அறிந்து கொள்வோம்!

in 2018 மே

அறிந்து கொள்வோம்!

மர்யம்பீ, குண்டூர்,

1. முதல் மனிதனை அல்லாஹ் எவ்வாறு படைத்தான்?
சுட்ட மட்பாண்டம் போன்ற தட்டினால் ஓசை வரக்கூடிய களிமண்ணினால் படைத்தான். 55:14

2. இரு கடல்களுக்கு நடுவே என்ன இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்?
இரு கடல்களுக்கு நடுவே தடுப்பு இருப் பதாக அல்லாஹ் கூறுகிறான்? 55:20

3. நரகத்தில் உள்ளோர் நரகத்தின் காவலர்களிடம் என்ன கேட்பர்?
ஒரு நாளைக்கேனும் வேதனையை எங்களை விட்டும் இலகுபடுத்துமாறு அல்லாஹ்விடம் துஆ செய்திடுமாறு கேட்பார். 40:49

4. அல்லாஹ் வானங்களையும், பூமியையும் எவ்வாறு படைத்துள்ளான்?
வானங்களையும், பூமியையும் உண்மையைக் கொண்டே படைத்துள்ளான். 29:42

5. நூஹ் நபியை அல்லாஹ் எத்தனை ஆண்டுகள் தனது சமூகத்தாரிடம் தங்கியிருந்தார் என கூறுகிறான்?
950 ஆண்டுகள் நூஹ் நபி தனது சமூகத்தாரிடம் தங்கியிருந்தார். 29:14

6. யூனுஸ் நபி அவர்கள் என்ன செய்திரா விட்டால் (மறுமையில் அவர்) எழுப்பப்படும் வரை மீனின் வயிற்றிலேயே தங்கி யிருப்பார் என அல்லாஹ் கூறுகிறான்?
தஸ்பீஹு செய்திராவிட்டால் என அல்லாஹ் கூறுகிறான். அத். 37:143,144

7. அல்லாஹ் போரை எதற்காக ஏற்படுத்தினான்?
உங்களில் சிலரை மட்டும் சிலர் மூலம் சோதிப்பதற்காக ஏற்படுத்தினான் என 47:4ல் கூறுகிறான்.

8. நபி மூஸா அவர்களின் சமூகத்தாரில் ஸாமீரி என்பவன் எதனைக் கொண்டு காளைக் கன்றை செய்தான்?
நகைகளைக் கொண்டு செய்தான். அத்:7:148, 20:96

9. இப்றாஹீம் நபிக்கு உண்பதற்கு வானவர்கள் எதனைக் கொடுத்தார்கள்?
பொரித்த காளைக் கன்றின் இறைச்சியைக் கொடுத்தார்கள். அத். 11:69

10. நல்ல மனிதர் காணும் கனவு எதனைப் போன்றது?
நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்று (1/46) என நபி(ஸல்) அவர்கள் கூறினார். புகாரி:6983

11. தன் அன்பளிப்புப் பொருளை திரும்பப் பெற்றுக்கொள்பவன் பற்றி நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு கூறுகிறார்கள்?
தன் வாந்தியை தானே திரும்ப உண்பவனைப் போன்றவன் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) கூறினார். புகாரி : 2621

12. ஸகாத்தை கொடுப்பதற்கு அஞ்சி எதனை செய்யக்கூடாது?
பிரிந்தவற்றை ஒன்று சேர்ப்பதும், ஒன்று சேர்ந்தவற்றை பிரிப்பதும் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரழி) கூறினார்கள். புகாரி : 6955

13. இப்றாஹிம் நபி அவர்கள் எவ்வாறு இருந்தார் என அல்லாஹ் கூறுகிறான்?
சகிப்புத்தன்çயுடையவராகவும் இளகிய மனம் கொண்டவராகவும், அல்லாஹ்வின் பால் முகம் திருப்புபவராக இருந்தார். அத். 11:75

14. இறைத் தூதர்களின் வாரிசுகள் சொத்தில் வாரிசாக முடியுமா?
இறைத் தூதர்களான எங்களுக்கு எவரும் சொத்தில் வாரிசாக முடியாது என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ பக்கர் (ரழி) அவர்கள் கூறினார்கள். புகாரி : 6730

15. நபி(ஸல்) அவர்கள் புரிந்த போர்கள் எத்தனை?
பத்தொன்பது போர்கள் என அபூ இஸ்ஹாக் அவர்கள் ஸைத் இப்னு அர்கம்(ரழி) அவர்கள் கூறியதாக கூறி னார்கள். புகாரீ : 3949

16. இஸ்லாத்திற்கு முற்பட்ட அறியாமைக் காலத்தில்அரபிகள் வணங்கிய சிலைகள் எவை?
லாத், உஸ்ஸா, மனாத். அத்: 53:19, 20

17. நாட்டுபுறத்து அரபி மறுமை நாள் எப்போது என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள்?
அமானிதம் பாழ்படுத்தப்பட்டால் நீ மறுமை நாளை எதிர்பார்க்கலாம். புகாரி : 59

18. நஜ்ஜா´ மன்னருக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டதா?
நபி(ஸல்) அவர்கள் மரணச் செய்தியை மக்களுக்கு அறிவித்துவிட்டு மக்களை வரிசைப்படுத்தி நிற்க வைத்து நான்கு தக்பீர்கள் கூறி ஜனாஸா தொழுகை நடத்தினார்கள் என அபூஹுரைரா (ரழி) அவர்கள் கூறினார்கள். புகாரி: பாடம் 4ல் 1245

19. பாவங்களில் மிகவும் பெரியது எது?
அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதே பாவங்களில் மிகவும் பெரியது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி: இழப்பீடுகள் பகுதி : 6861 20. யாரிடம் மீளுதல் உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்? நிச்சயமாக நாமே உயிர்ப்பிக்கின்றோம், இன்னும் மரணிக்கச் செய்கின்றோம் மேலும் நம்மிடமே மீளுதல் உள்ளது என அல்லாஹ் கூறுகிறான். 51:43

Previous post:

Next post: