நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தடுக்கும்…

in 2018 ஜூலை

S.H. அப்துர் ரஹ்மான், திருச்சி

இந்நெறிநூலிலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக. இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக, நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற் றையும், தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, ஏக இறைவனை நினைவு கூர் வது மிகவும் பெரியதாகும். அன்றியும் இறைவன் நீங்கள் செய்பவற்றை நன்கறி கிறான். (அல்குர்ஆன் : 29:45)

இறைவன் மேற்கண்ட வசனத்தில், இறைவன் தொழுகை, மானக்கேடான வற்றை விட்டு தடுக்கும் என்று உறுதியளிக்கின்றான். ஆனால் தொழாதவர்கள் நிலை கவலைக்கிடமானது தான். ஒரு மனிதன் தன்னை தானே மானக்கேடானவற்றை விட்டு காப்பாற்றி கொள்ள முடியுமா என்றால் முடியாது என்றே கூறவேண்டும். இறைவனின் உதவியின்றி யாராலும் மானக்கேடானவற்றை விட்டு தடுத்துக் கொள்ள முடியாது.

ஆனால் இறைவன் தொழுகை மானக் கேடானவற்றை விட்டு தடுக்கும் என்று உறுதி கூறும்போது தொழுகையை கொண்டு தடுத்துக் கொள்ளாதவர்களுக்கு மானக்கேடு வரத்தான் செய்யும். மேலும் அல்லாஹ் குர்ஆனில் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்க்கையின் (அற்ப) சுகங்களே யாகும். ஈமான் கொண்டு, தங்கள் இறை வனையே முற்றிலும் நம்பியிருப்பவர் களுக்கு, இறைவனிடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும். (அல்குர்ஆன் : 42:36)

அவர்கள் (எத்தகையோரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (அல்குர்ஆன் : 42:37) இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை நிலைநிறுத்து வார்கள். அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர், மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற் றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார் கள். (அல்குர்ஆன் : 42:38)

இதிலும் தொழுகையை நிலைநிறுத்துவது மானக்கேடானவற்றை விட்டு தடுத்து கொள்வார்கள் என்று கூறுகிறான். இன்று மார்க்கத்தை கற்றவர்களும், மற்றவர்க ளுக்கு உபதேசிப்பவர்களும் மானக்கேடானவற்றில் மாட்டி கொள்வது அவர்களின் அறியாமையினால் அல்ல, தொழாமையினால் தான். தொழுகை ஒரு மனிதனின் கேடயம் ஆகும். அதனை விட்டால் ஆபத்துதான். நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள், நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத் துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் : 17:32)

ஆனால் அவளோ அவரைத் திடமாக விரும்பினாள், அவரும் தம் இறைவனின் ஆதாரத்தைக் கண்டிராவிட்டால் அவள் மீது விருப்பம் கொண்டே இருப்பார், இவ்வாறு நாம் அவரை விட்டுத் தீமையையும் மானக்கேடான செயல்களையும் விட்டு திருப்பிவிட்டோம். ஏனெனில் நிச்சயமாக அவர் நம் தூய்மையான அடியார்களில் ஒருவராக இருந்தார். (அல்குர்ஆன் : 12:24)

அல்லாஹ் விபச்சாரத்தை மானக்கேடா னதாக கூறி பின்னரும் ஒருவர் அதில் ஈடுபடுவது என்றால் அல்லாஹ் அவரை பாது காக்கவில்லை என்று தெரிகிறது. எனவே தான் ஷைத்தான் அவரை அதன் பால் இழுத்து விட்டான் என்று தெரிகிறது. மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள், ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள், நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (அல்குர்ஆன் : 2:168)

நிச்சயமாக அவன் தீயவற்றையும், மானக்கேடானவற்றையும் செய்யும்படியும், அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் அறியாததைக் கூறும்படியும் உங்களை ஏவுகிறான்.
(அல்குர்ஆன் : 2:169)

மனிதர்கள் ஷைத்தானை விட்டு விடுபடவும், மானக்கேடானவற்றை விட்டு பாதுகாத்து கொள்ளவும் அல்லாஹ்வின் உதவி அவசியம். அது தொழுகை மூலம் கிடைக்கும் என்று இறைவன் கூறும்போது அதனை பற்றி பிடித்து வெற்றியடைவது அவசியமாகும்.

“வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன், எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள், பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள், வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள், ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம், வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்,

அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல், கொலை செய்யாதீர்கள். இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான். (அல்குர்ஆன்:6:151) அல்லாஹ் நம் அனைவரையும் மானக்கேடானவற்றை விட்டு பாதுகாப்பானாக.

Previous post:

Next post: