ஐயமும்! தெளிவும்!!

in 2018 ஆகஸ்ட்,ஐயமும்! தெளிவும்!!

ஐயமும்! தெளிவும்!!

ஐயம் : இயக்கங்கள் கூடாது, தனிப்பள்ளிகள் கூடாது அது சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயல் என்றால் தனிப் பெருநாளும் கூடாதல்லவா? அதில் கலந்து கொள்வதும் தவறல்லவா? அதுவும் சமுதாயத்தை பிளவுபடுத்தும் செயலல்லவா? அதை எப்படி சரி காண்கிறீர்கள்? அபூ நபீல், தேங்காய்பட்டணம்.

தெளிவு : பெருநாள், பெருநாள் அல்லாத நாளில் கொண்டாடுவதை நாம் சரிகாணவில்லையே! பிரிவினர்களின் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வதைப் பற்றி தங்களுக்கு ஐயம் இருப்பது போல் அடுத்த கேள்வியின் வாயிலாகத் தெரிகிறது. எனவே முழுமையாக தெளிவுபடுத்த விரும்புகிறோம். “… இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூரணமாக்கி விட்டேன். மேலும் உங்கள் மீது என் அருட்கொடையை பூர்த்தியாக்கி விட்டேன். இன் னும் உங்களுக்காக நான் இஸ்லாமை மார்க் கமாகப் பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் : 5:3)

பரிபூரணமாக்கப்பட்ட இஸ்லாத்தில் ஹனஃபி, ஷாஃபி, மாலிகி, ஹன்பலி, காதி யானி, ஷியா, தப்லீக் ஜமாஅத், அஹ்லுல் குர்ஆன், அஹ்லே ஹதீஃத், தமுமுக, ததஜ என்று இன்னும் பல பிரிவுகளை ஏற்படுத்தலாமா? கூடாதல்லவா? அவைகள் மேலுள்ள இறை வசனத்திற்கு முரண் ஆன தல்லவா? எனவே, மார்க்கத்தில் பிரிவுகளை ஏற்படுத்தக் கூடாது என்பதை கீழுள்ள இறை வசனங்களிலிருந்து அறிந்து அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும். “எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை பிரித்து, பல பிரிவினர்களாக ஆகிவிட்டனரோ, அவர்களின் எந்த காரியத்திலும், உமக்கு சம்பந்தம் இல்லை. அவர்களுடைய வி­யமெல்லாம், அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (அல்குர்ஆன் : 6:159) “எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி, பல பிரிவுகளா கப் பிரிந்து விட்டனரோ, ஒவ்வொரு கூட் டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்”. (அல்குர்ஆன் : 30:32)

ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்கள் பிரிவுக்காக தனிப்பள்ளி கட்டிக்கொள்வது தாங்கள் மார்க்கத்திலிருந்து பிரிந்து விட் டதை இன்னும் வலுவாக ஊர்ஜிதம் செய்கி றது. எனவே இயக்கங்களும் தனிப் பள்ளிகளும் கூடவே கூடாது என அறிந்து கொள்வோமாக. ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவு முஸ்லிம்களை எதிரிகளாகத்தானே பாவித்து வருகிறார்கள். பிரிந்து செயல்படக் கூடாது என்பதை அகிலங்களின் இறைவன் மேற்கூறிய வசனங்களில் தெரிவித்து விட்ட பிறகும், இப்படி பிரிந்து செயல்படுவதை கூடும் எனக் கூறுபவர்களுடைய முடிவைப் பற்றி அல்லாஹ் “அவர்களுடைய விஷயமெல்லாம், அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்ததைப் பற்றி அவன் அவர்களுக்கு அறிவிப்பான்” என்று கூறிவிட்ட பிறகு நாம் சொல்வதற்கு என்ன இருக்கிறது? ஒவ்வொரு பிரிவினருக்கும் தனித்தனி பெருநாள் எவ்வாறு ஏற்பட முடியும்? உலகுக்கு ஒரே ஒரு பிறை தான். பூமி(உலகம்) தன்னைத் தானே ஒருமுறை 24 மணி நேரத்திற்குள் சுற்றி வரும்போது ஒரு பிறை தானே தோன்ற முடியும். ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு பிறை எவ்வாறு தோன்றி வெவ்வேறு நாட்களில் பெருநாள் எப்படி ஏற்பட முடியும்? முடியாது அல்லவா? இந்த உண்மையை ஏற்க மறுத்து மாற்று கருத்துக்கள் கூறும் பிரிவினர்கள் இருக்கும் வரை அவர் கள் வெவ்வேறு நாட்களில் பெருநாள் கொண்டாடும்போது, குர்ஆன், ஹதீஃத் கட்டளையின்படி செயல்படுபவர்கள் மற்ற நாட்களில் ஏன் கொண்டாட வேண்டும்? இதை நாம் சரிகாணவும் இல்லையே.

பெருநாள் ஒரே நாளில்தான் அந்த நாளில் நோன்பை விட்டுவிட வேண்டும். பெருநாள் கொண்டாட வேண்டும். அதே நேரத்தில் தொழுகையை தொழ இயலாத வர்கள் அடுத்த நாளில் தொழுவதற்கு நாம் பலமுறை பார்த்துள்ள வாகன கூட்டத்தா ரின் ஹதீஃத் அனுமதிக்கிறது என்பதை அறி வோமாக. அடுத்த ஊரிலிருந்து வந்தவர்கள், பெருநாள் கொண்டாடி விட்டோம் என்று கூறிய பிறகு தானே, நபி(ஸல்) அவர்கள் நோன்பைவிட்டு விடுமாறுகூறிவிட்டு அன்றே தொழமுடியாதசூழ்நிலையில் அடுத்த நாள் தொழுது கொள்ள அனுமதிக் கிறார்கள். எனவே நோன்பை விட்டுவிட்டு பெருநாளை மட்டும் கொண்டாட வேண் டும். தொழுகையை தொழாதவர்களுடன் அடுத்த நாளில் தொழுது கொள்ளலாம் என்பதை இந்த ஹதீஃதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. வாகன கூட்டத்தார் மார்க்கத்தில் பிரிவை உண்டாக்கியவர்கள் அல்லவே. எனவே பிரிவை உண்டாக்கியவர்களுடன் சேர்ந்து தொழலாமா என்ற ஐயம் இங்கே ஏற்படுவது இயல்பு. எனவே அவரவருக்கு தனிப் பெருநாள் என்பது, தாங்கள் கூறுவதுபோல சமுதா யத்தை பிளவுபடுத்தும் செயல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் நம்மில் பெரு நாள் அன்று தொழ முடியாதவர்கள், அடுத்த நாளில் தொழுவது கீழே கொடுக்கப் பட்டுள்ள இறை வசனத்தின்படி தவறல்ல என்பதையும் உணரவேண்டும். (ஜமாஅத்) தொழுகைக்கு, மார்க்கத்தைப் பிரித்தவர் கள் என்பதையயல்லாம் பார்க்க வேண்டி யத் தேவை இல்லை. “”என்னை எவ்வாறு தொழக் கண்டீர் களோ, அவ்வாறே தொழுங்கள்” என்ற அடிப்படையில், “சில பிரிவினர்கள் நபி (ஸல்) அவர்கள் தொழுத முறையில் தொழு வது இல்லையே. அவர்களுடன் சேர்ந்து தொழலாமா?” என்ற சந்தேகத்திற்கும் கீழுள்ள இறை வசனம் போதுமானதாக இருப்பதைப் பாருங்கள். “”…(எந்த ஒரு ஆத்மாவும்) அது சம்பா தித்ததன் நன்மை அதற்கே. அது சம்பாதித்த தீமையும் அதற்கே…” (அல்குர்ஆன் : 2:286)

ஐயம் : தனிப் பெருநாள் கூடாது. ஒரே நாளில்தான் பெருநாள். வேறு இயக்கங்கள் நடத்தும் போட்டி திடல் தொழுகைகள் நபி வழியா? அபூ நபீல், தேங்காய்பட்டணம்.

தெளிவு : இவர்கள் பெருநாளில் நோன்பு வைக்கிறார்கள். இது நபிவழி அல்ல. பெரு நாள் அல்லாத நாளில் பெருநாள் தொழுகை திடலில் தொழுவது எப்படி பெருநாள் தொழுகையாகும்? தொழுவதற்கு முதல் நாள் நோன்பு வைத்திருந்தது தவறு. பெருநாள் தொழுகை தொழாதது தவறு என்றுஅடுத்த நாளில் உணர்ந்து, அதற்காக வருந்தி அல்லாஹ்வி டம் பாவமன்னிப்பு கேட்டுவிட்டு அன்று தொழுகை நடத்தினால் அதை கிருபையாளன் அல்லாஹ் ஏற்றுக் கொள்வான் என அவன் கருணை மீது நம்பிக்கை வைப்போமாக. அவர்கள் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு தொழுதாலும் சரி, அவர்கள் தொழக்கூடிய நாளில்தான் பெருநாள் என்ற தவறான எண்ணத்தில் தொழுதாலும் சரி, சரியாக பெருநாள் அன்று நோன்பை விட்டு விட்டு, பெருநாளையும் கொண் டாடிவிட்டு, பெருநாள் தொழுகையை அன்றே தொழ முடியாமல் போய்விட்ட வர்கள் இவர்களுடன் சேர்ந்து தொழுவதில் மேலே குறிப்பிட்டுள்ள 2:286 இறை வசனத் தின்படி தவறல்ல.

ஐயம் : அல்குர்ஆன் ஒருவரை துருவித் துருவி ஆராய தடைச் செய்யும் பட்சத்தில் ஹதீஃத் கலை வல்லுனர்கள் அறிவிப்பாளர்களை துருவித் துருவி ஆராய்ந்துதான் ஹதீஃதை தரம் பிரித்தார்கள் இது குர்ஆனுக்கு முரணான செயலா? திருமணமாகப்போகும் ஆண், பெண் இருவரையும் அவர்களின் குடும்பங்களை யும் துருவித் துருவி ஆராய்ந்த பின்னர் தான் இறுதி முடிவுக்கு வருவர். ஒருவரை நண்பராக ஏற்றுக்கொள்வதும் ஆய்வுக்கு பிறகுதான் முடிவு செய்வர். அப்படியானால் குர்ஆன் கூறும் துருவி ஆராய்தல் பற்றியதன் விளக்கம் என்ன? வார்னர் நதீர், நாகர்கோவில்.

தெளிவு : சகோதர முஸ்லிம் ஒருவரின் தனிப்பட்ட பாவ செயல்களை துருவித் துருவி ஆராய்தல் தவறு. அதே நேரத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொல்லை அதாவது ஹதீஃதை அது அவர்களால் சொல்லப்பட்டதுதானா என உண்மை அறியும் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் அறிவிப்பாளர்களை அவர்களின் தன்மை அறிய முயன்றதில் தவறு இல்லை. ஏனெனில் இது பாவ செயல் அல்ல. அதேபோல மணமகனையோ அல்லது மணமகளையோ விசாரித்து அறிவது,இரு சாராரின் குடும்ப அந்தஸ்தை அறிய விசா ரிப்பது அவர்கள் நல்லவர்களா என்று அறி யத்தானே ஒழிய, புறம் பேசவோ, கோள் சொல்லவோ அல்ல. அதேபோல ஒருவரை நண்பராக ஏற்றுக் கொள்ள அவரைப் பற்றி அறிய முயல் வதும் தவறில்லையே. ஒரு மனிதரால் சமூகத்தில் பலர் பாதிக்கப்பட்டால் அந்த மனிதரை அடையாளம் காட்டுவதும் அவரைப் பற்றி பிறருக்கு எச்சரிக்கை செய்வதும் நல்ல எண்ணத்தின் அடிப்படையில் தானே. இதுவும் தவறல்லவே.

ஐயம் : குறிப்பிட்ட நாளில் ரமழான் மாதத்தை துவங்குவது போல் ரமழானில் ஸஹர் & இஃப்தார் இரண்டையும் “குறிப்பிட்ட நேரத்தில்” செயல்படுத்த வேண்டு மல்லவா? ஆனால் மாதத்தை (ரமழான்) பிற்படுத்தி ஆரம்பிப்பது போல் பள்ளிவாசல்களில் இஃப்தாரையும் பேணுதல் என்று பிற்படுத்துகிறார்கள் “மாதத்தின் நாளையும் நாளின் நேரத்தையும்” இப்படி பிற்படுத்த மார்க்கத்தில் அனுமதி உண்டா? நாஸர், நாகர்கோவில்.

தெளிவு : நோன்பு ஆரம்ப நாள், முடிவு நாள் இரண்டிலும் கண்டிப்பாக முந்தவோ பிந்தவோ கூடாது. முந்தினாலோ, பிந்தினாலோ அது இறைக் கட்டளைக்கு மாறு செய்ததாகும்.

“…உங்களில் எவர் அந்த (ரமழான்) மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்க வேண்டும்…” என்ற அல்குர்ஆன் 2:185 இறை வசனம், “அந்த மாதம்” என்று இருப்பதால் ரமழான் மாதத்தில் மட்டுமே (கடமையான) நோன்பு இருக்க வேண்டும் என்று தெளிவாக்கப்பட்டுள்ளது. ஒருநாள் முன்பாக ஷஃபான் மாதத்தின் கடைசி நாளில் நோன்பை ஆரம்பிப்பதையும், ஷவ்வால் மாதத்தின் முதல் நாளில் நோன்பை விட்டு விடாமல் நோன்பாளியாக இருப்பதையும் தடை செய்யும் விதமாக, “ரமழான் மாதத்தை எவர் அடைகிறாரோ, அவர் நோன்பு நோற்க வேண்டும்” என்ற அல்லாஹ்வின் கட்டளை அமைந்திருப்பதை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும்.

நோன்பு ஆரம்ப நாள், முடிவு நாள் இரண்டிலும் கண்டிப்பாக முந்தவோ, பிந்தவோ கூடாது என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்து அதற்கான நாளை சரியாக அறிய முற்பட வேண்டும். வழிகெடுக்கும் தலைவர்களின் சொற்களையோ, பணம் பெற்று மார்க்கம் பேசுபவரின் பேச்சையயல்லாம் கேளாமல் அல்லாஹ்வின் அச்சத்தைக் கொண்டு மட்டுமே முடிவெடுக்க வேண்டும். அனஸ்(ரழி) அறிவித்தார் : நபி(ஸல்) ஸைத் இப்னு ஸாபித்(ரழி) இருவரும் ஸஹ்ர் செய்தனர்.

நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்குத் தயாராகித் தொழுதார்கள். ஸஹர் முடிப்பதற்கும் தொழுகை யைத் துவக்குவதற்கும் எவ்வளவு இடைவெளி இருக்கும்? என்று நாங்கள் அனஸ் (ரழி) அவர்களிடம் கேட்டோம். “ஒரு மனிதா ஐம்பது வசனங்கள் ஓதும் அளவு நேரம்” என்று கூறினார்கள் என கதாதா கூறுகிறார்கள். புகாரி 576. அனஸ் இப்னு மாலிக்(ரழி) கூறியதாவது: நபி(ஸல்) அவர்களும் ஸைத் இப்னு ஸாபித்(ரழி)வும் ஸஹர் செய்தனர். ஸஹர் செய்து முடித்ததும், நபி(ஸல்) அவர்கள் (ஃபஜர்) தொழுகைக்கு தயாராகித் தொழுதார்கள். அவர்கள் ஸஹர் செய்ததற்கும், தொழுததற்கும் இடையே எவ்வளவு நேரம் இருந் தது என்று அனஸ்(ரழி) அவர்களிடம் நாங் கள் கேட்டோம். அதற்கவர்கள் “ஒருவர் ஐம்பது வசனங்கள் ஓதக்கூடிய நேரம்” என்று விடையளித்தார்கள். புகாரி 1134.

இஃப்தார்: “நோன்பு துறத்தலை விரைந்து செய்யும் வரை மக்கள் நன்மையை செய்பவர்களாகிறார்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹல் இப்னு ஸாத்(ரழி) அவர்கள் அறிவித்துள்ள ஹதீஃத் புஹாரி, முஸ்லிம், அபூதாவுத் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளது. சூரியன் அஸ்தமித்த உடனே விரைந்து நோன்பு துறப்பவர்கள் என் அடியார்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள் என அல்லாஹ் கூறியதாக, நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூஹுரைரா(ரழி) அவர்கள் அறிவித்த இந்த ஹதீஃத், முஸ்லிம், திர்மிதி, அஹ்மத் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. “யூத கிருஸ்தவர்கள் நோன்பு துறத் தலை தாமதப்படுத்துகின்றனர். எனவே கால தாமதமின்றி நோன்பு துறப்பவர்களாக மக்கள் உள்ளவரை இந்த மார்க்கம் மேலோங்கியதாக இருக்கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினர். இப்னு உமர்(ரழி), அபூதாவுத், இப்னு மாஜா.

Previous post:

Next post: