அமல்களின் சிறப்புகள்…

in 2018 ஜூன்

அமல்களின் சிறப்புகள்…

ஒரு திறனாய்வு!.

தொடர் : 37

னி. அப்துல் ஹமீத்

ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட பகுதி இடம் பெற்றுள்ள விவரம் :

புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்.

தலைப்பு : திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி…

குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்

தமிழாக்கவும் வெளியிட்டோரும் : பேகம்பூர் மெஹ்மான்கானா ட்ரஸ்ட், திண்டுக்கல்.

பதிப்பு : மூல நூலாசிரியரின் முன்னுரை யிலிருந்து, 12 ­வ்வால் பிறை ஹிஜ்ரி 1357ல் எழுதப்பட்ட முடிவுரை முடிய எங்குமே குறிப்பிடப்படவில்லை.

திக்ரின் சிறப்புகள் தொடர்ச்சி :

பக்கம் 379ல் சொல்லப்பட்டுள்ள 13ஆம் எண் ஹதீஃதும் விளக்கமும். அமல்களின் சிறப்புகள் (அசி) புத்தகத்திலுள்ள 13ஆம் எண் ஹதீஃத்.

13 ஹஜ்ரத் அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அறிவிக்கிறார்கள். “நீங்கள் சொர்க்கப் பூங்காக்களை கடந்து சென்றால் நன்றாக மேய்ந்து கொள்ளுங்கள்” என்று ரசூலுல்லாஹி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அப்போது “”யா ரசூலுல்லாஹ் சொர்க்கத் தின் பூங்காக்கள் எவை? என சஹாபாக்கள் கேட்டார்கள். “”திக்ருடைய சபைகள்” எனபதில் அளித்தார்கள். (நூல்கள்: அஹ்மத், திர்மிதி)

எமது ஆய்வு :

நவம்பர் 2017 அந்நஜாத் இதழிலிருந்து மே 2018 முடிய மொத்தம் 7 இதழ்களில் திக்ரின் சிறப்புகளில் கூறப்பட்டுள்ள வி­யங்களை விரிவாக பார்த்து வருகிறோம் ஸஹீஹான ஹதீஃத்களில் இடைச்செருகல்களை துணிவுடன் சொருகி, “அசி” புத்தகம் எழுதியுள்ளதையும், அதன்மூலம் தங்களை நம்பியுள்ள தப்லீக் ஜமாஅத்தினரை நயவஞ் சகத்தனமாக ஏமாற்றி இருப்பதையும் பார்த்தோம்.

ஒன்றும் தெரியாத முஸ்லிம்களை, தொழுகை என்ற பெயரில் அழைத்து அவர் களுக்கு தொழக் கற்றுக்கொடுத்து அவர்களை நல்லவர்களாக்கி விட்டதாக நல்ல பெயர் தட்டிக்கொண்டு செல்கிறது “அசி” புத்தகம். அது உண்மையாகவே இருந்து விட்டுபோகட்டும். ஆனால், மறுபுறம் என்ன நடக்கிறது? அல்லாஹ் கொடுத்துள்ள அறிவை பயன்படுத்திப் பாருங்கள்.

அவர்களின் தொழுகையினால் மறுமையில் எந்த பலனும் கிடைக்காதவாறு அவர் களை ஷிர்க்கில் மூழ்க வைத்து விடுவதைப் பாருங்கள்.

மரித்து விட்ட மனிதர்கள் சிலருக்கு “மறைவானவற்றை அறியும் ஞானம் இருந் ததாகக் கூறி, “அவர்கள் அற்புதங்கள் செய்த தாகக் கூறி, “அவுலியாக்கள்”, “நாதாக்கள்” என அவர்களை அறிமுகப்படுத்தி, “பெரியார்கள்” என்ற பட்டமும் சூட்டி, அவர்களின் மண்ணறைகளுக்கு சென்று கப்ருகளை வணங்கும் மாபாதக செயலான ´ர்க்கில் மூழ்க வைத்து மறுமையில் நரகத்தில் நிரந்தரமாக இருக்கும்படியாகச் செய்து விட்டது அமல்களின் சிறப்பு புத்தகம்.

அந்த ஹதீஃதுக்கு “அசி” புத்தகம் தரும் விளக்கம் :

எவரேனும் நற்பாக்கியம் பெற்றவருக்கு திக்ருடைய சபைகளில்கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தால் அதை பெரும் செல்வமாகக் கருத வேண்டும் என்பது இந்த ஹதீஃதின் நோக்கமாகும்.

எமது விளக்கம் :

கூட்டமாக திக்ர் செய்யக்கூடாது, “திக்ருடைய சபைகள் (திக்ரு மஸ்ஜிஸ்)” நடத்துவதற்கு இஸ்லாத்தில் எள்ளளவும் ஆதாரம் இல்லை என்பதை அல்லாஹ் இறக்கி அருள் புரிந்துள்ள பரிசுத்த குர்ஆனி லிருந்தும், நபி(ஸல்) அறிவித்து தந்துள்ள ஹதீஃத்களிலிருந்தும் கடந்த 7 இதழ்களில் தந்துள்ளோம். குர்ஆனையும், ஹதீஃதையும் இவர்களது நினைவில் ஏற்றிக்கொள்ள மறுத்து வரும் “அசி” புத்தகம், மேற்கண்ட ஹதீஃதை எழுதி வைத்து தமது தில்லுமுல்லு தனத்தை விரிவாக்கிக் கொண்டு செல்கிறது. தம்மை பின்பற்றுபவர்களிடம் எதைச் சொன்னாலும் செல்லுபடியாகும் என்ற தைரியத்தில் இந்த இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஹதீஃதையும் அதன் தரத்தை மறைத்து மோசடி செய்து விட்டது.

மறுமையில் தமக்கு கிடைக்க இருக்கும் இழிவான முடிவு பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல், இந்த ஹதீஃதைக் காட்டி, “திக்ர் (மஸ்லீஸ்) சபைகள்” என்று மார்க்கத் தில் இல்லாததை நரித்தனமாக ஏற்படுத்தி, வெற்றி நடை(?) போட்டுக் கொண்டிருக் கிறது. இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதற்காக இவர்களுக்கு உலக ஆதாயம் எதுவும் கிடைக்கிறதோ என்னவோ எமக்கு புலப்படவில்லை.

நபி(ஸல்) அவர்கள் அறிவித்த “நான் சொல்லாத ஒன்றை, எவர் வேண்டுமென்றே சொல்கிறாரோ, அவர் தமது இருப்பிடத்தை நரக நெருப்பில் ஆக்கிக் கொள்ளட்டும்” என்ற நபிமொழிக்கு துளி கூட பயப்படாமல் செயல்படுவதைப் பார்க்கும்போது இவ்வாறாக நினைக்கத் தோன்றுவது இயல்புதானே?

“உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். ஒன்று அல்குர்ஆன், மற்றொன்று ஹீதீஃத். இந்த இரண்டையும் பற்றிப் பிடித்திருக்கும காலமெல்லாம, நீங்கள் வழிதவறமாட்டீர்கள்” என்று இறுதித் தூதர் முன்னெச்சரிக்கை செய்துள்ளதை பின்பற்றி நேர்வழி செல்ல மாட்டார்களாம். குர்ஆனிலும், ஹதீஃத்களிலும் இல்லாத திக்ருடைய சபைகளில் கலந்து கொள்வது தான் பெரும் செல்வமாம்.

தப்லீக் ஜமாஅத் சகோதரர்களே! அல்லாஹ்(ஜல்) உலக மாந்தர்கள் நேர்வழி பெற இறக்கி அருள் புரிந்திருக்கும் பரிசுத்த குர்ஆனை நீங்கள் பள்ளிவாசலில் ஒதுக்கி வைத்திருக்கிறீர்களே. அதைத் தொட்டு எடுத்து படித்துப் பார்ப்பதில்லையே. இது நியாயமா? உங்கள் தாய்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கும் அந்த மேலான குர்ஆனை எடுத்து படித்து நல்லுணர்வு பெற முன் வாருங்கள்.

உலகிலேயே சிறந்த ஒன்றை படிக்க வாய்ப்பு கொடுக்காமல் இருப்பவர்களை நல்லவர்கள் என்று உங்களை நினைக்க வைத்து விட்டார்களே, இது எப்படி அவர்களுக்கு சாத்தியமானது?

பெரியார்கள் என்ற பெயரில் மார்க்கத்தில் பல அற்புதங்கள் செய்ததாக உங்கள் உள்ளங்களில் படியவைத்து விட்ட மாய வலையிலிருந்து நீங்கள் விடுபட முயற்சித் தால்தான் நீங்கள் கண்ணியம் வாய்ந்த உயர்வான குர்ஆனை படிக்க எண்ணம் ஏற்படும். குர்ஆன் இறக்கி அருள் செய்யப்பட்ட இந்த ரமலான் மாதத்தில் தயவு செய்து உயர்வான குர்ஆனைப் படிக்க ஆரம்பியுங்கள். இன்ஷா அல்லாஹ், நிச்சயமாக அந்த வல்லோன் உங்களுக்குள் பரக்கத்தை இறக்கி அருள்வான்.

Previous post:

Next post: