அடித்தார்கள். இன்னும் சிலர் காலணியால் அடித்தார்கள். மற்றும் சிலர் (முறுக்கேற்றப்பட்ட) துணியால் அடித்தார்கள். (தண்டனை முடிந்து) அவர் திரும்பிய போது ஒருவர் (அவரைப்பார்த்து), அவருக்கென்ன நேர்ந்தது? அல்லாஹ் அவரைக் கேவலப்படுத்தட்டும் என்றார். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், உங்கள் சகோதரருக்கு எதிராக ஷைத்தானுக்கு ஒத்துழைப்புச் செய்து விடாதீர்கள் என்றார்கள். நூல்:புகாரி: 6781

இவை ஒரு முஸ்லிம் பாவமே செய்து விட் டாலும் அவனைச் சபிக்கக் கூடாது என்பதைத் திட்டவட்டமாக அறிவிக்கின்றன. பின்வரும் இந்த ஹதீஃதை வைத்து இப்னு ஹஜர்(ரஹ்) போன்ற சிலர், முஸ்லிம்களில் பாவம் செய்துவிட்டவர்களை சபிக்க அனுமதி உண்டு என்கின்றனர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர். அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா(ரழி), நூல்: புகாரி :5194.

எனினும் இப்னு தைமிய்யா(ரஹ்) போன்றவர்கள் பாவம் செய்துவிட்ட முஸ்லிமைச் சபிப்பதற்கு அனுமதியளிப்பதாக இந்த ஹதீஃதை ஆதாரமாகக் கொள்ள முடியாது. மேலும், தக்கக் காரணமின்றி இறை மறுப்பாளர்களையே சபிக்கக் கூடாது எனும்போது முஸ்லிமை எந்த வகையிலும் சபிப்பதற்கு அனுமதியே இல்லை என்பது தான் சரி என்று கூறுகிறார்கள்.

1. இணை வைத்தலும் அதைச் சார்ந்த செயல்களும்

அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கி றான்; பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கிறான்; தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கிறான்; (மார்க்கத்தின் பெயரால்) புதுமையை (பித்அத்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கிறான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் :அலீ(ரழி) நூல்:முஸ்லிம்: 4002,4003

இந்த ஹதீஃதில் நான்கு நபர்கள் சபிக்கப்பட்டுள்ளார்கள்.

1. அல்லாஹ் அல்லாதவர்களுக்காக அறுத்து பலியிடுபவர். அதாவது சிலை, சிலுவை, சமாதி போன்றவைகளுக்காகவோ அல்லது ஆதம் (அலை) நூஹ் (அலை) இப்ராஹீம்(அலை) மூஸா(அலை) போன்ற இறைத்தூதர்களின் பெயராலோ அல்லது அவர்களது அடக்கத் தலங்களிலோ அறுத்துப் பலியிடுதல் அல்லது ஸஹாபாக்கள், பெரியார்கள் மகான்களின் அவுலியாக்களின் நினைவாகவோ அவர்களின் அடக்கத்தலத்திற்கோ சென்று அறுத்துப் பலியிடுதல் இப்படிப்பட்ட அனைத்துமே அல்லாஹ் அல்லாதவற்றுக்காக அறுத்துப் பலியிடுதல் என்பதிலேயே சேரும். இவையனைத்தும் இணை வைத்தலாகும், இணை வைத்தல் சாபத்திற்குரிய செயலாகும்.

தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள்மீது ஹராமாக ஆக்கியிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில், வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர்மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணை மிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். அல்குர்ஆன் : 2:173.

2. பெற்றோரை சபிப்பவன், இவனும் அல்லாஹ்வுடைய சாபத்திற்கு ஆளாகிறான். பெற்றோரை சபிப்பது இன்றைய காலத்தில் வேண்டுமானால் எங்காவது பார்க்கலாம். ஆனால், நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் இது ஆச்சரியமானதாகத் தெரிந்தது. அல்லாஹ்வின் தூதரே! பிள்ளைகள் பெற்றோரை சபிப்பார்களா? என்றெல்லாம் ஆச்சரியப்பட்டார்கள்.

ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது இறைத் தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்? என்று கேட்கப்பட்டது.

நபி(ஸல்) அவர்கள், ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும், தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்) என்றார்கள். அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி), நூல்: புகாரி : 5973.

3. பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடுபவன். இவனும் அல்லாஹ்வின் சாபத்திற்குரியவனாகிறான். அடையாளச் சின்னங்கள் என்பது புனித மக்கா மதீனா போன்ற நகரங்களிலுள்ள அடையாளச் சின்னங்கள் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், உலக நிலப் பரப்புக்களில் உள்ள அனைத்து அடையாளச் சின்னங்களையும் இது குறிக்கும். மற்றவருக்குச் சொந்தமான நிலத்தை அபகரித்துக் கொள்ள அவருடைய அடையாளச் சின்னத்தை மாற்றி விடுவது என்பது இதன் பொருளாகும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பிறரின் நிலத்தின் ஒரு பகுதியை அபகரித்தவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார். அறிவிப்பாளர் : ஸயீத் இப்னு ஸைத்(ரழி) நூல் : புகாரி: 2452.

அபூ ஸலமா(ரழி) அறிவிக்கிறார்கள்:

எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா(ரழி) அவர்களிடம் கூறி னேன். அவர்கள் சொன்னார்கள். அபூஸல மாவே! (பிறரின்) நிலத்தை (எடுத்துக் கொள்வ தைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி(ஸல்) அவர்கள், ஓர் அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறவரின் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாக (மறுமையில்) கட்டித் தொங்க விடப்படும் என்று கூறினார்கள். நூல் : புகாரி: 2453. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய்விடுவான். அறிவிப்பாளர் : இப்னு உமர்(ரழி) நூல்: புகாரி: 2454

4. மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளிப்பவன், இவனும் இறைவனின் சாபத்திற்குரியவனே.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நம்முடைய இந்த(மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும். அறிவிப்பாளர் : ஆயிஷா(ரழி), நூல்: புகாரி:2697.

மார்க்கத்தில் இல்லாத புதுமைகளை உருவாக்குபவனல்ல மாறாக, அதற்கு அடைக்கலம் தருபவன் அல்லாஹ்வுடைய சாபத்திற்கு ஆளாகிறான் என்றால் அதை உருவாக்குபவனுடைய கதி என்ன என்பதை யோசிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். (மறுமையில்) என் தோழர்களில் சிலர் (அல்கவ் ஸர்) தடாகத்தினருகில் என்னிடம் வருவார்கள். நான் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும்போது என்னை விட்டு அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். அப்போது நான் (இவர்கள்) என் தோழர்களாயிற்றே! என்பேன். அதற்கு இறைவன் உங்களுக்குப் பின்னால் இவர்கள் (புதிது புதிதாக) என்னென்ன உருவாக்கினார்கள் என்பதை நீங்கள் அறியமாட் டீர்கள் என்பான். அறிவிப்பாளர்: அனஸ்(ரழி), நூல்: புகாரி: 6582.

இறந்தவருக்கு அவர் நல்லடியார்(?) என்ற நம்பிக்கை அடிப்படையில் சமாதி எழுப்புவது மயிலிறகால் மந்திரிப்பது அந்த அடக்கத் தலத்தில் சென்று மொட்டை போடுவது பத்தி ஏற்றுவது சந்தனக் கூடு உரூஸ் கொண்டாடுவது நேர்த்திக்கடன் செலுத்துவது இது ஒருவகை. இன்னொரு வகை இறந்தவருக்கு 3ம் நாள் 7ம்நாள் ஃபாத்திஹா வருச ஃபாத்திஹா, நல்லடியார் என்ற நம்பிக்கை இல்லாவிட்டாலும் அவ ருக்கு அடக்கத்தலம் எழுப்புவது அந்த அடக்கத் தலத்தின் மீது பூக்கள் போடுவது. சந்தனம் தெளிப்பது, அதேபோல் பெண் சடங்காகி விட் டால் அதைப் பகிரங்கப்படுத்துவது, அதை நிகழ்ச்சியாகக் கொண்டாடுவது; திருமணம் போன்ற நேரங்களில் மணமகனை மலர்களால் அலங்கரிப்பது சேவல், ஆடு போன்றவற்றால் மணமகனை திருஷ்டி கழிப்பது குதிரை சவாரி செய்வது பைத் பாடியவாறு மணமகனை அழைத்து வருவது திருமணத்தில் கருகமணி கட்டுவது கணவன் இறந்ததும் அதை அறுத்தெறிவது ரஜப் மாதத்தில் பூரியான் பாத்தியா(?) ­அபான் மாதம் அல்வா பாத்தியா ஊருக்கு ஊர் வீட்டுக்கு வீடு தெருவுக்குத் தெரு இப்படி இஸ்லாமிய சமுதாயத்தில் ஊடுருவிவிட்ட நூதன, குர்ஆன், ஹதீஃதில் இல்லாத இஸ்லாம் காட்டித் தராத அனாச்சாரப் பழக்கங்களின் பட்டியல் மிக நீளமானவை. இவற்றைச் செய்து கொண்டிருக்கும் வரை அல்லது அதற்கு ஆதர வளித்துக் கொண்டிருக்கும் வரை அல்லது அவை மார்க்கத்திற்கு முரண்பட்டவை என்று உணராதவரை அவற்றைத் தூக்கியயறிய முன் வராதவரை முஸ்லிம்கள் இறைவனின் சாபத்தில் சிக்கியுள்ளார்கள் என்பதை உணர வேண்டும்.

அடைக்கலம் தருவது என்றால் என்ன?

மார்க்கத்தில் இல்லாத புதுமைகளைச் செயல் படுத்தப்படும் போது அதைக் கண்டும் காணா மலும் இருப்பது, அதைப் பார்த்துப் பொறுமையுடன் இருப்பது. அது தவறு என்பதைச் சுட்டிக் காட்டாமல் இருப்பது. அதற்கு நிதி உதவி மூலம் ஊக்கப்படுத்துவது போன்றவைகள் ஆதரவளிப் பதில் அடங்கும். இன்னும் சிலர் மெளலூது ஓதும் மேற்கண்ட சடங்குகளுக்கு ஊதுகுழலாக இருக்கும் இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது அவருக்கு ஆதரவளிப்பதாகவே அமையும் என்கின்றனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று சடங்கு சம்பிரதாயங்களுக்கு முக்கியத் துவம் தரும் வீடுகளில் பெண் கொடுப்பது, பெண் எடுப்பது போன்றவைகளும் அவர்களுக்கு ஆதரவளிப்பதாகவே அமையும் என்கின்றனர். அவர்கள் செய்யும் தவறுகளைச் சுட்டிக் காட்டுவது மட்டுமே நமது கடமை. அவர்களை முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒதுக்குவது நமது பொறுப்பல்ல (2:272) அப்படிச் செய்தால் அது 10:19, 41:45, 42:14,21 குர்ஆன் வசனங்கள், புகாரீ: 391,392,393 ஹதீஃதுகள் இவற்றை நிரா கரிக்கும் நிலை ஏற்படுகிறது. எச்சரிப்பதோடு சரி. நாளை மறுமையில் அல்லாஹ் தீர்ப்பளிப் பான். இங்கு எந்த நிலையிலும் சமுதாயத்தைப் பிளவுபடுத்த அனுமதி இல்லவே இல்லை. அல்லாஹ்வின் அதிகாரத்தை நம் கையில் எடுக்கக் கூடாது.

(புதிதாக இஸ்லாத்தைத் தழுவும் முஸ்லிம்களிடம் இருக்கும் மார்க்க ஞானம் பரம்பரை முஸ்லிம்களிடம் இல்லையே என்பது மிக வேதனையாக இருக்கிறது. காரணம் அவர்கள் நேரடியாக குர்ஆன், ஹதீஃதை பார்க்கிறார்கள். பரம்பரை முஸ்லிம்கள் வழிகெடுக்கும் மவ்லவி கள் பின்னால் கண்மூடிச் செல்கிறார்கள். ஆ-ர்)

விவாதம் ஓர் ஆய்வு!

எஸ்.முஹம்மத் ஸலீம், ஈரோடு, 9842696165

விவாதம் என்ற பெயரால் குர்ஆன், ஹதீஃதுக்கு முரணாக TNTJ இயக்கத்தினர்கள் எந்தளவு மடத்தனமான வாதங்களை வைக்கிறார்கள் என்பதை கடந்த இரண்டு மாதங்களாக விளக்கி வருகிறோம். மேலும் இது தொடர்பாக சில விஷயங்களைப் பார்ப்போம்.

விவாதம் முடிந்த பிறகு :

குர்ஆன் கூறாத முறையில் விவாதம் நடைபெற்ற பிறகு இரு கூட்டத்தினரும் வெளியே வந்து தங்களது இதழ்களின் விவாதத்தில் நாங்கள்தான் வெற்றிபெற்றோம் என்று தங்களது ரசிகர்களை, ஆதரவாளர்களை குஷிப்படுத்தும் விதமாக கட்டுரை எழுதுவார்கள். அதை வலைதளங்களில் பரப்பி ஆனந்தமடைவார்கள். விவாதத்தில் நாங்கள் தான் வெற்றி பெற்றோம் என்பதற்கு “சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும்” . குர்ஆன் 17:81

“சத்தியத்தை அசத்தியத்தில் மீது வீசுகிறோம். அது அசத்தியத்தை நொறுக்குகிறது. உடனே அசத்தியம் அழிந்து விடுகிறது”. குர்ஆன் : 21:18

என்ற இந்த இரண்டு வசனங்களையும் இரு சாராரும் ஆதாரமாகக் காட்டுவார்கள். அல்லாஹ்வின் வசனங்களை கேலிக்குரியதாக ஆக்கி விடாதீர்கள். (குர்ஆன் : 2:231) என்று அல்லாஹ் எச்சரித்திருந்தும் இந்த மதகுருமார்கள் விவாதத்தின் பெயரால் அல்லாஹ்வின் வசனங்களை எப்படிக் கேலிக் கூத்தாக்கி வருகிறார்கள் என்பதைப் பாருங்கள். நபி (ஸல்) அவர்கள் கஃபத்துல்லாஹ்வில் முன்னூற்று அறுபது சிலைகள் இருக்கும் நிலையில் பலமுறை சென்றிருந்தும் சத்தியம் வந்தது, அசத்தியம் அழிந் தது என்ற இந்த வசனத்தை ஓதவில்லை. மாறாக மக்கா முழுமையாக வெற்றி கொள்ளப்பட்ட பிறகு கஃபதுல்லாஹ்வில் நுழையும் முன் அங்கிருந்த முன் னூற்று அறுபது சிலைகளை அகற்றிய பிறகே சத்தியம் வந்தது… என்ற வசனத்தை ஓதினார்கள். (பார்க்க : முஸ்லிம் ஹதீஃத் எண் : 3647, 3650)

நபி(ஸல்) அவர்களின் இந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் இந்த வசனத்தை இவர்கள் எப்போது ஓதவேண்டும்? இவர்களுடன் விவாதம் செய்த சுன்னத் ஜமாஅத், காதியானி, கிறிஸ்தவர்கள், நாத்திகர்கள், குர்ஆன் மட்டும் போதும் என்பவர்கள், பிறை, பிரிவினை, ஜகாத் மற்றும் பீ.ஜை. குர்ஆன் மொழியாக்கத்தில் தவறு உள்ளது என வாதிட்ட அனைவரும் நாங்கள் சொல்வது தவறு TNTJ சொல்வதுதான் சரியானது என்று சொன்னால் மட்டுமே “சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது” என்ற இந்த வசனத்தை ஓதவேண்டும் இதுதான் முறையாகும். ஆனால் இங்கு நடப்பதென்ன? TNTJ இயக்கத்தினர்கள் விவாதத்தின் போது எந்த நிலைப்பாட்டில் இருந்தார்களோ அந்த நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருப்பதை போன்று எதிர் அணியில் உள்ளவர்கள் விவாதத்தின்போது எந்த நிலைப்பாட்டிலிருந்தார்களோ அதே நிலைப்பாட்டில் விவாதம் முடிந்த பிறகும் இருக்கும் நிலையில் “”சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது” என்ற வசனத்தை ஓதுவது கேலிகூத்தா இல்லையா? மூஸா நபியுடன் போட்டியில் ஈடுபட்ட சூனியக்காரர்கள் அனைவரும் தங்களது தவறை உணர்ந்து திருந்தியதைப் போன்று விவாதம் புரிந்த இரு கூட்டத்தாரில் ஏதேனும் ஒரு கூட்டத்தில் உள்ள அனைவரும் நாங்கள் சொல்வது தவறுதான் என்று கூறித் திருந்தியதுண்டா? இப்படிப்பட்ட நிகழ்வுகள் ஏதும் ஏற்படாத நிலையில் விவாதம் என்ற பெயரால் அல்லாஹ்வின் வசனங்களை தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டு விவாதத்தின் மூலமாக அசத்தியம் முழுமையாக அழிந்துவிட்டதை போன்று பிரச்சாரம் செய்வது மிகப் பெரிய ஏமாற்று வேலையாகும்.

விவாதத்தின் மூலமாக ஏற்பட்ட இழிநிலை:

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுகளில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (மீறி அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே (என்று இந்த புத்தகத்தில் அவன் அருளியுள்ளான்.) குர்ஆன் : 4:140/6:68

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை பார்த்தால் ஒரு இறை நம்பிக்கையாளர் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்கின்ற ஓர் அடிப்படை விஷயத்தை அல்லாஹ் மேற்கண்ட வசனங்களின் வாயிலாக கற்றுத் தருகிறான். இப்போது இந்த TNTJ இயக்கத்தினர்கள் பங்கேற்ற விவாதங்களைப் பாருங்கள். களியக்காவிளை விவாதத்தின்போது ஆயிரம் முறை அழைத்தால் அப்துல் காதிர் ஜீலானி வருவார் என்று சொல்கிறீர்கள் எங்கே ஆயிரம் முறை அப்துல் காதிர் ஜீலானி அவர் களை அழையுங்கள் இங்கு வருவாரா என்று பார்ப்போம் எனTNTJவை சார்ந்த ஒருவர் கூற இதற்கு பதிலளித்த சுன்னத் ஜமாஅத்தினர் என்னைப்பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக் கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். குர்ஆன்:2:186 என்ற இந்த வசனத்தை கூறி அல்லாஹ்வை நீங்கள் அழையுங்கள், உங்களுக்கு அல்லாஹ் பதில் தருகிறானா என்று பார்ப்போம் என அல்லாஹ்வின் வசனங்களை கேலி செய்யும் விதமாகப் பேசினார்கள்.

மேலும் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? என்ற தலைப்பில் விவாதித்தபோது அல்லாஹ்வின் வசனங்களை கேலியும் கிண்டலும் செய்து விவாதித் தார்கள். இது குறித்து ஏகத்துவம் (ஆகஸ்ட் 2010) இதழில் எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறோம். இறைவனை இழிவாக்க முயன்ற ஜமாலி, அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக பீ.ஜை. ஆதாரத்தை வைத்து பேச ஆரம்பித்த மறு கணத்திலிருந்து அல்லாஹ்வுடைய அவனுடைய தூதருடைய வார்த்தைகளை கேலி செய்ய ஆரம்பித்தார் அல்லாஹ்வின் எதிரி ஜமாலி. அல்லாஹ்வுடைய உருவம் தொடர்பாக இறைவனின் கை, கால், முகம் என்று வரும் இடங்களில் எல்லாம் இறைவனின் ஆற்றல், சக்தி என்று தன் மனோஇச்சையின்படி விளக்கம் சொல்ல ஆரம்பித்தார். ஜமாலி மனோ இச்சையின்படி விளக்கம் அளித்து அல்லாஹ்வைக் கிண்டலடித்துப் பேசிக் கேட்ட கேள்விகள் (நவூதுபில்லாஹ்)

1. அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வைத்துக் கொண்டால் நமக்கும் உருவம் இருப்பதால் நாமும் அல்லாஹ்வும் ஒன்றாகிவிடுவோம்.

2. புகாரியின் 7440வது ஹதீஃதில் மறுமை நாளில் இறைவன் தனது அடியார்களுக்குக் காலைக் காட்டுவான் என்று வருகிறது. அதனால் இறை வனுக்கு கால்கள் உண்டு என்பதை நாம் நம்ப வேண்டும் என பீ.ஜை. வாதம் வைத்தார். அதற்கு எதிர் கேள்வி கேட்ட ஜமாலி அல்லாஹ் மறுமையில் தனது அடியார்ளுக்கு காலைக் காட்டுவேன் என ஹதீஃதை காட்டுகிறீர்கள். அதில் கால் என்று ஒருமையாக வருகிறது. அப்படியானால் அல்லாஹ் ஒற்றைக் கால் உடையவனா? என அல்லாஹ்வின் காலைக் கிண்டலடித்தார்.

3. ஹதீஃதில் வருவதை போல் அல்லாஹ்வுக்கு கால் இருக்கிறது என்றால் அல்லாஹ்வின் மற்ற கால்கள் எங்கே? என பீ.ஜையிடம் கேள்வி கேட்பதாக நினைத்துக் கொண்டு அல்லாஹ்வின் விஷயத்தில் விளையாடினார்.

4. அதேபோல் மேற்கண்ட ஹதீஃதில் அல்லாஹ் திரையை விலக்கி தனது காலைக் காட்டுவேன் என்று இடம் பெற்றுள்ளது. திரையை விலக்கி தனது காலைக் காட்டுவான் என்றால் அல்லாஹ் ஆடை அணிந்திருக்கிறான் என்ற அர்த்தம் வந்துவிடுகிறது. அப்படியானால் அல்லாஹ் எந்த ஆடையை உடுத்தியிருந்தான்?

5. அப்படி அல்லாஹ் ஆடை உடுத்தியிருக்கவில்லை என்று வைத்துக் கொண்டால் அல்லாஹ் நிர்வாணமானவனா?

6. சகோதரர் பீ.ஜை இறைவனுக்கு கையிருப்பதாகக் கூறி இறைவனின் கை தொடர்பான வசனங்களையும், ஹதீஃத்களையும் எடுத்து வைத்தார். அதற்கு கேள்வி வைத்த ஜமாலி நீங்கள் குறிப்பிட்ட ஹதீஃதில் இறைவனின் கை இரண்டும் வலதுதான் என இடம் பெற்றுள்ளது. அல்லாஹ்வுக்கு இரண்டும் வலது கைதான் என்றால் இடது கை எங்கே?

7. ஒரே பக்கத்தில் இரண்டு கைகள் அல்லாஹ்வுக்கு இருக்க முடியுமா?

8. இறைவன் தனது ஒரு விரலில் பூமியையும், மற்ற விரலில் வானத்தையும் அடுத்த விரலில் மரங்களையும் வைத்துக் கொண்டிருப்பான் என்ற செய்தியை பீ.ஜை. ஆதாரமாகக் காட்டினார். அல்லாஹ்வுக்கு உருவம் இல்லையயன்றால் விரல்கள் ஏன்? என்று பீ.ஜை. கேள்வி வைத்தார். அதற்கு வியாக்கியானம் சொன்ன ஜமாலி அல்லாஹ்வின் விரல்கள் என்றால் அவற்றை இறைவனின் ஆற்றல் என்றுதான் நாம் விளங்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அல்லாஹ்வுக்கு விரல்கள் இருப்பதாக வைத்துக் கொண் டால் அவை எத்தனை?

9. அல்லாஹ் ஒரு விரலில் வானத்தை வைத்திருக்கிறான் என்றால் அல்லாஹ் எங்கே இருக்கிறான்?

10. இன்னொரு விரலில் மரங்களை வைத்திருக்கிறான் என்றால் பூமிக்குள் தானே மரங்கள் இருக்கின்றன ஏன் மற்ற விரலில் வைத்திருக்கி றான்? இதுபோன்ற கேள்விகளை ஏளனமாக முன் வைத்தார் ஜமாலி.

11. அல்லாஹ்வுக்கு கை இருப்பதாக வரும் வசனங்களையும், ஹதீஃத்களையும் பீ.ஜை. அள்ளிப் போட்டார். அல்லாஹ்வின் கை தொடர்பான வசனங்களைத் திரிக்க முற்பட்ட ஜமாலி அல்லாஹ்வின் கை என்றால் அவை அல்லாஹ்வின் ஆற்றல் என்றுதான் புரிந்து கொள்ளவேண்டும் என்று வியாக்கியானம் செய்தார். அத்துடன் அல்லாஹ்வைக் கிண்டலடித்து இறைவனுக்கு கை இருக்கிறதென்றால் அல்லாஹ்வின் கைகளில் இரத்தம் ஓடுகிறதா?

12. அல்லாஹ்வின் கைகளில் தசை உண்டா?

13. இறைவனின் கைகளில் நரம்புகள் உண்டா?

14. உலகம் அழிக்கப்படும் போது இறைவனின் முகத்தைத் தவிர அவனது கை, கால்கள் எல்லாம் அழிக்கப்படுமா?

15. அர்ஷைப் பற்றிய பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என ஆதாரத்துடன் பீ.ஜை. நிரூபிக்க, அதற்கு பதில் கொடுக்கத் திராணியற்றுப்போன ஜமாலி உடனே அர்ஷின் எடை எட்டு மலக்குகள் தூக்கும் அளவுதானா? அப்படியானால் எட்டு மலக்குகள் அல்லாஹ்வுடன் சேர்த்து அர்ஷைத் தூக்கி விடலாமா? போன்ற மார்க்கத்தில் விளையாடும் விதமான கேள்விகளைக் கேட்டு அல்லாஹ் வையே கேலிப் பொருளாக மாற்றினார். அல்லாஹ்வின் எதிரி ஜமாலி விவாதவெறி பிடித்துத் திரியும் TNTJவினரே மனம் வெதும்பி எழுதும் அளவிற்கு ஜமாலி.

விவாதத்தில் இன்னும் பல வகைகளிலும் அல்லாஹ்வின் வசனங்களைக் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருந்தார். இதுபோன்ற சந்தர்ப்பங்களில் முஸ்லிம்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் அறிவுரை கூறியிருக்க அந்த அறிவுரைகளை புறக்கணித்துவிட்டு தொடர்ந்து சுன்னத் ஜமாஅத்தினருடன் உரையாடியதால் இவர்களும் சுன்னத் ஜமாஅத்தினரை போன்றவர்களே. மேலும் நாத்திகர்களுடன் இவர்கள் விவாதம் செய்த போது நாத்திக அணியில் இருந்தவர்கள் குர்ஆனை கேலியும் கிண்டலும் செய்து பேசியதோடு நான் குர்ஆனை மறுப்பதற்காகவே உட்கார்ந்துள்ளேன் என்று ஒருவர் தெளிவாக கூறியும் அவர்களோடு தொடர்ந்து விவாதம் செய்த இவர்கள் “அல்லாஹ்வின் வசனங்களை கேலி செய்வோருடன் அமராதீர்கள் அவ்வாறு (மீறி) அமர்ந்தால் நீங்களும் அவர்களை போன்றவர்களே” என்ற வசனத்தின் அடிப்படையில் TNTJ இயக்கத்தினர்கள் நாத்திகர்களாகவே மாறினார்கள் என்பதே குர்ஆன் கூறும் உண்மை. இதனால்தான் சுன்னத் ஜமாஅத்தினர், நாத்திகர்கள் செய்யும் தவறுகளை குர்ஆன் வசனங்களை கொண்டு சுட்டிக்காட்டப்படும்போது தங்களை திருத்திக் கொள்ள முன்வராமல் அல்லாஹ்வின் வசனங்களை கேலியும் கிண்டலும் செய்வதை போன்றே TNTJ இயக்கத்தினர்கள் செய்யும் தவறு களை குர்ஆனை கொண்டு சுட்டிக் காட்டப்படும் போது கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்.ஷ

இவர்கள் அனைவரும் குர்ஆனை மறுத்து கேலியும் கிண்டலும் பேசுவதில் சமமானவர்களே. அல்லாஹ்வுடைய வசனங்களை கேலி செய்தால் அந்த சபைகளில் அமரக் கூடாது என்ற விஷயம் TNTJவினருக்கு தெரியவில்லை. இந்த வசனத்தை நடைமுறைபடுத்தினால் விவாதத்திலிருந்து பாதியிலேயே வெளியேறும் நிலை ஏற்படும். இதனால் தங்களது ஜமாஅத்திற்கு விவாதத்தில் தோற்றுவிட்டார்கள் என்ற அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதை அஞ்சியே 4:140, 6:68 ஆகிய வசனங்களை நடை முறைப்படுத்த மறுக்கிறார்கள். ஈமானை இழந்தாவது தங்களது இயக்கத்தை வளர்க்க வேண்டும் என் பதே TNTJ வினரின் நிலைப்பாடு.

“”நீர் குர்ஆனை ஓதும் போது உமக்கும் மறுமையை நம்பாதோருக்கும் இடையே மறைக்கப்பட்ட ஒரு திரையை ஏற்படுத்துகிறோம். அவர்கள் அதைப் புரிந்து கொள்ளாதிருக்க அவர்களின் உள்ளங்களில் மூடிகளையும் செவிகளில் அடைப்பையும் ஏற்படுத்தியுள்ளோம். குர்ஆன் : 17:45,46 என்று அல்லாஹ் மிகத் தெளிவாக கூறியிருக்க, மறுமையை நம்ப மறுப்பதாக வெளிப்படையாக கூறும் நாத்திகர்களுடன் இவர்கள் விவாதம் புரிந்தது மிகப் பெரிய வழிகேடில்லையா? அல்லாஹ் ஏற் படுத்திய திரையை விவாதத்தின் மூலம் அகற்றப் போகிறார்களா? எவர்கள் அல்லாஹ்வை ஒப்புக் கொண்டபின் அவனைப்பற்றி தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்களுடைய தர்க்கம் அவர்களுடைய இறைவனிடத்தில் பயனற்றதாகும். இதனால் அவர்கள் மீது (அவனுடைய) கோபம் ஏற்பட்டு, கடினமான வேதனையும் அவர்களுக்கு உண்டாகும். குர்ஆன் : 42:16 என்ற அல்லாஹ்வின் கட்டளையை உதாசீனப்படுத்திவிட்டு அல்லாஹ்வுக்கு உருவம் உண்டா? என்ற தலைப்பில் அல்லாஹ்வின் தண்டனைகளை பற்றி சிறிதும் அஞ்சாமல் விவாதித்த இந்த கூட்டமா நேர்வழியைப் போதிக்க போகிறார்கள். TNTJ வினரின் விவாத வெறி இவர்களை இஸ்லாத்தை விட்டும் வெளியயற்றும் அளவிற்குக் கொண்டு சென்றுள்ளது.

நபி(ஸல்) அவர்களால் பயிற்றுவிக்கப்பட்ட சமுதாயம் அமல்களில் ஆர்வம் காட்டி குர்ஆனைக் கொண்டு சத்தியத்தை அறிந்து அதன்படி செயலாற்றி வெற்றியடைந்தார்கள். இந்த கேடுகெட்ட மெளலவிமார்களால் பயிற்றுவிக்கப்பட்ட இன்றைய முஸ்லிம் சமுதாயம் விவாதத்தில் ஆர்வம் காட்டி அமல்களை நாசப்படுத்திக் கொண்டு அழிவின் விளிம்பிற்குப் போட்டி போட்டுக்கொண்டு படுவேகமாக சென்று கொண்டிருக்கிறார்கள்.

விவாதத்தை ஊக்கப்படுத்துவதன் காரணம் :

இஸ்லாத்தின் பாதுகாவலர்களாக தங்களை நினைத்துக் கொண்டு செயல்படும் இந்த TNTJ இயக்கத்திற்கு எதிராக குர்ஆன், ஹஃதீத் அடிப்படையில் கருத்துச் சொல்பவர்களைக் கூட இஸ்லாத்தின் எதிரிகளை போன்று கற்பனை செய்து கொண்டு உடனே எங்களோடு விவாதிக்க தயாரா? என்று விவாத சவால்களை விடுவதன் நோக்கம் என்ன தெரியுமா? இஸ்லாத்திற்கு எதிராக யாராவது வாய் திறந்தால் அவர்களை விவாத களத்தில் சந்திக்கும் துணிச்சல் மிக்க ஒரு ஜமாஅத் எங்களது TNTJ மட்டுமே என்று பெருமையடிப்பதற்கும், நாத்திகர்களுடன் விவாதம் செய்த ஒரு சங்கம் உண்டா? ஒரு கழகம் உண்டா? ஒரு இயக்கம் உண்டா? என்று ஆணவமாக பேசுவதற்கும், TNTJவினர் விவாத அழைப்பு கொடுப்பதைப் பார்க்கும் குர்ஆன், ஹதீஃதை பற்றி அறவே அறியாத மக்கள் இவர்கள் மட்டும்தான் மார்க்கத்தைச் சரியான முறையில் சொல்கிறார்கள் என்று நினைத்து ஜமாஅத்தில் இணைவதற்கும், ஜமாஅத்தில் இருக்கின்ற ஆட்களை தக்கவைத்துக் கொள்வதற்கும், மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்வதற்கும் இன்னும் இதுபோன்ற தங்களது பல்வேறு கீழ்த்தரமான எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காகவுமே விவாதங்களை ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

விவாதத்தின் பெயரால் ரவுடித்தனம் செய்வதற்கும், ஆபாசமான வார்த்தைகளைக் கொண்டு பேசுவதற்கும் இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதால்தான் இவர்களைப் பற்றி நன்கு அறிந்த இவர்களது முன்னாள் கூட்டாளியான அப்பாஸ் அலீ என்பவர் இவர்களை விட்டு வெளியேறிய பிறகு TNTJவினருக்கு விவாத அழைப்புக் கொடுக்கும் போது விவாத ஒப்பந்தம், தெரு சண்டைப் போன்று ஆகிவிடக்கூடாது என்று கூறினார். விவாதத்தின் பெயரால் மாற்றுக் கருத்து சொல்பவர்களைக் கோபப்படுத்தி வாய்ச் சண்டை போடும் விதமாக கிண்டலும், கேலியும் செய்து வாயடிப் பதில் கைத் தேர்ந்தவர்களான இவர்கள் விவாத ஒப்பந்தத்தின் போதும், விவாதத்தின் போதும் தங் களது கீழ்த்தரமான பேச்சை வெளிப்படுத்துவார்கள் என்பது நாடறிந்த உண்மை. இந்த TNTJ இயக்கத்தினர்கள் மார்க்கம் பேசும் ரவுடிகள் என்பதை அறிந்து கொள்ள 25.11.2015 அன்று IPC என்ற கிறிஸ்தவ அமைப்பினருடன் நடத்திய விவாதத்தை பார்த்தால் பளிச்சென்று புரிந்துவிடும். TNTJவினருக்கு விவாத ஒழுங்கே தெரியவில்லை, ஒழுக்கமாக பேசுங்கள், பேச்சாளர்கள் நாக்கை அடக்கிப் பேசுங்கள். இதுதான் TNTJவின் விவாத இலட்சணமா? மார்க்க அறிஞர் என்பவர் வேத வசனங்களைக் கூறி மக்களைச் சிந்திக்க வைக்க வேண்டும். அதை விடுத்து சிரிக்க வைக்க வெண்டிய வேளையை மார்க்க அறிஞர் செய்யக்கூடாது என்றெல்லாம் கிறிஸ்தவர்கள் அறிவுரை கூறும் அளவிற்கு TNTJ இயக்கத்தினர்கள் மிக கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள்.

இவர்கள் பைபிளை நையாண்டி நக்கல் செய்து பேசியதன் விளைவாக கிறிஸ்தவர்களும் பதிலடி கொடுக்க ஆரம்பித்து புகாரீ 5160வது ஹதீஃதை ஆதாரமாக வைத்து சில கேள்விகளை முன் வைத்தனர். அதற்கு பதிலளித்த TNTJ தாதா ஒருவர் கிறிஸ்தவ மதபோதகர்களின் மனைவிமார்களின் கற்பை குறித்து கேலியும் கிண்டலும் செய்து பேசினார். குறிப்பாக விவாத பகுதி 11-ல் பேசுவதற்கு, எழுதுவதற்கு நமக்கு தயக்கத்தை ஏற்படுத்துகின்ற வார்த்தைகளை, லுங்கியைத் தொடை அளவிற்கு உயர்த்தி கட்டிக் கொண்டு வாயில் துண்டு பீடியை வைத்துக் கொண்டு பேசும் ஒரு தெருப் பொறுக்கியைப் போன்று கெட்ட வார்த்தைகளை ரசித்து ருசித்து பேசினார்கள். தங்களது கட்சி ஜெயிக்க வேண்டும் என்பதற்காக எல்லாவிதமான அராஜகங்களுக்கும் துணிந்தவர்கள்தான் இந்த TNTJ இயக்கத்தினர்கள். விவாதம் என்ற பெயரால் மற்றவர்களின் மானத்தோடு விளையாடி உணர்வுகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்க்கும் வியாதி வீஹிவீமூவில் உள்ள அனைவரிடமும் உள்ளது. ஆகவேதான் இவர்கள் அனைவரும் விவாதத்தைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்.

சர்வதேச திகதிக்கோடு ஏக இறைவன் இட்ட அடையாளச் சின்னங்களில் ஒன்றாகும்

S.M. அமீர், நிந்தாவூர்,இலங்கை

மனித கரங்களால் மாசுபடுத்தப்பட்ட பைபிளின், பூமியே பிரபஞ்சத்தின் மையம், அதனைச் சுற்றியே சூரியனும், கிரகங்களும் வட்டமிடுகின்றன. பூமியின் ஒரு உயரமான மலையின், மேல் சாத்தான் கொண்டு போய் உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் காட்டியது. (பூமியின் ஒரே இடத்தில் எல்லாப் பொருட்களையும் ஒன்று சேர்த்து காட்டப்பட்டதனால் பூமி தட்டை வடிவம்) விவிலியம் புதிய ஏற்பாடு மத்தேயு அதிகாரம் : 4 வசனம் : 8,9,10.

போன்ற அறிவியலுக்கு முரணான பைபிளின் கூற்றை மறுத்து சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னரே அன்றைய வானியல் ஆய்வாளர்களான கலிலியோ மற்றும் நிகலஸ்கொப்பநிகஸ் போன்றவர்களது பூமி உருண்டை வடிவமானது. அது சூரியனைச் சுற்றி வருகின்றது போன்ற அறிவியல் உண்மைகளைச் சொன்னதற்காக அன்றைய வத்திக்கான் கிறிஸ்தவ போப் ஆண்டவர் தலைமைகள் கலிலியோ நிகலஸ் போன்றவர்கள் எழுதிய ஆய்வுப் புத்தகத்தை தடை செய்து அவர்களை சமூகப் பகிஸ்காரம் செய்து தனிமைப்படுத்தியதுடன் குடி உரிமையையும் பறித்து சிறைப்பிடித்துச் சாகும் வரை சித்திரவதைகள் செய்து உயிருடன் எரித்துக் கொன்றது கொடுந் தவறு, என்றும் பூமி உருண்டை வடிவானது எனும் அவர்களது ஆணித்தரமான கூற்று உண்மையானது என்பதற்கும் சான்றாக பரிசுத்த குர்ஆனில் “”அல்கஹ்ஃப்” எனும் அத்தியாயத்தில் உலகை ஆட்சி செய்த நான்கு மன்னர்களில் ஒருவரான துல்கர்னைன் இஸ்கந்தர் அவர்கள் உலகச் சுற்றுப் பயணம் மேற்கொண்டது பற்றி விபரிக்கும்போது அவர் சூரியன் உதயமாகும் இடங்களையும், அஸ்த மிக்கும் இடங்களையும் சென்றடைந்ததாகவும் அச் சந்தர்ப்பத்தில் சர்வதேச திகதிக்கோடு International Date Line வழியாகவும் கடந்து சென்றது குறித்தும் பேசுகின்றது. 18:83-99. தஃப்ஸீர் இப்னு கஸீர் தமிழ் மொழிபெயர்ப்பு, பாகம்-5, பக்கம்-505-528. மேலும் பார்க்க : 37:5, 55:17, 70:40.

ஏக இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட இப்பிர பஞ்சமும் அதில் காணப்படும் எமது கண்களுக்கு புலப்படக்கூடியவை, புலப்படாதவை, உயிருள்ளவை, உயிரற்றவை அனைத்தும் மனிதவள மேம்பாட்டுக்காகவேயாகும். அவை அனைத்தினதும் இருப்புக்கும், இயக்கத்திற்கும், அழிவிற்கும், ஆக்கத் திற்குமான அனைத்து அதி அற்புத ஏற்பாடுகளையும் ஏக இறைவன் வெகு நுட்பமாக அமைத்துள்ளான். ஏக இறைவனின் உலக அழிவு வரை மாறாத அந்த இயல்பு நியதிகள் இப்பிரபஞ்ச ஒழுங்கை செப்ப னிட்டு சீராக வைத்திருக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் நியதிகளைப் படைக்கும், அழிக்கும் ஆற்றலை ஏக இறைவனல்லாத வேறு எவரும் ஒருபோதும் பெற்றிருக்கவில்லை, பெற்றுக் கொள்ளப் போவதுமில்லை.

மாறாக உலகம் படைக்கப்பட்ட நாளில் இருந்து இந்த இயற்கை இறை நியதிகளின் சீரான தொழிற்பாடுகளையும் அதன் பயன்பாடுகளையும் இயற்கை யிலிருந்து மனிதன் அவ்வப்போது கண்டறிந்து பயன்படுத்திக் கொண்டே வருகின்றான். அவ்வப்போது அவற்றைக் கண்டறிந்து கொள்வதற்கான உள் உணர்வையும், உத்வேகத்தையும் இலகுவான வழிமுறைகளையும் ஏக இறைவனே மனிதனுக்குக் கற்றுக் கொடுக்கின்றான். மனிதனுக்கு அவன் அறியாதவற்றை எல்லாம் (அல்லாஹ்வாகிய) அவன் கற்றுக் கொடுத்தான். 96:5.

முதல் மனிதரும் நபியுமான ஆதம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் எல்லாப் படைப்பினங்களையும், பெயர்களையும் அவற்றின் பண்புகளையும், அவற்றின் செயல்முறைகளையும் கற்றுக் கொடுத்தான். 2:31, புகாரி:4476,6565,7440 முஸ்லிம், நஸயி, இப்னு மாஜா.

அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களுக்கு அவர்களுடைய வழித்தோன்றல்களில் ஒவ்வொரு மனித ரின் பெயரையும், அதைப் போன்றே ஒவ்வொரு பிராணியின் பெயரையும், ஒவ்வொரு பறவையின் பெயரையும் மற்றும் அனைத்துப் பொருட்களின் பெயர்களையும் (ஒவ்வொன்றாக) கற்றுக் கொடுத் தான் என்பதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் மற் றும் சுத்தீ(ரஹ்), ளஹ்ஹாக்(ரஹ்) முஜாஜித்(ரஹ்), சயித்பின் ஜுபைர்(ரஹ்), கத்தாதா(ரஹ்) ஆகியோர் விளக்கம் அளித்துள்ளார்கள்.
தப்ஸீர் இப்னு கஸீர் தமிழ்:1, பக்கம்:156-161.

மனிதன் இயற்கையாக வாழ்வதற்கு மிகவும் பொருத்தமாக பூமியைத் தயார்படுத்திய அல்லாஹ் 2:36, 7:24,25,10, 30:25, 20:53, 43:10, 78:6 ஆதம் (அலை) ஹவ்வா(அலை) ஆகியோரிடம் நீங்கள் அனைவரும் இங்கிருந்து பூமிக்குக் கீழிறங்கிச் சென்று விடுங்கள். பின்னர் என்னிடம் இருந்து உங்க ளுக்கு வழிகாட்டல் வரும். (அப்)போது யார் எனது வழிகாட்டலைப் பின்பற்றி நடக்கிறார்களோ அவர்களுக்கு எந்த அச்சமும் இராது. 2:38, 20:123 என்று அறிவித்தான். பின்னர் ஆதம்(அலை) அவர்களுக்கும் அவர்களது வழித்தோன்றல்களில் வந்த இறைத் தூதர்களுக்கும் பிற்காலத்தில் வழிகாட்டல்களை யும் அவனது சான்றுகளையும் அவ்வப்போது பூமிக்கு அனுப்பி வைத்தான். 3:48, 5:46,110, 57:27, 4:163, 17:55, 3:39, 19:12, 4:163, 35:25.

அதன் தொடரில் இறைநெறி நூலாகிய பரிசுத்த குர்ஆனிலும் நேர்வழியையும் பேரொளியையும் போதித்து உலக அழிவு வரை கண்டுபிடிக்கக் கூடிய அறிவியல் சான்றுகளுக்கு ஆதாரங்களை வைத் தான். 5:15, 7:157, 14:1, 4:174, 65:11, 33:46, 2:257, 6:1, 33:43, 57:9, 42:32. அவற்றில் சில,

* 1940களில் “”ஜோர்ஜ்கமாவ்” எனும் பிரபஞ்ச ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்ட அண்ட வெளியில் சஞ்சரிக்கும் அனைத்து கிரகங்களும் கோள் களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், பூமியும் தோன்றக் காரணமாக இருந்த பெரு வெடிப்பு (Big Bang) கொள்கை பிரபஞ்சம் தோன்றி யதைக் குறிக்கும் ஓர் அடையாளச் சொல்லாகும். அதனையே, இந்த வானங்களும், பூமியும் ஒன்றாகப் பிணைந்திருந்தன. பின்னர் அவ்விரண்டையும் நாமே உடைத்துப் பிரித்தோம் (41:11, 21:30, தஃப்ஸீர் இப்னு கஸீர் : 5, பக்கம் 843-853) என்று பரிசுத்த குர்ஆன் பேசுகின்றது.

* பால்வெளி மண்டலத்திலுள்ள அனைத்துக் கோடான கோடி கோள்களும், கிரகங்களும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும் எந்த ஆதரவுமின்றி அந்தரத்தில் தொங்கிக் கொண்டு ஈர்ப்பு விசையில் அதனதன் நீள்வட்டப் பாதையில் வேகமாக ஓடுகின்றன. 31:29, 35:13, 36:38, 39:05, 13:02, 21:33, தஃப்ஸீர் இப்னு கஸீர்:4, பக்கம்: 843-846, பாகம்:5, பக்கம் 843-853.

* பூமியிலுள்ள மனிதர்களுக்கு விண்வெளிப் பயணம் சாத்தியமானதே. ஜின், மனு கூட்டத்தினரே வானங்கள் மற்றும் பூமியின் ஓரங்களைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின் நீங்கள் கடந்து செல்லுங்கள். (விசேஷ தயாரிப்புகளுடன் கூடிய) வல்லமையுடனேஅன்றி நீங்கள் கடந்து செல்லமாட்டீர்கள். 55:33.

* பூமியில் மாத்திரம் பாதைகள் அன்றி வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன. பாதைகளை உடைய வானத்தின் மீது சத்தியமாக. 51:7.

* விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமானதாகவும், கடினமானதாகவும் ஆகிவிடுகின்றன. அவனது உள்ளத்தை வானத்திற்கு ஏறிச் செல்பவன் (உள்ளம்) போன்று இறுக்கமானதாகவும், கடினமானதாகவும் ஆக்கி விடுகின்றான். 6:125.

* விண்ணில் இருந்து வருகின்ற புற ஊதாக்கதிர்கள் வானில் உள்ள ஓசோன் மண்டலம் மூலம் வடிகட்டப்பட்டும்; அங்கிருந்து வருகின்ற எரிகற்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு இடையில் அவை எரிக்கப்பட்டும் சூரியனின் அளவு கடந்த வெப்பத்தையும் குறைத்து விடும் பாதுகாக்கப்பட்ட கூரையாக செயல்படும் வானம். மேலும் நாம் வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக அமைத்தோம். அவர்களோ அதன் அத்தாட்சிகளைப் புறக்கணிப்பவர்களாக இருக்கின்றனர். 21:32, 52:5, 40:64, 2:22. தஃப்ஸீர் இப்னு கஸீர்:1, பக்கம்:110-111, பாகம்:5, பக். 843-853.

* அல்லாஹ்தான் நீங்கள் காணக்கூடிய தூண்கள் எதுவுமின்றி வானங்களை உயர்த்தினான் 13:2, 31:10 வானங்களுக்கும், விண்வெளியிலுள்ள எண்ணில் அடங்கா சூரிய குடும்பத்தைச் சேர்ந்த கோள்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், பூமி ஆகியவற்றுக்கிடையே கண்களால் பார்க்க முடியாத ஈர்ப்பு விசைத் தூண்கள் நிச்சயமாக உண்டு. தஃப்ஸீர் இப்னு கஸீர் : 4, பக்.843-846.

* கடலில் இருந்தும் ஏனைய நீர்நிலைகளிலிருந்தும் உறிஞ்சப்படுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மறுபடி மண்ணிற்கு மழை நீராகவும், பூமியில் இருந்து மேல் நோக்கி அனுப்புகின்ற ஒளி, ஒலி அலைகளை மறுபடி நமக்கே திருப்பித்தரும் வானம். 86:11, 31:10, 20:53, 23:18 மீளத்தரும் வானத்தின் மீது சத்தியமாக.

* கண்களுக்குத் தெரியாத தூண்களால் பூமி, சூரியனால் ஈர்க்கப்பட்டு, சூரியனை விட்டும் விலகாமல் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றில் கட்டி இழுக்கப்படும் தொட்டில் போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது, இவ்வளவு வேகத்தில் பூமி சூரியனைச் சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணரமுடிவதில்லை, அது சுற்றுவது, நமக்குத் தெரிவதுமில்லை, குழந்தைகளை தொட்டிலில் இட்டு வேகமாக ஆட்டும் போதும் அதன் சுழற்சி குழந்தை களுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும் இதமாகவும், நித்திரை தரக்கூடியதாகவும் இருக்கும். பூமி படுவேகமாகச் சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரிவதில்லை. எந்தவிதமான பாதிப்பும் நமக்குப் புரிவதுமில்லை. இதனையே அல்குர்ஆன் அவனே உங்களுக்குப் பூமியைத் தொட்டிலாக ஆக் கினான். (என்கிறது) 20:53, 78:6, 43:10, தஃப்ஸீர் இப்னு கஸீர் : 5, பக்:738.

* இன்று பூமியில் உள்ள இரும்பு பூர்வீக பூமிக்கு சொந்தமானதல்ல. அவை விண்வெளியில் இருந்தே இம்மண்ணுக்கு வந்தது. பூமியில் உள்ள நீர்நிலைகள் சூரிய வெப்பத்தால் ஆவியாகி மேலே சென்று கருமேகங்களாகிக் குளிர்ந்து மீண்டும் மழையாகப் பொழிவது போல விண்வெளியிலுள்ள இரும்பு அணுக்கள் ஆவியாகி மேலே சென்று குளிர்ந்து மீண்டும் இரும்புத்துகள் மழையாக பூமியின் மேற்பரப்பில் வீழ்ந்து மண்ணோடு மண்ணாகக் கலந்து இரும்பு தாதுக்களாக மாறின எனும் அறிவியல் உண்மைகளை அமெரிக்க ஹோர்வார்ட் பல்கலைக் கழக ஆய்வாளர்களான பேராசிரியர் “ஸ்டீபன் ஜோகப்சன்” மற்றும் கலிபோர்னியா பல்கலைக் கழகப் பேராசிரியர் “”சோராஸ் டவர்ட்” ஆய்வு செய்து அறிவித்தனர். அதனை உண்மைப்படுத்தி 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்னும் இரும்பையும் நாமே இறக்கினோம். (போருக்கு வேண்டிய) கடுமையான சக்தியும் மனிதர்களுக்குப் பயன்களும் (அதில்) இருக்கின்றன. (57:25, 18:96, 22:21, 34:10, 57:25, 17:50) என்று குர்ஆன் பேசுகின்றது.

* பறவைகள் பூமியில் மோதாததற்கு காரணம். 16:79, 67:19, 24:41.

* நவீன வாகனங்கள் பற்றிய முன்னறிவிப்பு, குதிரைகள், கோவேறு கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் அவற்றில் சவாரி செய்வதற் காகவும் இன்னும் அலங்காரமாகவும் (அவனே படைத்தான்) மேலும் நீங்கள் அறியாதவற்றையும் அவன் படைப்பான். 16:8

* மனிதர்களின் எடைக்கு ஏற்ப பூமியின் எடை குறையும். 50:4, 71:17

* பூமியில் நீரைச் சேமிப்பதற்கான மிகச் சிறந்த முறை 23:18. பார்க்க : தஃப்ஸீர், இப்னு கஸீர் : 6, பக்:164-166

* பலகோடி கிலோ மீட்டர் தூரம் விண்ணிற்குச் செல்லும் மனிதனால் மலையின் உயரமளவிற்கு பூமிக்குள்ளே செல்ல இயலாது. 17:37

* பூமி அவர்களுடன் சாய்ந்து விடாமல் இருப் பதற்காக அதில் நாம் உறுதியான மலைகளை முளை களாக அமைத்தோம். 15:19, 13:3, 16:15, 21:31, 27:61, 31:10, 41:10, 50:7, 77:27, 78:7, 79:32, 88:19, 15:19 பூமியின் மேல் தகடு அல்லது செதில் (Scale) உடைய ஆழம் இடத்திற்கு இடம் வித்தியாசப்படு கிறது. அது கடலுக்கடியில் சுமார் 5 கி.மீ. என்றால் மலைகளுக்கடியில் 30 கி.மீ. விட அதிகம். புற நிலச் செதிலின் அடர்த்தி குறைந்த சதவீதமே இருக்கும். அதற்குக் கீழே பெரும் பாறைகளும் உருகிய வாயுக்களும் உள்ள மண்டலம் உண்டு. இந்த திரவ மண்டலத்தின் அடர்த்தியானது பூமியின் மேல் தகட்டின் அடர்த்தியை விட மிகவும் அதிகம். இவ்வாறு திரவ மண்டலத்திற்கு மேலே மிதக்கும் பூமியின் மேல் தகடு திரவத்திற்குள் மூழ்கி விடுவதில்லை.

இதற்குக் காரணம் மலைகள்தான் என்ற உண்மை 1956-ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. மலைகளின் கெட்டியான வேர்கள் (Roots) பூமிக்கடியில் திரவ மண்டலத்தையும் தாண்டி திண்ம மண்டலம் வரை ஊடுருவிச் சென்று நிலைகொள் கின்றன. இந்த வேர்கள் பல கி.மீ. தூரத்திற்கு நீண்டு செல்கின்றன. மலைகளின் இந்த வேர்கள்தான் பூமி யின் மேல் தகட்டை அசையவிடாது வலுவோடு உறுதியாக தாங்கி நிற்கின்றன.

திரவ மண்டலத்தில் பூமியின் தகடு மூழ்கிவிடாமல் தடுக்கின்றன. மிக ஆழமான வேர்களைக் கொண்ட மலையின் தகடு மூழ்கிவிடாமல் தடுக்கின்றன. மிக ஆழமான வேர்களைக் கொண்ட மலைகள் பூமிக்கடியில் நங்கூரம் பாய்ச்சி திரவப் பகுதியைத் தாண்டி திடப்பகுதி வரை நிலை நிற்கின்றன. இவ்வாறு குறைந்த அழுத்தம் கொண்ட பூமியின் மேல் தகட்டை மலைகள் உறுதிப்படுத்தி வைத்துள்ளன. மேல் தகட் டுக்குக் கீழே உள்ள உயர் அழுத்தம் கொண்ட திரவத்தின் காரணத்தால் சாய்ந்து விடாமல் பூமியை மலைகள் பிடித்து நின்று காக்கின்றன.

கீழே விழுந்து விடாமல் கூடாரத்தை முளைக் குச்சிகள் தாங்கி நிற்பதைப் போன்றே மலைகள் முளைகளாக பூமியைத் தாங்கிப் பிடித்துள்ளன. நங்கூரம், மூளைக்குச்சி ஆகிய பொருள் கொண்ட “”ரவாசி” எனும் சொல்லையே உறுதி வாய்ந்த மலைகள் என்பதைக் குறிக்க மூலத்தில் இறைவன் இங்கு ஆண்டிருப்பது மிகவும் பொருத்தமாகும்.

மலைகளால் இன்னொரு பலனும் உண்டு. உயரமான மலைகளுக்கு மேல் மேகக் கூட்டங்கள் செல்கிறபோது மேகங்கள் உயரே உந்திச் செல்ல மலைகள் காரணமாகின்றன. குளிர்ந்த ஆகாய மண்டலத்தை நோக்கி மேலே செல்லும் மேகங்கள் அங்கே அடர்த்தியாகி குளிர்ந்து மழையாகவோ, ஆலங்கட் டியாகவோ மாறுகின்றன. ஆகவே மலை மழைக்கும் ஒரு காரணம் எனலாம். இதனாலேயே நதிகளின் மூலம் மலைகள் என்பர். அதனையே குர்ஆனும் ஒரு வசனத்தில், பூமியில் உயரமான மலைகளை நாம் அமைத்தோம். மதுரமான நீரையும் உங்களுக்கு நாம் புகட்டினோம். 77:27, 27:61 என்று மலைகளுடன் நதி நீரைத் தொடர்புபடுத்திப் பேசுகிறது. தஃப்ஸீர் இப்னு கஸீர் : 5, பக். 843-853.

* இந்த பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது என்பதை இன்றைய விஞ்ஞானிகளும் ஒப்புக்கொள்கிறார்கள். அதனை குர்ஆன் தெளிவாக கூறிவிட்டது. 2:36, 6:98, 7:10, 24,25, 30:25, 20:55 தஃப்ஸீர் இப்னு கஸீர், பாகம் :3, பக்கம்:703, 724-725.

* பூமியின் நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு அருகுகள் குறைந்து வருவதை சமீப காலத்தில் அறிவியலாளர்கள் கண்டு பிடித் துள்ளனர். பூமியை அதன் ஓரங்களால் நிச்சயமாக நாம் குறைத்துக் கொண்டு வருவதை அவர்கள் பார்க்கவில்லையா? 13:41, 21:44.

* அவனே இரு கடல்களைச் சங்கமிக்கச் செய் தான். இது மதுரமானது, இதமானது.அது உவர்ப்பானது, கசப்பானது. அவ்விரண்டுக்குமிடையே மீற முடியாத ஒரு தடையையும் வலுவான தடுப்பையும் அவன் ஏற்படுத்தினான். 25:53 அவன் இரு கடல்கள் சங்கமிக்குமாறு செய்துள்ளான். அவை இரண்டுக்குமிடையே மீற முடியாத தடை உண்டு. 55:19,20 என அர்ரஹ்மான் அத்தியாயத்தில் அல்லாஹ் தன்னைப் பற்றித் தெரிவிக்கின்றான். இத்திருவசனம் உப்புக் கடல்கள் இரண்டு சந்தித்துக் கொள்வதைக் குறிப்பிடுகிறது. இன்ஷா அல்லாஹ் தொடரும்…..

வெற்றிட  வாழ்க்கை!

Y.  அஜ்மல்கான்,  ஜெகதாப்பட்டினம்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே, இந்தக் கட்டுரை யாரையும் விமர்சனம் செய்வதற் காகவோ அல்லது பழிவாங்கவோ எழுத வில்லை. முஸ்லிம்கள் உண்மையை உணர்ந்து வெற்றியடைய வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே எழுதுகின்றேன்.

நமக்கு அல்லாஹ் போதுமானவன்.

இயற்கைக்கு மாற்றமான வாழ்க்கையை மனிதன் தேர்வு செய்யும்போது மனிதன் நஷ்டம் அடைகிறான். இதன் விளைவாக நிம்மதியை இழந்து விடுகின்றான். உதாரண மாக: இறைவனால் வழங்கப்பட்ட மார்க்க நெறியான இஸ்லாத்தை ஏற்காமல் மாற்றுக் கொள்கைகளை மனிதன் ஏற்பதனால் இருவுல கிலும் நஷ்டப்படுகின்றான் என்பதை அனைத்து முஸ்லிம்களும் அறிந்தே வைத்துள்ளனர். ஆனால் இப்படிப்பட்ட இந்த நிலையில் கடின மான கஷ்டங்களையும், நஷ்டங்களையும் முஸ்லிம் சமுதாயம் சுமப்பது ஏன்? இறை நெறியை தங்களுடைய வாழ்வில் அன்றாடம் கொண்டு வரவில்லை என்ற ஒரே காரணம் மட்டும்தான். இதை யாராவது மறுக்க முடியுமா? (பார்க்க: 3:139, 30:47)

கணவனும் மனைவியும் இணைந்து வாழ்வதுதான் இருவுலகிலும் இன்பத்தைப் பெற்றுத் தரும். மாற்றமாக கணவனை மனைவி சார்ந்து வாழும் வாழ்க்கையை தான் முஸ்லிம் களில் அதிகமானோர் தேர்வு செய்து வாழ்கின் றனர். வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் மட்டும் தான் நாம் நிம்மதியைப் பெறமுடியும். நம்முடைய தேவைகளைச் சரிவர நிவர்த்தி செய்ய முடியும். சமுதாயத்தில் அந்தஸ்த்தையும் பெறமுடியும் என்ற ஷைத்தான்களின் சூழ்ச்சி வழியில் அநேக முஸ்லிம்கள் சிக்கிய தின் விளைவுகள் மோசமானவை.

கணவனை இழந்த விதவைக் கூட நான்கு மாதம் பத்து நாட்கள் தான் இத்தா இருக்க வேண்டும். கணவன் உயிருடன் இருக்கும்போதே இரண்டு வருடம் அவர(அ)வர் விருப் பம் போல் பல வருடங்களாக இத்தா(?) இருக்கும் அவசியம் என்ன?

இஸ்லாத்தில் நிர்பந்தம் உயிர் போகும் என்ற நிலை வரும்போது தான் அனைத்து சட்டங்களிலிருந்தும் விதிவிலக்கு உண்டு. வெளிநாடு சென்றால் தான் நானோ, என்னைச் சார்ந்தவர்களோ உயிர் வாழ முடியும் என்ற நிலை வரும் போதுதான் சட்டம் விதிவிலக்கு அளிக்க முடியும். வேற எவ்விதக் காரணங்களாலும் வெளிநாட்டில் வாழ்வதால் கணவன் மனைவி இருவரும் பிரிவதற்கு அனுமதி இல்லை. கடனால் பளுவாக்கப்பட்டால் கடனை செலுத்துவதற்கு மட்டும் சம்பாதித்து விட்டு இன்பமான கணவன்-மனைவியுடன் வாழும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள். ஆனால் வீடு கட்டவும், நகைகளை சேர்க்கவும், வெளிநாடு செல்வதற்காக கடன் வாங்கி வைத்துவிட்டு அந்த கடனை அடைப்பதற்காகவும் தாம் நாம் வந்து கஷ்டப்படுவதுடன் வாழ்க்கையையும் வெற்றிடமாக மாற்றுகின்றோம்.

காற்று இல்லாத இடம்தான் வெற்று+இடம்=வெற்றிடம் இப்படிப்பட்ட இடங்க ளில் உயிரினங்கள் வாழ முடியாது. ஆனால் பூமியில் உயிரினங்கள் வாழ்வதற்கு அனைத்தை யும் அல்லாஹ் படைத்துள்ளான். முஸ்லிம்கள் உயிர் வாழ்ந்து வாழ்க்கையை வெற்றிடமாக மாற்றி விடுகிறார்கள்.

சூரா 102:1-8 வசனங்களை திரும்ப திரும்ப படித்துப் பாருங்கள். கபன் கட்டும் காலம் வரை பணத் தேவை இருக்கவே செய்யும். அதற்காக வாழ்வை இழக்காதீர்கள், நரகத்தைப் பார்க்காதீர்கள்.

அனைத்து அருட்கொடைகளைப் பற்றியும் அந்நாளில் கேட்கப்படும் என்றால் உனக்கு கொடுத்த மனைவியைப் பற்றியும், பிள்ளை களைப் பற்றியும், உன் அண்டை வீட்டாரைப் பற்றியும், உன் பெற்றோர்கள் பற்றியும், உம்மத்தன் வாஹிதா(ஒரே சமுதாயம்)அமைய உன் பங்கெடுப்பையும் இன்னும் பிற பொறுப்புகளைப் பற்றியும் கேட்கப்படுமே அந்த நாளை பயந்துக் கொள். இறைநெறி 78:17 (தீர்ப்பு நாள் நேரம் குறிக்கப்பட்டு விட்டது) உங்களது தீர்ப்பு எப்படி அமைய வேண்டும் என்பதற்கு முன் உங்கள் செயல்களை சரிசெய்து கொள்ளுங்கள்.

வாழ்வதற்கு பணம் அவசியம், பணத்திற்காக இரு உலக வாழ்வை தொலைத்து வாழ்க்கையை வெற்றிட வாழ்க்கையாக (Vaccum Life) மாற்றாதீர்கள்.

இறைநெறி 62:8 நீங்கள் விசாரணைக்கு உள்ளாவீர்கள் மறக்காதீர்கள். இறைநெறி 62:11 உணவளிப்பவர்களில் அல்லாஹ் மிகச் சிறந்தவன் என்பதையும் உணருங்கள். ஏதாவது கைத் தொழிலை கற்றுக் கொள்ளுங்கள். வெட்கம் தடையாக இருக்குமானால் எந்த தொழிலையும் கற்றுக் கொள்ள முடியாது.

செல்வமும், பிள்ளைகளும் ஒவ்வொரு மனிதன் நேசிக்கும் விசயங்களே. இவற்றைக் கொண்டு மதிமயங்கிட வேண்டாம். இறை நெறி 63:9யைப் பார்க்கவும்.

இங்கு வெளிநாடு வந்தவர்களில் பெரும்பாலோர் அடிமையாகவே (கஃபீல்) நடத்து வதை மறுக்க முடியுமா? உடல் நலக்குறைவு என்றால் கூட தேவையான ஓய்வு எடுக்க முடியுமா? தொழிற்சாலைகளில் வேலைப் பார்ப்பவர்கள் இரவு வேலையை (Night Shift)-ல் வேலை செய்ய முடியாது என்று சொல்ல முடியுமா? நம்முடைய ஒப்பந்தத்தில் (Agreement)–ல் இரவு வேலை என்று நம்முடன் ஒப்பந்தம் செய்வதில்லையே! இரவில் வேலை செய்வதால் தூக்கமின்மை, தலைவலி நிம்மதி இழப்பு இதனை இறைநெறி 78:9-11 கூறுகின்றது.

அடுத்தவர் வீடு கட்டி விட்டார், அவருடைய மனைவி அழகிய உயர்ந்த ஆடைகளை அணிகிறார் விரும்பிய உணவை உண்கிறார்கள், அதிக பீஸ் செலுத்தும் பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்க வைப்பதால் மனதளவில் நாம் ஏன் இவற்றை அடையவில்லை என்ற பேராசை தான் 108:1-8 நரகத்திற்கு இழுத்துச் செய்கின்றது.

வெளிநாட்டில் வசிக்கும் பலர் தங்களுடைய அறைகளில் T.V.களிலும், தவறான நடத்தை உள்ள படங்களாலும் செல்போனிலே மணிக்கணக்காக மனைவியிடம் அளவு கடந்த கொஞ்சும் பேச்சுக்கள் விளைவு சம்பாதித்த பணமும் போனிலே கரைந்து, தவறான நடத்தைக் காட்சிகளைப் பார்ப்பதால் உள்ளமும் கெட்டு, மனைவியிடம் ஆசை யாய் அதிகமாக பேசுவதால் அவளுக்கு இச்சையையும் தூண்டி இருவருடைய இச்சையையும் அடக்க முடியாமல் மானம் கப்பலேறும் நிலையும், போனில் அதிக நேரம் பேசுவதால் மூளையில் பாதிப்புகள் கொடூரமானது என்பதையும் அறிந்து இந்த தப்புகளை செய்கிறார்களே, இன்னும் சிலர் “உம்மத்தன் வாஹிதா’வை உடைப்பதையே நன்மையாகக் கருதி தங்களுடைய பிரிவு ஜமாஅத்களுக்காக அறிவிப்பு செய்வது, வசூல் செய்வது, வெளிநாடுகளில் சேவை என்று இரத்ததானம், குர்ஆன் போட்டி, வெளிநாடுகளில் குடும்பத்துடன் இருப்பவர்கள் ஒன்றுகூடி மகிழ பிரிவு ஜமாஅத் நிகழ்ச்சிகள் என்று செயல்படக் காரணம் அவர்களுக்கு உண்டான பதவிகள், மேடைகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன் அமர்ந்து அகப் பெருமையும் இவர் ஜித்தா மண்டல பொறுப்பாளர், அவர் தம்மாம் மண்டல செயலாளர் என்ற பதவிகளைத் தவிர வேற என்ன இருக்க முடியும்?

அல்லாஹ்விடம் உள்ள பட்டங்களை முஸ்லிம்கள் எதிர்பார்த்து வாழ்வோமாக! முஸ்லிம்கள் அறிவாளியாக இருக்க வேண்டும், பகுத்தறியும் பண்பை பெற்றவர்களாக வாழ அல்லாஹ் போதுமானவன். வாழ்வும் மரணமும் சோதனைக்காகத்தான். இறைநெறி 30:1-2 பார்க்கவும்.

விமர்சனங்கள்! விளக்கங்கள்!!

விமர்சனம் : ஒரு பிரபலமான மதனி, குர்ஆனை அனைவராலும் விளங்க முடியாது. அனைவரும் இஜ்திஹாது செய்யும் முஜ்தஹிகள் ஆக முடியாது, அரபு மொழியுடன் 16 கலைகள் கற்றுத் தேறிய பெரும் மேதைகள், கலாவல்லுநர்கள் மட்டுமே (முஜ்தஹிதுகள்) குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க முடியும். சாதாரண மக்கள் குர்ஆனை விளங்குவது கடினம் என்று அடித்துக் கூறுகிறார். இது சரியா? மேலும் இஜ்திஹாத் என்றால் என்ன? இத்திபா என்றால் என்ன? லெப்பைத் தம்பி, சென்னை.

விளக்கம் : ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஒன்றைப் பற்றித் தெள்ளத் தெளிவாக அறிந்து அதன் படி செயல்பட முன்வந்துவிட்டால், மார்க்கத்தில் யாரும் யாரையும் ஒருபோதும் ஏமாற்ற முடியாது. குர்ஆன், சுன்னா மட்டுமே மார்க்கம், இஜ்மா கியாஸும் லாஜிக், பாலிஸியும் அவற்றிற்கு உட்பட்ட வைதான் என்பதை மறுக்கும் மவ்லவிகள் எவரையும் நீங்கள் பார்க்க முடியாது. அப்படியானால் யார் பேசினாலும் அவர் மவ்லவியோ, அவாமோ அதுவல்ல விவகாரம்; அதற்குரிய குர்ஆன், வசனத் தையோ, ஆதாரபூர்வமான ஹதீஃதையோ தாருங்கள் என்று துணிந்து அவரிடம் கேட்க முன்வர வேண்டும்.

ஒவ்வொருவரும் அப்படிக் கேட்கத் துணிந்து விட்டால் மார்க்கம் அல்லாததை மார்க்கமாகச் சொல்லி, வயிறு வளர்க்கும் ஆசாமிகளின் கொட்டம் அடங்கிவிடும்.

இப்போது நீங்கள் எழுப்பியுள்ள விமர்சனம் மதனிகள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த மவ்லவிகளும் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக ஓயாது ஒப்பாரி வைக்கும் ஒரு ஒப்பாரிதான்.

இப்போது இதுபற்றி குர்ஆன், ஹதீஃத் என்ன கூறுகின்றன என்று பார்ப்போம்.

மேலும், எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கின்றார்களோ (ஜாஹதூ) நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்து வோம்; நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கின்றான். (29:69)

நிச்சயமாக (உண்மையான) நம்பிக்கையாளர்கள் யார் என்றால், அவர்கள் அல்லாஹ்வின்மீதும், அவனுடைய தூதர் மீதும் நம்பிக்கை கொண்டு, பின்னர் (அது பற்றி அவர்கள் எத்தகைய) சந்தேகமும் கொள்ளாது, தம் செல்வங்களைக் கொண்டும், தம் உயிர்களைக் கொண்டும் அல்லாஹ்வின் பாதையில் தியாகம்(ஜாஹதூ) செய்வார்கள், இத்தகையவர்கள் தாம் உண்மையாளர்கள். (49:15)

ஆகவே, (நபியே!) நீர் இந்த நிராகரிப்பாளர்களுக்குக் கீழ்ப்படியாதீர்! இதன் மூலம் (குர்ஆன் மூலம்) அவர்களுடன் பலமாகப் போராடுவீராக! (ஜாஹிதூ, ஜிஹாதன்) (25:52)

இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராடவேண்டிய முறைப்படி போராடுங்கள்(ஜாஹிதூ, ஜிஹாதிஹீ), அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான், இந்த மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை, உங்கள் பிதாவாகிய இப்ராஹீமுடைய மார்க்கத்தை(ப் பின்பற்றுங்கள்) அவன் தான் (இதற்கு) முன்னர் உங்களுக்கு “முஸ்லிமீன்’ எனப் பெயரிட்டான், இதிலும் (அவ்வாறே கூறப்பட்டுள்ளது, இது ஏனெனில் நம்முடைய) இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருப்பதற்காகவும், நீங்கள் (மற்ற) மனிதர்களின் மீது சாட்சியாக இருப்பதற்காகவும், எனவே, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள், இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன், இன்னும், அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும், மிகச் சிறந்த உதவியாளன். (22:78)

இன்னும், எவர் (அல்லாஹ்வின் பாதையில்) உழைக்கிறாரோ(ஜாஹத்) அவர் நிச்சயமாக தமக்காகவே உழைக்கிறார்(ஜாஹிது), நிச்சயமாக அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (29:6)

உங்களில் (அல்லாஹ்வின் பாதையில் உறுதியாகப்) போராடுபவர்கள்(ஜாஹிதூ) யார் என்றும், (அக்காலை) பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள் யார் என்றும் அல்லாஹ் (பரிசோதித்து) அறியாமல், நீங்கள் சுவனபதியில் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கின்றீர்களா? (3:142)

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விடம் பயபக்தியுடன் நடங்கள்! அவன்பால் நெருங்குவதற்குரிய வழியை (வணக்கங்களில் மூலம்) தேடிக் கொள்ளுங்கள்; அவனுடைய பாதையில் போராடுங்கள்(ஜாஹிதூ); அப்போது நீங்கள் வெற்றி பெறலாம். (5:35)

நபியே! நிராகரிப்பாளர்களுடனும், நயவஞ்சகர்களுடனும் நீர் போராடுவீராக!(ஜாஹிதில்) மேலும், அவர்கள் மீது கண்டிப்பாக நடந்து கொள்வீராக! (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே! தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும்கெட்டது. (9:73)

எனினும், (அல்லாஹ்வின்) தூதரும், அவருடன் நம்பிக்கை கொண்டவர்களும் தங்கள் செல்வங்களாலும், தங்கள் உயிர்களாலும் போராடுகிறார்கள் (ஜாஹிதூ); அவர்களுக்கே எல்லா நன்மைகளும் உண்டு; இன்னும், அவர்கள்தாம் வெற்றியாளர்கள். (9:88)

நபியே! நிராகரிப்பாளர்களுடனும் நயவஞ்சகர்களுடனும் நீர் போராடுவீராக!(ஜாஹிதில்) அவர்களிடம் கண்டிப்புடன் இருப்பீராக! அன்றியும், அவர்கள் ஒதுங்குமிடம் நரகமேயாகும்; அது மிகவும் கெட்ட சேருமிடம் ஆகும். (66:9)

ஜிஹாதில் பெரும் ஜிஹாத்(ஜிஹாதுல் அக்பர்) நஃப்சுடன் போராடுவதாகும். (புகாரீ: முஸ்லிம்)

இந்த இறைவாக்குகளையும், ஹதீஃதையும் படித்து விளங்குகிறவர்கள், ஜிஹாத் என்றால் ஈட்டி, அம்புகளுடனோ, பீரங்கி, துப்பாக்கிகளுடனோ யுத்த களங்களில் போரிடுவது மட்டுமல்ல. சத்தியத்தை நிலைநாட்ட நேர்வழியை அறிந்து கொள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும் செய்யும் பெரும் கடின முயற்சியும் ஜிஹாதே ஆகும்.

இந்த சுயநலமிக்க மவ்லவிகள் குர்ஆனின் மொழி பெயர்ப்புகளில் ஜிஹாத் என்று வரும் இடங்களில் போர் புரிவது, போர் செய்வது என்றே தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்கள். மேலே நாம் எடுத்தெழுதியுள்ள வசனங்கள், யுத்த களங்களில் போர் செய்வதைச் சொல்கின்றனவா? அல்லது நேர்வழியை நிலைநாட்ட நேர்வழியை அறிந்துகொள்ள ஒவ்வொரு ஆணும், பெண்ணும் செய்யும் பெரும் முயற்சியை கடின உழைப்பைக் குறிக்கின்றனவா? சிந்தியுங்கள்.

ஆக ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நேர்வழியை தங்களின் சொந்தப் பெரும் முயற்சியைக் கொண்டு அதாவது ஜிஹாதாக, பெரும் போராட்டமாகப் பாடுபட்டு அறிந்து செயல்பட வேண்டும். அதுவே மறுமையில் பெரும் வெற்றியைப் பெற்றுத் தரும் என்பது குன்றிலிட்டத் தீபமாக விளங்க வில்லையா?

ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் பரீட்சை வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான். எனவே அவன் சுயமாக நேர்வழியை அறிந்து நடப்பது கடமையாகும். பரீட்சையில் பிறரைப் பார்த்து நடப்பது குற்றமாகும். இந்த உண்மையை 67:2, 7:168, 21:35, 10:30, 47:31, 2:155, 7:163, 5:48, 6:165, 11:7, 18:7, 16:92, 47:4, 5:94, 27:40, 76:02, 89:15,16, 2:124, 3:186, 8:17, 3:152,154, 4:6, 7:141, 14:6, 33:11, 37:106, 44:33, 2:249 போன்ற குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் சிரமம் பாராமல், சோம்பல் படாமல் பெரும் முயற்சியாக அதாவது ஜிஹாதாக குர்ஆனை எடுத்து நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயம் அறிய முடியும்.

அதாவது ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தனக்குரிய பரீட்சையில், சோதனையில் வெற்றி பெற அவரவர்கள் சுயமாக ஜிஹாத் செய்ய வேண்டும். அதாவது இஜ்திஹாது செய்ய வெண்டும். ஒவ்வொருவரும் தனக்குத்தானே (மற்றவர்களுக்கு அல்ல) முஜ்தஹிதுதான்-“” ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத” கதையாக, மவ்லவிகள், ஆலிம்கள், அலலாமாக்கள், முஜ்தஹிதுகள் என 7:146 முதல் வீண் பெருமை பற்றி கூறும் குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நிராகரித்துப் பெருமை பேசும் மதனிகள் முதல் ஒட்டுமொத்தப் புரோகிதர் வர்க்கமும் அவர்களைக் கண்மூடி பின்பற்றும் மக்களும் நாளை மறுமையில் அடையப் போகும் நிலையை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38: 55-64, 40:47-50, 41:29, 43:36-45 இந்த குர்ஆன் வசனங்களை நீங்களே படித்துப் பார்த்து முடிவு செய்யுங்கள்.

இந்த வசனங்கள் சிலவற்றில் காணப்படும் பெருமையடிப்போர், பெருமையடிப்போர் என்பவர்கள் சாட்சாத் இந்த மவ்லவிகளே, அவர்கள் தான் எங்களுக்குத்தான் மார்க்கம் விளங்கும். அவாம்களாகிய உங்களுக்கெல்லாம் குர்ஆன் விளங்காது என்று பெருமையடிக்கிறார்கள். அதுமட்டுமல்ல. இப்புரோகிதர்கள் எப்படிப்பட்ட அறிவீனர்களாக, குர்ஆனை விளங்க முடியாதவர்களாக இருக்கிறார்கள் என்று பாருங்கள்.

ஆம்! 7:146 இறைவாக்குக் கூறுவது போல் அவர்களின் வீண் பெருமை காரணமாக குர்ஆனை விளங்குவதை விட்டும் அல்லாஹ்வாலேயே விரட்டி அடிக்கப்படுகிறார்கள். எப்படி என்று பாருங்கள்!

2:34, 4:36, 7:36-40,146,206, 11:10, 16:22,23,49, 17:37, 21:19, 25:63, 28:83, 31:7,18, 32:15, 35:10, 39:49,72, 40:35,47,48,56,60, 45:37, 49:13, 57:23, 59:23, 74:1-3, 34:31-33 இந்க ருர்ஆன் வசனங்களையும் புகாரீ 4850, 4918, 6071, 6657, முஸ்லிம் 2620 இந்த ஹதீஃத்களையும் நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள், “”நாங்கள்தான் ஆலிம்கள், மார்க்கம் கற்ற மேதைகள், நீங்கள் அனைவரும் அவாம்கள் கால்நடைகள் போன்றவர்கள், உங்களுக்குத் தெரிந்த மொழிகளில் குர்ஆனைப் படித்தாலும் உங் களால் குர்ஆனை விளங்க முடியாது என்று வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகள் எத்தனைப் பெரிய வழிகேட்டில் இருக்கிறார்கள் என்பதை நீங்களே விளங்க முடியும். மேலும் அவர்களது வழிகேட்டின் ஆழத்தைப் பாருங்கள்.

மனிதனைப் படைத்த அல்லாஹ்வே நூற்றுக்கணக்கான இடங்களில் குர்ஆனைப் பாமரனும் எளிதாக விளங்கும் நிலையில் தெள்ளத் தெளிவாக, நேரடியாக, எவ்விதச் சந்தேகத்திற்கும் இடமின்றி, எவ்வித முரணுமின்றி விளக்கியுள்ளதாகக் கூறுகிறான். அப்படி அல்லாஹ்வே நேரடியாக விளக்கியுள்ளதை அவாம்களான பாமரர்கள் விளங்க முடியாது என்றால் அது எப்படிப்பட்டப் பெருமை?

இந்த மவ்லவிகள் ஃபிர்அவ்னைப் போல் அல்லாஹ்வுக்கும் மேல் அல்லாஹ்வாகி விட்டார்களா? (நவூதுபில்லாஹ்)

அன்றைய காலகட்டத்தில் தாருந்நத்வா உலமாக்களை விட்டால் அரபு மொழியில் ஆற்றல்மிக்கவர்கள் வேறு யாருமே இல்லை. அப்படியானால் இந்த ஒட்டுமொத்த ஆலிம்கள் சொல்வது போல் அரபு மொழியில் கரை கண்டவர்கள்தான் குர்ஆனை விளக்கி மக்களுக்குச் சொல்ல முடியும் என்பது உண்மையானால் அனைத்தையும் முழு மையாக அறிந்த அல்லாஹ் குர்ஆனை யாருக்கு இறக்கி இருக்கவேண்டும்?

தாருந்நத்வா ஆலிம்களுக்குத்தானே! அரபு மக்கள் ஏற்றிப் போற்றிப் பாராட்டிய அபுல் ஹிக்கம்-ஞானத்தின் தந்தையாகிய அபூ ஜஹீலுக்குத்தானே. ஏன் அல்லாஹ் அந்த அரபு மொழி மேதைகளைத் தெரிவு செய்யவில்லை? போயும் போயும் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவரை, எழுதப் படிக்கத் தெரியாத, கைநாட்டுப் பிரமுகரை அல்லாஹ் தேர்ந்தெடுத்து அகில உலக மக்களுக்கும் ஒரே நேர்வழியைக் காட்டக் கூடிய இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆனை இறக்கி வைத்தான்? அது மட்டுமா? அந்த குர்ஆனை சரியாகவும், முறையாகவும் விளங்கி நேர்வழி நடக்க முன்வந்த மக்கள் யார்? அரபு மொழி மேதைகளான தாருந்நத்வா உலமாக்களா? இல்லையே! அவர்களும் எழுதப் படிக்கத் தெரியாத அரபு மொழியில் அலிஃப், பே, தே அச்சாரங்களைக் கூட அறியாத அவாம் என்ற பாமர மக்களேதானே! 62:2, 7:157, 3:20,75 இறைவாக்குகள் கூறுவதை அறியாதவர்கள் அல்லாஹ் கூறும் அறிஞர்களாக (உலுல் அல்பாப்) இருக்க முடியுமா? சிந்தியுங்கள்.

இன்றும் ஹிஜ்ரி 15ம் நூற்றாண்டில் இருக்கும் அரபு மொழி வல்லுநர்கள் இந்த மவ்லவிகளா? யூத, கிறித்தவர்களா? அரபு மொழி அகராதி, குர்ஆன் பொருள் அட்டவணை, ஹதீஃத் பொருள் அட்டவணை இவற்றைத் தயாரித்து உலகிற்கு அளித்தவர்கள் முஸ்லிம் அரபு மொழி வல்லுநர்களா? முஸ்லிம் அல்லாத அரபு மொழி வல்லுநர்களா? வீண் அரபு மொழி பெருமை பேசும் இம்மவ்லவிகள் உண்மையிலேயே அறிஞர்களாக இருக்க முடியுமா? சிந்தியுங்கள்!

உண்மையிலேயே இம்மவ்லவிகள் குர்ஆனைக் கற்றறிந்த மேதைகளாக, முஜ்தஹித்களாக இருந்தால், 6:90, 10:72, 11:29,51, 23:72, 25:57, 26:109, 127,145,164,180, 34:47, 38:86, 42:23 ஆகிய 14 குர் ஆன் வசனங்களையும், மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டவர்கள் நேர்வழியில் இல்லை என்று கூறும் 36:21 வசனத்தையும், மேலும் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வதால் ஏற்படும் கேடுகள் பற்றி 2:41,75,78,79,109,146,159, 160,161,162,174,188, 3:78,187,188, 4:44,46, 5:13, 41,62,63, 6:21,25:26, 9:9,10,34, 11:18,19, 31:6 போன்ற எண்ணற்ற வசனங்களையும், யூத, கிறித்தவ, இன்ன பிற மதங்களின் மதகுருமார்களை மிக மிகக் கடுமையாக விமர்சித்துக் கூறும் ஆயிரக்கணக்கான குர்ஆன் வசனங்களையும் முறையாக முழுமையாகப் படித்து விளங்கி இருந்தால், ஒரு ஜான் வயிற்றை மிகமிகக் கொடிய ஹராமான வழியில் நிரப்ப இப்படியயல்லாம் தில்லுமுல்லுகள், திருகு தாளங்கள், உருட்டல், புரட்டல் செய்வார்களா? இந்த மவ்லவிகள்.

ஆலிம், அல்லாமா, மார்க்கத்தில் கரைகண்ட மேதைகள், முஜ்தஹித்கள், முஜத்தித்கள், எங்களுக்குத்தான் குர்ஆன் விளங்கும், அவாம்கள்-பாமரர்கள் அவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் குர்ஆனைப் படித்தாலும் அவர்களால் விளங்க முடியாது என்று வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகள் 7:146 இறை வாக்குக் கூறுவது போல் குர்ஆனை விளங்குவதை விட்டும் அல்லாஹ்வாலேயே விரட்டி அடிக்கப்படுகிறார்கள்.

நேரடியாக குர்ஆன் வசனங்களைக் காட்டினாலும் ஏற்கமாட்டார்கள், வழிகேடுகளையே நேர்வழியாக மக்களுக்குக் காட்டுவார்கள். 39:72 இறைவாக்குக் கூறுவதுபோல் வீண் பெருமையடிக்கும் இவர்கள் இறுதியில் ஒதுங்குமிடம் நரகமே! இது நமது கூற்றல்ல!

இதோ இவர்களின் இழிநிலையை பைஹக்கி ஹதீஃதும் கூறுகிறது. ஒரு காலம் வரும். இஸ்லாத் தின் பெயரைத் தவிர வேறொன்றும் எஞ்சி இருக் காது. குர்ஆன் ஏட்டில் இருக்குமே அல்லாமல் வேறொன்றும் எஞ்சி இருக்காது. அவர்களின் பள்ளிகள் முற்றிலும் நேர்மை தவறியவர்களைக் கொண்டே நிரம்பியிருக்கும். அவர்களின் ஆலிம்கள் என்ற மார்க்க அறிஞர்கள் வானத்தின் கீழுள்ள படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டப் படைப்பாக இருப்பார்கள். தீய செயல்கள் அனைத்தும் அவர்களிலிருந்தே (கோழி குஞ்சுகள் பொரிப்பது போல்) பொரிச்சி வெளியாகும். பைஹக்கி 1908, மிஷ்காத் பாகம் 1, பக்.9.

மேலும் 7:175-179, 45:23, 47:25 குர்ஆன் வசனங்களைப் படித்து, அற்பமான இவ்வுலகை பெரிதும் நேசித்து ஒரு ஜான் வயிற்றை முழுக்க முழுக்க கொடிய ஹராமில் நிரப்பும் இம்மவ்லவிகளின் இழிநிலையை விளங்கிக் கொள்ளுங்கள்.

நிச்சயமாக என் சமூகத்தினர் மீது நான் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கும் தலைவர்கள் பற்றியே ஆகும். (அபூதாவூது : 4252)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் கல்வியை(த்தன்) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துக் கொள்ள மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைப் பறிப்பான். இறுதியில் எந்த அறிஞரையும் அல்லாஹ் விட்டுவைக்காத போது மக்கள் அறிவீனர்களைத்(தம்) தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட அவர்கள் எந்த அறிவுமில்லாமல் தீர்ப்பு வழங்குவார்கள். எனவே தாமும் வழிதவறிப் பிறரையும் வழிதவறச் செய்வார்கள். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ்(ரழி) அறிவிக்கிறார்கள்.

இதே கருத்தில் அமைந்த ஹதீஃத் மற்றோர் அறிவிப்புத் தொடர் வழியாகவும் வந்துள்ளது. (புகாரீ : 100)

இந்த நிலை உமர்பின் அப்தில் அஸீஸ்(ரஹ்) காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது என்பதை இந்த ஹதீஃதின் ஆரம்பத்தில் “”கல்வி எவ்வாறு கைப்பற்றப்படும்” என்ற உப தலைப்பிலிருந்து தெரிகிறது.

மதங்களின் வரலாறுகளைப் பார்க்கும் போது ஒவ்வொரு சமுதாயத்திலும் அந்த சமுதாயத்தின் இறைத்தூதர் மறைவுற்ற மிகக் குறுகிய காலத்தி லேயே மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுருமார்கள் அச்சமூகங்களில் ஷைத்தானின் துணையுடன் திருட்டுத்தனமாக நுழைந்து ஆதிக்கம் செலுத்துவதையே பார்க்க முடிகிறது.

இறுதித் தூதருக்கு முன்னர் வந்த நபி ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ் தன்வசம் உயர்த்திக் கொண்ட குறுகிய காலத்திலேயே (பார்க்க : 4:157-159) அவரைக் கடுமையாக எதிர்த்துக் கொண்டி ருந்த புரோகிதர் சவுல் என்ற பவுல் முக்கடவுள் கொள்கையைக் கற்பனை செய்து ஏகன் இறை வனுக்கு இணை வைக்கும் கொடிய செயல் மூலம் பெருங் கூட்டத்தைச் சேர்த்துக் கிறித்தவ மதத்தை நிலைநாட்டி ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார். ஆக மதங்களின் வரலாறுகள் இப்படித்தான்.

அதேபோல் நபி(ஸல்) அவர்களின் மறைவுக்கு மிகக் குறுகிய காலத்திலேயே இப்புரோகித மதகுரு மார்களின் ஆதிக்கமே மிகைத்துவிட்டது. முதலில் ´ஆ-சுன்னத் ஜமாஅத் பிரிவுகள், அதன்பின் பல பிரிவுகள், ஹிஜ்ரி 400க்குப் பிறகு மத்ஹபு பிரிவுகள், 500க்குப் பிறகு தரீக்கா பிரிவுகள் என இம்மதகுரு மார்கள் முஸ்லிம்களிடையே ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஷைத்தானும், ஆதத்தின் சந்ததிகளில் மிகப் பெரும்பாலோரைக் கொண்டு நரகை நிரப்பச் சபதம் ஏற்றிருப்பதால் (பார்க்க : 15:29-40) இம்மதகுருமார்களுக்கு உறுதுணையாக இருக்கிறான். 32:13, 11:118,119 இன்னும் எண்ணற்ற இறைவாக்குகள் கூறுவது போல் பெருங் கொண்ட முஸ்லிம்கள் வழிகெடுக்கும் இம்மதகுருமார்கள் பின்னால்தான் செல்கிறார்கள்.

1987 வரை ஹனஃபி, மாலிக்கி, ஷாஃபி, ஹம்பலி, அஹ்ல ஹதீஃத், முஜாஹித் என 6 மத்ஹபுகளில் இருந்த முஸ்லிம்கள் 1987க்குப் பிறகு பல பிரிவுகளாகி பல மத்ஹபுகளை தவ்ஹீத்வாதிகள் என 4:49, 53:32, 6:153 குர்ஆன் வசனங்களை நிராகரித்துப் பீற்றும் தவ்ஹீத்(?) மவ்லவிகள் கற்பனை செய்து விட்டனர். அல்குர்ஆனின் 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 வசனங்கள் கூறுவது போல் இந்தப் பிரிவினைவாதிகள் அனைவரும் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கின்றனர். 2:159,160,161,162 இறைவாக்குகள் கூறுவது போல் தங்கள் தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டு திருந்தினால் தப்பினார்கள். இல்லை என்றால் நிரந்தர நரகம் என்று நாம் கூறவில்லை. மேற்படி குர்ஆன் வசனங்கள் கூறுகின்றன.

மேலும் 2:186 இறைவாக்கு அல்லாஹ்வையே முழுமையாக நம்பச் சொல்கிறது. அவனிடமே கேட்டு அதாவது குர்ஆன் வழிகாட்டல்படி நடந்தால் மட்டுமே நேர்வழி என உறுதிப்படுத்துகிறது. 7:3 இறைவாக்கு அல்லாஹ்வால் இறக்கப்பட்டவை மட்டுமே அதாவது குர்ஆன், 52:48 கூறுவது போல் அல்லாஹ்வின் கண்காணிப்பிலும் வஹியின் தொடர்புடன் (53:2-4) இருந்த இறுதித் தூதரைத் தவிர்த்து வேறு மனிதர்களில் யாரையும் வழிகாட்டியாகக் கொள்ளக் கூடாது என்று அல்லாஹ் கட்ட ளையிடுகிறான். மீறி மனிதர்களில் யாரையும் வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட்டால் அவர்களின் நல்ல மல்கள் நிறுக்கப்படாது. நாளை நிரந்தர நரகம் என 18:102-106 குர்ஆன் வசனங்கள் கடுமையாக எச்சரிக்கின்றன.

33:36 இறைவாக்கு மார்க்கத்தில் மனித அபிப்பிராயத்திற்கு இடமேயில்லை. அது பகிரங்கமான வழிகேடு என்று எச்சரிக்கிறது. அதையும் மீறி இம்மவ்லவிகளின் சுய விளக்கங்களை மார்க்கமாகக் கொண்டு அவற்றை எடுத்து நடப்பவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒப்பாரி வைப்பதை 33:66-68, இன்னும் பல இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

இந்த ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ள அனைத்து குர்ஆன் வசனங்களையும் சிரமம் பாராமல் பெரும் ஜிஹாதாக குர்ஆனை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் இம்மதகுருமார்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட அல்லாஹ் அருள் புரிவான். இது இறைவனின் வாக்கு (பார்க்க : 29:69) குர்ஆனைப் படித்துப் பார்க்க எங்களுக்கு நேரம் எங்கே இருக்கிறது. எங்கள் பிழைப்பைப் பார்க்க, 100:6-11, இறைவாக்குகள் கூறுவது போல் பொரு ளைச் சேர்த்துக் குவிக்கவே எங்களுக்கு நேரம் போதாது என்று கூறுபவர்கள் மரணம் வரை இம் மவ்லவிகளின் உடும்புப் பிடியிலிருந்து விடுபடவே முடியாது. நிரந்தர நரகமே கூலியாகக் கிடைக்கும்.

இதற்கு மேலும் இன்னும் எண்ணற்ற குர்ஆன் வசனங்களைக் காட்டினாலும் நரகை நிரப்ப இருக்கும் ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 பேர் இம்மதகுரு மார்கள் பின்னால்தான் செல்வார்கள். (பார்க்க: புகாரீ : 3348, 4741, முஸ்லிம் 379) இம்மவ்லவிகளுக்குள்ள சாதக நிலை (Plus Point)  இதுதான். மார்க்கப் பணியை மதமாக்கி வயிற்றுப் பிழைப்பாகவும், உலகியல் ஆதாயங்களை லட்சியமாகக் கொண்ட வர்களும் 7:146 இறைவாக்குக் கூறுவது போல் வழிகேடுகளை நேர்வழியாகக் காட்டும் கட்டாயம் ஏன் ஏற்படுகிறது என்றால், அப்போதுதான் நரகை நிரப்ப இருக்கும் பெருங்கூட்டம் அவர்கள் பின்னால் வருவார்கள். இம்மவ்லவிகள் எதிர்பார்க்கும் காசு, பணம், பட்டம், பதவி, சொத்து, சுகம் என அனைத்தும் கிடைக்கும்.

நபிமார்கள் மார்க்கப் பணியை வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளவில்லை. கலீஃபாக்கள் கடமையான மார்க்கப் பணியை வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளவில்லை. நபிதோழர்கள் வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளவில்லை. நபி தோழர்களில் தொழ வைத்த இமாம்கள் கூலிக்கு மாரடிக்கவில்லை. தங்கள் தொழுகைகளை அற்பக் காசுக்கு விற்றுவிட்டு நாளை மறுமையில் தொழுகையற்றக் கூட்டத்தோடு நிற்கும் பரிதாப நிலைக்கு ஆளாகவில்லை.

இவர்கள் வரம்பு மீறி புகழ்ந்து கட்டுக்கதைகளைக் கூறி எந்த நான்கு இமாம்களைப் புகழ்ந்து அவர்களின் பெயரால் பித்அத்தான நான்கு மத்ஹபுகளைக் கற்பனை செய்திருக்கிறார்களோ அந்த மரியாதைக்குரிய இமாம்களும் மார்க்கப் பணியை மதமாக்கி அதையே தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளவில்லை. ஹலாலான வழியில் தங்கள் கைகளால் உழைத்தே சாப்பிட்டார்கள். எப்போது எந்தக் காலக் கட்டத்தில் நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களை நிராகரித்து மார்க்கப் பணியை தங்களின் வயிற்றுப் பிழைப்பாக இம்மதகுருமார்கள், புரோகிதர்கள் கொள்ள ஆரம்பித்தார்களோ அப்போது தான் அவர்கள் நாங்கள்தான் மார்க்கம் கற்ற மேதைகள், அவாம்களுக்கு அதாவது பாமரர்களுக்கு குர்ஆன் விளங்காது என்று வீண் பெருமை பேசி மேலும் வழிகேட்டில் செல்ல ஆரம்பித்தார்கள்.

அல்லாஹ் இவர்களின் உள்ளங்களை கற்பாறைகளைவிடக் கடினமாக்கிவிட்டான். (பார்க்க : 2:74, 5:13, 6:43,125, 57:16)

எனவே துணிந்து நரகிற்கு இட்டுச் செல்லும் கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டி பெருங்கொண்ட மக்களை நரகிற்கு இட்டுச் செல்கிறார்கள். (பார்க்க : 7:146, 36:21, 33:36,66-68)

நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு, கரியா கிக் கொண்டு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி, சபித்து ஒப்பாரி வைக்கப் போகிறார்கள். இந்த உண்மையை மேலே எழுதியுள்ள குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து உணர்கிறவர்கள் நிச்சயம் ஏற்பார்கள்.

கடந்த ஆயிரம் வருடங்கள் வரலாற்றில் இவர்கள் ஆலிம்கள், அல்லாமாக்கள், குர்ஆனைக் கரைத்துக் குடித்த மேதைகள், முஜ்தஹித்கள், முஜத்தித்கள் என வானளாவப் புகழும் ஒரே ஒரு நபராவது கடமையான, தங்கள் மீது விதிக்கப்பட்ட மார்க்கப் பணியை வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வது நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்கள் மிகக் கடுமையாகக் கண்டிக்கும் மிகக் கொடிய ஹராம் என்று மக்களுக்குப் பகிரங்கமாகச் சொல்லியுள்ளதை, எழுதியுள்ளதைக் காட்டமுடியுமா?

குர்ஆன் முஸ்லிம்களுக்குரிய வேதம் அல்ல. ஆதத்தின் சந்ததிகள் அனைவருக்கும் நேர்வழி காட்டும் இறையளித்த இறுதி வாழ்க்கை நெறிநூல், அதன் கருத்துக்கள் அவரவர்களுக்குத் தெரிந்த மொழிகளில் கொடுக்கப்பட்டால் அவர்களால் தெளிவாக விளங்க முடியும். அந்தளவு தெளிவாக, எளிதாக மனிதனைப் படைத்த அல்லாஹ்வே எளிமைப்படுத்தித் தந்துள்ளான் என்று எழுதிய, சொன்ன ஒரேயயாரு அறிஞரையாவது இவர்களால் காட்ட முடியுமா? முடியவே முடியாது!

இஸ்லாமிய மார்க்கத்தில் ஆலிம்கள் என்ற ஒரு தனிப் பிரிவோ, உலமாக்கள் சபை என்ற ஒரு சபையோ, இஜ்திஹாத் செய்யும் முஜ்தஹித்கள் என் போரோ இல்லவே இல்லை; ஒவ்வொரு ஆணும், பெண்ணும் தானே நேர்வழியை குர்ஆனிலிருந்தும், ஹதீஃதிலிருந்தும் அறிந்து செயல்படும் ஆலிமாகவும், தான் சந்திக்கும் இடர்பாடுகளை குர்ஆனைக் கொண்டும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களைக் கொண்டும் இஜ்திஹாது செய்து முடிவெடுக்கும் முஜ்தஹிதாவும் இருக்க வேண்டும் என்பதற்கு ஆரம்பத்தில் நாம் எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்களே போதிய சான்றாகும்.

இந்த மவ்லவிகள் சில குர்ஆன் வசனங்களுக்குச் சுய விளக்கம் கொடுத்து ஆலிம் வர்க்கம், உல மாக்கள் சபை, முஜ்தஹித்கள் என தனி அதிகாரம் படைத்தவர்கள் என சமுதாயத்தைப் பிளவுபடுத்தக் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் ஆதாரமாகத் தருகிறார்கள். அவை வருமாறு: உங்களில் நம்பிக்கையாளர் களுக்கும், கல்வி ஞானம் உடையவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான். (58:11)

நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில், அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் கல்விமான்களே! (35:28)

அல்லாஹ்விடம் பயபக்தியுடன் நடங்கள், அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கிறான். (2:282) கற்றவர்களும், கல்லாதவர்களும் சமமாவார்களா? (39:3)

குருடனும், கண்ணுள்ளவனும் சமமானவர்களா? (35:19)

எவரொருவருக்கு அல்லாஹ் நன்மையை நாடி விட்டானோ அவரை மார்க்கத்தில் அறிவாளியாக ஆக்கிவிடுகிறான் என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரீ)

மனிதர்களே! கல்வி என்பது கற்பது கொண்டுதான் உண்டாகும். விளக்கம் என்பது விளங்கத் தேடினாலே கிடைக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (தப்ரானி)

இந்த குர்ஆன் வசனங்களையும், ஹதீஃதுகளையும் நடுநிலையுடன் மீண்டும் மீண்டும் படித்து விளங்குங்கள். இவை அனைத்தும் ஒவ்வொரு ஆணையும், பெண்ணையும் ஆலிமாக-அறிந்தவராக-அறிஞராக ஆக ஏவுகின்றனவா?அல்லது 21:92, 23:52 இறைவாக்குகள் கூறும் உம்மத்தன் வாஹிதா-ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தைப் பிளவுபடுத்தக் கூறுகின்றனவா? சிந்தியுங்கள், சமுதாயத்தைப் பிளவுபடுத்துவது மாபெரும் கொடிய குற்றம் என 3:103, 105, 6:153,159, 30:32, 42:13,14, 21:93, 23:53-56, இறைவாக்குகள் கூறுவது இம்மவ்லவிகளின் கண்களில் படுவதில்லையா? (எச்சரிக்கை: 7:146)

அப்படியே இந்த வசனங்கள் ஆலிம், அல்லாமா என்ற பிரிவுக்கு அனுமதி கொடுக்கின்றன என்றால், 2:213, 16:44,64 இறைக் கட்டளைகள்படி அதை யார் நடைமுறைப்படுத்திக் காட்டி இருக்க வேண்டும்? நபி(ஸல்) அவர்கள்தானே! நபி(ஸல்) காட்டி இருக்கிறார்களா?

பள்ளிக்குப் பக்கத்திலிருந்தத் திண்ணையில் அடுகிடை, படுகிடை எனப் பட்டினி கிடந்து மார்க்கம் கற்றார்களே திண்ணைத் தோழர்கள். அவர்களுக்கு ஆலிம் பட்டம் கொடுத்து வழிகாட்டினார்களா? அவர்கள்தான் மார்க்கம் சொல்ல அதிகாரம் பெற்ற வர்கள், முஜ்தஹித்கள் என்று அடையாளம் காட்டி வழிகாட்டி இருக்கிறார்களா? இல்லையே! அப்படி என்றால் 33:36 இறைவாக்குச் சொல்வது போல் இம் மவ்லவிகள் பகிரங்கமான வழிகேட்டில் இருக்கி றார்கள் என்பதில் ஐயமுண்டா?

ஆம்! யார் ஆலிம்கள், மார்க்கம் கற்ற மேதைகள், பட்டம் பெற்றவர்கள், முஜ்தஹித்கள் எனப் பெருமை பேசுகிறார்களோ, மற்றவர்களை அவாம் கள், குர்ஆனை அவர்களுக்குத் தெரிந்த மொழியில் படித்தாலும் மார்க்கத்தை அறியமுடியாது என ஆணவம் பேசுகிறார்களோ, அவர்கள் வடிகட்டின ஜாஹில்கள்; குர்ஆனை விளங்கா மூடர்கள், அல்லாஹ்வாலேயே குர்ஆன் விளங்குவதை விட்டும் விரட்டி அடிக்கப்படுபவர்கள், கோணல் வழிகளையே நேர்வழியாக ஏற்பார்கள், நேர்வழியை ஒரு போதும் ஏற்க மாட்டார்கள் என்று குர்ஆன் 7:146 இறைவாக்குக் கூறுவது ஒருபோதும் பொய்யாகாது.

இந்த ஆலிம்-உலமா-முஜ்தஹித் வர்க்கம் நபிமார்களின் வாரிசுகள் அல்ல. அபூ ஜஹீலின் வாரிசுகள் என்பதை நன்குணர்ந்து, அவர்களை முற்றிலும் நிரா கரித்துப் புறக்கணித்துவிட்டு 3:103 இறைக்கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து ஒற்றுமையாக ஒரே ஜமாஅத்தாக குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடப்பவர்கள் மட்டுமே நேர்வழி நடந்து சுவர்க்கம் சேர முடியும்.

ஆலிம், அல்லாமா, மார்க்கம் கற்ற மேதை, மார்க்கத்தை நாங்கள் விளக்கித்தான் அவாம்கள் விளங்க முடியும் என்று வீண் பெருமை பேசுவது கொடிய குற்றம். எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன. பெருமையடிப்பவன் ஒருபோதும் சுவர்க்கம் நுழைய முடியாது. அவனது நிரந்தர இருப்பிடம் நரகம் என்று எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் எச்சரிக்கின்றன என்று துணிந்து சொன்ன, எழுதிய ஒரேயயாரு மேதையையாவது இம்மவ்லவிகள் காட்ட முடியுமா?

இங்கு நாம் மேலே எழுதியுள்ளவை அனைத்தும் வட்டி, மது, சூது, விபச்சாரம், கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, இன்னும் இவை போல் ஹரா மாக்கப்பட்டச் செயல்கள் ஒருசில குர்ஆன் வசனங்களில் மட்டும் சொல்லப்பட்டவை. மாறாக எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் மூலம் மிக மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்ட, ஹராமாக்கப்பட்டக் கொடிய மிகப்பெரும் பாவமான செயல். கடமையான மார்க்கப் பணியைக் கூலிக்காக செய்வது.

ஒருசில வசனங்களில் கண்டிக்கப்பட்டுள்ள வி­யங்களை மிகக் கடுமையாகக் கண்டித்துச் சொல்லும் இம்மவ்லவிகள் எண்ணற்ற வசனங்களில் மிக மிகக் கடுமையாகக் கண்டிக்கப்பட்டுள்ள ஹரா மாக்கப்பட்ட ஹராம்களை அறியாதிருக்கிறார்களா? உண்மை அதுவல்ல. 2:146, 6:20 இறைவாக்குகள் கூறுவது போல், அவர்கள் பெற்றப் பிள்ளைகளை நன்கு அறிவதுபோல், உண்மையை-நேர்வழியை நன்கு அறிவார்கள். நன்கு அறிந்து கொண்டே அவற்றை மறைக்கின்றனர். அந்தளவு அவர்களின் உள்ளங்கள் கொடிய ஹராமான உணவு, உடை, இருப்பிடம் காரணமாக கற்பாறைகளை விட மிகக் கடினமாக இறுகிவிட்டன. ((27:14)

இப்படிப்பட்ட இழிகுணங்களையுடைய இம் மவ்லவிகள் மக்களுக்கு மார்க்கம் சொல்லத் தகுதி பெற்றவர்களா? இதை நீங்களே முடிவு செய்யுங்கள். நாம் அடிக்கடிக் கேட்போம். அதாவது பட்டப் பகலில் மேகமூட்டமே இல்லாத நிலையில் வெள்ளை நிற பசுமாட்டையே பார்க்க முடியாத குருடன் அமாவாசை இருட்டில் கருநிற எருமை மாட்டைப் பார்த்தேன் என்று சொன்னால், அதை நம்பி ஏற்பவன் வடிகட்டின மூடனாக மட்டுமே இருக்கமுடியும் என்று.

அதேபோல் குர்ஆனின் எண்ணற்ற வசனங்கள் மிகமிகக் கடுமையாக எச்சரித்துக் கூறும் கடமையான-விதிக்கப்பட்ட மார்க்கப் பணியை வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளக் கூடாது, ஆலிம் அல்லாமா மார்க்கம் கற்ற மேதை என வீண் பெருமையடிக்கக் கூடாது, மற்றவர்களை இழிவாகக் கருதக் கூடாது என்று தெளிவாக கூறப்பட்டவற்றை விளங்க முடியாத குருடர்கள் முஜ்தஹித்கள் ஆக முடியுமா? ஒரு சில வசனங்களில் கூறியுள்ள மார்க்கச் சட்டங்களை சரியாக விளங்கித் தீர்ப்பு வழங்கமுடியுமா? அல்லது அபூதாவூது 4252 ஹதீஃத் கூறுவது போல் வழிகேடுகளை நேர்வழியாகக் கூறும் வழிகெட்டத் தலைவர்களாக-வழிகெட்ட வழிகாட்டிகளாக இருக்க முடியுமா? நீங்களே முடிவெடுங்கள்.

அடுத்து இஜ்திஹாத் என்றால் என்ன? இத்திபா என்றால் என்ன என்று கேட்டிருக்கிறீர்கள்.

இஜ்திஹாத் என்றால் 26:69 இறைவாக்குக் கூறுவது போல் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் குர்ஆனிலும், ஹதீஃதிலும் பெரும்பாடுபட்டு, பெரும் முயற்சி எடுத்து அதாவது ஜிஹாத்-இஜ்திஹாது செய்து நேர்வழியை அறிந்து நடப்பதாகும். வழிகெட்டத் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களைப் புறக்கணிப்பதாகும். இஜ்தி ஹாத் என்பது ஒவ்வொருவரும் தனக்காக (ஊருக்காகவோ, பிறருக்காகவோ அல்ல) இஜ்திஹாத் செய்வதாகும். ஒருவர் இஜ்திஹாது செய்து அறிந்ததை அவர் மட்டுமே எடுத்து நடக்க வேண்டும். ஒருவர் இஜ்திஹாது செய்து அறிவிப்பதை மற்றவர்கள் எடுத்து நடப்பது இத்திபா அல்ல தக்லீதாகும். பரீட்சையில் காப்பி அடிப்பது போலாகும், தோல்வி; நரகம் நிச்சயம். (பார்க்க : 33:36, 66-68)

மற்ற மக்களுக்காக நாங்கள் இஜ்திஹாத் செய்து சொல்லும் முஜ்தஹித்கள் என்று ஒருவர் சொன்னால் அவர் 33:36 இறைவாக்குச் சொல்வது போல் பகிரங்கமான வழிகெட்டில் இருக்கிறார். ஓர் ஆலிமிடம் ஓர் அவாம் வந்து சட்டம் கேட்டால், அவர் உண்மையிலே நேர்வழி நடக்கும் ஆலிமாக இருந்தால் அவர் உடனடியாக குர்ஆனை எடுத்து அதற்குரிய குர்ஆன் வசனத்தையோ அல்லது ஹதீஃதையோ எடுத்துக் காட்டுவதே அவரது கடமையாகும். அதை விட்டு அவரது சுய கருத்தை குர்ஆன் வசனம் நேரடியாகக் கூறுவதை, 2:159 இறைவாக்குக் கூறுவது போல் இருட்டடிப்புச் செய்து சொல்வது பகிரங்கமான வழிகேடு; நாளை நரகில் சேர்க்கும்.

ஆலிம், அல்லாஹ் பல இடங்களில் கூறும் “”உலுல் அல்பாப்” என்ற உண்மையான அறிஞராக இருந் தால் தன்னிடம் சந்தேகம் கேட்டு வருபவர்களிடம் நேரடியான குர்ஆன் வசனத்தைக் காட்டி, ஆதாரபூர்வமான ஹதீஃதைக் காட்டி, அவர்களை குர்ஆனுடனும், ஹதீஃதுடனும் தொடர்புபடுத்தி விடுவார். அதற்கு மாறாக அந்த இரண்டையும் இருட்டடிப்புச் செய்துவிட்டு 2:159 வசனம் கூறுவது போல் தான் இஜ்திஹாத் செய்ததாகக் கூறித் தனது சுய விளக்கத்தைக் கூறுகிறவர் ஆலிம் அல்ல; வடிகட் டின ஜாஹில்-அபூ ஜஹீலின் வாரிசு என்பதை விளங்கிக் கொள்ளுங்கள். அவரது இறுதி முடிவை 2:161, 162 வசனங்களைப் படித்து நீங்களே அறியவும்.

அவாம்கள் குர்ஆன், ஹதீஃதை நேரடியாகப் படித்து விளங்க முற்பட்டால் அவர்கள் வழிகேட் டில் செல்லவே வாய்ப்பு ஏற்படும் என்று இந்த மவ்லவிகள் கதையளக்கலாம். மக்களை வழிகெடுக் கலாம். ஆடு நனைகிறது என்று ஓநாய்க்கு ஏன் கவலை? அப்படித் தவறாக விளங்கி வழிகெட்டால் அவர் மட்டும்தானே வழிகெடுவார். அதுவும் 29:69 இறைவாக்குப்படி அவர் நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் பார்த்து இஜ்திஹாத் செய்தால் அல் லாஹ் அவருக்கு நேர்வழியை எளிதாக்கித் தருவ தாக வாக்களிக்கிறானே! அப்படி அவர் இஜ்திஹாத் செய்து தவறான முடிவுக்கு வந்தாலும், அவர் முயற்சி செய்ததற்கு ஒரு கூலி கிடைக்குமே. தண்டிக்கப்படமாட்டாரே. அதற்கு மாறாக 2:186 வச னம் கூறுவதற்கு முரணாக அல்லாஹ்மீது நம்பிக்கை இழந்து குர்ஆன், ஹதீஃத் அல்லாஹ்வும், அவனது தூதரும் தெளிவாக விளக்கிய நிலையிலும் அவை தனக்கு விளங்காது. இந்த மவ்லவிகள் விளக்கித்தான் புரியும் என்ற நம்பிக்கையில் இந்த மவ்லவிகள் கூறுவதை ஏற்று நடந்தால் அவர் அல்லாஹ்வுக்கு இணை வைத்தப் பெரும் குற்றத்திற்கு ஆளாகி நாளை நரகம் புக நேரிடும் என்று 2:186, 7:3, 18:102-106, 33:36, 66-68 இன்னும் பல வசனங்கள் கூறுகின்றனவே. இந்த வசனங்களை இந்த மவ்லவிகளால் விளங்க முடியவில்லையா?

ஒவ்வொருவரும் தனித்தனியாக அவரவர்களுக்காக மட்டும் குர்ஆன், ஹதீஃதில் ஜிஹாத்-இஜ்திஹாத்-பெரும் முயற்சி செய்தால் அவரவர்களுக்கு 29:69 சொல்வது போல் நேர்வழி கிடைக் கும். தவறினாலும் தண்டனையிலிருந்து தப்ப வழி இருக்கிறது. தண்டனை இல்லை. அதற்கு மாறாக 2:186ல் அல்லாஹ் சொல்வதை நிராகரித்து அல்லாஹ் மீதும் தன் மீதும் நம்பிக்கை இழந்து, தனக்கு அரபு மொழி தெரியாது, அரபு மொழி கற்ற மவ்லவிகள்தான் சரியாகச் சொல்வார்கள் என்று நம்பி, அவர்கள் கூறுவதை அப்படியே எடுத்து நடக்கும் பெருங்கூட்டம் நரகம் செல்லும் நிலை ஏற்படுகிறதே! (33:66-68) இதற்கு யார் பொறுப்பு?

இப்போது சொல்லுங்கள். அவரவர்கள் தனித் தனியாக அவரவர்களுக்காக இஜ்திஹாத் செய்யும் முஜ்தஹித்களாக இருப்பது நேர்வழியா? அல்லது இஜ்திஹாத் செய்யும் வல்லமை பெற்ற முஜ்தஹித் என்ற பெத்தப் பெயருடன் குர்ஆன், ஹதீஃதுக்கு தங்களின் சுய நலனிற்காக, வயிறை வளர்க்க சுயவிளக்கம் கொடுப்பவர்களைப் பின்பற்றுவது நேர் வழியா? எப்படி தூய இஸ்லாமிய மார்க்கத்தில் ஆலிம் அல்லாமா என்று ஒரு தனிப்பிரிவு இல்லையோ அதே போல் முஜ்தஹித் என்ற ஒரு தனிப் பிரிவும் இல்லவே இல்லை. அவரவர்கள் அவர்களுக்கு ஆலிம் என்பது போல், அவரவர்கள் அவரவர்களுக்கு முஜ்தஹிதுகளே. ஒவ்வொருவரும் அன்றாடம் குர்ஆன், ஹதீஃதைப் படித்து விளங்கி அதன்படி நடப்பவர்களே நேர்வழியில் இருக்கிறார்கள்.

அடுத்து இத்திபாவும் இஜ்த்திஹாதும் ஒன்றா? என்று கேட்கிறீர்கள். அவை ஒவ்வொன்றும் வேறு வேறானவை. இஜ்திஹாத் ஒவ்வொருவரும் குர்ஆன், ஹதீஃதில் முயற்சி எடுத்து-ஜிஹாத் செய்து நேர்வழியை அறிந்து அதன்படி செயல்படுவதாகும். இத்திபா ஒருவர் சொல்வது குர்ஆன், ஹதீஃதில் இருக்கிறதா? அதுதான் நேர்வழியா? என்று தெரிந்து பின்பற்றுவதாகும். குர்ஆனே படிக்கப்பட்டாலும் குருடர்களைப் போல், செவிடர்களைப் போல் விழமாட்டார்கள்.(25:73) என்று குர்ஆன் கூறுகிறது. இந்த நிலையில் மனிதர்களின் கருத்துக்களை பரிசீலிக்காமல் எடுத்து நடக்க முடியுமா? சிந்தியுங்கள். அறிந்து தெரிந்து எடுத்து நடப்பது, பின்பற்றுவது இத்திபா.

ஒருவர் மீதுள்ள அபார நம்பிக்கையில் அவர் சொல்வது குர்ஆனில் இருக்கிறதா? ஹதீஃதில் இருககிறதா? என்று பார்த்து அறியாமல் அவர் சொல்வது சரியாகத்தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையில் செயல்படுவது தக்லீதாகும். இது 9:31 இறைவாக்குக் கூறுவது போல் அவரை ரப்பாக-அல்லாஹ்வாக ஆக்கும் ஷிர்க் என்ற கொடிய அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத பாவமாகும். (4:48,116)

குர்ஆன் முழுவதும் தேடினாலும் மனிதனைச் சம்பந்தப்படுத்தி இந்த “”தக்லீது” பதத்தைப் பார்க்க முடியாது. அதற்கு மாறாக மிருகத்தை சம்பந்தப்படுத்தி “”கலாயித” என்ற பதம் 5:2,97 வசனங்களில் காணப்படுகிறது. ஆக இந்த பெருமை பேசும் மவ்லவிகள் பின்னால் செல்பவர்கள் (தக்லீது) மனித ஜாதியாக இருக்க முடியாது. மிருக ஜாதியாக மட்டுமே இருக்க முடியும். நேரடியாக குர்ஆன், ஹதீஃதுடன் தொடர்பை ஏற்படுத்தி அவற்றிலுள்ளபடி நடப்பவர்கள் மட்டுமே நேர்வழி நடப்பவர்கள், சுவர்க்கத்திற்குச் சொந்தக்காரர்கள்.

யார் பின்னாலும் எந்த மவ்லவி, தலைவர், அமீர் பின்னாலும் அவர்களை நம்பிச் செல்லக்கூடாது என்பதற்கு குர்ஆனிலுள்ள அனைத்தை வசனங்களையும், ஆதாரபூர்வமான அத்தனை ஹதீஃத்களையும் எடுத்துக் காட்டினாலும் அவை சுவர்க்கவாசியாக அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களுக்கே பலன் தரும். நரகத்திற்குரியவர்கள் என்று அல்லாஹ்வால் முடிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தும் எட்டிக்காயாக கசக்கும். இதையும் நாம் சொல்லவில்லை, அல்லாஹ்வே 17:41,45-47,89, 22:72,25:60, 39:45 குர்ஆன் வசனங்களில் எச்சரிக்கின்றான்.

ஆதத்தின் சந்ததிகளில் மிகப் பெரும் கூட்டமே நரகத்திற்குரியவர்கள். (பார்க்க: 32:13, 11:118,119) மிகமிகச் சொற்பமானவர்களே சுவர்க்கத்திற்குரிய வர்கள். புகாரீ : 3348, 4741, முஸ்லிம் 379 ஹதீஃத்கள் ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 999 பேர் நரகிற்குரியவர்கள் என்று நபி(ஸல்) கூறியதாகக் காணப்படுகிறது. இதை உறுதி செய்ய பார்க்க 25:30,12:106.

பீ.ஜை. பின்னால் செல்லும் ஒருவர் எமக்கு செய்தி அனுப்பி இருந்தார். இப்படி 1000 வருடங்களுக்கு முன்னால் உள்ளவற்றை தோண்டித் துருவி எடுத்து எழுதுவதால் ஆகப் போவது ஒன்றுமில்லை. விரல் விட்டு எண்ணும் ஒரு சிலரைத் தவிர கூட்டத்தைப் பார்க்க முடியாது என நையாண்டி செய்திருந்தார். பாவம், அவரது பரிதாப நிலையைப் பார்த்து வேதனைப்படுவது தவிர வேறு என்ன செய்ய முடியும்? அவர் குர்ஆனைப் படித்து அதில் நபிமார்களின் வரலாறுகளைப் படித்து அறிந்திருந்தால் இப் படித் தனது அறியாமையை வெளிப்படுத்தி இருக்க மாட்டார். பல நபிமார்கள் விரல் விட்டு எண்ணும் சிலருடனும், ஒரு சிலர் தன்னந்தனியாகவும் சுவர்க்கம் செல்வதாகவும் புகாரியின் 5705, 5752 ஹதீஃத்கள் கூறுகின்றன.

இப்படிப்பட்டவர்களால் தக்லீது செய்யப்படும் பீ.ஜையே இங்கு கூட்டம் சேர வாய்ப்பில்லை என்பதை விளங்கியே 1987ல் எம்மிடமிருந்து வெளியேறி ஆக், பின்னர் ஜாக், அனைத்து தவ்ஹீத் கூட்டணி, தமுமுக, ததஜ எனப் பல அவதாரங்கள் எடுத்து இன்று வழிகேட்டின் உச்சியில் இருக்கிறார். எப்படி நடிகைகளுக்குப் பின்னர் பெருங் கூட்டம் இருக்கிறதோ, நடிகர்களுக்குப் பின்னால் பெருங் கூட்டம் இருக்கிறதோ, அரசியல் வியாபாரிகளுக்குப் பின்னால் சுயநலத்தோடு, உலகியல் அற்ப ஆதாயங்களை நோக்கமாகக் கொண்டு பெருங் கூட்டம் இருக்கிறதோ அதேபோல் இந்த மதவியாபாரிக்குப் பின்னால் அற்ப உலகியல் ஆதாயங்களையும், பேர் புகழையும், பாராட்டுக்களையும் குறிக்கோளாகக் கொண்டு பெருங்கூட்டம் சேர்வதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

நாளை மறுமையில் மட்டுமே தெரியும் இவர்களின் எதார்த்த நிலை. எந்தளவு வழிகேட்டைப் போதிக்கிறோமோ அந் தளவு பெருங் கூட்டம் சேரும்! பொய்யன் பீ.ஜை. தன்னை தக்லீது செய்யும் இளைஞர்களையும், இளம் பெண்களையும் எப்படி உருவாக்குகிறார் தெரியுமா? உதவாக்கரைப் பாராட்டையும், வீண் புகழையும் எதிர்நோக்கிச் சேவை செய்யும் இழிநிலைக்கு அவரது முகல்லிதுகளான இளைஞர்கள், இளம் பெண்களை அடிமைப்பட்டுக் கிடக்க வைத்திருக்கிறார். இவர்கள் நேர்வழி பெற முடியுமா? அப்படிப்பட்ட ஒரு இளைஞர்தான் அந்நஜாத்தின் குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம், ஒரே நேர்வழி என்பதற்குத் தொடர்ந்து குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் மீண்டும் மீண்டும், குர்ஆனின் பாணியிலேயே எழுதி வருவது பயனற்ற முயற்சி. பெருங்கூட்டம் சேரவே சேராது என்று செய்தி அனுப்பியுள்ளார். பாவம் அந்த வாலிபர். மருந்துக்குக்கூட குர்ஆனைப் புரட்டிப் பார்ப்பதில்லை என்பதுத் திட்டமாக நமக்குத் தெரிகிறது.

குர்ஆன், ஹதீஃதை யார் நேரடியாகப் படித்து விளங்க முற்படவில்லையோ, இந்த பெருமை பேசும் மவ்லவிகளின் சுய கருத்துக்களை வேத வாக்காக நம்பிச் செயல்படுகிறார்களோ அவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு அவர்கள் நம்பிப் பின்பற்றிய பெருமை பேசும் மவ்லவிகளையே திட்டி, சபித்து ஒப்பாரி வைப்பதை நீங்களே குர்ஆன் 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 வசனங்களை நேரடியாகப் படித்து அறிந்து கொள்ளுங்கள்.

கூட்டத்தைப் பார்த்து மயங்கும் அற்பப் புத்தியை எல்லாம் வல்ல அல்லாஹ் சிறு வயதிலிருந்தே எமக்குத் தரவில்லை. இனிமேலும் தரமாட் டான் எனறு அவன் மீதே முழு ஆதரவு வைக்கி றோம். துஆ செய்ய வேண்டுகிறோம். கூட்டத்தைக் கண்டு மயங்கும் நிலையிலிருந்து அல்லாஹ் எம் மைப்பாதுகாத்து இருப்பதால்தான், உலகமே எதிர்த்தாலும் ஒரு நபர் கூட சத்தியத்தை ஏற்காவிட்டாலும் குர்ஆன், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடித் தொடர்ந்து சொல்லும் அசாத்தியத் துணிச்சலையும் அந்த அல்லாஹ்வே தந்துள்ளான். உள்ளங்கை நெல்லிக்கனி போல், குன்றிலிட்டத் தீபம் போல் குர்ஆன் வசனங்கள் தெள்ளத் தெளிவாக விளங்கும் நிலையில் இருக்க, இந்த மவ்லவிகளும், அறிவு ஜீவிகளும், மருத்துவர்களும் அவற்றை விளங்க முடியாத மண்டூகங்களா? இல்லை! 2:146, 6:20 இறைவாக்குகள் கூறுவது போல் தாங்கள் பெற்ற பிள்ளைகளை அறிவது போல் குர்ஆன் கூறுவதை அறிவார்கள்.

ஆனால் அவர்களுக்கிருக்கும் கூட்ட மயக்கம், மக்களிடம் தங்களுக்கிருக்கும் செல்வாக்குச் சரிந்துவிடும், அமைப்புகளில் இருக்கும் பதவிகள் பறிபோய் விடும், பேச மேடைகள் கிடைக்காது, வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்து விடும், இவை போன்ற அச்சங்களே அவர்களை சத்தியத்தைச் சொல்வதிலிருந்து தடுக்கின்றன. இந்த உண்மையையே 7:175-179, 45:23,24, 47:25-30 குர்ஆன் வசனங்கள் அம்பலப்படுத்துகின்றன. இவர்கள் மறுமையை விட இம்மையை அதிகம் நேசிப்பவர்கள். நாளை மறுமையில்தான் இவர்களின் பரிதாப நிலை, கடுமையான தண்டனைக்குரிய நிலை தெரியவரும். மேலும் 2159-162, 3:77,187, 4:27,44,115, 5:48,87, 6:26,27, 10:59, 100, 11:18,19, 16:89,116, 17:84, 18:57, 24:63, 25:33, 27:14, 40:4,35,

இந்த குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் இந்த மவ்லவிகள் எப்படிப்பட்ட கொடூர உள்ளம் கொண்டவர்கள் என்பதையும் அறிய முடியும். இன்று இந்த உலகம் 1450 வருடங்களுக்கு முன் இருந்தது போல் நரக விளிம்பில் இருப்பதற்கு இந்த மவ்லவிகள்தான் முழுமுதல் காரணம். ஆம்! ஆதத்தின் மக்களுக்குச் சொந்தமான குர்ஆனை முஸ்லிம்களின் வேதம் என்று கூறி இருட்டடிப்புச் செய்ததே காரணம். குர்ஆனைப் படிக்கப் படிக்க இம்மவ்லவிகளின் கொடூர வஞ்சகப் புத்தியை அறிந்து வேதனையின் உச்சிக்கே சென்று வரம்பு மீறி இம்மவ்லவிகள் காசுக்காகப்….. தின்கிறார்கள் என்று சொல்லும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். ஹராமாக்கப்பட்ட அனைத்தையும் ஒருவன் சாப்பிட்டாலும் அவன் இந்தளவு பாவியாக மாட்டான். எல்லாம் வல்ல அல்லாஹ் எம்மை மன்னிப்பானாக. அவனிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

விமர்சனம் : மார்க்கத்தை உள்ளது உள்ளபடி அதன் தூய நிலையில் விளங்கி நேர்வழியில் நடக்க வெற்றி பெற தன்னம்பிக்கையுடன் சுயசிந்தனையுடன் படியுங்கள், பரப்புங்கள் அல்குர்ஆன் அல்ஹதீஃத் என ஒவ்வொரு அந்நஜாத் இதிலும் கூறுகிறீர்கள். ஆனால் இறைவசனம் 3:7 (முத்தஷாபிஹாத்) அல்லாஹ்வையும், அறிவுடையவர் களையும் தவிர யாரும் அறியமாட்டார்கள் என்று ஒரு மொழி பெயர்ப்பில் படித்தேன். மேலும் அதற்கான விளக்க உரையில் ஒரே ஒரு மனிதனுக்குக் கூட புரியாத அல்லாஹ்வுக்கு மட்டுமே புரிந்த வசனங்களை அல்லாஹ் குர்ஆனில் ஏன் கூறவேண்டும்? அறவே பயனில்லாத வேண்டாத வேலையை இறைவன் செய்வானா? போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு அவர்களால் விடை கூற முடியாது. ஒரு மனிதருக்கும் புரியாத வசனங்கள் இருந்தால் மனிதர்களின் பார்வையில் அது உளறல் என்றே கருதப்படும்.

நபி(ஸல்) அவர்கள் காலத்து எதிரிகள் இதுபோன்ற வசனங்களைக் காட்டி “”முஹம்மது உளறுகிறார்” என்று நிலை நாட்டியிருப்பார்கள். அப்படி ஏதும் நடக்கவில்லை. எந்த மனிதராலும் விளங்கமுடியாத வசனங்கள் உள்ளன என்று வாதிடுவோரிடம் அந்த வசனங்கள் யாவை? என்று பட்டியலைக் கேட்டால் திருதிரு என முழிப்பார்கள். ஒருவருக்கும் விளங்காத ஐந்தாறு வசனங்களைக் கூட அவர்களால் எடுத்துக்காட்ட முடியாது. இதிலிருந்து அவர்கள் விதண்டாவாதம் செய்வது தெளிவாகும். ஏராளமான தமிழ் மற்றும் பிற மொழி பெயர்ப்புகள் வந்துவிட்டன. அம்மொழிப் பெயர்ப்புகளில் எல்லா வசனங்களுக்கும் மொழி பெயர்ப்புச் செய்துள்ளனர்.

இது எங்களுக்குப் புரியவில்லை. அல்லாஹ்வுக்கு மட்டும் தான் புரியும் எனக் கூறி ஒரே ஒரு வசனத்தைக் கூட அவர்கள் மொழி பெயர்ப்புச் செய்யாமல் விடவில்லை. இதிலிருந்து அவர்கள் தமக்குத்தாமே முரண்பட்டு இவ்வசனத்திற்கு பொருத்தமற்ற விளக்கம் கூறுகிறார்கள் என்பது உறுதியாகிறது. எனவே அல்குர்ஆன் பாமரர்களாகிய உங்களுக்கு முழுமையாக விளங்காது. அறி வுடையோர்களால்தான் விளங்க முடியும் என்ற கூற்றில் உண்மை இருக்கத்தானே செய்கிறது. தங்களின் விளக்கம் என்ன? ஹாஸிக் முகம்மது, சென்னை.

விளக்கம் : தூய இஸ்லாமிய ஒரே மார்க்கத்தை எண்ணற்ற கோணல் வழிகள்-மதங்களாக்கி, கொடிய ஹராமான வழியில் அதையே தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுருமார்களான மவ்லவிகள், ஆலிம், அல்லாமா, முஜ்தஹித் போன்ற வீண் பெருமை, ஆணவம் காரணமாக அல்லாஹ்வா லேயே குர்ஆன் விளக்கத்தை விட்டும் விரட்டி அடிக்கப்படுகிறார்கள். குர்ஆன் வசனங்களை நேரடியாகக் காட்டினாலும் நம்பி ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளை-வழிகேடுகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள். 6:153 இறைவாக்குக் கூறும் நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள் என்று குர்ஆன் 7:146 மற்றும் பெருமை பற்றிக் கூறும் பல குர்ஆன் வசனங்கள் கூறுவது பொய்யாகுமா? ஒருபோதும் பொய்யாகாது.

இந்த மவ்லவிகளை நம்பி அவர்கள் பின்னால் செல்பவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு அவர்கள் நம்பிய பெருமையடிக்கும் இந்த மவ்லவிகளையே கடுமையாகத் திட்டி, சபித்து ஒப்பாரி வைப்பதை 33:66-68 இன்றும் பல குர்ஆன் வசனங்கள் அம்பலப்படுத்துவதை நீங்களே நேரடியாகப் படித்து அறிய முடியும்.

மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டு அதனால் ஆணவம், பெருமை பேசும் மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழியைச் சொல்லமாட்டார்கள். வழிகேடுகளைத் தான் நேர்வழியாக மக்களுக்குப் போதிப்பார்கள். அந்த அடிப்படையில் தர்கா மவ்லவிகள் தர்கா வழிபாடுகளையும், தரீக்கா மவ்லவிகள் தரீக்கா வழிபாடுகளையும், மஸ்லக், இயக்க மவ்லவிகள் அவற்றின் வழிபாடுகளையும் நேர்வழி என்று சொல்லியே மக்களை வழிகெடுத்து தங்களோடு நரகிற்கு இட்டுச் செல்வதை எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் அம்பலப்படுத்துகின்றன.

அதே வரிசையில் பொய்யன் பீ.ஜை. என்ற மவ்லவி 1987லிருந்து 3:7 இறைவாக்கில் வரும் “”தஃவீல்” என்ற அரபு பதத்திற்கு விளக்கம் என மூடத்தனமாக மொழிபெயர்த்து, முஹ்க்கமாத் வசனங்களை விளக்கமான வசனங்கள் என்றும் முத்தஷாபிஹாத் வசனங்களை விளக்கமற்ற வசனங்கள் என்றும் சுயமாக விளக்கம் கொடுத்து, விளக்க மற்ற வசனங்களை அல்லாஹ் ஏன் குர்ஆனில் இடம் பெறச் செய்யவேண்டும் என்றும், முத்தஷாபிஹாத் வசனங்களைப் பட்டியல் போட்டுக் காட்டுங்கள் என்றும் வடிகட்டிய மூடனாக சவால் விட்டுக் கொண்டிருக்கிறார். இந்த அடிப்படையில் தான் உங்கள் விமர்சனம் இருக்கிறது. 3:7ல் வரும் “”தஃவீல்” விளக்கம் பற்றிக் கூறவில்லை.

4:59, 7:53, 17:35 இறைவாக்குகளில் வரும் முடிவான கருத்தையே குறிக்கிறது. முஹ்க்கமாத் வசனங்களை விளக்கமான வசனங்கள் என்றும், முத்தஷாபிஹாத் வசனங்களை விளக்கமற்ற வசனங்கள் என்றும் பொய்யன் பீ.ஜை. 1987லிலிருந்து இன்று 2016 வரை கடந்த 30 வருடங்களாக தொடர்ந்து பிடிவாதமாக கூறி வருவது அவரது வழிகேட்டின், ஆணவத்தின் ஆழத்தையே அம்பலப்படுத்துகிறது. அனைத்தையும் முழுமையாக அறிந்த அல்லாஹ்வே விளங்க வேண்டிய மனித நிலையில் இருக்கிறான் என்பது ஷிர்க்கிலும் கொடிய ஷிர்க்கா இல்லையா? 3:7ல் தஃவீல் என்ற பதம் அல்லாஹ்வுடன் இணைந்துச் சொல்லப்பட்டிருப்பதை அறியாத மூடரா பீ.ஜை? அவர் ஷிர்க்கின் ஆக உச்சானிக் கொப்பில் இருக்கிறார் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாகும். முஹ்க்கமாத் வசனங்கள் மார்க்க அடிப்படையில் எடுத்து நடக்கவேண்டிய இரண்டாவது கருத்துக்கே இடமில்லாத ஒரேயயாரு கருத்தை மட்டுமே சொல்லும் வசனங்கள். 33:36 இறைக் கட்டளைப்படி அவற்றில் சுயவிளக்கம் மேல் விளக்கம் பகிரங்கமான வழிகேடே அல்லாமல் வேறில்லை. முடிவு 33:66-68 வசனங்களைப் பார்க்கவும்.

முத்தஷாபிஹாத் வசனங்கள் மார்க்க அடிப்படையில் செயல்பாட்டுக்குரியவை அல்ல. அவை அறிவியல் முன்னேற்றத்திற்கு-கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டவும், வேறு பல விஷயங்களைச் சூசகமாக எடுத்துரைக்கும் வசனங்கள். அவை விளங்க முடியாதவை அல்ல. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துக்களை விளக்கங்களைப் பெற முடியும். ஆயினும் அவற்றின் முடிவான கருத்தை (தஃவீல்) அதாவது முத்தஷாபிஹாத் வசனங்களை முஹ்க்கமாத் வசனங்கள் ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. பீ.ஜை. போன்ற உள்ளத்தில் நோயுள்ள வழிகேடர்களே அதில் குதர்க்கம் செய்வார்கள்.

மார்க்க செயல்பாடுகளுக்குரிய ஒரே பொருளைத் தரும் முஹ்க்கமாத் வசனங்களும், மார்க்க செயல்பாடுகளுக்குரியவை அல்லாத ஒன்றுக்கு மேல் பொருள் தரும் முத்தஷாபிஹாத் வசனங்களும், ஆக இருவகை வசனங்களும் எங்கள் ரப்பிடமிருந்து வந்துள்ளன என்று அறிவுடையோர் நம்பிக்கை கொள்வார்கள் என்றே 3:7 வசனம் கூறுகிறது. இந்த விபரங்களை 1987லிலிருந்தே கூறி வருகிறோம். அந்நஜாத்தில் தொடராக வெளியிட்டும். 1992-ல் “குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?” என்று தனி நூலாக வெளியிட்டும் உள்ளோம். ஆயினும் தூய மார்க்கத்தை மதமாக்கி அதையே கொடிய ஹராமான வழியில் வயிற்றுப் பிழைப்பா கக் கொண்டுள்ள இம்மவ்லவிகள் ஒருபோதும் நேர்வழியை-சத்தியத்தை ஏற்கமாட்டார்கள். (பார்க்க : 2:146, 4:44, 6:20,26,68, 11:18,19 17:84, 27:14, 39:72, 40:35) அவர்களின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடித்து அவற்றின் வழிகாட்டல்படி நடப்பதே ஒரே நேர்வழியாகும். (6:153) 

 

Previous post:

Next post: