குறைவான நேரத்தில் நிறைவான நன்மைகள்…

in 2018 ஏப்ரல்

தப்லீக், தரீக்கா போன்ற ஜமாஅத்துகளில் இருப்பவர்கள் மன்ஸில், அஃமாலே குர்ஆனி, துஆஉல் வளாயிஃப், அல்முன் ஜியாத், மஸ்னூன் துஆக்கள் இன்னும் இது போன்று துஆக்கள் தொடர்பாக உள்ள பற்பல புத்தகங்களை படிப்பதோடு அதில் கூறப்பட்டுள்ள பல்வேறு வகையான துஆக்களையும், தஸ்பீஹ்குகளையும் தங்களுடைய கஷ்டங்கள், நோய்கள் மற்றும் இன்னபிற எல்லாவிதமான தேவைகளும் நிறைவேறுவதற்காக ஆர்வத்தோடும், நம்பிக்கையோடும் ஓதிவருவார்கள். குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று சொல்லக்கூடிய சகோதர சகோதரிகள் இதற்கு நேர்மாற்றமாக இது போன்ற புத்தகங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு கருத்துக்கள் நபிவழிக்கு எதிரா னது என்று கூறி மேற்கண்ட புத்தகங்களை ஏறிட்டும் பார்ப்பதில்லை.

இந்த புத்தகங்களில் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத, கற்றுக்கொடுக்காத பல செய்திகள் இருப்பது உண்மைதான். இந் நிலையில் ஸஹீஹான ஹதீஃத்களில் கூறப் பட்டுள்ள துஆக்களையும், திக்ருகளையும் மட்டுமே ஓதவேண்டும் என்று கூறக் கூடியவர்கள் என்ன செய்ய வேண்டும்? ஸஹீஹான ஹதீஃத்களில் கூறப்பட்டுள்ள துஆக் களை, திக்ருகளை கற்றுக்கொண்டு அதை அமல்படுத்த ஆர்வம் காட்டவேண்டும் அப்போதுதான் மேற்கண்ட புத்தகங்களை விமர்சனம் செய்வதில் நியாயம் இருக்கும் ஆனால், குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்று கூறுபவர்கள் வெறும் விமர்சனம் செய்வதோடு தங்களது பணியை முடித்துக் கொள்கிறார்கள் அமல்கள் செய்யும் விஷயத்தில் ஸஹீஹான ஹதீஃத்களில் கூறப்பட்டுள்ள விஷயங்களை நடைமுறைப்படுத்தாமல் மிகப் பெரிய அளவில் பின்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. குர்ஆன், ஹதீஃதை பேசுபவர்கள் அமல்கள் செய்யும் விஷயத்தில் எந்தளவு கீழான நிலையில் உள்ளார்கள் என்பதை ஒருசில சான்றுகளோடு பாருங்கள்.

ஃபஜ்ரில் கூறவேண்டிய தஸ்பீஹ் :

(நபி(ஸல்) அவர்களின் மனைவி) ஜுவைரியா(ரழி) அவர்கள் கூறியதாவது :

நபி(ஸல்) அவர்கள் சுப்ஹுத் தொழு கைக்குப்பின் அதிகாலையில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது நான் எனது தொழுமிடத்தில் அமர்ந்திருந்தேன். பிறகு (நபி(ஸல்) அவர்கள் முற்பகல் தொழுகை (ளுஹர்) தொழுதுவிட்டு வந்தார்கள் அப்போதும் நான் (அதே இடத்தில்) அமர்ந்திருந்தேன். அப்போது என்னிடம் நான் உன்னிடமிருந்து சென்றது முதல் இதே நிலையில்தான் நீ இருந்து கொண்டி ருக்கிறாயா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். நபி(ஸல்) அவர்கள் நான் உன்னிடமிருந்து சென்றதற்குப் பிறகு நான்கு (துதிச்) சொற்களை மூன்று முறை சொன்னேன் அவற்றை இன்றைக்கெல்லாம் நீ சொன்னவற்றுடன் மதிப்பிட்டால் நீ சொன்னவற்றை அவை மிகைத்துவிடும் (அவை) சுப்ஹானல்ல வபி ஹம்திஹி அதத கல்கிஹி வரிளா நஃப்சிஹி, வ ஸினத்த அர்´ஹி, வ மிதாத கலிமாத்திஹி (ஆகியவையாகும்) என்று கூறினார்கள். (நூல் : முஸ்லிம்: 5272)

பல மணி நேரம் செலவிட்டு திக்ரு செய் வதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை ஓரிரு நிமிடங்களில் மிக எளிதான முறையில் பெற்றுத் தரும் இந்த தூய துதி சொற்களை குர்ஆனை, ஹதீஃதை பேசுபவர்களில் அறிந் திருப்பவர்கள் எத்தனை பேர்? அறிந்திருந்தாலும் ஃபஜ்ரில் இதைக் கூறக்கூடியவர்கள் எத்தனை பேர்?

நாவிற்கு எளிதானது :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

இறைவனைத் துதிக்கும்) இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவை (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை, அளவற்ற அருளாளனுக்குப் பிரியமானவை ஆகும். (அவை)

(1) சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி

(2) சுப்ஹானல்லாஹில் அழீம்

அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), நூல்: புகாரி : 7563

சொல்வதற்கு எளிதான, அதே வேளை யில் மகத்தான கூலியை பெற்றுத் தரும் இந்த சொற்களை ஓய்வான நேரத்திலும், வேலையின் போதும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கூறி நன்மைகளை அடைய ஆர்வம் கொண்டவர்கள் எத்தனை பேர்?

தினமும் பல இலட்சங்கள் தர்மம் செய்த நன்மை :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

“லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு, லா ­ரீக்கலஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து, வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்” என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல் கின்றாரோ அவருக்கு, அது பத்து அடிமை களை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும்.

மேலும் அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும் அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும் அவர் புரிந்த இந்த நற்செயலை விடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது. ஒருவர் இதைவிட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தால் தவிர! அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரீ 6403

யார் (மேற்கண்ட வாக்கியங்களை) பத்து முறை ஓதுகின்றாரோ அவர் இஸ்மாயீல் (அலை) அவர்களின் சந்ததியினரில் ஒருவரை விடுதலை செய்ததைப் போன்றவராவர் (என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் : அபூஅய்யூப் அல் அன்சாரி(ரழி), நூல் : புகாரீ 6404

பத்து நிமிட நேரத்தில் ஓதக்கூடிய மேற்கண்ட திக்ரை சொல்வதால் கிடைக்கும் நன்மைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்து கிறது. நமது கற்பனையிலும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு இலட்சக்கணக்கான ரூபாயை தினமும் செலவு செய்து அடி மைகளை விடுதலை செய்யும் நன்மை, அன்றைய தினம் மாலை வரை ஷைத்தானின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பு இன்னும் இதுபோன்ற பற்பல நன்மைகளை அள்ளித் தரக்கூடிய இந்த திக்ரை காலையில் நூறு முறை கூறுபவர்கள் எத்தனை பேர்?

மறுமையில் மிகச் சிறந்த நல்லறம் :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

யார் காலையிலும், மாலையிலும் நூறு முறை சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என்று சொல்கிறாரோ அவர் கொண்டு வந்த (நல்லறத்)தைவிடச் சிறந்ததை வேறெவரும் மறுமை நாளில் கொண்டு வருவதில்லை. அவர் சொன்ன அளவுக்கு சொன்னவரையும் அல்லது அதைவிடக் கூடுதலாகச் சொன்னவரையும் தவிர, அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம் : 5222

மறுமையில் மிகச் சிறந்த நல்லறமாக திகழக்கூடிய இந்த துதிச் சொல்லை தொடர்ச்சியாக காலையிலும், மாலையிலும் கூறுபவர்கள் எத்தனை பேர்?

படைப்பினங்களின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பு பெற :

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :

உங்களில் ஒருவர்(பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கும் போது “”அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ர்ரி மா கலக்” என்று கூறினால், அவர் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லும் வரை அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.

மேற்கண்ட நபிவழியை கவ்லா பின்த் ஹகீம்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நபி(ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே நேற்றிரவு என்னைத் தேள் ஒன்று கொட்டிவிட்டது. அதனால் நான் (நிம்மதியான தூக்கத்தை) இழந்துவிட்டேன் என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீ மாலைப் பொழுதை அடையும்போது “”அஊது பிகலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ­ர்ரி மா கலக்” என்று கூறியிருந்தால் அது உனக்கு தீங்கிழைத்திருக்காது என்று கூறினார்கள். நூல் : முஸ்லிம் 5248

படைப்பினங்களின் தீங்குகளை விட்டும் பாதுகாப்பு பெறுவதற்காக பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முஸ்லிம்கள் நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த இந்த துஆவை கூறி அல்லாஹ்விடம் பாதுகாப்பு கேட்டதுண்டா?

துன்பம் ஏற்படும்போது :

உம்மு சலமா(ரழி)அவர்கள் கூறியதாவது:

ஓர் அடியார் தமக்கு துன்பம் ஏற்படும் போது “”இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹும்ம ஃஜுர்னீ ஃபீ முஸீபத்தி வ அக்லிஃப் லீ கைரம் மின்ஹா” என்று கூறினால் அவர் துன்பம் அடைந்ததற்காக அவருக்கு அல்லாஹ் நன்மையை வழங்கி, அதைவிடச் சிறந்த ஒன்றை அதற்கு ஈடாக வழங்காமல் இருப்பதில்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன் (என் முதல் கணவர்) அபூசலமா(ரழி) அவர்கள் இறந்தபோது, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதைப் போன்று (இன்னாலில்லாஹி… என்று) நான் கூறினேன், அல்லாஹ் அபூசலமாவை விட சிறந்த வரான அல்லாஹ்வின் தூதரையே எனக்கு மாற்றாக (கணவராக) வழங்கினான். நூல் : முஸ்லிம் 1675

துன்பம் ஏற்படும்போது தனக்கு நெருக் கமானவர்களிடம் தன்னுடைய துன்பத்தை சொல்லி புலம்புவதே மனிதனுடைய இயல்பாக உள்ளது இந்த புலம்பலால் எந்த ஒரு நன்மையோ மாற்று வழியோ ஒருபோதும் ஏற்படப் போவதில்லை மாறாக மேற்கண்ட துஆவை செய்வதால் மிகப்பெரிய நன்மைகளை அடைய முடியும். துன்பம் ஏற்படும் போது நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த இந்த துஆவை செய்து தனது துன்பத்தை நன்மையாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்தவர்கள் எத்தனை பேர்?

தூங்க செல்லும் முன் :

சுப்ஹானல்லாஹ் முப்பத்து மூன்று முறை, அல்ஹம்துலில்லாஹ் முப்பத்து மூன்று முறை, அல்லாஹு அக்பர் முப்பத்து நான்கு முறையும்கூறுவது. நூல்: முஸ்லிம் 5274, ஆயத்துல் குர்ஸி ஓதுவது புகாரீ : 3275

குல்ஹுவல்லாஹு அஹத், குல்அஊது பிரப்பில் ஃபலக், குல் அஊது பிரப்பின்னாஸ் ஆகிய சூராக்களை ஓதுவது புகாரீ 5017, பகராவின் கடைசி இரண்டு வசனங்களை ஓதுவது புகாரீ 5009 அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ ஆஹ்யா என்று கூறுவது புகாரீ 6314.

நபி(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த இந்த நடைமுறையையும் இன்னும் இது போன்ற பல சூராக்களையும் தூங்குவதற்கு முன் தொடர்ச்சியாக ஓதிவிட்டு உறங்குப வர்கள் எத்தனை பேர்?

நன்மைக்கு முந்துவோம் :

தான் நம்பிக்கை கொண்ட மார்க்க அறிஞர் ஹதீஃத் என்ற பெயரால் எதை சொன்னாலும், எழுதினாலும் அதை அப்படியே நம்பி திக்ர், தஸ்பீஹ் மற்றும் இன்னபிற அமல்களை செய்யும் ஒரு சாரார், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை மட்டுமே பின்பற்றவேண்டும் என்று சொல்லிக்கொண்டு, அதை கற்றுக் கொள்வதில், நடைமுறைப்படுத்துவதில் அலட்சியமாக இருக்கும் மற்றொரு சாரார், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அறிந்து அதை தன்னால் இயன்ற அளவு நடைமுறைப்படுத்தும் பிரிதொருசாரார். இந்த மூன்று சாராரில் யாருடைய செயல்பாடு குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் நெருக்கமாக உள்ளது?

ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை அறிந்து அதன்படி நடப்பவர்களின் செயல்பாடுதான் குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் அமைந்துள்ளது என்று நாம் அனைவரும் ஒருமித்த கருத்தில் கூறுவோம். யார் செய்வது சரியானது என்று தெளிவாக கூறும் நாம், நன்மையில் முந்தியிருக்கும் அந்த சாராரில் ஆவதற்கு ஆர்வம் காட்ட வேண்டாமா? முயற்சி செய்ய வேண்டாமா?

குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்கம் என்று கூறக்கூடிய சகோதர, சகோதரிகளே! வெறுமனே குர்ஆன், ஹதீஃதை வாயளவில் மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் இனி வரும் காலங்களிலாவது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள திக்ர், தஸ்பீஹ் மற்றும் துஆக்களை மனனம் செய்து அதை நடைமுறைப்படுத்த ஆர்வம் காட்டுங்கள் குறைந்தபட்சம் இந்த கட்டுரையில் எழுதப்பட்டுள்ள மிகமிக எளிதான இந்த அமல்களையாவது தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்த முன்வருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

…. சூரிய உதயத்திற்கு முன்னரும், அது மறைவதற்கு முன்னரும் உம்முடைய இரட்சகனின் புகழைக் கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக! இரவு நேரங்களிலும் (இவ்வாறே) பகலின் ஓரங்களிலும் (இரட்சகனைப் புகழ்ந்து) துதி செய்து கொண்டிருப்பீராக! இதனால் நீர் திருப்தியடையலாம். குர்ஆன் : 20:130

Previous post:

Next post: