அந்நஜாத் அக்டோபர் – 2016

in 2016 அக்டோபர்

அக்டோபர் 2016

துல்ஹஜ்-முஹர்ரம் 1438

முஸ்லிம்களே அறிவை மவ்லவிகளிடம் பறிகொடுக்காமல்….

சுயமாகச் சிந்திக்க முன்வாருங்கள்!

அன்பார்ந்த முஸ்லிம் சகோதர சகோதரிகளே!

நீங்கள் நேர்வழி நடந்து அல்லாஹ்வின் பொருத்தத்துடன் சுவர்க்கத்தை உங்களின் இறுதி இருப்பிடமாக அடைய விரும்பினால் நேர்வழி காட்டும் அல்குர்ஆனை ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாகப் பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல்படி நடக்க முன்வாருங்கள். இதையே நம்மைப் படைத்த அல்லாஹ் 3:102,103 வசனங்களிலும் இன்னும் பல வசனங்களிலும் கட்டளையிடுகிறான்.

சூரியன், பூமி, சந்திரன் மட்டுமல்ல, விண்ணில் காணப்படும் சிறிய, பெரிய, மாபெரிய அனைத்து கோள்களும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் கட்டுப்பட்டு ஒரு வினாடி கூட முன், பின் ஆகாமல் அதனதன் வட்டவரைகளில் சுழன்று கொண்டிருக்கின்றன. இது அவை படைக்கப்பட்டுச் சுழலவிட்டக் காலத்திலிருந்து இடைவிடாமல் தொடர்ந்து நடைபெறும் அற்புதமாகும்.

அந்த வரிசையில் சூரியன், சந்திரன், பூமி இம்மூன்றும் அவை படைக்கப்பட்டக் காலத்திலிருந்து ஒரு வினாடியின் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட முன்பின் ஆகாமல் சுழன்று கொண்டிருக்கின்றன. மற்றக் கோள்களைப் போல் சந்திரனின் சுழற்சியும் அல்லாஹ்வின் முழுக்கட்டுப்பாட்டில் இருக்கிறதே அல்லாமல் மனிதக் கண்களின் கட்டுப்பாட்டில் இல்லவே இல்லை. இந்த உண்மையை குர்ஆனின் 2:189, 6:96, 7:54, 9:36,37, 10:5, 13:2, 14:33, 16:12, 17:12, 21:33, 25:61, 29:61, 31:29, 35:13, 36:40, 39:5, 55:5 இறைவாக்குகளை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் ஒருபோதும் மறுக்கமாட்டார்கள்.

இந்த அனைத்து குர்ஆன் வசனங்களையும் மறுத்து நபி(ஸல்) அவர்கள் சந்திரன் மனிதக் கண்களின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. மனிதக் கண்கள் அதில் பட்டால்தான் சந்திரன் சுழலும். இல்லை என்றால் சந்திரன் சுழலாமல் அங்கேயே நிற்கும் என்று சொல்லி இருப்பார்களா? ஒருபோதும் சொல்லி இருக்க முடியாது.

மேற்படி வசனங்களில் சந்திரனின் சுழற்சி முழுக்க முழுக்க அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று தெளிவாக, நேரடியாகச் சொல்லி யிருக்க நபி(ஸல்) அவர்கள் அந்த வசனங்கள் அனைத்தையும் நிராகரித்து சந்திரச் சுழற்சி மனிதக் கண்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மனிதக் கண் அதில் பட்டால்தான் அது சுழலும். மனிதக் கண் படாதவரை சந்திரன் சுழலாமல் அங்கேயே நிற்கும் என்று நபி(ஸல்) சொல்லி இருந்தால் அல்லாஹ் நபி(ஸல்) அவர்களைக் கண்டித்துத் திருத்தாமல் விட்டிருப்பானா? சிந்தியுங்கள்.

அல்லாஹ் ஹலாலாக்கிய ஒரு பொருளை மனைவிமார்களின் திருப்திக்காக ஹராமாக்கிய நபி(ஸல்) அவர்களை மிகக் கடுமையாகக் கண்டித் துத் திருத்தி அதற்குப் பரிகாரம் கொடுக்கக் கட்டளையிட்ட எல்லாம் வல்ல அல்லாஹ் சந்திரன் வி2ஷயமாக அப்படிச் சொல்லி இருந்தால் அவர்களைக் கண்டித்துத் திருத்தாமல் விட்டு வைத்திருப்பானா? சிந்தியுங்கள். (பார்க்க அத்தஹ்ரீம், விலக்குதல்: 66:1,2, 17:73-75, 69:44-47)

ஸூமூலிருஃயத்திஹீ அஃப்த்திரூ லிருஃயத்திஹீ அதைப் பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள். அதைப் பார்த்து நோன்பை துறங்கள். இந்த ஹதீஃத்தான் இந்த மவ்லவிகளுக்குப் பிறையைப் புறக்கண்ணால் மட்டுமே பார்த்து மாதத்தைத் துவங்க வேண்டும் என்பதற்குப் பெரிய ஆதாரம். இந்த ஹதீஃத் மேலே குறிப்பிட்டுள்ள எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமாக, குறிப்பாக 2:189, 36:39 வசனங்களுக்கு விளக்கமாக அமைந்துள்ளது.

அதாவது சந்திர சுழற் சியைப் பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள். சந்திர சுழற்சியைப் பார்த்து நோன்பைத் துறங்கள் என்றே நபி(ஸல்) கட்டளையிட்டுள்ளார்கள். 2:189 குர்ஆன் வசனப்படி நபிதோழர்கள் வளர்ந்து தேயும் பிறையை அன்றாடம் பார்த்து வந்திருக்கின்றனர். அப்படிப் பார்த்து வரும்போது சிலரது கணிப்பில் அம்மாதம் 30-ல் முடியும் என்றும், மற்ற சிலரின் கணிப்பில் அம்மாதம் 29-ல் முடியும் என்றும், கருத்து வேறுபாடு பட்டுள்ளனர்.

கருத்து வேறுபாடு சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தும் என்பதால் உங்களின் 29 இல்லை 30 என்ற கருத்து வேறுபாட்டை விட்டொழியுங்கள். தினசரி சந்திர சுழற்சியையும் பார்த்து நோன்பை ஆரம்பியுங்கள். நோன்பை முடியுங்கள் என்றே நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டி இருக்கிறார்கள். 36:39 இறைவாக்கில் மாத முடிவின் நாளுக்கு முந்திய நாளை இறுதியாக வெளிச்சம் தரும் “உர்ஜூனில் கதீம்” என்று அல்லாஹ் நேரடியாகத் தெளிவாக விளக்கியுள்ளான். சிந்திக்கவும்!

உர்ஜூனில் கதீமுக்கு அடுத்த நாள் சந்திர வெளிச்சம் மறைக்கப்படும் நாள் (குப்பிய, கும்மிய). அதுதான் மாதத்தின் கடைசி நாள். அதற்கு அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள் என்பது உள் ளங்கை நெல்லிக்கனியாக, குன்றிலிட்ட தீபமாக விளங்குகிறது. இதையே ஹிந்துக்கள் பிரதமை அதாவது 1ம் நாள் என்கின்றனர். சிந்தியுங்கள்.

இந்த உண்மையை உறுதிப்படுத்தும் வகையில் 01.09.2016 வியாழக்கிழமை முழு சூரிய கிரகணம் இடம் பெற்றது. மாதத்தின் இறுதியில் சூரிய கிரகண மும், மாதத்தின் நடுப்பகுதியில் சந்திர கிரகணமும் இடம் பெறும் என்பது பல்லாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மைகள். 1437ம் ஆண்டு சந்திர நாள் காட்டியில் குறிப்பிட்டிருந்த சூரிய கிரகணம், சந்திர கிரகணம் குறிப்பிட்டிருந்த நாட்களில் சரியாக இடம் பெற்றன என்பது எமது சந்திர நாட்காட்டி நூறுக்கு நூறு சரி என்பதை உறுதிப்படுத்துகிறது.

சரியான கணக்குப்படி சூரியகிரகணம் பிறை 29 அல்லது 30-ல் இடம்பெறும். சந்திர கிரகணம் 14-ல் அல்லது 15-ல் இடம் பெறும். அதற்கு மாறாக அறிவற்ற, சுய சிந்தனையற்ற இந்த மவ்லவிகளின் கண் பார்வை கணக்குப்படி சூரிய கிரகணம் பிறை 27 அல்லது 28லும் சந்திர கிரகணம் 12, அல்லது 13-ல் இடம் பெறும். இதிலிருந்தே அவர்களின் மூடத் தனம் வெளிப்படுகிறதே! விளங்கவில்லையா?

சூரிய கிரகணம் மாதத்தின் இறுதி நாளிலும், சந்திர கிரகணம் மாதத்தின் நடுப்பகுதியிலும் மட்டுமே இடம் பெறும் என்ற பேருண்மை நாலாம் வகுப்புப் படிக்கும் மாணவ மாணவிகளுக்குத் தெரிந்த நிலையில், இந்த மூட முல்லாக்களுக்குத் தெரியாதிருப்பது அவர்கள் வடிகட்டின மூடர்கள் தான் என்பதை உணர்த்தவில்லையா?

பொதுவாகப் பார்த்து என்றாலே கண்ணால், உள்ளத்தால், அறிவால், கணிப்பால், கணக்கீட்டால் தகவலால் இப்படிப் பல பொருள் தருவதாகும். பொய்யன் பீ.ஜை. சுயவிளக்கம் கொடுப்பது போல் சாப்பிடுவது என்றால் வாயால் மட்டுமே சாப்பிடுவது என்பது போல், பார்ப்பது என்றால் கண்ணால் மட்டுமே பார்ப்பது என்பது அவரது வடிகட்டின மூடத்தனத்தையே எடுத்துக் காட்டுகிறது. பாவம் அவர் படிப்பில் நாலாம் வகுப்பைக் கூடத் தாண்டாதவர். எனவே அவர் வடிகட்டின மூடராக இருப்பது எமக்கு ஆச்சரியத்தைத் தரவில்லை.

அது சரி! நபி(ஸல்) அவர்கள் பிறையைப் புறக்கண்ணால் பார்த்து மாதத்தை துவங்கச் சொன்னதாகப் பிதற்றுகிறார்களே, எப்போது பார்க்கச் சொன்னார்கள்? எத்திசையில் பார்க்கச் சொன்னார்கள்? இம்மூட முல்லாக்கள் அறியத் தருவார்களா? மாதத்தின் கடைசி நாளில் மேற்கே பிறை பார்க்கச் சொன்னார்களா? கிழக்கில் காலையில் உதித்து மேற்கில் மாலையில் மறையும் பிறையைப் பார்க்கச் சொன்னார்களா? மறையும் பிறையைப் பார்த்து நபி(ஸல்) அவர்கள் பிறை பிறந்துவிட்டது. நாள் ஆரம்பித்துவிட்டது என்று சொன்னார்களா? பிறக்கும் பிறை சுமார் 12 மணி நேரம் கண்ணுக்குத் தெரியும்.

பகலிலாவது சூரிய வெளிச்சத்தில் அதைப் பார்க்க முடியாமல் இருக்கும். இரவில் கண்டிப்பாகத் தெரியுமே! எப்படி பிறந்த பிறை சில நிமிடங்களில் மறைந்தது? மறையும் வாய்ப்பு உண்டா? இந்த அறிவுச் சுடர் கேள்விகள் மூட முல்லாக்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. ஆனால் இந்த மூடர்கள் நபி(ஸல்) அவர்களையும் இப்பட்டியலில் சேர்க்கிறார்களா? (நவூதுபில்லாஹ்) அதுதான் வேதனை!

ஒட்டுமொத்த மவ்லவிகளின் அறியாமையின் ஆழத்தை சிறிது நோட்டமிட்டுப் பாருங்கள். சந்திரன் கிழக்கில் உதிக்கிறதா? மேற்கில் உதிக்கிறதா? என்ற அறிவு இந்த மவ்லவிகளிடம் அறவே இல்லை. சூரியனும், சந்திரனும் உதித்து மறைய சுமார் 12 நேரம் எடுக்கும். சந்திரன் உதித்தவுடன் சில நிமிடங்களில் மறையவே மறையாது என்ற அறிவு இந்த மவ்லவிகளிடம் அறவே இல்லை. சந்திர சுழற்சி பற்றிய அறிவு இந்த மவ்லவிகளிடம் அறவே இல்லை.

இன்னும் பாருங்கள். இம்மவ்லவிகளின் மூடத் தனத்தை. பஜ்ர் தொழுகையை நாம் தொழுது 2½மணி நேரம் கழித்து சவுதியில் உள்ளவர்கள் தொழுகிறார்கள். ளுஹரை நாம் தொழுது 2½மணி நேரம் கழித்துத் தொழுகின்றனர். அஸரை நாம் தொழுது 2½மணி நேரம் கழித்து அவர்கள் தொழுகிறார்கள். மஃறிபை நாம் தொழுது 2½மணி நேரம் கழித்தே அவர்கள் தொழுகிறார்கள். இஷாவை நாம் தொழுது 2½மணி நேரம் கழித்து அவர்கள் தொழுகிறார்கள்.

ஜுமுஆ தொழுகையை நாம் தொழுது 2½மணி நேரம் கழித்து அவர்கள் தொழுகிறார்கள். அது மட்டுமா? நாம் நோன்பை ஆரம்பித்து 2½மணி நேரம் கழித்து அவர்கள் நோன்பை ஆரம்பிக்கிறார்கள். நாம் நோன்பைத் துறந்து 2½மணி நேரம் கழித்தே அவர்கள் நோன்பு துறக்கிறார்கள்.

இப்படி அனைத்திலும் நமக்குப் பின்னர் 2½மணி நேரம் கழித்து செயல்படும் சவுதி மக்கள் பெருநாள் தொழுகையை மட்டும் நமக்கு 21½மணி நேரத்திற்கு முன்னர் தொழும் வாய்ப்பு அவர்களுக்கு இருக்க முடியுமா? இந்தச் சாதாரணப் பொது அறிவும் இல்லாத இவர்கள் வடிகட்டின மூடர்களா இல்லையா? தாருந்நத்வா ஆலிம்கள் என பெருமை பேசிய ஆலிம்கள் மற்றும் அவர்களின் தலைவன் அபூஜஹீலின் வாரிசுகளா? இல்லையா? நீங்களே சுயமாகச் சிந்தித்து முடிவு எடுங்கள்.

இந்த அறிவற்ற மவ்லவிகள் முழுக்க முழுக்க யூதமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றிக் கொண்டு 4:112 இறைவாக்குக் கூறுவது போல் அப்பழியை குர்ஆன் ஹதீஃதை மட்டுமே மார்க்கமாகக் கொண்டுள்ளவர்கள் மீது போடுகிறார்கள். கண்ணுக்குத் தெரியும் 3-ம் பிறையை முதல் பிறையாகக் கொள்ளும் கலாச்சாரம் கி.மு. 383-லிலிருந்து யூதர்க ளின் நடைமுறையாகும். யூதர்களின் இந்த அறிவற்ற பழங்கால மூட நம்பிக்கையை இம்மூட முல்லாக்கள் பின்பற்றிக் கொண்டு, அதை குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்றுகிறவர்கள் மீது போடுகிறார்கள்.

இம்மவ்லவிகளை வடிகட்டின மூடர்கள் என்று நாம் திரும்ப திரும்ப எழுதி வருவது பெரும்பாலான முஸ்லிம்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. உண்மை கசக்கத்தான் செய்யும். ஆயினும் உண்மையை மறைக்காமல் சொல்லித்தான் ஆகவேண்டும். நபி (ஸல்) அவர்களின் காலத்து தாருந்நத்வா உலமாக்களையும் அதன் தலைவன் அபூ ஜஹீலையும் ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றும் இக்கால மவ்லவிகளை மூடர்கள், அறிவற்றவர்கள் என்று கூறாமல் வேறு எப்படி அடையாளம் காட்டி மக்களுக்குப் புரிய வைப்பது சொல்லுங்கள்.

இம்மவ்லவிகள் கைகளில் கட்டியிருக்கும் கடிகாரம் யாருடைய கண்டுபிடிப்பு? கண் கண்ணாடி யாருடைய கண்டுபிடிப்பு? இவர்கள் தூக்கிக் கொண்டு அலையும் மடிக்கணினி (Lab top) யாருடைய கண்டுபிடிப்பு? இவர்கள் பயன்படுத்தும் பலவகை வாகனங்கள் யாருடைய கண்டுபிடிப்பு? இன்று இம்மவ்லவிகளில் பலர் பெருமையுடன் அணியும் இடுப்பு வரை மட்டுமேயுள்ள காலர் சட்டைகள் யூத, கிறித்தவ கலாச்சாரம் இல்லையா? இவர்கள் வீடுகளில் பயன்படுத்தும் மின்சாரம், மற்றும் பல வகை இயந்திரங்கள் அனைத்தும் யாருடைய கண்டுபிடிப்பு? இவற்றில் ஒன்றேயொன்றையாவது இம்மவ்லவிகளில் எவராவது கண்டுபிடித்து மக்கள் பயன்பட வழிகாட்டினார்கள் என்று கூற முடியுமா? இவை அனைத்தும் யூத மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுவது என்று சொல்வார்களா?

இம்மூட மதகுருமார்கள் முஸ்லிம் சமுதாயத்திலும் திருட்டுத்தனமாக நுழைந்து முஸ்லிம்களை குர் ஆனை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்குவதிலி ருந்து தடுப்பதற்கு முன்னர் சில முஸ்லிம் அறிஞர்கள் ஒரு சில நவீன அறிவியலை அறிமுகப்படுத்தினார் கள் என்பதற்கு ஆதாரம் கிடைக்கிறது. ஆனால் அவர்கள் இம்மூட முல்லாக்களின் வர்க்கம் அல்ல. இம்மவ்லவிகளின் பாஷையில் அவாம்களே!

ஆலிம்கள் அரபு மொழி கற்ற மேதைகள் என வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகளில் ஒருவரே னும் முத்தஷாபிஹாத் என்ற ஒன்றுக்கு மேல் பொருள் தரும் வசனங்களில் ஆய்வு செய்து அவற்றில் மறைந்திருக்கும் அறிவியல் நுட்பங்களை வெளிக் கொண்டுவந்ததாக ஒரேயொரு ஆதாரமும் இல்லை. மவ்லவிகளும் முத்தஷாபிஹாத் வசனங் களை ஆய்வு செய்வதில்லை. மவ்லவி அல்லாத முஸ்லிம் அறிவு ஜீவிகள் முத்தஷாபிஹாத் வசனங்களை ஆய்வு செய்ய விடுவதுமில்லை. அவாம்களுக்கு குர்ஆன் விளங்காது என்று பூச்சாண்டிக் காட்டி மவ்லவி அல்லாத அறிவு ஜீவிகள் ஆய்வு செய்வதைத் தடுத்து வருகிறார்கள்.

அதன் விளைவு முஸ்லிம்கள் 150 கோடி இருந்தும் ஒரேயயாரு நபர் கூட அறிவியல் அடிப்படையில் நோபல் பரிசு பெற்றவர் இல்லை. அதற்கு மாறாக ஒரேயயாரு கோடி ஜனத் தொகை மட்டுமே கொண்ட யூதர்கள் இம்மவ்லவிகளின் வக்கிர புத்தியைக் கண்டுகொள்ளாமல் குர்ஆனின் முத்தஷாபிஹாத் வசனங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து அவற்றிலுள்ள அறிவியல் நுட்பங்களைக் கண்டுபிடித்து வெளியிட்டு நோபல் பரிசு பெற்று வருகிறார்கள். 150 கோடி முஸ்லிம்களில் ஒருவர் கூட இல்லாத நிலையில் 1 கோடி யூதர்களில் சுமார் 150 நபர்களுக்கும் அதிகமாக நோபல் பரிசு பெற்றுள்ளனர்.

ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய முத்தஷா பிஹாத் குர்ஆன் வசனங்களில் இம்மவ்லவிகள் ஆய்வே செய்வதில்லை. அதற்கு மாறாக 2:159-162, 33:36, 4:159 குர்ஆன் வசனங்களை நிராகரித்து இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லாத ஒரே பொருளுள்ள அதாவது ஒற்றைப் பொருளுள்ள முஹ்க்கமாத் வசனங்களில் ஆய்வு செய்கிறோம் பேர்வழிகள் என்று புகுந்து அர்த்தங்களை அனர்த்த மாக்கித் தொப்பையைக் கொடிய ஹராமான வழியில் நிரப்பும் வேலையில் முழுமூச்சாக ஈடுபட்டு வருகின்றனர். முஸ்லிம் சமுதாயத்தை நரக விளிம்பில் நிற்க வைத்துள்ளனர். (பார்க்க : 25:30, 12:106, 4:44, 27:14)

இந்த அடிப்படையில்தான் “ஸூமூலிருஃயத் திஹீ-அஃப்த்திரூ லிருஃயத்திஹி” என்ற ஹதீஃதை அதாவது அதைப் பார்த்து நோன்பை ஆரம்பியுங் கள். அதைப் பார்த்து நோன்பை முடியுங்கள் என்றிருப்பதை, சந்திரமாத இறுதியில் அதாவது மாதக் கடைசியில் மட்டும், காலையில் கிழக்கே உதித்து மாலையில் மேற்கே மறையும் பிறையைப் பார்த்து பிறை பிறந்துவிட்டது. நாள் ஆரம்பித்து விட்டது நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற யூத மதக் கலாச்சாரத்தை முஸ்லிம்களிடையே இம்மவ்லவி கள் புகுத்தி வருகிறார்கள்.

இதிலும் ததஜ இமாமின் ஆய்வு லட்சணத்தைப் பாருங்கள். அவரும் அவரது மவ்லவி பட்டாளமும் 1997-ல் பலமுறை அமர்ந்து ஆய்வு செய்து அவர் பெயராலேயே அறிவித்தது 1997 நவம்பர் அல் ஜன்னத் மாத இதழில் சர்வதேச பிறையைச் சரி கண்டு ஆதரித்து எழுதியது இடம் பெற்றுள்ளது. அவர் ஜாக்கிலிருந்து தமுமுகவுக்குத் தடம் புரண்டதும் அவரது ஆய்வும் தடம் புரண்டது. சர்வதேச பிறையிலிருந்து ஆய்வு என்ற பெயரால் தத்தம் பகுதி பிறைக்குத் தாவினார்.

பின்னர் ஆய்வு என்ற பெய ரால் வட்டப் பிறைக்குத் தாவினார். பின்னர் ஆய்வு என்ற பெயரால் மாவட்டப் பிறைக்குத் தாவினார். பின்னர் ஆய்வு என்ற பெயரால் மாவட்டப் பிறையிலிருந்து மண்டலப் பிறைக்குத் தாவினார். பின்னர் மண்டலப் பிறையிலிருந்து மாநிலப் பிறைக்குத் தாவியுள்ளார். ஆய்வின் பெயரால் மார்க்கச் சட்டம் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மாறுமா என்ற அடிப்படை அறிவும் இல்லாத வடிகட்டின மூடராக உலா வருகிறார் பொய்யன் பீ.ஜை. அவரைக் கண்மூடிப் பின்பற்றும் (தக்லீது) அவரது பக்தர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கொண்டு அவரையே சபித்து ஒப்பாரி வைப்பதை 33:36,66-68 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. சிந்தியுங்கள் படிப்பினை பெறுங்கள்.

மவ்லவிகளின் இந்தச் சுயநலப் பித்தலாட்டம் காரணமாக 11.09.2016 ஞாயிறன்று கொண்டாட வேண்டிய பண்டிகை (ஈதுல் அழ்ஹா) 12.09.2016 திங்கள், 13.09.2016 செவ்வாய் என மூன்று நாட்கள் முஸ்லிம்கள் கொண்டாடும் பரிதாப நிலை ஏற்பட்டது. இதைப் பார்த்து மாற்றுமதச் சகோதரர்கள் “முட்டாள் துலுக்கனுக்கு 3-ம் பிறையே முதல் பிறை” என்று நையாண்டி செய்யும் நிலைக்கு முஸ்லிம் சமூகம் ஆளாகி இருக்கிறது.

இது மட்டுமா? இன்னும் பாருங்கள். இந்த அறிவற்ற மவ்லவிகளின் வழிகேட்டின் படுபாதாளத்தை!

தொலைத்தொடர்பு, நவீன கணினி கணக்கீட்டு முறை கண்டுபிடிக்க முன்னர், இந்த முஸ்லிம் சமுதாயத்தில் வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு நாட்களின் பண்டிகை கொண்டாடி இருக்கலாம். ஆனால் ஒரே ஊரிலுள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்களும் ஒரே நாளில்தான் கொண்டாடினார்கள். ஒரே ஊரில் மூன்று நாட்கள் பண்டிகை கொண்டாடியதாக வரலாறே இல்லவே இல்லை.

அதற்கு மாறாக அதிநவீன தொலைத் தொடர்பு வசதிகள், சூரிய, சந்திர ஓட்டத்தை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டு எதிர்வரும் 100 வருடங்களில் இடம் பெறும் சூரிய, சந்திர கிரகணங்களை மிகத் துல்லியமாகப் பதிவு செய்துப் பதிந்துப் பாதுகாக்கும் இந்தக் காலத்தில், அதாவது அதிநவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் மலிந்து காணப்படும் இந்த நவீன காலத்தில் வெவ்வேறு ஊர்களில் அல்ல, ஒரே ஊரில் மட்டுமல்ல, ஒரே குடும்பத்தில் தகப்பன் ஒரு நாள், தாய் அடுத்த நாள், மகன் அதற்கடுத்த நாள் என்று மூன்று பிரிவினராகப் பிரிந்து ஒரு நாள் பண்டிகையைக் கொண்டாடும் கேடுகெட்ட நிலையை, இந்த மூட முல்லாக்களின் கேடுகெட்ட ஆய்வு ஏற்படுத்தி வருகிறது.

இதை நிதர்சனமாகப் பார்க்கும் முறையாகச் சிந்திக்கும் அறிஞர்கள், கேவலம் ஒட்டு மொத்தச் சமுதாயமும் ஒன்றுபட்டு ஒரே நாளில் கொண்டாட வேண்டிய ஒரு பண்டிகையையே இப்படி மூன்றாகப் பிளவுபட்டு மூன்று நாட்களில் கொண்டாடும் முஸ்லிம்கள் வேறு எதில் ஒன்றுபடப் போகிறார்கள் என்று முஸ்லிம்களின் முகத்தில் காரித் துப்பும் ஒரு இழிநிலையை இம்மூட மவ்லவிகளின் கேடுகெட்ட ஆய்வுகள் நிலைநாட்டி வருகின்றன. இம்மவ்லவிகளின் ஆய்வுகள் நேர்வழி ஆய்வுகளா? இம்மவ்லவிகளின் சுயநலத்திற்காக, உலக ஆதாயங்களுக்காக, கொடிய ஹராமான வழியில் தங்கள் வயிற்றை நிரப்பச் செய்யப்படும் 2:159-162 குர்ஆன் வசனங்கள் கூறும் அல்லாஹ், மலக்குகள், மனிதர்கள் என அனைவரின் சாபத்திற்குரிய ஆய்வா? சிந்தியுங்கள்.

முஸ்லிம் சகோதரர்களே, சகோதரிகளே இந்த மவ்லவிகளை நம்பி மோசம் போகாதீர்கள். 33:36 இறைவாக்குச் சொல்லும் குர்ஆன், ஹதீஃதுக்கு மாறாக நடந்து பகிரங்க வழிகேட்டில் ஆகாதீர்கள். 33:66-68 இறைவாக்குகள் கூறுவது போல் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக்கொண்டு நீங்கள் பின்பற்றிய இந்த மவ்லவிகளைச் சபித்து, திட்டி, சாபமிட முற்படாதீர்கள்.

2:186 இறைக்கட்டளைக்கு முற்றிலும் அடிபணிந்து, இம்மவ்லவிகளை நம்பாமல் அல்லாஹ்வை மட்டுமே நம்பி அவனிடமே நேர்வழியைக் கேளுங் கள். 7:3, 53:2-4 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஃத்களை மட்டுமே மார்க்கமாகக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களைத் தவிர மனிதர்களில் எவரையும் நம்பி அவர்கள் பின்னால் செல்லாதீர்கள். அவர்கள் ஆலிம், அல்லாமா, மார்க்கம் கற்ற மேதைகள் என வீண் பெருமை பேசுபவர்களாக இருந்தாலும், எம்மைப்போல் அவாமாக இருந்தாலும் மனிதர்களில் எவரையும் அவுலியாவாக, இமாமாக, வழிகாட்டியாகக் கொண்டு அவர்கள் சொன்னால் அது சரியாகத்தான் இருக்கும் என நம்பி கண்மூடிச் செல்லாதீர்கள். அப்படிச் செல்கிறவர்களை அல்லாஹ் 18:102 இறைவாக்கில் காஃபிர் என்றே அடையாளம் காட்டுகிறான். அவர்களின் நல்லமல்களும் நாளை மறுமையில் நிறுக்கப்படாது. நாளை நரகையே அடைவார்கள் என்று 18:102 முதல் 106 வசனங்கள் வரை நீங்களே நேரடியாகப் படித்து விளங்குங்கள்.

அதையும் மீறி மனிதர்களில் எவரையும் உங்களின் வழிகாட்டியாக நம்பி, பெருமையடிப்பவர்கள் பின்னால் சென்று நாளை நரகை அடைந்து உண்மையை அறிந்து ஒப்பாரி வைப்பதைக் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களை நீங்களே நேரடியாகப் படித்து அறியுங்கள். 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 இவற்றில் பெருமையடித்தோர் எனக் கூறப்படுவது சாட்சாத் இம்மவ்லவிகளையே!

ஆதிகால வேதங்களும் இறுதி நெறிநூல் அல்குர்ஆனும்

 MTM. முஜீபுதீன், இலங்கை

செப். 2016 தொடர்ச்சி……

அந்த நாளில், பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும் தாம் ஊட்டும் குழந்தையை மறந்து விடுவதையும், ஒவ்வொரு கர்ப்பினியும் தன் சுமையை ஈன்று விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். மேலும், மனிதர்களை மதி மயங்கியவர்களாக இருக்கக் காண்பீர். எனினும் (அது மதுவினால் ஏற்பட்ட) மதிமயக்கமல்ல. ஆனால் அல்லாஹ்வின் வேதனை மிகக் கடுமையானதாகும்.

இன்னும், எத்தகைய கல்வி ஞானமும் இல்லாமல் அல்லாஹ்வைப் பற்றித் தர்க்கம் செய்கின்றவர்களும், மனமுரண்டாய் எதிர்க்கும் ஒவ்வொரு ஷைத்தானையும் பின்பற்றுகின்றவர்களும் மனிதர்களில் இருக்கிறார்கள்.

அவனை(ஷைத்தானை)ப் பற்றி எழுதப்பட்டுள்ளது. எவர் அவனை நண்பனாக எடுத்துக் கொள்கிறாரோ அவரை நிச்சயமாக அவன் வழிகெடுத்து எரி நரகின் வேதனையின்பால் அவருக்கு வழிகாட்டுகிறான்.

மனித்ரகளே! (இறுதித் தீர்ப்புக்காக நீங்கள்) மீண்டும் எழுப்பப்படுவது பற்றி சந்தேகத்தில் இருந் தீர்களானால், (அறிந்து கொள்ளுங்கள்) நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண்ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்னர் அலக்கிலிருந்தும் பின்பு உருவாக்கப்பட்டதும் உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம். உங்களுக்கு விளங்குவதற்காகவே (இதனை விபரிக்கின்றோம்) மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பையில் தங்கச் செய்கி றோம. பின்பு உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம்.

பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும் (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள். (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப் போல் ஆகிவிடக்கூடிய தளர்ந்த வயது வரை விட்டுவைக்கப்படுபவர்களும் இருக்கிறார்கள். இன்னும், நீங்கள் (தரிசாகக் கிடக்கும்) பூமியைப் பார்க்கின்றீர்கள். அதன் மீது நாம் (மழை) நீரைப் பெய்யச் செய்வோமானால் அது பசுமையாகி, வளர்ந்து, அழகான (ஜோடி ஜோடியாகப்) புற்பூண்டுகளை முளைப்பிக்கின்றது.

இது ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் அவனே உண்மையானவன். (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான். இன்னும், நிச்சயமாக அவன் தான் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால், (கியாமத் நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும். இதில் சந்தேகம் இல்லை. கப்ருகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான்.

இன்னும், கல்வி ஞானமோ, நேர்வழி காட்டியோ, பிரகாசமான நெறிநூல்(ஆதாரமோ) இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான்.

(அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழிகெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான். அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது. கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்கச் செய்வோம்.

உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இது(கூலியாக) இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன் (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்). (அல்குர்ஆன்: 22:2-10)

அன்று சிலைகளை தெய்வங்களாகக் கருதி வணங்கிய மக்களில் ஒரு பிரிவினர் மரணமடைந்த பின் மனிதன் உயிர் பெற்று எழுப்பப்படுவதை நம்ப வில்லை. அவர்களிடம் அல்லாஹ் பின்வருமாறு விளக்குகின்றான். அதாவது உயிரற்ற நிலையிலிருந்த மனிதனை அல்லாஹ் பல வயது நிலைகளில் வளர்ச்சி அடையச் செய்து பின் அவனை முதுமையடைய வைக்கிறான். அதுபோல் தாவரங்கள் இல்லாத வரண்ட தரிசு நிலங்களில் அல்லாஹ் மழையைப் பொழியச் செய்கிறான். இதனால் இந்நிலம் பசுமையாகி அழகான புற்பூண்டுகளை முளைப்பிக்கின்றது. இவ்வாறு மனிதனும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதாக விளக்குகிறான்.

அன்று மக்களை நேர்வழிப்படுத்துவதற்கு உலகிற்கு அனுப்பப்பட்ட இறைத் தூதர்கள் மறுமை வாழ்க்கை உண்டு சுவர்க்கம், நரகம் உண்டு என்ற செய்திகளை இறைநெறி நூல்களில் தெளிவுபடுத்தியே சென்றுள்ளனர். இதனால் இந்தியாவில் உள்ள பல தெய்வ நம்பிக்கையுடையவர்களும், யூதர்களும், கிறித்தவர்களும் மறுபிறப்பு, சுவர்க்கம், நரகம் பற்றி விளக்கிக் கூறுகிறார்கள். அதுபோல் பழைமையான எல்லா மதங்களிலும் இது பற்றிய செய்திகள் காணவே செய்கின்றன. ஆனால் அவர்கள் கைவசம் வைத்துள்ள வேதங்கள் இவ்விறைத்தூதர்களுக்குப் பின் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

இதனால் மறுமை, சுவர்க்கம், நரகம் போன்ற நம்பிக்கையில் தெளிவின்மை காணப்படுகின்றது. அதனால் அவர்கள் பல முரண்பாடான கருத்துக்களை வெளிப்படுத்துகின்றனர். இதனால் இம்மதங்களைப் பின்பற்றுபவர்களில் அதிகமான மக்கள் மறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கையற்றவர்களாகவே வாழ்கின்றனர். அன்று ஒவ்வொரு சமுதாயங்களுக்கும் ஒருவருக்குப் பின் ஒருவராக பல இறைத் தூதர்கள் தொடர்ந்து வந்ததினால் அவ்விறைத் தூதருக்குப் பின் அவ்வேதங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆகவே தெளிவில்லாத முரண்பாடான வேதங்களை வைத்து இவர்களினால் சத்திய உண்மைகளை அறிய முடியாது உள்ளது.

அத்துடன் மடமையும் பல தெய்வ வணக்கமும் காணப்படும் மக்கள் தவறான சடங்கு சம்பிரதாயங்களை வைத்துள்ளனர். இவர்களிடம் மந்திரம் என பல மெளடீக சடங்குகள் காணப்படுகின்றன. குருமார்களும், அரசர்களும் பக்தி என்ற பெயரால் மக்களின் செல்வங்களை அபகரிக்கும் வழியாக இதனை நடைமுறைப்படுத்தியுள்ளனர். இதனால் உணவு வீண் விரயமாக்கப்படுகின்றது. பால், தேங்காய், பழங்கள், பூசை என்ற பெயரால் வீண் விரயமாக்கப்படுகின்றன. இம்மடமைகளை இறைத் தூதர்கள் எதிர்த்தே உள்ளனர். இத்தகைய மடமைகளை அவதானிக்கும் இறை நம்பிக்கை அற்றவர்கள் மறுமை வாழ்க்கையையும் மறுக்கின்றனர்.

அறிவு நிறைந்த மக்களே, நீங்கள் அல்குர்ஆனை அவதானியுங்கள். அதில் அறியாமைக்கு இடமில்லை. இந்த உலகைப் படைத்து பரிபாலிக்கும் ஏக இறைவன் ஒருவன் இருக்கிறான். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. அல்குர்ஆன் இறுதியாக அல்லாஹ்வினால் இறக்கி அருளப்பட்ட இறை நெறிநூலாகும். அதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் மறுமை வாழ்க்கை பற்றி தெளிவாக கூறியுள்ளான். அதனை மறுப்பது பெரும் பாவமாகும். சிந்திப்போர் உண்டா?

அன்று வாழ்ந்த மக்கள் முன்னைய இறைநெறி நூல்கள் பாதுகாக்கப்படாமையால், பல குழப்பங்களும், முரண்பாடுகளும், மடமைகளும் நிறைந்திருந்ததினால் அவற்றை மறுத்திருக்கலாம். ஆனால் அல்குர்ஆனில் எந்த முரண்களையும், குழப்பங்களையும், மடமைகளையும் காணமுடியுமா? சிந்தியுங்கள். அல்லாஹ் அல்குர்ஆனில் பல இடங்களில் மறுமையை விபரிக்கின்றான். மனிதர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்யும் சந்தர்ப்பங்களை சுட்டிக் காட்டுகிறான். அச்சந்தர்ப்பங்களில் மனிதன் அடையப் போகின்ற தண்டனையையும் ஞாபகப்படுத்துகிறான்.

மனிதர்கள் அல்குர்ஆனை நிராகரித்துப் பொய்ப்பிக்க முற்படுகின்றனர். இச்சந்தர்ப்பங்களில் அல்லாஹ் தான் படைத்த படைப்பினங்களின் மீது சத்தியம் செய்து மறுமை வாழ்க்கையின் உண்மை நிலையை மனிதர்களுக்கு ஞாபகமூட்டுகிறான். அத்துடன் மறுமையின் போது இந்த பூமியும் வானங்களும் என்ன மாற்றங்களுக்கு உட்படும் என பல இடங்களில் குறிப்பிடுவதை அவதானியுங்கள்.

எனினும் நிராகரிப்பவர்கள், (நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது என்று கூறுகிறார்கள். அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக (இது) உங்களிடம் வந்தே தீரும். அவன் மறைவான (யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது. இன்னும், அதைவிடச் சிறிதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக. (அல்குர்ஆன்: 34:3)

மேலும் அல்லாஹ் மக்களைத் தீமைகளிலிருந்து தவிர்த்து, நன்மையின்பால் செலுத்துவதற்கு மறுமையை விளக்குவதை அவதானியுங்கள். கியாம நாள் மீது நான் சத்தியம் செய்கின்றேன். நிந்தித்துக் கொண்டிருக்கும் ஆத்மாவின் மீதும் நான் சத்தியம் செய்கிறேன். (மரித்து உக்கிப்போன) மனிதனின் எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கவே மாட்டோம் என்று மனிதன் எண்ணுகின்றானா? அன்று அவன் நுனி விரல்களையும் (முன்னிருந்தவாறே) செவ்வையாக்க நாம் ஆற்றலுடையோம்.

எனினும் மனிதன் தன் எதிரே வரவிருப்பதை (கியாம நாளைப்) பொய்ப்பிக்கவே நாடுகிறான். கியாம நாள் எப்போது வரும்? என்று (ஏளனமாகக்) கேட்கிறான். ஆகவே, பார்வையும் மங்கி, சந்திரன் ஒளியும் மங்கி, சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டு விடும். அந்நாளில் (தப்பித்துக் கொள்ள) எங்கு விரண்டோடுவது? என்று மனிதன் கேட்பான். இல்லை, இல்லை! தப்ப இடமே இல்லை! (என்று கூறப்படும்) அந்நாளில் உம் இறைவனிடம் தான் தங்குமிடம் உண்டு. 

அந்நாளில், மனிதன் முற்படுத்தி(அனுப்பி)யதையும், (உலகில்) பின் விட்டு வைத்தவையும் பற்றி அறிவிக்கப்படுவான். எனினும் மனிதன் தனக்கு எதிராகவே சாட்சி கூறுபவனாக இருக்கிறான். அவன் தன் (பிழைகளை மறைக்க) புகல்களை எடுத்துப் போட்டபோதிலும்! (அல்குர்ஆன்:75:1-15)

இவ்வாறு அல்குர்ஆனில் எல்லா இடங்களிலும் மறுமையின் நிகழ்வுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே மறுமை நாள் நிகழ்வது நிச்சயமாக நடைபெறும் ஓர் நிகழ்ச்சியாகும். மனிதர்களே! அந் நாளை மறந்து செயற்பட்டு நரகின் தண்டனையைச் சுவைத்து விடாதீர்கள். மேலும் நியாயத் தீர்ப்பு நாள் பற்றி அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் மனித சமுதாயத்தினருக்கு ஞாபகமூட்டுவதை அவதானியுங்கள்.

வானம் பிளந்து விடும்போது, நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது, கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும்போது, கப்ருகள் திறக்கப்படும் போது, ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தி (அனுப்பி) வைத்ததது, எதைப் பின்னே விட்டுச் சென்றது என்பதை அறிந்து கொள்ளும்.

மனிதனே! கொடையாளனான சங்கைமிக்க உன் இறைவனுக்கு மாறு செய்யும்படி உன்னை மருட்டி விட்டது எது?

அவன்தான் உன்னைப் படைத்து, உன்னை ஒழுங்குபடித்தி உன்னைச் செவ்வையாக்கினான். எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான். அவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கிறீர்கள்.

நிச்சயமாக, உங்கள் மீது பாதுகாவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர். (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள். நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள். நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள். இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள். நியாயத் தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.

மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்துவிட மாட்டார்கள். நியாயத் தீர்ப்பு நாள் என்னவென்று உமக்கு அறிவிப்பது எது?

அந்நாளில் ஓர் ஆத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது; அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே. (அல்குர்ஆன்:82:1-19)

அல்குர்ஆன் இறுதி இறைநெறி நூலாகவும். அதில் அல்லாஹ் மறுமையைப் பற்றி விபரிக்கிறான். அதை நம்ப மறுப்பது மடமையாகும். அவ்வாறு மறுத்து வாழ்ந்தவர்கள் நரகையே அடைவர். அல்லாஹ் நம் எல்லோரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்தல் வேண்டும்.

சுவர்க்கமும், நரகமும் :

அல்லாஹ்வின் அருளினால் இம்மையில் அல்லாஹ்வையும், மலக்குமார்கள், நெறிநூல்கள், இறைத் தூதர்கள், மறுமை நாளையும், அல்கதிர் (அல்லாஹ்வின்) விதியின் மீதும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக் கூடிய நாயன் வேறு யாருமில்லை எனவும், முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் அடிமையும், இறைத்தூதரும் ஆவார் என நம்பிக்கை கொள்ளுதல் வேண்டும்.

அத்துடன் அல்லாஹ்வின் கட்டளைக்கமைய முஹம்மது(ஸல்) அவர்கள் வணக்கம் என 23 வருடங்களாக காட்டிச் சென்ற அடிப்படையில் தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் ஆகியவற்றைச் செய்து, அல்லாஹ் ஏவிய நன்மையான கருமங்களைச் செய்து, அல்லாஹ் தடுத்த தீமைகளைத் தவிர்த்து இறை அச்சத்துடன் வாழ்ந்தவர்களுக்கே சுவர்க்கம் கிடைக்கும். இதற்கு மாறாக அல்லாஹ்வுக்கு இணை, துணைகளை ஏற்படுத்தி அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு மாறு செய்து வாழ்ந்தவர் களுக்கு அல்லாஹ்வின் நாட்டத்தின்படி நரகமே கிடைக்கும். ஆதத்தின் சந்ததியில் வந்த நாம் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வோமாக.

அரபியில் அல்ஜன்னத் என்பதற்கு சுவர்க்கம், தோட்டம், சோலை என அழைக்கலாம். இது பல தரங்களில் அமைக்கப்பட்டுள்ளது என அல்குர் ஆனும், நபி(ஸல்) அவர்களின் ஹதீஃத்களும் விளக்குகின்றன. அதில் கிடைக்கும் இன்பத்திற்கு ஈடு இணை கிடையாது. அத்துடன் சுவர்க்கம், ஓர் அழிவில்லாத நிரந்தரச் சோலையாகும். மனிதர்கள் இம்மையில் அல்லாஹ்வின் இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆனையும், இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் நற்போதனைகளையும் நிராகரித்து, அல்லாஹ்வுக்கு இணை வைத்து ஷைத்தானின் வழிமுறையில் வாழ்பவர்களுக்கு நரகம் கிடைக்கும்.

நரகம் மனிதன் செய்யும் தீமையின் படித்தரத்திற்கமைய வேறு படும். அல்குர்ஆனில் சுவர்க்கம், நரகம் பற்றி விபரிப்பதை அவதானியுங்கள். (நபியே!) நீர் கேட்பீராக: அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள(ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையான வற்றையும் தடுத்தது யார்? இன்னும் கூறும். அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும். இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக் கூடிய மக்களுக்கு விபரிக்கின்றோம்.

கூட்டு துஆ, ஃதிக்ர் நபிவழியா?

அபூ அப்தில்லாஹ்

இன்று பெரும்பாலான முஸ்லிம்களிடையே ஐங்காலத் தொழுகைகளுக்குப் பின்னரும், அந்த துஆவுக்குப் பின்னர் ஒரு துஆ, இன்னும் பல இடங்களிலும் கூட்டு துஆவும், ஃதிக்ரும் சர்வ சாதாரணமாக இடம்பெற்று வருகிறது. அபூர்வ துஆ என்றெல்லாம் நடைமுறைப்படுத்துகிறார்கள். இச்செயலுக்கு குர்ஆனிலும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களிலும் இடமுண்டா என்று பார்ப்பது நமது கடமையாகும். காரணம் குர்ஆனிலும், ஹதீஃத்களிலும் இல்லாத ஒரு செயலை நற்செயல் என்று நம்பிச் செய்வது பித்அத்-புதுமை-வழிகேடு-நாளை நரகில் சேர்க்கும் என்பதை 2:159-162, 33:36 போன்ற வசனங்களும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களும் மிகக் கடுமையாக எச்சரிக்கின்றன.

இப்போது துஆவைப் பற்றி குர்ஆன் கூறுவதைப் பார்ப்போம். “…படைத்தலும், கட்டளையிடுதலும் அவனுக்கே சொந்தம்” என்று 7:54 இறைவாக்கில் அல்லாஹ் கூறிவிட்டு, அந்தக் கட்டளைகளில் ஒன்றை 7:55 இறைவாக்கில் தெளிவாக, நேரடியாக மனிதர்களில் எவரது சுயவிளக்கமும் தேவையே இல்லாத நிலையில் அல்லாஹ் கூறுகிறான் படித்துப் பாருங்கள். (நம்பிக்கையாளர்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை (துஆ) செய்யுங்கள். வரம்பு மீறுகிறவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை. (7:55)

ஆக இந்த 7:55 இறைக்கட்டளை துஆ பணிவாகவும் அந்தரங்கமாகவும் மட்டுமே இருக்கவேண்டும். சத்தமாகவோ கூட்டாகவோ துஆ செய்வது வரம்பு மீறிய செயல்-வழிகேடு-நரகில் சேர்க்கும் என்பதை நேரடியாகக் கூறுகிறது. படிப்பினை பெறுவோர் மட்டுமே நேர்வழி பெறுவர்.

அடுத்து ஃதிக்ர்-இறை தியானம் பற்றி 7:205 குர்ஆன் வசனம் என்ன கூறுகின்றது படித்துப் பாருங்கள்.

(நபியே!) நீர் உம்மனதிற்குள் மிக்கப் பணிவோடும், அச்சத்தோடும், சொல்லில் உரத்த சப்தமின்றி காலையிலும் மாலையிலும், உம் இறைவனை நீர் நினைவு கூர்வீராக! அவனை மறந்திருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம். (7:205)

இந்த குர்ஆன் வசனம் ஃதிக்ர்-இறைத் தியானம் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவாக நேரடியாகக் கூறுகிறது. மக்கள் சேர்ந்து கூட்டாக, சப்தமிட்டு, ஃதிக்ர்-தியானம் செய்ய அனுமதியே இல்லை. அது பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்த உண்மையை இப்னு மஸ்வூத்(ரழி) அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். எப்படி என்று பாருங்கள்?

ஒரு பள்ளியினுள்ளே அமர்ந்து கூட்டாக (சப்தமிட்டு) ஃதிக்ரு, ஸலவாத் ஓதிக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து இப்னு மஸ்வூத்(ரழி) அவர்கள், நான் நபி(ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவனாக இருக்கிறேன். நபி(ஸல்) அவர்களின் காலத்தில் யாரும் இவ்வாறு ஃதிக்ர், ஸலவாத் ஓதுவதை நான் பார்த்ததே இல்லை. எனவே, நீங்கள் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத பித்அத்களைச் செய்கிறீர்கள் என்று கூறி அவர்களைப் பள்ளிவாசலை விட்டும் வெளியேற்றிவிட்டார்கள்.
நூல்: அஸ்ஸுன்னத்வல் பித்ஆ)

நபி(ஸல்) அவர்கள் காட்டித்தராத ஒரு செயலை, நன்மை தரும் ஒரு நற்செயல் என்று நம்பிச் செயல்படுவதுதான் பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும் என்பதைத் தெள்ளத் தெளிவாக விளக்கி நபி(ஸல்) அவர்கள் நபிதோழர்கள், தாபியீன்கள், இமாம்கள் என அனைவரும் கண்டித்துள்ளார்கள். அவற்றை அந்நஜாத் ஆகஸ்ட் 2016 இதழில் “பித்அத் ஓர் ஆய்வு” என்ற தலைப்பில் எடுத்து வைத்துள்ளோம். அவை அனைத்தையும் சுயமாகப் படித்து அறிந்தவர்கள், ஐங்காலத் தொழுகைகளுக்குப் பின்னர் இமாம்கள் பிடிவாதமாகச் செய்து வரும் கூட்டு துஆ, ஃதிக்ர் இரண்டும் தெளிவான நேரடியான பித்அத்-வழிகேடு-நரகில் சேர்க்கும் என்பதைத் திட்டமாக விளங்க முடியும்; எப்படி என்று பாருங்கள்.

நபி(ஸல்) அவர்கள் மிஃராஜ் சென்றுவந்த 52வது வயதிலிருந்து அவர்கள் மரணிக்கும் 63வது வயது வரைத் தினசரி ஐங்காலத் தொழுகைகளை விடாது தொழுது வந்தார்கள். அவற்றில் இமாமத்தும் செய்தார்கள். அதாவது 12 வருடங்கள் 12X355=4260 நாட்கள் X 5=21300 தொழுகைகள் தொழுதிருக்கிறார்கள். இந்த 21300 தொழுகைகளில் ஏதாவது ஒரேயொரு தொழுகையிலாவது இன்று இந்த இமாம்கள் தொழுகைக்குப் பின் பிடிவாதமாக செய்து வருவது போல் கூட்டு துஆ செய்து காட்டினார்களா? இல்லையே! நபி(ஸல்) அவர்கள் தொழுகையில் சலாம் கொடுத்தவுடன் மக்களை நோக்கி திரும்பி உட்கார்ந்து அவர்களுக்கு பல அரிய உபதேசங்கள் செய்ததாக ஹதீஃத்கள் இருக்கின்றன.

அப்போதாவது இன்று இந்த மவ்லவிகள் செய்வது போல் கூட்டு துஆ செய்து தமது உம்மத்திற்கு வழிகாட்டினார்களா? இல்லையே! ஒரேயயாரு சமயம் நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தகையோடு அவசரமாக எழுந்து வீட்டுக்குள் சென்று ஜகாத் பொருளை எடுத்து வந்து கொடுத்ததாக ஹதீஃத் இருக்கிறது. அதுபோல் ஒரேயயாரு சமயம் இப்படிக் கூட்டு துஆ செய்து தமது உம்மத்துக்கு வழிகாட்டி இருக்கிறார்களா? இல்லையே!

ஆக கடமையான ஐங்காலத் தொழுகைகளுக்குப் பின்னர், இன்று இந்த மவ்லவிகள் பிடிவாதமாகச் செய்து வரும் கூட்டு துஆவை நபி(ஸல்) தம் வாழ்நாளில் ஒரேயயாரு முறையேனும் செய்து காட்டியதாக ஒரேயொரு ஹதீஃதையாவது இம்மவ்லவிகளால் காட்ட முடியுமா? ஒருபோதும் முடியாது.

எந்த நான்கு இமாம்களின் பெயரால் இம் மவ்லவிகள் 4 மத்ஹபுகளைக் கற்பனை செய்து கொண்டு நடைமுறைப்படுத்தி வருகிறார்களோ. அந்த நான்கு இமாம்களுக்கும் இந்த நான்கு மத்ஹபுகளுக்கும் கடுகளவும் சம்பந்தமே இல்லை.

அந்த நான்கு இமாம்களும் எங்களை தக்லீது செய்யாதீர்கள். அதாவது கண்மூடிப் பின்பற்றாதீர்கள் என்று நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் தெளிவாக நேரடியாகக் கூறியுள்ளது இவர்கள் இன்று புரோகித மதரஸாக்களில் வைத்திருக்கும் (கிதாபு) நூல்களிலேயே காணப்படுகின்றன. ஆனால் 7:146 இறைவாக்குக் கூறுவது போல் இம் மவ்லவிகளின் நியாயமற்ற வீண் பெருமை காரணமாக எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மவ்லவிகளை குர்ஆன் வசனங்களை விட்டும் திருப்பி விடுவது போல், நேர்வழி நடந்த அந்த நான்கு இமாம்களின் நேர்வழி கருத்துக்களை அதாவது குர்ஆன், ஹதீஃத் கருத்துக்களை விளங்கவிடாமல் தடுத்து விடுகிறான் போலும்.

ஆக இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆனில் கூட்டு ஃதிக்ர், துஆவுக்கு ஆதாரமில்லை என்பது மட்டுமல்ல, கூட்டு துஆ வரம்பு மீறியச் செயல்; அப்படி வரம்பு மீறுகிறவர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான் அவர்கள் ஷைத்தானைப் போல் அல்லாஹ்வின் கோபத்திற்கும் நரகத்திற்கும் உரியவர்கள். (பார்க்க : 2:34, 7:12,13) ஆக ஐங்காலத் தொழுகைக்குப் பின்னுள்ள கூட்டு ஃதிக்ர், துஆ பித்அத் வழிகேடு, நாளை நரகில் கொண்டு சேர்க்கும் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக குன்றிலிட்ட தீபமாக குர்ஆன், ஹதீஃத் கொண்டு திட்டமாகத் தெரிகிறது.

இம்மவ்லவிகள் வரம்பு மீறி பித்அத்தான இக் கூட்டு துஆவை செய்வது பெரும்பாவம், நரகில் சேர்க்கும் என்பதை 2:190, 5:87, 6:119, 7:55, 10:74, 50:25, 68:12, 83:12 இறைவாக்குகளைப் படித்து விளங்குங்கள். மேலும் இம்மவ்லவிகள் “யார் (குர்ஆன் போதனைகளை) மறுத்து நம் வசனங்களை பொய்ப்பிக்கிறார்களோ அவர்கள் நரகவாசிகள். அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் தங்கி இருப்பர். (2:39)

இன்னும் நான் இறக்கிய(குர்ஆன்)தை நம்புங்கள். இது உங்களிடமுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துகிறது. நீங்கள் அதை (குர்ஆன்) மறுப்பவர்களில் முதன்மையானவர்களாக வேண்டாம். மேலும் என் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்று விடாதீர்கள். இன்னும் எனக்கே பயபக்தியுடன் நடங்கள். (2:41)

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்தீர்கள். (2:42)

இவ்வசனங்கள் காஃபிர், யூத, கிறித்தவர்கள் பற்றியது. எங்களைப் பற்றி அல்ல என்று கூறி முஸ்லிம்களை இம்மவ்லவிகள் ஏமாற்றி வருகிறார்கள். ஆனால் உண்மை என்ன? நபி(ஸல்) அவர்கள் முன் அறிவிப்புச் செய்தது போல் அவர்களை ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் அப்படியே பின்பற்றுகிறார்கள். அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் நுழைந்திருந்தால் இம்மவ்லவிகளும் அதில் நுழையக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள். (பார்க்க : புகாரீ, 3456, 7319, 7320, முஸ்லிம் : 5184)

ஆக, ஐங்காலத் தொழுகைக்குப் பின் இம்மவ்லவிகள் வீம்பாகக் கேட்கும் கூட்டு துஆவுக்கு குர்ஆனில் ஆதாரமில்லை. மாறாகத் தடை இருக்கிறது. நபி(ஸல்) அவர்களின் நடைமுறையிலும் ஆதாரம் இல்லை. அப்படியானால் இக்கூட்டுப் பிரார்த்தனை (துஆ) பித்அத்தான பழக்கத்தை யாரிடமிருந்து காப்பி அடித்தார்கள்? ஆம்! உலகில் காணப்படும் மற்ற மதங்களிலிருந்தே காப்பி அடித்துள்ளனர்.

இந்து, கிறித்தவ, யூத மற்றும் அனைத்து மதங்களிலும் இந்தக் கூட்டுப் பிரார்த்தனைப் பழக்கம் காலங்காலமாக இருந்து வருகிறது. கடவுளின் பெயராலேயே மக்களை ஏமாற்றி வஞ்சித்து அவர்களை நரகில் தள்ளி முழுக்க முழுக்க ஹராமான வழியில் வயிற்றை நிரப்பும் இப்புரோகித பூசாரிகளுக்கு இக்கூட்டுப் பிரார்த்தனையே ஒரு பெரும் வரப்பிரசாதம்(?) அதைக் கைவிட்டால் இப்புரோகிதர்களின் கும்பி(வயிறு) காயும்; எப்படி? இக்கூட்டு துஆ பித்அத்-வழிகேடு-நாளை நரகில் கொண்டு சேர்க்கும் என்ற உள்ளதை உள்ளபடி இம்மவ்லவிகள் சொல்ல ஆரம்பித்தால் என்ன நடக்கும்?

பள்ளிகளில் தொழவைப்பதற்காக முஸ்லிம்கள் இம்மவ்லவிகளை எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் ஹராமான வயிற்றுப் பிழைப்பை அசல் நோக்கமாகக் கொண்டு மக்களை குர்ஆனைப் படித்து விளங்கவிடாமல் தடுத்து வைத்திருப்பதால் பெரும்பாலான மக்கள் குர்ஆனுடன், எவ்விதத் தொடர்பும் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே ஐங்காலத் தொழுகைகள் பற்றி, குர்ஆன் எண்ணற்ற இடங்களில் மிகமிக வலியுறுத்திக் கூறுவதை 95% முஸ்லிம்கள் அறியாதிருக்கிறார்கள்.

மேலும் இம்மவ்லவி வர்க்கம் ஒளூ செய்வதிலும், தொழுவதிலும் அல்லாஹ்வோ, அவனது தூதரோ விதிக்காத வினோதமான, பித்அத்தான சட்டங்களை விதித்து வைத்திருப்பதால், ஐங்காலத் தொழுகைகளைக் கைகளால் உழைத்துச் சாப்பிடும் தங்களுக்குப் பேணித் தொழும் வாய்ப்பு இல்லவே இல்லை. கைகளால் உழைத்துச் சாப்பிடாமல், தொழுகைகளையே தங்கள் வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டுள்ள மவ்லவிகளுக்கு மட்டுமே ஐங்கால தொழுகைகளைத் தொழுவது சாத்தியம் என்ற மூட நம்பிக்கையில் தொழாமல் இருப்போரின் எண்ணிக்கை 95%. எஞ்சியுள்ள 5% தொழுகிறார்களே அவர்களும் ஹனஃபி மத்ஹபுபடி வெறுமனே குனிந்து நிமிர்கிறார்களே அல்லாமல், முறைப்படித் தொழத் தெரியாது. இதுவெல்லாம் இந்த மவ்லவிகளின் சுயநல கைங்கர்யம். தொழவே தெரியாதவர்கள் இம்மவ்லவிகளுக்குப் போட்டியாக தொழ வைக்க முன்வர முடியுமா? ஒருபோதும் முடியாது.

ஆயினும் விரல் விட்டு எண்ணப்படும் ஒரு சிலர் எப்படியோ சுய முயற்சி கொண்டு தொழும் முறையைக் கற்றுக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களால் தொழ வைக்கவும் முடியும். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்கு போட்டியாக வந்துவிடக்கூடாது என்ற அச் சமே இம்மவ்லவிகளை விடாமல் வீம்பாக இந்த கூட்டுத் துவாவை செயல்படுத்தத் தூண்டுகிறது. ஐங்காலமும் வழமையாகத் தொழுது வருகிறவர்களுக்கும் இம்மவ்லவிகள் ஓதும் துஆ தெரிய வாய்ப்பில்லை.

அது மவ்லவிளின் வேலை என அதில் கவனம் செலுத்தவும் மாட்டார்கள். எனவே அவர்களும் தொழ வைக்க முன்வர வாய்ப்பில்லை. இக்கூட்டு துஆ நடைமுறையில் இல்லை என்றால் இப்படிப்பட்டவர்கள் தொழ வைக்க முன்வருவார்கள். மவ்லவிகளின் வயிற்றுப் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும். இம்மவ்லவிகள் பித்அத்தான இக்கூட்டு துஆ விஷயத்தில் இந்தளவு பிடிவாதம் பிடிக்கும் காரணம் புரிகிறதா? மக்கள் நரகத்திற்குப் போனாலும் பரவாயில்லை.

தங்களின் தொப்பை நிரம்ப வேண்டும் என்பதே அவர்களின் இலட்சியம். அதற்காக இன்னொரு தந்திரத்தையும் இம் மவ்லவிகள் கடைபிடித்து வருகிறார்கள். அதாவது கூட்டு துஆவை மறுப்பவர்கள் வஹ்ஹாபிகள், நஜாத்காரன், நாமெல்லாம் சுன்னத் வல் ஜமாஅத். சுன்னத் வல் ஜமாஅத் கொள்கைப்படி கூட்டு துஆ கட்டாயம் என்று கூறி சுய சிந்தனையற்ற மக்களை மயக்கி வருகிறார்கள். இதிலும் இம்மவ்லவிகளின் அறியாமைதான் வெளிப்படுகிறது. “வஹ்ஹாப்” அல்லாஹ்வின் திருநாமங்களில் ஒன்று; கொடை வள்ளல் என்பது பொருள். வஹ்ஹாபி என்றால் கொடை வள்ளலைச் சேர்ந்தவன் அதாவது அல்லாஹ்வைச் சேர்ந்தவன் என்று பொருள்.

கூட்டு துஆவை மறுப்பவர்கள் வஹ்ஹாபிகள் என்றால் இம்மவ்லவிகளும் அவர்களது முகல்லிது பக்தர்களும் அல்லாஹ்வைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதுதானே பொருள். அப்படியானால் அவர்கள் ஷைத்தானைச் சார்ந்த மனித ஷைத்தான்கள்-தாஃகூத் என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள் போலும். இது அவர்களின் வாக்குமூலம். இந்த மவ்லவிகள் எண்ணற்ற விஷயங்களில் அறிவுக் குருடர்களாக இருக்கிறார்களா? இல்லாயா? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

வஹ்ஹாபிகள்தான் கூட்டு துஆவை மறுப்பார்கள் என்று இதுகாலம் வரை அப்பாவி முகல்லிது முஸ்லிம்களை ஏமாற்றி வந்ததற்கும் இப்போது ஆபத்து வந்துவிட்டது. இந்தியாவின் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் தலைமைப் பீடமான தாருல் உலும் அரபு மதரஸா, தேவ்பந்த். அம்மதரஸாவே தொழுகைக்குப் பின் ஓதப்படும் கூட்டு துஆ நபிவழியல்ல என்று அறிவித்திருக்கிறார்கள். சென்னை மக்கா பள்ளி தலைமை இமாமும் கூட்டு துஆ நபி வழியல்ல என்று பேசி வருகிறார்.

இப்போதாவது இம்மவ்லவிகள் உண்மையை உணர்ந்து பித்அத்தான இக்கூட்டு துஆவை விட்டு விடுபட்டு அவர்கள் நேர்வழிக்கு வருவதோடு மக்களையும் நேர்வழியில் இட்டுச் செல்ல முன்வருவார்களா? பொறுத்திருந்து பார்ப்போம். அன்பார்ந்த சகோதரர்களே 7:146 இறைவாக்கு எச்சரிப்பது போல் நியாயமின்றி வீண் பெருமை யடிக்கும் இம்மவ்லவிகள் குர்ஆன் போதனையை ஏற்பது கடினம்தான். அவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் நீங்கள் சிந்தித்து நேர்வழி அறிந்து நடக்க முன்வாருங்கள். கடமையான தொழுகையை நிறைவேற்றி சலாம் கொடுத்தீர்களோ. இல்லையோ, இந்த பித்அத்தான கூட்டு துஆவை இமாம் ஓத நீங்களும் ஆமீன், ஆமீன் என முழங்குவது எப்படிப்பட்ட வழிகேடு தெரியுமா? ஒருவன் குளத்தில் குளிக்கப் போனவன்.

நல்ல வாசனை சோப்பெல்லாம் போட்டு, அழுக்குகள் தீர குளித்துவிட்டு உடனே அவனது காலுக்கடியில் கிடக்கும் சேற்றை வாரி வாரி தன் உடலில் பூசிக் கொண்டால், அச்செயல் எப்படிப்பட்ட அசிங்கமான செயலாக இருக்குமோ அதுபோன்ற ஒரு அசிங்கமான செயலே தொழுகைக்குப் பின்னர் ஓதப்படும் பித்அத்தான துஆவும், அதற்கு நீங்கள் கூறும் ஆமீனும். நீங்கள் தொழுத தொழுகையையும் பாழாக்கி, உங்களை நாளை நரகில் கொண்டு சேர்க்கும் பெரும்பாவமான செயலாகும். உங்களுக்குத் தொழ வைக்கும் இமாம்கள், கேவலம் அற்பமான தங்களின் வயிற்றுப் பிழைப்புக்காக இந்த பித்அத்தை அரங்கேற்றுகிறார்கள். நீங்களும் அதற்குத் துணை போகலாமா? நீங்கள் எம்மீது ஆத்திரப்பட்டு பயனில்லை குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் மட்டுமே தந்துள்ளோம். படிப்பினை பெறுவதும் பெறாமல் இருப்பதும் உங்கள் பொறுப்பு. அல்லாஹ் போதுமானவன்.

சும்மா கிடைக்குமா சொர்க்கம்!

K. ரஹிமுத்தீன், குண்டூர்.

அன்பு இஸ்லாமிய ஈமான் கொண்ட தோழர்களே, தோழியர்களே! அல்லாஹ் தனது திருகுர்ஆனில் உங்களில் சிலரைச் செல்வம் கொடுத்து சோதனை செய்வோம். சிலரைச் செல்வத்தை தடுத்து சோதனை செய்வோம். (அத்தியாயமும் வசனமும் 3:186, 5:48, 6:165, 8:28,29) இதுபோன்ற சோதனைகளை உங்களுக்கு முன்பிருந்த சமுதாயத்திற்கும் செய்துள்ளோம், நபிமார்களுக்கும் செய்துள்ளோம்.

இப்படி சோதனை செய்து இச்சோதனையில் வெற்றி பெற்றவர்களுக்கு, வெற்றி பெறப் போகிறவர்களுக்கு மட்டுமே தன்னுடைய வாக்குறுதியின்படி சொர்க்கம் தரப்படும் என்று நன்றாக தெரிந்தும் இம்மை மீது ஆசை கொண்ட மெத்தப் படித்த 80% (பேர்) ஆலிம்கள் தங்களது வருமான சொற்பொழிவுகளில் “லாஇலாஹ இல்லல்லாஹ்” என்று கூறினால் சொர்க்கம் செல்லலாம், மற்றும் ரமழான் மாத 27-ம் நாள் இரவில் தொழுதால் 1000 மாதங்களின் இபாதத்திற்குச் சமமாகிவிடும்.

(அதாவது நீங்கள் 83 வருடம் இபாதத் செய்யாவிட்டாலும்) இந்த லைலத்துல் கத்திரின் 27-ம் நாள் இரவில் தொழுதால் கிடைத்துவிடும் என்று மக்களை மற்ற இபாதத்களின் பக்கம் வரவிடாமல் தங்களது பொய்ப் பிரச்சாரத்தின் மூலம் கிடைக்கும் சில அற்பத் தொகைகளைப் பெற்று தங்களது வயிற்றில் நரக நெருப்பைக் கொண்டு நிரப்புகிறார்கள். இதற்கு பள்ளி நிர்வாகிகளும் துணை போகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டு இந்த நாளை கூறவில்லை. மாறாக ரமழானின் கடைசி 10 இரவுகளின் ஒற்றைப்படை இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள் என்று மட்டுமே கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி 3வது வால்யூம் பக்கம் 102,103 வரிசை எண்: 939) ஆனால் மவ்லவிகளும் நிர்வாகிகளும் நபி(ஸல்) அவர்களின் கட்டளையினை மீறி செயல்படுவதுடன் நல்ல ஈமான் கொண்ட முஸ்லிம்களின் வாழ்வையும் பாழ்படுத்தி வருகின்றனர். ஆகவே ஈமான் கொண்ட முஸ்லிம்கள் தயவுசெய்து சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே சொர்க்கம் உண்டு.

உதாரணம் :

கேவலம் இந்த தற்காலிக இம்மை வாழ்க்கைக்காக உழைக்கும் உங்களுக்கு வருடம் முழுவதும் சரியாக வேலைக்கு வந்தவர்களின் நிலைக்கு தக்கவாறு வருடக் கடைசியில் ஒரு கம்பெனியின் முதலாளி போனஸ் தருவது போல், அல்லாஹ்வும் ஒவ்வொரு மூமினும் இணைவைக்காத இறையச்சத்துடன், வருடம் முழுவதும் தொழுகை, ஜக்காத்து, பொறுமை போன்ற ஹலாலான விசயங்களை எடுத்து, ஹராமான விசயங்களை தவிர்த்து அல்லாஹ்வும், அவனது ரசூலும் கூறியதை மட்டுமே எடுத்து நடந்தால் மட்டுமே ரமழானின் கடைசி 10ன் ஒற்றைப்படை இரவின் பலன் (போனஸ்) கிடைக்கும். ஆகவே மக்களே மெத்தப் படித்த ஆலிம்களின் வசூல் பயான்களை கேட்டு தொழுகையை விட்டு மற்றும் இஸ்லாமிய ரீஅத்திற்கு எதிராகச் செயல்பட்டு தங்களது நிரந்தர வாழ்க்கையின் இடமான சொர்க்கத்தை இழந்து நரகம் சென்றுவிடாதீர்கள்.

தாங்கள் அனைவரும் ஜுமுஆ பயானில் மெத்தப் படித்த ஆலிம்கள் அல்லாஹ்வையும், கண்மணி நாயகம் எங்களது ரசூல்(ஸல்) அவர்கள் என ஆரம்பிப்பார்கள். ஆனால் நடைமுறையில் ஒரு செயலும் செய்வதில்லை. உதாரணமாக தையல்கலை வல்லுனர்கள் கூலி வாங்கி கொண்டு சட்டை தைத்து கொடுத்து விடுகிறார். நாம் கொடுக்கும் துணியில் சிறிதும் எடுக்காமல் சரியாக தைத்து கொடுக்கிறார். கூலி வாங்கியதற்கு அவர் நமக்காக வேலை செய்தார். அவருக்கு சட்டை அவர் தான் தேடிக் கொள்வார். அதேபோல் பள்ளியின் இமாம் கூலி வாங்கி கொண்டு ஜமாத்தார்களுக்காக பர்ளு தொழுகை நடத்தி விட்டார்.

ஆனால் அவருக்கான பர்ளு தொழுகை எங்கே தொழுதார்? ஆகவே நாம் சிந்தித்து நிரந்தரத் தங்கும் இடமான சொர்க்கத்திற்கு செல்ல அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய அனைத்தையும் செயல்படுத்திட உங்களுக்கும் எனக்கும் ஈமான் கொண்ட அனைவருக்கும் அல்லாஹ் அருள் வழங்கிட துஆ செய்தவண்ணம் இருக்கிறேன். இதில் ஏதேனும் அல்குர்ஆன் மற்றும் சஹீஹ் ஹதீஃத்களுக்கோ மாற்றமாக இருப்பின் ஆதாரத்துடன் சுட்டிக்காட்டவும் திருந்துகிறேன், திருத்திக் கொள்கிறேன்.

தியாகம் செய்யாமல் கிடைக்காது சொர்க்கம். உதாரணம் :

நபி(ஸல்) அவர்களும், நபி(ஸல்) அவர்களின் உயிர்த்தோழரும் மாமனாரும் ஆகிய அபூபக்கர் சித்திக்(ரழி) ஆகிய இருவரும், தங்களது ரத்தம் சம்பந்தப்பட்ட உறவுகளையும் தாங்கள் பிறந்த ஊரையும் விட்டு, அல்லாஹ்வின் கட்டளைப்படி மக்காவை விட்டு, முஸ்லிம்களின் விரோதிகளுக்கு தெரியாமல் பசியோடும், பட்டினியோடும் பயணமாக மக்காவிலிருந்து மதினா வரை பயணித்து மதினாவுக்கு வந்ததும் அல்லாமல் அவ்வப்போது எதிரிகளினால் ஏற்படும் துன்பங்களையும், சோதனைகளையும் தாங்கிக் கொண்டு மதினாவிலும் பசியோடும், பட்டினியோடும் தங்களது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தீனுல் இஸ்லாத்திற்காக செய்த தியாகங்களாலேயே, மறுமையில் சொர்க்கவாதிகள். மெத்தப்படித்த வசூல் ராஜாக்களான ஆலிம்கள் கூறுவது போல் “லாஇலாஹ இல்லல்லாஹ்” கூறியவர்கள் சொர்க்கவாதிகள், லைலத்துல் கத்ர் 27ம் நாள் இரவு மட்டும் தொழுதவர்கள் சொர்க்கவாதிகள் என்று ஆகிவிட முடியாது.

ஆகவே முஸ்லிம்களாக வாழ்ந்து (முஸ்லிம் ஜமாஅத்தாக இல்லாமல் மற்ற எந்த ஜமாஅத்தும் அல்லாஹ்வினாலோ, நபி(ஸல்) அவர்களினாலோ அங்கீகரிக்கப்படாதவர்கள்) முஸ்லிமாக மரணித்தவர்கள் மட்டுமே சொர்க்கம் செல்ல முடியும். ஆகவே இஸ்லாமிய ஆண், பெண் அனைவரும் உங்களுக்கும் உங்களுக்கு முந்தைய சமுதாயத்திற்கும் அல்லாஹ்வினால் விதிக்கப்பட்ட அல்குர்ஆன், மற்றும் சஹீஹ் ஹதீஃதுகளைக் கொண்டு ஐங்கால தொழுகைகளை இமாம் ஜமாஅத்தாகவும், மற்றும் சுன்னத்தான தொழுகைகளையும் தொழுவதுடன், நோன்பு, ஜக்காத்து, தகுதியானவர்களின் ஹஜ் ஆகியவைகளை முழு ஈமானுடன் பரிபூரணமாக நிறைவேற்றுபவர்கள் மட்டுமே இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) சொர்க்கவாதிகள்.

ஆகவே நீங்கள் வசூல் ராஜாக்கள் கூறுவதை விட்டு அல்குர்ஆனையும், சஹீஹ் ஹதீதுகளை மட்டுமே பற்றிப் பிடித்து அனைத்து நல் அமல்களை நானும், நீங்களும் “அல்லாஹ் ஒருவனே” என்ற முழு ஈமானுடனும் கடைப்பிடித்து சொர்க்கம் செல்ல எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.

(முஃமின்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் திடமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்களுக்கு முன் நெறிநூல் கொடுக்கப்பட்டோரிட மிருந்தும், இணை வைத்து வணங்குவோரிடமிருந்தும், நிந்தனைகள் பலவற்றையும் செவிமடுப்பீர்கள். ஆனால் நீங்கள் பொறுமையை மேற்கொண்டு, (இறைவனிடம்) பயபக்தியோடு இருந்தீர்களானால் நிச்சயமாக அதுவே எல்லாக் காரியங்களிலும் (நன்மையைத் தேடித் தரும்) தீர்மானத்துக்குரிய செயலாகும். (3:186)

(மேலும் பார்க்க : முஸ்லிம் : 316)

மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இந்த இறைநெறிநூலை நாம் உம்மீது இறக்கியுள்ளோம். இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) நெறிநூலையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த (சட்டதிட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக.

உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி), அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம். அல்லாஹ் நாடினால் உங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம். ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்) எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும், அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது. நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான். (5:48)

நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன, நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள். (8:28)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு பயபக்தியுடன் நடந்து கொள்வீர்களானால் அவன் உங்களுக்கு (நன்மை தீமையைப்) பிரித்தறிந்து நடக்கக்கூடிய நேர்வழி காட்டுவான். இன்னும் உங்களை விட்டும் உங்கள் பாவங்களைப் போக்கி உங்களை மன்னிப்பான். ஏனெனில் அல்லாஹ் மகத்தான அருட்கொடையுடையவன். (8:29)

அவன் தான் உங்களைப் பூமியில் பிரதிநிதிகளாக ஆக்கினான். அவன் உங்களுக்குக் கொடுத்துள்ளவற்றில் உங்களைச் சோதிப்பதற்காக, உங்களில் சிலரைச் சிலரை விடப் பதவிகளில் உயர்த்தினான். நிச்சயமாக உம் இறைவன் தண்டிப்பதில் விரைவானவன். மேலும் அவன் நிச்சயமாக மன்னிப்பவன், மிக்க கருணையுடையவன். (6:165)

ரமழான் கடைசி வாரத்தில் லைலத்துல் கர்த் :

ரமழானின் கடைசி வாரத்தில் லைலத்துல் கத்ர் ஏற்படுவதாக நபி(ஸல்) அவர்களின் நபித்தோழர்களில் சிலர் கனவில் கண்டனர். (இவ்விபரத்தை அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் கூறினர்) அப்பொழுது கடைசி வாரத்தில் (லைலத்துல் கத்ர் ஏற்படுகிறது என்பதில்) உங்கள் கனவுகள் ஒற்றுமையாக இருப்பதை நான் காண்கிறேன். எனவே, லைலத்துல் கத்ரை அடைய வேண்டுமென விரும்புபவர் (ரமழான் மாதத்தில்) கடைசி வாரத்தில் அதை அடைய முயல வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி).

ரமழான் மாதக் கடைசிப் பத்தில் ஒற்றைப் படையுள்ள தேதிகளில் லைலத்துல் கத்ர் :

ரமழான் மாத நடுப்பத்தில் நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் இஃதிகாஃப் இருந்தோம். இருபதாம் தேதி காலை (இஃதிகாஃபிலிருந்து) வெளியில் வந்து, எங்களுக்கு உபதேசம் செய்யும்போது லைலத்துல் கத்ர் எனக்குக் காண்பிக்கப்பட்டது. பின்னர் அதை நான் மறக்கடிக்கப்பட்டேன். அல்லது அதை மறந்துவிட்டேன். கடைசிப் பத்தில் ஒற்றைப்படை உள்ளதில் அதை அடைய முயலுங்கள் (லைலத்துல் கத்ரின் தினத்தில்) நான் தண்ணீரிலும் மண்ணிலும்(அதாவது சேற்றில்) ஸுஜூது செய்வதைக் கண்டேன். எனவே, நபி(ஸல்) அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தவர்கள் மீண்டும் (ஒவ்வொருவரும் தங்கள் இருப்பிடம் சென்று) இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று கூறினார்கள். நாங்கள் மீண்டும் (இஃதிகாப்) இருந்தோம். வானில் மேகத்தின் சிறு துண்டைக் கூட நாங்கள் காணவில்லை.

திடீரென பெரிய மேகம் ஒன்றுதிரண்டு வந்தது. மஸ்ஜிதுடைய கூரை ஒழுகும் அளவுக்குப் பெருமழை பெய்தது. அக்காலத்தில் (மஸ்ஜிதின் கூரை) பேரீச்சமர ஓலையால் மேயப்பட்டிருந்தது. பின்னர் தொழுகை நடந்தது. மண்ணிலும் தண்ணீரிலும் (அதாவது சேற்றில்) நபி(ஸல்) அவர்கள் ஸுஜூது செய்வதை நான் பார்த்தேன். அவர்களுடைய நெற்றியில் மண்ணின் அடையாளத்தை (அதாவது சேறு ஒட்டியிருந்ததை) நான் பார்த்தேன். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரீ(ரழி)

முஸ்லிம்களே நரகவாதிகள் ஆகாதீர்கள்!

– இப்னு ஹத்தாது

இதோ அல்லாஹ்வின் இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் கூறுகிறது.

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக நிராகரிப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம். (18:102)

அல்லாஹ்வின் அடிமைகளான மனிதர்களிலுள்ள மவ்லவிகளை தங்களின் இமாமாக-வழிகாட்டியாக நம்பி நடப்பவர்களை அல்லாஹ் இந்த 18:102 வசனத்தில் நிராகரிப்பாளர்கள்-காஃபிர்கள் என்றே கூறுகிறான்.

(தம்) செயல்களில் மாபெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக! (18:103)

இந்த மவ்லவிகளை நேர்வழிகாட்டிகளாக நம்பிப் பின்பற்றுகிறவர் மாபெரும் நட்டவாளிகள் என்று அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான்.

யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க, தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். (18:104)

இம்மவ்லவிகளை நம்பி அவர்களின் சுயநல வழிகட்டல்படி தொழுதிருப்பார்கள், ஜகாத் கொடுத்திருப்பார்கள், நோன்பு வைத்திருப்பார்கள், ஹஜ் செய்திருப்பார்கள் இன்னும் பல நற்காரியங்களைச் செய்து கொண்டு மகிழ்வார்கள். ஆனால் அவர்களின் இச்செயல்கள் மறுமையில் எவ்விதப் பலனையும் அளிக்காது.

அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், (மறுமையில்) அவனுடைய சந்திப்பையும் நிராகரிக்கிறார்கள். அவர்களுடைய செயல்கள் யாவும் அழிந்துவிட்டன. மறுமை நாளில் அவர்களுக்காக எந்த எடையையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். (18:105)

காரணம் என்ன? அவர்கள் 2:186, 7:3, 33:36 இன்னும் இவை போல் பல குர்ஆன் வசனங்களை நிராகரித்துவிட்டு இம்மவ்லவிகளுக்குப் பின்னால் கண்மூடிச் செல்வதுதான். அதனால் அவர்களின் செயல்கள் அனைத்தும் அழிந்துவிட்டன. மறுமையில் அவர்களின் அச்செயல்கள் நிறுக்கப்படாது.

அதுவே அவர்களுடைய கூலி-நரகமாகும். ஏனென்றால், அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள், என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள். (18:106)

ஆக மதகுருமார்களான இம்மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்கிறவர்களுக்கு அதாவது மவ்லவிகளை தக்லீது செய்கிறவர்களுக்கு நாளை கூலி நரகமே என்று இவ்வசனம் உறுதியாகக் கூறுகிறது. காரணம் இவர்கள் குர்ஆன் வசனங்களையும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலையும் ஏளனமாக எடுத்துக் கொண்டு, குர்ஆன், ஹதீஃத்களுக்கு முற்றிலும் முரணான இம்மவ்லவிகளின் கோணல் வழிகளை தங்களின் வழியாக எடுத்துக் கொண்டதே! (பார்க்க : 7:146)

நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்கள் (விருந்துக்கு) இறங்கும் இடமாக ஃபிர்தவ்ஸ் என்னும் சுவனபதிகள் இருக்கும். (18:107)

மனிதர்களில் எவரையும் குறிப்பாக பெருமை பேசும் எந்த மவ்லவியையும் நம்பாமல், 2:186 இறைக் கட்டளைப்படி அல்லாஹ்வை மட்டுமே முற்றிலும் முழுதுமாக, நம்பி 7:3 இறைக் கட்டளைப்படியும், 53:2-4 இறைக் கட்டளைகள்படியும், குர்ஆன், ஹதீஃத்களை நேரடியாகப் படித்து விளங்கி அவற்றின்படி நடப்பவர்கள் நரகத்தை விட்டு பாதுகாக்கப்பட்டு சுவர்க்கச் சோலைகளில் புகுந்து அங்கு என்றென்றும் தங்கும் பெரும் பாக்கியம் பெறுவார்கள்.

7:3 குர்ஆன் வசனம் என்ன கூறுகிறது. நேரடியாகப் படித்துப் பாருங்கள்!

உங்களின் ரப்பாகிய அல்லாஹ்விடமிருந்து இறக்கப்பட்டதை மட்டுமே பின்பற்றக் கட்டளையிடுகிறது. அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் பாதுகாவலர்களாக-வழிகாட்டியாக-இமாமாக-ஆலிமாக நம்பிப் பின்பற்றவே கூடாது என்று உறுதியிட்டுக் கூறுகிறது. ஆயினும் மிகச் சொற்பமானவர்களே இது குறித்து உணர்வு பெறுகிறார்கள் என்றும் தெளிவுபடுத்துகிறது. அப்படியானால் மிகப் பெரும்பான்மையினர் (பார்க்க : 32:13, 11:118,119) நரகத்தை நிரப்பும் நிலையில் இம்மவ்லவிகளுக்குப் பின்னால் கண்மூடிச் செல்லத்தான் செய்வார்கள். அவர்கள் நேர்வழிக்கு வரவே மாட்டார்கள். நரகம் தான் அவர்களின் நிரந்தர இருப்பிடம். அல்லாஹ் பாதுகாப்பானாக.

அஹ்ல குர்ஆனிகள் இந்த வசனத்தைக் காட்டி குர்ஆனை மட்டுமே பின்பற்ற வேண்டும். ஹதீஃத்கள் தேவையில்லை என சுய விளக்கம் கூறுகின்றனர். மனிதர்களில் எவரும் சுயவிளக்கம்-மேல்விளக்கம் கொடுக்கும் நிலையில் குர்ஆன், குறிப்பாக முஹ்க்கமாத் வசனங்கள் இல்லை. குர்ஆனை மட்டுமே பின்பற்றுவதாக இருந்தால் அல்லாஹ் 7:3ல் குர்ஆனை மட்டுமே பின்பற்றுங்கள் என்று நேரடியாகவே கூறியிருப்பான். இறக்கப்பட்டதை என்று கூறவேண்டிய அவசியமே இல்லை. அப்படியானால் இறக்கப்பட்டதை என்று ஏன் அல்லாஹ் சொல்லவேண்டும்?

அதற்கு உண்மையான காரணம் இருக்கிறது. அதாவது அல்லாஹ்வால் இறக்கப்பட்டது குர்ஆன் மட்டுமல்ல. நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டலான நடைமுறைகளும் அல்லாஹ்வால் இறக்கப்பட்டவைதான். இதை நாம் கூறவில்லை. அப்படி சுய விளக்கம் கொடுக்கும் தகுதி நமக்கு கடுகளவும் இல்லை. அல்லாஹ்வே 53:2-4 இறைவாக்குகளில் நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளும் அல்லாஹ்வால் இறக்கப்பட்டவைதான் என்று உறுதி கூறுகிறான் அல்லாஹ்.

52:48 குர்ஆன் வசனம் கூறுவது போல் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கண்காணிப்பிலும், வஹியின் தொடர்புடனும் இருந்தார்கள். மனிதன் என்ற நிலையில் அவர்களிடம் ஏற்படும் தவறுகளை அல்லாஹ் உடனுக்குடன் வஹி மூலம் திருத்தி அவர்களை நேர்வழியில் அல்லாஹ்வே செலுத்துகிறான். (பார்க்க : 17:73-75, 66:1,2, 69:40-52)

நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு வஹீ மூலம் நேர்வழியைப் பெறும் பாக்கியம் கலீஃபாக்களுக்கோ, நபிதோழர்களுக்கோ, தாபியீன்களுக்கோ, தபஅதாபியீன்களுக்கோ, இமாம்களுக்கோ, பெருமை பேசும் மதகுருமார்களான மவ்லவிகளுக்கோ ஆக மனிதர்களில் எவருக்குமே இல்லவே இல்லை. எனவே இவர்களில் எவரது சுயவிளக்கம், மேல் விளக்கம் ஒருபோதும் மார்க்கம் ஆகாது; நேர்வழி ஆகாது. எனவே நேரடி குர்ஆன், ஹதீஃத் போதனைகளுக்கு முரணாக எவரது சுய கருத்தாக இருந்தாலும், குறிப்பாக இம்மவ்லவிகளின் சுய கருத்தாக இருந்தாலும் அது நம்மை நரகத்தில் கொண்டு சேர்க்குமே அல்லாது ஒருபோதும் சுவர்க்கம் கொண்டு சேர்க்காது.

நாளை மறுமையில் ஆலிம்கள் என்று பெருமை பேசுபவர்களும், அவர்களின் அக்கூற்றை நம்பி அவர்களைக் கண்மூடிப் பின்பற்றியவர்களும் (தக்லீது) நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒப்பாரி வைப்பதை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவற்றில் 34:31-33, 40:47,48 வசனங்கள் பெருமையடித்தோர் என்று குறிப்பிடுவது “நாங்கள் தான் ஆலிம்கள், மார்க்கம் கற்ற மேதைகள்” எனப் பெருமையடிக்கும் இம்மவ்லவிகளையே குறிப்பிடுகின்றன.

குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஃத்களை மட்டும் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பவர்களை இம்மவ்லவிகளும், அவர்களது முகல்லிது பக்தர்களும் வஹ்ஹாபிகள், நஜாத்காரன், குழப்பவாதிகள், வழிகேடர்கள், மிகக் கெட்ட மனிதர்கள், நரகத் திற்குரியவர்கள் என ஏளனம் செய்து, பரிகாசம் பண்ணி அவர்களின் நேர்வழி பேச்சை மக்கள் கேட்கவிடாமல் தடுத்து வருகிறார்களோ, எவர்களை நரகவாதிகள் என்று பரிகாசம் பண்ணினார்களோ அவர்களை நாளை மறுமையில் நரகத்தில் பார்க்க முடியாமல் இம்மவ்லவிகளும், அவர்களது முகல்லிது பக்தர்களும் ஆச்சரியத்தோடு உரையாடுவதை அல்லாஹ் அல்குர்ஆனின் 38:62,63,64 வசனங்களில் அடையாளம் காட்டுகிறான். நீங்களே நேரடியாகப் படித்துப் பாருங்கள்.

இன்னும், அவர்கள், “நமக்கு என்ன நேர்ந்தது? (வஹ்ஹாபி, நஜாத்காரன், குழப்பவாதிகள், வழிகேடர்கள், மனநோயாளிகள் எனக் கூறி) மிகக் கெட்ட மனிதர்களி லுள்ளவர்கள் என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோமே, அவர்களை நரகத்தில் ஏன் காணவில்லை?” என்று கூறுவார்கள். (38:62)

நாம் அவர்களைப் பரிகாசமாக எடுத்துக் கொண்டிருந்தோமா? அல்லது (அவர்களைக் காணமுடியாதவாறு) அவர்களை விட்டும் நம் பார்வைகள் சறுகிவிட்டனவா? (என்றும் கூறுவர்) (38:63)

நிச்சயமாக இதுதான் உண்மை; நரகவாசிகள் (இவ்வாறு தான்) ஒருவரோடு ஒருவர் தர்க்கம் செய்து கொள்வார்கள். (38:64)

மேலும், நாங்கள் அரபு மதரஸாவில் 7 வருடங்கள் ஓதிப் பட்டம் பெற்ற மவ்லவிகள். ஆலிம்கள், அல்லாமாக்கள், மார்க்கம் கற்ற மேதைகள், நீங்கள் எல்லாம் அவாம்கள், குர்ஆனை உங்களது தாய் மொழியில் படித்தாலும் விளங்க முடியாது என்று நியாயமின்றி வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகள் பற்றி அல்குர்ஆனில் சுமார் 346 இடங்களில் மிகக் கடுமையாக எச்சரித்து, முஸ்லிம்களே அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லாதீர்கள், தக்லீது செய்யாதீர்கள் என்று அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரிக்கிறான் அவற்றில் சில வசனங்களைப் பாரீர்.

2:159-162, 4:27, 5:48, 6:157, 7:146,175-179, 18:57, 45:23, 47:25.

குர்ஆனை ஒளூ இல்லாமல் தொடக்கூடாது, முஸ்லிம் அல்லாதவர்களுக்கு குர்ஆனை கொடுக்கக் கூடாது, நீங்களும் உங்களின் தாய்மொழியில் படித்து விளங்க முடியாது இப்படி எல்லாம் கூறி உங்களை குர்ஆனை நெருங்கவிடாமல் இந்த மவ்லவிகள் தடுக்கும் காரணம் உங்களுக்குப் புரிகிறதா?

நீங்கள் அன்றாடம் குர்ஆனை உங்களின் தாய் மொழியில் படித்து விளங்க ஆரம்பித்துவிட்டால், நியாயமின்றி வீண் பெருமை பேசும் மவ்லவிகளை விட கேடுகெட்ட படைப்பு இந்த வானத்தின் கீழ் இல்லவே இல்லை. இந்த மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்கிறவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒப்பாரி வைக்க நேரிடும் என்பதை அறிய முடியும். அதனால்தான் தடுக்கிறார்கள்.

எனவே அன்பார்ந்த சகோதரர்கள், சகோதரிகளே நீங்கள் ஒருபோதும் இம்மவ்லவிகளை நம்பாதீர்கள். அவர்களை தக்லீது செய்யாதீர்கள். மவ்லவிகள் கூறும் கருத்துகளுக்கு குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் கேளுங்கள். குர்ஆனிலும், ஹதீஃதிலும் இருந்தால் மட்டுமே அதை மார்க்கமாக எடுத்து நடங்கள். மற்றபடி எந்த மவ்லவியாக இருந்தாலும் கழுதை விட்டையில் எப்படி வேறுபாடு இல்லையோ, அதேபோல் இந்த மவ்லவிகளிடமும் வேறுபாடு இல்லவே இல்லை.

அவர்களில் தர்கா மவ்லவி, தரீக்கா மவ்லவி, மத்ஹப் மவ்லவி, அஹ்ல ஹதீஃத் மவ்லவி, முஜாஹித் மவ்லவி, ஸலஃபி மவ்லவி, ததஜ மவ்லவி, இதஜ மவ்லவி, இன்னும் எண்ணற்றப் பிரிவுகளின் மவ்லவிகள், எம்மைப் போன்ற அவாம்கள் என யார் மார்க்கம் என்று சொன்னாலும் அதற்குரிய குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஃதைக் கேளுங்கள். ஆதாரம் கேட்கும்போது அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், உடனே குர்ஆன், ஹதீஃதை எடுத்துத் தருவார்கள். அவர்கள் ஏமாற்றுப் பேர்வழிகளாக இருந்தால், நீ மவ்லவியா, உனக்கு அரபு தெரியுமா? பெரிதாக குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் கேட்கிறாய் என்று ஆணவம் பேசினால், அவர்கள் பகிரங்கமான வழிகேடர்கள். அவர்களை நம்பி அவர்கள் பின்னால் சென்றால், நாளை நரகம் புகுந்து அங்கு ஒருவரை ஒருவர் சபித்து, திட்டி ஒப்பாரி வைக்க நேரிடும் என்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

நாளை நரகம் புக முற்படாதீர்கள். நேரடியாக குர்ஆனைப் படித்து விளங்கி அதன்படி நடக்க முன்வாருங்கள். அல்லாஹ் போதுமானவன்.

மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம். ஆனால், நான் நிச்சயமாக நரகத்தை ஜின்களையும், மனிதர்களையும் ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன் என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது. (32:13)

உம் இறைவன் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கி இருப்பான். (அவன் அப்படி ஆக்கவில்லை) எனவே, அவர்கள் எப்போதும் மாறுபட்டுக் கொண்டே இருப்பார்கள். (11:118)

(அவர்களில்) உம்முடைய இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர, இதற்காகவே (மாறுபடும்) அவர்களைப் படைத்திருக்கிறான், “நிச்சயமாக நான் (பாவம் செய்த) ஜின்கள், மனிதர்கள் ஆகிய யாவரைக் கொண்டும் நரகத்தை நிரப்புவேன்” என்ற உம் இறைவனுடைய வாக்கும் பூர்த்தியாகி விட்டது. (11:119)

நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் நெறிநூலில் மனிதர்களுக்கு விளக்கிய பின்னரும் யார் மறைக்கின்றார்களோ, அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். மேலும், அவர்களை சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (2:159)

யார் (நெறிநூல் உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் நிராகரித்தவர்களாகவே மரணித்தும் விடுகிரார்களோ, அத்தகையோர் அவர்கள் மீது அல்லாஹ், வானவர்கள், இன்னும் மனிதர்கள் அனைவருடைய சாபமும் உண்டாகும். (2:161)

அவர்கள் அ(ச் சாபத்)திலேயே என்றென்றும் இருப்பார்கள்; அவர்களை விட்டும் வேதனை இலேசாக்கப்படமாட்டாது; மேலும், (மன்னிப்புக் கோர) அவர்கள் அவகாசமும் கொடுக்கப்பட மாட்டார்கள். (2:162)

தவறாக ஆய்வு செய்தாலும் ஒரு கூலி கிடைக்குமா?

சலீம்,  ஈரோடு

அரபி மொழி தெரிந்த ஆலிம்களால்தான் மார்க்கத்தை முறையாக விளங்க முடியும் என்று சொல்லிக் கொள்ளும் மெளலவிமார்கள் குர்ஆனையும், ஹதீஃத்களையும் தங்கள் மனம்போன போக்கில் விளங்கிவிட்டு தாங்கள் விளங்கிய விளக்கம்தான் நேரானது, சரியானது என்று கூறி மார்க்கத்தில் ஆர்வம் இல்லாத மக்களை ஏமாற்றி வருகிறார்கள். குறிப்பாக குர்ஆன் ஹதீஃத் மட்டும்தான் மார்க்கம் என்று சொல்லக்கூடிய அறிஞர்கள் ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் பல்வேறு வகையான குழப்பங்களை ஏற்படுத்தி சமுதாயத்தை சீரழித்து வருகிறார்கள். உதாரணத்திற்கு பிறை விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.

பிறையை ஆய்வு செய்கிறோம் என்று சொல்லி பல அமர்வுகள் அமர்ந்து கூடி பேசிய பிறகு பிறை பற்றிய தகவல் உலகின் எந்த பகுதியிலிருந்து வந்தாலும் அந்த தகவலை ஏற்று நடைமுறைப்படுத்த வேண்டும் என்று 1997ல் அல்ஜன்னத் இதழில் எழுதினார்கள். பிறகு ஓரிரு வருடங்கள் கழித்து ஒரு பகுதியில் பார்க்கப்பட்ட பிறை தகவலை மற்ற பகுதியில் உள்ள மக்கள் ஏற்று செயல்படுத்தக்கூடாது என்று அல்முபீன் இதழில் எழுதினார்கள். பிறகு சில வருடங்கள் கழித்து தமிழகத்தில் எந்த பகுதியில் பிறை பார்க்கப்பட்ட தகவல் கிடைத்தாலும் அதை தமிழகத்தில் உள்ள அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஏகத்துவத்தில் எழுதினார்கள். இதை போன்றே 1986-ல் ஒருவரை சுட்டிக்காட்டி இவர்தான் எனது அமீர் என்றார்கள்.

பிறகு 1999-ல் அமீர் என்பதே கிடையாது என்றார்கள். இப்படியாகப் பல்வேறு வகையான விஷயங்களில் ஆய்வு என்ற பெயரால் முன்னுக்குப் பின் முரணாக உளறிக் கொட்டிவரும் இவர்களிடம் ஏன் முடிவுகளை இவ்வாறு மாற்றி மாற்றி அறிவிக்கிறீர்கள்? இந்த செயல் நம்மை குற்றவாளியாக ஆக்கிவிடாதா? என்று கேள்வி கேட்டால், இந்த விஷயத்தில் நாம் பயப்பட வேண்டியதில்லை. ஏனென்றால் ஆய்வாளர் சரியாக ஆய்வு செய்தால் இரண்டு கூலிகள் உண்டு.

தவறாக ஆய்வு செய்தால் ஒரு கூலி உண்டு என்று நபி(ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். ஆகவே நாம் ஆய்வின் அடிப்படையிலேயே கருத்துக்களை மாற்றிக் கொள்கிறோம். எனவே நமக்கு கண்டிப்பாக ஒரு கூலி கிடைக்கும். தண்டனை ஏதும் கிடைக்காது என்று அசத்தலான பதிலை கூறி மக்களை ஏமாற்றி வருகிறார்கள். இவர்களின் வழிகெட்ட இந்த கருத்து எந்த அளவிற்கு விபரீதமான முடிவுகளுக்கு அழைத்து செல்லும் என்பதைப் பாருங்கள்.

ஒருவர் தர்கா வழிபாடு கூடுமா? கூடாதா? என்று ஆய்வு செய்கிறார்; அவரது ஆய்வின் இறுதியில் தர்கா வழிபாடு கூடும் என்ற முடிவு கிடைக்கிறது. இந்த முடிவின் அடிப்படையில் அவ்லியாக்களின் பெயரால் நேர்ச்சை செய்வது, அவ்லியாக்களுக்காக அறுத்து பலியிடுவது, தர்காவில் போய் பிரார்த்தனை செய்வது இன்னும் இது போன்ற பல செயல்களில் அவர் ஈடுபடுகிறார். இப்போது அவருக்கு ஆய்வாளர் என்ற முறையில் ஒரு கூலிக் கிடைக்குமா? இதைப் போன்றே மெளலிது, ராத்திபு, தாயத்து இதுபோன்ற பல விஷயங்களை நான் ஆய்வு செய்துதான் பின்பற்றுகிறேன் என்று ஒருவர் கூறினால் அவருக்கும் ஒரு கூலி கிடைக்குமா?

இன்னும் மத்ஹபுகள், இயக்கங்கள், கழகங்கள், மன்றங்கள் போன்ற பிரிவுகள் எல்லாம் நான் செய்த ஆய்வின்படி சரியானதுதான் என்று ஒருவர் கூறி னால் அவருக்கும் ஒரு கூலி கிடைக்குமா? ஈஸா நபி உயிரோடு இருக்கிறாரா அல்லது இறந்து விட்டாரா என்று நான் ஆய்வு செய்யபோகிறேன் என்று சொல்லி ஒருவர் அது தொடர்பான ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திய பிறகு தனது ஆய்வின் இறுதியில் ஈஸா நபி இறந்துவிட்டார் என்று கூறினால் அவருக்கும் ஒரு கூலி கிடைக்குமா? இப்படி ஏராளமான விஷயங்களை நாம் கேள்விகளாக அடுக்கிக் கொண்டே போகலாம். ஆய்வாளர் தவறாக முடிவு செய்தாலும் அவருக்கு ஒரு கூலி உண்டு என்று கருத்தின்படி செயல்பட்டால் எந்த ஒரு ஹராமான செயலையும் ஒருவர் ஏதாவது பொருத்தமில்லாத குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களையும் கூறி நான் ஆய்வு செய்துதான் பின்பற்றுகிறேன் என்று கூறிவிட்டால் அவர் குற்றவாளியாகமாட்டார் என்ற விபரீதமான முடிவுக்கே நாம் வரமுடியும்.

நடைமுறைப்படுத்த  முடியாத  கருத்து:

ஆய்வாளர் ஆய்வு செய்து தவறான முடிவை எடுத்தாலும் அவருக்கு ஒரு கூலி உண்டு என்ற கருத்தில் உள்ளவர்கள் தாங்கள் கொண்டுள்ள கருத் துக்கு ஏற்றவாறுதான் நடக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை. அத்தஹியாத்தில் கிப்லாவை நோக்கி விரலை சுட்டிக்காட்டுபவர்களை பார்த்து இவர்களும் ஆய்வின் அடிப்படையில்தான் செயல்படுகிறார்கள். ஆகவே இவர்களுக்கு ஒரு கூலி உண்டு என்று இவர்கள் கூறியதுண்டா? பிறை, ஜகாத், சூனியம் இன்னும் இதுபோன்ற பல விஷயங்களில் இவர்களது கருத்துக்கு மாற்றமாக சொல்பவர்களை பார்த்து இவர்களும் ஆய்வின் அடிப்படையில்தான் செயல்படுகிறார்கள்.

ஆகவே இவர்கள் யாரும் குற்றவாளியாகவோ, தண்டனைக்கு உரிய வராகவோ கருதப்படமாட்டார் என்று கூறிய துண்டா? ஆய்வாளர் ஆய்வு செய்து தவறான முடிவை எடுத்தாலும் கூலி உண்டு என்று சொல்லக் கூடிய இவர்களது ஜமாஅத்தில் சுமார் பத்தாண்டுகள் முக்கிய பிரச்சாரராக பணியாற்றிய அப்பாஸ் அலீ என்பவர் அறிவிப்பாளர் தொடர் சரியாக இருந்தாலும் குர்ஆனோடு முரண்படுகின்ற ஹதீஃத்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்று கூறி வந்தார்.

பிறகு 2014களில் தனது முடிவு தவறானது என்று ஆய்வின் அடிப்படையில் அவர் சொன்னபோது அவரை பார்த்து நீங்கள் ஆய்வு செய்து தவறான முடிவை எடுத்துள்ளீர்கள். ஆனாலும் ஆய்வாளர் என்ற முறையில் நீங்கள் ஒரு கூலிக்கு சொந்தக்காரர் என்று கூறினார்களா? அல்லது குற்றவாளியை நடத்துவதை போன்று நடத்தி அவரை ஜமாஅத்தை விட்டும் வெளியேறும் அளவிற்கு நெருக்கடி கொடுத்தார்களா? சுருக்கமாக சொல்வதென்றால் இவர்களாலேயே நடைமுறைப்படுத்த முடியாத ஒரு மோசமான கருத்தைத்தான் இவர்கள் மக்கள் மத்தியில் பரப்பித் திரிகிறார்கள்.

ஹதீஃதின் சரியான கருத்து :

ஆய்வாளர் தவறாக ஆய்வு செய்தாலும் ஒரு கூலி கிடைக்கும் என்ற கருத்து தவறானது எனும்போது இந்த ஹதீஃதின் சரியான விளக்கம்தான் என்ன? அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நீதி வழங்குபவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு கூலிகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பை வழங்கிவிடுவாராயின் அவருக்கு ஒரே ஒரு கூலி உண்டு. அறிவிப்பாளர்கள்: அம்ர் இப்னு ஆஸ்(ரழி) அபூஹுரைரா(ரழி), நூற்கள்: புகாரி 7352, முஸ்லிம் 3538, தீர்மிதி 1248.

மக்கள் மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளான சொத்து விவகாரம், வியாபார ரீதியிலான பிரச்சனை, கொடுக்கல் வாங்கல், நிலத் தகராறு இன்னும் இது போன்ற பல பிரச்சனைகளின் போது அது தொடர்பாக நீதி கேட்டு வரும்போது இரு சாராரின் வாதங்களையும் முறையாக கேட்டறிந்த பிறகு நீதி வழங்குபவர் சரியான தீர்ப்பை வழங்கினால் அவருக்கு இரண்டு கூலிகள் கிடைக்கும்; தவறான தீர்ப்பை வழங்கினால் அவருக்கு ஒரு கூலி உண்டு. வாதியும், பிரதிவாதியும் சமர்ப்பிக்கும் ஆதாரத்தைக் கொண்டே நீதி வழங்குபவர் தீர்ப்பு செய்ய முடியும். அப்படி தீர்ப்பு வழங்கும்போது தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நீதி வழங்குபவர் ஒருபோதும் குற்றவாளியாக மாட்டார் என்ற கருத்தையே மேற்கண்ட நபிமொழி கூறுகிறது.

ஆதாரங்கள் :

மக்களுக்கு பிரச்சனைகள் ஏற்பட்டு அந்த பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வதற்காக தீர்ப்புக் கேட்டு வரும்போது தன்னால் இயன்ற அளவு அல்லாஹ்வுக்கு அஞ்சி முறையாக விசாரித்து தீர்ப்பு வழங்கும் பண்பைப் பெற்ற ஒருவர் தனது தீர்ப்பில் தவறிழைத்தால் அவர் குற்றவாளியாகமாட்டார் என்பதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(மக்களே!) நான் ஒரு மனிதன்தான். நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விடத் தமது ஆதாரத்தை எடுத்து வைப்பதில் வாக்கு சாதுரியமிக்கவராக இருக்கலாம். இந்நிலையில் நான் அவரிடம் கேட்ட (திறமையான வாதத்)துக்கு ஏற்ப அவருக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து விடுகிறேன்.

எனவே யாருக்கு (அவரது சொல்லை வைத்து) அவருடைய சகோதரனின் உரிமையில் உள்ள ஒன்றை அவருக்குரியது என்று (உண்மை நிலையை அறியாமல் தவறுதலாக) நான் தீர்ப்பளித்து விடுகிறேனோ, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம், ஏனெனில் அவருக்கு நான் (நரக) நெருப்பின் ஒரு துண்டையே ஒதுக்கித் தருகிறேன். அறிவிப்பாளர் : உம்மு ஸலமா(ரழி), நூற்கள்: புகாரீ : 7169, முஸ்லிம் : 3527, திர்மிதி : 1259.

பிரச்சனைகளை கொண்டு வரும் இருவரில் ஒருவர் தனது வாதத் திறமையால் நீதி வழங்குபவரை ஏமாற்றி தனக்குச் சாதகமாகத் தீர்ப்பளிக்க வைத்துவிட்டாலும் நீதி வழங்குபவர் ஒருபோதும் குற்றவாளியாகமாட்டார் என்பதை மேற்கண்ட ஹதீஃத் மிகத் தெளிவாக உணர்த்துகிறது. இதே கருத்தை பிரதிபலிக்கின்ற மற்றொரு நபி மொழியை பாருங்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (தாவூத் நபி அவர்களது காலத்தில்) இரண்டு பெண்கள் வாழ்ந்தார்கள். அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு புதல்வர்கள் இருந்தனர் (ஒருநாள்) ஓநாய் ஒன்று வந்து அவ்விருவரின் புதல்வர்களில் ஒருவரைக் கொண்டு சென்றுவிட்டது. அவர்களில் ஒருத்தி தன் தோழியிடம் உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது என்று கூற, அதற்கு மற்றவள் உன் மகனைத்தான் ஓநாய் கொண்டு சென்றுவிட்டது என்று சொன்னாள்.

ஆகவே இருவரும் தாவூத்(அலை) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டு சென்றார்கள். தாவூத்(அலை) அவர்கள் அவ்விரு பெண்களில் மூத்தவருக்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தார்கள். (இந்தத் தீர்ப்பின் மீது கருத்து வேறுபாடு கொண்ட) அப்பெண்கள் இருவரும் தாவூத்(அலை) அவர்களின் புதல்வர் சுலைமான்(அலை) அவர்களிடம் (தீர்ப்பிக் கேட்க) புறப்பட்டுச் சென்றனர். அவர்களிடம் அவ்விருவரும் விஷயத்தை தெரிவித்தனர்.

அப்போது சுலைமான்(அலை) அவர்கள் என்னிடம் ஒரு கத்தியை கொண்டு வாருங்கள். நான் உங்களிருவருக்கிடையே (மீதியுள்ள ஒரு மகனை ஆளுக்குப் பாதியாக) பிளந்து(பங்கிட்டு) விடுகிறேன் என்று கூறினார்கள். உடனே இளையவள் (பதறிப்போய்) “அல்லாஹ் உங்களுக்கு கருணை புரியட்டும். அவ்வாறு செய்துவிடாதீர்கள். இவன் அவளுடைய மகன்தான்” என்று கூறினாள். (இவ்வாறு தீர்ப்பளித்த போது மூத்தவள் எந்த சலனமும் இல்லாமல் இருந்தாள்) ஆகவே சுலைமான்(அலை) அவர்கள் (தாயுள்ளத்தை அறிந்து கொண்டு) குழந்தை இளையவளுக்குரியது எனத் தீர்ப்பளித்தார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி), நூல்கள் : புகாரீ : 6769, முஸ்லிம் : 3543.

வழக்கை கொண்டு வந்த இரண்டு பெண்கள் செய்த வாதத்தின் அடிப்படையிலோ அல்லது வேறு ஏதோ ஒரு ஆதாரத்தின் அடிப்படையிலோ தாவூத்(அலை) அவர்கள் மூத்தவளுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கினார்கள். ஆனால் உண்மையில் குழந்தை இளையவளுக்கு சொந்தமானது என்று சுலைமான்(அலை) அவர்கள் அளித்த தீர்ப்பின் மூலம் தெரிய வருகிறது. தன்னால் இயன்ற அளவு முறையாக விசாரித்து தீர்ப்பு வழங்கும்போது அத்தீர்ப்பில் தவறு நேர்ந்தாலும் தீர்ப்பளிப்பவர் குற்றவாளியாகமாட்டார் என்று மேற்கண்ட ஹதீஃதும் நமக்கு உணர்த்துகிறது. இதைப் போன்றே தாவூத்(அலை) அவர்களது காலத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்.

தாவூதையும், சுலைமானையும் (நினைத்துப் பார்ப்பீராக) ஒரு சமூகத்தாரின் ஆடுகள் (மற்றொரு சமூகத்தாரின்) விளைநிலத்தில் இரவில் மேய்ந்த (வழக்கின்) போது அவ்விருவரும் தீர்ப்பளித்தனர். நாம் அவர்களின் தீர்ப்பை கவனித்துக் கொண்டிருந்தோம். நாம் சுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம். குர்ஆன் : 21:78,79

தாவூத்(அலை) அவர்களும் சுலைமான்(அலை) அவர்களும் ஒரே வழக்கில் வெவ்வேறு வகையில் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள். இதில் சுலைமான் (அலை) அவர்களுக்கே தீர்ப்பின் உண்மையை அல்லாஹ் விளங்கச் செய்தான். இந்த அடிப்படையில் சுலைமான்(அலை) அவர்கள் வழங்கிய தீர்ப்பே சிறந்தது. ஆனாலும் தாவூத்(அலை) அவர்கள் வழங்கிய தீர்ப்பை அல்லாஹ் குறை கூறவில்லை. மனிதர்களுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படும்போது அதை முறையாக ஆய்வு செய்து தீர்ப்பளிக்கும் போது தவறு ஏற்பட்டால் இதனால் தீர்ப்பு வழங்குபவர் ஒருபோதும் குற்றவாளியாகமாட்டார் என்பதை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றன.

நபி(ஸல்) அவர்களும் இந்த கருத்தைத்தான் கூறினார்கள். ஆனால் மெளலவிமார்கள் தங்களது அறியாமையினால் நீதி வழங்குபவர் தவறிழைத்தாலும் ஒரு கூலி உண்டு என்ற இந்த ஹதீஃதை தவறாக விளங்கிக் கொண்டு ஆய்வு என்ற பெயரால் ஆண்டுக்கொரு முரண்பட்ட சட்டத்தைக் கூறி தானும் வழிகெட்டு மற்ற மக்களையும் வழிகெடுத்து வருகிறார்கள்.

ஆணி வேரா? அழுகிய வேரா?

ஆய்வாளர் தவறாக ஆய்வு செய்தாலும் கூலி கிடைக்கும் என்ற கருத்தில் உள்ள இயக்க மெளலவிகள் ஆய்வே அமைப்பின் ஆணிவேர் என்று கூறிக் கொள்வதோடு ஆய்வுகள் இல்லையயன்றால் நமது ஜமாஅத் என்றோ அழிக்கப்பட்டிருக்கும், ஆய்வின் மூலமாகவே உண்மைகளை கண்டறிய முடியும், ஆய்வின் மூலமாகவே நாம் விவாத களத்தில் வெற்றி வாகை சூடியுள்ளோம். ஆகவே இளைய தலைமுறையே ஆய்வு செய்ய வா! இதன் மூலமாகவே நாம் ஏகத்துவத்தை காக்க முடியும் என்றெல்லாம் கூறி வருகிறார்கள்.

இந்த இயக்க மெளலவிகளின் உபதேசங்களை வேதவாக்காக ஏற்று நடப்பவர்கள் தாங்கள் தவறாக ஆய்வு செய்தாலும் ஒரு கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஆழமாக மண்டையில் ஏற்றிக் கொண்டதால் மிக தைரியமாக ஆய்வு களத்தில் குதித்து அழுகிய வேர்களை சமுதாயத்திற்கு வழங்கி வருகிறார்கள். தங்களின் அறிவை மட்டுமே நம்புவதோடு தங்களது ஜமாஅத்தில் உள்ளவர்கள் மட்டுமே ஆய்வு செய்யும் திறன் கொண்டவர்கள் என்கிற ரீதியில் இவர்கள் செயல்படுவதால் தான் ஆய்வில் பற்பல மாற்றங்களை காண நேரிடுகிறது.

இனி வரும் காலங்களில் இத்தகைய மெளலவி கள் நீதி வழங்குபவர் தவறு செய்தாலும் ஒரு கூலி கிடைக்கும் என்ற நபி மொழியின் சரியான கருத்தினை ஏற்று செயல்பட்டால் அது அவர்களுக்கும் நல்லது, சமுதாயத்திற்கும் நல்லது. இல்லையயனில் ஆய்வு என்ற பெயரால் இவர்கள் வெளியிடும் முரண்பட்ட தீர்ப்புகளை கண்மூடி பின்பற்றும் இவர்களின் ஆதரவாளர்களின் பாவங்களையும் சேர்த்தே இவர்கள் சுமக்க நேரிடும் என்பதை எச்சரிக்கையாக சொல்லிக் கொள்கிறோம். கியாம நாளில் அவர்கள் தங்கள் (பாவ) சுமைகளை முழுமையாக சுமக்கட்டும். மேலும் அறிவில்லாமல் இவர்கள் எவர்களை வழிக்கெடுத்தார்களோ அவர்களுடைய(பாவச்) சுமைகளையும் சுமக்கட்டும். இவர்கள் (சுமக்கும்) சுமை மிகவும் கெட்டதல்லவா? குர்ஆன் : 16:25

இறுதியாக :

நீதி வழங்குபவர் தவறாக ஆய்வு செய்தாலும் ஒரு கூலி கிடைக்கும் என்ற வழக்குகள் சம்பந்தப்பட்ட நபி மொழியை தவறாக புரிந்து கொண்டு மார்க்கச் சட்டங்களில் மெளலவிமார்கள் தங்கள் இஷ்டம் போல முடிவுகளை மாற்றி மாற்றி அறிவிப்பதைத்தான் கூடாது என்கிறோம். அதே வேளையில் ஆய்வு செய்வதே கூடாது என்று நாம் சொல்லவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மார்க்கச் சட்டங்களில் ஆய்வு செய்து தவறு நேர்ந்தாலும் எனக்கு ஒரு கூலி கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் சொல்லக்கூடாது என்பதே எனது கட்டுரையின் சாராம்சம் என்பதையும் நினைவூட்டுகிறேன்.

நேர்வழி பெற்று மறுமையில் நாம் சொர்க்கத்தை அடைய ஆய்வுகளை நம்புவதை விட இப்ராஹீம்(அலை) இஸ்மாயீல்(அலை) போன்ற இறைத்தூதர்கள் “எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்கு காட்டித் தருவாயாக” (குர்ஆன்:2:128) என்று அல்லாஹ்விடம் கேட்டதைப் போன்று நாமும் அல்லாஹ்விடம் அடிபணிந்து நேர்வழியை அறிந்து அதன்படி நடக்க வழிகாட்டுவாயாக என்று உளப்பூர்வமாக பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக அல்லாஹ் அவனது தனிப்பட்ட அருளால் நமக்கு நேர்வழியை காட்டுவான். இத்தகைய உயர்ந்த குணத்தை நடைமுறைப்படுத்தும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்குத் தந்தருள் புரிவானாக.

ஆசிரியர் குறிப்பு :

ஆய்வு என்ற பெயரால் அர்த்தங்களை அனர்த்தமாக்கி பெருங்கொண்ட முஸ்லிம்களை இம்மவ்லவிகள் நரகை நோக்கி நடைபோட வைப்பதால், அவர்களின் ஆய்வின் அபத்தங்களைத் தெளிவுபடுத்துவது எமது கடமையாக இருக்கிறது. அல்குர்ஆனில் இரண்டு வகை வசனங்கள் இருக்கின்றன. அவற்றில் முஹ்க்கமாத் என்ற வசனங்கள் நடைமுறைப்படுத்தவேண்டிய, செயல்படுத்தப்படவேண்டிய, மார்க்கச் சட்டங்களைச் சொல்லும் வசனங்களாகும். இவற்றில் ஒன்றுக்கு மேல் பொருள் எடுப்பதால் கருத்து வேறுபாடுகள் ஏற்படுகின்றன.

அதனால் சமுதாயத்தில் பிளவுகள் தோன்றுகின்றன. அதனால் சமுதாயம் பலவீனப்பட்டுப் போகின்றது. சமுதாயத்தைப் பிளவுபடுத்தினால் தான் பிரித்தாளும் சூழ்ச்சி என்ற அடிப்படையில் இம்மதகுருமாரகள் பிழைப்பு நடத்த முடியும். எனவேதான் ஆய்வு என்ற அடிப்படையில் முஹ்க்கமாத் வசனங்களில் தங்களின் யூகங்களையும், கற்பனைகளையும் புகுத்தி 2:159 இறைவாக்குச் சொல்வது போல் அவற்றின் நேரடிக் கருத்தை திரித்து வளைத்து அர்த்தங்களை அனர்த்தங்களாக்கிறார்கள். இது 33:36 இறைவாக்குச் சொல்வது போல் பகிரங்க வழிகேடாகும்.

எனவே முஹ்க்கமாத் வசனங்கள் இரண்டாவது பொருளுக்கு இடமே இல்லாத ஒற்றைப் பொருள் உள்ள வசனங்களாகும். எனவே முஹ்க்கமாத் வசனங்களில் ஆய்வு செய்து இப்படிப் பொருள் எடுக்கலாம், அப்படிப் பொருள் எடுக்கலாம் என்று கூறுவது பகிரங்க வழிகேடு, நாளை நரகில் சேர்க்கும்.

அல்குர்ஆனில் மொத்தம் 6236 வசனங்கள் உள்ளன. இந்த மவ்லவிகள் 6666 வசனங்கள் என்று கூறுவது தவறாகும். இந்த 6236 வசனங்களில் எத்தனை வசனங்களுக்கு நபி(ஸல்) விளக்கம் கொடுத்திருக்கிறார்கள் என்று பாருங்கள். விரல் விட்டு எண்ணப்படும் வசனங்களுக்கு மட்டுமே விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இத்தனைக்கும் 2:213, 16:44,64 வசனங்கள்படி குர்ஆனுக்கு விளக்கம் கொடுக்க அதிகாரம் பெற்ற நபி(ஸல்) அவர்களே ஒரு சில வசனங்களுக்கு மட்டுமே விளக்கம் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மதகுருமார்கள் தஃப்ஸீர் என்ற பெயரால் அனைத்து முஹ்க்கமாத் வசனங்களுக்கு விதவிதமான விளக்கங்கள் கொடுத்து 2:159 இறைவாக்குக் கூறுவது போல் அவற்றின் நெரடிப் பொருளை திரித்து, வளைத்து மறைத்திருக்கிறார்கள். இவர்களின் பரிதாப நிலையை 2:161,162 இறைவாக்குகள் அம்பலப்படுத்துகின்றன.

அதன் விளைவு இன்று முஸ்லிம் சமுதாயம் அவிழ்த்துக் கொட்டப்பட்ட நெல்லிக்காய் மூட்டைச் சிதறுண்டு கிடப்பது போல் எண்ணற்றப் பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கிறது. நரக விளிம்பில் நிற்கிறது. தங்களின் வழிகெட்ட இந்தப் போக்கை மூடி மறைக்க முஹ்க்கமாத் வசனங்களுக்கு ஒற்றைப் பொருளுள்ள வசனங்கள் என்று மொழி பெயர்க்காமல் விளக்கமான வசனங்கள் என மொழி பெயர்த்து வருகிறார்கள்.

அப்படியானால் முத்தஷாபிஹாத் வசனங்கள் விளக்கமற்ற வசனங்கள் என்பதே இம்மவ்லவிகளின் மூட நம்பிக்கை. அதனால்தான் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவ்வசனங்களை அவர்கள் கண்டு கொள்வதே இல்லை. யூதர்களோ அவர்கள் ஆய்வு செய்து பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து நோபல் பரிசுகளை வாங்கிக் குவிக்கின்றனர். அந்தோ மவ்லவிகளின் இழிநிலை!

பொய்யன் பீ.ஜை. ஒற்றைப் பொருள் கொண்ட வசனங்களை விளக்கமான வசனங்கள் என்றும், பல பொருள் தரும் வசனங்களை விளக்கமற்ற வசனங்கள் என்றும் அவராக மூடத்தனமாகச் சொல்லிக் கொண்டு, விளக்கமற்ற வசனங்களை அல்லாஹ் இறக்கியிருப்பானா? என்று கேள்வி எழுப்பிக் கொண்டு, முத்தஷாபிஹாத் வசனங்களை அல்லாஹ்வும், ஆலிம்களும் அறிவார்கள் என்று கூறி ஆலிம்களை அல்லாஹ்வுக்கு இணையாக்கி மிகக் கொடிய ஷிர்க்கில்-இணை வைப்பில் மூழ்கியுள்ளதோடு அவரது தக்லீது பக்தர்களையும் ஷிர்க்கில் மூழ்கடித்துள்ளார். (பார்க்க : 42:21, 49:16, 7:146)

எனவே அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே தெளிவாகப் புரிந்து கொள்ளுங்கள், முஹ்க்கமாத் வசனங்களில் நேரடியாக என்ன கூறப்பட்டுள்ளதோ அதை அப்படியே எடுத்து நடைமுறைப்படுத்துவதே நமது கடமை.

அதுவே நேர்வழியாகும். அந்த வசனங்களை ஆய்வு செய்கிறோம் என்ற பெயரில் இன்று ஒரு ஃபத்வா, நாளை ஒரு ஃபத்வா, அடுத்த நாள் ஒரு ஃபத்வா என்று மரத்திற்கு மரம் தாவும் குரங்கு போல், ஃபத்வா கொடுப்பவர்கள் 2:159-162, 33:36, 59:7 வசனங்களின்படி பகிரங்கமான வழிகேட்டில் இருக்கிறார்கள். அவர்களின் இந்தக் குருட்டு ஃபத்வாவை வேதவாக்காகக் கொண்டு செயல்படுகிறவர்கள், நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு அவர்கள் இவ்வுலகில் நம்பிச் செயல்பட்ட மவ்லவிகளையே திட்டி, சபித்து ஓலமிடுவதை கீழ்காணும் குர்ஆன் வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. படித்துப் படிப்பினை பெறுங்கள்.

7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 இவற்றில் பெருமையடித்தோர் என அடையாளம் காட்டப்படுவது சாட்சாத் பெருமையடிக்கும் இம்மவ்லவிகளையே!

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : “மிஃராஜ்” இரவு என்பதாக ரஜபு மாதத்தின் 27-வது இரவையும், “பராஅத்” இரவு என்பதாக ­ஃபான் 15-வது இரவையும் தேர்ந்தெடுத்துக் கொண்டு இவ்விரவுகளில் சிலர் தம் இச்சையாக பல வகையான நபில் தொழுகை தொழுகிறார்கள். மிஃராஜ், பராஅத்தை முன்னிட்டு நோன்பு வைக்கிறார்கள். குறிப்பாக ­ஃபான் 15-வது இரவுக்கு “பராஅத்து இரவு” என்பதாக அவர்கள் தாமாகவே பெயர் வைத்துக்கொண்ட அந்த இரவில் மஃரிபு தொழுகைக்குப் பின் தனியாகவோ, கூட்டாகவோ அமர்ந்து நீண்ட ஆயுளுக்காகவும், இரண விஸ்தீரணத்துக்காகவும் பலாமுஸீபத்துகள் தம்மை வந்து அணுகாமல் இருப்பதற்காகவும் மும்முறை “யாஸீன்” ஓதி துஆ கேட்கிறார்கள். இவற்றுக்கெல்லாம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஏதேனும் ஆதாரம் உண்டா? முஹம்மது அலி மற்றும் சகோதரர்கள், சிங்கப்பூர்.

தெளிவு : மிஃராஜ் ரஜபுப் பிறை 27-ல் தான் நிகழ்ந்துள்ளது என்பதற்கான சரியான ஆதாரம் இல்லை. இமாம் ஜுஹ்ரீ, உர்வா ஆகியோர் ஹிஜ்ரத்துக்கு ஓர் ஆண்டுக்கு முன் நிகழ்ந்துள்ளது என்கிறார்கள். அதாவது ரபீஉல் அவ்வலில் மிஃராஜ் நடந்துள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள். இக்கருத்தையே இப்னு குதைபா அவர்களும், இப்னு அப்துல் பர்ரு அவர்களும் சரிகாணுகிறார்கள். (தப்ஸீர் இப்னு கஸீர் பாகம் 3, பக்கம் 22, இமாம் தஹபீ அவர்களின் “ஸீரத்துந் நபவிய்யா” பக்கம் 166).

ஆகவே நாம் நபி(ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் நடந்துள்ளது என்பதைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே தவிர அது எப்போது நடந்தது, எந்த விதத்தில் நடந்தது என்பன போன்ற சர்ச்சை நமக்குத் தேவையில்லை. பராஅத் இரவு பற்றி குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் அலசிப் பார்க்கும் போது அப்படி ஓர் இரவு உண்டு. அது புனிதமிக்க இரவு என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதற்கான ஒரு ஆதாரமும் இல்லை. குர்ஆனில் “பராஅத்” என்பதாக 9:1-ல் இருக்கிறது. அதற்கும் இவர்கள் கூறும் “பராஅத்” இரவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஸஹீஹான ஹதீஃத்களில் “பராஅத் இரவு” என்ற வார்த்தை கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நபி(ஸல்) இவ்விரு இரவுகள் குறித்து இவை புனிதமான இரவுகள் என்று கூறியதாக ஒரு வாசகமேனும் ஸஹீஹான ஹதீஃத்களில் இல்லை. ஒரு ஷஃபானிலிருந்து மறு ­ஷஃபான் வரை மரணிப்பவர்களின் பெயர்கள் இவ்விரவில் பதிவு செய்யப்படுவதாக இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஹதீஃத் கூட உண்மையான தல்ல என்பதை அறிகிறோம்.

இவ்வாறே அவ்விரு இரவுகளிலும் விஷேசத் தொழுகை தொழ வேண்டும் என்றோ, வேறு எந்த அமல்களும் செய்ய வேண்டும் என்றோ நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதற்கான ஒரு ஆதாரமும் ஸஹீஹான ஹதீஃதின் வாயிலாக காண முடியாது என்பது மட்டுமல்ல, எவராலும் காட்டவும் முடியாது என்பதும் உறுதி. இவ்விரவுகள் புனித மிக்க இரவுகள், இவற்றில் விழித்திருந்து அமல் செய்ய வேண்டும், அதன் பகல் காலத்தில் நோன்பு பிடிக்க வேண்டும் என்றெல்லாம் செய்யப்படும் பயான்கள் அனைத்தும் வெறும் கப்ஸாக்களும், கதையளப்புகளுமே தவிர வேறில்லை.

இவ்வாறே ­ஃபான் 15-வது இரவில் மஃரிபு தொழுகைக்குப் பிறகு நீண்ட நாள், ரிஜ்கு பரகத்து முதலியவை கிடைக்கப்பெற்று, பலாமுஸீபத்துகள் அணுகாமல் இருப்பதற்காக மும்முறை “யாஸீன்” ஓதி துஆ செய்ய வேண்டும் என்பதற்கான ஆதாரமும் ஹதீஃத்களில் இல்லை.

பொதுவாக இரவு நேரத்த  ில் யாஸீன் ஓதுபவர் அதிகாலையில் பாவம் மன்னிக்கப்பட்டவராக எழுந்திருப்பார் என்பதாகவும், இவ்வாறே “சூரத்துல் துகான்” எனும் அத்தியாயத்தை இரவில் ஓதுபவர் அதிகாலையில் பாவம் மன்னிக்கப்பட்டவராக எழுந்திருப்பார் என்பதாகவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்பதாக அபூ ஹுரைரா(ரழி) அவர்களின் வாயிலாக ஸஹீஹான ஹதீஃத் ஒன்று முஸ்னது அபூயஃலாவில் இடம் பெற்றுள்ளது.

ஒரு செயலை, இது நல்ல அமல்தான்-நன்மையான காரியம்தான் என்று கருதி நபி(ஸல்) அவர்கள் கூறாமல் நமது இஷ்டத்திற்கு நாம் எதையும் எப்படியும் செய்து கொள்ளலாம் என்பதை இஸ்லாம் தடை செய்கிறது.

இம்மார்க்கத்தில் இதில் இல்லாததொன்றை ஒருவர் புதிதாகப் புகுத்தினால் அது மறுக்கப்பட வேண்டியதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆயிஷா(ரழி), புகாரீ, முஸ்லிம்)

இந்த ஹதீஃதின் அடிப்படையில் எந்த ஒரு காரியத்தையும் தன்னிச்சையாகச் செய்யாது அவற்றை எப்பொழுது எந்த முறையில் நபி(ஸல்) அவர்கள் செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார்களோ, அவற்றை அப்பொழுது அம்முறைப்படி செய்வதுதான் மார்க்கமாகும்.

ஆகவே மேற்கூறப்பட்டவை அனைத்திற்கும் மார்க்க அடிப்படையில் எவ்வாதாரமும் இல்லாததால் இவற்றைத் தவிர்த்துக் கொள்வதே முறையாகும்.

ஐயம் : ஒளூ செய்யும் பாத்திரத்தில் கைகளை விட்டு தண்ணீரை அள்ளி ஒளூ செய்வது கூடுமா? ஏ.ஸாஜிதா, இலங்கை.

தெளிவு : ஒரு முறை உஸ்மான்(ரழி) அவர்கள் ஒளு செய்வதற்காகத் தண்ணீரைக் கொண்டு வரும்படி செய்து ஒளூ செய்தார்கள். அப்போது அவர்கள் தண்ணீரை மும்முறை கையில் சாய்த்து அவ்விரண்டையும் (மணிக்கட்டுவரைக்) கழுவிக் கொண்டார்கள். பிறகு தமது வலக்கையைப் பாத்திரத்தில் ஓட்டி (தண்ணீரை அள்ளி) வாய் கொப்பளிக்கவும், மூக்கில் செலுத்தி அதை மும்முறை சுத்தம் செய்யவும் செய்தார்கள்.பின்னர் மும்முறை முகத்தைக் கழுவினார்கள்.

மேலும் தமது கைகளை முழங்கை வரை மும்முறை கழுவினார்கள். பிறகு தமது தலைக்கு மஸ்ஹு செய்தார்கள். (தண்ணீர் கையால் தமது தலையைத் தடவினார்கள்) பிறகு தமது கால்களை கரண்டை மொளி வரை மும்முறை கழுவினார்கள். பின்னர் “எவர் எனது இந்த ஒளூவைப் போல் ஒளூ செய்துவிட்டு பிறகு தமது உள்ளத்தில் (உலக சம்பந்தமானவை) எவற்றையும் கொண்டு வராமல் இரண்டு ரகாஅத்துகளைத் தொழுது விடுகிறாரோ, அவருடைய பாவங்களில் முன் செய்தவை மன்னிக்கப்பட்டு விடுகின்றன என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதாகக் கூறினார்கள். (ஹும்ரான்(ரழி), புகாரீ, முஸ்லிம்) (முஸ்லிம் உடைய அறிவிப்பில் “நான் நபி(ஸல்) அவர்களை இவ்வாறு ஒளூ செய்வதைப் பார்த்துள்ளேன்” என்று இடம் பெற்றுள்ளது)

ஆகவே, மேற்காணும் ஹதீஃதின்படி முதலில் பாத்திரத்திலிருந்து தண்ணீரை கையில் சாய்த்து கைகளைக் கழுவிவிட்டு பிறகு கைகளைப் பாத்திரத்தில் விட்டு தண்ணீரை அள்ளி ஒளூ செய்வது ஆகும் என்பதை அறிகிறோம். இவ்வாறு பாத்திரத்தில் கையை விட்டு தண்ணீரை அள்ளும்போது ஏற்கனவே கையில் உள்ள தண்ணீர், பாத்திரத்தில் விழுந்தாலும் அதைப் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை. அதனால் அந்த தண்ணீர் ஒளூ செய்வதற்கு ஆகாத தண்ணீராகி விடாது.

ஐயம் : ஒருவருக்கு தவறான பெயர் வைக்கப்பட்டிருந்தால் அவர் அதை நீக்கிவிட்டு வேறு நல்ல பெயர் வைக்க வேண்டுமா? ஏ.ஸாஜிதா, இலங்கை.

தெளிவு : உமர்(ரழி) அவர்களுக்கு “தவறு செய்பவன்” எனும் பொருளில் “ஆஸிமா” எனப்படும் ஒரு மகள் இருந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் (அதைச் சரி காணாமல்) “அழகானவள்” எனும் பொருளில் “ஜமீலா” என்பதாக அப்பெண்ணுக்குப் பெயர் இட்டார்கள். (இப்னு உமர்(ரழி), முஸ்லிம்)

“ஆசியா” என்பதாக “ஸீன்” உடைய உச்சரிப்பில் உள்ள பெயர் பிர்அவ்னுடைய மனைவியின் பெயராகும். அவ்வாறு பெயரிடுவது தவறில்லை. அதற்கு “அரும் மருந்து, நல்ல மருத்துவர்” என்ற நல்ல பொருட்கள் உள்ளன. மேலும் அந்த அம்மையாரை அல்குர்ஆன் சிறந்ததொரு மூமினாகிய பெண்மணி என்பதாக சிலாகித்துக் கூறுகிறது.

ஆனால் “ஆஸிமா” என்பதாக “ஸாத்” உடைய உச்சரிப்பில் “தவறு செய்பவன்” என்ற மோசமான பொருளைக் கொண்டதாயிருப்பதால் அவ்வாறு பெயரிடுவது கூடாது.

அப்துல் ஹமீது(ரஹ்) கூறுகிறார்கள். நான் ஒரு முறை ஸயீதுப்னுல் முஸய்யபு(ரஹ்) அவர்களிடத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள். அதாவது, தன் பாட்டனார் “ஹஜ்னு” என்பவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். நபி(ஸல்) அவர்கள் அவரிடத்தில் உமது பெயர் என்ன? என்றார்கள். அதற்கு அவர் “ஹஜ்னு” கடினமானவர் என்றார். அப்போது அவர்கள் “இல்லை நீர் ஸஹ்லு” இலகுவானவர், மிருதுவானவர் என்றார்கள். அதற்கு அவர் “என் தந்தை எனக்கு இட்ட பெயரை நான் மாற்றுவதாக இல்லை” என்றார். இப்னு முஸய்யபு கூறுகிறார்கள். அதன் பிறகு எங்கள் குடும்பத்தில் கடினமான நிலையே நீடித்து வந்தது. (அப்துல் ஹமீது(ரஹ்), புகாரீ)

மேற்காணும் அறிவிப்பின் அடிப்படையில் தீய பொருளைக் கொண்டுள்ள பெயர் வைக்கப்பட்டிருப்பின் அதை நல்ல பெயராக அவசியம் மாற்றி வைக்க வேண்டும் என்பதை அறிகிறோம்.

ஐயம் : தம்பதிகளில் ஒருவர் இறந்து விட்டால் குளிப்பாட்டி கபனிட்டு பிறகு கணவரில் உடலை மனைவியோ, மனைவியின் உடலை கணவரோ பார்ப்பது கூடாது என்கிறார்கள். காரணம் கேட்டால் இருவரில் ஒருவர் இறந்து விட்டால் அவர்களுக்கு இடையிலுள்ள விவாக பந்தம் மரணத்தின் காரணமாக நீங்கி விடுகிறது என்று கூறுகிறார்கள். இதற்கு ஆதாரம் ஏதும் உண்டா? ஷேக்முஹ்யுத்தீன், பேட்டை, திருநெல்வேலி.

தெளிவு : நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரழி) அவர்களை நோக்கி எனக்கு முன் நீர் மவ்தாகி விட்டால் நான் உம்மைக் கழுவி குளிப்பாட்டி, கபனிட்டு உமக்கு ஜனாஸா தொழுகை நடத்தி நானே அடக்கம் செய்வேன் என்று கூறினார்கள். (ஆயிஷா (ரழி), இப்னு மாஜ்ஜா)

இந்த ஸஹீஹான அறிவிப்பின் அடிப்படையில் கவனிக்கும்போது கணவர் தமது மரித்த மனைவியின் உடலைப் பார்ப்பது ஆகும் என்பதையும், இருவரில் ஒருவர் மரணமாவதால் தமக்கு மத்தியில் உள்ள விவாக பந்தம் துண்டித்து விடுகிறது என்பதாகக் கூறப்படும் கூற்று தவறானது என்பதையும், கணவர் எவ்வாறு மனைவியின் உடலை பார்ப்பது கூடுமோ, அவ்வாறே மனைவியும் தமது மரித்த கணவரின் உடலைப் பார்ப்பது கூடும் என்பதையும் அறிகிறோம். இருவரும் ஒருவரின் உடலை மற் றொருவர் பார்ப்பது கூடாது என்று கூறுவோரின் கூற்றுக்கு ஹதீஃத் அடிப்படையில் அறவே ஆதாரமில்லை.

ஐயம் : ஒருவர் பரகத்தை நாடி தமது மகனுக்கு “முஹம்மது” என்று பெயரிட்டால் அவரும் அவருடைய அந்த மகனும் சுவர்க்கம் புகுவார்கள் என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று ஒருவர் கூறுகிறார். இது ஸஹீஹான ஹதீஃதா? எம்.பி.அப்துர்ரஹ்மான், இளங்காகுறிச்சி.

தெளிவு : ஒருவர் சுவர்க்கம் புகுவதற்கு ஈமானும் ஸாலீஹான அமலும் தேவை என்று குர்ஆனும், ஹதீஃதும் கூறுகின்றன. ஆனால் இந்த ஹதீஃதோ அவற்றைப் பற்றி எல்லாம் எதுவும் கூறாமல் மிக சுலபமாக உங்கள் மகனுக்கு “முஹம்மது” என்று நீங்கள் பெயர் வைத்துவிட்டு நீங்களும் உங்கள் மகனாரும் சுவர்க்கம் சென்று விடுங்கள் என்பதாகக் கூறுகிறது. இதிலிருந்தே இது யாரோ ஒருவரால் கட்டிவிடப்பட்ட சரடு என்பதை அறிகிறோம்.

ஐயம் : நபி(ஸல்) அவர்களை பூச்சிகள் அணுகாது, விஷ ஜந்துக்கள் தீண்டாது என்று கூறுகிறார்களே இது உண்மையா? சரியான ஆதாரம் ஏதும் உண்டா? முஹம்மது இப்றாஹீம், சென்னை.

தெளிவு : ஒரு நாள் இரவு நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது தமது கையைத் தரையில் வைத்தார்கள். உடனே ஒரு தேள் அவர்களைக் கொட்டி விட்டது. அப்போது அவர்கள் அத்தேளைத் தமது மிதியடியால் அடித்துக் கொன்று விட்டு, தாம் தொழுது முடித்தவுடன் அல்லாஹ் இத்தேளை நாசமாக்குவானாக! இது தொழுது கொண்டிருப்பவரையும் விடுவதில்லை. தொழாதவரையும் விடுவதில்லை என்றோ அல்லது நபியையும் விடுவதில்லை, நபி அல்லாதவரையும் விடுவதில்லை என்றோ கூறிவிட்டு, பின்னர் உப்பையும், தண்ணீரையும் கொண்டு வரும்படி செய்து அதை ஒரு பாத்திரத்தில் ஆக்கி, பின்னர் உப்பு கலந்த அந்த தண்ணீரைத் தேள் கொட்டிய அந்த பாகத்தில் ஊற்றி அந்த பாகத்தைத் தடவிக் கொடுத்துக் கொண்டு, குல்அஊது பிரப்பில் பலக், குல்அஊது பிரப்பின்னாஸ் ஆகிய இரு சூராக்களையும் அதற்காக ஓதிக் கொண்டிருந்தார்கள். (அலி(ரழி), பைஹகீ)

யா அல்லாஹ்! நான் உன்னிடத்தில் வெண் குஷ்டம், கரும் குஷ்டம், பைத்தியம் மற்றும் கொடிய நோய்களை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறி நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக் கொண்டிருந்தார்கள். (அனஸ்(ரழி), அபூதாவூத், நஸயீ)

யா அல்லாஹ்! நான் உன்னிடத்தில் (என்மீது) கட்டிடம் இடிந்து விழுவதை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன். மேலும் மேலிருந்து கீழே விழுந்து விடு வதை விட்டும், நீரில் மூழ்கி விடுவதை விட்டும், நெருப்பில் எரிந்து கரிந்து விடுவதை விட்டும், மிகவும் தள்ளாத பருவத்தையடைந்து அதனால் நான் சீரழிவதை விட்டும், என்னை ஏதேனும் விஷ­ ஜந்துக்கள் கொட்டி மரிப்பதை விட்டும், ஆக இத்தகைய அனைத்து ஆபத்துகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறி பிரார்த்திக் கொண்டிருந்தார்கள். (அபுல்யஸார்(ரழி), அபூதாவூத், நஸயீ)

ஆகவே மேற்காணும் ஹதீஃத்களை கவனித்துப் பார்க்கும்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகள் அனைத்தைப் பார்ப்பினும் மேலானவர்களாயிருப்பினும் சாதாரணமாக ஒரு மனிதருக்கு ஏற்படக்கூடிய பாம்பு கடித்தல், தேள் கொட்டுதல் போன்ற சிறிய ஆபத்துகளிலிருந்து, நீரில் மூழ்குதல், நெருப்பில் கரியுதல், வெண்குஷ்டம் கரும் குஷ்டம் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகுதல் போன்ற பெரிய ஆபத்துகள் வரை எல்லா ஆபத்துகளுமே அவர்களுக்கும் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளவர்களாகவே இருந்துள்ளார்கள் என்பதை மேற்கண்டவாறு அவர்கள் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடியுள்ள வாசகங்களே உணர்த்துவதால், நபி(ஸல்) அவர்களை பூச்சிகள் அணுகாது, விஷ­ஜந்துக்கள் தீண்டாது என்று கூறப்படும் கூற்று ஆதாரமற்றது என்பதை அறிகிறோம்.

ஸில்ஸிலயே நிஜாமிய்யா கல்வித் திட்டம்!

ஓர் ஆய்வு!

அபூ ஃபாத்திமா

மறு பதிப்பு : செப்டம்பர் 1989

இன்று பெரும்பாலான அரபி மதரஸாக்களில், குறிப்பாக குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும், முரணான தக்லீதையும், தஸவ்வுஃபையும் மார்க்கமாகப் போதிக்கும் அரபி மதரஸாக்களில் “ஸில்ஸிலயே நிஜாமிய்யா’ கல்வித் திட்டத்தின்படி பாடங்கள் போதிக்கப்படுகின்றன. கண்மூடிப் பின்பற்றும் தக்லீது கொள்கையுடைய முகல்லிதுகளால் இம்மதரஸாக்கள் நடத்தப்படுகின்றன என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

எனவே, “ஸில்ஸிலயே நிஜாமிய்யா’ என்றால் என்ன என்பதை அம்மதரஸாக்களில் பாடம் போதிக்கும் ஆசிரியர்களோ, கல்வி கற்கும் மாணவர்களோ அறிந்திருக்கும் வாய்ப்பு மிக மிகக் குறைவு. இது பற்றிப் பட்டம் பெற்ற பல மவ்லவிகளிடம் நாம் கேட்டும் சரியான பதிலை இதுவரை யாருமே தரவில்லை. சுமார் 60 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் மவ்லவிகளில் திறமை மிக்க ஒரு ஹாபிழ் மவ்லவியிடம் இது பற்றி நாம் கேட்டபோது, ஹைதராபாத் நிஜாமின் ஞாபகர்த்தமாக அவ்வாறு சொல்லப்படுகிறது என்று விளக்கினார். ஓரளவு விளக்கம் தெரிந்தவர்கள் லட்சுமணபுரியில் வாழ்ந்த பெரியார் நிஜாமுத்தீன் என்பவர் இத்திட்டத்தை உருவாக்கியதால் “ஸில்ஸிலயே நிஜாமிய்யா’ என்று கூறப்படுகிறது என்று கூறுகிறார்கள். திறமை மிக்க மவ்லவிகளின் நிலையே இதுவென்றால் மற்ற மவ்லவிகளின் நிலை பற்றி நாம் சொல்லி நீங்கள் தெரியவேண்டியதில்லை.

நிஜாமிய்யாவின் தோற்றம் :

செல்ஜூக் சுல்தான்களின் பாரசீக அமைச்சராக இருந்த நிஜாமுல் முல்க் என்பவரால் “நிஜாமிய்யா’ என்ற பெயரில் மதரஸாக்கள் நிறுவப்பட்டன. அவற்றில் தலையாயது ஹிஜ்ரி 457-459ல்(கி.பி. 1065-1067) பாக்தாதில் நிறுவப்பட்ட நிஜாமிய்யாவாகும். அது குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான தக்லீதுக்கு வித்திடப்பட்ட காலக்கட்டமாகும். எனவே அம்மதரஸாவில் இமாம் ஷாஃபி(ரஹ்) அவர்களின் பெயரால் கற்பனை செய்யப்பட்டிருந்த ஷாஃபி மத்ஹபின் நூல்களும், அஷ்அரி கொள்கையை வலியுறுத்தும் நூல்களும், பழம் பெரும் பாடல்கள் பெருமளவிலும், பெயரளவில் குர்ஆனும் போதிக்கப்பட்டு வந்தன. இஸ்லாமிய உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து பாடம் பயின்று வந்தனர். அப்போது அவர்கள் வாயாலோ, எழுத்து மூலமோ ஆசிரியர்களைக் கேள்விகள் கேட்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தனர்.

தலைமை ஆசிரியர் இமாம் கஸ்ஸாலி :

இந்த மதரஸாவின் தலைமை ஆசிரியர் பொறுப்பை இமாம் கஸ்ஸாலி அவர்கள் ஹிஜ்ரி 484-488 (கி.பி.1091-1095) வரை வகித்து வந்தார். அப்போது அந்த நிஜாமிய்யாவின் போதனா முறையிலேயே ஒரு புதுத் திருப்பம் எற்பட்டது. அந்தப்போதனை முறைகள் எந்த அடிப்படையில் அமைக்கப்பட்டன என்பதை அறிய அன்று மக்களிடையே செல்வாக்குடன் திகழ்ந்த கல்வி முறைகள், தத்துவங்கள், கலைகள் இவற்றை நாம் அறிந்து கொள்வது அவசியம்.

அக்கால கட்டத்தில் தத்துவங்களும், தர்க்கவியலும் மிகைத்திருந்தன. கிரேக்கத் தத்துவங்கள் ஐரோப்பிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை இழந்து கொண்டிருந்த நிலையில் அரபு நாடுகளில் நுழைந்து அது மீண்டும் உயிர் பெற்றது. ஜார்ஜ் ஸைதான் என்ற வரலாற்றாசிரியர் இவ்வாறு எழுதுகிறார். பழைய கிரேக்க தத்துவங்கள் அழியக்கூடிய நிலையில் இருந்தபோது முஸ்லிம்கள் அத்தத்துவ நூற்களை தங்கள் மொழிகளில் மொழி பெயர்த்து அவற்றைத் தமதாக்கிக் கொண்டார்கள். அப்பாஸியர்கள் காலத்தில் தத்துவம். தர்க்கவியல் சம்பந்தமான கிரேக்க லத்தீன் மொழியிலுள்ள புத்தகங்கள் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டன.

இந்திய நாட்டு சமஸ்கிருத நூல்களும் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டன. (உதாரணமாக கலீலாதிம்னா என்ற பஞ்ச தந்திரக் கதைகள்) இதன் காரணமாக வெவ்வேறு நாட்டு மக்களின் பழக்க வழக்கங்கள் (ஐதீகங்கள்) முஸ்லிம்களிடம் நுழையத் தொடங்கின. தக்லீதும், தஸவ்வுஃபும் அவ்வகையைச் சார்ந்தவையே. அரபிகளல்லாத இஸ்லாத்தைப் பற்றித் தெளிவாக அறிந்திராத தர்க்கக் கலைவல்லுநர்கள் முஸ்லிம்கள் ஆனபோது தாங்கள் முன்பு சார்ந்திருந்த மதப் பழக்க வழக்கங்களையும் கோட்பாடுகளில் சிலவற்றையும் இஸ்லாத்தில் நுழைத்துக் கொண்டனர்.

அவர்களிடம் அறிவாற்றல் இருந்த தேயல்லாமல் தூய்மையான இஸ்லாத்தை அவர்கள் அறிந்திருக்கவில்லை. முஸ்லிம்களும் குர்ஆன், ஹதீஃதை நேரடியாக விளங்கிச் செயல்படும் உயரிய நிலையிலிருந்து தவறி, கண்மூடிப் பின்பற்றும் தக்லீத் கொள்கைக்கு ஆட்பட்டிருந்ததால் இத்தகையவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட தத்துவங்களால் ஈர்க்கப்பட்டனர். இதன் காரணமாக உண்மையான இஸ்லாமிய கொள்கைகளை விட்டும் மேலும் மேலும் விலகிச் சென்றனர். அது மட்டுமல்ல, மாற்று மதங்களிலிருந்தும், தத்துவங்களிலிருந்தும் காப்பி அடித்த கொள்கைகளே உண்மையான இஸ்லாம் என்ற தவறான நம்பிக்கையில் அவற்றை ஆர்வத்தோடு செயல்படுத் தினர். அல்லாஹ்வின் கலாமான திருகுர்ஆனுக்கு தஃப்ஸீர் விரிவுரை என்ற பெயரால் அந்நியரிடமிருந்து காப்பியடித்த கருத்துக்களையும் தங்கள் சொந்த ஊகங்களையும், அந்நியரிடமிருந்து இரவல் வாங்கிய தர்க்கக் கலையையும் இஸ்லாத்தில் புகுத்தும் அளவிற்கு நிலைமை சீர்குலைந்தது.

இப்படி அந்நிய தர்க்கக் கலையை தஃப்ஸீர்களில் புகுத்தியமையால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை காலஞ்சென்ற அறிஞர் அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் தன்னுடைய தர்ஜுமானுல் குர்ஆன் முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள். நபி தோழர்களின் இறுதிக் காலத்திலேயே ரோமானிய, பாரசீக கலாச்சாரங்கள் அரேபியாவில் பரவத் தொடங்கின. அதோடு கிரேக்க தத்துவ நூல்கள் அரபியில் மொழி பெயர்க்கப்பட்டன.

அதனால் மனிதர்களால் உருவாக்கப்பட்ட கலைகள் மக்களிடையே பரவத் தொடங்கியதும், இயற்கையான அரபி மொழி நடையை உள்ளங்கள் வெறுக்கத் தொடங்கின. எனவே, குர்ஆனின் சொல் ஒரு தட்டிலும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட கலை மறு தட்டிலும் வைக்கப்பட்டு நிறுத்துப் பார்க்கப்பட்டன. ஆனால் குர்ஆனின் நடை வேறு, மற்றவைகளின் நடை வேறாகும். வேறுபட்டவைகள் இரண் டினை ஒன்று சேர்க்க முயற்சிகள் செய்யப்பட்டன. இதனால் குர்ஆனின் விளக்கங்கள் அவர்களால் உருவாக்கப்பட்ட நியதிகளுக்கு ஏற்றவாறு தரப்பட்டன. அந்நியர்களின் கலாச்சாரங்களுக்கு எற்றவாறு இஸ்லாமிய கலாச்சாரங்கள் திரிபடைந்தன.

தத்துவங்களும், தர்க்கக் கலையும் இஸ்லாத்தில் நுழைந்தன :

அதோடு மட்டுமல்லாமல் தர்க்கக் கலை (Logic) முஸ்லிம்களின் மத்தியில் புகுந்து அவர்களை மார்க்க விஷயங்களில் குழப்பத்திலும், சந்தேகத்திலும் ஆழ்த்தியது. தர்க்கவியலும், தத்துவங்களும் (Philosophy) சரிவரக் கற்பிக்கப்பட்டால் இத்தகைய குழப்பமும், சந்தேகமும் நீங்கிவிடும் என்ற நோக்கத்துடன் அக்கலைகள் மேற்கூறப்பட்ட கலாசாலைகளில் போதிக் கப்படலாயின. அப்பாஸிய கலீபாக்களின் காலத்தில் தர்க்கக்கலை உச்சநிலையை அடைந்திருந்தது.

பொதுவாக முஸ்லிம் நாடுகளின் (அரபு நாடுகளின்) நிலை இவ்வாறிருக்க இமாம் கஸ்ஸாலி பிறந்த நாடான பாரசீகத்தின்(ஈரான்) நிலை எவ்வா றிருந்தது என்பதையும் நாம் அறிந்திருக்க வேண்டும். பாரசீக மக்களிடம் ஏற்கனவே பாரசீகத் தத்துவங்கள் புரையோடிப் போயிருந்தது மட்டுமல்லாமல், வெறும் யூகத்தின் அடிப்படையில் தனி மனித ஆராதனைக்காக இஸ்லாத்தினின்றும் பிரிந்து சென்ற ஷீஆ பிரிவினரின் கற்பனைக் கட்டுக்கதைகளும் ஆழமாக வெரூன்றி இருந்தன. இந்த ஷீஆ பிரிவினர் குர்ஆனின் வசனங்கள் எந்த நோக்கத்திற்காக இறங்கினவோ அவற்றை விட்டு மாற்றுப் பொருள்கள் கற்பித்து திரிக்கலானார்கள்.

நபி மொழிகளுக்குப் பொருத்தமற்ற தமது வியாக்யானங்களைப் பரப்பினார்கள். அப்படியும் தங்கள் தவறான நோக்கம் நிறைவேறத் தடங்கள் ஏற்பட்டபோது நபி(ஸல்) அவர்களின் பெயரால் பல இலட்சக்கணக்கான பொய்யுரைகளை ஹதீஃத்களென இட்டுக்கட்டிப் பரப்பலானார்கள். இந்த ஷீஆ பிரிவினரின் தவறான போதனைகள் பாரசீக (ஈரான்) மக்களை வெகுவாகக் கவர்ந்தன. அந்த நாடு ஷீஆ கொள்கையால் ஆட்கொள்ளப்பட்டது. அங்கு ஷீஆக்கள் பரப்பிவிட்ட பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்கள் மிக வேகமாகப் பரவியிருந்தன. இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் இமாம் கஸ்ஸாலி அங்கு ஹிஜ்ரி 450ல் (கி.பி.1058) பிறந்தார்.

இமாம் கஸ்ஸாலி இயற்கையிலேயே அதிபுத்திசாலியாக இருந்தார் என்பதில் ஐயமில்லை. அல்லாஹ் அவருக்கு சிறந்த மதிநுட்பத்தையும், பேச்சு வன்மையையும், வாதத் திறமையையும் கொடுத்திருந்தான். அன்றைய கால சூழ்நிலைகளுக் கேற்றவாறு இமாம் கஸ்ஸாலி தன்னைத் தயார் செய்து கொண்டார். சிறு வயதிலேயே பாரசீக நாட்டில் பரவியிருந்த பல்வேறு கலைகளைக் கற்று அவற்றில் தலைசிறந்த மேதையானார். அவரது காலகட்டத்தில் கிரேக்க தத்துவங்களும், பாரசீக தத்துவங்களும், தர்க்கக்கலையும் மக்களிடையே பெரும் செல்வாக்கைப் பெற்றிருந்தன என்று பார்த்தோம்.

அந்நிய தத்துவங்களுக்கு ஒத்துப்போகும் விதத்தில் ஷீஆக்கள் நபி(ஸல்) அவர்களின் பெயரால் பொய்யான ஹதீஃத்களைப் புனைந்து பரப்பி விட்டிருந்ததையும் பார்த்தோம். இவை அனைத்தையும் கற்று மாபெரும் அறிஞராக மதிக்கப்பட்டார். கல்வித் துறையிலும், கலைத்துறையிலும் மக்களிடையே பிரபல்யமானவற்றை ஒருவர் கற்று அவற்றில் தேர்ச்சியம், கீர்த்தியும் மிக்கவரானால் அவரை பேரறிஞராகக் கருதி மக்கள் மதிப்பதும், பாராட்டுவதும் மரபே. இன்றும் கூட கவைக்குதவா கலைகளைக் கற்று, அவற்றில் சிறப்புடன் திகழ்ந்தவர்களை “பேரறிஞர்” என்று மக்கள் வாய் நிறைய அழைப்பதையும், வானளாவப் புகழ்வதையும் பார்க்கத்தானே செய்கிறோம்.

இந்த நிலையில் இமாம் கஸ்ஸாலி இஸ்லாத்தின் சிறப்பை மக்களுக்கு தெளிவுபடுத்துவதாக நம்பிக் கொண்டு தத்துவ அடிப்படையிலேயே இஸ்லாத்தை வளர்க்க முற்பட்டார். இதற்கு ஷீஆக்களால் புனையப்பட்ட பொய்யான ஹதீஃத்கள் அவருக்குப் பெரிதும் உதவின.

இந்த பொய்யான ஹதீஃத்கள் அந்நியர்களின் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்டு அவற்றிற்கு நபிமொழிகள் என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட பொய்யான ஹதீஃத்களின் அடிப்படையில் தனது வாதங்களை இமாம் கஸ்ஸாலி எடுத்து வைத்தாலும், தனது மதி நுட்பத்தாலும், தர்க்க வாதத்திறமையாலும் எதிரிகளை முறியடித்து வெற்றி வாகை சூடினார்.

இது அவருக்கு இஸ்லாமிய உலகில் ஒரு தனிப் பெரும் புகழையும் ஸ்தானத்தையும் ஏற்படுத்திற்று. அவரது அறிவாற்றலாலும், பேச்சு வன்மையாலும் பெரிதும் கவரப்பட்ட அமைச்சர் நிஜாமுல் முல்க் இவரை இவரது 34ம் வயதில், தாம் நிறுவிய நிஜாமிய்யா கல்லூரியின் முதல்வராக நியமித்தார். இளம் வயதில் இவர் பெற்ற இந்த உயர் பதவியானது பலருக்கு இவர் மேல் பொறாமையை ஊட்டினாலும், அதற்கு மாறாக வேறு பலரிடம் அளவு கடந்த மதிப்பையும் பெற்றுத்தந்தது. நிஜாமிய்யா மதரஸாவின் பாடதிட்டங்களை நாம் முன்னர் குறிப்பிட்டது போல், இவர் பெற்றிருந்த தத்துவம், தர்க்கக் கலை (பல்ஸஃபா, மன்திக்) போன்ற கலைகளைக் கொண்டு நிரப்பினார்.

சுமார் ஐந்தாண்டு கள் நிஜாமிய்யா மதரஸாவின் தலைமைப் பொறுப் பில் மிகத் திறம்பட சேவையாற்றி பேரும் புகழும் பெற்றார். இவரது புகழ் இஸ்லாமிய உலகம் முழு வதும் பரவி இருந்தது. இஸ்லாமிய மார்க்க ஞானத்திலும், சட்டங்களிலும் அதிகாரப்பூர்வமான வல்லுநர் (Authority) என்று முஸ்லிம்கள் இவரை நம்பிச் செயல்படலாயினர்.

சூஃபிஸம் இஸ்லாத்தின் அங்கீகாரம் பெற மூலகர்த்தா யார்?

இந்த நிலையில் இவரது 38ம் வயதில் இறை ஞானமே உண்மையான அறிவு என்றும், அந்த இறை ஞானத்தை அடையும் வழி துறவறத்தை மேற் கொள்வதே என்ற எண்ணம் இவருக்கு ஏற்பட்டது. தனக்குக் கிட்டியுள்ள உயர் பதவி, கீர்த்தி, புகழ் இவற்றைத் துறந்து செல்வதா? என மனம் அங்கலாய்த்தாலும் துறவறத்தை மேற்கொண்டால் அன்றி “முக்தி’ பெற முடியாது என்றும் தூண்டியது. அந்நிய மதவாதிகளின் கொள்கைகளையும், தத்து வங்களையும் கற்று அவற்றில் தன்னிகரில்லாத அறி ஞர் என ஏற்றுக் கொள்ளப்பட்டவருக்கு இஸ்லாத்திற்கு முரணான குர்ஆனும், ஹதீஃதும் மறுக்கின்ற துறவறம்தான் ஈடேற்றத்திற்குரிய வழி என்ற விகற்பமான எண்ணம் ஏற்பட்டதில் வியப்பில்லை தான்.

பொதுவாகத் தத்துவங்களில் ஈடுபாடு கொண்டு, அவற்றிலேயே ஊறிப்போனவர்களை அவர்கள் அறியாமலேயே அவை அடிமையாக்கி விடும் என்பது உலகம் ஒப்புக்கொள்ளும் உண்மையாகும். போதை வஸ்துகளை உபயோகிப்பவன் இறுதியில் அவற்றிற்கு எப்படி அடிமையாகி விடுகிறானோ, அதேபோல் இந்தத் தத்துவங்களும் மனிதனுடைய மதியை மயங்கச் செய்து, போதையை உண்டாக்கி அடிமையாக்கிக் கொள்ளுகின்றன.

போதைப் பொருள்கள் மனிதனது சிறு மூளையைப் பாதித்து, மதியை மயக்கி, அவனை நிலை குலையச் செய்து, ஏதோ ஒரு உயர் ஞானத்தைப் பெற்றது போல் மாயத் தோற்றத்தை உண்டாக்குவது போல், மாற்று மதங்களிலுள்ள சில பயிற்சி முறைகளும் மனிதனது மதியை மயக்கி, அவனை நிலைகுலையச் செய்து உயர்ந்ததொரு மெஞ் ஞானத்தில் இருப்பதாக அவனை நம்ப வைக்கின்றன. இதனால்தான் மாற்று மதவாதிகள் மனிதர்களால் உண்டாக்கப்பட்ட தங்களது மதங்களில் ஆழ்ந்த பற்றும், நம்பிக்கையும் கொண்டு செயல்படுகின்றனர்.

மாற்று மதவாதிகளின் சுலோகங்களை ஒட்டி அரபி சொற்றொடர்களால் ஆன சுலோகங்களைக் கூறும் பயிற்சி முறைகளைக் கையாண்டு, மதி மயங்கி, தன்னிலை இழந்து, உயர்ந்த ஞானத்தில் (மஃறிஃபா) இருப்பதாக நம்பச் செய்வது தான் தஸவ்வுஃபாகும் (சூஃபிஸம்). இத்தகைய பயிற்சி முறைகள் மூலம் இந்த நிலையை அடைய முடியாத ஷைகுகள் கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருள்களை உபயோகிப்பதன் மூலம் மதிமயங்கி தன்னிலை இழந்து, உயர்ந்த ஞானத்தில் (மஃறிஃபா) மூழ்கி இருப்பதாக மனப்பால் குடிப்பது நமது இக்கூற்றுக்குத் தக்கச் சான்றாகும். இமாம் கஸ்ஸாலி போன்றோர் கஞ்சா, அபினை பயன்படுத்தினார்கள் என்று நாம் சொல்லவில்லை. அவ்வாறு யாரும் எண்ணிவிட வேண்டாம்.

போதைப் பொருள் உட்கொண்டு அடையும் மயக்க நிலையைப் போன்ற ஒரு நிலையை அவைகளை உபயோகிக்காமல், சில பயிற்சிகள் மூலம் அடைந்தார்கள் என்றே சொல்லுகிறோம். இதனைப் பின்னால் விரிவாக விளக்குவோம். ஆக ஹிஜ்ரி 488ல் தனது 38வது வயதில் கம்பளிப் போர்வை அணிந்து, காலில் செருப்பில்லாமல், மாற்று மதவாதிகளைப் போல் துறவறம் பூண்டு வீடும் நாடும் துறந்து காடு சென்றார் இமாம் கஸ்ஸாலி.

மாற்று மத தத்துவங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவற்றை மேற்கொண்டதன் விளைவாக அவற்றிற்கு அடிமையாகி இஸ்லாத்திற்கு முரணான துறவறத்தை இமாம் கஸ்ஸாலி மேற்கொண்டது இஸ்லாமிய உலகின் போக்கையே பயங்கரமாக மாற்றி விட்டது. அன்றைய காலகட்டத்தில் இஸ்லாமிய உலகம் அவரையே வழிகாட்டியாக நம்பி இருந்தது. இஸ்லாமிய மார்க்கத்தின் அதிகாரப்பூர்வமான இமாம் என முஸ்லிம்களால் கணிக் கப்பட்டார் என்ற விபரங்களை முன்பே பார்த்தோம். எனவே இமாம் கஸ்ஸாலிக்கு முன்பே மாற்று மத தத்துவங்களும், கலைகளும் முஸ்லிம்களிடையே ஊடுருவ ஆரம்பித்ததிலிருந்தே தக்லீதும், சூஃபிஸமும் (துறவறம்) இஸ்லாத்தில் நுழைந்திருந் தும் அவற்றிற்கு இஸ்லாமிய உலகின் ஆதரவோ, அங்கீகாரமோ சட்டப்பூர்வமாக கிடைக்கவில்லை.

அதற்கு வாய்ப்பு இல்லாமலிருந்தது. ஆனால், அந்த வாய்ப்பையும், அங்கீகாரத்தையும் இமாம் கஸ்ஸாலி துறவறத்தை மேற்கொண்டதன் மூலம் அரங்கேற்றி சட்டப்பூர்வமான அனுஷ்டானம் ஆக்கிவிட்டார். அவருக்குப் பின் சூஃபி இப்னு அரபி இஸ்லாத்தின் கோட்பாடாகவே சூஃபிஸத்தை பகிரங்கமாக செயல்படுத்தி, இறைவனும், அடியானும் இரண்டறக் கலப்பது சாத்தியமே என்ற இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணான அத்துவை தத்தை இஸ்லாத்தில் நுழைத்து விட்டார். இப்னு அரபியின் இந்தத் தகாத செயல்களுக்கு இமாம் கஸ்ஸாலியின் நூல்கள் குறிப்பாக இஹ்யா உலூமித்தீன் பெரிதும் ஊக்கமளித்தன. ஆக, இமாம் கஸ்ஸாலியும், சூஃபி இப்னு அரபியும் சேர்ந்து தக்லீதும், தஸவ்வுஃபும் இல்லாது இஸ்லாம் இல்லை என்ற தவறான விபரீதமான நம்பிக்கையை இஸ்லாமிய உலகில் ஊடுருவச் செய்து நிலைக்கச் செய்துவிட்டனர்.

அதாவது மனிதர்களால் உருவாக்கப்பட்ட மாற்று மதங்களின் கோட்பாடுகளான தக்லீது, பெரியார்களில் நம்பிக்கை கொண்டு அவர்களைக் கண்மூடிப் பின்பற்றல், தஸவ்வுஃப் துறவறம் ஆகிய இரண்டையும் இஸ்லாத்தில் நுழைவித்து இஸ்லாத்தையும் வெறும் மதம் என்ற நிலைக்குத் தள்ளி அதன் பரிசுத்த நிலைக்கு மாசும், களங்கமும் ஏற்படுத்தி விட்டனர். சென்று போனவர்களைப் பற்றிய சர்ச்சை நமக்கு அவசியமில்லை என்பதை “அவர்கள் சென்று போனவர்கள், அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே. அவர்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்” (அல்குர்ஆன் 2:134,141) என்ற வசனங்களில் அல்லாஹ் நமக்குத் தெளிவுபடுத்திவிட்டான்.

பிழைகளைப் பொறுத்து உயர் பதவிகளையும் நல்கப் போதுமானவன் வல்லவன் அல்லாஹ். நமது கவலையும், கவனமும் அதுவல்ல. ஆனால் இமாம் கஸ்ஸாலியின் கருத்துக்களால் குர் ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான நடைமுறைகளையும், போதனைகளையும் நாம் ஏற்று செயல்படுவதன் மூலம் நமக்கு வெற்றி கிடைக்குமா? நமக்கு அல்லாஹ்வின் பொருத்தம் கிடைக்குமா? என்பது தான் நாம் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய வி­யமாகும். குர்ஆன், ஹதீஃதில் இல்லாதவை, அவற்றிற்கு முரணானவை அனைத்தும் வழிகேடுகள். அவை நம்மை நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை அல்லாஹ்வின் இறுதித் தூதர் தெளிவாக நமக்கு எச்சரித்துச் சென்றுள்ளார்கள். எனவே எச்சரிக்கையாக நடந்து கொள்வது நமது கடமையாகும். குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரணான தக்லீதையும், தஸவ்வுஃபையும் விட்டுவிடுவதே அறிவுடைமையும், அவசியமும் ஆகும்.

முகல்லிதுகள் செய்தது என்ன?

ஆனால், மார்க்கத்தை வெறும் மதமாக்கி அதைப் பிழைப்பாகக் கொண்டு வாழ்பவர்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வருகிறார்கள். உலகம் அழியும் வரை இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களுக்குச் சாதகமான இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தத் தவறமாட்டார்கள் என்பதை சாதாரணமானவர்களும் அறிந்து கொள்ள முடியும். எனவே இமாம் கஸ்ஸாலியும், சூஃபி இப்னு அரபியும் சேர்ந்து உருவாக்கிவிட்ட வாய்ப்பைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். மார்க்கத்திற்கு முரணானவையாயினும் தங்களுக்கு உலகில் கொழுத்த ஆதாயத்தைத் தேடித்தரும் தக்லீதையும், தஸவ்வுஃபையும் இறுக்கப் பற்றிப் பிடித்துக் கொண்டார்கள்.

அந்த திட்டத்திற்கு இமாம் கஸ்ஸாலியால் புகழ் பெற்ற நிஜாமிய்யா மதரஸாவின் பெயராலேயே “ஸில்ஸிலயே நிஜாமிய்யா” என்ற பெயரைச் சூட்டி தக்லீதையும், தஸவ்வுஃபையும் தீனாக நிலைநாட்டி விட்டனர். அவற்றைக் காலங்காலமாக மக்களுக்குப் போதித்து மக்களை மடமையிலாழ்த்தி, சுய ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்று இந்த ஸில்ஸிலேயே நிஜாமிய்யா கல்வித் திட்டம் பரம்பரை பரம்பரையாக வழிவழியாகப் பின்பற்றப்பட்டு வருகின்றது. இன்று அதனைச் செயல்படுத் துகிறவர்களுக்கு ஒருக்கால் அதன் கெடுதிகள் தெரியாதிருக்கலாம்.

ஆனால் அதன் கெடுதிகள் குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களுடன் தெளிவாக எடுத்து விளக்கப்பட் டப் பின்பும், அவற்றைத் தெரிந்து கொண்டே வீண் பிடிவாதத்துடன், இதுகாலம் வரை வாழ்ந்த தலைவர்களெல்லாம், பெரியார்களெல்லாம் மடையர்களா? நரகவாதிகளா? என்ற முறையற்ற, தேவையற்ற வினாக்களை எழுப்பி அறிந்து கொண்டே அழிவைத் தேடுவதோடு, பொது மக்களையும் அழிவுறச் செய்வது தான் நமக்கு வேதனையைத் தருகிறது. (பார்க்க : 27:14, 2:146, 6:20)

இவர்களின் இந்த வினாக்கள் அழிவைத் தாங்களே தேடிக் கொண்டவர்களின் வினாக்களாகும். அல்லாஹ்வின் கோபத்திற்காளாகி நரகை தங்கள் இருப்பிடமாக்கிக் கொண்டவர்களின் வினாக்கள் இவை என்பதை அல்குர்ஆனின் 2:170, 33:66,67,68 ஆகிய வசனங்கள் தெள்ளத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றன.

அல்லாஹ் இறக்கி வைத்ததையே பின்பற்றுங்கள் என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம் என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? அல்குர்ஆன்:2:170.

நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில், “ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டுமே, இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே! (என்று கதறுவார்கள்).

எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் பெரியவர்களுக்கும், தலைவர்களுக்கும் வழிப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள். (என்றும் அவர்கள் கதறுவார்கள்)

எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையைத் தருவாயாக, அவர்களைப் பெருஞ் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக! (எனக் கதறுவர்) அல்குர்ஆன் : 33:66,67,68)

இப்படிப்பட்ட வினாக்களை எழுப்பிய அபூலஹப் நபி(ஸல்) அவர்களின் பெரிய தகப்பனாராக இருந்தும் எவ்வளவு கடுமையாக அல்லாஹ்வால் சபிக்கப்பட்டான் என்பதற்கு குர்ஆனின் 111-ம் அத்தியாயம் தக்க சான்றாகும்.

அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும், அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு பயன்பட வில்லை, விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான், விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ, அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங்கயிறு தான்(அதனால் அவளும் அழிவாள்) அல்குர்ஆன்: 111:1-5

தவறுகளை உணர்ந்ததும் திருந்துபவர்களே மனிதர்கள் :

மனிதன் தவறுகள் செய்யலாம், ஆனால் அவை தவறுகள் என உரிய ஆதாரங்களுடன் நிலைநாட்டப்பட்டால், அதனை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொள்பவனே மனிதனாவான், தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டப் பின்பும் திருந்தாதவன் மனிதனாக இருக்க முடியாது. அவன் மிருகத்திற்குச் சமம். இல்லை, மிருகங்களை விட இழிவான நிலையிலுள்ளவனாவான்.

நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள் ளோம். அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெறமாட்டார்கள், அவர்களுக்குக் கண்கள் உண்டு, ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை, அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்க மாட்டார்கள், இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள், இல்லை! அவற்றை விடவும் கேடுகெட்டவர்கள், இவர்கள் தாம் (நம் வசனங்களை) அலட்சியம் செய்கிறவர்களாவார்கள். அல்குர்ஆன்:7:179

சுமார் 1000 வருடங்களாக நடைமுறையில் இருக்கும் தக்லீது, தஸவ்வுஃப் அடிப்படையிலான இமாம் கஸ்ஸாலியின் போதனைகளில் பெரும் நம் பிக்கை கொண்டு, அவற்றை அப்படியய உருப்போட்டு, அவற்றில் திளைத்து அதன் காரணமாக வீட்டைத் துறந்து இமாம் கஸ்ஸாலியைப் போல் நாடோடியாகச் சென்று தனிமையில் புலன்களையடக்கி தியானங்களில் மூழ்கினார் ஒருவர். அதன் பலனாக அவருக்கு சில காட்சிகளும், தோற்றங்களும் ஏற்படத்தான் செய்தன. இறைவன் தன்னுடன் பேசுவது போன்ற பிரமிப்பில் ஆழ்ந்தார். சுமார் 21 வருடங்களாக இப்படிப்பட்ட நடைமுறைகளில் நம்பிக்கை வைத்திருந்தவர், அவை குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணானவை என்பதை அறிந்தவுடன் அவற்றை விட்டு விலகி விட்டார்.

முன்னோர்கள் சென்ற வழியாயிற்றே என்று அவர் தயக்கம் காட்டவில்லை. நீண்ட காலமாக ஒன்றைச் சரிகண்டு செய்துவிட்டு இப்போது அது தவறான வழி என்று சொன்னால் மக்கள் தன்னைப் பார்த்து சிரிப்பார்களே! ஏளனம் பேசுவார்களே! என்ற வீண் வரட்டு கெளரவத்திற்கு ஆளாகி, மனம் ஒப்புக்கொண்ட உண்மைகளை மக்களுக்குச் சொல்லத் தயங்கவில்லை. இப்படிப்பட்ட ஒருவரை நாம் நன்கு அறிவோம். இதுபோன்ற மனோ நிலை முஸ்லிம்கள் அனைவருக்கும் ஏற்பட்டு விட்டால் அதுவே போதும். அதாவது தங்கள் மனம் உண்மை என்று ஒப்புக் கொண்டதை வரட்டு கெளரவம் பார்க்காமல் பகிரங்கமாக மக்களுக்கு அறிவித்தால் அதுவே இஸ்லாமிய மறுமலர்ச்சிக்குப் பெரிதும் உதவும். இப்படிப் பல சகோதரர்கள் உண்மையை உணர்ந்து தரீக்காக்களை விட்டு விலகி வருகின்றனர். அவர்கள் தரீக்கா பயிற்சிகள் மூலம் சில காட்சி களையும், தோற்றங்களையும் தங்கள் அனுபவத்தி லேயே கண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாத்தின் பெயரால் இருக்கும் நடைமுறைகள், நமக்கு போதிக்கப்பட்ட கல்வி முறை இவற்றைக் கொண்டு உண்மைக்குப் புறம்பானவற்றை நம்பிக் கொண்டிருந்தாலும், அவை தவறானவை, நஷ்டத்தைத் தருபவை என்பதற்கு முஸ்லிம்கள் அனைவருமே ஒப்புக் கொள்ளும் குர்ஆனிலிருந்தும், நபி(ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான நடைமுறை களிலிருந்தும் ஆதாரங்கள் தரப்படும்போது, அவை தெள்ளத் தெளிவாக இருக்கும் நிலையில், வீண் வரட்டு கெளரவம் காரணமாக அவற்றை மறுப்பவன் உண்மையில் குர்ஆனையும், ஹதீஃதையும் மறுக்கிறான். எனவே, அவற்றை மறுக்கிறவன் குர்ஆன் 2:39 வசனப்படி நரகம் புகுவான்.

அந்நரகத்தில் என்றென்றும் தங்கி விடுவான். அதிலிருந்து விடுதலையே இல்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் விளங்கிச் செயல்படக் கடமைப்பட்டுள்ளார்கள். தக்லீதும், தஸவ்வுஃபும் குர்ஆன், ஹதீஃதுக்கு நேர்முரணானவை என்பதற்கு எண்ணற்ற குர்ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஃத்களையும் இதுவரை அந்நஜாத்தில் இடம் பெறச் செய்துள்ளோம். சிந்திப்பவர்கள் அவற்றைப் பார்த்துப் படிப்பினை பெற்றுக்கொள்வார்கள். தக்லீதையும், தஸவ்வுஃபையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள “ஸில்ஸிலயே நிஜாமிய்யா” கல்வித் திட்டத்தைத்த தூக்கி எறிந்து விடுவார்கள்.

மெய்ஞானம் என்று இவர்கள் கூறுவது ஒரு போதையே : ­

ரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃறிஃபத் என்று சூஃபிகள் மக்களை ஏமாற்றி வருவது ஒரு போதை நிலையே அன்றி உணமையான இறைஞானமோ, மெய்யறிவோ இல்லை என்பதை விரிவாக விவரிப்பதாகக் குறிப்பிட்டிருந்தோம். இந்த முறையில் மெய்யறிவைப் பெற்ற பல நாதாக்கள் வாழ்ந்திருக் கிறார்கள் என்று அவர்களின் பெயரால் பல ஆச்சரிய மான கதைகளைச் சொல்வார்கள். பல அதிசயங்களைச் செய்து காட்டியதாகவும், மறைவான வி­யங்களை அறிந்து சொன்னதாகவும், பிறருடைய உள்ளங்களில் ஏற்படும் எண்ணங்களை அறிந்து சொன்னதாகவும், இன்னும் இவை போல் பல நம்பமுடியாத சம்பவங்களைச் சர்வசாதாரணமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஏடுகளில் எழுதி, பக்கங்களை நிரப்பி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் முன்னால் நடந்ததாகச் சொல்லுவார்களேயல்லாமல், இப்போது இந்தப் பயிற்சிகள் மூலம் இப்படிப்பட்ட ஆச்சரியகரமான செயல்களைச் செய்து காட்டுபவர்களை நேரடியாகக் காட்ட முடியாது. அப்படியே சிறிய சம்பவங்களைச் செய்து காட்டினாலும் அவை கண் கட்டி வித்தை போன்ற கலைகளைச் சார்ந்தவை யாக இருக்குமேயல்லாமல் மெஞ்ஞான நிலையில் ஏற்படும் கராமத்தாக இருக்காது. (காரணம், நபி (ஸல்) அவர்களை அடியயாற்றிப் பின்பற்றி நடப்ப வர்கள் இப்படிப்பட்ட கீழ்த்தரமான காரியங்களில் ஈடுபடமாட்டார்கள்)

ஆயினும், அன்று போல், இன்றும் இந்த தரீக்கா முறைகளைச் செயல்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்படியானால் சென்ற நூற்றாண்டில் செய்து காட்டிய அதிசயங்களை இந்த நூற்றாண்டில் ஏன் செய்ய முடியவில்லை என்பதே கேள்வியாகும். இதில் அதிசயம் என்ன தெரியுமா? இந்த நூற்றாண்டில் இப்படிப்பட்ட அதிசயங்களை நேரடியாகச் செய்து காட்டத் தவறியவர்கள் அடுத்த நூற்றாண்டில், இந்த நூற்றாண்டில் வாழ்ந்த சிலரைப் பற்றி இப்படி கதைகளைக் கட்டிச் சொல்லத் தவறமாட்டார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? இவர்கள் கூறும் இறைஞானம் (மஃறிபத்) மெய்நிலை கண்ட நிலை இவை அனைத்தும் இவர்களின் வாயிலும் இவர்களால் எழுதப்பட்ட ஏடுகளிலும் இருக்கின் றனவே அல்லாமல் உண்மையானவை இல்லை.

இவர்கள் மாபெரும் இறைநேசச் செல்வர்களாகவும், இறை ஞானம் மிக்கவர்களாகவும், மெய்நிலை கண்ட ஞானிகளாகவும், எதார்த்த நிலைகளை மிகச் சரியாக உணர்ந்தவர்களாகவும் நம்பியிருக்கும் இரண்டு பெரியார்கள், இந்த தக்லீதையும், தஸவ்வுஃபையும் இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைத்து, சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்தவர்கள் இமாம் கஸ்ஸாலி, சூஃபி இப்னு அரபி, இவர்கள் இருவரும் பெற்றிருந்தது உண்மையான இறைஞானமோ, மெய்நிலைகளோ இல்லை என்பதே உண்மையாகும் என்பதை ஆதாரங்களுடன் தருகிறோம்.

இமாம் கஸ்ஸாலி தனது 38ம் வயதில் துறவியாக நாட்டைவிட்டு வெளியேறி காடுகளில் அலைந்து கொண்டும், கடும் தவம் செய்துகொண்டும் இருந்ததற்குப் பிறகு, அவர்களது பாஷையில் சொல்வதானால் ­ரீஅத்-தரீக்கத்-ஹகீகத்-மஃறிஃபத் என்ற நான்கு படித்தரங்களிலும் முறையாக பயிற்சி பெற்று நடைமுறைப்படுத்தி, அவை மூலம் மெய்யறிவை பெற்று ஒவ்வொரு பொருளின் ஹகீகத்தை எதார்த்த நிலையை அறிந்த நிலையிலேயே தனது பெயர் பெற்ற “இஹ்யா உலூமித்தீன்” என்ற நூலை அரபி மொழியில் எழுதினார். அதற்குப்பிறகு சில ஆண்டுகள் கழித்து அதன் சுருக்கத்தை “கீமியா ஸஆதத்” என்ற பெயரில் தனது தாய் பாஷையான பார்சியில் எழுதினார்.

அப்படிப்பட்ட மெய்ஞான நிலையில் எழுதப்பட்ட அந்த நூல்கள் எப்படி இருக்க வேண்டும்? உண்மைக்குப் புறம்பான, எதார்த்தத்திற்கு முரணான ஒரு சம்பவமாவது இடம் பெற்றிருக்க முடியுமா? அவர்தான் ஒவ்வொன்றையுடையவும் ஹகீகத்தை எதார்த்த நிலையை அறிந்தவராயிற்றே. ஆனால் அந்த நூல்களில் உண்மைக்குப் புறம் பானவை மட்டுமல்ல, பலவீனமான ஹதீஃத்களும் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களும், அடிப்படை யேயில்லாத ஹதீஃத்களும் தாராளமாக இடம் பெற்றுள்ளன. இது ஒரு சாதாரண விஷயமல்ல. நான் சொல்லாததை, “நான் சொன்னதாக எவன் பொய் சொல்லுகின்றானோ அவன் ஒதுங்குமிடம் நரகமாகும்” என்ற கருத்தில் பல நபி தோழர்களால் அறிவிக்கப்பட்டு பெரும்பாலும் எல்லா ஹதீஃத் நூலகளிலும் காணப்படும் மிகமிக ஆதாரப்பூர்வமான ஹதீஃத்படி எவ்வளவு கடினமான ஒரு காரியம், மெய்நிலை கண்ட நிலையில், ஒருவர் இப்படிப்பட்ட பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத் களை எல்லாம் தனது நூலில் எடுத்து எழுதி இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்.

அதுவும் ஆரம்பத்திலேயே இஸ்லாமிய நேர்வழியை விட்டு விலகிச் சென்ற பிரிவினைவாதிகளான Uஆக்கள் இட்டுக்கட்டியவற்றை எல்லாம் தனது நூலில் எடுத்து எழுதி இருக்க முடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். இமாம் கஸ்ஸாலியின் இஹ்யா உலுமித் தீனில் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் ஒத்த பல உன்னத கருத்துக்கள் இருக்கின்றன என்பதையும் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள். அதே சமயம் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் நேர் முரணான பல கருத்துக்களும் இருக்கின்றன. பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களும், அடிப்படையற்ற ஹதீஃத்களும் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. உதாரணமாக சில பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்கள்.

இஹ்யாவில் அடிப்படையேயில்லாத ஹதீஃத்கள்:

ஒருமுறை இல்முடைய மஜ்லிஸுக்கு ஆஜரா வது 1000 ரகாஅத்து தொழுவதைப் பார்க்கினும் மேலானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள் ளார்கள்.

உலமாக்கள் அல்லாஹ்வின் அடியார்களுக்கு ரசூல்மார்களின் (அமீனாக்கள்) நம்பிக்கையாளர் களாவர் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இவ்விரு அறிவிப்புகளும் இஹ்யாவில் இல்முடைய பாடத்தில் இடம் பெற்றுள்லமவ்ழூஃவான, இட்டுக்கட்டப்பட்டவையாகும்.

உலகத்தைத் துறந்து, மெளன நிலையை அடைந் துள்ள ஒருவரை நீங்கள் கண்ணுற்றால் அவரை நீங்கள் அணுகுங்கள். அவர் “”ஹிக்மத்” ஞானத்தை போதிப்பார் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார் கள். அறிவிப்பவர் : இப்னு கல்லாத்(ரழி), நூல்: இப்னு மாஜ்ஜா.

ஒரு கூட்டத்தாரிடையே ஒரு ஷைகானவர் ஒரு சமூகத்தாரிடையே உள்ள நபியைப் போன்றவரா வார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

இவ்விரு அறிவிப்புகளும் லயீஃபானவை-பலகீனமானவை. இவையும் அதே இல்முடைய பாடத்தில் இடம் பெற்றுள்ளன.

ஒருமுறை நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் சூரியன் சாய்ந்து விட்டதா? என்று கேட்டதற்கு அவர்கள் “இல்லை, ஆம்” என்றார்கள். அதற்கு என்ன “இல்லை, ஆம்” என்று கூறுகிறீர்களே? என்றார்கள். அதற்கு ஜிப்ரீல்(அலை) அவர்கள் “”நான் இல்லை என்று கூறிய நேரத்திலிருந்து “ஆம்” என்று கூறுவதற்குள் சூரியன் 500 வருடங்களின் தொலைதூரம் நகர்ந்துவிட்டது என்று கூறினார்கள். இவ்வறிவிப்பு இஹ்யாவில் இல்முடைய பாடத்தில் இடம் பெற்றுள்ளது. இது அடிப்படையே இல்லாததொன்றாகும்.

ஹிஜ்ரீ 725க்கும் 806க்கும் இடையே வாழ்ந்து வநத ஹாபிழ் இராக்கி(ரஹ்) அவர்கள் இஹ்யா உலூமித்தீன் எனும் இமாம் கஸ்ஸாலி அவர்கள் எழுதியுள்ள நூலுக்கு தாம் எழுதியுள்ள அடிக்குறிப் பில் மேற்காணும் “மவ்ழூஃ, வயீஃப் அடிப்படை அற்றவை” எனும் விபரங்களைத் தந்துள்ளார்கள். மேலே நாம் குறிப்பிட்டுள்ள ஹதீஃத்கள் மாதிரிக் காகக் கொடுக்கப்பட்ட சில ஹதீஃத்களாகும். உண்மை என்னவென்றால் “இஹ்யாவின்” பக்கங்களைப் புரட்டுகிறவர்கள் அதில் பக்கத்திற்குப் பக்கம் இப்படிப்பட்ட ஹதீஃத்கள் இடம் பெற்றுள்ளதைப் பார்வையிட முடியும்.

உலகிலுள்ள இஸ்லாமிய நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, இந்த “இஹ்யா உலூமித்தீன்’ மட்டும் பாதுகாக்கப்பட்டு விட்டால், மீண்டும் இஸ் லாத்தை உயிர்ப்பித்து விடலாம் என்று முகல்லிது மவ்லவிகளால் ஏற்றிப் போற்றப்படும் இஹ்யா உலூமித்தீன், தீனுடைய இல்முகளை உயிர்ப்பிக்கும் நூல் என்ற நூலின் உண்மை நிலை இதுதான். பக்கத்திற்குப் பக்கம் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட அடிப்படையே இல்லாத ஹதீஃத்கள் தாராள மாக இடம் பெற்றாலும், குர்ஆனுக்கும், ஹதீஃதுக் கும் ஒத்த உன்னத கருத்துக்களும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன என்பதையும் அறிஞர்கள் ஒப்புக் கொள்ளவே செய்கிறார்கள்.

இவற்றையும் இன்றைய அறிஞர்கள் சுட்டிக் காட்டவே செய்கிறார்கள். இஹ்யாவில் காணப்படும் சில உயர்ந்த கருத்துக்கள் காரணமாக அந்த நூலை பார்வை யிட்டு அதிலுள்ள பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களை அடிப்படையற்ற ஹதீஃத்களை அடிக்குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். இவற்றைப் பரிசீலனை செய்கிறவர்கள் எப்படி இன்றைய மவ்லவிகள் தாங்கள் கேள்விப்பட்டதை எல்லாம் ஹதீஃத்கள் என்று சொல்லி வருகிறார்களோ அதேபோல் இமாம் கஸ்ஸாலியும் தான் கேள்விப்பட்டதை எல்லாம் ஹதீஃத்கள் என்று எழுதியுள்ளார் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். பொதுவாக தனது நூலில் ஹதீஃதில் வந்திருக் கிறது என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறாரே அல்லாமல் அறிவிப்பாளர், அது காணப்படும் ஆதாரப்பூர்வமான நூல் எதனையும் அவர் குறிப்பிடவில்லை.

நான்கு இமாம்களின் காலத்தில் ஹதீஃத்கள் அனைத்தும் முறையாக பரிசீலனைச் செய்யப்பட்டு, ராவிகளின் வரிசை அவர்களின் தராதரம் இவை அலசப்பட்டு தரம் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. இந்த நிலையில் அவர்கள் சில பலவீனமான ஹதீஃத்களை கையாண்டதில் யாரும் குறை சொல்ல முடியாது. அதுவும் முஸ்லிம்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டிய தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற அத்தியாவசிய காரியங்களின் நிர்ப்பந்தம் காரணமாக அவ்வாறு செய்துள்ளனர்.

ஆயினும் இப்படிப்பட்ட நிர்பந்த நிலையிலும் அவர்களில் யாரும் அறிந்து கொண்டே ஷீஆ பிரிவினரின் ஹதீஃத்களை எடுத்துக் கொண்டதே இல்லை. ஷீஆக்கள் அறிவிக்கும் ஹதீஃத்கள் என்றால் தூக்கி எறிந்து விடுவார்கள். நான்கு இமாம்கள் மத்ஹபுகள் தோன்றுவதற்குக் காரணமாகவும் இல்லை, தங்களை தக்லீது செய்வதை திண்ணமாக மறுத்துள்ளார்கள் என்பதற்கு தெளிவான சான்றுகள் கிடைக்கின்றன. பின்னால் வந்தவர்கள் தவறாக அவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி மத்ஹபுகள் அமைத்துக் கொண்டார்கள் என்பதே உண்மையாகும். எனவே நான்கு இமாம்களையும் மத்ஹபு டைய விஷயத்தில் யாரும் குற்றப்படுத்த முடியாது.

ஆனால் ஐந்தாவது சிறந்த இமாமாகக் கருதப்படும் இமாம் கஸ்ஸாலியின் நிலை அப்படி அல்ல. அவரது காலமான ஹிஜ்ரி 450-505ல் பெரும்பாலான ஹதீஃத்கள் அறிவிப்பாளர் வரிசை, அவர்களின் தராதரம் யாவுமே பரிசீலனைச் செய்யப்பட்டு, முறையாகப் பதிவு செய்யப்பட்டு, பாதுகாக்கப்பட்டு விட்டன. முயற்சிப்பவர்களால் ஹதீஃத்களின் தராதரங்களை அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் இமாம் கஸ்ஸாலி இஸ்லாத்திற்குச் சம்பந்தமில்லாத அந்நிதய தத்துவங்களையும், கலைகளையும் கற்பதில் ஆர்வம் காட்டிய அளவிற்கு ஹதீஃத்களின் உண்மை நிலைகளை அறியும் முயற்சியல் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. நான்கு இமாம்களால் நிராகரிக்கப்பட்ட Uஆக்களின் கற்பனை ஹதீஃத்களை இவர் எடுத்துத் தனது நூலில் பதிவு செய்திருக்கிறார் எனில் அவரது நிலை எப்படி இருந்திருக்கும்? என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். அவர் இஹ்யாவில் எடுத்து எழுதிய Uஆக்களின் இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களைத் தான் “ஸில்ஸிலயே நிஜாமிய்யா” கல்வித் திட்டப்படிக் கற்று ஸனது பெற்று வரும் மவ்லவிகள் இன்று மேடைக்கு மேடை குத்பா பிரசங்கங்கள் உட்பட தாராளமாக சர்வசாதாரணமாக எடுத்துக் கையாண்டு மக்களை வழிகெடுக்கிறார்கள்.

முயற்சி செய்தால் ஹதீஃத்களை அறிந்து கொள்ள முடியும்:

நடுத்தர அறிவுள்ள ஒரு முஸ்லிம் சுமார் 5 ஆண்டுகள் முறையாக ஹதீஃத் நூல்களை ஆராய் வாரானால் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களை எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். அவரிடம் அடிப்படையே இல்லாத ஒன்றை ஹதீஃத் என்று கூறி யாரும் ஏமாற்ற முடியாது.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேல் இவர் கள் கூறும் தஸவ்வுஃப் முறையில் ­ரீஅத்-தரீக்கத்- ஹகீகத்-மஃறிஃபத் என்று பயிற்சி பெற்று மெஞ் ஞானத்தை-எதார்த்த நிலைகளைக் கண்டு கொண்ட இமாம் கஸ்ஸாலிக்கு பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட அடிப்படையே இல்லாத ஹதீஃத்களின் எதார்த்த நிலையை அறிந்து கொள்ள முடிய வில்லை என்றால் அதன் பொருள் என்ன? அந்தப் பயிற்சிகளின் மூலம் அவர் பெற்றது ஒரு போதை நிலையேயன்றி உண்மையான மெஞ்ஞானம் இல்லை என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் புரிகிறதல்லவா?

அதேபோல் சூஃபி இப்னு அரபி இமாம் கஸ்ஸாலியின் நூல்களிலுள்ள இந்த குறைபாடுகளை அறியாமல் அவற்றை அப்படியே வேதவாக்காக எடுத்துச் செயல்படுத்தியுள்ளார். அவற்றை அடிப்படையாக வைத்து குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான கருத்துக்களில் அவரும் நூல்கள் எழுதியுள்ளார் என்றால் அதன் பொருள் என்ன? அவரும் எதார்த்த நிலையை அறியாமல் போதை நிலையில்இருந்துள்ளார் என்பது புரிகிறதல்லவா? அதேபோல் அன்றிலிருந்து ­ரீஅத்-தரீக்கத்-ஹகீகத்-மஃறிஃபத் என்று பயிற்சிகள் செய்து மெஞ்ஞானத்தில் உச்சத்தில் இருப்பதாக நம்புகிறவர்களில் யாராவது இமாம் கஸ்ஸாலியின் நூல்களில் பொய்யுரைகள் எல்லாம் ஹதீஃத்களாகப் பதியப்பட்டுள்ளன என்ற எதார்த்த நிலையை தங்கள் மெஞ்ஞானம் கொண்டு அறிந்திருக்கிறார்களா? என்றால் இல்லை என்ற பதிலையே பெறமுடியும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? அவர்கள் இப்பயிற்சிகள் மூலம் மெஞ்ஞானத்தை அடையவில்லை. ஒரு போதை நிலையை அடைந்து தடுமாறுகின்றனர் என்பதே உண்மையாகும். இவர்கள் கூறும் இப்பயிற்சிகளில் ஈடுபடாமல் முறையாக ஹதீஃத்களை ஆராயகிறவர்கள் மட்டுமே “இஹ்யாவில” பொய் யுரைகளெல்லாம் ஹதீஃத்கள் என்று இடம் பெற்றி ருக்கும் எதார்த்த நிலையை அறிந்து தெளிவுபடுத்து கிறார்கள். இவ்வளவு தெளிவாக விளக்கியும் புரியா தவர்கள் புரிந்து கொள்ள ஒரு பயிற்சியைத் தருகி றோம்.

சந்தேக நிவர்த்திக்காக பரீட்சித்துப் பாருங்கள்:

இறைவனைப் பற்றியோ, மார்க்கத்தைப் பற்றியோ, மறுமையைபற்றியோ சிறிதும் எண்ணம் இல்லாமல் தனிமையான ஒரு இடத்தில் அமர்ந்து ஒரு கல்லை நினைத்துக் கொண்டு தங்கள் புலன்களை அடக்கி மனதை ஒரு நிலைப்படுத்தி கல் கல் கல் என்றோ அல்லது அரபியில் ஹஜர் ஹஜர் ஹஜர் என்றோ இலட்சக்கணக்கில் ஜபித்துக் கொண்டிருந்து பார்க்கட்டும். அவர்கள் மார்க்கத்தின் பெயரால் பயிற்சி செய்து அடையும் இன்பத்தையும், மயக்கத்தையும் இவர்களும் அடைய முடியும். யார் வேண்டுமானாலும் இதனைப் பரீட்சித்துப் பார்க்கலாம். அதன் பின்பாவது இவர்கள் கூறுவது இறை ஞானத்தைப் பெறும் உயர்ந்த முறை அல்ல. மனிதன் மதி மயங்கி நிலைகுலைந்து ஒரு போதை நிலையை அடையும் பயிற்சி முறையே என்பதை உணர்ந்து கொள்ளட்டும்.

இமாம் கஸ்ஸாலியின் நூல்களே சான்று :

ஆரம்ப காலத்தில் ஹதீஃத்களை முறையாக இமாம் கஸ்ஸாலி பயிலவில்லை. அவரது இறுதி காலத்தில் தான் அந்த முயற்சிகளில் ஈடுபட்டார். அதற்குள் மரணத்தை தழுவ நேரிட்டு விட்டது என்று அவரது சரித்திரக் குறிப்புகளில் காணப்படுகிறது. உண்மை நிலையை அல்லாஹ் அறிவான். ஆனால் அவரது நூல்களில் குர்ஆனுக்கும், ஹதீஃதுக் கும் முரணான பல சம்பவங்களும், பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களும்,அடிப்படை யற்ற ஹதீஃத்களும் இடம் பெற்றுள்ளன. அவற்றில் நம்பிக்கை கொண்டு செயல்படுகிறவர்கள் நேர்வழி தவறிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்று உறுதியாகச் சொல்லலாம். மிகத் தெளிவாகச் சொல்லுவதாக இருந்தால் அசலே இல்லாதவற்றை எல்லாம் இமாம் கஸ்ஸாலி ஹதீஃத் என்று எடுத்து எழுதியுள்லார்.

இருட்டில் காட்டில் விறகு பொறுக்கியவர் கதைதான். பாம்பையும் விறகு என்று கையால் பிடிக்க நேரிடும். அதே நிலைதான் இமாம் கஸ்ஸாலிக்கு ஏற்பட்டுள்ளது என்று உறுதிபடச் சொல்ல முடியும். இமிட்டேன் வைரத்தை ஒரிஜினல் வைரம் என நம்பி ஏமாறுகிறவர்களைத் தேர்ந்த அறிவுடையவர்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். இந்த நிலையில் கூழாங்கல்லை (அடிப்படையே இல்லாத ஹதீஃத்களை) ஒரிஜினல் வைரம் என்று நம்பிச் செயல்பட்டவரை மெய் நிலை கண்ட ஞானி-எதார்த்த நிலைகளை அறிந்து கொண்டவர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? என்று சிந்தித்துப் பாருங்கள். நமது கூற்றுக்கு அவரது நூல்களே போதிய சான்றுகளாக இருக்கின்றன. அன்று நேர்வழியில் இருந்த அறிஞர்களால் இமாம் கஸ்ஸாலியின் நூல்கள் கடுமையான கண்டனத்திற்கு ஆளாகின. சில இடங்களில் அவை நெருப்புக் கிரையாக்கப் பட்டன. ஆயினும், நேர்வழி பிறழ்ந்து செல்பவர்களுக்கே மக்களின் ஆதரவு எளிதாகவும், அதிகமாகவும் கிடைக்கும். அந்த அடிப்படையில் இமாம் கஸ்ஸாலியின் நூல்கள் இஸ்லாமிய உலகில் உறுதியானதொரு இடத்தைப் பெற்றுக் கொண்டன.

இமாம் கஸ்ஸாலியை அளவு கடந்து நேசித்தோம் :

இவ்வாறு நாம் எழுதியுள்ளதைப் பார்க்கும் இமாம் கஸ்ஸாலியின் அபிமானிகள் நம்மீது அளவு கடந்து ஆத்திரப்படுவார்கள். ஒருகாலத்தில் அவர் களை விட அதிகமாக இமாம் கஸ்ஸாலி மீது பற்றும், பாசமும் வைத்திருந்தோம் என்பதைச் சொல்லிக் கொள்கிறோம். அவரது நூல்கள் தமிழில் வெளி வந்தவை அனைத்தையும் பெரும் விருப்பமுடன் படித்தோம். அவற்றில் நம்பிக்கையும் வைத்திருந் தோம். 1981ல் ஹஜ்ஜுக்குச் செல்லும்போது ஹஜ் ஜின் செயல்முறைகள் எடுத்து எழுதப்பட்ட கீமியா ஸஆதத் பாகத்தைக் கூடவே எடுத்துச் சென்றோம். ஜித்தா ஏர்போர்ட்டில் அது என்ன நூல் என்று கேட்டார்கள். கீமியா ஸஆதத் என்று பெருமையுடன் சொன்னோம். உடனே அந்த அதிகாரி அந்த நூலை தூக்கி எறிந்தார். அது ஒரு மூலையில் போய் விழுந் தது. அப்போது எமது மனம் பதபதைத்து வேதனைப் பட்டது. பின்னரே உண்மை நமக்குப் புலப்பட்டது.

குர்ஆன், ஹதீஃதைப் பார்க்கும்போது, அவரது நூல்களில் அவற்றிற்கு நேர்முரணானவை நிறைந்து காணப்படும்போது நாம் என்ன செய்வது? அல்லாஹ்வின் மீதுள்ள முஹப்பத்தை விட அல்லாஹ்வின் ரசூலின் மீதுள்ள முஹப்பத்தை விட இமாம் கஸ்ஸாலி மீது அதிக முஹப்பத்து வைக்கச் சொல்லுகிறார்களா? அப்படிச் செய்தால் அவனை அல்லாஹ் எங்கே அனுப்புவான்? நேராக நரகம் புக நேரிடும் என்று அறிந்து கொண்ட பின்பும் அப்படி முரட்டு முஹப்பத்து வைக்க முடியுமா? விஷத்தை விஷம் என்று நன்கு தெரிந்து கொண்டே குடிப்பவர்கள் நம்மில் இருக்கிறார்களா? அப்படிப்பட்ட அறிவீனமான செயலே குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான இமாம் கஸ்ஸாலியின் போதனைகளைப் பின்பற்றுவதாகும். இந்த விளக்கமே எம்மை அதை விட்டும் விலகச் செய்தது.

அரபி மதரஸாக்களில் பாடும் கவி:

இமாம் கஸ்ஸாலியின் போதனைப்படியே தக்லீதையும், தஸவ்வுஃபையும் ஆதரித்து இன்றைய நம் நாட்டு அரபி மதரஸாக்கள் “”ஸில்ஸிலயே நிஜா மிய்யா” கல்வித் திட்டத்தின்படி நடந்து வருகின்றன. சில மதரஸாக்களில் தினசரி ஓதப்படும்.

நவ்விர் இலாஹஸ்ஸமா கல்பல் கரீபி கமா,
நவ்வர்த்த கல்ப இமாமின்னாஸி கஸ்ஸாலி.

என்று ஆரம்பிக்கும் கவிகள் நமக்கு இதை ஊர்ஜிதம் செய்கின்றன. அதாவது இமாம் கஸ்ஸாலிக்குக் கொடுத்த கல்வி அறிவையும், விளக்கத்தையும் தங்களுக்கும் கொடுக்கும்படி துஆ செய்து தினசரி கவி பாடுகிறார்கள். அல்லாஹ்வோ “”ரப்பி ஸித்னீ இல்மா” இறைவா எனக்கு அறிவை அதிகப்படுத்து வாயாக! என்று கேட்கும்படி அழகாகக் கற்றுத் தருகிறான். துஆ கேட்கும் வி­யத்தில் நபி(ஸல்) அவர்களின் அறிவுரை கீழ்வருமாறு அமைந்துள்ளது.

ஒருமுறை அப்துல்லாஹ்பின் முகஃப்பல்(ரழி) அவர்கள், தமது மகன் “யா அல்லாஹ்! நான் சுவர்க் கத்தில் நுழைந்தால், உன்னிடம் சுவர்க்கத்தின் வலப் புறத்தில் வெள்ளை மாளிகை ஒன்றை வேண்டுகிறேன்’ என்று பிரார்த்தித்துக் கொண்டிருப்பதைக் கேட்டார்கள். உடனே “எனது மகனே! நீ அல்லாஹ் விடம் பொதுவாக சுவர்க்கத்தைத் தரும்படி கேட்பதோடு, நரகத்தை விட்டும் பாதுகாப்புச் செய்யும் படியும் பிரார்த்தனை செய்வீராக! ஏனெனில் துஆ கேட்பதிலும், ஒளு செய்வதிலும் அத்து மீறி நடக்கும் ஒரு கூட்டம் வருவார்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ நுஆமா(ரழி), நூல்கள்: இப்னு மாஜ்ஜா, அபூதாவூத்.

இந்த குர்ஆன் வசனத்தையும், ஹதீஃதையும் அறிபவர்கள் இப்படி துஆ கேட்பது எவ்வளவு தவறானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். மேலும், இமாம் கஸ்ஸாலி பெற்ற அறிவு அல்லாஹ்வின் அங்கீகாரத்தைப் பெற்றதா? என்பதை இவர்கள் அறியமாட்டார்கள். இந்த நிலையில் அவர்கள் இவ்வாறு ஏன் துஆ கேட்கிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஆக, அடிப்படையே இல்லாத ஒரு கல்வித் திட்டத்தை அமைத்துக்கொண்டு குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணாகச் செயல்படு கிறார்கள் என்பது தெரிகிறதல்லவா? மேலும் பல விபரங்களை “இன்றைய அரபி மதரஸாக்கள் ஓர் ஆய்வு” என்ற கட்டுரையில் அடுத்து விரிவாகப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்.

முடிவுரை :

“ஸில்ஸிலயே நிஜாமிய்யா” குர்ஆன், ஹதீஃதுக்கு நேர்முரணான ஒரு கல்வித் திட்டமாகும். அதை விட்டு விடுபடுவதே அறிவுடைமையாகும். அல்லாஹ் அருள்புரிவானாக!

Previous post:

Next post: