குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

in 2018 ஜூலை,குர்ஆனை விளங்கிக் கொள்பவர் யார்?

ஆய்வுத் தொடர் – 6

அபூ அப்தில்லாஹ்

ஜுன் தொடர்ச்சி…..
அல்லாஹ்வும் அவ்விருவரையும் வெகு அற்புதமாகக் காப்பாற்றி வளர்த்தது மட்டு மல்லாமல், மனித சஞ்சாரமே அற்ற அந்தப் பாலைவனத்தை ஒரு பெரும் நகரமாக மாற்றி அமைத்து விட்டான். உலகில் எந்த மூலைமுடுக்கில் உற்பத்தியாகக் கூடிய உணவு வகையாக இருந்தாலும் அவற்றின் புத்தம் புதிய நிலை (ய்reவிஜுஐeவிவி) மாறாமல் இன்று அங்கு கிடைப்பது ஆச்சரியம் இல்லையா? இந்தக் கடுமையான சோதனையில் இப்றாஹீம் (அலை) அவர்கள் வெற்றி பெற்றபின் சிறிது காலம் கழித்து இஸ்மாயீல் (அலை) அவர்களின் துள்ளித்திரியும் பருவத்தில் தனது செல்வ மகனை தன் கையா லேயே அறுத்துப் பலியிடுவதாக கனவு காண்கிறார்கள். நபிமார்களின் கனவு உண்மைச் செய்தியாகும்.

எனவே இறைவனின் இக்கட்டளையையும் நிறைவேற்றத் துணிகிறார்கள் இப்றாஹீம்(அலை) தன்னை அறுத் துப் பலியிடுவதற்கு பூரண ஒப்புதலைத் தரு கிறார்கள் தனயன் இஸ்மாயீல் (அலை). இதை மனிதனின் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளுமா? பெற்ற தந்தையே தனது கையாலேயே மகனை அறுத்துப் பலியிடு வது. அதுவும் பல்லாண்டுகள் குழந்தையில்லாமல் ஏங்கிக் கிடந்து பெற்ற மகன். அந்த மகனை பலியிடுவதால் அல்லாஹ்வுக்கு என்ன லாபம்? என்று தான் மனித அறிவு சொல்லும்.

இதைவிடக் காட்டுமிராண்டித் தனமான ஒரு செயல் இருக்கமுடியாது என்றே உலகம் தீர்ப்புக் கூறும். இன்று இப்படிப்பட்ட ஒரு செயலை எந்த ஒரு முஸ்லிமும் செய்யமாட்டான், செய்யவும் முடியாது. (காரணம் யாருக்கும் வஹி வருவதில்லை) ஆனால் அன்று இப்றாஹீம்(அலை) அவர் கள் செய்யத் துணிந்தார்கள் என்றால், அதற்கு ஒரே காரணம் இது படைத்த எஜமானனின் கட்டளை. எஜமானன் கட்டளையை அடிமை மீற முடியாது. எனவே பின் விளைவு மிக பயங்கரமாகத் தெரிந்தாலும், இறைவனது கட்டளையை, தனக்கு ஏற்படும் நஷ்டத்தைப் பற்றி சிந்திக்காது.

நிறைவேற்றத் துணிந்தார்கள். இறைவனும் இப்றாஹீம்(அலை) அவர்கள் தனது கட்டளைக்கு எந்த அளவு அடிபணிகிறார்கள் என்று உலகிற்குக் காட்டவே இந்த சோக நிகழ்ச்சியை செய்யும்படி கட்டளையிட்டான். அவர்கள், இறைவனது கட்டளைக்கு அடிபணிந்து அதை நிறைவேற்றத் தயாராகி விட்டார்கள் என்று நிரூபணமான பின், மகனுக்குப் பகரமாக ஆட்டை அறுத்துப் பலியிடச் செய்து இஸ்மாயில்(அலை) அவர் களைக் காப்பாற்றியதோடு, இப்றாஹீம் (அலை) அவர்களின் உன்னத நிலையையும் உலகம் அறியச் செய்தான்.

இன்று மனிதர்களில் சிலர் தங்களின் மனித எஜமானர்களைத் திருப்திப்படுத்த, எவ்வித சிந்ததனையுமில்லாமல் எவ்வளவு கொடூரமான செயல்களையும், அவர்களின் உத்தரவுப்படி செய்து முடிப்பதை பார்க்கும் நாம், எஜமானர்களுக்கெல்லாம் பெரிய எஜமானனான அல்லாஹ்வின் கட்டளை கள் தமக்குப் புரிந்தாலும், புரியாவிட்டாலும் ஏற்றுக் கொள்வது நமது கட்டாயக் கடமையே என்பதை அறிவுடையவர்கள் மறுக்க மாட்டார்கள்.

இதையே அல்குர்ஆனின் ஆரம்பத்தி லேயே (2:3) மறைவான வஷயங்களை, அதாவது அறிவுக்கு எட்டாத விஷயங்களை நம்பி ஏற்றுக்கொள்வார்கள் என்று அல்லாஹ் அறிவிக்கின்றான். இந்த விஷயத்தில் எந்த அளவு உண்மையாளர்களாக இருக்கிறார்கள் என்று பரிசோதிப்பதற்காக முத்தஷாபிஹாத் ஆயத்துக்களை அல்லாஹ் இறக்கி இருக்கிறான் என்று சொன்னால் அறிவுடையவர்கள் அதை மறுக்க எந்த முகாந்திரமுமில்லை. இதையே 3:7ன் ஒரு பகுதி சுட்டிக்காட்டுகிறது, அடுத்து முத்தஷாபிஹாத் ஆயத்துகள் இறக்கப்பட்டதற்கு இன்னொரு காரணத்தையும், சொல்லலாம். அதாவது வளர்ந்து வரும் விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய இவ்வுலக சம்பந்தமான உண்மைகளை அன்றே தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தால் மனிதர்கள் அதனை ஜீரணித்திருக்க மாட்டார்கள்.

16ம் நூற்றாண்டில் உலகம் உருண்டை என்று அறிவித்த கலீலியோ கடும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார் என்றால் 7ம் நூற்றாண்டில், மக்களின் மனோநிலை எவ்வாறு இருந்திருக்கும் என்பதைச் சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம். இந்த விபரங்களை அடுத்துப் பார்ப்போம்.

விஞ்ஞான உண்மைகள் : விஞ்ஞான உண்மைகள் என்று சொல் லும்போது 1400 வருடங்களுக்கு முன் அவை திட்டமாக, தெளிவாக மக்கள் முன் வைக்கப்படுவது சாத்தியமில்லை. அன்றைய மக்கள், அவற்றை ஜீரணித்திருக்க மாட்டார்கள். இது விஷயமாக சமீபத்தில் இஸ்லாத்தைத் தழுவிய பிரபல மருத்துவ நிபுணர், ஆராய்ச்சியாளர் டாக்டர் மாரிஸ்புகைல் என்ற பிரெஞ்ச் அறிஞர் தனது “விஞ்ஞான ஒளியில் பைபிளும், குர்ஆனும்” என்ற நூலில் இவ்வாறு குறிப் பிடுகிறார். “”இன்று கண்டுபிடிக்கப்பட்டு வரும் விஞ்ஞான உண்மைகளுக்குக் கொஞ்சம்கூட பழுது வராத வகையில் குர்ஆனில் பதப் பிரயோகங்கள் செய்யப்பட்டிருக்கின்றனவே அதுதான் இந்த நெறிநூலின் தனிச் சிறப்பாகும். இந்த உண்மைகளை அந்தக் காலத்திலேயே அப்பட்டமாக அம்மக்களுக்கு அறிவித்திருந்தால் அவற்றை அவர் கள் விளங்கி இருக்கமாட்டார்களல்லவா?

அந்தக் காலத்தில் அவர்களது அறிவுக்கு அப்பாற்பட்ட வஷயங்களை, கூறியிருந்தால், அம்மக்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கும். இஸ்லாத்தினுடைய எதிரிகளும் இச்சந்தர்ப்பத்தைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பார்கள். எனவேதான் சூசகமான பதப்பிரயோகங்களைப் (முத்தஷாபிஹாத்) போட்டு, அந்தக் காலத்திற்கு மட்டுமல்ல, இந்தக் காலத்திற்கும், ஏன் எதிர்காலத்திலும் கூடத்தான், பொருந்தக்கூடியதாக அல்குர்ஆன் அமைக்கப்பட்டிருப்பது மிகப் பெரிய அற்புதம்தான்” இந்த பிரெஞ்சு அறிஞரின் கூற்று அறிவாளிகளாலும் திட்டமான பொருள் அறிந்துகொள்ள முடியாது என்றால் முத்தஷாபிஹாத் வசனங்கள் ஏன் இறக்கப்பட்டுள்ளன? என்ற கேள்விக்கு நியாயமான விடையாக இருக்கிறது என்பதை நம்பிக்கையாளர்கள் மறுக்க முடியாது.

அதேசமயம் முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு காலத்துக்கு ஏற்றவாறு, விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்றவாறு பொருள் கொள்ளப்பட்டாலும், அவற்றிலுள்ள பதப்பிரயோகங்கள் அதற்கு இடம் கொடுத்தாலும், அதன் காரணமாக திட்டமான தெளிவான மார்க்க இபாதத்துகளில் எவ்வித பாதிப்பையும், மாற்றத்தையும் அவை ஏற்படுத்த முடியாது என்பதையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.

கி.பி. 1600 வரை வாழ்ந்த மக்கள் இந்த உலகம் தட்டையானது, சூரியன் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை யிலேயே இருந்தனர். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த மக்களிடையேதான் முதன் முதலில் பூமி உருண்டையா? தட்டையா? என்ற சர்ச்சை பிறந்தது. கோப்பர்னிகஸ் என்ற விஞ்ஞானி சூரியன், பூமி மற்றும் கோளங்கள் பற்றி ஆய்ந்தறிந்த உண்மைகளை மக்களிடம் சொல்ல அஞ்சிக் கொண்டிருந்தார். அவரின் மறைவுக்குப் பிறகே அவருடைய நூல் வெளியாயிற்று. கலிலியோ அந்த உண்மைகளைச் சொன்னதால் எண்ணற்ற துன்பங்களுக்கு ஆளானார் என்று வரலாறு கூறுகிறது. இவை எல்லாம் கி.பி. 15ம், 16ம் நூற்றாண்டுகளில் நடந்த சம்பவங்கள்.

ஆனால், இந்த உண்மைகளை அதற்கும் 9 நூற்றாண்டுகளுக்கு முன்பே கி.பி. 7ம் நூற்றாண்டிலேயே அதி அற்புதமாக அன்றைய மக்களும் மறுப்புச் சொல்லாத நிலை யிலும், இன்றைய மக்களும் குர்ஆனின் கூற்றை ஒப்புக் கொள்ளும் நிலையிலும், அதற்கேற்ற பதப்பிரயோகங்களை அல்குர்ஆன் பயன்படுத்தி இருக்கிறதென்றால், இது தனி மனிதரொருவரின் சாதனையோ, அல்லது மனிதவர்க்கமே சேர்ந்து சாதித்த ஒரு சாதனையோ இல்லை, அல்குர்ஆன் முழுக்க முழுக்க அல்லாஹ்வின் வேத வெளிப்பாடு தான் என்று விஞ்ஞானிகளும் வியந்து ஒப்புக்கொள்ளாமல் இருக்க முடியுமா? எனவே, அல்குர்ஆன் அல்லாஹ்வின் புறம் இருந்து வந்த இறுதி வேதமே என்பதற்கு முத்தஷாபிஹாத் வசனங்கள் தக்க சான்றுகளாகத் திகழ்கின்றன என்றும் சொல்லலாம்.

உதாரணமாக, “இரு கீழ்த்திசைகளுக்கும் இறைவன் அவனே! இருமேல் திசைகளுக்கும் இறைவன் அவனே! என்று அல்குர்ஆனின் 55ம் அத்தியாயத்தில் 17ம் வசனம் கூறுகிறது. இது சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன் இறக்கப்பட்ட ஒரு வசனம். இந்த வசனத்தின் பொருளை அன்றைய மக்கள் அன்றைக்கிருந்த சூழ்நிலைக்கேற்றவாறு பொருள் கொண்டிருப்பார்கள், ஆனால் இன்றோ, சூரியன் ஒரு ஆண்டுக்குள்ளாக, பூமத்திய ரேகைக்கு வடக்கே 23 டிகிரியும், பூமத்திய ரேகைக்கு தெற்கே 23 டிகிரியும் சஞ்சரித்து வருகின்றது.

ஒரு சமயம் சூரியன் கிழக்கில் ஒரு புள்ளியில் இருந்து உதயமாகும். கொஞ்ச நாள் கழித்து, சூரியன் சற்று வடக்கு தள்ளி உதயமாகும். அதேபோல் தெற்கிலும் கொஞ்ச காலம் தோன்றும். கிழக்கில் பல புள்ளிகளிலிருந்து உதயமாவதையும், மேற்கில் பல புள்ளிகளில் அஸ்தமனமாவதையும் தான் இரு கிழக்குகள், இரு மேற்குகள் என குர்ஆன் கூறுகிறது என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இதை பிரெஞ்சு அறிஞர் டாக்டர் மாரிஸ்புகைல் எடுத்து எழுதுகிறார். இதைவிட சிறந்த ஒரு விளக்கத்தையும் கொடுக்கலாம். பூமி உருண்டையானது, அது தன்னைத்தானே 24 மணி நேரத்தில் ஒருமுறை சுற்றிக்கொண்டு, 365¼ நாட்களுக்கொருமுறை சூரியனையும் சுற்றி வருகிறது என்பதை இப்போது மக்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

பூமி உருண்டையாக இருக்கிறது. தன்னைத்தானே சுற்றிக் கொண்டும் இருக்கிறது. எனவே பூமியின் ஒரு பாதி பகலாக இருக் கும்போது மற்ற பாதி இரவாக இருக்கிறது. அதாவது ஒரு பாதிக்கு உதயம் என்றால், அது மற்ற பாதிக்கு அஸ்தமனம். இதுபோல முன்னைய பகுதிக்கு அஸ்தமனம் என்றால் பின்னைய பகுதிக்கு உதயம், 2 உதயம் 2 கிழக்கு, 2 அஸ்தமனம் 2 மேற்கு அல்குர் ஆனின் கூற்று மிகத் தெளிவாக இருக்கிறது.

எனவே இந்த 55:17 வசனம் சூசகமாக பூமி உருண்டை என்பதையும், அது சுழன்று கொண்டிருக்கிறது என்பதையும் அறிவிக்கின்றது. ஆனால் அன்று பூமி தட்டை என்று எண் ணிக் கொண்டிருந்த மக்களின் மார்க்க இபாதத்துகளிலும் இன்று பூமி உருண்டை சுழன்று கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொண்டிருக்கிற மக்களின் மார்க்க இபாதத்துகளிலும் அதாவது ஆயத்தும் முஹக்கமாத்தின்படி செயல்படுவதில் வித்தியாசம் இருக்கிறதா? என்றால் இல்லை என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந் தால் முத்தஷாபிஹாத்தின் விளக்கங்கள் மார்க்க இபாதத்துகளில் மாறுதலைக் கொண்டுவர முடியாது. அதேபோல் இந்த 55:17 வசனத்திற்கு விஞ்ஞான அடிப்படையில் இன்று சொல்லப்படும் பொருள்தான் சரி என்று எவராலும் சொல்லவும் முடியாது. இன்னும் மேலதிக விஞ்ஞான கண்டுபிடிப் பின் மூலம் நாளை வேறு கருத்துக்களும் பெறப்படலாம்.

இதுபோல், இன்னொரு வகை கடந்த சுமார் 1400 வருடங்களாக அல்குர்ஆன் 96:2 வசனத்திற்கு “அவனே மனிதனை இரத்தக்கட்டியிலிருந்து படைத்தான்” என்றே எல்லா மொழிகளிலும் பொருள் கொள்ளப்பட்டு வந்தது. “அலக்” என்ற அரபி பதத்திற்கு இரத்தக்கட்டி என்ற பொருளும் உண்டு. எனவே அன்றிருந்த மக்களின் மனோ நிலையில், தாயின் கர்ப்பப் பையில் எப்படிக் குழந்தை உருவாகிறது என்பதை அறியாத நிலையில் அன்று அவர்களுக்கிருந்த அறிவின்படி மனிதனோடு நெருங்கிய தொடர்புடைய “இரத்தக் கட்டி” என்ற பொருளே அதற்கு நெருக்கமானது என்று எண்ணினர். அந்தக் கருத்துப்படியே இதர மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டது. “அலக்” என்ற அரபி பதத்திற்கு அன்றும் “ஒட்டி தொங்கிக் கொண்டு உறிஞ்சும் ஒன்று” (அட்டையைப் போல) என்ற பொருளும் இருக்கத்தான் செய்தது. (ஒட்டிக் கொண்டு தொங்கும் ஒன்று என்றும் சிலர் பொருள் கொள்கின்றனர். முன்னைய பொருளே பின்னைய பொருளைவிட நெருக்கமானது) ஆனால் அன்றைய மக்கள் “அலக்” என்ற பதத்திற்கு மனிதனோடு நெருங்கிய பொருளாக இதைக் கொள்ள முடியவில்லை. “கருவின்” நிலையை முதன்முதலில் புரிந்துக் கொண்டதே 1651ல் தான்.

அதற்கு முன் அதுபற்றி பலவிதமான மூட நம்பிக்கைகளில்தான் இந்த உலகம் இருந்தது. இன்றோ மனிதன், கருத்தரித்ததிலிருந்து குழந்தை பிறக்கும் வரை உள்ள நிலைகள் அனைத்தையும் தெளிவாக அறிந்த நிலையில் இருக்கிறான். அதில் எந்த நிலையிலும் “இரத்தக் கட்டி” என்ற நிலையை அடைவதே இல்லை. எனவே “அலக்” என்ற பதத்திற்கு இந்தப் பொருள் பொருத்தமில்லை. மேலே விளக்கிய பொருளே பொருத்தமானது என்பது தெளிவாகின்றது. ஆனால் அன்று “அலக்” இரத்தக்கட்டி என்று பொருள் கொண்ட மக்களுக்கும், இன்று “அலக்” ஒட்டிக்கொண்டும் உறிஞ்சும் ஒன்று என்று பொருள் கொள்ளும் மக்களுக்கும், மார்க்க இபாதத்துகளில் எந்த மாறு தலையும் செய்து கொள்ள உரிமையில்லை. அதேபோல், 86:6,7 வசனங்களுக்கு காலாகாலமாக “(மனிதன்) குதித்து வெளிப்படும் நீரினால் படைக்கப்படான்; அது முதுகுத் தண்டிற்கும், விலா எலும்புகளுக்கும் இடையிலிருந்து வெளியாகிறது” என்றே பொருள் கொள்ளப்பட்டு வருகிறது.

ஆனால் இன்று மருத்துவத் துறையிலும், மனித உடற்கூறு துறையிலும் தேர்ந்த விற்பன்னர்கள் இப்படி பொருள் கொள்வது சரியில்லை. “வெளிப்படுத்தப்பட்டதொரு திரவத்தில் இருந்தே, (மனிதன்) படைக்கப்பட்டான். ஆண்(குறி) பெண்(குறி) சேர்ந்து இயங்கும் பொழுது வெளியாகிறது அது” என்று பொருள் கொள்வதே மருத்துவ அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது என்கின்றனர்.

இதுவரை விளக்கியவை நடைமுறையில் இருந்தவை. ஆனால் மக்கள் அன்றைய கால சூழ்நிலைக்கேற்றவாறு ஒருவிதமாகப் புரிந்து வைத்திருந்தனர். இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் அவற்றைவிட நிறைவான விளக்கங்களைப் பெற முடிகின்றது. அதே சமயம் நடைமுறையில் இல்லாமல் மறைபொருளாக இருந்த பல விஞ்ஞான உண்மைகளையும், மனிதனுக்கு தேவையான பல கண்டுபிடிப்புகளையும் வெளியில் கொண்டுவர குர்ஆனின் பல முத்தஷா பிஹாத் வசனங்கள் உதவியுள்ளன. அவற்றை விளக்குவது இங்கு நமது நோக்கமல்ல, அவற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் டாக்டர் மாரிஸ் புகைலின் “விஞ்ஞான ஒளியில் பைபிலும், குர்ஆனும்” என்ற நூலையும், அது போன்ற இதர நூல்களையும் பார்வையிடவும், அடுத்து இந்த முத்த ஷாபிஹாத் வசனங்களில் மறைந்திருக்கும் வி­யங்களை வெளிக்கொணர அரபி இலக் கண, இலக்கியங்களில் திறமை அவசியமா? என்று ஆராய்வோம். அரபி இலக்கண இலக்கியம் அவசியமா? அதற்கு முன்பு, அல்குர்ஆனிலுள்ள முஹ்க்கமாத் வசனங்களை விளங்கிக் கொள்ள அரபி இலக்கண, இலக்கிய திறமை அவசியமே இல்லை;

எனவே மார்க்கத்தை விளங்கிக் கொள்ள அவை அவசியமென்று ஒரு சாரார் கூறி வருவது மிகவும் தவறான கூற்று என்பதை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வருகிறோம். காரணம் : முஹ்க்கமாத் வசனங்கள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் நபித்துவ காலமான 23 வருடங்களில் தெளிவாக தத்துவ ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் தெளிவுபடுத்தப்பட்டுவிட்டன. காலமாறுதலினால் விஞ்ஞான வளர்ச்சிக் காரணமாக முஹ்க்கமாத் வசனங்களில் எவ்வித மேலதிக விளக்கத்திற்கோ, மாறுதலான விளக்கத்திற்கோ அவசியமே இல்லை. திட்டமான, மாறுதலே இல்லாமல் ஒரே பொருளைத் தரக்கூடிய வசனங்கள் தான் முஹ்க்கமாத் வசனங்கள்.

இந்த விபரங்கள் அனைத்தையும் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளும்படி வேண்டு கிறோம். முத்தஷாபிஹாத் வசனங்களுக்கு உறுதியான, திட்டமான ஒரு முடிவுக்கு அல்லாஹ் அல்லாத வேறு யாரும் (கல்வியறிவில் நிலையானவர்கள் உட்பட) வரமுடியாது என்பதனால் அந்த வசனங்களைப் பற்றி சிந்திக்கக் கூடாது. அவற்றிலுள்ள ஞானங்களை விளங்க முற்படக்கூடாது, உலக ரீதியில் அவற்றிலுள்ள ஞானங்களை விளங்க முற்படக் கூடாது. உலக ரீதியில் அவற்றிலுள்ள ஞானங்களை விளங்கி செயல்படுத்தக் கூடிய வி­யங்கள் நிதர்சனமாக இவ்வுலக வாழ்க்கையில் குர் ஆனுக்கோ, ஹதீஃதுக்கோ முரணில்லாத நிலையில் நல்ல பலன்களை தரும்பொழுது அவற்றை பயன்படுத்தக் கூடாது என்று நாம் சொல்லவில்லை.

மாறாக, முத்தஷா பிஹாத் வசனங்களிலிருந்து திட்டமான ஒரு கருத்தைச் சொல்லி அதைப் பின்பற்றுவ தால், மறுமையில் நன்மை கிடைக்கும் என்றோ, உலகத்தில் பரக்கத் ஏற்படும் என்றோ எடுத்து மார்க்கமாகச் செயல்படுத்தக்கூடாது என்றே சொல்கின்றோம். இந்த 3:7 வசனத்திலுள்ள “தஃவீல்’ என்ற அரபி பதத்திற்கு உண்மைக் கருத்து (இறுதியான முடிவு) என்ற பொருளைத் தராமல் விளக்கங்கள், விரிவுரைகள் என்ற பொருளைத் தருவது கொண்டு சிலர் தடுமாறுவதால் இந்த விளக்கத்தை இங்கு தந்துள்ளோம்.

இப்போது நாம் எடுத்துக்கொண்ட வி­யத்திற்கு வருவோம், அரபி இலக்கண, இலக்கிய ஞானம் அவசியம் தேவை என்று மவ்லவிகள் கூறி வருவது இந்த முத்தஷாபி ஹாத் வசனங்களைப் பொறுத்தமட்டிலும் முற்றிலும் உண்மையே. ஆனால், அதே சமயம் அந்த வசனங்களிலுள்ள ஞானங் களை வெளியே கொண்டுவர அரபி இலக்கண, இலக்கிய ஞானம் மட்டும் போதாது. அது உண்மையாக இருந்தால், 1400 வருடங்களுக்கு முன்னால் அரபு நாட்டிலிருந்த தாருந் நத்வாவைச் சார்ந்த அரபிப் பண்டி தர்கள் இன்றைய அரபி பண்டிதர்களை விட எந்த வகையிலும் குறைவானவர்கள் அல்லர். அது மட்டுமல்ல, அன்றிலிருந்து இன்று வரை அரபி பண்டிதர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றார்கள். ஒரு அரபி பதத்திற்கு எத்தனை பொருள்கள் உண்டு என்பதை காலங்காலமாக அரபி பண்டிதர்கள் அறிந்து வைத்து தான் இருக்கிறார்கள். ஆனால், உண்மை நிலை என்னவென்றால், ஒரு அரபி பதத்திற்கு வரக்கூடிய பல பொருள்களில் எந்தப் பொருளை குறிப் பிட்ட அந்த இடத்தில் பயன்படுத்துவது என்பதே தடுமாற்றத்திற்குரிய விஷயமாகும்.

Previous post:

Next post: