அறிந்து கொள்வோம்!

in 2018 ஜூன்

மர்யம்பீ, குண்டூர்,

1. அல்குர்ஆன் யாருக்கு நேர்வழி என்று அல்லாஹ் கூறுகிறான்? பயபக்தியாளர்களுக்கு நேர்வழி காட்டி என அல்லாஹ் கூறுகிறான். (2:2)

2. அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோர் எந்த நிலையில் இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்? நீங்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் உயிரோடு இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான். (2:154)

3. வறட்டு கவுரவம் கொண்டவர்களைப் பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான்? வறட்டு வாதம் பாவத்தின் பக்கம் தள்ளிவிடுகின்றது. அதனால் அவனுக்கு நரகமே. (2:206)

4. இமாம்களும் தமது உளறல்களும் நிராகரித்தோருக்கு அல்லாஹ்வை இவ்வுலக வாழ்க்கை எவ்வாறு காட்டப்படும் என அல்லாஹ் கூறுகிறான்? இவ்வுலக வாழ்க்கை அலங்கரித்துக் காட்டப்படும் என அல்லாஹ் கூறுகிறான். (2:212)

5. மது, சூதாட்டத்தின் பயன்களைப் பற்றி எவ்வாறு அல்லாஹ் கூறுகிறான்? மனிதர்களுக்கு(சில) பயன்கள் இருப்பினும், பயனை விட கேடு மிகப் பெரிது என அல்லாஹ் கூறுகிறான். (2:219)

6. தொல்லை தரும் தருமத்தை விடச் சிறந்தது என அல்லாஹ் எப்படி கூறுகிறான்? கனிவான வார்த்தையும், மன்னிப்பும் சிறந்தது என கூறுகிறான். (2:263)

7. மர்யம்(அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்? மர்யம்(அலை) அவர்களை தேர்ந்தெடுத்து, பரிசுத்தப்படுத்தி அகிலத்துப் பெண்கள் அனைவரையும் விட சிறப் பித்துள்ளான். (3:42)

8. தவ்ராத்தும், இன்ஜீலும் யாருடைய காலத்திற்கு பின் இறக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான்? இப்றாஹிம் நபிக்கு பின்னரே இறக்கப்பட்டதாக அல்லாஹ் கூறுகிறான். (3:65)

9. இப்றாஹீம் நபி எந்த மார்க்கத்தைப் பின்பற்றியவராக இருக்கவில்லை என அல்லாஹ் கூறுகிறான்? யூதராகவோ, கிறிஸ்துவராகவோ இணைவைப்பாளராகவோ இருக்கா மல் முஸ்லிமாகவே இருந்தார் என அல்லாஹ் கூறுகிறான். (3:67)

10. யார் இஸ்லாம் மார்க்கம் அல்லாததை விரும்புகிறவர்களின் நிலை பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்? அது அவனிடமிருந்து அங்கீகரிக்கப்பட மாட்டாது. அவர்கள் மறுமையில் நஷ்டவாளிகளில் உள்ளவர்கள். (3:85)

11. ஸலாம் என்னும் வாழ்த்து உங்களுக்கு கூறப்பட்டால் நீங்கள் எவ்வாறு கூற வேண்டும் என அல்லாஹ் கூறுகிறான்? அதைவிட அழகிய முறையிலோ, அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் என அல்லாஹ் கூறுகிறான். (4:86)

12. எந்த அத்தியாயத்தில் எனவே (மனு, ஜின் கூட்டத்தினரான) நீங்கள் இருவரும் உங்கள் இரட்சகனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்ப்பீர்கள் என 31 முறை கூறப்படும் வசனம் எது? அத்தியாயம் 55, அர்ரஹ்மான் ஸுராவாகும்.

13. இவ்வுலக வாழ்வைப் பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்? விளையாட்டும், வீணுமேயன்றி வேறில்லை (அல்லாஹ்வை) அஞ்சி நடப்போருக்கு மறுமை வீடே மிகச் சிறந்தது என கூறுகிறான். (6:32)

14. நன்மை தீமை பற்றியதை அல்லாஹ் எவ்வாறு விளக்குகிறான்? ஒரு நன்மைக்கு 10 மடங்காகவும், ஒரு தீமைக்கு ஒரு தீமை என்ற நிலையில் கூலி வழங்கப்படும் என அல்லாஹ் கூறுகிறான். (6:160)

15. காலக்கெடு பற்றி அல்லாஹ் என்ன கூறுகிறான்? ஒவ்வொரு சமூகத்திற்கும் ஒரு காலக் கெடு உண்டு. அவர்களுக்குரிய காலக் கெடு வந்துவிட்டால் ஒரு கணப் பொழு தும், முந்தவோ, பிந்தவோ மாட்டார்கள். (7:34)

16. இணை வைப்பாளர்களுக்கு என்ன செய்ய கூடாது என அல்லாஹ் கூறுகிறான்? தமது நெருங்கிய உறவினர்களாயிருப்பினும் அவர்களுக்காக பாவமன்னிப்பு கோருவது நம்பிக்கை கொண்டோருக்கு தகுமானதல்ல எனக் கூறுகிறான். 9:113.

17. அல்லாஹ்வின் வசனங்களை பொய்பிப்பவர்களின் நிலை பற்றி அல்லாஹ் எவ்வாறு கூறுகிறான்? நஷ்டவாளர்கள் ஆகிவிடுவார்கள் என அல்லாஹ் கூறுகிறான். (10:95)

18. இப்றாஹிம் நபி தனது தந்தை ஆஸ்ரிடம் எவ்வாறு கூறுகிறார்? நீங்கள் சிலைகளை கடவுள்களாக எடுத்துக் கொள்கிறீர். நிச்சயமாக நான் உம்மை தெளிவான வழிகேட்டில் இருக்கக் காண்கிறேன் என கூறினார். (6:74)

19. நபி(ஸல்) அவர்களை அல்லாஹ் எவ்வாறு கூறும்படி கூறுகிறான்? நிச்சயமாக எனது வழக்க வழிபாடுகள், எனது வாழ்வு, எனது மரணம் ஆகியவை அகிலத்தாரின் இரட்சகனுக்கே என கூறுவீராக என்று கூறுகிறான். 6:162

Previous post:

Next post: