அறிந்து கொள்வோம்!
மர்யம்பீ, குண்டூர்,
1. பிர்அவ்னின் கூட்டத்தார் நல்லுபதேசம் பெற அல்லாஹ் எவ்வாறு சோதித்ததாக கூறுகிறான்? பஞ்சத்தினாலும், விளைச்சலில் குறைவை ஏற்படுத்தி சோதிப்போம் என கூறுகிறான். 7:130
2. அல்லாஹ் சந்திரனை ஒளியிழக்கச் செய்து சூரியனை வெளிச்சமாக்குவது ஏன் என அல்லாஹ் கூறுகிறான்? பகலை வாழ்(வாதாரத்தைத் தேடு)வதற்காக.
அல்குர்ஆன் : 78:11
3. ஏக இறைவனை மறுத்த இஸ்ராயிலின் மக்கள் யார் யாரால் சபிக்கப்பட்டார்கள் என அல்லாஹ் கூறுகிறான்? தாவூத்(அலை) மற்றும் ஈஸா(அலை) அவர்களால் சபிக்கப்பட்டார்கள். 5:78
4. இஹ்ராமின் போது எதை வேட்டையாடலாம் என அல்லாஹ் கூறுகிறான்? கடல்வாழ் உயிரினங்களை வேட்டையாடலாம். 5:96
5. மனிதர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கூடியது எது எது என அல்லாஹ் கூறுகிறான்? புனித காபாவையும், புனித மாதங்களையும், அடையாளமிடப்பட்ட பலி பிராணியையும் மனிதர்களுக்கு பாதுகாப்பாக ஆக்கியுள்ளான். அத்.5:97
6. அதிகம் நட்பு பரப்புவதற்கு முதல் தகுதியுடைய உறவு எது என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்? தாய் என கூறுகிறார்கள். புகாரி : 5871
7. நம்முடைய செயல்கள் எந்த நாட்களில் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுவதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? திங்கள் மற்றும் வியாழன் என கூறினார்கள்.
முஸ்லிம் : 5014
8. மூஸா(அலை) அவர்களுக்கு எழுத்து வடிவில்லா நெறி(நூலை) எத்தனை இரவுகளில் தருவதாக அல்லாஹ் வாக்களித்தான்? நாற்பது இரவுகளில் தருவதாக வாக்களித்தான். 2:51
9. தமக்கு மிகவும் விருப்பமான உணவுகள் எது என்பதை நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்? தேனும், இனிப்பும் என கூறினார்கள். புகாரி : 5268
10. எந்த நபியின் சமூகத்தாரை கல் மழையைப் பொழிந்ததாக அல்லாஹ் கூறுகிறான்? லூத்(அலை) அவர்களின் சமூகத்தாரை அத். 26:173
11. எந்த நபியை ஸமூது கூட்டத்தினர் பொய்ப்பித்ததாக அல்லாஹ் கூறுகிறான்? ஸாலிஹ் நபியை பொய்ப்பித்ததாக கூறுகிறான். 91:11
12. ஆத் கூட்டத்தினர் எந்த நிலையில் சடலங்களாக கிடந்தனர் என அல்லாஹ் கூறுகிறான்? அடியோடு பிடுங்கப்பட்ட பேரீத்த மரங்கள் போன்று சடலங்களாக கிடந்தனர் என்று கூறுகிறான். 69:7 13. நபி(ஸல்) அவர்களிடத்தில் யார் யாருக்கெல்லாம் கட்டுப்படவேண்டாம் என அல்லாஹ் கூறுகிறான்? நிராகரிப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் நீர் கட்டுப்படவேண்டாம் என கூறுகிறான். 33:48
14. ஆதம்(அலை) அவர்கள் எவ்வளவு உயரம் இருந்தார்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்? ஆதம்(அலை) அவர்கள் அறுபது முழங்கள் உயரமாக இருந்தார்கள். புகாரி : 6227
15. இஸ்லாமிய பண்புகளில் மிகவும் சிறந்தது எது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்? பசித்தவருக்கு உணவளிப்பதும், அறிமுகம் ஆனவருக்கும், அறிமுகம் அற்றவர்களுக்கும் சலாம் சொல்வதுமாகும் என கூறினார்கள். புகாரி : 6236
16. அபூதல்ஹா(ரழி) அவர்கள் எந்த சஹா பியைப் பார்த்து மது தடை செய்யப்பட்டுவிட்டது. ஆகவே மதுவை கொட்டி விடு என்று கூறினார்? அனஸ்(ரழி) அவர்களைப் பார்த்து கூறி னார். புகாரி : 5582
17. அல்லாஹ் எந்நோயையும் அதற்குரிய நிவாரணியை அருளாமல் இறக்குவதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக எந்த சஹாபி கூறினார்கள்? அபூ ஹுரைரா(ரழி) அவர்கள் கூறினார் கள். புகாரி : 5678
18. நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்வார்கள் என சஅத்பின் அபீவக்காஸ்(ரழி) அவர்கள் கூறுகிறார்கள்? என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது ஆணையாக என்று சத்தியம் செய்வார்கள். சத்தியங்களும், நேர்த்திக் கடன்களும் என்ற பகுதியில் பாடம் 3.
19. விடைபெறும் ஹஜ்ஜின் போது நபி (ஸல்) அவர்கள் என்ன கூறினார்கள்? எனக்கு பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள் ளும் இறை மறுப்பாளராக மாறி விடாதீர்கள் என்று கூறினார்கள். புகாரி : 6868
20. நபி(ஸல்) அவர்கள் என்னை தம்முடன் அணைத்துக் கொண்டு எந்த மாதிரி பிரார்த்தித்தார்கள் என இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்? இறைவா இவருக்கு வேதத்தை கற்றுக் கொடுப்பாயாக! என பிரார்த்தித்தார் கள். புகாரி : 7270